ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Today at 3:20 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Today at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Today at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Today at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Today at 9:03 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Today at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Today at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Today at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Yesterday at 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Yesterday at 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Yesterday at 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Yesterday at 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:03 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


இயல்பு மாறலாமா? - தென்கச்சி

3 posters

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by சிவா Mon Sep 17, 2012 1:12 amஒரு ஆள் இருந்தார். விலங்குகள் பேர்லே அவருக்கு ரொம்பப் பிரியம். அதனாலே தன் வீட்டுலே ஒரு நாயை வளர்த்தார். அதே மாதிரி கழுதையையும் வளர்த்தார்.

அந்தக் கழுதை அவர் வீட்டுக் கொல்லைப் பக்கத்துலே நின்னுக்கிட்டிருக்கும். ஏதாவது பொதிசுமக்கற வேலை இருந்தா அதை கவனிச்சுக்கும்.

அந்த நாய் வீட்டுக்குள்ளே இருக்கும். நாய்க்கு அந்த வீட்டுலே ராஜ உபச்சாரம்தான். அதுக்கு அந்த வீட்டுலே ஏகப்பட்ட மரியாதை, குளிக்கறதுக்கு சோப்பு! ரெண்டு வேளையும் பால்- பிஸ்கட்... மத்தியானம் சாப்பாடு... அதுக்கு ஏதாவது உடம்பு சரியில்லேன்னா உடனடியா ஆஸ்பத்திரி வைத்தியம்.

ரொம்ப கொடுத்துவச்ச நாய்.

அந்த வீட்டுத்தலைவர் வெளியிலே 'வாக்கிங்' போனா... கூடவே இதுவும் போகும்.

அவர் மட்டும் தனியா எங்காவது வெளியே போயிட்டு வந்தா... வீட்டுக்கு வந்த உடனே அந்த நாய் அவர்கிட்டே ஓடிவரும்... அப்படியே எழும்பி முன்னங்கால் ரெண்டையும் அவர் தோள்மேலே போட்டுக்கும்... அவரு சிரிச்சிக்கிட்டே அது தலையிலே செல்லமா தட்டுவார்.

அவரு ஈஸி சேர்லே சாஞ்சுகிட்டு டி.வி. பார்ப்பார்... பேப்பர் படிப்பார்... அப்போவெல்லாம் அந்த நாய் அவருடைய காலடியிலே படுத்துக்கும். அப்பகூட அவரு அது தலையை செல்லமா தடவிக் கொடுப்பார்... அந்த நாய் படுக்கறதுக்கின்னே ஒரு மெத்தை... சில சமயம் அது அங்கே இருக்கிற மேஜை நாற்காலி மேலே கூட ஏறி விளையாடும்... சோபாவுலே ஏறி உட்கார்ந்துக்கும்... இவ்வளவு செல்வாக்கா வளர்ந்தது அந்த நாய்...!

இதையெல்லாம் அந்தக் கழுதை பார்த்தது. யோசிக்க ஆரம்பிச்சுது!

"என்ன இது... இந்த வீட்டுலே நாம கழுதையா உழைக்கிறோம். பொதி சுமக்கிறோம்... நமக்கு ஒரு நல்ல சாப்பாடு கிடையாது! படுக்கை கிடையாது. ஒரு நாளாவது நம்ம தலையையோ முதுகையோ தடவிக்குடுத்தது கிடையாது.

ஆனால், அந்த நாய் இந்த வீட்டுக்காக ஒரு துரும்பைக்கூட அசைச்சது இல்லை... அதைப் போய் இந்த வீட்டுலே உள்ளவங்க இப்படி தலையிலே வச்சு தாங்கறாங்களே...!" அப்படின்னு யோசிச்சுது. ரொம்ப நேரம் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தது..

"சரி... இனிமே நாமளும் அந்த நாய் மாதிரியே நடந்துக்குவோம். அது மாதிரியே Behave பண்ணுவோம்... அப்பவாவது நமக்கும் அந்த மரியாதை கிடைக்குதா பார்க்கலாம்!" அப்படின்னு ஒரு திட்டம் போட்டுது மனசுக்குள்ளே!

உடனே அந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் ஆரம்பிச்சுது. அதாவது அந்த வீட்டுலே அந்த நாய் என்னென்னா செய்யுதோ... அதையெல்லாம் இதுவும் செய்ய ஆரம்பிச்சுட்டுது.

அந்த வீட்டு எஜமான் எங்கேயோ வெளியிலே சுத்திபுட்டு ரொம்ப அசந்து போய் வீட்டுக்குத் திரும்பி வந்துக்கிட்டிருந்தான். உடனே இந்தக் கழுதை அவன்கிட்டே ஓடிச்சி... அந்த நாய் என்ன பண்ணுமோ அது மாதிரியே பண்ணிச்சு... அதாவது அந்த ஆள் தோள் மேலே தன் முன்னங்கால் ரெண்டையும் தூக்கிப் போட்டது.

அந்த ஆள் பயந்து போயிட்டான். அவனுக்கு ஒண்ணும் புரியலே. இது ஏன் இப்படி பண்ணுதுன்னு! கொஞ்சம் ஒதுங்கி நின்னான். இது அவனை சுத்தி சுத்தி வந்துது நாய்மாதரி வாலை ஆட்டிக்கிட்டே!

அவன் 'கிடு கிடு' ன்னு விட்டுக்குள்ளே போனான்.

இதுவும் பின்னாடியே ஓடிச்சு...

அங்கே போய் நாய் மாதிரியே மேஜை நாற்காலி மேலே ஏறி குதிச்சு விளையாடிச்சு... சோபாவுலே உட்கார்ந்தது. மேசையிலேயிருந்த சாமான்லாம் கீழே விழுந்து உடைஞ்சுது. கழுதை, மேசை மேலே ஏறி குதிச்சா என்னத்துக்கு ஆவும்?

அந்த ஆள் பார்த்தான்.

சரி.. இந்தக் கழுதைக்கு என்னமோ ஆயிட்டுது -ன்னு முடிவு பண்ணினான். ஒரு நல்ல கயிறா பார்த்து கொண்டாந்தான். அது கால்லேயும் கழுத்துலேயும் கட்டினான். தரதரன்னு இழுத்துக்கிட்டு போனான். அடிச்சு.. கொல்லைப்பக்கத்துலே கட்டிப்போட்டுட்டான். அன்ன ஆகாரம் எதுவுமே கொடுக்கலே.. பட்டினி போட்டுட்டான். இப்ப அந்தக்கழுதை யோசிக்குது.

"என்ன இது? நம்ம எஜமானுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? அந்த நாய் பழகறது மாதிரிதானே நாமளும் பழகினோம். ஆனால், இந்த மனுஷன் நாயை அடிக்கலே... ஆனால், நம்மளை அடிக்கிறான்.. இப்படி கொண்டாந்து கட்டிப்போட்டுட்டானே.. என்ன காரணமாயிருக்கும்?"

அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டுதான் அந்தக் கழுதை.

எதுக்கு, இந்த கதை -ன்னா...

இது மாதிரியே நாம கூட சிலசமயம் யோசிக்கறது உண்டு.. நம்ம இயல்புமாறி நடக்க ஆரம்பிச்சுட்டா பல சமயங்கள்லே இப்படி யோசிக்கிறாப் போலத்தான் ஆயிடும்!

அதனாலே ஒரு மனுஷன் எப்படி நடந்துக்கணுமோ அப்படி நடந்துக்கிட்டாத்தான் நமக்கு மரியாதை!

வெறிநாய் கடிச்சுட்டா மனுஷனும் அதுமாதிரியே ஆயிடறான் பார்த்தீங்களா? அவனோட இயல்பு மாறிடுது!

ஒருத்தனைப் பார்த்து இன்னொருத்தன் கேட்டானாம்.

"வெறிநாய் ஒண்ணு உன்னைக் கடிச்சுட்டா நீ என்ன செய்வே?"ன்னு!

"நான் உடனே பேப்பரும் பேனாவும் கேப்பேன்!"னானாம் அவன்.

"ஏன்... உயில் எழுதறத்துக்கா?"ன்னு கேட்டிருக்கான்.

"இல்லே... நான் யாரை யாரையெல்லாம் கடிக்கணும் -ன்னு லிஸ்ட், தயார் பண்றதுக்கு!" அப்படின்னானாம்!அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty Re: இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by அசுரன் Mon Sep 17, 2012 1:24 am

மிக மிக அருமையான சிந்திக்க வைக்கும் தகவல்... நாய் காலை தூக்கி தோளில் போடலாம் கழுதை போட்டால் என்னாகும்... நல்ல படிப்பனை தரும் செய்தி சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty Re: இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by யினியவன் Mon Sep 17, 2012 1:26 am

லிஸ்ட் தயார் பண்ணிட்டீங்களா சிவா. புன்னகை

இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம்
சவுக்கியமே பாடலை ஒத்த கதை நன்று.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty Re: இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by அசுரன் Mon Sep 17, 2012 1:28 am

யினியவன் wrote:லிஸ்ட் தயார் பண்ணிட்டீங்களா சிவா. புன்னகை

இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம்
சவுக்கியமே பாடலை ஒத்த கதை நன்று.
ஏன் கேக்குறீங்க..உங்க லிஸ்டோட ஒத்துபோகுதான்னா? சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty Re: இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by யினியவன் Mon Sep 17, 2012 1:39 am

எங்க ரெண்டு பேரு லிஸ்டிலும் மொத ஆளு நீங்கதான் அசுரன். புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty Re: இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை