புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பா என்ற அவதாரம் I_vote_lcapஅப்பா என்ற அவதாரம் I_voting_barஅப்பா என்ற அவதாரம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா என்ற அவதாரம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Sep 02, 2012 7:46 am

வசந்த காலத்து வாசல் முனையில் என்னை விட்டு விட்டு கோடைகாலத்திலேயே தங்கி விட்ட என் தந்தையே! கண்கள் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்பவனை போல நீ இல்லாத நாளில் உன் அருமையை நினைத்து ஏங்குகிறேன். அம்மாவின் வயிற்றிலிருந்து வெளிவந்து விழுந்த என்னை தோள்மீது சுமந்தாயே! உன் சுருள்முடியை பற்றி கொண்டு என் பிஞ்சு கரத்தால் உன் முகத்தில் அறைந்த போதும் என் ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தம் கொடுத்தாயே! உன் பரந்த மார்பின் மீது ஏறி நின்று சங்கு சக்கர சாமி என்று குதித்து நான் ஆடிய போதும் என் குதிகால்களுக்கும் உதடுகளால் ஒத்தடம் கொடுத்தாயே! அத்தனையையும் நான் மறந்து போனது ஏன்?

வயல்காட்டு வரப்பின் மீது உன் விரல்பிடித்து நடப்பேன் இளகிய மண்ணிற்குள் என் இளம்பாதம் பதிந்து சேற்றை வாரி பூசியபோதும் உன் தோள்மீது என்னை உட்காரவைத்து என் கால் சேற்றை உன் கன்னத்தில் பூசிகொள்வாய் பறக்கும் தும்பியை பிடித்து வால்நுனியில் நூல்கட்டி பறக்க விட வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதற்கு நெருஞ்சி முட்கள் காலில் தைத்த போதும் ஒற்றை கையால் முள்ளை பிடுங்கி எரிந்து விட்டு தும்பி பிடிக்க தாவி நடப்பாய் கிடைத்த தும்பியையும் விட்டு விட்டு அடுத்த தும்பி வேண்டுமென்று அடம்பிடித்து நான் அழுதாலும் அதட்டலாக எதுவும் பேசாமல் என் ஆசையை தீர்க்க எத்தனிப்பாய்.

வெள்ளிகிழமை சந்தைக்கு நீ போய்விட்டு நடுசாமத்தில் வந்தாலும் தூங்கும் என்னை எழுப்பி உட்கார வைத்து இனிப்பு மிட்டாயை வாயில் திணிப்பாய் ஊரெல்லாம் சுற்றி ஓடி ஓய்ந்து போய் வீட்டுக்கு வந்து உண்ணாமல் குடிக்காமல் உறங்கி நான் போனால் அம்மா உருட்டி தரும் சாத உருண்டையை மடியில் என்னை சாத்தி கொண்டு கைநிறைய நீ எனக்கு ஊட்டி விடுவாய். உறக்கத்தில் நான் உன் வேஷ்டியில் சிறு நீர் கழித்தால் கூட ஆடை மாற்றாமல் என்னை சுத்தம் செய்வாய் சித்திரை மாதத்து கொடும் வெயில் புழுக்கத்தில் தூக்கம் வராமல் நான் நெளிந்து நெளிந்து படுத்தால் விடியும் வரைக்கும் விழித்திருந்து விசிறியால் காற்று வீசுவாய் ரோமங்கள் அடர்ந்த உன் மார்பில் என்னை சாய்த்து கொண்டு தட்டி கொடுப்பாய்.

மணலில் விரல்பிடித்து அச்சரம் எழுத துவங்கினால் என் விரல் கன்றி போய்விடுமென்று தவிட்டின் மீது எனக்கு எழுத சொல்லி கொடுத்தாய் பள்ளிக்கூடம் சென்று கற்க முடியாத பாடங்களை கிணற்று மேட்டில் என்னை உட்க்கார வைத்து தினசரி போதிப்பாய் ராபர்ட் கிளைவையும், கஜினி முகமதுவையும் மட்டுமே சொல்லி தந்த பாடபுத்தகங்களை தாண்டி விக்கிரமாதித்தனையும் வீர சிவாஜியையும் நீயே எனக்கு அறிமுகம் செய்தாய் வகுத்தல் கூட்டல் கணக்குகளை தாண்டி வாழ்க்கை கணக்கை வழிபிரளாமல் வகுத்துக்கொள்ள வழியும் சொன்னாய்.

கோவிலின் உள்ளே கொலுவிருக்கும் விக்கிரகங்கள் வழிபடுவதற்கு மட்டுமல்ல வடித்த சிற்பியின் கலைத்திறமையை ரசிப்பதற்கும் என்று யாருமே திறக்காத மூன்றாவது கண்ணை எனக்கு நீ திறந்து விட்டாய் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று ஆன்றோர்கள் பாதையையும் கலித்தொகை தொடங்கி அகநானூறு வரையிலும் இலக்கிய சாரளத்தையும் எனக்கு காட்டினாய் எழுத்து கூட்டி வாசிக்க தெரியாத என்னை கவிதைகள் படைக்க ஆர்வமூட்டினாய் நான் எழுதி கொடுத்த வார்த்தை கிறுக்கல்களை முதல்முதலாக படித்து பேஷ் பேஷ் என தட்டி கொடுத்தாய். திக்கி திணறி பேசவே தயங்கும் என்னை மேடையில் ஏற்றி பேசவைத்து கைகளை தட்டினாய்

மருத்துவன் காட்டிய பத்திய உணவை தினமும் தின்று நாக்கு செத்து போன போது உச்சி வெயிலில் தோள்களில் என்னை சுமந்து கொண்டு அறுசுவை உணவை நான் அருந்தி பார்க்க பர்லாங்கு தூரம் நடந்து செல்வாய். எனது கற்பனை சிறகுகள் விரிந்து பறக்க பலவண்ண ஓவியங்களையும் உருவ பொம்மைகளையும் பரிசாக கொடுப்ப்பாய். ஒரு சிற்பி எப்படி சிலையை செதுக்குவானோ அப்படி என்னை செதுக்கி பார்த்த என் ஞான தந்தையே! எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பெற்ற நான் உனக்கு தந்தது என்ன? உச்சி கால வேளையிலும் நிலா உலா வரும் பொழுதிலும் எண்ணி பார்க்கிறேன் எண்ணி கொண்டே இருக்கிறேன். உனக்கு தந்தது என்னவென்று இன்னும் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.

மரங்கள் வந்து பாராட்டும் என்றா மேகம் மழையை தருகிறது? வண்டுகள் வந்து சாமரம் வீசும் என்றா மலர்கள் தேனை தருகிறது?. மீன்கள் கூடி கால்பிடித்து விடும் என்றா நதி நீரை தருகிறது? சூரியனும் சந்திரனும் வெளிச்சம் தருவது பூமியின் பாராட்டு வார்தைகளுக்காகவா? நீ பாலை வனத்தில் மழையை தந்த மேகம்!. மதுவை பிரதிபலன் பார்க்காமல் வாரி வழங்கும் மலர்! தாகம் தனிப்பதற்கென்றே அவதாரம் எடுத்த நதி! உயிரை வாழவைக்கும் ஆதவ மதி!.

ஏனோ தெரியவில்லை காலகாலமாக அம்மாவை மட்டுமே புகழ்கின்ற நாக்குகள் தகப்பனின் தியாகத்தை கண்டுகொள்வதில்லை தனது பிள்ளைகளின் உடல் நோகாமல் பாதுகாக்கும் பஞ்சு மெத்தைகளாக அப்பாமார்கள் அனைவரும் கட்டிலில் மீது அசையாமல் கிடக்கிறார்கள். சுடும் மணலில் தனது கால்களை புதைத்து உடலில் நிழலை பிள்ளைகளுக்கு கொடுத்து கால வெயிலில் பொசுங்கி கிடக்கிறார்கள். அம்மா கொடுத்த ரத்தம் வளர்ந்து செழிப்பதற்கு அப்பா கொடுக்கும் தழை உரம் ஏனோ அங்கிகாரம் இல்லாமல் மூலையில் கிடைக்கிறது.

அறிஞர்களின் அறிவும் தியாகிகளின் தியாகமும் அவர்கள் காலத்திற்கு பிறகு தான் கவனத்திற்கு வருமாம் அதே போலவே என் தந்தையே! நீ இல்லாத போது நீ கொடுத்த நிழலின் அருமை தெரிகிறது.நீ ஓடிய உழைப்பின் பெருமை புரிகிறது. நீ வாழ்ந்த காலத்தில் ஒரு சிறிய துண்டு துணியை கூட கொடுக்காத என்னை வாழ்த்தி நின்றாயே அந்த அர்ப்பணமே நீயே இறைவன் என்று எனக்கு அடையாளம் காட்டுகிறது. என்ன செய்வது கடவுளை நாங்கள் சிலைகளாகவே பார்க்கிறோம்

http://www.ujiladevi.in/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அப்பா என்ற அவதாரம் 1357389அப்பா என்ற அவதாரம் 59010615அப்பா என்ற அவதாரம் Images3ijfஅப்பா என்ற அவதாரம் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக