புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் உயிர் இழப்போரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படும் என்று போராட்டக்குழு அறிவிப்பு வெளியிட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் போராட்டக்குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்த தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் காயமடைந்தனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை போராட்டக்குழுவினர் கடலோர கிராமங்களில் தண்டோரா போட்டனர். அதாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போராட்டத்தின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு போராட்டக்குழு இழப்பீடு வழங்கும் என்றும், கூத்தங்குழியைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.7 லட்சமும், இடிந்தகரையைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தண்டோரா போட்டனர். மேலும் இதற்காக 32 பேர் கொண்ட நிதிக்குழுவும் அமைக்கப்பட்டது.
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்ற குற்றச்சாட்டை போராட்டக்குழு மறுத்தது. அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே தங்கள் மீது பழிபோடுவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் போராட்டத்தில் இறப்பவரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சமும், ரூ. 5 லட்சமும் இழப்பீடு வழங்க அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அரசியல் கட்சிகள் கூறிய புகார் உண்மையாக இருக்குமோ என்று பலர் நினைக்கின்றனர்.
தட்ஸ்தமிழ்!
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் உயிர் இழப்போரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படும் என்று போராட்டக்குழு அறிவிப்பு வெளியிட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் போராட்டக்குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்த தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் காயமடைந்தனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை போராட்டக்குழுவினர் கடலோர கிராமங்களில் தண்டோரா போட்டனர். அதாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போராட்டத்தின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு போராட்டக்குழு இழப்பீடு வழங்கும் என்றும், கூத்தங்குழியைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.7 லட்சமும், இடிந்தகரையைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தண்டோரா போட்டனர். மேலும் இதற்காக 32 பேர் கொண்ட நிதிக்குழுவும் அமைக்கப்பட்டது.
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்ற குற்றச்சாட்டை போராட்டக்குழு மறுத்தது. அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே தங்கள் மீது பழிபோடுவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் போராட்டத்தில் இறப்பவரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சமும், ரூ. 5 லட்சமும் இழப்பீடு வழங்க அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அரசியல் கட்சிகள் கூறிய புகார் உண்மையாக இருக்குமோ என்று பலர் நினைக்கின்றனர்.
தட்ஸ்தமிழ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- rudranபண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
எண்பத்தெட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய அதிபர் மிகயீல் கோர்பச்சேவும் கையெத்திட்ட கூடங்குளம் அணுமின் நிலையம் சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி வடிவம் பெற்றது. இரண்டாயிரத்து நான்கில் ஒரு சிறு துறைமுகம் நிர்மாணிக்கப் பட்டு அதன் வழியாக அணு உலைக்கான சாதனங்கள் கொண்டு வரப்பட்டன.சில பாகங்கள் தூத்துக் குடி துறைமுகம் வழியாக கொண்டு வரப்பட்டன. இவ்வாறாக கட்டி முடிக்கப் பட்ட பிறகு, அணு உலை வேண்டாம் என்று எதிர்ப்பவர்கள் அப்போது எங்கே போயிருந்தார்கள் என்பதுதான் புரியாத புதிர்.
rudran wrote:எண்பத்தெட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய அதிபர் மிகயீல் கோர்பச்சேவும் கையெத்திட்ட கூடங்குளம் அணுமின் நிலையம் சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி வடிவம் பெற்றது. இரண்டாயிரத்து நான்கில் ஒரு சிறு துறைமுகம் நிர்மாணிக்கப் பட்டு அதன் வழியாக அணு உலைக்கான சாதனங்கள் கொண்டு வரப்பட்டன.சில பாகங்கள் தூத்துக் குடி துறைமுகம் வழியாக கொண்டு வரப்பட்டன. இவ்வாறாக கட்டி முடிக்கப் பட்ட பிறகு, அணு உலை வேண்டாம் என்று எதிர்ப்பவர்கள் அப்போது எங்கே போயிருந்தார்கள் என்பதுதான் புரியாத புதிர்.
ராஜா wrote:ஒரு சிலர் பெரும் தொகையான 13 ஆயிரம் கோடி ரூபாய்
இதில் இப்போது முடங்கியிருப்பதால் இந்த உலைகளை
மட்டும் அனுமதித்துவிடலாமா என்று கேட்கிறார்களே ?
மன்மோகன்சிங் கூட ரஷ்யாவில் நிருபர்களிட்ம பேசும்போது, சுமார்
13 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு அமைத்த உலையை அப்படி
எளிதில் மூடிவிட்டுப் போய்விடமுடியாது என்று பேசியிருக்கிறார்.
அதாவது அவருக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய்தான் முக்கியம்.
மக்களின் நலனோ, அச்சமோ அதை விட சின்ன விஷயம்தான்.
இடிந்தகரை கிராமத்திலிருந்து வந்த சாதாரணப் பெண்ணிடம்
சென்னை நிருபர் சந்திப்பில் ஒரு நிருபர் கேட்டார். இத்தனை கோடி
ரூபாய் செலவு செய்து கட்டிய பிறகு மூடச் சொல்வது நியாயமா?
பணம் வீணாகிறதே ? அந்தப் பெண் சொன்ன பதில்: உங்க மகளுக்கு
திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி விடிந்தால்
கல்யாணம் நடத்தபோறீங்க. பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு
முந்தின ராத்திரி தெரிய வந்தா, அடுத்த நாள் காலையில கல்யாணம்
செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம்
நடக்கட்டும்னு விடுவீங்களா?
முழுவதும் படிக்க :- http://www.eegarai.net/t81310-topic
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
rudran wrote:எண்பத்தெட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய அதிபர் மிகயீல் கோர்பச்சேவும் கையெத்திட்ட கூடங்குளம் அணுமின் நிலையம் சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி வடிவம் பெற்றது. இரண்டாயிரத்து நான்கில் ஒரு சிறு துறைமுகம் நிர்மாணிக்கப் பட்டு அதன் வழியாக அணு உலைக்கான சாதனங்கள் கொண்டு வரப்பட்டன.சில பாகங்கள் தூத்துக் குடி துறைமுகம் வழியாக கொண்டு வரப்பட்டன. இவ்வாறாக கட்டி முடிக்கப் பட்ட பிறகு, அணு உலை வேண்டாம் என்று எதிர்ப்பவர்கள் அப்போது எங்கே போயிருந்தார்கள் என்பதுதான் புரியாத புதிர்.
1990இல் இத்திட்டம் ஆரம்பிக்கபட்ட சமயம் போராட்டம் நாகர்கோவிலில் நடந்திருக்கிறது , ஆனால் அந்த சமயங்களில் இப்போது போல் ஊடகங்கள் இல்லாத காரணத்தால் போராட்டம் வெளியே வராமல் போய்விட்டது ,,,
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
கூடங்குளம் அணுஉலைக்கு தேவையான தண்ணீர் பேச்சிப்பாறை அணையில் இருந்து கொண்டுசெல்கிறார்கள் ,,இதனால் குமரி மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கும் ,,,,
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ராஜா wrote:தங்கள் செய்திக்கு நன்றி டார்வின்டார்வின் wrote:1990இல் இத்திட்டம் ஆரம்பிக்கபட்ட சமயம் போராட்டம் நாகர்கோவிலில் நடந்திருக்கிறது , ஆனால் அந்த சமயங்களில் இப்போது போல் ஊடகங்கள் இல்லாத காரணத்தால் போராட்டம் வெளியே வராமல் போய்விட்டது ,,,
நேரம் இருந்தால் இதையும் படியுங்கள்.. டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு எழுத்தாளர் ஞாநி கூடன்குளம் பற்றி கல்கியில் அளித்த பதில்..
அன்புள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு- ஞானி
வணக்கம். நான் உங்கள் ரசிகன் அல்ல. விமர்சகன். “நல்லது செய்தல்
ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று உங்களை சில வாரம் முன்னால் இதே பக்கங்களில் கோரியிருந்தேன். நீங்கள் கேட்கவில்லை. உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தை செய்திருக்கிறீர்கள். கூடன்குளம் அணு உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று ! அணுத் தொழில்நுட்பம் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று எந்த அணு விஞ்ஞானியும் சொல்லமாட்டார்.
நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏரோநாட்டிகல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு ராக்கெட் விடுவது, ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பது முதலிய துறைகளில் வேலை பார்த்தவர் நீங்கள். அதிலும் பெரும்பாலும் உங்கள் வேலை நிர்வாக வேலை. ஆராய்ச்சி வேலை அல்ல. வேலை செய்யும் விஞ்ஞானிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக இருந்தீர்கள். அணுகுண்டு தயாரிப்பதற்கு உதவி செய்தீர்கள். எனவே நீங்கள் அணுமின்சாரம் என்ற முகமூடியை பலமாக ஆதரிப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
கூடன்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அணு உலைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை ஒழித்துக் கட்ட மத்திய அரசு சாம, தான, பேத தண்ட முறைகள் அனைத்தையும் கையாளுகிறது. அதில் ஒன்றுதான் உங்களை ஏவிவிட்டிருப்பது. அணு ஆயுத, ராணுவ ஆதரவாளரான நீங்கள் அணு உலைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் விருப்பப்படி உதயகுமாரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயத் தயாராக இருக்கிறது.
அணு உலைகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களோ நாங்களோ ஒருபோதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாங்கள் காந்தியவாதிகள். அதுதான் நமக்குள் அடிப்படை வித்யாசம்.
உங்களுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் பலத்தை பயன்படுத்தி பெரிய பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக உங்கள் ‘ஆராய்ச்சி’க் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறீர்கள். அதே அளவு இடத்தை எங்களுக்கு இந்த பத்திரிகைகளை ஒதுக்கமாட்டார்கள். ஒதுக்கினால், உங்கள் சாயங்களை வெளுத்துவிடுவோம் என்பது அவர்களுக்கும் தெரியும். நீங்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைக் கட்டுரையில் பல முழு உண்மைகளை மறைக்கிறீர்கள். பல அரை உண்மைகளை அள்ளி வீசுகிறீர்கள். ஒவ்வொன்றாகப் பார்த்தால் இடம் போதாது. முடிந்த வரை இங்கே பார்ப்போம்.
செர்னோபில் விபத்தில் 57 பேர் மட்டுமே இறந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை விட அதிகமாக சாலை விபத்தில் பலர் சாவதாக ஒரு அபத்தமான் ஒப்பீடு செய்திருக்கிறீர்கள். சாலைவிபத்து ஏற்பட்டால், விமான, ரயில் விபத்து ஏற்பட்டால், சுற்றிலும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனித நடமாட்டமே அடுத்த பல வருடங்களுக்குக் கூடாது என்ற நிலைமை கிடையாது. ஆனால் அணுவிபத்து ஏற்பட்டால், அடுத்த தலைமுறை வரை தொடரும். செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட கதிரியக்க பாதிப்புகளில் இரண்டாயிரம் பேர் வரை செத்திருக்கிறார்கள் என்பதுதானே முழு உண்மை. அதை ஏன் சொல்லாமல் கேன்சர் கேஸ்கள் என்று மழுப்புகிறீர்கள் ?
1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ..டி என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ( நீங்கள் படித்த குரோம்பேட்டை எம்.ஐ.டி அல்ல) 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.
விபத்து மட்டுமல்ல.அணு உலைகள் இயங்கும் இடங்களிலெல்லாம் கதிரியக்க ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பவர் நீங்களும் உங்கள் கும்பலும் மட்டும்தான். அமெரிக்காவின் அணு உலைகள் இயங்கும் 65 இடங்களிலும் ரத்த, மூளை புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்பாக்கத்தை சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த உங்கள் அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை ?
இந்தியாவில் அணு உலைகளில் விபத்தே நடப்பதில்லை என்று இன்னொரு பொய் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியிடாம்ல் ரகசியமாக அல்லவா அணு சக்தி நிர்வாகம் இதுவரை இருக்கிறது? அதுவேதான் நிர்வாகம், அதுவேதான் கண்காணிக்கும் உயர் அமைப்பு. குற்றவாளியே நீதிபதியாகவும் இருக்கும் வேறு எந்த துறையும் இந்தியாவில் இல்லை. உச்ச நீதி மன்றம் போல, கணக்குத் தணிக்கை அதிகாரி போல சுயேச்சையான் விசாரணை அமைப்பு அணுசக்தித் துறைக்கு இருந்தால்தானே உண்மைகள் வெளிவரமுடியும்? அப்படி ஒரு விசாரணைக்கு அந்த துறை தயாரா? அணு உலை அமைக்க இடம் தேர்வு செய்வது பற்றிய ஆய்வு முதல், ஊழியருக்கு கதிர் வீச்சு அளவு ஆய்வு வரை எந்த அறிக்கையையும் பகிரங்கப்படுத்த மறுப்பதுதானே வழக்கமாக இருக்கிறது ?
ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள். ராஜஸ்தான் உலையில் 1991ல் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக ஒரு காண்ட்ராக்டர் பெயிண்ட் அடிக்க கலந்தார். அதிலேயே பெயிண்ட்டர்கள் முகம் கழுவினார்கள். கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கல்ந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள். கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 120 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது.இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான். அணுசக்தி துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் “நெருக்கமான உறவினால்” டிசைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. இதே போன்ற ஊழல் இந்த வருடம் ஜூலையில் ரஷ்யாவில் நடந்தது. லெனின்கிராடில் அணு உலை கட்டுமானம் நடக்கும்போது தடுப்புக் கவச சுவர் கான்க்ரீட் நொறுங்கி விழ்நுதது. இந்த உலை கூடன்குளத்தில் ரஷ்யர்கள் அமைக்கும் உலையின் அடுத்த மாடல். ஊழல் மிகுந்த இந்தியாவில் எப்படி அணு உலை கட்டுமானம் பாதுகாப்பானது என்று நம்பமுடியும் ?
இந்தியாவில் போதுமான யுரேனியம் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அது என்னவோ இலவம்பஞ்சு போல ஆபத்தில்லாமல் எட்டிப் பறிக்கும் பொருள் போல பேசுகிறீர்கள். யுரேனிய சுரங்க விபத்து, ஆபத்து பற்றி எதையும் உங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோடா யுரேனிய சுரங்கப்பகுதியை சுற்றியுள்ல கிராமங்களில், மலட்டுத்தன்மை, புற்று நோய்கள், பிறவி ஊனம் எல்லாம் தேசிய சராசரியை விட அதிகமாகியிருப்பதை நோபல் பரிசு பெற்ற் உலக அமைப்பான அணுப்போருக்கு எதிரான் மருத்துவர் அமைப்பின் இந்தியக் கிளையின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.
ஒரு பிரச்சினை வருவதற்கு முன்பு அது வராது என்று சொல்வதும் வந்தபிறகு அதை முன்பே கவனித்துவிட்டோம் என்று சொல்வதும்தான் அணுசக்தி துறையின் வழக்கம். நவம்பர் 1986 கன நீர் அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் அணுசக்தி நிர்வாகம் சொல்லிற்று- ” இந்தியாவில் சுநாமிகள் வருவதில்லை. எனவே புயல்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” ஆனால் 2004ல் சுநாமி கல்பாக்கத்துக்கு வந்தது. கல்பாக்கம் உலை சுநாமியைக் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டதில்லை. தப்பியது அதிர்ஷ்டமே தவிர, நீங்கள் மெச்சும் அணு விஞ்ஞானிகளின் முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல.
விபத்துக்கு பயந்தால் முன்னேறமுடியாது என்று ஒரு கருத்து சொல்கிறீர்கள். நீங்கள் விபத்துக்கு பயப்படாமல், கன நீரில் முகம் கழுவி, யுரேனியம் படுக்கையில் படுத்து ஆராய்ச்சி செய்து மேடம் கியூரியைப் போல நோபல் வாங்கிக் கொள்வதில் எங்களுக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை.ஆனால் ஒரு மக்கள் சமூகத்தையே அவர்கள் சம்மதம் இல்லாமல் ஆபத்துக்கு உட்படுத்த உங்களுக்கு துளிக் கூட உரிமை கிடையாது. ஆனால் கூடங்குளத்தில் அதைத்தான் செய்கிறீர்கள். நீங்கள் அதை நியாயப்படுத்துகிறீர்கள். எதிர்க்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்கிறீர்கள். என்ன அநியாயம் இது ?
மக்கள் சம்மதத்தைப் பெறுவதற்காக 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கச் சொல்கிறீர்கள். தரமான, பள்ளிக்கூடம், மருத்துவமனை, தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகல், நான்குவழிச் சாலை எல்லாவற்றையும் கூடங்குளத்தை சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குறுதி தருகிறீர்கள். அய்யா, இதையெல்லாம் அணு உலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிராமங்களுக்கு செய்வதுதானே அரசின் கடமை? அணு உலைக்கு சம்மதித்தால்தான் செய்வீர்களா? கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா? இல்லையே ? ஏன் இல்லை ? அங்கே எதிர்ப்பியக்கம் நடக்கவில்ல. எனவே லஞ்சம் கொடுக்க வில்லை, அல்லவா?
கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால் அந்நிய சக்திகள் இருப்பதாக நீங்களும் பூச்சாண்டி காட்டியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரா ஏகாதிபத்ய சக்திகள் இந்தியா முன்னேறவிடாமல் தடுக்க இப்படி செய்வதாக் சொல்கிறீர்கள். அந்த சக்தி யார் ? அமெரிக்காதானே ? அது மன்மோகன் அரசுடன் போட்ட 123 ஒப்ப்ந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா? அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிடம் அணு உலைகளை வாங்க இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது ? அதில் எப்படி இந்தியா முன்னேறும் ? விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டை அணு உலை விற்ற கம்பெனி முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது ? அதை நீங்கள், ஏன் அய்யா அப்போது குடியரசுத்தலைவராக இல்லாதபோதும் எதிர்க்கவில்லை ? உலகப் பொருளாதார ஏகாதிபத்யத்துடன் அந்த ஒப்பந்தம் போடத் தடையாக இருந்த இந்திய இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை முறியடிக்க முலாயம் சிங் யாதவின் உதவியை நீங்கள்தான் பெற்றுத் தந்தீர்கள், இல்லையா? கூடங்குளம் விஷயத்தில் மட்டும் 100சதவிகித தேசபக்தர் ஆனது எப்படி ? 123ல் மட்டும் அமெரிக்க ஆதரவாளராக இருந்தது எப்படி ?
ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது என்று நாங்கள் சுட்டிக் காட்டினால், அதற்குக் காரணம் அதனிடம் யுரேனியம் இல்லை என்றும் ஆனால் இந்தியாவிடம் போதுமான யுரேனியம் இருப்பதால் நமக்கு அணு உலைதான் லாபமானது என்றும் கதை விடுகிறீர்கள். அப்படியானால் ஏன் 123 ஒப்பந்தம் போட்டு நாம் யுரேனியத்தையும், அணு உலை இயந்திரங்களையும் வெளிநாடுகளில் வாங்க வேண்டும் ? ஏன் கூடங்குளத்துக்கு ரஷ்யாவிலிருந்து யுரேனியம் வரவேண்டும் ? நம்மிடமே இருக்கிறதே ?
உங்கள் அசல் நோக்கம் மின்சாரமே அல்ல. அணுகுண்டுதான். மின்சார அணு உலைகளுக்கு வெளிநாட்டு யுரேனியம் வாங்கினால், நம்மிடம் உள்ள யுரேனியத்தை மொத்தமாக அணுகுண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலிருந்து வாங்கும் யுரேனியம் உள்ள உலைகள் மட்டும் சர்வதேச கண்காணிப்புக்கு உட்படும். நம் அணுகுண்டு உலைகள் கண்காணிப்பில் வராது என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம், இல்லையா?
உங்கள் நீண்ட கட்டுரையில் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஏறக்குறைய முழு உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். சூரிய சக்தியும் காற்று சக்தியும்தான் முழுமையான தூய்மையான பசுமை சக்திகள். அவற்றுக்கு இந்தியாவில் மாபெரும் வாய்ப்புள்ளது என்பதுதான் அந்த உண்மை. ஆனால் அவற்றை நிலையானதாக நம்பமுடியாது என்று சொல்லி நல்ல பாலில் பத்து சதவிகிதம் கனநீர் கலந்துவிட்டீர்கள். ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இப்போதே 20 சதவிகிதம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் பெறும்போது இங்கே ஏன் முடியாது ? உங்கள் விஞ்ஞான அறிவும் கோடானுகோடி ரூபாய்களும் அதற்கல்லவா செலவிடப்படவேண்டும்? சூரியசக்தியிலிருந்து 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இங்கே சாத்தியம்.
அவ்வளவு ஏன் ? இப்போது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்துகொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ந்மக்குக் கிடைத்துவிடும். கிராம மேம்பாட்டுக்காக புரா விடுகிறீர்களே. ஏன் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் 10 மெகாவாட், 50 மெகாவாட் அளவில் மாற்று எரிசக்தி மூலம் மின் நிலையம் அமைத்து தன்னிறைவு பெறும் திட்டம் உங்கள் புராவில் இடம் பெறுவதில்லை ? ஏன் பிரும்மாண்டமான ஆபத்தான கோடிக்கணக்கில் விழுங்கும் அணுதிட்டங்களே உங்களுக்கு இனிக்கின்றன ?
இந்த மாதம் 81 வது வயதில் நுழைந்துவிட்டீர்கள்.கடந்த 50 வருடங்களில் அணுசக்திதுறை அடுத்த இருபதாண்டு திட்டம் என்று சொன்ன எதுவும் அதன்படி நடக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் அரசு விஸ்வாசத்தினால், இந்த தள்ளாத வயதில் டெல்லி, நெல்லை, கூடங்குளம் என்று நீங்கள் அலைவது வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறீர்கள். அதிகபட்சம் இன்னும் 20 வருடங்கள். நூறைத் தாண்டி மனிதன் ஆரோக்கியமாகக வாழ்வது அரிது. உங்கள் நூற்றாண்டு வரும்போது இந்தியாவில் அணு மின்சாரம் நிச்சயம் மொத்த தேவையில் 10 சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்திராது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகியிருக்கும். லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை நசுக்கியிருக்கும்.
கனவு காணச் சொல்வது உங்கள் வழக்கம். எங்கள் கனவு அமைதியான இயற்கையோடு இயைந்த பசுமை வாழ்க்கை. உங்கள் கனவில் என்ன வருமோ எனக்குத் தெரியாது. ஒரு கோரமான அணு விபத்தை இந்தியாவில் உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்க்கும் கொடுமை உங்களுக்குக் கனவிலும் நேராமல் இருக்கட்டும்.
இரவு படுக்கச் செல்லும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள். அணுஉலைகள் குண்டு தயாரித்தாலும் மின்சாரம் தயாரித்தாலும் அவை மக்கள் நலனுக்கு எதிரானவை என்பது உங்கள் மனசாட்சிக்கு நிச்சயம் நன்றாகத் தெரியும். அணு மின்சாரம் ஆயுத திட்டத்தின் ஒரு முகமூடி மட்டும்தான்.
மின்சாரம்தான் உண்மையான நோக்கம் என்றால் உங்களுக்குப் பிடித்தமான் காயத்ரி மந்திரத்தைப் பின்பற்றுவீர்கள். பாரதி வார்த்தையில் அதை நினைவுபடுத்துகிறேன். செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.
அன்புடன்
ஞாநி
(கல்கி 12.1.11 இதழில் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகியுள்ளது)
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
2030க்குள் அனைத்து அணு உலைகளும் ஜப்பானில் மூடப்படும் என்று ஜப்பான் அரசு இரண்டு தினங்களுக்கு முன் அறிவித்து உள்ளது ,,,
பகிர்வுக்கு நன்றி அசுரன் , இதை தனி பதிவாகவே இட்டிருக்கலாம் போல அருமையான செய்தி. இதற்கெல்லாம் படித்த அணு உலைக்கு ஆதரவான எவருமே பதிலளிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் ஒரே தாராக மந்திரம் அணு உலையை எதிர்ப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள் என்பதே ......
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நமது தமிழ்நாட்டில் ஆதரவு எதிர்ப்பு என் இருவகையாளர்கள் இருப்பதால் திரு ஞாநி அவர்கள் கூட புதியதலைமுறை செய்திகள் தொலைக்காட்சியில் நிறைய பேசவில்லை... மேலும் வெளிநாட்டு ஆதரவு என்பது நமது அணுவிஞ்ஞானி நாராயண சாமியால் பரப்பபட்டது... ஜெர்மனியிலிருந்து சுப.உதயக்குமாரின் பள்ளிக்கு வழக்கமாக பணம் அனுப்பும் பெனபேக்டர் ஒருவரின் பணத்தை இதில் இட்டுக்கட்டி மத்திய அரசு அவர் மீது குற்றம் சுமத்த நினைத்தது. பள்ளியின் கணக்கு வழக்குகளை பார்த்ததில் அது வெறும் ஏழைமாணவர்களுக்கான நன்கொடையே என தெரிந்ததும். ஆட்களை ஏவி பள்ளி சுவரை இடித்தது. இந்த போராட்டத்திற்கு அன்னிய பணம் செலவிடப்படுகிறது என்று நிரூபிக்க முடியவில்லை.ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி அசுரன் , இதை தனி பதிவாகவே இட்டிருக்கலாம் போல அருமையான செய்தி. இதற்கெல்லாம் படித்த அணு உலைக்கு ஆதரவான எவருமே பதிலளிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் ஒரே தாராக மந்திரம் அணு உலையை எதிர்ப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள் என்பதே ......
செல்போன் டவர்களின் கதிர்வீச்சை பாதியாக குறைக்க உச்சநீதிமன்றம் இப்போது போன மாதம் தான் அறிவுறுத்தியது. செல்போன் டவரே கதிர்வீச்சு என்றால், இது அணுஉலை.???
- GuestGuest
அசுரன் wrote:நமது தமிழ்நாட்டில் ஆதரவு எதிர்ப்பு என் இருவகையாளர்கள் இருப்பதால் திரு ஞாநி அவர்கள் கூட புதியதலைமுறை செய்திகள் தொலைக்காட்சியில் நிறைய பேசவில்லை... மேலும் வெளிநாட்டு ஆதரவு என்பது நமது அணுவிஞ்ஞானி நாராயண சாமியால் பரப்பபட்டது... ஜெர்மனியிலிருந்து சுப.உதயக்குமாரின் பள்ளிக்கு வழக்கமாக பணம் அனுப்பும் பெனபேக்டர் ஒருவரின் பணத்தை இதில் இட்டுக்கட்டி மத்திய அரசு அவர் மீது குற்றம் சுமத்த நினைத்தது. பள்ளியின் கணக்கு வழக்குகளை பார்த்ததில் அது வெறும் ஏழைமாணவர்களுக்கான நன்கொடையே என தெரிந்ததும். ஆட்களை ஏவி பள்ளி சுவரை இடித்தது. இந்த போராட்டத்திற்கு அன்னிய பணம் செலவிடப்படுகிறது என்று நிரூபிக்க முடியவில்லை.ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி அசுரன் , இதை தனி பதிவாகவே இட்டிருக்கலாம் போல அருமையான செய்தி. இதற்கெல்லாம் படித்த அணு உலைக்கு ஆதரவான எவருமே பதிலளிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் ஒரே தாராக மந்திரம் அணு உலையை எதிர்ப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள் என்பதே ......
செல்போன் டவர்களின் கதிர்வீச்சை பாதியாக குறைக்க உச்சநீதிமன்றம் இப்போது போன மாதம் தான் அறிவுறுத்தியது. செல்போன் டவரே கதிர்வீச்சு என்றால், இது அணுஉலை.???
உங்களை போன்ற ஆசான்கள் தான் மக்களுக்கு புரிய வைக்க முடியும் அண்ணே
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கூடங்குளம்: போராட்டக்குழுவில் இருந்து பாதிரியார் விலகல்: உடைகிறது போராட்டக்குழு
» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
» இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?
» கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு
» ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
» இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?
» கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு
» ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3