புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி

Page 2 of 2 Previous  1, 2

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 10:15 am

First topic message reminder :

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

இந்த பகுதியில் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சொற்களுக்கு அர்த்தம் அறிந்து கொள்ள ஒரு தெளிவுரை எழுதலாமென நினைத்தேன். இதன் மூலம் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதின் அர்த்தத்தை நன்கு அறிந்து விளங்கிக் கொள்ள உதவும் என கருதுகிறேன்.

இந்த நல்ல வாய்ப்பை கர்த்தருடைய பிள்ளைகள் தங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். அனுதினமும் வேதத்தை வாசியுங்கள். அதிகாலையில் ஜெபியுங்கள். ஞாயிறுதோறும் தவறாமல் ஆலய ஆராதனைக்கு குடும்பமாய் சென்று கர்த்தரை ஆராதியுங்கள். சத்தியத்தை அறிந்து கொள்ள கற்றுக் கொள்ள வாஞ்சியுங்கள். கற்றுக் கொண்டதை பிறருக்கு எடுத்து சொல்லுங்கள். சபையில் நடக்கும் ஊழியங்களில் பங்கு பெறுங்கள். கர்த்தருக்காய் சாட்சி பகருங்கள். சபைக்கு தூணாகவும், ஊழியத்திற்கு உதவியாகவும், பக்திக்குரியவர்களாகவும், ஆவியிலே அனலுள்ளவர்களாயும் இக்கடைசி காலங்களில் காணப்பட அர்ப்பணியுங்கள்.

இந்த பகுதியானது உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவும் பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வாசியுங்கள். ஆதரவு கொடுங்கள். உங்கள் கருத்துக்களை தவறாமல் பக்திவிருத்திக்கேதுவாக பகிர்ந்து கொள்ளுங்கள். வாசிக்கிற அனைவருக்கும் விளங்கிட, சத்தியத்தை அறிந்திட, மீட்பைப் பெற, ஆசீர்வதிக்கப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள். நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Aug 01, 2012 3:49 pm

நீதிமான்: (Righteous)

'நீதிமான்' என்று தீர்க்கப்படுவது நமது இரட்சிப்பின் ஒரு முக்கிய அம்சமாகும். அநீதியுள்ள யாரும் தேவ சமூகத்தில் வர முடியாது. "...பரிசுத்தம் இல்லாமல் ஒரவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே" (எபிரேயர்: 12:14).

அப்படியானால், ஒருவன் தேவனுடைய பார்வையில் 'நீதிமான்' ஆவது எப்படி?

ஒருவன் தன் சொந்த முயற்சியினால், தனது நற்கிரியைகளினால் நீதிமானாக முடியாது. தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, விசுவாசத்தினாலே கிறிஸ்துவண்டை திரும்புவதன் மூலம் மட்டுமே நீதிமானாக முடியும்.

நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அவர் நமது குற்றத்தை, நமது தண்டனையை அகற்றி போடுகிறார். நமது குற்றம், ஒரு பாவமுமறியாத குற்றமற்ற இயேசு கிறிஸ்துவின்மேல் சுமத்தப்படுகிறது. கிறிஸ்துவின் நிமித்தமாக நாம் நீதிமான்களாகிறோம். விசுவாசத்தினாலே கிறிஸ்துவின் நீதியைப் பெற்றுக் கொள்கிறோம்.

கிறிஸ்து நம்மை தேவனுக்கு முன்பாக கொண்டு வந்து, அவரிடம் "இவனுடைய பாவங்களுக்காக நான் மரித்திருக்கிறேன். இனி இவனைத் தண்டிக்க வேண்டியதில்லை. இவன் பாவமற்றவனாகக் கருதப்படலாம்" என்று சொல்கிறார். அப்பொழுது தேவன் நம்மைத் தமது பார்வையில் நீதிமான்கள் என்று தீர்த்து நம்மைத் தமது குடும்பத்தில் ஏற்றுக் கொள்கிறார். (மாற்கு: 10:45; ரோமர்: 3:24-26; கலாத்தியர்: 2:15,16).

ஆகவே, தேவன் நம்மை நீதிமான்களாக்கும்போது பாவத்தின் தண்டனையிலிருந்து நம்மை விடுவித்து விடுகிறார். நமது பாவத்தை முற்றிலுமாக மன்னித்துப் போடுகிறார். நாம் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். (ரோமர்: 5:1). நாம் இனி ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறதில்லை. (ரோமர்: 8:1).

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Aug 01, 2012 7:50 pm

நீதி: (Righteousness)

வேதத்தில் நீதி என்பது தேவ நீதியையே குறிக்கும்.

தேவனுடைய நியாயப்பிரமாணத்தை, குறிப்பாக பத்துக் கட்டளைகளையும் (யாத்திராகமம்: 20:3-17), தேவனிலும், பிறனிலும் அன்பு கூர வேண்டும் என்ற இரு பிரதான கற்பனைகளையும் (மாற்கு: 12:30-31) படிப்பதன் மூலம் தேவநீதியை அறிந்து கொள்ளலாம்.

நியாயப் பிரமாணமும் கட்டளைகளும் எல்லா மனிதர்களின் நடத்தைக்குமான தேவனுடைய நெறிமுறைகளாகும். யாரும் தன்னில்தானே நீதியுள்ளவர்கள் அல்லர். (ரோமர்: 3:10).

தேவனுடைய பார்வையில், "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல் இருக்கிறோம்; எங்களுடைய நீதிகள் எல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது." (ஏசாயா: 64:6).

கிறிஸ்து ஒருவர் மட்டுமே பூரண நீதிபரர். நாம் அவரை விசுவாசிக்கும்போது அவருடைய நீதியில் பங்கடைகிறோம். தேவனுடைய பார்வையில் ஏற்கப்படத்தக்கவர்கள் ஆகிறோம்.

நீதியை அடைவதில் 2 படிகள் உள்ளன. அவை:

1. விசுவாசத்தினாலே கிறிஸ்துவின் நீதியைப் பெற்று, தேவனாலே நீதிமான்கள் என்று தீர்க்கப்படுகிறோம்.

2. பரிசுத்த ஆவியானவரின் கிரியையினாலே நமது நடத்தையிலும் செய்கைகளிலும் கிறிஸ்துவின் நீதி இன்னும் அதிகமதிகமாகப் புலப்பட ஆரம்பிக்கிறது. நமது அன்றாட வாழ்வுகளில் இன்னும் அதிகப் பரிசுத்தமும் நீதியும் உள்ளவர்களாகிறோம்.

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Aug 01, 2012 8:02 pm

பரிசுத்தவான்: (Saint)

புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகள் 'பரிசுத்தவான்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

"பரிசுத்தவான்" என்றால் "பரிசுத்தமான அல்லது பிரித்தெடுக்கப்பட்ட ஒருவன்" என்று பொருள்.

பரிசுத்த வேதாகமத்திலே பரிசுத்தமாயிருப்பது என்றாலே "நீதிமானாகவும்" தேவனுக்காகப் "பிரித்தெடுக்கப்பட்டவனாகவும்" இருப்பது என்றுதான் பொருள்படும்.

இவ்விதமாக, கிறிஸ்தவர்கள் எனப்படுவோர் விசுவாசத்தினாலே கிறிஸ்துவின் நீதியைப் பெற்றுக் கொண்டு, பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்த வாழ்க்கை வாழத் தொடங்கியுள்ள மக்கள் ஆவர்.

இப்படிப்பட்ட மக்கள் உண்மையாகவே தேவனுக்காகப் "பிரித்தெடுக்கப்பட்டவர்கள்". இவர்கள் பாவத்திலிருந்தும் சாத்தானின் வல்லமையிலிருந்தும் வேறு பிரிக்கப்பட்டவர்கள்.

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Aug 01, 2012 8:14 pm

மனந் திரும்புதல்: (Repentance)

'மனந் திரும்புதல்' என்றால் ஒருவன் தன் பாவங்களுக்காக மனம் வருந்தி வெட்கப்படுவது மட்டுமல்ல, அவற்றை விட்டு மனந் திரும்புவதுமாகும்.

நமது பாவத்தை அறிக்கை செய்வது மட்டும் போதாது. நாம் பாவம் செய்வதை நிறுத்தி விடவும் வேண்டும்.

ஒருவன் உண்மையாகவே மனந் திரும்பும் போது அவனது செயல்கள், எண்ணங்கள், ஆசைகள் ஆகிய அனைத்துமே மாற்றம் பெறும்.

ஒரு மனிதன் "நான் மனந் திரும்பி விட்டேன்" என்று சொல்லியும் அவன் வாழ்க்கையில் மாற்றமில்லை எனில், அவனது மனந்திரும்புதல் உண்மையானதல்ல.

மனந்திரும்புவது, இரட்சிப்பைப் பெறுவதில் ஒரு இன்றியமையாத படியாகும். மனந்திரும்புதல் இன்றி இரட்சிக்கப்படவே முடியாது. (மத்தேயு: 5:3-4; மாற்கு: 1:4,15; அப்போஸ்தலர்: 2:37,38; 20:21; 2பேதுரு: 3:9).

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Aug 02, 2012 4:01 am

மாம்சம்: (Flesh)

புதிய ஏற்பாட்டில் 'மாம்சம்' என்ற சொல் இரண்டு அர்த்தங்களில் வருகிறது. ஒரு வசனத்தில் அதற்கு என்ன அர்த்தம் என்பதை அவ்வசனத்தின் பின்னணியைக் கொண்டே நிர்ணயிக்க வேண்டும்.

1. 'மாம்சம்' என்பது சரீரத்தை, உடலைக் குறிக்கும். பொதுவாக தமிழ் வேதாகமத்தில் இது சரீரம் என்றே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக: ரோமர்: 8:10,11; 12:1, 4).

2. 'மாம்சம்' என்பது பாவ சுபாவத்தைக் குறிக்கும். நமது சரீரங்களே பாவம் என்பதல்ல. என்றாலும், பவுல் பல சமயங்களில் நமது பாவ சுபாவத்தை "மாம்சம்" என்றே அழைக்கிறார். உதாரணமாக: ரோமர்: 7:5,18,25; 8:3-9,12; 1கொரிந்தியர்: 5:5; கலாத்தியர்: 5:13,16-17,19,24; 6:8).

'மாம்சம்' என்ற பதத்தின் இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. மாம்சம் என்பது சரீரத்தைக் குறிக்கும் இடங்களில் வரும்போது அது தீமையைக் குறிப்பதில்லை. நமது சரீரங்களில் தீமையோ, பாவமோ கிடையாது. நாம் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவர்கள். (ஆதியாகமம்: 1:27).

ஆனால், நமது பாவ சுபாவமே, பாவ இச்சைகளே தீமையாகும். இந்த இச்சைகள் தான் நம்மைப் பாவம் செய்யத் தூண்டுகின்றன. (யாக்கோபு: 1:14,15).

எனவே, மாம்சம் என்ற பதம் நமது பாவ சுபாவத்தைக் குறிக்கையில் அது சரீரம் என்ற பொருளில் இருந்து வெகுவாக வேறுபடுகின்றது. நமது பாவ சுபாவம் தீமையானது; நமது சரீரங்களோ தீமையானவை அல்ல.

பரிசுத்த ஆவியானவர் நமது சரீரத்தை ஆளுகையில், நாம் சரியானபடி நடப்போம். நமது பாவ சுபாவம் நமது சரீரத்தை ஆளும்போதோ நாம் பாவத்தில் நடப்போம். (ரோமர்: 6:12-13).

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Aug 02, 2012 4:14 am

சமாதானம்: (Peace)

பரிசுத்த வேதாகமத்திலே 'சமாதானம்' என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் 'சமாதானம்' என்பது பொதுவாக ஒரு வாழ்த்துச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.

சமாதானம் என்பது போர்களின்றி (யுத்தமின்றி) அமைதியாய் இருப்பதையும் குறிக்கும். அது உள்ளான சமாதானத்தையும் குறிக்கலாம்.

புதிய ஏற்பாட்டில் 'சமாதானம்' என்ற பதம் பொதுவாக உடல், உள்ளம், ஆவி ஆகிய மூன்றிலும் முழுமையாக ஆரோக்கியம் பெற்றிருப்பதைக் குறிக்கும். அதையும் விட முக்கியமாக, அது தேவனிடத்தில் சமாதானத்தைப் பெற்றிருப்பதைக் குறிக்கும்.

நாம் மனந்திரும்பாத பாவிகளாய் இருந்த போது, தேவனுக்கு சத்துருக்களாய் இருந்தோம். இப்பொழுதோ, கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம் தேவனோடு சமாதானமாகலாம். இனி நாம் அவரது சத்துருக்கள் அல்லர்; அவரது பிள்ளைகள். (ரோமர்: 5:1).

தொடரும்...

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Aug 02, 2012 8:08 pm

உயிர்த்தெழுதல்: (Resurrection )

'உயிர்த்தெழுதல்' என்றால் மரணமடைந்த பின் மீண்டும் உயிர் பெறுவது.

இயேசுவுக்கு மரித்தோரை உயிருடன் எழுப்பும் வல்லமை உண்டு. (யோவான்: 5:24,25). அவர் நாயீனூர் விதவையின் மகனை உயிரோடு எழுப்பினார். (லூக்கா: 7:11-17). மரித்து நான்கு நாட்களாகி விட்டிருந்த லாசருவை உயிரோடு எழுப்பினார்.(யோவான்: 11:38-44). அவரும் மரணத்தை வென்று உயிருடன் எழுந்தார். எனவே, அவர் வல்லமையினாலே மற்றவர்களும் மரணத்தை வெற்றி கொள்வர். (1கொரிந்தியர்: 15:20-23).

பூமியில் உள்ளவர்களிலே, கிறிஸ்து உலகத்தின் முடிவிலே திரும்ப வருமபோது முதலாவது எழுப்பப்படப் போகிறவர்கள் கிறிஸ்துவுக்குள் மரித்த விசுவாசிகளே (1தெசலோனிக்கேயர்: 4:16,17).

முடிவிலே எல்லா மனிதர்களும், கெட்டவர்கள், நல்லவர்கள் அனைவரும் எழுப்பப்படுவார்கள். விசுவாசிகளின் உயிர்த்தெழுதல் மோட்சத்தில் நடைபெறும். விசுவாசியாதவர்களின் உயிர்த்தெழுதலோ நரகத்தில் இருக்கும். (யோவான்: 5:28,29; அப்போஸ்தலர்: 24:15; வெளிப்படுத்தல்: 20:4-15).

நமது சரீரம் மரணம் அடைகையில், நமது ஆவியோ தொடர்ந்து வாழும். ஆனால், உடனடியாக நாம் புது சரீரத்தைப் பெறுவதில்லை. உலக முடிவில் இயேசு திரும்ப வரும்போது தான் நமது புதிய சரீரத்தைப் பெறுவோம். பவுல் இதை நமது 'சரீர மீட்பு' (ரோமர்: 8:23) என்று அழைக்கிறார். கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் தங்களது புதிய சரீரங்களை மோட்சத்தில் பெறுவார்கள். இந்த புதிய சரீரங்களுக்கு மரணம் கிடையாது. அவை மகிமைப்பட்ட சரீரங்கள். அவை கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த சரீரம் போலிருக்கும். (லூக்கா: 24:36-43; பிலிப்பியர்: 3:21; 1யோவான்: 3:2).

உலக வரலாற்றிலே மிக மிக முக்கியமான சம்பவம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே. (மாற்கு: 16:8).

மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததன் மூலமாக இயேசு தாம் உண்மையாகவே தேவ குமாரன் தான் என்றும், உலக இரட்சகர் தான் என்றும் மனிதர்களுக்கு நிருபித்துக் காட்டினார். (ரோமர்: 1:4).

அவரது உயிர்த்தெழுதலின் காரணமாக, நாமும் நித்திய ஜீவனின் நம்பிக்கையைப் பெறுகிறோம். (யோவான்: 11:25,26).

இயேசு சொன்னார்: "நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்" (யோவான்: 14:19).

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 10:15 pm

விசுவாசம்: (Faith)

புதிய ஏற்பாட்டில் வரும் விசுவாசம் என்னும் சொல் தேவனில் வைக்கும் விசுவாசத்தை, கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தை குறிக்கும்.

விசுவாசம் என்பது கிறிஸ்துவின் போதனைகள் சத்தியமானவை, அவரது மரணத்தால் நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்ற மாறாத நம்பிக்கையும் ஆகும்.

விசுவாசம் என்பது ஏதோ ஒரு வலுவான எண்ணம் மட்டுமல்ல, அது கிறிஸ்துவில் முழுமையான நம்பிக்கை வைப்பதுமாகும். அது நம்மை அவர் சார்பில் வைத்து விடுவது.

உதாரணமாக, நாம் ஒரு பாலத்தண்டை வந்திருக்கிறதாக வைத்துக் கொள்வோம். அது பலமானதுதான் என்று நமக்குத் தெரிந்திருக்கலாம். இருப்பினும், பாலத்தின் மீது நடந்து சென்று கடக்க அஞ்சுவோம் என்றால், நமக்கிருப்பது விசுவாசமே அல்ல. விசுவாசம் என்பது பாலத்தின் மீது சென்று அதைக் கடப்பது.

புதிய ஏற்பாட்டில், 'விசுவாசம்' என்ற பதம் இயேசுவில் வைக்கப்பட்ட நம்பிக்கையின் பல்வேறு அளவுகளை, நிலைகளைக் குறிப்பதாய் உள்ளது.

சிலர், இயேசுவின் குணமாக்கும் வல்லமையை விசுவாசித்தனர். (மத்தேயு: 8:10). சிலர், அவர் ஒரு தீர்க்கதரிசி என்று விசுவாசித்தனர். (மாற்கு: 8:27,28; யோவான்: 9:17).

ஆனால், மெய்யான விசுவாசம், இரட்சிப்பின் விசுவாசம் இயேசு தேவ குமாரன் என்றும், அவரே இரட்சகர் என்றும் நம்புவதாகும். (மாற்கு: 8:29; யோவான்: 9:35-38). புதிய ஏற்பாட்டில் இச்சொல் இக்கருத்தில் தான் பொதுவாக வருகிறது.

நாம் விசுவாசத்தினாலே இரட்சிக்கப்படுகிறோம். (எபேசியர்: 2:8). நாம் விசுவாசத்தினாலே அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்கிறோம். "...விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாய் இருப்பது கூடாத காரியம்" (எபிரேயர்: 11:6). "...விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே" (ரோமர்: 14:23).

விசுவாசம் என்பது நாம் செய்கின்ற ஏதோ ஒரு 'கிரியை' அல்ல. மாறாக, கிறிஸ்து நமக்காகச் சிலுவை மீது செய்து முடித்த கிரியையை ஏற்றுக் கொள்வதே விசுவாசம். விசுவாசம் தேவனுடைய ஈவு. (ரோமர்: 12:3).

எனினும், நாம் விசுவாசிகளான பிறகு, நமது வாழ்க்கைகளில், நமது நடத்தையில் ஒரு மாற்றம் நிச்சயமாய்க் காணப்படும். நாம் விசுவாசிகளாகும்போது, பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்வினுள் வருகின்றார்.

நாம் நற்கிரியைகளைச் செய்யத் தொடங்குகிறோம். (எபேசியர்: 2:10). நாம் இந்தக் கிரியைகளினாலே இரட்சிக்கப்படுவதில்லை. விசுவாசத்தினாலேயே இரட்சிக்கப்படுகிறோம்.

எனினும், நமது விசுவாசம் உண்மையானது என்பதற்குச் சான்று நற்கிரியைகளே. நமது விசுவாசம் தேவனை நேசிக்கவும் அவருக்குக் கீழ்படியவும், அன்பின் கிரியைகளைச் செய்யவும் நம்மை நடத்தவில்லை என்றால், அப்பொழுது நமது விசுவாசம் பொய்யானது, போலியானது, செத்தது. அப்படிப்பட்ட விசுவாசம் நம்மை இரட்சிக்காது. (மத்தேயு: 7:12; கலாத்தியர்: 5:6; யாக்கோபு: 2:14-17).

பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550பரிசுத்த வேதாகமத்தின் சொல் பொருள் அகராதி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
Sundararajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

PostSundararajan Fri Aug 24, 2012 12:41 pm

நல்ல முயற்சி . கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
கர்த்தரின் பணி தொடரட்டும். நன்றி

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Sundararajan

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக