புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுதிக் கிழித்த கடிதம் - இயக்குனர் ராம் (கற்றது தமிழ்)- ஆனந்த விகடன் Poll_c10எழுதிக் கிழித்த கடிதம் - இயக்குனர் ராம் (கற்றது தமிழ்)- ஆனந்த விகடன் Poll_m10எழுதிக் கிழித்த கடிதம் - இயக்குனர் ராம் (கற்றது தமிழ்)- ஆனந்த விகடன் Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram

60 Posts - 40%
Dr.S.Soundarapandian

7 Posts - 5%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

4 Posts - 3%
Karthikakulanthaivel

2 Posts - 1%
prajai

Manimegala

Balaurushya

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதிக் கிழித்த கடிதம் - இயக்குனர் ராம் (கற்றது தமிழ்)- ஆனந்த விகடன் Poll_c10எழுதிக் கிழித்த கடிதம் - இயக்குனர் ராம் (கற்றது தமிழ்)- ஆனந்த விகடன் Poll_m10எழுதிக் கிழித்த கடிதம் - இயக்குனர் ராம் (கற்றது தமிழ்)- ஆனந்த விகடன் Poll_c10 
426 Posts - 48%

300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதிக் கிழித்த கடிதம் - இயக்குனர் ராம் (கற்றது தமிழ்)- ஆனந்த விகடன்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Aug 17, 2012 5:01 pm

அப்பா, அம்மா, உடனிருந்த, இருக்கிற நண்பர்கள், ஆசிரியர்கள், உடன் பணிபுரிந்தவர்கள், என்னிடம் பணிபுரிந்தவர்கள், விமர்சகர்கள் அடிக்கடி நேரடியாகவும், மறைமுகமாகவும், புரணி யாகவும் என்னிடம் கேட்கிற கேள்வி, என்னைப் பற்றிச் சொல்கிற விஷயம் இதுதான்... ''நீ என்ன பெரிய இவனா?'', ''உன்னைப்பத்தி நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க? பெரிய பருப்பா நீ?''

இன்று கடல் உன் தலைக்குப் பின் விரிந்துகொண்டே போக நிலவு எழும்பிய நேரத்தில் இதையேதான் நீயும் கேட்டாய், உன் ஆங்கிலத்தில் 'what the hell you think about yourself? 'இனி வாழ்வில் உன் முகத்தையும் பார்க்க விரும்பவில்லை' என மணல் தெறிக்க நீ நடந்தபோது, கட்டுமரம் ஒன்று அலையில் உயர்ந்து உயர்ந்து கடலுள் மறைந்தது.

சுத்தம் செய்யப்படாத என் படுக்கையில் வீச்சம் அடிக்கும் போர்வையின் கீழ் அசுத்தங்களும், பாவங்களும், துரோகங்களும், துக்கங்களும், எச்சில் ஒழுக உறங்க, நான் பலநாள் உறங்காமல் பரிசுத்தமான உறக்கத்துக்காகக் காத்திருக்கிற என் அறைக்குத் திரும்பினேன், உன்னை ரயிலேற்றிவிட்ட பின்.

துயரத்தைப் போர்த்திவிட்டேன், கதவிடுக்கில் கசிந்து வரும் கடந்த காலக் குளிருக்கு. யாருமற்ற இவ்விரவில் நட்சத்திரங்கள் களவாடப்பட்ட இக்கடல்புரத்து நகரின் வானத்தில் தனியே திரியும் நிலவைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். பனியின் நிறத்தையத்த புகை எழும்பியது, உனை நினைக்கையில் புகைக்க மறந்த சிகரெட்டில் இருந்து. மின்சார ரயிலின் ஊதல், நகரைப் பிரித்த வாறே கரைந்துபோனது.

ரயில் எனக்குப் பிடிக்கும்; பேருந்து பிடிக்காது. பேருந்து ஒரு சர்வாதிகாரி மாதிரி. இரண்டே கதவுகள். சிறிய சன்னல்கள். நடக்க முடியாது. கால் நீட்ட முடியாது. புகைக்க முடியாது. கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால், சன்னல் இருக்கை கிடைக்கும். அதிர்ஷ்டத்தோடு இணைந்து வருவது துரதிர்ஷ்டம் என்கிற உண்மையை நிரூபிக்கும் வகையில், சன்னல் இருக்கை கிடைத்தாலும் பருமனான ஒரு ஜீவன் நம் பக்கத்து இருக்கையில் அமர்ந்து சன்னலோடு நம்மை அழுத்தும். துருப் பிடித்த சன்னல் தகரம் நம் கால் சராயை எந்த நொடியும் கிழிக்கும். குழியில் விழுந்து எழுந்து ஆதிகாலத்தில் குதிரையில் சவாரி செய்யும் ஆதி மனிதனாக நாம் ஆகியிருப்போம். A time machine travel என்று நீயும் நானும் சென்ற பேருந்துப் பயணத்தின்போது நீ சொல்லியிருக்கிறாய்.

குழந்தைகளுக்கும் பேருந்து பிடிக்காது என்பதை கற்களைப் பேருந்தின் பின்புறத்தில் எறிந்துவிட்டு மாயமாக மறைந்துபோகிற சிறார்களின் ஓட்டத்தில் நீ அறிந்திருக்கக்கூடும். ஆனால், சிறார்கள் ரயில் மீது கல் எறிவது இல்லை. மாறாகக் கை அசைக் கிறார்கள். எண்ணற்ற கதவுகளோடும், சன்னல் களோடும், நடக்க இடமோடும், நாற்றமடித்தாலும் இயற்கையின் அழைப்புக்குப் பதில் சொல்ல ஒரு தனி அறையோடும், ரயில் போலீசுக்குத் தெரி யாமல் புகைக்கப் பல பெட்டிகளோடும், எவரின் சுதந்திரத்தையும் சிறைப்படுத்தாமல் போகிறது ரயில். ஆனால், இவையெல்லாம் அல்ல... எனக்கு ரயில் பிடித்ததற்கான காரணங்கள். எனக்கு உன்னைப் பிடிக்கும். எனவே, ரயில் பிடிக்கும்.

இந்த ரயில் உலகத்துக்குள் என்னை அழைத்துச் சென்றவள் நீதான்.
தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்த உன் ஊருக்கு உன்னோடு நான் வந்த ரயிலே நான் முதன்முதலில் ஏறிய ரயில். நகரங்களையும், பாலங்களையும், மனிதர்களையும், கொட்டும் வெயிலில் கடந்து உன் அருகே என்னை அமரச் செய்தது அந்த என் முதல்ரயில். பெயர் தெரியாப் பாலத்தின் அடியில் பெயர் தெரிந்த ஆறு ஒடியது. நிலவு விழுந்த ஆற்றில் நாணயம் வீசினார்கள். நீயும் வீசி என்னையும் வீசச் சொன்னாய். அவ்வாற்றில் நாணயம் வீசினால் விருப்பம் பலிக்கும் என்பது ஐதீகம் என்றாய். ஆறு கடப்பதற்கு முன் அவசர அவசரமாகப் பாலத்தின் இரும்பில் சத்தம் தெளித்து ஆற்றுக்குள் போனது, நீ என் வாழ்வில் வேண்டும் என்ற என் விருப்பமும் ஒரு ரூபாய் நாணயமும்.

''என்ன நினைத்து வீசினாய்?'' என்றாய். எதுவும் சொல்லாமல் சிரித்தேன்.
ரயில் வளைந்த திருப்பத்தில், நாணயங்கள் நிறைந்த நதி சன்னலில் மீண்டும் ஓடியது. பால் வெளியில் தன் விருப்பம் நிறைவேற யாரோவிட்டு எறிந்த நாணயமாக நிலா நட்ட நடு ஆற்றில் நீந்திக் கொண்டு இருந்தது. என்றாவது ஒருநாள் இந்த நதிக்கரைக்கு உனைஅழைத்துப் போய் உனக்காக நான் வீசிய நாணயம் இது என நதியின் அடியில் புதைந்த அதை மீட்டெடுத்து உன் கையில் கொடுத்தால், எத்தனை மகிழ்வாய் இருக்கும் என நினைத்தபோது ரயில் உன் ஊர் சேர்ந்தது. இன்னமும் நதியடியில் புதைந்து கிடக்கிறது என் நாணயமும், விருப்பமும், காதலும்.

நீ இன்று நான் வேண்டாம் எனக் கடைசி ரயில் ஏறினாய். கடற்கரையின் மிச்ச மண், நீ ரயில் ஏறியபோது உன் செருப்பில் இருந்து கீழே விழுந்தது. ''நீ எங்கிருந்தாலும், எவரோடு இருந்தாலும், நான் உன் அருகிலேயே இருப்பேன். கடவுளா, சாத்தானா என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும்'' என்றேன். ''எனக்காக எதுவும் இழக்காத கடவுளும் சரி, சாத்தானும் சரி... எனக்கு வேண்டாம்''என்றாய். என் சுதந்திரத்தைப் பறிக்காத ரயில் எனக்குப் பிடிக்கும். என்னை அடைத்து மூட்டையாக்குகிற பேருந்து எனக்குப் பிடிக்காது. நீ கேட்பவை என்னைப் பேருந்துப் பயணத்துக்குக் கட்டாயப்படுத்தும் கட்ட ளைகள் என்பதைப் புரிந்துகொள்ள நீ சிறிதும் முயலவில்லை. ''நீ என்னை நேசிக்கவே இல்லை! நீ என்ன பெரிய இவனா? எனக்காக எதையும் இழக்காத உன் காதல் என்ன காதல்? உன்னிடம் நான் பிச்சை கேட்க வேண்டுமா? Do you think have you jumped from heaven? என்ற குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் வீசிய உன்னோடு ரயில்கிளம்பியது.

எப்போதும் பெய்கிறது உனக்கான என் பெரு மழை. நீ குடை கொண்டு வர மறந்த நாளில் மட்டுமே என் மழை உனக்குப் புரிகிறது. உன்னை நனைக்கிறது. என்ன செய்ய... நீ இன்று குடையோடு போகிறாய்.

குதிரையாக உன் நினைவு, அதன் மேல் சவாரி செய்யும் நோஞ்சான் வீரனாக நான். சன்னல் விளிம்பில் இருந்து நிலவு மேலே நகர்ந்து இருந்தது. 30 நிமிடங்கள்தான் இந்தச் சன்னலில் வாழ்கிறது ஒவ்வோர் இரவும் நிலா. ஒரு வாரம் இருக்கும். எப்படியோ வெட்டப்படாமல் விடப்பட்ட ஒரே ஒரு வேப்ப மரத்தின் அடியில் உனக்காக நான் நின்றிருந்தேன். நீ இருக்கும் உயர்ந்த கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்து பார்த்திருந்தாயானால், மரமும் என் தலையும், தார்ச் சாலையில் கொட்டிய சருகும் காற்றின்றி நகராது கிடப்பது தெரிந்திருக்கும், உன் ரகசியம் காக்கும் கண்ணாடி போர்த்திய சன்னலின் வழி.
கறுப்புச் சாலையின் மீது கடந்து போகும் தப்பிப் பறக்கிற பறவையின் நிழல், அடையாள அட்டை இல்லாதோருக்கு அனுமதி இல்லை என்ற பெயர்ப் பலகை, எவரும் ஒரு நொடியும் சட்டை செய்யாத ஒரு செயற்கை நீரூற்று, உள்ளும் வெளியிலும் வருகிற, போகிற கார்களினுள் இருக்கும் மனித முகங்களின் கொண்டாட்டம்... இவற்றோடு உன் கட்டடம் நுழையும் நவீன ஜீவிகள் உதிர்த்துப்போகும் 'bro, buddy, honey, sweet heart' தரித்த வாக்கியங்களோடு அவர்களின் நல்ல வாசனை அவர்கள் போன பின்னும் நிற்கிறது.

இரும்பின் நிறமேயான கடந்த கால மிதிவண்டி. அதில் கடந்த காலத் தாத்தா பழுப்பேறிய வேட்டி -சட்டையில் கடந்து போகிறார். தாத்தா போனபோதுதான் நீ வந்தாய். எனக்கும் நான் உள் வர முடியாத உன் கட்டடத்துக்கும் ஆன இடைவெளியை உன்னுடைய ஆறாவது மாடிக் கழுகுப் பார்வையில் பார்த்து, என் தோல்வி என்றாய். ''எழுதுவதை நிறுத்து. தொழில் செய், வாழ், நன்றாக வாழ்பவரைப் பார்த்து பொறாமைப்படாதே, தாடி எடு'' என அடுக்கினாய். ''நான் எழுதியவைக்காக என்னை நேசித்தவள்தானா நீ? பரவாயில்லை, நான் தோற்றவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். நீயாவது ஜெயித்தாயா?'' என்றேன். ''You are sick''என்று உன் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுப் போயே போனாய், நான் நுழைவதற்கு அனுமதி இல்லாத அப் பன்னாட்டு நிறுவனக் கட்டடத்தினுள்.

''ஒரு வாரத்துக்கு மூணு தடவையாவது குளி, சாக் ஸைத் துவைச்சுப் போடு, நகம் கடிக்காதே, கடவுளை வேண்டிக்கோ'' என்று சொன்ன அதே பெண்தானா நீ? எங்கு தொலைத்தாய் உன்னை நீ? எதுவும் புரி படாமல் இதே வீச்சமடித்த போர்வையினுள் சுருண்டேன் அன்றும். சன்னல் வழிக் கனவொன்று வந்தது என் போர்வைக்குள்.

உன்னிடம் இருந்து கைப்பேசியில் அழைப்பு. ''மலை மேல்தான் இருக்கிறேன். வா'' என்றாய்.''பெரும் மலை ஏற முடியுமோ தெரியவில்லை” என்றேன் நான். ''பெரும் மலை மூச்சிரைக்கத்தான் செய்யும். முட்டிகூடக் கழலலாம். தாவும் எடுக்கும். கால்கள் நடுங்கும். உயரம் பயமுறுத்தும். என்னவானால் என்ன, காதலோடு காத்திருக்கிறோம் உச்சியில் பெரும் காற்றும், நானும்” என்றாய் நீ. கடும் சவால். மூச்சிரைக்க ஏறுகிறேன். ஏறிய பின் வெறும் காற்றில் அசையும் புற்களும் நானும். நீஇல்லை. கனவுஅறுந்தது. சன்னலில் இருண்ட வானம். நிலவு வாழ்ந்த 30 நிமிடங்கள் முடிந்திருந்தன. வெளியே கிளம்பினேன்.

நான் உறங்கும் முன் உறங்குபவர்களும், நான் விழிக்கும் முன் விழிப்பவர்களும் வாழும், உறங்கும் நகரில் உறங்காமல் திரிந்தேன். உன் கைப்பேசியை அழைத்தவாறு இருந்தேன். நீ என் அழைப்பை செவி மடுப்பதாக இல்லை. ஓரிரு முறை ஒரே பாட்டு கேட் டது. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் உன்னை விட அந்தப் பாட்டு மென்மையானதாகவும்,
அன்பானதாகவும் இருந்தது. அப்படித்தான் இருக்கவும் முடியும். அந்தப் பாட்டுக்காகச் சந்தா கொடுத்து உன் கைப்பேசியைப் பாடவைத்த நீ, அதற்குப் பிறகு எப்போது கேட்டாய் அந்தப் பாட்டை? உன்னை அழைப் பவருக்குத்தானே அந்தப் பாட்டு! உனக்கு அல்லவே? எனவேதான், அந்தப் பாடல் நீயாக அல்லாமல், என்னோடு விழித்திருந்த இரவைப்போல் பிரியத்தோடு உறவாடியது. பின் என்ன ஆயிற்றோ உன் கைப்பேசி. என் ஓயாத மணியோசைத் தொல்லை பொறுக்காமல் பேசியை அமர்த்தினாயோ... தொடர்பு எல்லைக்கு அப்பால் போனது உன் கைப்பேசியும், நெகிழ்வான அந்தப் பாட்டும். இம்முறையாவது உன் கைப்பேசி பாடும் எனப் பல முறை அழைத்தழைத்து பொத்தான்கள் தேய்ந்தன, நிலவோடு சேர்ந்து.

இதோ பொல பொலவென இன்றைய நாள் உனக்கென விடிகிறது. அழைக்கிறேன். அட, தொடர்பு எல்லைக்குள் பாடல் அதே ரம்மியத்துடன் கேட்கிறது. சட்டென்று அறுந்து போய் கர்ணகொடூரமான குரல். நீதான் பேசினாய். வேலையும், பணமும், மகிழ்வும், கூடிப் பேசவும் கும்மாளமிடவும் வகையின்றிப்போன நானும் என் எழுத்தும், என்ன உன்னுடைய பகலில் பேச? உறங்கப் போகிறேன் என்று வைத்துவிடுகிறேன். அன்று தொடர்பு எல்லைக்கு வெளியேயான அந்த அன்பான பாடல் நீயா? நானா?

இந்த இரவு உன் ரயில் எங்கு ஓடிக்கொண்டு இருக்கிறது? மீண்டும் அழைக்கிறேன். தொடர்பு எல்லைக்கு வெளியில் உன் கைப்பேசியும் நீயும். நீ கேட்டதற்குப் பதில் சொல்ல எத்தனித்தபோதெல்லாம், ''போதும் உன் விளக்கம்! You and your stupid reasons, I care a damn'' என்று ஒரு சொல்லும் கேட்காமல், உன் அதீதஆங்கிலத்தில் தவிர்த்தாய். நீ கேட்கிறாயோ இல்லையோ, எனக்கு நானே பதில் சொல்வதுதான் நாளைய பகலை நான் பார்ப்பதற்கான ஒரேவழி.

நான் அப்படி என்ன பெரிய இவன்? நான் நானாக இருக்கிறேன். என்னை நான் ரசிக்கிறேன், இகழ்கிறேன். பரிகசிக்கிறேன். காதலிக்கிறேன். ஏனெனில், நான் ஒரு கலைஞன் (யாருடைய சான்றிதழும் தேவையில்லை எனக்கு என்பதில் உனக்கு என்ன வருத்தம்?). கற்பனாவாதி. என் மனதில் பிம்பங்கள் எழுந்தவாறே இருக்கின்றன. இருக்கும். எனக்கும் என் கலைக்கும் அகப்படாதது இன்னொரு கலைஞனுக்கு மட்டுமே அகப்படுமேயன்றி உனக்கு படாது. இப்படி நான் நினைப்பதால்தானே சரியான கிறுக்கன் என்று சொன்னாய்(you are sick, you are weird).

உன்னைப்போலன்றி என் வாழ்வின் போக்கு ஒரு தேசாந்திரியுனுடையது. பெருத்த தேசத்தின் பெருவாரியான இடங்களில் சுற்றி அலைந்திருக்கிறேன். மனுசர் களை மனுசிகளைச் சந்தித்து அளவளாவியும், அன்பாய் இருந்தும், கிடைத்தும் இருந்திருக்கிறேன். இருந்தும் அனைத்தும் அலுப்பூட்டுவதாக ஆகையில், நீ வேறு வாழ்வின் அதிசயங்களையும் பண முக்கியங் களையும் சொல்லியும், கோரியும் என்னை இம்சிக் கிறாய். கோபப்படாமல் கொஞ்சவா முடியும்? ஆனால், என் ஆழ்மனதில் உன் மீதான என் பிரியங்களும், மரியாதைகளும் ஆற்றடி மணலாய், மென்மையாய், நகராமல் ஓர் அழகான ஓவியமாய் இருக்கின்றன.

அடி நீச்சல் அடிக்கத் தெரிந்தால், நீ அந்த மணலைக் காணலாம். மங்கிய சூரிய ஒளியில் பாசத்துடன் கலந்திருக்கும் அதனை ஒரு கைப்பிடியில் அள்ளிப் போகலாம். உனக்கு நீச்சல் தெரியாதது எப்படி என் குற்றமாகும்? நீ என்னை செருக்குடையவன் எனப் பெயரிட்டுப் பரிகசித்தாய். சரி, இருந்துவிட்டுப் போகட்டும். செருக்காய் இருப்பதில் என்ன தவறு? சொல்லப்போனால் செருக்கும் கோபமும் உன்னால் எனக்கு வந்தது.

பொறுப்பற்றவன், தோற்றவன், கேவலமானவன், கோபக்காரன், செருக்கானவன் என்று எத்தனையோ சொல்லிவிட்டுப் போ! உன் முதுமையில், வாழ்வின் கக்கடைசியில் நீயும் எனைப் போன்றவள்தான் என்பதை உணர்வாய் என்பது எனக்குத்தெரியும். காதலைப்பற்றி நீ என்னதான் நினைக்கிறாய் என்று முன்பு ஒரு காலத்தில் நீ தமிழில் கேட்ட கேள்விக்கு எனக்கு இப்போது பதில் தெரிகிறது. கடந்த காலக் காதல்களைப்போல் நிகழ்காலக் காதல்கள் இல்லை என்பதே கடந்த காலத்திலும் கண்ட உண்மை. ஆக, காதல் கடந்த பின் இனிக்கிறது; கடக்கும் போது கசக்கிறது.

உன் ஊர் நெருங்கிக்கொண்டு இருக்கும். என் நாணயமும் என் காதலும் புதைந்த நதியை இந்நேரம் கடந்துகொண்டு இருக்கும் உன் ரயில். அது எழுப்பும் பெரும் ஊதலில் ஒருவேளை நீ என் குரலைக் கேட்கக்கூடும், உன் குடையை மடித்து வைத்திருந்தாயானால். இக்கடல் நகரில் இன்னமும் மிச்சம் இருக்கின்ற பறவைகள், இன்னமும் மிச்சம் இருக்கிற என் காதுகளுக்காக இரைகின்றன. காலை வரப்போகிறது!

ராம்.
ஆனந்த விகடனில் பிரசுரமாகியது

http://www.kaattchi.blogspot.in/2010/03/blog-post_2116.html

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 1:07 am

யதார்த்தமாக உள்ளது - பலரின் வாழ்க்கையில்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 18, 2012 1:19 am

எழுதிக் கிழித்த கடிதம் - இயக்குனர் ராம் (கற்றது தமிழ்)- ஆனந்த விகடன் 224747944

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக