புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_c10 
3 Posts - 7%
heezulia
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்


   
   

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 28, 2012 7:55 am

First topic message reminder :

லண்டன், ஜூலை.28-


உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.

தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 13da3867-65e8-49f2-ae62-ff1b9ce03a11_S_secvpf


உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.

இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.

லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.

இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.

இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.

கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.

அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.

இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.

தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-மாலை மலர் லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 678642



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 03, 2012 12:17 pm

ஒலிம்பிக் தடகள போட்டிகள் இன்று தொடக்கம்

ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் இன்று தொடங்குகின்றன. தொடக்க விழா நடந்த பிரதான ஸ்டேடியத்தில் நடைபெறும் தடகளத்தில் இன்று ஆண்களுக்கான குண்டு எறிதல், பெண்களுக்கான ஹெப்டத்லானுக்கான 4 போட்டிகள், பெண்கள் வட்டு எரிதல் மற்றும் ஓட்ட பந்தயங்கள் ஆகியவை நடைபெற உள்ளன.

இந்த போட்டிகளில் ஆண்களுக்கான குண்டு எறிதல் மற்றும் பெண்களுக்கான 50 ஆயிரம் மீட்டர் ஓட்டம் ஆகிய இரண்டு தங்கப்பதக்கத்திற்கான பந்தயங்கள் இன்று நடக்கின்றன. அதில் இந்திய தடகள அணியில் மொத்தம் 14 பேர் இடம் வகிக்கிறார்கள். அவர்களில் கிருஷ்ண பூனியா, சீமா அன்டில், ஓம்பிரகாஷ் சிங், மயூக்கா ஜானி ஆகிய இந்தியர்கள் இன்று தடகளத்தில் கால் பதிக்கிறார்கள்.

இதில் வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா மீது தான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதே பிரிவில் சீமா அன்டிலும் பங்கேற்கிறார். வட்டு எறிதலில் தகுதி சுற்று இன்றும், இறுதிப்போட்டி நாளையும் நடக்கிறது. அதேபோல் பென்களுக்கான ட்ரிப்பிள் ஜம்ப் நீளம் தாண்டுதலில் மயூக்காவும், ஆண்களுக்கான குண்டு எரிதல் போட்டியில் ஓம்பிரகாஷ் சிங்கும் பங்கேற்கின்றனர்.



லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 03, 2012 12:21 pm

ஒலிம்பிக்கில் சூதாட்டம்: சீனா பேட்மிண்டன் அணி மன்னிப்பு கோரியது


ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில், விதிமுறைகளை மீறிய விளையாடியதற்காக சீன பேட்மிண்டன் அணி மன்னிப்பு கோரியது. பெண்களுக்கான இரட்டையர் பேட்மிண்டன் தகுதிச்சுற்றில் சீனாவின் நான்கு வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் யூ யாங் மற்றும் வாங் சியோலி கலந்து கொண்ட இரட்டையர் போட்டியில் வேண்டுமென்றே தோற்கும் நோக்கத்தில் விளையாடியுள்ளனர். அடுத்த சுற்றில் அவர்களுக்கு சாதகமான சூழல் அமையும் என்ற நோக்கில் விதிமுறைகளை மீறி அவ்வாறு நடந்து கொண்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து அவர்கள் பங்கேற்ற போட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சீன வீராங்கனைகள் செய்த தவறை ஒத்துக்கொண்ட சீனா பாட்மிண்டன் தலைமை பயிற்சியாளர் லி யாங்போ, மன்னிப்பு கோரினார். ஒவ்வொரு விளையாட்டிலும் சிரத்தையுடனும், அக்கறையுடனும் அவர்கள் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான உற்சாகத்துடனும், வேகத்துடனும், வலிமையுடனும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் விளையாடவில்லை.

இந்த விஷயத்தில் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். இதுதொடர்பாக சீனாவின் ரசிகர்கள் மற்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று யாங்போ கூறினார்.

இதற்கிடையே தனது தவறை ஏற்றுக்கொண்ட சீன வீராங்கனை யூ யாங் தனது இறுதி விளையாட்டில் விளையாடுவதாகவும், பின்னர் விளையாட்டு போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாகவும் இணையதள செய்தியில் கூறியுள்ளார்.

மற்றொரு வீராங்கனை வாங் சியோலி, ரசிகர்களின் நம்பிக்கையை பெறும் விதத்தில், மேலும் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.



லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 03, 2012 6:41 pm

அரையிறுதியில் செய்னா நேவல் தோல்வி
டென்னிஸ் : காலிறுதியில் பயஸ்-சானியா


லண்டன்: லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் தோல்வி அடைந்தார்.

லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல், உலகின் "நம்பர்-1 வீராங்கனையான சீனாவின் இகான் வாங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை செய்னா 13-21 எனக் கோட்டைவிட்டார். இரண்டாவது செட்டை இகான் வாங் 21-13 என கைப்பற்றினார். இறுதியில் செய்னா நேவல் 13-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் வெண்கலம் வென்று சாதிக்கலாம்.

காஷ்யப் "அவுட்

பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் காஷ்யப் தோல்வி அடைந்து வெளியேறினார்.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த பாட்மின்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் காஷ்யப், உலகின் "நம்பர்-2 வீரரான மலேசியாவின் சோங் வி லீயை சந்தித்தார்.

விறுவிறுப்பான முதல் செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். கடைசி நேரத்தில் ஏமாற்றிய காஷ்யப் 19-21 எனக் கோட்டைவிட்டார். இரண்டாவது செட்டின் துவக்கத்தில் இருந்தே மலேசிய வீரரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் 18 நிமிடம் வரை நீடித்த 2வது செட்டை காஷ்யப் 11-21 என இழந்தார். இறுதியில் காஷ்யப் 19-21, 11-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

காலிறுதியில் பயஸ்-சானியா

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு பயஸ், சானியா ஜோடி முன்னேறியது.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று இரவு நடந்த டென்னிஸ் கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் பயஸ், சானியா ஜோடி, செர்பியாவின் இவானோவிச், ஜிமோன்ஜிக் ஜோடியை சந்தித்தது. இதில் அசத்தலாக ஆடிய பயஸ்-சானியா முதல் செட்டை 6-2 என சுலபமாக வென்றனர். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர்கள் 6-4 என கைப்பற்றினர். இறுதியில் பயஸ், சானியா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெறும் 64 நிமிடங்களில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

ரஞ்சன் சோதி ஏமாற்றம்:

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் "டபுள் டிராப் பிரிவில் இந்தியா சார்பில் ரஞ்சன் சோதி பங்கேற்றார். பைனலுக்கான தகுதிச் சுற்றின் முதல் வாய்ப்பில் 48 புள்ளிகள் பெற்ற ரஞ்சன் சோதி, அடுத்த இரண்டு வாய்ப்பில் முறையே 44, 42 புள்ளிகள் பெற்றார். இறுதியில் ரஞ்சன் சோதி 150க்கு 134 புள்ளிகள் பெற்று 11வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

விஜய் குமார் ஆறுதல்:

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவுக்கான முதலாவது தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் விஜய் குமார் பங்கேற்றார். இதில் 300க்கு 293 புள்ளிகள் பெற்ற விஜய் குமார் 5வது இடம் பிடித்தார். இதன்மூலம் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.

ஜெய் பகவான் தோல்வி:

ஆண்களுக்கான குத்துச்சண்டை "லைட் வெயிட் 60 கி.கி., எடைப்பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஜெய் பகவான், கஜகஸ்தானின் கானி ஜாய்லாவோவை சந்தித்தார். இதில் முதல் செட்டை 3-2 எனக் கைப்பற்றிய ஜெய் பகவான், இரண்டாவது செட்டை 3-10 எனக் கோட்டைவிட்டார். தொடர்ந்து சொதப்பிய இந்திய வீரர் மூன்றாவது செட்டை 2-4 என இழந்தார். இறுதியில் ஜெய் பகவான் 8-16 என்ற கணக்கில் தோல்வி அடைந்து காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

அரையிறுதியில் முர்ரே

ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோவை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய முர்ரே 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஜோவில்பிரிட் டோங்காவை சந்தித்தார். இதில் ஜோகோவிச் 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய பெடரர் 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா, ஜெர்மனியின் கெர்பரை சந்தித்தார். இதில் அசரன்கா 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை சந்தித்தார். இதில் செரினா 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.



லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 03, 2012 7:12 pm

இரண்டாவது ரவுண்ட் முடிவில் விஜயகுமார் மற்ற இருவருடன் சேர்ந்து முதல் நிலையில் உள்ளார். (மொத்தம் அஞ்சு ரவுண்டா?) தெரியலையே?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 03, 2012 7:25 pm

விஜயகுமார் அடுத்த நிலைக்கு முன்னேற்றம்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 03, 2012 7:29 pm

சில்வர் வெல்ல இன்னொருவருடன் ஒரே பாயின்ட் நிலையில் உள்ளார் இதுவரை.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 03, 2012 7:30 pm

யினியவன் wrote:சில்வர் வெல்ல இன்னொருவருடன் ஒரே பாயின்ட் நிலையில் உள்ளார் இதுவரை.

சில்வர் இல்லனா ஒரு எவர்சில்வர் கிடைத்தாலும் போதும் பாஸ்! சோகம்



லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 03, 2012 7:31 pm

ஏழாவது ரவுண்டுக்கு அப்புறம் விஜய் இரண்டாம் நிலை.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 03, 2012 7:33 pm

விஜயகுமார் சில்வர் வென்றுவிட்டார் - வாழ்த்துகள்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 03, 2012 7:34 pm

சிவா wrote:
யினியவன் wrote:சில்வர் வெல்ல இன்னொருவருடன் ஒரே பாயின்ட் நிலையில் உள்ளார் இதுவரை.

சில்வர் இல்லனா ஒரு எவர்சில்வர் கிடைத்தாலும் போதும் பாஸ்! சோகம்
சில்வரே வாங்கிட்டார் சிவா. சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக