புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_lcapமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_voting_barமணமகளுக்கான அழகுக் குறிப்புகள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணமகளுக்கான அழகுக் குறிப்புகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 12:24 am

மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் A0813405

''மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார் செய்து, என்னென்ன மேக்-அப் செய்கிறார்கள்?'' என்பதை விளக்குகிறார், நேச்சுரல்ஸ் இருபாலர் ஸ்பா அன்ட் சலூன் பிரைடல் டிசைன் ஸ்டுடியோவின் இயக்குனர் வீணா குமாரவேல்.

முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் அன்று காலையில் மணப்பெண்ணுக்கு மேக்-அப் போடுவது மட்டும்தான். இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது. மட்டுமின்றி உடை, நகைகள் போன்றவை அனைத்தும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.

3- மாதங்களுக்கு முன்பு:

இன்றைய சுற்றுப்புற சூழல் அதிக மாசு கலந்ததாக இருக்கிறது. பெண்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்க நிலை போன்றவைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதிக வேலைப்பளுவால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் உள்ளாகுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, அழகும் கெடுகிறது. 3 மாதத்திற்கு முன்பிருந்தே அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் முரண்பாடுகளை நீக்க வேண்டும். தினமும் 4-5 லிட்டர் தண்­ர் பருகவேண்டும். அசைவ உணவுகளின் அளவைக்குறைத்து, பெருமளவு காய்கறி, பழங்களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தும் பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணிநேரம் நன்றாகத் தூங்கவேண்டும். உடலை நன்றாக பராமரித்து, அழகில் ஆர்வம் செலுத்தவேண்டும்.

அழகைப் பொறுத்தவரையில் முதலில் வீட்டிலே அதற்குரிய செயல்முறைகளைத் தொடங்க வேண்டும். ஓட்ஸ், பால் பவுடர் ஆகிய இரண்டையும் சாத்துக்குடி ஜூசில் கலந்து வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பான்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்த்துக்கொடுக்க வேண்டும். பின்பு கழுவிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் சருமத்தில் இருக்கும் ''டெட் செல்கள்'' நீங்கிவிடும். பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் பதிந்து பளபளப்பை கொடுக்கும். பழைய காலத்தில் பேரழகி கிளியோபாட்ரா தினமும் ஒரு மணிநேரம் பாலில் குளித்ததன் ரகசியம் இதுதான்.

அழகு நிலையத்தில் மணப்பெண்களுக்காக இப்போது ''மில்க் பாத்'' உள்ளது. தொட்டியில் பால், தண்­ர் மற்றும் ஒவ்வொருவர் சருமத்திற்கும் தேவையான ஜெல்லும் அதில் கலந்திருக்கும். முதலில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி உடலில் பூசி தேய்த்து ''ஸ்கிரப்'' செய்துவிட்டு, பின்பு ''ஆவி பாத்'' கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் மில்க் பாத் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு உடல் முழுக்க ''மாஸ்க்'' போடப்படும். இதனால் உடல் முழுக்க உள்ள சருமம் ஒரே நிறத்தில் தோன்றும். பளபளப்பும் தோன்றும். இதனை திருமணம் நடக்கும்வரை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது.

பெண்கள் ''ஒயின் தெரபி''யும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் ஸ்கிரப் செய்தல் பின்பு ஆவி பிடித்தல் அடுத்து ஒயின் கலந்த நீரில் குளிக்கவைத்தல் போன்றவை இதன் கட்டங்களாகும். இந்த தெரபிக்கான ஒயின் தனித்தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பால் பிடிக்காதவர்கள் ஒயினில் குளிக்கிறார்கள்.

முக அழகுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை முதலில் பயன்படுத்த வேண்டும். ''நார்மல் ஸ்கின்'' கொண்டவர்கள் ஸ்ட்ராபெரி பழத்தை பிசைந்து முகத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். பத்து நிமிடத்தில் அதை நீக்கிவிட்டு, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.

எண்ணைத்தன்மை சருமத்தை கொண்டவர்கள் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் முகத்தை நன்றாக தண்­ரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சை பழத்தை அறுத்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவிவிடவேண்டும். இது லேசான எரிச்சலைத் தரும். இதை விரும்பாதவர்கள் சாத்துக்குடி ஜூசை முகத்தில் தேய்த்து கழுவவேண்டும். சந்தன பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்­ரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவவேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணைத்தன்மை குறைந்துவிடும். பின்பு வாரத்தில் ஒருமுறை மட்டும் இவ்வாறு செய்தால் போதும். எண்ணைத்தன்மை குறைந்ததும் இந்த வீட்டு சிகிச்சையை நிறுத்திவிடலாம். ஆனால் கருப்பு புள்ளி, திட்டு, படை, முகப்பரு, நிறமாற்றம் போன்றவை இருப்பவர்கள் அழகு நிலையங்களிலே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

கூந்தல் பராமரிப்பை பொறுத்தவரையில் மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே ஆலிவ் எண்ணை, தேங்காய் எண்ணை, பாதாம் எண்ணை போன்ற ஏதாவது ஒன்றை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின்பு ஷாம்பு போட்டு கழுவி, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை முடியில் மட்டும்தான் புரட்ட வேண்டும். தலை ஓட்டில் படக்கூடாது.

கூந்தல் ''டிரை ஹேர்'' ஆக இருந்தால் தே.எண்ணை, விளக்கெண்ணை, கிளிசரின், குக்கிங் வினிகர் போன்றவைகளை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து முடியில் பூச வேண்டும். பின்பு சுடு தண்­ரில் டவலை முக்கிப் பிழிந்து, தலையில் கூந்தலை சுற்றிக் கட்ட வேண்டும். இரண்டு, மூன்று முறை அவிழ்த்து கட்டவேண்டும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பு போட்டு கழுவவேண்டும். பின்பு கண்டிஷனர் பூச வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும்.

கூந்தலில் பிரச்சினைகள் இருந்தால் அழகு நிலைய சிகிச்சைகள் அவசியப்படும். ஸ்பா, ஸ்மூத்தனிங் போன்று தேவைப்படும் சிகிச்சைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை பெறவேண்டியதிருக்கும்.

ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் செய்ய வேண்டியவை:

நார்மல் ஸ்கின்- நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணை சருமம் என்றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும்.

அழகு நிலையத்தில் இதற்காக ''ஸ்கின் லைட்னிங் பேக்கேஜ்'' உள்ளது. இதனை சருமத்திற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்.

மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 12:25 am

ஒரு வாரத்திற்கு முன்பு:

முகூர்த்தத்தன்று மணப்பெண்ணுக்கு முழுமையாக எப்படி அலங்காரம் செய்யப்படுமோ அது போன்ற அலங்காரத்தை ஒரு வாரத்திற்கு முன்பே செய்து பார்த்துவிட வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துவிட்டு, அதில் ஏதாவது மாற்றங்கள் தேவையா? உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா? என்பதை எல்லாம் பார்த்துவிட வேண்டும். இப்போது பெரும்பாலும் வருங்கால கணவரும் வந்து, மணப்பெண்ணின் முழு அலங்காரத்தை பார்வையிடுகிறார். அவருடைய விருப்பத்தையும் தெரிவிப்பார். போட்டோவும் எடுத்துக் கொள்வார். இந்த அலங்காரத்திற்கு மூன்று மணிநேரம் ஆகிவிடும்.

மூன்று நாட்களுக்கு முன்பு:

பெடிக்யூர், மெனிக்யூர் எனப்படும் கால்- கை நக பராமரிப்பு, வாக்சிங், பேஷ’யல், பாடி டிரீட்மென்ட் மற்றும் மெகந்தி போன்றவைகளை போட்டுக்கொள்ள வேண்டும். இவைகளை செய்து விட்ட பின்பு மணப்பெண்கள் வெளியே செல்லக்கூடாது. வெயிலில் அலைவது, உடலில் மாசு படிவது, அலைச்சலை ஏற்படுத்திக்கொள்வது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு:

நிறைய தண்­ர் பருகவேண்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். நிறைய பழச்சாறு பருகவேண்டும்.

திருமணத்தன்று:

முகூர்த்தத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, முழுமையான மணப்பெண் அலங்காரத்தை தொடங்க வேண்டும். ஏற்கனவே டிரையல் செய்து பார்த்திருந்தால் வேகமாக, சிறப்பாக மணப்பெண் அலங்காரத்தை செய்து முடித்துவிட முடியும்.

வரவேற்பு அலங்காரம் இப்போது மிக நவீனமாகி இருக்கிறது. சிம்பிள் அதே நேரத்தில் மாடர்ன் தோற்றத்தில் மணப்பெண்கள் ஜொலிக்க விரும்புகிறார்கள். ''தீம் வெட்டிங்'' இப்போது பிரபலமாகிக் கொண்டிருப்பதால் அதற்கு தக்கபடி செய்யப்படும் மணப்பெண் அலங்காரம் அதிக வரவேற்பினை பெறுகிறது.

மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 12:27 am

மீனுவுக்காக போட்டீங்களா அண்ணா..நன்றிகள்..
ரொம்ப பயனுள்ள குறிப்புகள் அண்ணா..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 12:30 am

மீனு wrote:மீனுவுக்காக போட்டீங்களா அண்ணா..நன்றிகள்..
ரொம்ப பயனுள்ள குறிப்புகள் அண்ணா..

ஆமாம், மீனு....

இது உங்களுக்கான பதிவுதான்.. அன்பு மலர்

மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 12:47 am

மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 938222 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 938222 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 938222 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 938222 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 938222 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 938222 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 938222

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 12:43 pm

மணமகளுக்கு ரொம்ப பிரயோசனமான அழகுக்குறிப்புகள் நன்றி அண்ணா நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 12:49 pm

சபீர் wrote:மணமகளுக்கு ரொம்ப பிரயோசனமான அழகுக்குறிப்புகள் நன்றி அண்ணா நன்றி

அப்ப ஏன் ஆளுக்கும் சரிவருமா சபீர் சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் Logo12
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 05, 2010 1:04 pm

மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 677196 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 677196 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 1:16 pm

ரிபாஸ் wrote:
சபீர் wrote:மணமகளுக்கு ரொம்ப பிரயோசனமான அழகுக்குறிப்புகள் நன்றி அண்ணா நன்றி

அப்ப ஏன் ஆளுக்கும் சரிவருமா சபீர் சிரி சிரி

இது அழகுள்ளவர்களை இன்னும் அழகுபடுத்துவதுக்கு றிபாஸ் உங்க ஆளுக்கு நோ சான்ஸ் மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 440806 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 440806 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 440806

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 1:18 pm

சபீர் wrote:
ரிபாஸ் wrote:
சபீர் wrote:மணமகளுக்கு ரொம்ப பிரயோசனமான அழகுக்குறிப்புகள் நன்றி அண்ணா நன்றி

அப்ப ஏன் ஆளுக்கும் சரிவருமா சபீர் சிரி சிரி

இது அழகுள்ளவர்களை இன்னும் அழகுபடுத்துவதுக்கு றிபாஸ் உங்க ஆளுக்கு நோ சான்ஸ் மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 440806 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 440806 மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் 440806

ohhhhh அப்படியா சாரி வ்ரோங் நம்பர் சிப்பு வருது சிப்பு வருது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மணமகளுக்கான அழகுக் குறிப்புகள் Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக