புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
7 Posts - 3%
prajai
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
18 Posts - 4%
prajai
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வார நட்சத்திர பலன்கள்  Poll_c10வார நட்சத்திர பலன்கள்  Poll_m10வார நட்சத்திர பலன்கள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார நட்சத்திர பலன்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 8:37 am

1. அஸ்வினி: பொருள் வரவு திருப்தி தரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். அரசு வகை காரியங்கள் அனுகூலமாகும். தந்தையால் நலம் கூடும். மாதர்களுக்கு குடும்ப பிரச்சினைகள் தீரும். புனிதப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நட்பு வட்டம் நேசக் கரம் நீட்டும். தொலைதூர தொடர்பு ஆதாயம் அளிக்கும்.

2. பரணி: கவர்ச்சி அம்சம் கூடும் வாரமாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி தரும். பொறியியல் துறை லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு உற்சாக சூழ்நிலை உருவாகும். பொருளாதார நிலையில் ஏற்றம் காணப்படும். ஆன்மிகவாதிகளுக்கு பெயர், புகழ் கூடும். குடும்பத்தில் சலசலப்புகள் தீரும். மகிழ்ச்சி பொங்கும்.

3. கார்த்திகை: சோதனைகளை சாதனைகளாக்கி மகிழ்ச்சி கடலில் மிதப்பீர்கள். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். நிலபுலன்கள் லாபம் தரும். தொழில் துறையில் பொறுப்புகள் கூடும். சுபகாரியங்கள் கூடிவரும். ஒரு சிலருக்கு பரிசுகள் விருதுகள் கிட்டும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

4. ரோகிணி: கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும் நேரமிது. புதியவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பொருளாதாரம் சீராக இருந்து வரும். தொலைதூர தொடர்புகள் ஆதாயம் தரும். அரசியல், வியாபாரத் துறையினர்கள் செழிப்பு பெறுவார்கள். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.

5. மிருக சீரிடம்: உங்களின் புகழ், கவுரவம், செல்வாக்கு வானளவு உயர்ந்து காணும். பண மழையில் நனைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரம், செய்தொழில் லாபம் தரும். பிறரை வசீகரிக்கும் சக்தி பிறக்கும். அரசியல் துறையினர் ஏற்றம் பெறுவார்கள்.

6. திருவாதிரை: சுபகாரியங்களில் பங்கு கொள்வீர்கள். அறிவாற்றல் பளிச்சிடும். வியாபாரம் பெருகும். பொருளாதார நிலை திருப்தி தரும். அண்டை அயலாருடன் நட்புறவு மேலிடும். கணவன், மனைவியிடையே அன்னியோன்யம் கூடும். உத்தியோக சூழ்நிலை மகிழ்ச்சி தரும். மேலதிகாரியின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள்.

7. புனர்பூசம்: புத்திசாலித்தனம் பளிச்சிடும் இனிய வாரமாகும். பட்டம், பதவிகள் தேடிவரும். வெளிநாட்டுத் தொடர்புகள், அரசு வகை காரியங்கள் அனுகூலமாகும். வியாபாரம் செழிக்கும். ஆரோக்கியம் சிறக்கும். நீண்டநாள் வியாதியஸ்தர்களுக்கு நோய் தீர வழி பிறக்கும். பணத் தட்டுப்பாடு நீங்கும் இனிய வாரம்.

8. பூசம்: பொருளாதார நிலை ஏற்றம் பெறும். இல்வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். செய்தொழில், வியாபார முயற்சி வெற்றி தரும். இரவு நேரப் பயணங்களில் விழிப்புணர்வு தேவை. நிர்வாகத் துறையினர், இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.

9. ஆயில்யம்: மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும் வாரமிது. குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, விழா என இவ்வாரம் கழியும். தெய்வப் பணிகள் நிறைவேறும். சுபகாரியங்கள் இனிதே நடக்கும்! பொருள் திருப்தி தரும். கடன் உபத்திரவம் குறையும். பதவி உயர்வு, இடமாற்றம் ஒரு சிலருக்கு கிட்டும்.

10. மகம்: எதிர்ப்புகள் அகலும். உடல் நலம் சிறக்கும் இனிய வாரம். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். பொருளாதார நிலையில் அபிவிருத்தி உண்டு. அரசு காரியங்கள் அனுகூலம் ஆகும். அயல்நாட்டு பயணத் திட்டம் வெற்றி பெறும். அலுவலக சூழ்நிலை மகிழ்ச்சி தரும். நீண்ட நாளைய கனவு நனவாகும்.

11. பூரம்: அறப்பணிகளில் ஈடுபாடு கூடும். இல்லறம் இனிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் செழிக்கும். பண வரவு திருப்தி தரும். பயணங்கள், கடிதச் செய்தி ஒப்பந்தங்களில் அனுகூலம் உண்டாகும். கம்ப்ïட்டர் துறை லாபம் தரும். பங்குச் சந்தையில் லாபம் உண்டு.

12. உத்திரம்: நிர்வாக ஆற்றல் கூடும் இனிய வாரம். செய்தொழில் வியாபாரம் செழிக்கும். எதிர்ப்புகள் அகலும். கணவன், மனைவி உறவு இனிக்கும். சுபங்கள் கூடும். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கிட்டும். வி.ஐ.பி.கள் நட்பு கிட்டும். நலங்கள் பெருகும். நட்பு வட்டம் உதவும்.

13. ஹஸ்தம்: செய்தொழில் வியாபாரம் செழிக்கும். உடல்நலம் சிறக்கும். தேகபலம் கூடும். கணவன் மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். உழைப்புக்கும், திறமைக்கும் உரிய பயன் கிட்டும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

14. சித்திரை: உடல் நலம் சீராக இருந்து வரும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண்பீர்கள். ஞானம், பக்தியில் தெளிவு உண்டாகும். உணவு வகையில் கட்டுப்பாட்டை கையாண்டு உடல் நலம் பேணுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். நிலபுலன்கள் ஆதாயம் அளிக்கும்.

15. சுவாதி: எதிரிகள் அடங்கிப் போவார்கள். உங்களின் செயல் திறமை கூடும். வண்டி வாகனங்களில் முதலீடு உண்டாகும். கோர்ட், கேஸ், வம்பு வழக்குகள் சாதகமான நிலைக்கு திரும்பும். கலைஞர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். வியாபாரத்தில் அகலக்கால் வைக்கலாகாது, அக்கம் பக்கத்தாரால் அனுகூலம் உண்டு.

16. விசாகம்: நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். கூட்டுத் தொழில் ஏற்றம் பெறும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். பழைய பாக்கிகள் வந்து சேரும். பெண்களுக்கு ஆடை, அணிமணிகள் சேரும். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் வெற்றி பெறும்.

17. அனுஷம்: பட்டம் பதவிகள் தேடிவரும் இனிய வாரம் தான். கணவன், மனைவி உறவில் குதூகலம் கூடும். உடல்நலம் சிறக்கும். தேகபலம் கூடும். செய்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுக்கல், வாங்கலில் சுமூகமான நிலை உண்டாகும். வி.ஐ.பி.கள் நட்புறவு மேலிடும்.

18. கேட்டை: உடல் நலம் சிறக்கும். தேக பலம் கூடும். துணிச்சலான காரியங்களிலும் ஈடுபாடு கூடும். மூத்தோர்கள், நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லறம் இனிக்கும். பணநாட்டம் கூடும் வாரமாகும். சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

19. மூலம்: குடும்ப பொறுப்புகள் கூடும். பண வரவு திருப்தியளிக்கும். மங்கையருக்கு மகிழ்ச்சி கூடும் இனிக்கும் வாரமாகும். தொழில் வளர்ச்சி பெறும். திறமை பளிச்சிடும். தகவல் தொடர்புகள் ஆக்கம் தரும். வண்டி, வாகனங்களில் முதலீடு உண்டாகும்.

20. பூராடம்: வியாபாரம் லாபம் தரும். வார முற்பகுதி சலசலப்புடன் காணும். பிற்பகுதி கலகலப்பாக காணும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, இட மாற்றம் கிட்டும். அரசியல்வாதிகள், வி.ஐ.பி.கள் ஆதரவால் சில காரியங்கள் வெற்றியாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியே காண்பீர்கள்.

21. உத்திராடம்: சுபகாரியங்களில் ஈடுபாடு கூடும் வாரமாகும். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம் வளர்ச்சி பெறும். எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். இவ்வாரம் முழுவதும் நல்ல தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

22. திருவோணம்:
தெய்வ காரியங்களில் மனம் ஈடுபடும். திருமண சுபகாரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். செய்தொழில் வியாபாரம் செழிக்கும். மண், மனை கட்டிட வசதிகள் பெருகும். பணப்புழக்கம் சரளமாகும். கணவன், மனைவி உறவு இனிக்கும். பெயர், புகழ் கூடும். நலமிகு வாரமாகும்.

23. அவிட்டம்: தெய்வானுகிரகத்தால் முக்கிய காரியம் நிறைவேறும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி பெறும். தீய பழக்க வழக்கங்கள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றம், பதவி உயர்வு கிட்டும். மகிழ்ச்சி கூடும்.

24. சதயம்: செய்தொழில், வியாபாரம் செழிக்கும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். வியாபார விளம்பர யுக்திகளை கையாண்டு வருமானத்தை பெருக்குவீர்கள். தந்தை வழி உறவு இனிக்கும். புதிதாக எதிர்நோக்கும் உத்தியோகம் கிட்டும். உடன் பிறப்பு உதவிக்கரம் நீட்டும்.

25. பூரட்டாதி: வார ஆரம்பமே மகிழ்ச்சி தரும் வகையில் அமையும். செய்தொழில், வியாபாரத்தில் வருமானம் சீராக இருந்துவரும். கடன் சுமை குறையும். பணப்புழக்கம் சரளமாகும். பெயர், புகழ் கவுரவம் செல்வாக்கு உயர்ந்து காணப்படும். உத்தியோக சூழல் மகிழ்ச்சி தரும்.

26. உத்திரட்டாதி: கூட்டுத்தொழில் ஏற்றம் பெறும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். பெண்களுக்கு நகை, நட்டுகள் சேரும். பணப்புழக்கம் சரளமாகும். கணவன், மனைவி உறவு இனிக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். அரசு வகை காரியங்கள் அனுகூலமாகும்.

27. ரேவதி: கணவன், மனைவி உறவில் குதூகலம் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். வருமானம் பெருகும். சேமிப்பு வளரும். புதிய தொழிலில் முயற்சிகள் வெற்றி பெறும். கண் திருஷ்டி கழிய லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். உத்தியோகப் பெண்களுக்கு அலுவலக சூழல் மகிழ்ச்சி தரும். எதிர்பார்க்கும் பதவி உயர்வும் கிட்டும்.



வார நட்சத்திர பலன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Aug 18, 2012 10:53 am

24. சதயம்:

பகிர்விற்கு நன்றி நன்றி அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:43 am

நட்சத்திர பலன்கள் - 8-9-2012 முதல் 14-9-2012 வரை



1. அஸ்வினி: உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். பிரிந்த சொந்த பந்தங்களுடன் சேர்வீர்கள். பிள்ளைகளால் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். மகளின் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்றாற் போல நல்ல மணமகன் அமைவர். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும்.

2. பரணி: கன்னிப் பெண்களுக்கு காதல் கனியும். மனக்குழப்பம் நீங்கும். கல்வியில் வெற்றி மேல் வெற்றி உண்டு. ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனங்கள் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். நாடாளுபவர்களால் சில காரியங்கள் வெற்றி முகமாகும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் சுமூகமாக இருந்து வரும்.

3. கார்த்திகை: வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். எதிர்பாராத பெரிய பதவிகள், பிரபலங்களின் நட்பு கிட்டும். பெண்கள் வகையில் கவனம் தேவை. பங்காளிப் பிரச்சனை தீரும். குலதெய்வ கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். திடீர் பணவரவால் பழைய கடன்கள் பைசல் ஆகும். மகிழ்ச்சியான வாரம் தான்.

4. ரோகிணி: வி.ஐ.பி.க்களின் உதவியால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உத்தியோகப் பெண்களுக்கு இடமாற்றமும் விரும்பியபடி அமையும். உங்களுள் உரசலை சிலர் ஏற்படுத்த இடமுண்டு. அவர்களுக்கு இடம் அளிக்காதீர்கள். கணவன், மனைவி உறவில் குதூகலம் கூடுதல் ஆகும். பணப்புழக்கம் சரளமாகும்.

5. மிருக சீரிடம்: பழைய பாக்கிகள் வசூலாகும். ஷேர், ரியல் எஸ்டேட், பெட்ரோல், கியாஸ் ஏஜென்சி, டிராவல்ஸ் வகையில் லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் வெற்றிக் கனியை சுவைப்பீர்கள். நிலத்தகராறு நீங்கும். நீர்பற்றாக்குறை அகலும். எழுத்து ஒப்பந்தங்களில் வெற்றி கிட்டும். பணம் நடமாடும்.

6. திருவாதிரை:
கலைஞர்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். நீண்ட நாளாக திருமணமாகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். உத்தியோகஸ்தர்கள் புது அதிகாரிகளால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கம்ப்ïட்டர், ஷேர், ஹோட்டல்களில் லாபம் அதிகரிக்கும்.

7. புனர்பூசம்: எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். வருமானம் உயரும். கடன் தீரும். கல்யாணம், சீமந்தம், காது குத்து என இல்லம் களை கட்டும். இனம், மொழி, பேதம் பார்க்காமல் எல்லாரிடமும் எளிமையாகப் பழகுவீர்கள். கணவன், மனைவிக்குள் அன்புக்கு குறைவிருக்காது.

8. பூசம்: உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு சம்பள உயர்வு கிட்டி மகிழ்வீர்கள். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். செய்தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகும். வீடுகட்ட திட்டமிட்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். உணவு, ஏற்றுமதி, இறக்குமதி துறையினர்கள் ஏற்றம் பெறுவர்.

9. ஆயில்யம்: வியாபாரத் துறையினர் அனுபவமில்லாதவரின் ஆலோசனையை கேட்டு நஷ்டம் ஏற்பட இடமுண்டு, உஷார். ஒரு சிலர் தங்கள் அனுபவ அறிவால் தொழிலை விரிவுபடுத்தி மகிழ்வீர்கள். நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிட்டும். கணவன், மனைவி உறவில் குதூகலம் கூடுதலாகும்.

10. மகம்: வழக்கு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பணம் எவ்வளவு வந்தாலும் இந்த வாரம் கையில் தங்காது. உடல் ஆரோக்கியம் சிறக்கும். தேகபலம் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிட்டும்.

11. பூரம்: கலைத்துறையினருக்கு வருமானம் உயர இவ்வாரம் வழி பிறக்கும். விவசாயிகள் மாற்றுப் பயிரால் லாபம் அடைவீர்கள். தீப வழிபாடு செல்வத் தடையை போக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் நல்ல லாபம் ஈட்டுவர்.

12. உத்திரம்: பணவிஷயத்தில் பொறுப்பேற்காதீர்கள். வங்கி கேஷியர்கள் பணத்தை கையாளும்போது உஷார். தேவைக்கு பணம் புரளும். சவாலான சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவி உறவில் களிப்புறவு கூடும். யாருக்கும் ஜாமீன் கையொப்பம் வேண்டாம்.

13. ஹஸ்தம்: இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வெகு நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். வி.ஐ.பி.க்கள் தொழில் அதிபர்களுடன் புது நட்புறவு உண்டாகும். புதிய வண்டி, வாகனங்களில் முதலீடு உண்டாகும். செய்தொழில் சிறக்கும். பணம் புரளும். மனமகிழ்ச்சி கிட்டும்.

14. சித்திரை: கன்னிப் பெண்களுக்கு ஆசைப்பட்ட மாதிரி நல்ல மணமகன் வந்து அமைவர். துள்ளி விளையாட பிள்ளை இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். செய்தொழில், வியாபாரத்தில் சீரான வருமானம் அமையும். அதிகார பதவியில் உள்ளவர்களால் சில காரியங்கள் வெற்றியாகும்.

15. சுவாதி:
எதிர்பார்க்கும் பணம் வந்து பையை நிரப்பும். வழக்குகளில் வெற்றி கிட்டும் வாய்ப்புகள் பெருகும். புதிய வியாபார ஸ்தாபனத்தை தொடங்கி ஒரு சிலர் மகிழ்வீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுங்கள். வெளிïர் பிரயாணம் லாபம் ஈட்டும்.

16. விசாகம்: அடுத்தவருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்திருங்கள். நியாயவாதிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். தங்க நகைகள், ரத்தினங்கள் சேரும். ஒரு சிலருக்கு பண இழப்புகள், வீண்பழி வந்து நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

17. அனுஷம்: திட்டமிட்ட காரியங்களில் தடைகள் எல்லாம் நீங்கும். வெற்றி முகமாகும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இனிக்கும் வாரமாகும். பூர்வீகச் சொத்துக்களில் இனி ஆதாயங்கள் வளரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

18. கேட்டை: பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் எதிலும் நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது. நீண்ட தூர பயணம், எழுத்து ஒப்பந்தங்களில் வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு பட்டம் பதவிகள் தேடி வரும். பங்குச் சந்தை லாபம் ஈட்டித் தரும். பணப்புழக்கம் சரளமாகும். வழக்குகள் வெற்றி முகமாகும். புகழ் சேரும்.

19. மூலம்: திருமணம், சீமந்தம், காது குத்து என இல்லம் களை கட்டும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். ஆன்மிகவாதிகளின் நட்பு கிட்டும். பயணங்கள் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையொப்பம், கடன் கொடுப்பது அன்பை முறிக்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி உண்டாகும்.

20. பூராடம்: அடிப்படை வசதிகள் இல்லத்தில் பெருகும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையில் இருந்து ஒதுங்குங்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு, இடமாற்றம் விரும்பியபடி அமையும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நலம் பயக்கும். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் வெற்றி முகமாகும்.

21. உத்திராடம்:
சொத்து வாங்கும் போது மூலப் பத்திரத்துடன் சரிபாருங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. கன்னிப்பெண்கள் உயர்கல்வி பயில வழி பிறக்கும். மனக் குழப்பம் நீங்கும். ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் அமையும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

22. திருவோணம்:
மணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கூடும். மகிழ்ச்சி கிட்டும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். செய்தொழிலில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகும். பாஸ்போர்ட், விசா, எழுத்து ஒப்பந்தங்களில் வெற்றி கிட்டும். கலைஞர்களுக்கு பழைய பாக்கிகள் வந்து சேரும்.

23. அவிட்டம்: தியானம், யோகா கற்று தெளிவீர்கள். புண்ணிய நதிகளில் நீராடுதல் உடல், மன அழுக்குகளை நீக்கும். பணம் நடமாடும். செய்தொழில் வியாபாரத்தில் லாபம் வளரும். குலதெய்வ வழிபாடு ஆன்மிக பலத்தை பெருக்கும். பழைய கடன் தீரும். வி.ஐ.பி.க்களுடன் நட்புறவு வளரும்.

24. சதயம்: உத்தியோகஸ்தர்களுக்கு பணிச் சுமை கூடும். மேலதிகாரிகளின் தொந்தரவு நீங்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் இல்லத்திற்கு தேவையான தட்டுமுட்டு சாமான்களை வாங்கி குவித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். தேகபலம் கூடும். செய்தொழில் சிறக்கும்.

25. பூரட்டாதி: வியாபாரிகள் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நலம் பயக்கும். கொடுக்கல், வாங்கல் சுமூகமாக இருந்து வரும். வட்டி வாசி தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு தங்கம், வெள்ளி ஆபரணங்களில் மோகம் அதிகரிக்கும். முதலீடும் உண்டாகும். பிரயாணம் அனுகூலமாகும்.

26. உத்திரட்டாதி: இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடந்தேறும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். புத்திசாலித்தனம் எதிலும் மேலிடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிட்டும். கணவன், மனைவி உறவில் இனிமை கூடும். ஒரு சிலர் இசையை கற்றுக் கொள்வீர்கள்.

27. ரேவதி: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பழைய கடன்கள் தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உயர் ரக ஆடை ஆபரணங்களில் முதலீடு உண்டாகும். ஒரு சிலர் தற்போதைய வேலையில் இருந்து விலகி மற்றொரு பணியில் ஈடுபடுவர். கன்னிப் பெண்களுக்கு உயர்கல்வி பயில கிரீன் சிக்னல் கிட்டும். ஒரு சிலர் வெளிநாடு சென்று பயிலவும் காலம் கனியும்.



வார நட்சத்திர பலன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2012 8:05 am


நட்சத்திர பலன்கள் - 15.9.2012 முதல் 21.9.2012 வரை



1. அஸ்வினி: புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு வாரிசுகள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் நிலவும் மனக் கசப்புகள் நீங்கும். வீடு, நில முதலீடுகளில் சிக்கல்கள் தீரும். உடல்நலம் சிறக்கும். உடன் பிறப்புகள் பாசக்கரம் நீட்டும். நட்பு வட்டம் விரிவடையும். உதிரிகள் விலகி ஓடுவர்.

2. பரணி: ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செழிக்கும். பணம் கொழிக்கும். கலைஞர்களுக்கு அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். விரும்பியபடி இடமாற்றம் பதவி உயர்வு உத்தியோகஸ்தர்களுக்கு அமையும். கணவன், மனைவிக்குள் களிப்புறவு உண்டாகும். வழக்குகள் முடிவுக்கு வரும்.

3. கார்த்திகை: சேமிப்பு வளரும். செய்தொழில் சிறக்கும். சிந்தை மகிழும் சம்பவங்கள் நிகழும். இல்லத்தில் சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடந்தேறும். ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டைப் புதுப்பித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத் திட்டங்கள் வெற்றி முகமாகும். உடல் நலம் சிறக்கும்.

4. ரோகிணி: உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிட்டும். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவர். அரசு வகையில் அனுகூலங்கள் அதிகரிக்கும். புகழ், கவுரவம், செல்வாக்கு உயரும். புனிதப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். பணப் புழக்கம் சரளமாகும்.

5. மிருக சீரிடம்: கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். வெளிநாடு செல்ல தடைவிலகும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அரசியலில் வெற்றி கிட்டும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். பண பலம் பெருகும்.

6. திருவாதிரை: செய்தொழில் சிறக்கும். சேமிப்பு உயரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். எண்ணங்கள் ஈடேறும். தைரியம், வீரியம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவி உறவில் இனிமை கூடும்.

7. புனர்பூசம்: எதிரியால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் வெற்றியாகும். ஏற்றுமதி, இறக்குமதி பிளாஸ்டிக் ரசாயன வகையில் ஆதாயம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு திருமணவாய்ப்புகள் கூடும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணப் புழக்கம் சரளமாகும்.

8. பூசம்: கண் சம்பந்தமான உபாதைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வியாபாரம் செழிக்கும். ஒப்பந்தங்கள் அனுகூலமாகும். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் பெருகும். ஒருசிலருக்கு அரசியலில் கவுரவம் மிக்க பதவி கிட்டும்.

9. ஆயில்யம்: பெயர், புகழ், கவுரவம், செல்வாக்கு உயரும். வண்டி, வாகனங்களை கையாளும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், இடமாற்றமும், விரும்பியபடி அமையும். தொலைதூர செய்தி செய்தொழிலில் லாபம் ஈட்டித் தரும். கொடுக்கல், வாங்கலில் சுமூகமான நிலை உருவாகும்.

10. மகம்: உடல் நலம் சிறக்கும், தேகபலம் கூடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சி வெற்றி தரும். பெண்களால் லாபம் உண்டாகும். கடன் தொல்லைகள் மறையும். தெய்வபலம் கூடும். கணவன், மனைவி உறவில் குதூகலம் பிறக்கும். யோகமான வாரமாகும். புதிய வீடு அமையும்.

11. பூரம்: ஆலய தரிசனங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். இல்லத்தில் திருமண சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக சூழல் மகிழ்ச்சி தரும். நீண்ட நாளைய சம்பள பாக்கிகள் வந்து சேரும். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் வெற்றியாகும்.

12. உத்திரம்: பழைய கடன்கள் தீரும். அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். வியாபார நிறுவன சம்பந்தமான வழக்குகள் வெற்றியை நோக்கி நகரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் நிலவும் மனக் கசப்புகள் நீங்கும்.

13. ஹஸ்தம்: அரசாங்கத்தில் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாகும். பங்குச் சந்தை லாபம் ஈட்டித் தரும். பொருளாதார நிலை உயரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். மனம் மலரும்.

14. சித்திரை: போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். செய்தொழில், வியாபாரம், வளர்ச்சி பெறும். லாபமும் பெருகும். வீண் செலவுகளை தவிர்த்திடுங்கள். சேமிப்பு வளரும். பெண்களுக்கு ஆடை, அணிமணிகள் சேரும். சொத்து சுகங்களும் சேரும். பேச்சில் இனிமை கூடும். பிரயாணத்தின் போது உடமைகள் மீது விழிப்புணர்வு தேவை.

15. சுவாதி: குடும்ப நலம் சிறக்கும். தேகபலம் கூடும். உடல் நலம் சிறப்பாகக் காணப்படும். பொருளாதார நிலை உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் குவியும். அரசு வகை உதவிகள் கிட்டும். வெளிïர் தொடர்புகள் ஆதாயம் அளிக்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகிடும்.

16. விசாகம்:
செயல் திறன் அறிவாற்றல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மேம்பாடு உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். இல்லத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். கணவன், மனைவி உறவு இனிக்கும்.

17. அனுஷம்:
பண வரவு மகிழ்ச்சி தரும். திட்டமிட்ட காரியங்களில் ஒன்றிரண்டு நிறைவேறும். குலதெய்வ கோவிலுக்கு நிதி உதவி செய்து மகிழ்வீர்கள். வெளிïர், வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயங்களை கொண்டு வரும். பெண்களுக்கு நகை நட்டுகளில் முதலீடு உண்டாகும். சேமிப்பு வளரும்.

18. கேட்டை: பரிசுகள், பாராட்டுக்கள் குவியும் வாரமிது. கேளிக்கை உல்லாசங்களில் மனம் ஈடுபடும். பெண்களால் அவமானம் ஏற்படக்கூடும் உஷார். கலைஞர்கள் வெற்றிபடியில் ஏறுவார்கள். பெண்களுக்கு அசையாத சொத்துக்கள் சேரும். வியாபாரத்தில் வருமானம் வளரும்.

19. மூலம்: சவாலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வும், இடமாற்றமும் விரும்பியபடி அமையும். பெண்களுக்கு புதிய ஆடை, அணிமணிகள் அலங்காரப் பொருட்கள் குவியும்.

20. பூராடம்: உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். பெயர், புகழ், கவுரவம், செல்வாக்கு உயரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். கடல் கடந்து சென்று ஜீவிக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். சிறு பிரயாணம் லாபம் தரும். பழைய கடன்கள் தீரும். பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும்.

21. உத்திராடம்: உடல் ஆரோக்கியம் சிறக்கும். நீண்ட நாள் நோய் விலகும். செல்லப் பிராணிகளிடம் சற்று தூரமாக இருங்கள். வாழ்க்கைத் துணை நலம் சிறக்கும். அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிட்டும். பணம் புரளும்.

22. திருவோணம்: கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். செய்தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகும். விளம்பர யுக்திகளை கையாண்டு செய்தொழிலில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். கலைத்துறை தொழிலாளர்களுக்கு அனுகூலமான வாரமாகும்.

23. அவிட்டம்:
சினிமாக் கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். பிள்ளைகள் வழியில் ஆதாயமும், ஆனந்தமும் பெருகும். கலைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவியும். பெண்களுக்கு வண்டி, வாகனங்களில் முதலீடு உண்டாகும். மணமாகாத மங்கையருக்கு திருமண வாய்ப்புகள் கூடும். புதிய தொழில் முதலீடுகள் செய்ய ஏற்ற வாரமாகும்.

24. சதயம்: குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். ஆன்மிக பெரியோர்கள் நட்பு கிட்டும். அரசியல் துறையினர் கல்வி, விவசாயம், காவல், ராணுவத் துறையினர் ஏற்றம் பெறுவர். வெற்றிகள் பெற்று இனிக்கும் வாரமாக அமையும். செய்தொழில் வியாபாரம் செழிக்கும். காதல் திருமணம் கைகூடும். பேச்சாற்றல் அதிகரிக்கும்.

25. பூரட்டாதி: உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பியபடி இடமாற்றம் பதவி உயர்வு கிட்டும். கொடுக்கல், வாங்கலில் மகிழ்ச்சிகரமான சூழலே நிலவும். பழைய கடன்கள் தீரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள்உண்டாகும். செலவுகள் குறையும். பொருளாதார நிலை உயரும்.

26. உத்திரட்டாதி: புதிய வீடு, நிலபுலங்களில் கணிசமான அளவு முதலீடு செய்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பட்டம் பதவிகள் தேடி வரும். வியாபாரம் செய்தொழிலில் வருமானம் சீராக இருந்து வரும். ஆலய வழிபாடு மன அமைதி தரும். கணவன், மனைவி உறவு இனிக்கும்.

27. ரேவதி: தனவரவு, பொருள் வரவு கூடும் வாரமிது. உத்தியோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வும், சம்பள உயர்வும், சலுகைகளும் கிட்டும். நிறைய படித்தவர்கள் மத்தியில் சாதுர்யமாகப் பேசி சாதனை படைப்பீர்கள். கல்வியில் வெற்றிகள் குவியும். திட்டங்கள் கனியும். சுக்ர பலத்தால் திருமண சுபகாரியங்கள் கைகூடும்.



வார நட்சத்திர பலன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 15, 2012 8:29 am

நன்றி மாமா அங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2012 11:22 am


22.9.2012 முதல் 28.9.2012 வரை


1. அஸ்வினி: புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு வாரிசுகள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் நிலவும் மனக் கசப்புகள் நீங்கும். வீடு, நில முதலீடுகளில் சிக்கல்கள் தீரும். உடல்நலம் சிறக்கும். உடன் பிறப்புகள் பாசக்கரம் நீட்டும். நட்பு வட்டம் விரிவடையும். எதிரிகள் விலகி ஓடுவர்.

2. பரணி: ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செழிக்கும். பணம் கொழிக்கும். கலைஞர்களுக்கு அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். விரும்பியபடி இடமாற்றம் பதவி உயர்வு உத்தியோகஸ்தர்களுக்கு அமையும். கணவன், மனைவிக்குள் களிப்புறவு உண்டாகும். வழக்குகள் முடிவுக்கு வரும்.

3. கார்த்திகை: சேமிப்பு வளரும். செய்தொழில் சிறக்கும். சிந்தை மகிழும் சம்பவங்கள் நிகழும். இல்லத்தில் சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடந்தேறும். ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டைப் புதுப்பித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத் திட்டங்கள் வெற்றி முகமாகும். உடல் நலம் சிறக்கும்.

4. ரோகிணி: உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிட்டும். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவர். அரசு வகையில் அனுகூலங்கள் அதிகரிக்கும். புகழ், கவுரவம், செல்வாக்கு உயரும். புனிதப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். பணப்புழக்கம் சரளமாகும்.

5. மிருக சீரிடம்: கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். வெளிநாடு செல்ல தடை விலகும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அரசியலில் வெற்றி கிட்டும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். பணபலம் பெருகும்.

6. திருவாதிரை: செய்தொழில் சிறக்கும். சேமிப்பு உயரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். எண்ணங்கள் ஈடேறும். தைரியம், வீரியம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவி உறவில் இனிமை கூடும்.

7. புனர்பூசம்: எதிரியால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் வெற்றியாகும். ஏற்றுமதி, இறக்குமதி பிளாஸ்டிக் ரசாயன வகையில் ஆதாயம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கூடும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணப் புழக்கம் சரளமாகும்.

8. பூசம்: கண் சம்பந்தமான உபாதைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வியாபாரம் செழிக்கும். ஒப்பந்தங்கள் அனுகூலமாகும். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் பெருகும். ஒருசிலருக்கு அரசியலில் கவுரவம் மிக்க பதவி கிட்டும்.

9. ஆயில்யம்: பெயர், புகழ், கவுரவம், செல்வாக்கு உயரும். வண்டி, வாகனங்களை கையாளும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், இடமாற்றமும், விரும்பியபடி அமையும். தொலைதூர செய்தி செய் தொழிலில் லாபம் ஈட்டித் தரும். கொடுக்கல், வாங்கலில் சுமூகமான நிலை உருவாகும்.

10. மகம்: உடல் நலம் சிறக்கும். தேகபலம் கூடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சி வெற்றி தரும். பெண்களால் லாபம் உண்டாகும். கடன் தொல்லைகள் மறையும். தெய்வ பலம் கூடும். கணவன், மனைவி உறவில் குதூகலம் பிறக்கும். யோகமான வாரமாகும். புதிய வீடு அமையும்.

11. பூரம்: ஆலய தரிசனங்களை மேற்கொண்டு மகிழ்வீர் கள். இல்லத்தில் திருமண சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக சூழல் மகிழ்ச்சி தரும். நீண்ட நாளைய சம்பள பாக்கிகள் வந்து சேரும். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் வெற்றியாகும்.

12. உத்திரம்: பழைய கடன்கள் தீரும். அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். வியாபார நிறுவன சம்பந்தமான வழக்குகள் வெற்றியை நோக்கி நகரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் நிலவும் மனக் கசப்புகள் நீங்கும்.

13. ஹஸ்தம்: அரசாங்கத்தில் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாகும். பங்குச் சந்தை லாபம் ஈட்டித் தரும். பொருளாதார நிலை உயரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். மனம் மலரும்.

14. சித்திரை: போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். செய்தொழில், வியாபாரம், வளர்ச்சி பெறும். லாபமும் பெருகும். வீண் செலவுகளை தவிர்த்திடுங்கள். சேமிப்பு வளரும். பெண்களுக்கு ஆடை, அணிமணிகள் சேரும். சொத்து சுகங்களும் சேரும். பேச்சில் இனிமை கூடும். பிரயாணத்தின் போது உடமைகள் மீது விழிப்புணர்வு தேவை.

15. சுவாதி: குடும்ப நலம் சிறக்கும். தேகபலம் கூடும். உடல் நலம் சிறப்பாகக் காணப்படும். பொருÖளதார நிலை உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் குவியும். அரசு வகை உதவிகள் கிட்டும். வெளிïர் தொடர்புகள் ஆதாயம் அளிக்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகிடும்.

16. விசாகம்: செயல் திறன் அறிவாற்றல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மேம்பாடு உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். இல்லத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். கணவன், மனைவி உறவு இனிக்கும்.

17. அனுஷம்: பணவரவு மகிழ்ச்சி தரும். திட்டமிட்ட காரியங்களில் ஒன்றிரண்டு நிறைவேறும். குலதெய்வ கோவிலுக்கு நிதி உதவி செய்து மகிழ்வீர்கள். வெளிïர், வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயங்களை கொண்டு வரும். பெண்களுக்கு நகை நட்டுகளில் முதலீடு உண்டாகும். சேமிப்பு வளரும்.

18. கேட்டை: பரிசுகள், பாராட்டுக்கள் குவியும் வாரமிது. கேளிக்கை உல்லாசங்களில் மனம் ஈடுபடும். பெண்களால் அவமானம் ஏற்படக்கூடும் உஷார். கலைஞர்கள் வெற்றிபடியில் ஏறுவார்கள். பெண்களுக்கு அசையாத சொத்துக்கள் சேரும். வியாபாரத்தில் வருமானம் வளரும்.

19. மூலம்: சவாலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வும், இடமாற்றமும் விரும்பியபடி அமையும். பெண்களுக்கு புதிய ஆடை, அணிமணிகள் அலங்காரப் பொருட்கள் குவியும்.

20. பூராடம்: உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். பெயர், புகழ், கவுரவம், செல்வாக்கு உயரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். கடல் கடந்து சென்று ஜீவிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவர். சிறு பிரயாணம் லாபம் தரும். பழைய கடன்கள் தீரும். பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும்.

21. உத்திராடம்: உடல் ஆரோக்கியம் சிறக்கும். நீண்ட நாள் நோய் விலகும். செல்லப் பிராணிகளிடம் சற்று தூரமாக இருங்கள். வாழ்க்கைத் துணை நலம் சிறக்கும். அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிட்டும். பணம் புரளும்.

22. திருவோணம்: கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். செய்தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகும். விளம்பர யுக்திகளை கையாண்டு செய்தொழிலில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். கலைத்துறை தொழிலாளர்களுக்கு அனுகூலமான வாரமாகும்.

23. அவிட்டம்: சினிமாக் கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். பிள்ளைகள் வழியில் ஆதாயமும், ஆனந்தமும் பெருகும். கலைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவியும். பெண்களுக்கு வண்டி, வாகனங்களில் முதலீடு உண்டாகும். மணமாகாத மங்கையருக்கு திருமண வாய்ப்புகள் கூடும். புதிய தொழில் முதலீடுகள் செய்ய ஏற்ற வாரமாகும்.

24. சதயம்: குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். ஆன்மிக பெரியோர்கள் நட்பு கிட்டும். அரசியல் துறையினர் கல்வி, விவசாயம், காவல், ராணுவத் துறையினர் ஏற்றம் பெறுவர். இனிக்கும் வாரமாகும். செய்தொழில் வியாபாரம் செழிக்கும். காதல் திருமணம் கைகூடும். பேச்சாற்றல் அதிகரிக்கும்.

25. பூரட்டாதி: உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பியபடி இடமாற்றம் பதவி உயர்வு கிட்டும். கொடுக்கல், வாங்கலில் மகிழ்ச்சிகரமான சூழலே நிலவும். பழைய கடன்கள் தீரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும். செலவுகள் குறையும். பொருளாதார நிலை உயரும்.

26. உத்திரட்டாதி: புதிய வீடு, நிலபுலங்களில் கணிசமான அளவு முதலீடு செய்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பட்டம்-பதவிகள் தேடி வரும். வியாபாரம் செய்தொழிலில் வருமானம் சீராக இருந்து வரும். ஆலய வழிபாடு மன அமைதி தரும். கணவன், மனைவி உறவு இனிக்கும்.

27. ரேவதி: தன வரவு பொருள் வரவு கூடும் வாரமிது. உத்தியோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வும் சம்பள உயர்வும் சலுகைகளும் கிட்டும். நிறைய படித்தவர்கள் மத்தியில் சாதுர்யமாகப் பேசி சாதனை படைப்பீர்கள். கல்வியில் வெற்றிகள் குவியும். திட்டங்கள் கனியும். சுக்ர பலத்தால் திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

கணித்தவர் : ஜோதிட பூஷணம் கடகம் ராமசாமி



வார நட்சத்திர பலன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 30, 2012 7:30 am


நட்சத்திர பலன்கள் - 29-9-2012 முதல் 5-10-2012 வரை



1. அஸ்வினி : பணப்புழக்கத்தில் நிலவிய தடைகள் நீங்கும். வீடு, நிலபுலன்கள் வகையில் லாபகரமான போக்கு தென்படும். பங்குச் சந்தை முதலீடுகள் லாபம் தரும். உடல் நலம் சிறப்பாக இருந்து வரும். வளர்ச்சி அதிகரிக்கும் வாரம் இது.

2. பரணி : பிள்ளைகள் செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். அனாவசியச் செலவுகள் தவிர்க்கப்படும். பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும். ஸ்ரீமகாலட்சுமி வழிபாடு கடன் முற்றிலும் தீர வழி வகுக்கும். வாழ்வில் வசந்தம் வீசும்.

3. கார்த்திகை : செய்தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டுத் தொழில் ஏற்றம் தரும். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் வெற்றியாகும். பழைய கடன்கள் தீரும். சுபச் செலவுகளுக்காக புதிய கடன் முளைக்கும்.

4. ரோகிணி : உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக சூழ்நிலை மகிழ்ச்சிகரமாகக் காணப்படும். திருமண வயதை எட்டிய ஆண்கள், பெண்களுக்கு திருமண பாக்கியம் கை கூடும். கணவன், மனைவியிடையே குதூகலம் கூடுதலாகும். எதிர்பார்த்த பணம் வந்து பையை நிரப்பும்.

5. மிருக சீரிடம் : பங்குச் சந்தை முதலீடுகள் லாபம் தரும். கலைத்துறையினர், பொதுத்துறையினர், அரசியல், விவசாயத் துறையினர்கள் ஏற்றம் பெறும் இனிய நல்வாரமாகும். கடிதப் போக்குவரத்து, ஒப்பந்தங்கள் அனுகூலமாக அமையும். பணம் புரளும்.

6. திருவாதிரை : உள்ளத்தில் உறுதியும், செயல்பாடுகளில் நேர்மையையும் கூட்டும் இனிய நல் வார மாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் விரும்பிய வண்ணம் கிட்டும். வி.ஐ.பி.க்கள் ஆதரவு பெருகும். சேமிப்பு வளரும். செய்தொழில் சீராக இருந்து வரும்.

7. புனர்பூசம் : இந்த வாரம் உங்கள் தேகபலம் கூடும். முகப்பொலிவு அதிகரிக்கும். மகிழ்ச்சி பெருகும். குற்றால அருவிபோல பணமழையில் நனைவீர்கள். புதிய ரக வாகனங்களில் முதலீடு செய்து மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

8. பூசம் : கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகையாகும். பேச்சில் கனிவும், நிதானமும் தேவை. உங்களின் முயற்சிக்கு முன்னேற்றத்திற்கு உண்டான தடைகள் விலகும். எதிலும் வெற்றி வாகை சூடி மகிழும் வாரமாகும்.

9. ஆயில்யம் : கணவன், மனைவி உறவு சந்தோஷகரமாக இருக்கும். இருவரும் ஜோடியாக உல்லாசமாக வெளியே போய்வரக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும் இனிய வாரமாகும். வீடு, மனை, ஸ்திர சொத்துக்களில் நிலவும் தொந்தரவுகள் விலகும். கடன் தீரும். மகிழ்ச்சி பொங்கும்.

10. மகம் : செய்தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி தனவரவுகள் உண்டாகும். கணவன், மனைவியிடையே இணக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் ஒரு சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிட்டும். பெரியோர்கள் ஆசி, பிரபுக்கள் நேசம் உண்டாகும்.

11. பூரம் : கடன் கச்சைகள் தீரும். கணவன், மனைவி உறவு இனிமையாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் லாபகரமாக இருக்கும். மனோபலம் கூடும். தன்னம்பிக்கை வளரும். செய்தொழில், வியாபாரத்தில் பொது ஜன ஆதரவு அதிகமாகும். இல்லத்தில் சுபவிசேஷங்கள் உண்டாகும்.

12. உத்திரம் : உத்தியோகஸ்தர்களின் கை ஓங்கி இருக்கும். அதிகாரிகளுடைய ஆதரவு உண்டு. வேலைத் திறமையிலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். கணவன், மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும். ஒருவித பரபரப்பும், படபடப்பும் இருந்து வந்தாலும், ஆரோக்கியம் சிறப்பாகும்.

13. ஹஸ்தம் : காரிய சாதனைக்கு உண்டான நெருக்கடியான சூழ்நிலைகள் விலகும். வரவேண்டிய கணிசமான தொகைகள் வந்து சேரும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விஸ்தரிக்க வழி பிறக்கும். கல்வித்துறையினர், விவசாயிகள், அரசியல் துறையினர் ஏற்றம் பெறுவர்.

14. சித்திரை : உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக சூழலில் டென்ஷன் காணப்பட்டாலும், அது சூரியனைக் கண்ட பனி போல விலகிடும். கூட்டுத் தொழில் ஏற்றம் தரும். கலைஞர்கள், நகை, ஜவுளி வியாபாரிகளுக்கு லாபகரமான வாரம். முயற்சிகள் பலிதமாகும்.

15. சுவாதி : சேமிப்பு வளரும். விடாமுயற்சி, தன்னம்பிக்கை மன உறுதி கூடும் இனிய வாரமாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். செய்தொழில், வியாபாரத்தில் நிலவும் மந்தமானப் போக்கு விலகும். மின் துறையினர், பிளாஸ்டிக் வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள்.

16. விசாகம் : பணப்புழக்கம் சீராக இருந்து வரும். செய்தொழில் வியாபாரம் சிறப்பாக நடந்தேறும். உடல் நலம் சிறக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். பெண்களுக்கு ஆடை ஆபரணங்கள், அணிமணிகள் சேரும். குளிகை கால வேளையில் பைரவர் வழிபாடு நலம் தரும்.

17. அனுஷம் : உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் விலகிடும். ராகுதெசை நடப்பவர்கள், துர்க்கையை வழிபட்டு வர நலம் பல உண்டாகும். பணப்புழக்கம் சரளமாகும்.

18. கேட்டை : இந்த வாரம் கடன் தொல்லை தராது. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். கணவன், மனைவி உறவு இனிமையாக இருக்கும். பக்தி ரசம் பருகுவீர்கள். கணவன், வழி பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மகிழ்வீர்கள். விருந்து, விழா என இவ்வாரம் கழியும்.

19. மூலம் : பகையும், நட்பாய் வளரும். கடிதப் போக்குவரத்து ஒப்பந்தங்கள் பயண முயற்சிகளில் முன்னேற்றமானப் போக்கு தென்படும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிட்டும். அரசு வகை காரியங்கள் அனுகூலமாக அமையும்.

20. பூராடம் : வீடுகட்டும் முயற்சியில் இறங்கி வெற்றி பெறுவீர்கள். வாடகை வீட்டில் இருப்போர் வேறு இடம் செல்ல இனிய நல்வாரமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வர வேண்டிய சம்பள பாக்கிகள் வந்து சேரும். விஐபிக்களின் நட்பு கிட்டும்.

21. உத்திராடம்: கடன் தொல்லை அகல சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு நலம் தரும். வேலை தேடும் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ப உத்தியோகமும், கை நிறைய சம்பளமும் கிட்டும். அக்கம் பக்கத்தில் பலரும் உதவிக்கரம் நீட்டுவார்கள். இந்த வாரம் முழுவதும் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

22. திருவோணம் : போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். மண், மனை கட்டிடங்களில் முதலீடு உண்டாகும். பொன்னும், பொருளும் உங்களை தேடிவரும். பிறரை வசீகரிக்கும் ஆற்றல் உண்டாகும். வி.ஐ.பி.க்கள் நட்பு கிட்டும். தேக நலம் சிறக்கும். தெய்வ பலம் கூடும்.

23. அவிட்டம் : பெண்களுக்கு தங்கள் பெயரில் மண், மனை கட்டிடங்கள் அமையும். உடல் ஆரோக்கியம் குறைவு பட்டாலும் செயல்பாடுகளில் கம்பீரம் குறையாது. பணபலமும், படைபலமும் கூடும். குடும்ப குழப்பங்கள் தீரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் சிறப்பாக இருந்து வரும்.

24. சதயம் : எதிர்ப்புகளைச் சமளித்து வெற்றி நடைபோடுவீர்கள். உங்களை விட்டு பிரிந்தவர்கள் இப்போது உங்களை வந்து அண்டுவார்கள். தன்வந்த்ரி வழிபாடு தேகபலத்தை கூட்டும். முதலாளிகள் தொழிலாளர்களின் போக்கில் கவனம் செலுத்த லாபம் பெருகும். வி.ஐ.பி.க்களின் ஆதரவு கிட்டும்.

25. பூரட்டாதி : பெண்களுக்கு குடும்ப சுமை கூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியாகும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அனுகூலமாக இருந்து வரும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்ற முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

26. உத்திரட்டாதி : பெண்கள் வெளிïர் பிரயாணத்தின் போது முகம் தெரியாதவர்களுடன் நட்புறவை தவிர்த்திடுங்கள். பணம் கேட்ட இடத்தில் கிடைக்கும். கடன் தொல்லை உண்டாகும். வெளிநாட்டு பயண முயற்சிகள் வெற்றி தரும்.

27. ரேவதி : கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் குவியும். இல்லத்தில் சுபச்செலவுகள் கூடுதலாகும். வியாபார நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரும். பணப்புழக்கம் சரளமாகும். வண்டி, வாகனங்களை கையாளும் போது கவனம் தேவை.



வார நட்சத்திர பலன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2012 11:08 am

நட்சத்திர பலன்கள் 6.10.2012 முதல் 12.10.2012 வரை


1. அஸ்வினி: நீங்கள் இவ்வாரம் முழுவதும் மிகவும் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வி.ஐ.பி.க்களின் நட்பு கிட்டும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து வரும். செய்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கணவன், மனைவி உறவு இனிமையாக இருக்கும்.

2. பரணி: புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். அச்சுத் தொழிலாளர்கள், மருத்துவத் துறையினர், ஆர்ட்டிஸ்ட்டுகள், திரைப்படத் துறையினர் புகழ் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றம் கிட்டும்.

3. கார்த்திகை: உடல் ஆரோக்கியம் சிறக்கும். தேகபலம் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் திருப்திகரமானப் போக்கு தென்படும். செய்தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். பணம் புரளும்.

4. ரோகிணி: பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இனிய வாரமாகும். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். மூத்தோர்கள் குடும்பத்தில் உதவிகரமாக இருந்து வருவார்கள். காது, மூக்கு, தொண்டை நோய் உள்ளவர்கள் தக்க மருத்துவ ஆலோசனைப்படி நடப்பது நலம் தரும். பணப்புழக்கம் சரளமாகும்.

5. மிருக சீரிடம்: எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதனை ஈஸியாக எடுத்துக் கொண்டு சமாளித்து முன்னேறக் கூடிய வாரமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிட்டும். தேவைக்கு ஏற்ப பணம் புரளும். செல்வம், புகழ், அந்தஸ்து தேடிவரும் காலமாகும்.

6. திருவாதிரை: இந்த வாரம் உங்கள் பேச்சிலே இனிமை சொட்டும். வாக்கு வன்மை அபாரமாக இருந்து வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கையிலே காசு புரளும். தாய்வழி உதவி கிட்டும். உடன் பிறப்புகள் அனுகூலமாக இருந்து வருவார்கள்.

7. புனர்பூசம்: முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன், மனைவி உறவிலே கொள்ளையின்பம் கொட்டிக் கிடப்பதால் இன்ப லாகிரியில் மூழ்கித்திளைப்பீர்கள். புகழ், கவுரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். சேமிப்பு வளரும். செய்தொழில் சிறக்கும்.

8. பூசம்: உங்களின் நட்சத்திர நாதனின் சார சஞ்சாரம் அனுகூலமாகக் காணப்படுவதால் காரியங்கள் வெற்றியாகும். நீண்ட நாள் வியாதியஸ்தர்களுக்கு நோயிலிருந்து நிவாரணம் கிட்டும். பெண்களுக்கு ஆடை, அணிமணிகள் புதிய டிசைன்களில் சேரும்.

9. ஆயில்யம்: அரசாங்க தொழிலில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்துறை பெருக்கெடுத்து லாபங்கள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு மேன்மை உண்டாகும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி கிட்டும். குழந்தைகளிடம் அன்பும் பாசமும் பொங்கி வழியும்.

10. மகம்: உங்களின் நட்சத்திர நாதன் பலம்பெற்றுக் காணப்படுவதால் தொழில், உத்தியோகம் ஏற்றம் பெறும். வியாபாரத்துறை பெருக்கெடுத்து லாபங்கள் அதிகரிக்கும். கணவன், மனைவி உறவில் இனிமை கூடும். கடிதச் செய்தி, ஒப்பந்தங்கள் வெற்றியாகும்.

11. பூரம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சினைகள் தீரும். சுபச்செலவுகள் இல்லத்தில் அதிகரிக்கும். நட்பு வட்டம் நேசக்கரம் நீட்டும். வம்பு வழக்குகளில் சாதகமான நிலை உருவாகும். பங்குச் சந்தையில் லாபம் கிட்டும்.

12. உத்திரம்: பிடிவாத குணத்தை தளர்த்தி, செயல் திறனில் நேர்மையை கடைபிடித்தால், இந்தவாரம் நீங்கள் திட்டமிட்ட காரியங்களில் உங்களுக்கு வெற்றி நிச்சயம். மருத்துவ செலவுகள் குடும்பத்தில் கட்டுக்கடங்கி இருக்கும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்கள் சேரும் நல்வாரமாகும்.

13. ஹஸ்தம்: வியாபார அபிவிருத்திக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவி உறவில் இனிமை கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த மாறுதல் கிட்ட பிரதோஷ வேளை வழிபாடு நலம் நல்கும். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். பணம் நடமாட்டம் உண்டு.

14. சித்திரை: வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய சுகபோக பாக்கியங்கள், வீடு, வாகன, ஆடை ஆபரண யோகங்கள், செல்வாக்கு, அந்தஸ்து, கீர்த்தி, புகழ் அத்தனையும் அடையக் கூடிய வாரமாகும். பயண முயற்சிகள் வெற்றியாகும். ஒப்பந்தங்கள் கனியும்.

15. சுவாதி: நட்பு வட்டம் பணம் கேட்டு நச்சரிக்கும். செய்தொழில் வியாபாரம் செழிக்கும். படித்த இளைஞர்கள், பெண்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். கூட்டு வியாபார முயற்சி வெற்றி தரும். இல்லத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

16. விசாகம்: இந்த வாரம் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். தேகபலம் கூடும். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் கிட்டும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை வளரும். குதூகலம் கூடுதலாகும். அழகு சாதனங்கள், ஜவுளி, நகை வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள்.

17. அனுஷம்: செய்தொழில் வியாபாரத்தில் அலைச்சல் திரிச்சல் இருந்து வந்த போதிலும் வருமானக் குறைவு உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக சூழல் மகிழ்ச்சி தரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். எண்ணங்கள் ஈடேறும். பணப்புழக்கம் சரளமாகும்.

18. கேட்டை: தேக பலம் கூடும். உடல் நலன் சிறக்கும். முக வசீகரம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் இனிமை பிறக்கும். செய்தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகும். லாபமும் திருப்திகரமாக இருந்து வரும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிட்டும்.

19. மூலம்: இன்சூரன்ஸ், பாகப்பிரிவினை உயில் மூலம் பணம் கிட்டும். சொத்தும் கிட்டும். மருத்துவ செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து வரும். மூட்டுவலி தீரும். நீண்ட தூர யாத்திரை பயணம் வெற்றி முகமாகும். காதல் கனியும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் கை கூடும்.

20. பூராடம்: நீங்கள் எங்கும் எதிலும் வெற்றி காண்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். விருந்து செலவுகளுக்கும் குறையேதும் இல்லை. பங்குச் சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் தள்ளிப்போகும். வியாபாரம் செழிக்கும். பண நடமாட்டம் உண்டு.

21. உத்திராடம்: விரோத சக்திகள் விலகி ஓடும். நற்பலன்கள் மிகுந்து காணும் இனிய வாரமாகும். எதிலும் புத்திசாலித்தனம் முன் நிற்கும். செய்தொழில், வியாபாரம் சிறப்பாகக் காணப்படும். எதிர்பார்த்தபடி லாபமும் கிட்டும். குடும்ப நலனில் நிறையே தான் காண்பீர்கள். குறையொன்றும் இல்லை.

22. திருவோணம்: பொருளாதார சிக்கல்கள் தீரும். தடைபட்டு வந்த திருமண சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். விலகிச் சென்றவர்கள் வந்து ஒட்டிக் கொள்வார்கள். கவுரவம், பண பலம் உயரும். முதலாளி, தொழிலாளி உறவில் ஒற்றுமை ஓங்கி வளரும். கணவன், மனைவி உறவு இனிக்கும்.

23. அவிட்டம்: பண வரவு சரளமாகும். குடும்ப நலன் சீராக இருந்து வரும். உத்தியோகஸ்தர் களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிட்டி மகிழ்வார்கள். வெளிநாட்டு பயண முயற்சிகள் வெற்றியாகும். நட்சத்திர நாதனின் சஞ்சாரம் அனுகூலமாகக் காணப்படுவதால் சுபீட்சம் கூடுதலாகும்.

24. சதயம்: செய்தொழில் வியாபாரத்தில் செழிப்பு காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். பண பலம் படை பலம் கூடும். கொடுக்கல் வாங்கல் சீராக இருந்து வரும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும்.

25. பூரட்டாதி: திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மகிழ்ச்சிக் கடலில் மிதப்பீர்கள். செய்தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரித்துக் காணும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாற்றமும் கிட்டி மகிழ்வார்கள். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றிகள் குவியும்.

26. உத்திரட்டாதி: செய்தொழில், வியாபாரம், போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பீர்கள். தேகபலம் கூடும். உடல் நலம் சிறக்கும். வி.ஐ.பி.க்களின் நட்பும் ஆதரவும் கிட்டி மகிழ்வீர்கள். சினிமாக் கலைஞர்களுக்கு காரியங்கள் வெற்றி முகமாகும்.

27. ரேவதி: கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். பழைய பாக்கிகளும் வந்து சேரும். பங்குச் சந்தை லாபம் தரும். வித்தைகளில் அபிவிருத்தி, காரிய வெற்றி ஏற்படும். வீண் விரயங்கள், மனஉளைச்சல், பொருள் சேதம் தோன்றி மறையும். கணவன், மனைவி உறவில் இனிமை கூடும்.

கணித்தவர்: `ஜோதிட பூஷணம்' கடகம் ராமசாமி



வார நட்சத்திர பலன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 06, 2012 6:34 pm

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றம் கிட்டும்.
இடமாற்றமுனா எப்படி சீட்டை மாத்தி உக்கார வச்சுடுவாங்கலோ எப்படியோ வெளியில தூரத்தாம இருந்தா சரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வார நட்சத்திர பலன்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 6:48 pm

balakarthik wrote:
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றம் கிட்டும்.
இடமாற்றமுனா எப்படி சீட்டை மாத்தி உக்கார வச்சுடுவாங்கலோ எப்படியோ வெளியில தூரத்தாம இருந்தா சரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இது சேட்டை என்பார்கள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக