புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
கவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...
கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர்கள் உட்பட்ட தமிழின் மொத்த அபத்தங்களை வாயாலும், செந்திலை காலாலும் போட்டு மிதி மிதி என்று மிதித்த நாயகன். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் கூறும் நல்லுலகத்திலேயே ஏறத்தாழ 30 வருடங்கள் தனியாட்சி செய்த ஒரு மனிதர். தமிழ் சினிமாவின் லொள்ளுலக மன்னர்களாகிய சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோருக்கு லொள்ளை கற்பித்தவர், இன்றுவரை முளைக்கும் எந்த நகைச்சுவை நடிகருக்கும் மூலதனமாக உள்ளவர். ஆனால், ஒரு கலைஞன் வெளியே தெரிந்தால், அவனது கலைக்கு உள்ள பெறுமதி குறைந்துவிடும் என்கிற தனது கொள்கை காரணமாக, தன்னைப்பற்றிய சொந்த செய்திகள் எதுவும் வெளியே தெரியாது பார்த்துக்கொண்டவர். இவரது தனிப்பட்ட புகைப்படம் கூட கிடைக்க அரியதாகத்தான் இருந்துவருகிறது. ஒரே ஒரு முறை ஆனந்த விகடனுக்கு பேட்டி ஒன்று வழங்கினார், தமிழ் சினிமா லைட்டிங் தொழிலாளிகளுக்காக நிதி திரட்டும் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மற்றபடி இவர் கடவுள்போலத்தான். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.
இவரது இயற்பெயர் சுப்பிரமணி. கோயம்புத்தூர் வல்லகொண்டபுரத்தில் (கண்ணாம்பாளயம் கிராமம்) 1950இல் பிறந்தார். சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய இவர், ஒரு நாடகத்தில் ‘ஊர் கவுண்டர்’ பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததிலிருந்து கவுண்டர் என அழைக்கப்பட்டார். 1977 இல் வெளியான ‘பதினாறு வயதினிலே’ படத்தின்மூலம் இவர் தமிழ் சினிமாவுக்கு பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். அவ்ரே இவருக்கு ‘கவுண்டமணி’ என்கிற பெயரையும் வைத்தார். தனது முதல் படத்திலேயே பிரபலமானார். எண்பதுகளில் தவிர்க்கமுடியாத அங்கமாக அனைத்து திரைப்படங்களிலும் இவரது நகைச்சுவைப்பகுதி ஆகிப்போனது. தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகருக்கு வழங்கப்பட சம்பளங்களிலேயே அதிகமான தொகையான ரூபாய் 30 லட்சம் (இந்திய ரூபாய், 1985 – 90 காலத்தில்.) இவருக்கு கொடுக்கப்பட்டது. விகித அளவில் இன்று ஒப்பிட்டால், அந்தத் தொகை இனிமேல் எவருக்குமே வழங்கப்பட முடியாது. கமல், ரஜினி, மோகன் என்று அக்காலத்தின் கனவு நாயகர்கள் சிலரைத்தவிர வேறு எந்த கதாநாயகருக்குமே அந்த தொகை வழங்கப்படுவதில்லை.
கவுண்டமணி திருமணம்.
இதுவரை சுமார் 750 திரைப்படங்கள் நடித்திருக்கிறார். அதில் ராஜா எங்க ராஜா, பிறந்தேன், வளர்ந்தேன் உள்ளிட்ட 12 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். நகைச்சுவை மட்டுமல்லாது, குணச்சித்திர வேடங்களிலும், பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். கரகாட்டக்காரன், சூரியன், நடிகன், நாட்டாமை, சின்னக் கவுண்டர் போன்ற சில படங்கள் இவரது முக்கியமான சில படங்கள். செந்திலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களுமே நகைச்சுவைக்கு பஞ்சமில்லாதவை. ஹொலிவூட்டின் லாரல், ஹார்டி ஜோடிக்கு இணையானவர்கள் என இவர்கள் நோக்கப்பட்டார்கள். இவர்கள் இணைந்து 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்கள். இது ஒரு உலக சாதனை. நாயகர்களில் சத்யராஜூடன் இவர் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே எவருக்குமே ஏமாற்றமிலாது ஓடின. லொள்ளுக்கு பஞ்சமில்லாத இவர்களுடன் மணிவண்ணனும் இணைந்த படங்கள் அக்காலத்தின் அரசியல்வாதிகள், போலிச் சாமியார்கள், நல்ல சாமிகள், தொழிலதிபர்கள் அனைவரையும் பிரித்து மேய்ந்தன. கவுண்டமணியின் நகைச்சுவைப்பகுதியை பலகாலம் எழுதியவர் நாகேஷுக்கு எழுதிய ஏ. வீரப்பன். அவரது காலத்திலேயே (1998 - 2005) லொள்ளுடன் வசனரீதியான நகைச்சுவையும் கலந்து, கவுண்டமணியின் காமெடி புதிய தரத்தை அடைந்தது.
இவரது நகைச்சுவைகளிலேயே மிகவும் பிரபலமானது கரகாட்டக்காரன் படத்தில் வந்த வாழைப்பழக் காமெடி. அத்துடன் “அரசியல்லஇதெல்லாம் சாதாரணமப்பா...” போன்ற வசனங்கள் சாகாவரம் பெற்றவை. இவர் ஏற்று நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா, விஷமுருக்கி வேலுசாமி, ஐடியா மணி, அஞ்சா சிங்கம் மருதுபாண்டி போன்ற பாத்திரங்களும் பிரபலமானவை. அத்துடன் லக்கிமேன் படத்தில் எமதர்மராஜனாக வேறு வந்திருப்பார்.அந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவுடன் இவர் அடித்த லூட்டி இருக்கிறதே... அதையெல்லாம் பார்த்துவிட்டு நிஜ எமதர்மராஜன் உணர்ச்சி வசப்பட்டு, சிலுக்கை உடனடியாக தனது கஸ்டடிக்கு கொண்டுபோனதுதான் நமக்கு தெரிந்ததே!
கவுண்டமணி தனது குடும்பம் பற்றி வெளியே தெரியாது பார்த்துக்கொண்டார். தனது அம்மாவை ஆத்தா என்று அழைப்பார். வெளியே செல்லும்போது ஆத்தாவின் காலை தொட்டு வணங்கிவிட்டுத்தான் செல்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள், செல்வி, சுமித்ரா. மூத்த மகளின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
அந்தத் திருமணத்திலிருந்து சில காட்சிகள்...
செந்திலுடன்
கமலுடன்
சத்யராஜூடன்
இவரை நண்பர்கள் மிஸ்டர் பெல் என்றுதான் அழைப்பார்கள். பத்துக்கு மேற்பட்ட கார்கள், விதவிதமான கடிகாரங்கள் எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார்.
இறைபக்தி நிரம்ப உள்ளவர். சைவ உணவுகளே உண்பார். திருப்பதிக்கு அடிக்கடி சென்று வழிபடுவார். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பார். ஆனால், சாமியார்களை மதிப்பதில்லை. `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார்.
புகைப் பழக்கமோ, குடிப் பழக்கமோ, கிடையாது. பார்ட்டிகளுக்கு சும்மாகூடப் போவதில்லை. தனது பெயருக்கு முன்னால் எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்வதில்லை. இவர் பெரிதாகப் படித்தவரில்லை என்றாலும், நிறைய புத்தகங்களை வாசித்தவர். ஒஷோவின் அனைத்து புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவர். ஆங்கிலப்படங்கள் எதுவானாலும் வெளிவந்தவுடன் பார்த்துவிடுவார். பார்த்துவிட்டு நண்பர்களுடன் அதைப்பற்றி பேசுவார். முக்கியமாக சத்யராஜூடன் தினமும் ஒரு முறையாவது தொலைபேசியில் தமிழ், ஆங்கில படங்களைப்பற்றி பகிர்ந்துகொள்வார். 'மொக்கை நடிகர்களை எல்லாம் போட்டு காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சுவார்' என்று சத்யராஜ் பெட்டி ஒன்றில் சொன்னார்.
2000களுடன் திரைத்துறையில் இவரது புயற்காற்று சற்றே ஓய்ந்தது. தான் உச்சத்தில் இருந்தபோது வாங்கிய அதே சம்பளத்தையே இப்போதும் கேட்பதால்தான் இவரை இப்போதெல்லாம் பெரிதாக திரைப்படங்களில் காணமுடியவில்லை என்கிறார்கள். ஆனாலும், இன்றளவும் அவரது நகைச்சுவையின் வீச்சு குறையவில்லை. அவரை அப்படியே கொப்பியடிக்கும் இளம் நகைச்சுவை நடிகர்களுக்கு கிடைக்கும் மரியாதையின் மூலாதாரமாக இவர்தான் உள்ளார். இவரது நகைச்சுவை காட்சிகளை போட்டே நாள் முழுவதையும் ஓட்டும் இரண்டு நகைச்சுவை சனல்கள் உள்ளன. இவருக்கு 2010 மார்ச்சில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு இவரை பேட்டி காண முன்னணி தொலைக்காட்சி ஒன்று அணுகிகியது. ஆனால் அவர் “அதுதான் நாள்முழுக்க எனது நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்புகிறீர்கள்தானே? பிறகென்ன? ” என்று மறுத்துவிட்டார். ‘நான் இருக்கும்வரை வேண்டுமானால் எனது தயவு அவர்களுக்கு தேவைப்படும், ஆனால் என்றுமே அவர்களின் தயவு எனக்கு தேவையில்லை’ என்று கூறினார்.
இவர் ஒருமுறைகூட தனது சொந்த வாழ்க்கையைப்பற்றி பகிர்ந்துகொள்ளாவிடினும், ஒருமுறை அனந்த விகடனுக்கு பெட்டி ஒன்றை வழங்கி இருக்கிறார். அது இதோ:
இந்தியாவில் இன்று அதிகம் சம்பாதிக்கிற நடிகர் இவர்தான் என்று பேச்சு. இவருடைய கால்ஷீட் கிடைத்த பிறகுதான் படத்துக்கு பூஜை. இவர் வந்து இறங்கும்போது ஹீரோக்களுக்கு இணையாக ஷூட்டிங் ஸ்பாட் சலசலத்து அடங்குகிறது. இளம் நடிகைகள் சிலரை இவரோடு இணைத்து கிசுகிசுக்கிறார்கள். கடந்த வாரத்தில் இவர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு தான் கோடம்பாக்கத்தின் பரபரப்பு பேச்சு!
ஜகஜவென நைலக்ஸ் லுங்கி, ஒரு பட்டன் கூடப்போடாத சட்டையோடு வீட்டில் உட்கார்ந்திருந்தார் கவுண்டமணி. லேசான தொந்தியை தாண்டி மூன்று முழ நீளத்திற்கு ஒரு தங்கச்சங்கிலி, தங்க பிஸ்கட் கோத்து போட்டிருக்கிறார். வயது 63 என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். அதன் ஒரே அடையாளம் முன் தலையின் வழுக்கை மட்டுமே.
விகடன்: தியேட்டர்ல படம் ஆரம்பிச்சி 20 நிமிஷம் ஆனதும் சடார்னு ப்ரேமுக்குள்ள நுழையறீங்க. நீங்க பேசுறதுக்கு முன்னாடியே உங்க முகத்தை பார்த்து தியேட்டர் சிரிப்புல அதிருது. விசில் பறக்குது. எப்படி சாதிச்சீங்க?
கவுண்டர்: இன்னிக்கி நாட்ல உள்ள ஏகப்பட்ட பிரச்னைகளை மீறி மக்களை சிரிக்க வைக்கிறது என்கிற விஷயத்தை ஒரு பார்முலா மாதிரி போட்டு கண்டு புடிச்சிற முடியாது. சிரிக்க வைக்கக்கூடிய சங்கதி தானாகத்தான் ஒருத்தனுக்குள்ள அமையனும். அது 'ப்ளட்'னு வச்சுக்கோங்களேன்.
15 வருஷத்துக்கும் மேல காமடி பண்றேன். எனக்கு முன்னால எவ்வளவோ பேர் சாதிச்சி இருக்காங்க. எனக்கு பிறகு வந்தவங்களும் நிறைய இருக்காங்க. எப்படியோ கடவுள் அருளால ஜனங்களுக்கு நம்மள புடிச்சி போச்சி. கவுண்டமணின்னா என்னவோ ஒரு கிரேசி".
விகடன்: நடிக்க வந்தது எப்படி?
கவுண்டர்: நமக்கு சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. வீட்ல விவசாயம் பாத்தாங்க. சினிமாவுக்கும், நமக்கும் ரொம்ப லாங்கு. லாங்குன்னா இப்படி அப்படி லாங் இல்லை. அமேரிக்கா அளவுக்கு தூரம். அவங்க யாரும் டாக்கீஸ் பக்கம் கூட போனதில்ல. சின்ன வயசுல நடிக்கனும்னு வெறி எனக்கு. காமடியா, வில்லனா, ஹீரோவா..அதெல்லாம் முடிவு பண்ணல. நடிகன் ஆயிடணும். அதான் லட்சியம். 12 வயசுல நாடக கம்பனில செந்தேன். பாய் கம்பனில இருந்து ஜோதி நாடக சபா வரை எல்லாத்துலயும் இருந்தேன். எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போயி நம்மால முடியும்னு தைரியம் வந்துச்சி. அப்பதான் சினிமா சான்சும் வந்துச்சி.
விகடன்: 16 வயதினிலே உங்க முதல் படம். அதில் கண்ணெல்லாம் சுருங்கி போயி கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு. அதாவது வறுமை?
கவுண்டர்: (சட்டென்று இடைமறித்து) அதெல்லாம் சும்மா சார். வறுமையாவது ஒண்ணாவது. சினிமாவுக்கு முன்னாடி நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே. வேளா வேளைக்கு சோறு. அதிகம் இல்லாட்டியும் பொழுதை தள்றதுக்கு காசு கிடைச்சிட்டு தான் இருந்துச்சி. வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகு 'ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்..துண்டு பீடிதான் புடிச்சேன்' ன்னு சொல்றது இப்ப ஒரு பேஷன் ஆகிப்போச்சி. அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.
விகடன்: அந்த பெட்ரோமாக்ஸ் காமடி?
கவுண்டர்: ஆமாமா. 'இதுல எப்பிடிண்ணே லைட் எரியுது?' ன்னு செந்தில் கேப்பான். 'அடேய்..இதுதான் மேண்டில். இதுலதான் பளீர்னு லைட் எரியுது'ன்னு நான் சொல்லிட்டு இருக்கும்போதே செந்தில் மேண்டிலை எடுத்து நசுக்கிப்புட்டு, 'என்னண்ணே..ஒடச்சி புட்டீங்க?'ன்னு கேப்பான்(கவுண்டர் முகத்தில் சிரிப்பு பரவுகிறது). அப்ப நான் உடனே பதில் சொல்லாம கேமரா பக்கம் திரும்பி டென்ஷனா ஒரு லுக் விடுவேன். ஆடியன்ஸ் விழுந்து பொறண்டு சிரிக்கும். (அந்த காட்சியை செய்து காட்டுகிறார்). அந்த இடத்துல அப்படி ஒரு லுக் விட்டாலே போதும்னு யார் சொல்லி குடுத்தா? நமக்கா தோணுது. அதைத்தான் ப்ளட்னு சொல்ல வர்றேன்.
விகடன்: கோயம்புத்தூர் மண்ணுக்கும் சினிமாவில் காமெடிக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்குதே! நிறைய பேர் அங்கிருந்து வர்றாங்க..
கவுண்டர்: ஏங்க... மண்ணுக்கும் காமடிக்கும் என்னங்க சம்மந்தம்? அது என்ன கிழங்கா, மண்ணுல விளையறதுக்கு? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. என்ன..அந்தப்பக்கம் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி! வீட்ல சொன்னபடி கேக்காம ஏடாகூடமா தப்பு பண்ணிப்புட்டு அப்படி இப்படின்னு கிடந்து வர்றாங்க. இங்கே பெரியாளா ஆறாங்க.
விகடன்: உங்களோட வளர்ச்சியில யாருக்கு பங்கு உண்டு? உங்க காட்பாதர்னு யாரை சொல்லுவீங்க?
கவுண்டர்: (கலகலவென சிரிக்கிறார்..) இது என்ன மாபியா கேங்கா? காட்பாதர் இருக்கறதுக்கு! 'ஒருத்தன் வளர்றது இன்னொருத்தனுக்கு பிடிக்காது'ன்னு நான்தான் சொல்றேனே. ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா அவரை சுத்தி இருக்குறவங்களுக்கு சந்தோஷம்னா நினைக்கறீங்க?.. சூப்பர் ஸ்டார்னு புகழராங்களே தவிர, சொந்தக்காரங்க கூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம். இதுதான் எனக்கும்.
விகடன்: ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும்?
கவுண்டர்: தன்னைப்பத்தின நிஜ ரூபத்தை பொத்தி பொத்தி மூடணும். பெட்டிக்கடையில பீடியைக்கூட கட்டுக்கட்டா உள்ளேதான் வெச்சிருப்பான். அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப்பரத்தி வியாபாரம் பண்ணிப்பாருங்க..பீடி விக்காது. நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கறதில்லை. 'கலை நிகழ்ச்சி' என்ற பேரில் துபாய், சிங்கப்பூர் போறதில்லே. ரசிகர் மன்றம் இருந்தது. இப்ப மன்றத்தை எல்லாம் கலச்சிட்டேன். என் பிறந்த நாள் என்னன்னே மறந்து போச்சி. முக்கியமா டி.வி.க்கு பேட்டி குடுக்கறதில்ல. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு..அப்பதான் கிக்!
....சில நிமிட மௌனத்திற்கு பின் கேள்வி கேட்காமலே சொன்னார்...
இது ஒரு ட்ரெண்டுங்க. நம்ம காமடியை ஒப்புக்கறாங்க. அதை அழகான மேக்கப் போட்டுட்டு வந்து பண்ணக்கூடாதா? முகத்தை அசிங்கம் பண்ணிட்டு, மண்ணாங்கட்டி அது இதுன்னு பேர் வச்சிக்கிட்டு வந்தாதான் காமடியா?! காமடிக்காகவே கோண மூஞ்சிக்காரங்களை தேடிப்பிடிக்கறது அக்கிரமம். அட ஜனங்க ரெண்டு மணிநேரம் நம்ம முகத்தை பாக்க வேண்டாமாங்க? என்னைக்கேட்டா நகைச்சுவை நடிகன்தான் அழகா, நீட்டா ப்ரெஷ்ஷா இருக்கணும்.
..பேட்டியின் போது போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை....
அதற்கு அவர் சொன்ன பதில் "மேக்கப் இல்லாம போட்டோ எடுக்க போஸ் குடுக்குறது இல்லைங்க" என்கிறார் தலையை தடவியபடி. குடும்பத்தை படம் எடுப்பதற்கும் மிகப்பெரிய தடை போடுகிறார்.
"முடியாதுங்க. இதுவரைக்கும் என் பேமிலி படம் எதுலயாச்சும் பாத்து இருக்கீங்களா? தர்றதே இல்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களை பொறுத்தவரை நான் காமடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்கு போறேன். கூலி வாங்கிட்டு வர்றேன். அதை வச்சி குடும்பம் நடத்துறது அவங்க வேலை. என் குடும்பத்து ஆளுங்க இன்னிவரைக்கும் ஷூட்டிங் பாத்தது கிடையாது. என்னை ஒரு நடிகனா வீட்ல யாரும் பாக்கக்கூடாது. அது வேற..இது வேற.
உம்முன்னு உட்காந்துட்டு இருக்குறவங்க எல்லாம் தனியா எதுனா அள்ளிட்டா போகப்போறாங்க? அப்புறம் எதுக்கு பொறக்கணும்? என்னைப்பொறுத்தவரை நாலு பேரைப்பாக்கணும், நாலு விதமா பேசணும், சந்தோஷமா சிரிக்கணும். அவ்வளவுதான் வாழ்க்கை. இருக்கிற வரைக்கும் சிரிப்போம்...ரைட்டா?"
முதலும், கடைசியுமான இந்த பேட்டி ஆனந்தவிகடனில் 2-6-1996 இல் வெளிவந்தது.
இவரைப்பற்றிய எதிர்மறைக்கருத்துக்களையும் இல்லாமல் இல்லை. சிறிய நகைச்சுவை நடீகர்களை மதிப்பதில்லை, மற்றவர்களை அவமதிக்கும் வகையில் எள்ளல் செய்வதையே காமெடியாக செய்கிறார் என்று பல குற்றசாட்டுக்கள் உள்ளன.
சிங்காரவேலன் படத்தில் நடித்தபோது தன்னை இவர் தேவையே இல்லாமல் அடித்துக்கொண்டிருந்ததாக வடிவேலு பிற்காலத்தில் வெளிப்படையாகவே சொன்னார். நீங்கள் இவரது காட்சிகளை பார்த்தாலே தெரியும், காட்சிகளில் யாருக்காவது அடிப்பதாக, அல்லது முடியை பிடித்து இழுப்பதாக வரும்போது இவர் உண்மையாகவே அதை செய்வார். மேலும், என்னதான் பெரிய கொமெடியானாக இருந்தாலும், மற்றவர்களின் பகுதியிலும் தலையிடுவார். சிங்காரவேலன் படத்தில் மிகப்பெரிய timing நகைச்சுவை நடிகரான கமலின் காட்சிகளை இவர் குழப்பியிருப்பார். அத்துடன் சலிப்பூட்டும் வகையில் சட்டித் தலையா, கோண வாயா.. என்பதாக உடற்குறைபாடுகளை குறிப்பிடும் வகையில் மற்றவர்களை எள்ளுவார்.
எது எவ்வாறாக இருப்பினும், கவுண்டமணி என்கிற நகைச்சுவை நடிகன் தமிழின் மறக்க முடியாத ஒரு கலைஞன். புதிதாக உருவாகும் நகைச்சுவை நடிகர்கள் எவருமே இவரது சாயல் இல்லாமல் நகைச்சுவை செய்யமுடியாது. அல்லது இவரை அப்படியே பிரதியெடுத்தால், உச்சத்துக்கு போகலாம். (சந்தானம் ரசிகர்கள் மன்னிக்க.) அத்துடன் இன்றுவரை இளைஞர்களின் மனதில் இவரது இடம் அப்படியேதான் உள்ளது என்பது உங்களை பார்த்தாலே தெரியவில்லையா? இத்தனை ஆர்வமாக ஒரு இடைக்கால நடிக்கரைப்பற்றி வாசிக்கிறீர்களே?
http://www.venkkayam.com/2012/06/blog-post_05.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல காமடி நடிகர்.
என்ன ஒரே பிரச்சினை ஆம்ப்ளிபயர முழிங்கிட்டாறு - சவ்வு கிழிஞ்சு போகும் நமக்கு.

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
நடுவில் சில போட்டோக்கள் இல்லையே
நடுவில் சில போட்டோக்கள் இல்லையே
உண்மைய சொல்லுங்க உங்களுக்கு அதனாலதான் சவ்வு கிழிஞ்சுதா?யினியவன் wrote:நல்ல காமடி நடிகர்.
என்ன ஒரே பிரச்சினை ஆம்ப்ளிபயர முழிங்கிட்டாறு - சவ்வு கிழிஞ்சு போகும் நமக்கு.
தலைப்பு நடிகர் கவுண்டமணி என்று இருத்தல் நலம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
நடுவில் சில போட்டோக்கள் இல்லையேஉண்மைய சொல்லுங்க உங்களுக்கு அதனாலதான் சவ்வு கிழிஞ்சுதா?யினியவன் wrote:நல்ல காமடி நடிகர்.
என்ன ஒரே பிரச்சினை ஆம்ப்ளிபயர முழிங்கிட்டாறு - சவ்வு கிழிஞ்சு போகும் நமக்கு.
குப்பத் தொடடிக்குப் பக்கத்திலே காதை பிடிச்சிகிட்டு கமுக்கமா உட்கார்ந்திரந்தாரே ...நீங்க கவனிக்கலையா முள்ளி...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க உங்க கண்னத்த புடிச்சுகிட்டு அழுத அழுகையில அவர எங்க நான் கவனிக்கறதுசார்லஸ் mc wrote:
குப்பத் தொடடிக்குப் பக்கத்திலே காதை பிடிச்சிகிட்டு கமுக்கமா உட்கார்ந்திரந்தாரே ...நீங்க கவனிக்கலையா முள்ளி...
- GuestGuest
அவரை பற்றி பேச அவருக்கு மட்டுமே தகுதி உண்டு .. சந்தானம் என்ற சுண்டைகாய் இவரை காபி அடித்து விட்டு ... அவர் பாணி வேறு என் பாணி வேறு என்று சொல்வது எரிச்சலை வர வைக்கிறது ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆக மொத்தம் நம்ம க்ரூப்பே குப்பத் தொட்டிய சுத்தி தான் இருக்குன்னு மக்களுக்கு தெரிஞ்சிடுச்சு.முரளிராஜா wrote:நீங்க உங்க கண்னத்த புடிச்சுகிட்டு அழுத அழுகையில அவர எங்க நான் கவனிக்கறதுசார்லஸ் mc wrote:
குப்பத் தொடடிக்குப் பக்கத்திலே காதை பிடிச்சிகிட்டு கமுக்கமா உட்கார்ந்திரந்தாரே ...நீங்க கவனிக்கலையா முள்ளி...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
முரளிராஜா wrote:நீங்க உங்க கண்னத்த புடிச்சுகிட்டு அழுத அழுகையில அவர எங்க நான் கவனிக்கறதுசார்லஸ் mc wrote:
குப்பத் தொடடிக்குப் பக்கத்திலே காதை பிடிச்சிகிட்டு கமுக்கமா உட்கார்ந்திரந்தாரே ...நீங்க கவனிக்கலையா முள்ளி...
அப்ப நீங்க முதுகிலே டின் கட்டப்பட்ட நிலையிலே இருந்ததனாலதானே கவனிக்க முடியலை முள்ளி... சில விஷயங்களை மறைக்கிறதே வேலையாப் போச்சு உங்களுக்கு
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3