புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
441 Posts - 47%
heezulia
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_m10பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு!

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 08, 2012 10:03 pm

First topic message reminder :

உலக மொழிகளில் ‘தமிழ்’ பக்தியின் மொழி என்று சிறப்பிக்கப்படுகிறது. சைவ சமயத்தைச் சார்ந்த பெரியோர்களால் படைத்தளிக்கப் பெற்ற பக்தி இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகள் எனப்படுகின்றன.

முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் திருஞானசம்பந்தர். நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளைப் பாடியவர் திருநாவுக்கரசர். ஏழாம் திருமுறையைப் பாடியவர் சுந்தரர். எட்டாம் திருமுறையைப் பாடியவர் மாணிக்கவாசகர். இதில் திருவாசகம், திருக்கோவையார் என்னும் இருநூல்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்பதாம் திருமுறை திருமாளிகைத்தேவர் முதலாக சேதிராயர் இறுதியாக ஒன்பதின்மரால் பாடப்பட்ட திருவிசைப்பா – திருப்பல்லாண்டு என்பதாகும். பத்தாம் திருமுறை திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம். பதினொராம் திருமுறை பன்னிருவரால் பாடப்பட்ட நாற்பது இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டது. பன்னிரெண்டாம் திருமுறை தெய்வச் சேக்கிழார் எழுதிய பெரியபுராணம்.

பன்னிரு திருமுறையுள் பதினொராம் திருமுறையுள் அமைந்திருக்கும் நூல் - பொன்வண்ணத்தந்தாதி என்பதாகும். இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனார். இவருடைய இயற்பெயர் பெருமாக்கோதையார் என்பதாகும். பொன்வண்ணத்தந்தாதி சிவபெருமானின் அருளையும் அவனை வணங்கி அவனருள்பெறுவதைப் பற்றியும் விவரிக்கின்றது.

பாடல் எண் : 1
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.

பொழிப்புரை :
தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே. தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே. பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே.

(இச்செய்யுள் தில்லைக் கூத்தப் பெருமானைக் கண்டு அவர் மேல் காதல் கொண்டு ஆற்றாமை எய்தினாள் ஒருத்தி கூற்றாகச் செய்யப்பட்டது. காதலால் வருந்தும் தலைவியரது மேனி பொன்னிற மாகிய பசலையை அடையும். “தன்னைக் கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்” என்பது இவ்வாறு வெளிப் பொருள் தருவதாயினும், `காணப்படாத இறைவனது இயல்பு காணப்படுகின்ற அவன் அடியவரிடத்து விளங்குதல் பற்றியே அறியப்படும்` என்பதே இதன் உட்பொருள்)
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 24, 2012 4:11 pm

பாடல் எண் : 12
வானகம் ஆண்டு மந் தாகினி
ஆடிநந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல்
வோருஞ் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப்
போருங் கனகவண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும்
அல்லாப் படிறருமே.

பொழிப்புரை :
சிவகங்கையில் ஆடுதல், சிவ நந்தனவனத்தில் நிறைந்த பூக்களைச் சூடுதல் முதலிய சிறப்புக்களுடன் சிவலோகத்தில் வாழ்பவரும், கிழிந்த ஆடையை அரையில் சுற்றிக்கொண்டு, கால் நகம் தேய மண்ணுலகில்`` எங்கும் திரிந்து, இரப்பவரும் யாவர் எனின், முற்பிறப்பில் திருமேனியில் பால்போலும் நிறத்தையுடைய திருநீற்றைப் பூசியுள்ள சிவபெருமானுக்குத் தொண்டு செய்தவரும், அது செய்யாது அதனை இகழ்ந்தவருமேயாவர்.

பாடல் எண் : 13
படிறா யினசொல்லிப் பாழுடல்
ஓம்பிப் பலகடைச்சென்
றிடறா தொழிதும் எழு நெஞ்ச
மேயெரி ஆடியெம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட
பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன்
னேனிவ் வுலகினுள்ளே.

பொழிப்புரை :
``எள் விழுந்த இடத்தைத் தேடிக்கொண்டு, `ஈ மொய்த்தாலும் இழப்பு ஏற்படும்` என்று அது பற்றி ஈயை அடிக்கின்ற உலோபியை `வரையாது வழங்கும் வள்ளலே` எனக் கூறுவது போன்ற பல பொய்களைச் சொல்லி இரந்து, பிறிதொன்றற்கும் பயன்படாத உடலைப் பாதுகாத்தலை மேற்கொண்டு, பல இல்லங்களின் வாயிற் படிகளில் ஏறி இடறுதல் நேராத படி அதனினின்றும் நீங்குவோம்; நெஞ்சமே, புறப்படு. `எதற்கு` எனின், எரியின்கண் ஆடுபவனும், எம்பெருமானும் கடலில் பரந்து எழுந்த நஞ்சத்தை உண்டவனும் ஆகிய அவனது திருவடிகளைப் பல்லாற்றானும் சார்வனவே, இவ்வுலகத்தில் கிடைத்ததாகிய இவ்வுடலினால் உளவாம் பயன்களாகும். இதனை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். (என்மேற் பழியில்லை).

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Dec 13, 2012 10:20 pm

பாடல் எண் : 14
உலகா ளுறுவீர் தொழுமின்விண்
ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின்
பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின்
நாள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி
யாரை அலைமின்களே.

பொழிப்புரை :
மண்ணுலகத்தை ஆள விரும்புகின்றவர்களே, `நீவிர், (உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானைக் கைகுவித்துக் கும்பிடுங்கள். விண்ணுலகை ஆள விரும்புகின்றவர்களே, (நீவிர், உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானது திருவடிகளில் வீழ்ந்து பணியுங்கள்.
நாள்தோறும் பற்பலவற்றை விரும்புகின்றவர்களே (நீவிர் உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானை இடையறாது நினையுங்கள். இவைகளையெல்லாம் விடுத்துச் சிவபெருமானோடு இரண்டறக் கலக்க விரும்புகின்றவர்களே, (நீவிர் உங்கள் விருப்பம் நிறைவேற) அப்பெருமானை நந்தவனத்தில் உள்ள நல்ல பல மலர்களால் அருச்சனை செய்யுங்கள். என்றும் நரகத்தில் நிற்றலாகிய பொல்லாத விளைவை விரும்புகின்றவர்களே, (அதற்கு நீவிர்) சிவ பெருமானுடைய அடியாரை வருந்தப் பண்ணுங்கள்.

பாடல் எண் : 15
அலையார் புனலனல் ஞாயி
றவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய
சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங்
கொடித்தேர் அரக்கனென்னே
கலையான் ஒருவிரல் தாங்ககில்
லான்விட்ட காரணமே.

பொழிப்புரை :
(உலகீர்) கொடியை உயர்த்திய தேரை உடைய இராவணன் பத்துத் தலையும், இருபது தோளும் உடைமையால் மிகப் பருத்திருந்தும் சிறிய மானைக் கையில் ஏந்திய சிவபெருமானது கால் விரல்களில் ஒன்றன் ஊன்றலைத் தாங்கமாட்டாது அலறிய காரணம் என்ன? (அதனை எண்ணிப் பார்த்து,) அலை பொருந்திட நீர், ஞாயிறு, நிலம், திங்கள், வானம், காற்று, அழிவற்ற உயிர் ஆகிய எட்டினையும் தனது உடம்பாகக் கொண்ட, ஒளி வடிவாகிய அந்தப் பெருமானையே அவனது திருவடிகளைத் தலையிற் சுமந்தாயினும் சேருங்கள்.
(தொடரும்)

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக