புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
Page 1 of 1 •
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
#845237கடற்கரை வழியாக வந்த கிராம மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நெருங்கி வந்து, முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சு தோல்வியில் முடிந்ததால், விடிய, விடிய போராட்டம் தொடர்ந்தது.
முற்றுகை போராட்டம்
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் உள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, இடிந்தகரை கிராமத்தில் போராட்டம் நடந்து வருகிறது. அணுமின் நிலையத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து சமீபத்தில் உத்தரவிட்டதுடன், அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பவும் அனுமதி வழங்கியது.
இதனால் போராட்டக் குழுவினர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினர். 144 தடை உத்தரவையும் மீறி அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 9-ந் தேதி நடத்துவோம் என்று அறிவித்தனர். எனவே கூடங்குளம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
சாலைகள் மூடப்பட்டன
நேற்று இடிந்தகரை கிராமத்துக்கு செல்லும் தாமஸ் மண்டபம், வைராவி கிணறு சாலைகள் மூடப்பட்டன. இடிந்தகரை மக்கள் திரண்டு வந்தால் அவர்களை கூண்டோடு கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.
நேற்று காலையில் இந்த சாலைகளில் ஆயிரக்கணக்கான போலீசார் அணிவகுத்து நின்றனர். மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி வரதராஜு, நெல்லை சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி உள்பட 9 மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
தயார் நிலையில் 60 பஸ்கள்
கைது செய்யப்படுகிறவர்களை அழைத்துச் செல்ல சுமார் 60 அரசு பஸ்கள் வரவழைக்கப்பட்டன. தாமஸ் மண்டபம், விஜயாபதி விலக்கு, வைராவி கிணறு கிராமம், கூடங்குளம், பெருமணல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டன. இது தவிர போலீஸ் பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட 200 வாகனங்களும் தயார் நிலையில் ஆங்காங்கே நின்றன.
கைது செய்யப்படுகிறவர்களை தங்க வைக்க வள்ளிïர், பணகுடி, ராதாபுரம் பகுதியில் உள்ள 42 திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொரு பள்ளிக்கூடம், மண்டபங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
கலெக்டர் முகாம்
இடிந்தகரையில் இருந்து சுனாமி காலனி, வைராவிகிணறு வழியாக மெயின்ரோட்டுக்கு பேரணியாக வந்து அனைவரும் அணுமின் நிலையத்தின் முகப்பு பகுதியை முற்றுகையிடலாம் என்று கருதிதான் போலீசார் இத்தகைய ஏற்பாடுகளை செய்து தயார் நிலையில் இருந்தனர்.
நெல்லை கலெக்டர் இரா.செல்வராஜ், உதவி கலெக்டர் ரோகினி ராம்தாஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கூடங்குளத்தில் முகாமிட்டு இருந்தனர்.
படகுகளில் வந்த மக்கள்
இந்த நிலையில், காலை 8 மணி அளவில் இடிந்தகரை லூர்து அன்னை ஆலயத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர். இதுதவிர வெளிïர்களில் இருந்து கடல் மார்க்கமாக படகுகளில் மக்கள் வந்து கொண்டே இருந்தனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்களும் திரளாக வந்து இருந்தனர்.
குறிப்பாக கூத்தங்குழி, கூடுதாழை, பெருமணல், உவரி, கூட்டப்புளி, பெரியதாழை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து படகுகளில் மக்கள் வந்து இருந்தனர். அனைவரும் லூர்து அன்னை ஆலயத்தில் இருந்து பேரணியாக புறப்பட தயார் நிலையில் இருந்தனர். காலை 10.30 மணி அளவில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மக்கள் மத்தியில் பேசினார்.
உதயகுமார் பேச்சு
உதயகுமார் பேசும்போது, "397-வது நாளாக போராட்டம் நடத்துகிறோம். கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி முற்றுகை செய்ய இருக்கிறோம். இந்த போராட்டத்தின்போது எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக் கூடாது. வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அவசர சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க வேண்டும். யாரேனும் விஷமிகள் வந்து போராட்டத்தை திசை திருப்பி, வன்முறையை தூண்டக் கூடும். எனவே எச்சரிக்கையுடன் செயல்பட்டு முற்றுகை போராட்டத்தை நடத்த வேண்டும்'' என்றார்.
வெள்ளைக்கொடியுடன் குழந்தைகள்
இதைத்தொடர்ந்து பேரணி புறப்பட்டது. 200 குழந்தைகள் கைகளில் வெள்ளை நிற கொடிகளை ஏந்தி முன்னே சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும், பெண்களும் சென்றனர். இளைஞர்கள், ஆண்கள் அவர்களை தொடர்ந்து சென்றனர்.
ஊர்வலத்தின் மையத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் உள்ளிட்டவர்கள் நடந்து வந்தனர். இடிந்தகரை கிராமத்தின் கடற்கரை பகுதி வழியாக ஊர்வலம் நகர்ந்து சென்றது. கடற்கரையில் உள்ள சவேரியார் ஆலயத்துக்கு சென்றதும் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
போராட்டத்தின் போது எந்த அசம்பாவிதங்களும் நடந்து விடக் கூடாது என்றும், முற்றுகை போராட்டம் வெற்றிகரமாக நடந்து முடிய வேண்டும் என்றும் பிரார்த்தனை நடந்தது. பின்னர் அங்கிருந்து பேரணி மீண்டும் புறப்பட்டது. கடற்கரையில் அணுமின் நிலைய வளாக கம்பவுண்டு சுவரில் இருந்து, சுமார் 3/4 கிலோ மீட்டர் தூரத்துக்குள் பேரணி நெருங்கி வந்துவிட்டது.
கடற்கரைக்கு விரைந்த போலீசார்
இதற்கிடையே மெயின்ரோடு வழியாக முற்றுகை போராட்டத்துக்கு பேரணியாக வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த போலீசாருக்கு பின்னர்தான் இந்த திடீர் பாதை மாற்றம் தெரியவந்தது. பேரணியாக சென்றவர்கள் அணுமின் நிலையத்தின் பின்பகுதியில் முற்றுகையிட கடற்கரை வழியாக சென்றனர். இதனால், சாலைகளில் அணிவகுத்து நின்ற போலீஸ் படையினர் அங்கிருந்து கடற்கரையை நோக்கி விரைந்து வந்தனர்.
கடற்கரைக்கு வருவதற்குள் போலீசார் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிட்டது. புதர்கள் அடர்ந்து இருந்ததால், வாகனங்களில் வர முடியவில்லை. நடந்தே கடற்கரைக்கு வந்தனர். அதற்குள் பேரணி கூடங்குளம் அணுமின் நிலையத்தை நெருங்கி விட்டது. சில நூறு மீட்டர் இடைவெளியில், அணுமின் நிலைய காம்பவுண்டு சுவர் அருகே அவர்கள் நின்று கொண்டு, அணு உலைக்கு எதிராகவும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
பகல் 11 மணிக்கு இடிந்தகரை ஆலயத்தில் புறப்பட்ட பேரணியானது 11.30 மணி அளவில் அணுமின் நிலையம் அருகே வந்துவிட்டது.
தடுத்து நிறுத்தினார்கள்
போலீஸ் படையினர் விரைந்து வந்து பேரணி இன்னும் முன்னேறிச் சென்று விடாமல் தடுத்து நிறுத்தினர். கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்துக்கு பாதுகாப்பு வளையம் அமைத்தனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
`அணுமின் நிலைய வளாகம் வரை பேரணியாக சென்று முற்றுகையில் ஈடுபடுவோம்' என்று போராட்டக்காரர்கள் கூறினார்கள். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
பதற்றம்-பரபரப்பு
ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் திரண்டதாலும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்ததாலும், மிகுந்த பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. கடற்கரையில் எதிரும், புதிருமாக போலீசாரும் போராட்டக்காரர்களும் திரண்டதால் திக்... திக்... நிமிடங்களாகவே நகர்ந்து கொண்டிருந்தன.
மதியம் 12.30 மணி அளவில் கலெக்டர் இரா.செல்வராஜ், போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டக் குழுவினரை அழைத்தனர். பேரணியின் நடுவே நின்ற உதயகுமாரும், போராட்டக் குழு நிர்வாகிகள், உறுப்பினர்களும் பேச்சுவார்த்தைக்கு மறுத்து விட்டனர்.
`மக்களிடமே பேசுங்கள்'
`நீங்கள் என்ன பேசுவதாக இருந்தாலும், மக்களிடமே பேசிக் கொள்ளுங்கள்' என்று கூறி விட்டனர். இதையடுத்து மைக் மூலம் போராட்டம் நடத்திய மக்களிடம் மாவட்ட சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"சென்னை ஐகோர்ட்டு அணுமின் நிலையத்தை செயல்படுத்த உத்தரவிட்டு இருக்கிறது. அந்த உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும். எந்த வகை போராட்டமாக இருந்தாலும் சட்டப்படி, சட்டத்துக்கு உட்பட்டு மட்டுமே நடைபெற வேண்டும். அதற்கு மாறாக அணுமின் நிலையம் அருகே வந்து போராட்டம் நடத்துவது சரியல்ல.
தார்மீக கவலை
உங்கள் பாதுகாப்பு தொடர்பாக அரசுக்கு தார்மீக கவலையும், பொறுப்பும் இருக்கிறது. அதை நீங்கள் நம்ப வேண்டும். அதனால்தான் நாங்கள் இங்கு வந்து பேசிக் கொண்டு இருக்கிறோம். அணு உலை தொடர்பாக உங்களது சந்தேகங்களுக்கு மத்திய அரசு சார்பிலும், மாநில அரசு சார்பிலும் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து பதில் அளித்தோம்.
நாங்களும் உங்களிடம் பேசி இருக்கிறோம். ஐகோர்ட்டும் தீர்ப்பளித்து உள்ளது. அதையும் தாண்டி உங்களது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றால், ஜனநாயக முறைப்படி மட்டுமே போராட வேண்டும். எனவே இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுங்கள்.''
இவ்வாறு சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி கூறினார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து, பேரணியின் முன்பாக நின்று கொண்டிருந்த பெண்கள் கூச்சல் போட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டில் முறையிடலாம்
இதையடுத்து கலெக்டர் இரா.செல்வராஜ் மைக் மூலம் பேசினார். அவர் கூறும் போது, ``அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் குறைந்த வெப்பநிலையில் கடலில் கலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உங்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து டெல்லிக்கு உங்கள் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமரிடம் பேச வைத்தோம். உங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உரிமை உள்ளது. அதை விடுத்து 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது, இப்படி கூடி போராட்டம் நடத்தக் கூடாது. இது சட்டவிரோத போராட்டம். அனைவரும் கலைந்து செல்வது நல்லது'' என்றார்.
இதற்கு யாரும் சம்மதிக்கவில்லை. `கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறியதுடன், எங்கள் உயிரைக் கொடுத்தாவது, அணுமின் நிலையத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து நிறுத்துவோம்' என்று கூறினர்.
விடிய, விடிய போராட்டம்
பின்னர் கடற்கரை மணலில் அனைவரும் அமர்ந்து கொண்டனர். `கூடங்குளம் அணுமின் நிலையத்தை திட்டமிட்டபடி முற்றுகையிட்டு உள்ளோம். அணுமின் நிலையத்தை மூடுமாறு கடற்கரை மணலில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்' என்று போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
உடனடியாக அங்கு புதிதாக போராட்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கு தேவையான உணவு கடற்கரையிலே சமைக்கப்பட்டது.
கடையடைப்பு-கறுப்புக்கொடி
கூடங்குளத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்துக்கு வர முடியாததால், அங்குள்ள ஆலயத்தில் கூடி தர்ணா போராட்டம் நடத்தினர். கூடங்குளம், இடிந்தகரை மற்றும் கடற்கரை கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கிராமங்களில் கறுப்புக் கொடி கட்டப்பட்டு இருந்தது. மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.
இதற்கிடையே போராட்டத்துக்கு வந்த 200 பேரை விஜயாபதி விலக்கில் போலீசார் கைது செய்ததாக மதியம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்று போலீசார் மறுத்தனர். போராட்டம் தொடர்ந்து விடிய, விடிய நடைபெற்றது.
தூத்துக்குடியில் உண்ணாவிரதம்
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட அனைத்து கடலோர மீனவ மக்கள் சார்பில் தூத்துக்குடி பனிமய மாதா கோவில் எதிரே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை கண்டித்து கன்னியாகுமரி மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
#845241- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கண்ணிர் புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தார்கள் அனைத்து சேன்னல்களிலும் லைவ் ஆக ஒளிபரப்பு செய்கிறார்கள்.
தகவலுக்கு அண்ணா.!
தகவலுக்கு அண்ணா.!
Re: கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
#845242அணு உலையில் எரிபொருள் நிரப்புவது இல்லை என ஜெயலலிதா உறுதி அளித்தால் முற்றுகையை வாபஸ் பெறுவோம். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேட்டி.
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவது இல்லை என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தால் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெறுவோம், என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
போராட்டம் தொடரும்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நெருங்கி வந்து அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்திய முற்றுகை போராட்டம் நேற்று மாலை வரை நடந்தது. பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற வெளிïரைச் சேர்ந்தவர்கள் திரும்பிச் சென்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் கடற்கரையில் அமர்ந்து விடிய, விடிய போராட்டத்தை தொடர்ந்தனர்.
நேற்று மாலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். எங்கள் நிலையில் இருந்து ஒரு போதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எங்களை பொறுத்த வரை நாட்டின் பிரதமரோ, கலெக்டரோ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டோ எதிரி இல்லை. அணுசக்தி ஒன்றுதான் எங்களுக்கு எதிரி.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து, கூடங்குளம் பிரச்சினைக்கு முடிவு தெரியும் வரை அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்பட மாட்டாது என்று அறிவித்தால், அணுமின் நிலையம் அருகே நடைபெறும் முற்றுகையை விலக்கிக் கொள்வோம். இதற்கான தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
கலெக்டர் நோட்டீசுக்கு பதில்
மேலும அவர் கூறியதாவது:-
ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் நான் தான் முழுப் பொறுப்பு என்று கலெக்டர் நோட்டீசு அனுப்பி இருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 60 குழந்தைகள் பலியாகினர். சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலர் இறந்தனர். நிலக்கரி ஊழலில் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் யார் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் மக்களா பொறுப்பு ஏற்க முடியும்? எனவே கூடங்குளம் போராட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், மத்திய-மாநில அரசுகள், நெல்லை மாவட்ட நிர்வாகம், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர்தான் முழுப் பொறுப்பு.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
படகுகள் நிறுத்தப்பட்டன
இதற்கிடையே 20-க்கும் மேற்பட்ட படகுகளை கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடல் மார்க்கமாக போராட்டக்காரர்கள் கொண்டு வந்தனர். அந்த படகுகள் தற்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தங்கள் பாதுகாப்புக்காக அந்த படகுகளை கடற்கரையில் நிறுத்தி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கடற்கரையில் பாதுகாப்பில் இருந்த போலீசாரின் ஒரு பகுதியினர் அணுமின் நிலைய முகப்பு பகுதி பாதுகாப்புக்கு மாற்றப்பட்டனர்.

#845243முதல் முறையாக இடிந்தகரைக்குள் நுழைந்த போலீசார்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், போலீஸ் படை இதுவரை இடிந்தகரை ஊருக்குள் நுழையவில்லை. லூர்து அன்னை ஆலயத்தில் உள்ள போராட்ட பந்தலுக்கும் செல்லவில்லை.
இந்த நிலையில், நேற்று அணு உலை முற்றுகை போராட்டத்தை தடுப்பதற்காக, இடிந்தகரை ஊர் எல்லையில் போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் ஊரை விட்டு வெளியே வராமல், கடற்கரை மார்க்கமாக அணு உலையின் பின்பகுதியை முற்றுகையிட சென்றனர். இதனால் அவர்களை தடுத்து நிறுத்த இடிந்தகரைக்குள் போலீஸ் படை நேற்று முதல் முறையாக புகுந்தது.

#845244பந்தல் அமைக்கும் பணி மும்முரம்
கூடங்குளம் கடற்கரையில் அமர்ந்து போராட்டத்தை தொடருவதாக போராட்டக் குழுவினர் அறிவித்து உள்ளனர். எனவே கடற்கரையில் போராட்ட பந்தல் அமைக்கும் பணி நேற்று நடந்தது. போராட்டக் குழுவில் உள்ளவர்கள் இணைந்து இரவோடு, இரவாக பந்தலை தயார் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வெளிïர்களில் இருந்து போராட்டத்துக்கு வரும் பெண்கள், ஆண்கள் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர். பெண்களுக்கு தனியாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் வசதியும் செய்யப்பட்டது. `ஜெனரேட்டர்'களை இயக்கி போராட்ட பந்தலுக்கு மின் சப்ளை கொடுக்கப்பட்டது.

#845252- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ம்ம் ம் அது.
Re: கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
#0- Sponsored content
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
» கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1