புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_m10வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார நட்சத்திர பலன்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 8:37 am

First topic message reminder :

1. அஸ்வினி: பொருள் வரவு திருப்தி தரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். அரசு வகை காரியங்கள் அனுகூலமாகும். தந்தையால் நலம் கூடும். மாதர்களுக்கு குடும்ப பிரச்சினைகள் தீரும். புனிதப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நட்பு வட்டம் நேசக் கரம் நீட்டும். தொலைதூர தொடர்பு ஆதாயம் அளிக்கும்.

2. பரணி: கவர்ச்சி அம்சம் கூடும் வாரமாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி தரும். பொறியியல் துறை லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு உற்சாக சூழ்நிலை உருவாகும். பொருளாதார நிலையில் ஏற்றம் காணப்படும். ஆன்மிகவாதிகளுக்கு பெயர், புகழ் கூடும். குடும்பத்தில் சலசலப்புகள் தீரும். மகிழ்ச்சி பொங்கும்.

3. கார்த்திகை: சோதனைகளை சாதனைகளாக்கி மகிழ்ச்சி கடலில் மிதப்பீர்கள். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். நிலபுலன்கள் லாபம் தரும். தொழில் துறையில் பொறுப்புகள் கூடும். சுபகாரியங்கள் கூடிவரும். ஒரு சிலருக்கு பரிசுகள் விருதுகள் கிட்டும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

4. ரோகிணி: கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும் நேரமிது. புதியவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பொருளாதாரம் சீராக இருந்து வரும். தொலைதூர தொடர்புகள் ஆதாயம் தரும். அரசியல், வியாபாரத் துறையினர்கள் செழிப்பு பெறுவார்கள். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.

5. மிருக சீரிடம்: உங்களின் புகழ், கவுரவம், செல்வாக்கு வானளவு உயர்ந்து காணும். பண மழையில் நனைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரம், செய்தொழில் லாபம் தரும். பிறரை வசீகரிக்கும் சக்தி பிறக்கும். அரசியல் துறையினர் ஏற்றம் பெறுவார்கள்.

6. திருவாதிரை: சுபகாரியங்களில் பங்கு கொள்வீர்கள். அறிவாற்றல் பளிச்சிடும். வியாபாரம் பெருகும். பொருளாதார நிலை திருப்தி தரும். அண்டை அயலாருடன் நட்புறவு மேலிடும். கணவன், மனைவியிடையே அன்னியோன்யம் கூடும். உத்தியோக சூழ்நிலை மகிழ்ச்சி தரும். மேலதிகாரியின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள்.

7. புனர்பூசம்: புத்திசாலித்தனம் பளிச்சிடும் இனிய வாரமாகும். பட்டம், பதவிகள் தேடிவரும். வெளிநாட்டுத் தொடர்புகள், அரசு வகை காரியங்கள் அனுகூலமாகும். வியாபாரம் செழிக்கும். ஆரோக்கியம் சிறக்கும். நீண்டநாள் வியாதியஸ்தர்களுக்கு நோய் தீர வழி பிறக்கும். பணத் தட்டுப்பாடு நீங்கும் இனிய வாரம்.

8. பூசம்: பொருளாதார நிலை ஏற்றம் பெறும். இல்வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். செய்தொழில், வியாபார முயற்சி வெற்றி தரும். இரவு நேரப் பயணங்களில் விழிப்புணர்வு தேவை. நிர்வாகத் துறையினர், இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.

9. ஆயில்யம்: மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும் வாரமிது. குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, விழா என இவ்வாரம் கழியும். தெய்வப் பணிகள் நிறைவேறும். சுபகாரியங்கள் இனிதே நடக்கும்! பொருள் திருப்தி தரும். கடன் உபத்திரவம் குறையும். பதவி உயர்வு, இடமாற்றம் ஒரு சிலருக்கு கிட்டும்.

10. மகம்: எதிர்ப்புகள் அகலும். உடல் நலம் சிறக்கும் இனிய வாரம். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். பொருளாதார நிலையில் அபிவிருத்தி உண்டு. அரசு காரியங்கள் அனுகூலம் ஆகும். அயல்நாட்டு பயணத் திட்டம் வெற்றி பெறும். அலுவலக சூழ்நிலை மகிழ்ச்சி தரும். நீண்ட நாளைய கனவு நனவாகும்.

11. பூரம்: அறப்பணிகளில் ஈடுபாடு கூடும். இல்லறம் இனிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் செழிக்கும். பண வரவு திருப்தி தரும். பயணங்கள், கடிதச் செய்தி ஒப்பந்தங்களில் அனுகூலம் உண்டாகும். கம்ப்ïட்டர் துறை லாபம் தரும். பங்குச் சந்தையில் லாபம் உண்டு.

12. உத்திரம்: நிர்வாக ஆற்றல் கூடும் இனிய வாரம். செய்தொழில் வியாபாரம் செழிக்கும். எதிர்ப்புகள் அகலும். கணவன், மனைவி உறவு இனிக்கும். சுபங்கள் கூடும். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கிட்டும். வி.ஐ.பி.கள் நட்பு கிட்டும். நலங்கள் பெருகும். நட்பு வட்டம் உதவும்.

13. ஹஸ்தம்: செய்தொழில் வியாபாரம் செழிக்கும். உடல்நலம் சிறக்கும். தேகபலம் கூடும். கணவன் மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். உழைப்புக்கும், திறமைக்கும் உரிய பயன் கிட்டும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

14. சித்திரை: உடல் நலம் சீராக இருந்து வரும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண்பீர்கள். ஞானம், பக்தியில் தெளிவு உண்டாகும். உணவு வகையில் கட்டுப்பாட்டை கையாண்டு உடல் நலம் பேணுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். நிலபுலன்கள் ஆதாயம் அளிக்கும்.

15. சுவாதி: எதிரிகள் அடங்கிப் போவார்கள். உங்களின் செயல் திறமை கூடும். வண்டி வாகனங்களில் முதலீடு உண்டாகும். கோர்ட், கேஸ், வம்பு வழக்குகள் சாதகமான நிலைக்கு திரும்பும். கலைஞர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். வியாபாரத்தில் அகலக்கால் வைக்கலாகாது, அக்கம் பக்கத்தாரால் அனுகூலம் உண்டு.

16. விசாகம்: நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். கூட்டுத் தொழில் ஏற்றம் பெறும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். பழைய பாக்கிகள் வந்து சேரும். பெண்களுக்கு ஆடை, அணிமணிகள் சேரும். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் வெற்றி பெறும்.

17. அனுஷம்: பட்டம் பதவிகள் தேடிவரும் இனிய வாரம் தான். கணவன், மனைவி உறவில் குதூகலம் கூடும். உடல்நலம் சிறக்கும். தேகபலம் கூடும். செய்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுக்கல், வாங்கலில் சுமூகமான நிலை உண்டாகும். வி.ஐ.பி.கள் நட்புறவு மேலிடும்.

18. கேட்டை: உடல் நலம் சிறக்கும். தேக பலம் கூடும். துணிச்சலான காரியங்களிலும் ஈடுபாடு கூடும். மூத்தோர்கள், நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லறம் இனிக்கும். பணநாட்டம் கூடும் வாரமாகும். சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

19. மூலம்: குடும்ப பொறுப்புகள் கூடும். பண வரவு திருப்தியளிக்கும். மங்கையருக்கு மகிழ்ச்சி கூடும் இனிக்கும் வாரமாகும். தொழில் வளர்ச்சி பெறும். திறமை பளிச்சிடும். தகவல் தொடர்புகள் ஆக்கம் தரும். வண்டி, வாகனங்களில் முதலீடு உண்டாகும்.

20. பூராடம்: வியாபாரம் லாபம் தரும். வார முற்பகுதி சலசலப்புடன் காணும். பிற்பகுதி கலகலப்பாக காணும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, இட மாற்றம் கிட்டும். அரசியல்வாதிகள், வி.ஐ.பி.கள் ஆதரவால் சில காரியங்கள் வெற்றியாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியே காண்பீர்கள்.

21. உத்திராடம்: சுபகாரியங்களில் ஈடுபாடு கூடும் வாரமாகும். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம் வளர்ச்சி பெறும். எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். இவ்வாரம் முழுவதும் நல்ல தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

22. திருவோணம்:
தெய்வ காரியங்களில் மனம் ஈடுபடும். திருமண சுபகாரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். செய்தொழில் வியாபாரம் செழிக்கும். மண், மனை கட்டிட வசதிகள் பெருகும். பணப்புழக்கம் சரளமாகும். கணவன், மனைவி உறவு இனிக்கும். பெயர், புகழ் கூடும். நலமிகு வாரமாகும்.

23. அவிட்டம்: தெய்வானுகிரகத்தால் முக்கிய காரியம் நிறைவேறும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி பெறும். தீய பழக்க வழக்கங்கள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றம், பதவி உயர்வு கிட்டும். மகிழ்ச்சி கூடும்.

24. சதயம்: செய்தொழில், வியாபாரம் செழிக்கும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். வியாபார விளம்பர யுக்திகளை கையாண்டு வருமானத்தை பெருக்குவீர்கள். தந்தை வழி உறவு இனிக்கும். புதிதாக எதிர்நோக்கும் உத்தியோகம் கிட்டும். உடன் பிறப்பு உதவிக்கரம் நீட்டும்.

25. பூரட்டாதி: வார ஆரம்பமே மகிழ்ச்சி தரும் வகையில் அமையும். செய்தொழில், வியாபாரத்தில் வருமானம் சீராக இருந்துவரும். கடன் சுமை குறையும். பணப்புழக்கம் சரளமாகும். பெயர், புகழ் கவுரவம் செல்வாக்கு உயர்ந்து காணப்படும். உத்தியோக சூழல் மகிழ்ச்சி தரும்.

26. உத்திரட்டாதி: கூட்டுத்தொழில் ஏற்றம் பெறும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். பெண்களுக்கு நகை, நட்டுகள் சேரும். பணப்புழக்கம் சரளமாகும். கணவன், மனைவி உறவு இனிக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். அரசு வகை காரியங்கள் அனுகூலமாகும்.

27. ரேவதி: கணவன், மனைவி உறவில் குதூகலம் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். வருமானம் பெருகும். சேமிப்பு வளரும். புதிய தொழிலில் முயற்சிகள் வெற்றி பெறும். கண் திருஷ்டி கழிய லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். உத்தியோகப் பெண்களுக்கு அலுவலக சூழல் மகிழ்ச்சி தரும். எதிர்பார்க்கும் பதவி உயர்வும் கிட்டும்.



வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 21, 2012 10:05 am


வார நட்சத்திர பலன்கள்: 20-10-2012 முதல் 26-10-2012 வரை



1. அஸ்வினி : கணவன், மனைவி உறவு இனிக்கும். சுபகாரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டி மகிழ்வீர்கள். பணநடமாட்டம் கூடும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். உல்லாசப் பயணம் இனிக்கும். எங்கும் எதிலும் வெற்றி காண்பீர்கள்.

2. பரணி : வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் நலம் தரும். இல்லத்தில் மனமகிழ்ச்சி கூடும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். பணப்புழக்கம் சரளமாகும். கடன் சுமை குறையும். நலமே விளையும் இனிய வாரமாகும். கன்னிப் பெண்களின் விருப்பம் ஈடேறும்.

3. கார்த்திகை : செய்தொழில், வியாபாரம் செழிக்கும். இல்வாழ்வில் இனிமை கூடும். தென்றல் வீசும். எதிர்ப்புகள் விலகும். நோய் அகலும், பெயர், புகழ், கவுரவம், செல்வாக்கு உயரும். புதிய வண்டி வாகனங்களில் முதலீடு உண்டாகும். பெண்களுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும்.

4. ரோகிணி : நீண்ட நாளைய நோய் விலகும். செய்தொழில், வியாபாரம் சிறந்து விளங்கும். சேமிப்பு வளரும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும்.

5. மிருக சீரிடம் : குலதெய்வ வழிபாடு இனிதே நடந்தேறும். வேண்டும் வரம் கிட்டும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேலோங்கும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். பணம் நடமாட்டம் கூடும். நட்பு வட்டம் விரிவடையும். செய்தொழில் சிறப்படையும்.

6. திருவாதிரை : அரசு வகை காரியங்கள் ஆதாயம் அளிக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

7. புனர்பூசம் : புதிய ரக வண்டி வாகனங்களில் முதலீடு உண்டாகும். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டு. சேமிப்பு வளரும். பங்குச் சந்தை லாபம் ஈட்டித்தரும். கணவன், மனைவி உறவு இனிக்கும். நீண்டதூர பயணம் லாபம் தரும்.

8. பூசம் : திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும். செய் தொழில் சிறக்கும். பணவரவு கூடும். பங்குச் சந்தையில் லாபம் கிட்டும். இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். சம்பளமும் எதிர்பார்த்தபடி அமையும்.

9. ஆயில்யம் : பொருளாதாரம் ஏற்றம் பெறும். முகப்பொலிவு கூடும். உடல்நலம் சிறக்கும். தெம்பும் தைரியமும் கூடும். புதிய தொழில் முயற்சியை தள்ளி போடுங்கள். திருமணமாகாத மங்கையருக்கு திருமண பாக்கியம் கை கூடும். கொடுக்கல் வாங்கலில் சுமூக நிலையே காணும்.

10. மகம் : கணவன், மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். பொருளாதாரம் உயரும். விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு உண்டாகும். தொலைதூர தொடர்பு லாபம் தரும்.

11. பூரம் : இனிக்கும் செய்திகள் இல்லம் தேடி வரும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும் இனிக்கும் வாரம் தான். செய்தொழில் வியாபாரம் சிறக்கும். திட்டமிட்ட காரியங்களில் ஒன்றிரண்டு நடந்தேறும். வெற்றிப் பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். மூத்தோர்கள் மனக்குறை அகலும்.

12. உத்திரம் : சாதனை வாரம் தான். நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும். கடன் கச்சைகள் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சியும், மனஅமைதியும் கிட்டும். உடல் நலனில் அக்கறை செலுத்த நலமே விளையும்.

13. ஹஸ்தம் : இவ்வாரம் நீங்கள் எதைத் தொட்டாலும் ஜெயம் தான். உடல் நலம் சிறக்கும். தேகபலம் கூடும். பொருளாதார நிலை உயரும். மங்கையருக்கு திருமணம் கைகூடும். கன்னியருக்கு மனக்குழப்பங்கள் தீரும். விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு உண்டாகும். கணவன், மனைவி உறவு இனிக்கும்.

14. சித்திரை : வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் சுமூகமான நிலையே காணும். இல்லத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாளைய நோய் விலகும். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். நண்பர்கள் உதவிக் கரம் நீட்டுவார்கள்.

15. சுவாதி : குடும்பத்தில் அமைதி உண்டு. மகிழ்ச்சி உண்டு. கணவன், மனைவி உறவு பால்கோவா சாப்பிட்ட மாதிரி ருசிக்கும். தகப்பனார் உடல் நலனில் அக்கறை தேவை. நட்பு வட்டம் நேசக்கரம் நீட்டும். திருமண சுபகாரியங்கள் ஜோராக நடக்கும். துர்க்கை அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட நலம் உண்டு.

16. விசாகம் : செய்தொழில், வியாபாரம் எல்லாம் ஜோராக நடக்கும். தொழில் அதிபர்களுக்கு முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். தொழிற்கல்வி மாணவர்கள் சக்கை போடு போடுவார்கள். ஞாபகத் திறன் அதிகரிக்கும். லாபகரமான வாரம் தான்.

17. அனுஷம் : குடும்பத்திலே கஷ்ட நஷ்டம் எதுவும் இருக்காது. கணவன், மனைவி உறவு இனிக்கும். சொந்த பந்தங்கள் உதவும். வீடு, வண்டி வாகனங்களில் முதலீடு உண்டாகும். நவகிரக சன்னதி வழிபாடு மன அமைதி தரும். உடல்நலம் சிறக்கும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும்.

18. கேட்டை : கலைஞர்கள் புகழ் உச்சியில் ஜொலிப்பார்கள். தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் கிட்டி மகிழ்வார்கள். சிறு தொழிலாளர்களுக்கு சேமிப்பு வளரும். மாணவ, மாணவியர் படிப்பில் முதலிடம் பெறுவார்கள். நிதி நிலைமை உயரும். உத்தியோகப் பெண்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, இடமாற்றம் கிட்டி மகிழ்ச்சிக் கடலில் மிதப்பார்கள்.

19. மூலம் : கணவன், மனைவி உறவு இனிக்கும். உங்கள் பேச்சிலே அனல் வீசினாலும் அடுத்த கனமே மறையும். நியாயம் பிறக்கும். ஆண்கள் முகம் தெரியாத பெண்களுடன் பழகுவதில் உஷாராக இருக்க வேண்டும். செய்தொழில், வியாபாரம் செழிக்கும். பணமுடைகள் அகலும். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் சிறக்கும்.

20. பூராடம் : குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். கடன் கச்சைகள் தீரும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். புதியதொழில் முயற்சி வெற்றி தரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். இல்லத்தில் திருமண சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும்.

21. உத்திராடம்: நட்சத்திர நாதனின் சஞ்சாரம் சிறப்பாக காணப்படுவதால் நிதி நிலைமை சீராகும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். இல்லத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். நட்பு வட்டம் விரிவடையும். செய்தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும்.

22. திருவோணம் : திட்டமிட்ட காரியங்களில் ஜெயம் உண்டாகும். புன்முறுவல் பூத்து காணப்படுவீர்கள். சந்தோஷம் கூடும். சேமிப்பு வளரும். செய்தொழில் சிறக்கும். வெளியூர், வெளிநாட்டு பயண முயற்சிகள் வெற்றி தரும். கணவன், மனைவி உறவு பால்கோவா சாப்பிட்ட மாதிரி இனிக்கும். கலகலப்பு நிறைந்த வாரம்.

23. அவிட்டம் : வெற்றி தேவதை இல்லம் தேடி வருவாள். திட்டங்கள் வெற்றியாகும். தீயோர் நட்பு வேண்டாம். வம்பு வழக்குகள் சாதக நிலையை எட்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் உஷாராக செயல்படுங்கள். செய்தொழிலில் போட்டிகள் மறையும். வருமானம் சீராக இருந்து வரும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும்.

24. சதயம் : உறவினர் வழியில் மகிழ்ச்சியும், ஆதாயங்களும் பெருகும். இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் அமையும். சம்பளமும் எதிர்பார்த்த மாதிரி கிடைக்கும். கலைஞர்கள், அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், விவசாயிகள் உத்தியோக துறையினர் ஏற்றம் பெறுவார்கள்.

25. பூரட்டாதி : எங்கும் எதிலும் வெற்றி கிட்டும். பணம் புரளும். குடும்பத்தில் மன அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். திருமணமாகாத மங்கையர் வாழ்வில் திருமண தீபம் சுடர்விடும். வசந்தம் வீசும். மகிழ்ச்சி பொங்கும். கன்னிப்பெண்கள் விருப்பம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள் சேரும்.

26. உத்திரட்டாதி : உடல்நலம் சிறக்கும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். செய்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும். உத்தியோகப் பெண்களுக்கு மேல் அதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

27. ரேவதி : மண், மனை, கட்டிடம், வண்டி, வாகனங்களில் முதலீடு உண்டாகும். இல்லத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வரவேண்டிய கடன் பாக்கிகள் வந்து சேரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். வெளிïர் வெளிநாட்டு பயண முயற்சி வெற்றி தரும். தங்கம், வெள்ளி, வைரத்தில் பெண்கள் முதலீடு செய்து மகிழ்வார்கள்.

கணித்தவர்: `ஜோதிட பூஷணம்' கடகம் ராமசாமி



வார நட்சத்திர பலன்கள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 21, 2012 11:00 am

ராசிபலனிற்கு நன்றி அண்ணா! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக