புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
115 Posts - 75%
heezulia
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
Pampu
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
280 Posts - 76%
heezulia
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_m10சிங்களமொழி உருவானது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்களமொழி உருவானது எப்படி?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 02, 2012 12:41 pm

மொழியியல் ஆராய்ச்சியின்படி சிங்களம் திராவிட இனமொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் மொழி இயலாளர் எச்.எஸ். டேவிட் (டேவிட் 1981-இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமுற்றவர்). (1)*
"சிங்களம் இலங்கைத் தீவில் பேசப்பட்டதை கி.மு. 2000-த்துடன் இணைக்கலாம். அப்போது அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை; பேச்சு வழக்கில் மட்டுமே அம்மொழி இருந்தது. அந்தப் பேச்சு வழக்கோ ஆதிகால திராவிட இன மொழிக் குடும்பத்தில் பிறந்தது. அப்படிப் பிறந்தனவே தமிழ், சிங்கள மொழிகள்'' என்கிறார். மொழியியல் அறிஞர் ஆக்ஸிமோரன் (Oxymoron).(2)* இவ்வாறு ஆக்ஸிமோரன் கூறியிருந்தாலும் அண்மைக்கால வரலாற்று மொழியியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூற்றுப்படி சிங்கள மொழி பெருவழக்காக கி.பி. 800}900ல் பேச்சு மொழியாக எழுந்ததாகக் கொள்ளலாம்.

பழந்தமிழர் இலக்கியங்களில் இலங்கை "ஈழம்' என்றே குறிப்பிடப்படுகிறது. ஈழு என்ற திராவிட மொழியிலிருந்து ஈழம் பிறந்தது. இம்மொழியே இப்பொழுது "எலு' என்ற மொழி. தமிழுக்கும் முந்தைய திராவிட மொழியாகும்; இது திருந்தாத பேச்சு வழக்கு மட்டுமே உள்ள மொழியாகும். இதற்கு இலக்கியமோ, இலக்கணமோ கிடையாது.

இப்படிப் பழந்தமிழ் வடிவம் இங்கு வழக்கில் இருந்தபோதுதான் புத்தமதம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையில் நுழைகிறது. அப்போதுதான் பாலி மொழி இலங்கைக்குள் அடியெடுத்து வைக்கிறது. பேச்சு வடிவத்தில் இருந்த ஈழமொழியின் மீது பாலியும் சம்ஸ்கிருதமும் ஆதிக்கம் செலுத்த, இந்த ஆதிக்கத்தின் விளைவால் உருவான கலப்பு இன மொழியே சிங்கள மொழியாகும். அதனாலேயே தமிழ்மொழியில் உள்ள அநேக சொற்கள் சிங்களத்திலும் கலந்து இன்று வரை பேசப்பட்டு வருகின்றன.

தமிழ்தேவி, சோழமக்கள், அன்னியக்கரை, மறுகரை போன்றவை மகாவம்சத்தில் காணப்படும் தமிழ்ச் சொற்களாகும். (3)*
கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆதிக்கத்தில் இலங்கை வந்த பிறகே சிங்களமொழிக்கென எழுத்து வடிவம் கிடைத்தது என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.

தமிழர்கள் புத்த மதத்துக்கு தீராத விரோதிகளாக என்றும் இருந்ததில்லை. அவரவர் தத்தமது மதக் கொள்கையை கடைப்பிடித்து வந்தனர் என்பதற்கும் சான்றுகள் இலங்கையில் மட்டுமல்ல; தென்னிந்தியாவிலும் உண்டு. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும், சீவகசிந்தாமணியும் புத்தமத்தை உயர்த்திப் பிடித்திருக்கின்றன. இலங்கையிலோ தமிழர்களும் புத்த மதப்பீடத்தில் தலைமைக் குருமார்களாக பொறுப்பு வகித்து சிறப்பித்திருக்கிறார்கள். புத்த மடாலயத் தலைவர்களாக இருந்த தமிழர்கள்:
சங்கமிதா - 4-ஆம் நூற்றாண்டு
புத்தமித்ரா - 5-ஆம் நூற்றாண்டு
வஜ்ரபோதி - 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்.
அனுராதா - 12-ஆம் நூற்றாண்டு
தர்மகீர்த்தி - 12-ஆம் நூற்றாண்டு
மற்றும் குபலன்கா - 13-ஆம் நூற்றாண்டு.
மேலும் திக்கநாகர், (வட இந்திய நாளந்தா பல்கலைக்கழகத்தில்) தர்மபாலா போன்ற தமிழர்கள் புத்த பீடத்திற்குத் தலைவர்களாகத் தங்களது பங்கினை விரும்பி அளித்திருக்கிறார்கள்.

போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்தபோது இருந்த கோட்டை மன்னனின் ஆட்சிப் பகுதியில் தமிழர்கள் நிறையப் பேர் வசித்ததாகவும், மேற்கு, வடமேற்கு ஆட்சிப் பகுதியில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களைக் கண்டதாகவும், நிர்வாகத்தில் கூட அவர்கள் பங்கேற்றிருந்ததாகவும் போர்த்துக்கீசியக் குறிப்புகள் கூறுகின்றன.

இன்றைய சிங்கள வரலாற்று ஆசிரியர்களோ இலங்கையின் வரலாற்றை, தமிழர்-சிங்களவர் ஆகியோரின் பகைமையை அவ்விரு இனங்களும் போரிட்டுக் கொண்டே இருந்த வரலாறாகவே உள்ளது என்று திரித்து எழுதுகின்றனர். மேலும் வரலாற்றில் தமிழர்களின், தமிழ் மக்களின் கலாசாரப் பங்களிப்பை அதன்மூலம் கிடைத்த மேன்மையை இழிவுபடுத்தி, குறைத்து மதிப்பிட்டு அல்லது மறைத்துவிடும் முயற்சியில் இலங்கையின் வரலாற்றை அவர்கள் சித்திரிக்கின்றனர்.

இது மன்னராட்சிக் காலத்தில் தங்களது மதமான புத்த மதத்தின் மேலாண்மை வீழ்ந்தது என்ற கருத்துக் கொண்டு மதவாதிகளின் உள்ளங்களில் ஏற்பட்ட கருத்துக் குழப்பமாகும். (4)*
மகாவம்சத்தையும் புத்தமத தத்துவத்தையும் விவாதிக்கையில் மூன்று நம்பிக்கைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
(1) ஆரிய இனம் என்ற நம்பிக்கை; சிங்கள மொழி பேசும் மக்கள் இனரீதியாக ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற நம்பிக்கை.
(2) சிங்கதீவு~விஜயன் என்ற மன்னன் இலங்கைத் தீவில் அடியெடுத்து வைத்து ஆட்சியை நிலைநாட்டுவதற்கு காரணமானவன் என்ற மூட நம்பிக்கை.
(3) தர்மதீவு~புத்தரின் இலங்கையோடு உள்ள அவரது சிறப்பான உறவு பற்றிய மூட நம்பிக்கை. (5)*

இவை யாவும் தவறான தத்துவங்களின் மேல் எழுந்த நம்பிக்கைகள் ஆகும். இவை ஏன் எழுப்பப்பட்டன? கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இலங்கையில் வடபகுதியைத் தமிழர்கள் கைப்பற்றி ஆண்டபோது வெறுப்புற்ற புத்த மதவாதிகளால் தோற்றுவிக்கப்பட்ட பொய்யான கருத்துக்களே இவை. அப்போது உறுதியான தேசியத் தத்துவம் எதையும் புத்தர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களின் தனித் தன்மைக்கு ஒரு தத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கையில் இது பிறந்தது. (6)*

இதன் மூலம் "இன மேலாண்மை, நாகரிகப் புகழ்பாடுதல், ஆரிய இனத்துடன் சிங்கள இனத்தை இணைத்த கடந்த காலத்துதி, புத்த கலாசார நம்பிக்கை முதலியவற்றை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்' என்று வரலாற்று ஆய்வாளர் டாக்டர் குமாரி. ஜெயவர்த்தனே குறிப்பிடுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், வரலாற்றைப் பொய்யாக்கி, தொன்று தொட்டு வாழ்ந்தவரைத் தாழ்ந்தவராக்கி, பெரும்பான்மைத் திமிராலும், அதிகார சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஆணவத்தாலும் தமிழர்கள் உரிமைக்கு உலைவைத்து, உயிருக்கு விலைவைத்து, உடமைக்குத் தீவைத்து, தமிழ் இனத்தையே பூண்டோடு அழித்து வரும் கொடுமையான நிலைமை திடீரென்று குதித்து விடவில்லை. படிப்படியாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டம் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால், வரலாற்றில் இந்த ஒழிப்பு முறைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட தமிழ் இனம் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. அந்தப் போராட்டம் இறுதி வெற்றி வரை தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழன் இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரன்~முதல் பங்குதாரன் என்ற உண்மையை கடந்த இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறு, நமக்குப் புலப்படுத்துகிறது.
*(1) (i) ‘‘The Tamil spoken in Ceylon represents a pre Pallava period with its ancient morphological and grammatical forms and its repertoire of words considered obsolete for centuries on the neighbouring continent’’
-Tamil Culture -Its past, Its present and future - By Father (Dr) Xavier S.Thanianayagam, Tamil Cultural Society -Ceylon 1955 - Page 8-9
NOTES
W.Geiger ‘‘The Mahavamsa’’ -P-165, 264
Colombo 1950
*(2) (ii) "கி.மு.2000 முந்தைய தமிழர் (இலங்கைத் தீவில் பேசப்பட்ட மொழி) சுய மொழியில் பேசினர். அப்போதைய காலத்தில் அது உருவானது. அவர்கள் ஆதிகால திராவிடர் ஆகும்'!- மொழியியலாளர் எச்.எஸ்.டேவிட்.
*(3) (iii) ""ஆதிகால திராவிடத்திலிருந்து தமிழ் சிங்கள மொழி உட்பட 20 மொழிகள் பிறந்தது'' Oxymoron- மொழி இயலாளர்.
*(4) NOTES
W. Geiger ‘‘The Mahavamsa’’-p-165, 264 Colombo 1950
*(5) ‘‘The writings of many of the Buddhist ‘patriots’ Anagarika Dharmapala, Piyadasa Sri Srisena, Battaramulle Sri Subuti, and articles in journals like the ‘‘Sinhala Jatiya’’ and Sinhala Baudhaya, abounded in claims not only that Buddhism was the only true religion, all others being mere superstitious, but the pure Aryan Singhala of the Sihadipa were the chosen race with a historic mission to preserve Buddhism in Dhammadipa and were therefore superior to the Tamils, Moors, Malayalis, Sindhis and Chettiars who were Doubly doomed as being ‘‘infidels of degraded race.’’
-Kumari Jayawardane
‘‘Revival revolt and race’’
*(6) Vijaya according to Mahavamsa was the founder of the Sinhala ‘race’ and landed in Srilanka on the day of Buddha’s death, interwoven with ‘Sihadipa’ idea; that civilization began in Srilanka with the landing of Vijaya and the founding of the Aryan Sinhala race is the ‘Dhammadipa’ concept of the special role of the Sinhalese as guardians of the Buddha Dhamma. For not only was it believed that Buddha visited Srilanka three times, but on his death bed he is also said to have asked ‘Sakra’ to protect Vijaya in his historic mission to Srilanka the land where the Damma would flourish for five thousand years. In this way were interwined the racist theory of Aryan Origin, the traditional myths of Vijaya and divinely ordained mission of the Sinhala ‘race’ to project the Buddhist religion. Racial purity and religious purity were thus, combined and the ‘Pure Aryan Sinhalese’ became the appointed guardians of the ‘Pure Doctrine’ of Buddhism.
-Dr.Kumari ஜெயவர்தனே

(ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு நூலிலிருந்து)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 02, 2012 12:54 pm

மிகவும் அருமையான கட்டுரைக்கு நன்றி சாமி மகிழ்ச்சி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Aug 03, 2012 10:51 am

சாமி wrote : சுருக்கமாகச் சொன்னால், வரலாற்றைப் பொய்யாக்கி, தொன்று தொட்டு வாழ்ந்தவரைத் தாழ்ந்தவராக்கி, பெரும்பான்மைத் திமிராலும், அதிகார சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஆணவத்தாலும் தமிழர்கள் உரிமைக்கு உலைவைத்து, உயிருக்கு விலைவைத்து, உடமைக்குத் தீவைத்து, தமிழ் இனத்தையே பூண்டோடு அழித்து வரும் கொடுமையான நிலைமை திடீரென்று குதித்து விடவில்லை. படிப்படியாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டம் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால், வரலாற்றில் இந்த ஒழிப்பு முறைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட தமிழ் இனம் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. அந்தப் போராட்டம் இறுதி வெற்றி வரை தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை.

நன்று ! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக