புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_lcapஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_voting_barஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_lcapஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_voting_barஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_lcapஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_voting_barஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_lcapஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_voting_barஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_lcapஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_voting_barஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_lcapஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_voting_barஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_lcapஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_voting_barஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_lcapஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_voting_barஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_rcap 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_lcapஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_voting_barஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_rcap 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_lcapஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_voting_barஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 8:46 pm

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6,76,763 பேர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 2448 பேர்தான் என்ற அதிர்ச்சித் தகவல் மக்களைக் கவலைப்பட வைத்திபருக்கிறது. “எதற்காகத் தகுதித் தேர்வு குடைச்சல்?’ என்று ஆசிரியர் தரப்பும், “மாறும் சூழல்களைச் சமாளிக்க ஆசிரியர்களைத் தயார்ப்படுத்தத்தான்’ என்று எதிர்க் குரலும் எழ... பள்ளிக் கல்வியில் ரொம்பத்தான் குழப்பம் போங்கள்....

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வந்தது கல்வி உரிமைச் சட்டம். இந்தச் சட்டப் பிரிவு 23(1) படிதான் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத்தான் தகுதித் தேர்வு. குழந்தைகளுக்கு எட்டம் வகுப்பு வரை அடிப்படைக் கல்வி கற்க உரிமை உண்டு என்கிறது கல்வி உரிமைச் சட்டம். எனவேதான் இப்போதைக்கு எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு. இப்போது ஆசிரியர்களைக் குடையும் கேள்வி, “நாங்கள் ஆசிரியர் வேலைக்கான, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுத்தானே பணிக்கு வருகிறோம். அப்புறம் ஏன் தகுதித் தேர்வு?’ என்பதுதான்.

“நம் நாட்டில் தொழில்துறை, வேளாண்துறை ஆகியவற்றின் யதார்த்த நிலையைக் கணக்கில் கொள்ளாமல் கொள்கை வகுத்துக் குளறுபடி செய்யும் அதிகாரவர்க்கமே கல்வித்துறையில் இப்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்துக்குக் காரணம்’ என்கிறார் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரன்.

“21ம் நூற்றாண்டு சவால்களை ஆசிரியர்கள் சந்திக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த கல்விச் சூழலுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் இந்தத் தகுதித் தேர்வுகள் அவசியம் என்கிறது மத்திய அரசு. ஆனால் கற்பிக்கும் முறையிலும், புதுசூழலைச் சந்திக்கும் வகையிலும் மாற்றம் வர, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிப் பாடத் திட்டங்களில் அல்லவா மாற்றம் வரவேண்டும்? அதைச் செய்யாமல் தகுதித் தேர்வு நடத்தினால் எப்படி தேர்ச்சி பெற முடியும்?’ என்கிறார் இவர்.

இந்தியாவில் பல மாநிலங்களில் தகுதித் தேர்வுநடந்து முடிந்து விட்டதாம். பல வடமாநிலங்களில் ஆசிரியர் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில் பள்ளியிறுதி வகுப்பு படித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அது போன்றவர்களுக்குத் தகுதித் தேர்வு நிச்சயம் தேவை என்கிறார்கள் கல்வியாளர்கள். கல்வி உரிமைச் சட்டப்படி, தகுதித் தேர்வு எழுத குறைந்த பட்ச கல்வித் தகுதியை மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். 2010க்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும். அதே போல அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஐந்தாண்டு கால அவகாசம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

“ஒரு விஷயம்தான் புரியவில்லை. இப்போது அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பதவிகளுக்குத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கப் போகிறார்கள். இந்த அரசு வேலை கிடைக்கும் என்றுதான் லட்சக்கணக்கான தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணிகள் எவ்வளவு என்ற விவரம் இல்லை. மேலும் தேர்ச்சியின் அடிப்படையில் புதிய மூப்புப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டால், ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கான மூப்புப் பட்டியல் குப்பைத் தொட்டிக்குப் போகுமா? ஏற்கெனவே உள்ள ஆசிரியர்களுக்கு அரசு முறைப்படி பயிற்சிகளைக் கொடுத்துத் தயார் செய்து கால அவகாலம் கொடுத்து, தேர்வு எழுதச் சொல்லலாம். தகுதி தேர்வுக்கான அரசு பயிற்சி இல்லாததால், தனியார்கள் கைட் போட்டும், பயிற்சி நிலையங்கள் நடத்தியம் லட்சக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள். இப்போது நடந்த தேர்வில் பெரும்பாலும் பாடங்களில் இரந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டதே தவிர, கற்பித்தல் முறையில் கேள்விகள் கேட்கப்படவில்லையே,’ என்கிறார் கஜேந்திரன்.

மத்திய அரசின் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சி.பி.எஸ்.சி. பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்தியிருக்கிறது. இரண்டு சதவிகிதம்தான் தேர்ச்சி விகிதம். சிலர் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் போனபோது, “தகுதித் தேர்வு தேவை’ என்று சொல்லிவிட்டது.

நமது கற்பித்தல் முறை உரையாடலாக மாற வேண்டும். மாணவன் கேள்வி கேட்க ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும் என்கிறார் மறைந்த கல்வியாளர் பவுலோ ப்ராயர். அந்த வகையில் ஆசிரியர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். ஆனால், இப்போது தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை மன அழுத்தத்துக்குத் தள்ளி விட்டார்கள். தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், மாணவர்கள் ற்றும் பெற்றோரால் கிண்டல் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை ஆசிரியர்களை மேலும் விரக்தியில் தள்ளும் என்கிறார்கள் கல்வியாளர்கள். அதேசமயம் தகுதி தேர்வு தேவை என்ற வாதமும் இருக்கிறது.

“எந்த ஒரு பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தொடர் மதிப்பீடு தேவை. அதிலும் எதிர் காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்குக் கண்டிப்பாகத் தேவை. மாறும் சூழலுக்கேற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டாமா? ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்றாயிற்றே என்ற வாதமெல்லாம் சரியல்ல!

தகுதித் தேர்வில் மூலம் ஆசிரியர்களின் திறமையை மதிப்பீடு செய்யும் முறை மேலை நாடுகளில் உண்டு. அங்கே மாணவர்களே ஆசிரியர்களை மதிப்பீடு செய்கிறார்கள். நமது அமைப்பு முறையில் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியும் ஒன்றோடொன்று பிணைந்தது. கல்வித் துறையில் நல் மதிப்பீடுகள் அமலாகி சவால்களைச் சந்திக்கும் திறன் வளர்க்கப்பட்டால், ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும்’ என்கிறார் கல்வியாளர் ரெஜினா பாப்பா.

தேர்ச்சி பெறாதவர்களுக்காக மறுதேர்வு நடத்துகிறது தமிழக அரசு. தேர்வு நேரம் ஒன்றரை மணியிலிருந்து மூன்று மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அப்படியே கேள்விகளையும் கொஞ்சம் எளிமையாக்குங்கள் என்று ஆதங்கப்படுகிறது ஆசிரியர் வட்டாரம்.

- ப்ரியன்

ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 18, 2012 9:50 pm

படிக்கலேன்னா தடைக்கல்தான் சிரி
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 18, 2012 10:03 pm

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கு படிக்கல்லப்பா

வெற்றி கொடி கட்டு
தகுதித் தேர்வை முட்டும்வரை முட்டு
லட்சியம் எட்டும்வரை எட்டு
படித்திடு நீயப்பா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 18, 2012 10:04 pm

நல்ல பகிர்வு சிவா! ஆசிரியர் தகுதித்தேர்வு மிகமிக அவசியம் தான். ஆனால் ஆசிரியர் தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட ஒரு வினா இப்படி இருந்தது...

தமிழ் எண்களை தலைகீழ் அகர வரிசையில் எழுதவேன்டும் இதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே இருந்தது. இதில் முதலில் தமிழ் எண்களை எழுதி பிறகு அதை வரிசைபடுத்தி எழுத அதிக நேரம் எடுக்கும் இல்லையா? இது வெறும் உதாரணம் தான். இதுபோன்ற நிறைய குளறுபடிகள் இருந்தது...

மேலும் ஆர் டீ இ (RTE )என்ற ரைட் டு எடுக்கேஷன் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டத்தில் எங்கள் பள்ளி முதல்வர் சார்பாக நான் சென்றிருந்தேன். அப்போது பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் ஆசிரியர்களை எப்படியெல்லாம் வழிக்கு கொண்டு வருவது என்ற அம்மாவின் விருப்பங்களை பவர்பாயின்டு போட்டு காட்டினார். அடிக்கடி லீவு கொடுக்கக்கூடாது, ஓய்வு வகுப்புகளில் வேலை தரவேன்டும், உணவு இடைவேளையை குறைக்க வேன்டும். அந்த நேரத்தில் அவர்களுக்கு மாணவர்களை பார்த்துக்கொள்ளும் வேலை தரவேன்டும் என அடுக்கிக்கொண்டே போனார். இந்த அரசாங்கம் ஆசிரியர்களை பழிவாங்குகிறது என்றே எனக்கு படுகிறது. கல்வி உரிமையை எடுத்துரைக்கு கூட்டத்தில் அதைப்பற்றி நடைமுறையிலும் சாத்தியமில்லாத வகையில் ஏட்டளவில் சொல்லிவிட்டு ஆசிரியர்களை எப்படி வதைப்பது என்பதை பற்றி தான் அவர் பேசிக்கொண்டிருந்தார் புன்னகை

மற்றபடி தகுதித்தேர்வு மிக மிக அவசியமான ஒன்று

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 18, 2012 10:09 pm

உங்களுக்கு மட்டும் காட்ட வேண்டியதை ஏன் மத்தவங்களுக்கு காட்டினார்ன்னு நீங்க வருந்துவது தெரிகிறது அசுரன். புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக