புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 13%
Barushree
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 13%
kavithasankar
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
2 Posts - 3%
prajai
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
2 Posts - 3%
Barushree
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 1%
Shivanya
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_m10டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 13, 2012 8:29 am

டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Ms06


இலங்கை தமிழர் பிரச்சினையில், நான் காணும் கனவு நிறைவேறும் வரை அனைவரையும் அரவணைத்துப் போராடுவேன் என்று சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு

ஈழத்தமிழர்களின் இனிய விடியலை காண்பதற்காக களத்தில் நின்றும், தியாக வேள்விகள் புரிந்தும், உயிருற்ற கல்லறைகளாக மாறிவிட்ட மாவீரர்களாம் தியாக தங்கங்களுக்கு என் வீர வணக்கத்தைச் செலுத்தி இந்த உரையைத் தொடங்குகிறேன்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்புக்காக இங்கு மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் டெசோ தொண்டர்கள், செயலாளர்கள் ஊருக்கு ஊர் சென்று ஆங்காங்கே நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டங்களிலே ஈழத்தமிழர்களின் அவலநிலை, அவர்களுக்கு நாம் தர வேண்டிய பாதுகாப்பு, அவர்களுக்கு நாம் நீட்டவேண்டிய உதவிக்கரம் பற்றி பேசி, அவர்களுக்கு பேராதரவை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசுக்கு அழுத்தம்

நாம் இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்று இங்கு பேசிய தலைவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டார்கள். காலையில் பேசியவர்களும், வெளிநாட்டில் இருந்து வநëதவர்களும், நண்பர்களும் எடுத்துரைத்தார்கள். மாலையில் பேசிய திருமாவளவன், இலங்கை பிரச்சினையில் இந்திய அரசுக்கு அழுத்தத்தைத் தர வேண்டும் என்று பலமுறை இங்கே எடுத்துரைத்தார்.

நான் அவருக்கு ஒன்றை சொல்வேன். அண்டை நாடான இலங்கையில் அமைதியும், சமத்துவமும் நிலவுவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகளை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளை பாதுகாத்து வரும் இந்திய அரசு, அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏனென்ற கேள்வி தமிழர்கள் மனதில் எழுந்துள்ளது என்பதை இந்த மாநாடு இந்திய அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.

முதலில் காயத்திற்கு மருந்து

எனவே, இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி, ஈழத்தமிழ் மக்கள் அரசியல் பொருளாரம், பண்பாட்டு உரிமைகளை பெற்றெடுத்து சமத்துவம், அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முழுமூச்சோடு செயல்பட வேண்டும்.

அந்த தீர்மானத்தின் இறுதியாக, இலங்கையில் உள்ள தமிழர்கள், தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்க இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. இதைவிட இந்திய அரசுக்கு வேறு என்ன அழுத்தத்தை கொடுக்க முடியும்? என்று எனக்குப் புரியவில்லை. இதுதான் சரியான அழுத்தம் என்று சொன்னால், அதை ஏற்றுக் கொண்டு இந்த தீர்மானத்தை மேலும் வலுவானதாக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தீர்மானத்திற்கு வலுசேர்க்க...

ஆனால், இந்த தீர்மானத்தை வைத்துக் கொண்டே இந்திய அரசுக்கு நம்மால் அழுத்தம் கொடுக்க முடியும். இந்த தீர்மானமே இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானம்தான் என்பதை திருமாவளவன் உணர்வார். மற்றவர்களும் இதை மிக நன்றாக உணர்வார்கள் என்று கருதுகிறேன். ஆகவே, இன்றைக்கு நிமëமதியான, இனிமையான வாழ்வு பெற இன்றைக்கு இடுகாட்டு சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவர்களைப் போல இருக்கின்ற வாழ்க்கையில் இருந்து விடுபட வீரமணி மற்றும் நண்பர்கள் எல்லாம் எடுத்து சொன்னதைப் போல் இந்த மாநாட்டின் வெற்றி, இந்த மாநாட்டில் எவ்வளவு பேர் கூடினார்கள்? மாநாடு எத்தனை நாள் நடைபெற்றது? எவ்வளவு மணி நேரம் நடைபெற்றது? என்பது அல்ல. இந்த மாநாட்டினுடைய வெற்றி, உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் அறிந்து உணர வேண்டும்.

நாம் இந்த தீர்மானத்தின் மூலம் ஒவ்வொருவரும், தமிழ் ஆர்வம் உள்ள அத்தனை பேரும், ஈழத்தமிழர்கள்பால் அன்பு கொண்ட அத்தனை பேரும், இரக்கம் கொண்ட அத்தனை பேரும் அழுத்தம் கொடுத்து இந்த தீர்ëமானத்திற்கு வலு சேர்ப்பார்களேயானால், நாம் காணுகின்ற கனவு நிச்சயமாக நிறைவேறும்.

டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Ms05

நான் காணும் கனவு

இலங்கையில் இருக்கும் அல்லல், உடனடியாக தீரும். ஒரே ஈழநாடு பெற வேண்டும் என்று கேட்டீர்களேயானால், அவர்களுக்கு சொல்லுகின்ற ஒரேயொரு சமாதானம் என்னவென்றால், முதலில் காயம்பட்டுக் கிடப்போரை, ரணத்தை, காயத்தை ஆற்ற அவர்களை உயிர் பிழைக்க முதலுதவி தேவைப்படுவதைப் போல, டெசோ மாநாட்டின் மூலமாக தேவையான முதலுதவிகளை எல்லாம் இலங்கை தமிழர்களுக்கு நாம் செய்ய வேண்டும். நாம் அவற்றை செய்யத் தொடங்கி இருக்கின்றோம்.

அதைத் தொடர்ந்து நான் அடிக்கடி சொல்வதைப்போல, என்னுடைய வாழ்நாளில் நான் கண்டு கொண்டு இருக்கின்ற, நிறைவேறாத கனவு, அந்த கனவு நிறைவேறுகின்ற வரையில் உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு போராடுவேன். நிச்சயமாக போராடுவேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

மாநாட்டில் மத்திய மந்திரிகள் எஸ்.ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்திச்செல்வன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், புலவர் இந்திரகுமாரி, நடிகை குஷ்பு, கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

`டெசோ' ஆய்வரங்கம்

முன்னதாக, நேற்று காலை சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்டு மெட்ரோபாலிடன் ஓட்டலில் `டெசோ' மாநாடு தொடர்பான ஆய்வரங்கம் நடந்தது.

இந்த ஆய்வரங்கத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, டெசோ உறுப்பினர் சுப.வீரபாண்டியன், சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால் யாதவ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

பங்கேற்றவர்கள்

ஆய்வரங்கத்தில், மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஜெகத்ரட்சகன், காந்திச்செல்வன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், எ.வ.வேலு, பொன்முடி, தேசிய மாநாட்டு கட்சியின் பொது செயலாளர் எஸ்.டி.சாதிக் எம்.பி., தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகி கோவிந்த்ராவ் ஆதிக், ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகி கே.சி.தியாகி, நவசமா சமாஜ கட்சியின் தலைவர் டாக்டர் விக்ரமபாகு கர்ண ரத்தினே.

சர்வதேச பொது மன்னிப்பு சபை இந்திய தலைவர் அனந்த பத்மநாபன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, நைஜீரியா, ஸ்வீடன், நார்வே, மொராக்கோ, துருக்கி, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

3 மணி நேர ஆய்வரங்கம்

காலை 10.15 மணிக்கு தொடங்கிய ஆய்வரங்கம் மதியம் 1.15 மணி வரை, தொடர்ந்து 3 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொரு பிரதிநிதிகளும், ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கான தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

முன்னதாக, ஆய்வரங்கத்தை தொடங்கிவைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.

`டெசோ' மாநாட்டில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை பங்குபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இரு அமைப்புகளும் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி



டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 9:57 am

போர் நடந்த போது இப்படி ஒரு மாநாட்டையும் , ராஜினமாவையும் நடத்த தவறிய இனத்துரோகி நீங்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம் .. இனி எத்துனை மாநாட்டை நடத்தினாலும் அது மாறப்போவதில்லை ...

பிரபாகரன் தான் தமிழ் இனத்தலைவர் , நீங்கள் தமிழ் இனத்துரோகி அது என்றைக்கும் மாறாது ..


வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Aug 13, 2012 1:30 pm

"
அதைத் தொடர்ந்து நான் அடிக்கடி சொல்வதைப்போல, என்னுடைய வாழ்நாளில் நான் கண்டு கொண்டு இருக்கின்ற, நிறைவேறாத கனவு, அந்த கனவு நிறைவேறுகின்ற வரையில் உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு போராடுவேன். நிச்சயமாக போராடுவேன்"

"அடுத்த 4G ஊழல் முடிந்தவுடன்" என் மக்களை (மகளை) காப்பாற்ற " உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு போராடுவேன். நிச்சயமாக போராடுவேன்"




டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு Signaturexn
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக