புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
2 Posts - 2%
prajai
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
418 Posts - 48%
heezulia
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
28 Posts - 3%
prajai
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_m10இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா?


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 1:18 pm

இந்திய பொருளாதாரக் கொள்கை சரிகிறதா? 582590_377067072346894_1511009413_n

சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களிலேயே பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகம் செயல்பட்டவர் என்றும் அவருடைய ஆட்சிக் காலம்தான் இந்தியாவின் முழு முகத்தையும் மாற்றி இருக்கிறது என்றும் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? உண்மை!

சிங் செயல்பாடற்ற ஒரு பிரதமர் என்பது உண்மையில் அறியாமை. கல்வி, சுகாதாரம், தொழில், கனிம வளங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி, வெளியுறவு என எல்லாத் துறைகளிலும் கால் பதித்து இருக்கிறார் சிங். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை சிங்குக்கு முன்… சிங்குக்குப் பின் என்று கூடப் பிரிக்கலாம். ஆனால், அவருடைய எல்லா முயற்சிகளும் இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை அடித்து நொறுக்கி இருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.

அடிவாங்கிய அஸ்திவாரம்!

பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ”நாட்டின் வளர்ச்சியைக் கல்வியில் இருந்து தொடங்கி இருக்கி றோம். அனைவருக்குமான வளர்ச்சியின் அஸ்திவாரம் அதுதான்” என்றார் சிங். நாடு முழுவதும் 1964-ல் ஆய்வுசெய்த கோத்தாரி ஆணையம், இந்தியா கல்வித் துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்றால், அதற்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஆறு சதவிகிதத் தொகையைக் கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டும் என்றது.

ஆனால், தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசுகள் அதில் பாதி அளவை ஒதுக்கீடு செய்யவே யோசித்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற போது, கல்வித் துறையின் தேவை 16 சதவிகித ஒதுக்கீட்டைக் கோரியது. நிச்சயம் இனிமேலாவது ஆறு சதவிகித ஒதுக்கீடு செய்வோம் என்றார் சிங். ஆனால், அவரது வார்த்தைகள் அவருடைய காதுகளுக்கே கேட்காமல் போயின. விளைவு, அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி! உலகில் கல்விக்குக் குறைந்த அளவே ஒதுக்கும் நாடுகள் தொட ர்பான ‘யுனெஸ்கோ’வின் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது இந்தியா.

ஆனால், சிங் பொறுப்பேற்றதற்குப் பிறகான இந்த எட்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 18.84 சதவிகிதத்தில் இருந்து 26.09 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, மணிப்பூர் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மூன்றில் இரு பள்ளிகள் என்ற அளவுக்குத் தனியார் ஆதிக்கம் பள்ளிக் கல்வியில் ஓங்கி இருக்கிறது.

கல்வித் தரத்திலும் இந்தியா ஜொலிக்கவில்லை. சர்வதேச அளவிலான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்ற அமைப்பு (ஓ. இ.சி.டி.) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு இந்தியக் கல்வித் துறைக்குக் கிடைத்த மிகப் பெரிய அடி. 15 வயதுக்கு உட்பட்ட இந்திய மாணவர்கள் பாடங்களை வாசிப்பதிலும் அறிவியல் பாடங்களிலும் கடைசி வரிசையில் இருப்பதை அந்த அமைப்பு நடத்திய சர்வதேச அளவிலான தேர்வு முடிவுகள் கூறின. அரசு சாரா நிறுவனமான ‘பரதம்’ அமைப்பின் ஆய்வறிக்கையோ (அசெர்) இந்தியாவில் பெரும் பான்மையான ஐந்தாம் வகுப்பு மாணவர் களால் இரண்டாம் வகுப்புப் பாடங்களையே படிக்க முடியவில்லை என்கிறது.

பெண் கல்வியில் ஆப்பிரிக்கா நீங்கலாக ஆஃப்கன், பூடான், பாகிஸ் தான், பபுவா நியு கினியா ஆகிய ஐந்து நாடுகள்தான் இந்தியாவை விடக் கீழ் நிலையில் இருக்கின்றன. அனைவருக்கும் கல்வி இய க்கம், கல்வி உரிமைச் சட்டம் என அரசின் எந்த நடவடிக்கை யாலும் ஆரம்பக் கல்வியை மீட்டெடுக்க முடியவில்லை. உயர் கல்வியோ முழுக்க முழுக்கத் தனியாருக்குத் தாரை வார்க்கப் பட்டுவிட்டது!

சுகாதாரத்தைப் பீடித்த நோய்!

ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளை எடுத்துக் கொண்டால், இந்தியா உலகிலேயே அடிமட்ட நிலையில் இருக்கிறது. சிசு மரண த்தை எடுத்துக்கொண்டால், உலகில் ஆஃப்கன், கம்போடியா, மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மோசமான நிலையில் இந்தியாதான் இருக்கிறது. தொற்றா நோய்கள் எனப்படும் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பத்தில் எட்டு மரணங்களுக்குக் காரணம். சுகாதாரத்துக்கு அரசு கிட்டத்தட்ட 600 மடங்கு தன்னுடைய ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டிய சூழல். ஆனால், அரசோ ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவமனைக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக தனியாரை ஊக்குவிக்கும் மருத்துவக் காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.

சிங் ஆட்சியின் இந்த எட்டு ஆண்டு காலகட்டத்தில் மட்டும் வசதியின்மையால் சிகிச்சை பெற முடியாத வர்களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 10 கோடியில் இருந்து 21 கோடியாகவும் கிராமப்புறங்களில் 15 கோடியில் இருந்து 24 கோடியாகவும் அதிகரித்து உள்ளது. 71 சதவிகிதம் பேர் தனியார் மருத்துவ மனைகளை நோக்கித் தள்ளப்பட்டனர். உலக சுகாதார நிறுவனம், 70 சதவிகித இந்தியர்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை மருந்துக்காகச் செலவழிக்கும் நிலையை மாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 12-வது ஐந்தாண்டுத் திட் டத்தில் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுகாதாரத்துக்கு என 2.5 சதவிகிதம் தொகையை ஒதுக்கீடு செய்வோம் என்று கூறியது. ஆனால், இப்போது அதையும் 1.4 சதவிகிதமாக்கும் முயற்சியில் இருக்கிறது. பொது சுகாதாரத்துக்கு அரசு எவ்வளவு முக்கியத் துவம் அளிக்கிறது என்பதற்கு 2010-ல் மட்டும் மலேரியாவுக்கு 46,800 இந்தியர்கள் பலியானது ஒரு சின்ன உதாரணம்!

காத்திருக்கும் வெடிகுண்டு!

உலகின் மிகப் பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உரு வெடுத்தது சிங் ஆட்சிக் காலத்தில்தான். 2007-2011-க்கு இடையே உலகில் நடந்த ஆயுத ஏற்றுமதி யில் 10 சதவிகிதம் இந்தியாவின் பங்கு. ஆனால், ”ஒரு போர் வெடித்தால் இரண்டு நாளைக்குக் கூடத் தாக்குப் பிடிக்க வெடி பொருட்கள் நம்மிடத்தில் இல்லை” என்று நம் பாதுகாப்பு அமைப்பின் லட்சணத்தை நாட்டின் தரைப் படைத் தளப தியே போட்டு உடைத்ததும் சிங் ஆட்சிக் காலத்தில் தான். இந்தியா வின் மீது கிட்டத்தட்ட ஓர் அறிவிக்கப்படாத போர்த் தாக்குதலாக மும்பைத் தாக்குதல் நடந்தது.

கடல் வழியே நடந்த அந்தத் தாக்குதலுக்குப் பிறகும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை அடுத்த சில மாதங்களி லேயே பாதுகாப்புப் படையினர் யாருக்கும் தெரியாமல் வர்கோவில் தரை தட்டி நின்ற 1,000 டன் கப்பல் ‘எம்.வி.பாவிட்’ அம்பலமாக்கியது.

பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்தியா வின் அதிபயங்கரக் குற்றவாளிகள் என்று பாகிஸ்தான் அரசுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பிய 50 பேர் பட்டியலில் மும்பை, தானேயில் வசிக்கும் உள்ளூர் வியாபாரியான வஜுல் கமர்கான் பெயர் இருந்ததைப் பார்த்து சர்வதேச உளவுத் துறைகள் நக்கல் அடித்தன. காமன்வெல்த் போட்டிகளின்போது நேரு மைதானத்துக் குள் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தைக் கடத்திச் சென்று ஆஸ்திரேலியத் தனியார் தொலைக்காட்சி படம் காட்டியபோது, நம்முடைய பாதுகாப்பு அமைப்புகளைப் பார்த்து உலகமே சிரித்தது!

அணு சக்தித் துறையில் சர்வதேசத்தின் போக்கை ஃபுகுஷிமாவுக்கு முன் – ஃபுகுஷி மாவுக்குப் பின் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஆக்கபூர்வ அணு சக்தி என்பதும் அணு சக்திப் பாதுகாப்பு என்பதும் வடிகட்டிய பொய் வாதங்கள் என்பதை நிரூபித்த இடம் ஃபுகுஷிமா. அணு சக்தி மின்சார உற்பத்தியில் உலகுக்கே முன்னோடியாக இருந்த ஜப்பான், ஃபுகுஷிமாவுக்குப் பின் தன்னுடைய நாட்டில் உள்ள அத்தனை உலைகளையும் மூடியது. அணு சக்தி வேண்டுமா, வேண்டாமா என்று இத்தாலி நடத்திய பொது வாக்கெடுப்பில் பெரும்பான் மை மக்களின் விருப்பப்படி, அணு சக்திக்கு எதிரான முடிவை இத்தாலி எடுத்தது. ஜெர்மனி தன்னுடைய நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளையும் 2022-க்குள் மூடப்போவதாக அறிவித்தது.

தன்னுடைய முதலாவது ஆட்சிக் காலத்தில் இந்திய அணு சக்தித் துறையைப் பன்னாட்டுப் பெரு நிறுவனங் களுக்குத் திறந்துவிட்ட சிங்கின் அரசோ, ஃபுகுஷிமா வுக்குப் பிறகுதான் அணு சக்தித் துறையை வெறித்த னமாக உசுப்பிவிட ஆரம்பித்தது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அடித்தட்டு மக்களின் பெருந்திரள் அறவழிப் போராட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கா னோருக்கு எதிராக தேசத் துரோக வழக்குகளைப் பதிவுசெய்தது, இந்த அரசின் குரூர முகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று. கொடுமை என்ன என்றால், அணு சக்தி நாடுகளில், பாதுகாப்பான கட்டமைப்புக்கான தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 32 நாடுகளில், இந்தியா இருப்பது 28-வது இடத்தில்!

வீங்கும் பொருளாதாரம்!

சிங் பொருளாதாரத்தில் பெரிய நிபுணராக இருக்கலாம். ஆனால், அவருடைய அரசுக்கு மரண அடி விழுந்திருப்ப தே பொருளாதாரத் துறையில் தான். சர்வதேச அளவி லான பொருளாதாரத் தர மதிப்பீட்டு நிறுவன மான ‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, இந்தியப் பொருளாதார த்தின் எதிர்காலம் ‘நிலைத்த தன்மை’ என்ற நிலையில் இருந்து ‘எதிர்மறைத் தன்மை’ என்ற நிலைக்குப் போகிறது என்று கடந்த ஏப்ரல் மாதம் எச்சரிக்கை விடுத்தது. இந்த வாரம் ‘ஃபிட்ச்’ நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

இப்படி எச்சரிக்கைக்கு உள்ளாகும் நாடுகள் எல்லாம் படிப்படியாகப் பொருளாதார மந்த நிலையை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த மதிப்பீடுகள் எல்லாம் இந்தியாவில் செல்லாது என்றார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஆனால், மத்தியப் புள்ளியியல் நிறுவனம் தந்துள்ள தகவல்களின் படி பார்த்தாலே, இந்த ஆண்டு நாட்டின் மொத்த வளர்ச்சி 6.5 சதவிகிதமாகத் தான் இருக்கும். கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வெறும் 5.3 சதவிகிதம்தான். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மிகக் குறைந்தபட்ச அளவு இது.

அதாவது, தாங்கள் பொறுப் பேற்பதற்கு முன் இருந்த காலகட்டத்துக்குப் பொருளாதாரத்தைத் தள்ளி இருக்கின்றனர் சிங்கும் அவருடைய சகாக்களும்.
விலைவாசி, பணப்புழக்கம், பணவீக்கம் என்ற கணக்கை எல்லாம் விடுங்கள். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப் பேற்ற போது ஒரு டீயின் விலை 2. இன்றைக்கு 6. மூன்று மடங்கு உயர்ந்து இருக்கிறது. சென்னை நகரில் கடந்த ஆண்டு 4,000 வாடகைக்குக் கிடைத்த 300 சதுர அடி வீட்டின் இன்றைய வாடகை 6,000. நம்முடைய வருமானம் எத்தனை மடங்கு உயர்ந்து இருக்கிறது?

உலகிலேயே பெட்ரோலியப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவ தில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஒரு நாடு, அதுவும் தன்னுடைய பெட்ரோலியத் தேவையில் 70 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கும் நாடு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் சூழலில் என்ன செய்ய வேண்டும்? நகை முரணாக, இப்படி ஒரு காலகட்டத்தில் தான் இந்தியாவில் வாகன ங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தது. பெட்ரோல் விற்கும் இரான் கூட ரேஷன் முறையைக் கொண்டு வந்தது. ஆனால், பொருளாதாரச் சூரர் சிங்கின் அரசு ஒன்றுமே செய்ய வில்லை என்பதுதான் உண்மை. அதேபோல, விலைவாசி உயர்வைத் தடுக்க on line வணிகத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்ற கோரிக்கைக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவி சாய்க்கவில்லை.

இந்திய விவசாயிகள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு இடம் பெயர்தல் என்பது காலம்காலமாகத் தொடரும் சாபக்கேடு. ஆனால், விவசாயிகளை மாநிலங்களுக்கு இடையே அகதிகளாக இடம் பெயர வைத்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கே உரிய தனித்துவ சாதனை. இன்றைக்கு உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மணிப்பூர், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையையும் பெங்களூரையும் திருவனந்தபுரத்தையும் நோக்கிப் படையெடுக்கிறார்கள் என்றால், என்ன காரணம்?

ஓர் இந்திய விவசாயி கடனாளியாகப் பிறக்கிறான், கடனாளியாக வே வாழ்கிறான், கடனாளியாகவே சாகிறான். அலங்கார வாக்கி யம் அல்ல இது. அரசின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு சொல்லும் உண்மை. நாட்டின் இரண்டு விவசாயிகளில் ஒருவர் கட னாளியாக இருக்கிறார். இன்னொருவர் கடன் வாங்கும் நிலையில் இருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் கால த்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயியின் உயிர் இந்த மண்ணைவிட்டுப் பிரிகிறது. உலகிலேயே மிகப் பெரிய தற்கொலைப் பிரதேசம்… மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் 60,000 கோடிக் கடன்களை ரத்துசெய்ததை வரலாற்றுச் சாதனையாகச் சொல்லிக் கொண்டார் சிங். ஆனால், அதே அரசு பெருநிறுவனங்களுக்கு மானியமாகவும் வரிச் சலுகையாகவும் கடந்த ஆண்டு மட்டும் வாரி வழங்கியது 4.87 லட்சம் கோடி. வறுமை ஒழிப்புக்காக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அளிக்கப்பட்ட மொத்த மானியத்துக்குச் சமமானது இது.

நாட்டுக்கு சிங் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கை நம் மை எவ்வளவு சுருட்டி இருக்கிறது என்பதை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி எளிமையாகச் சொல்லி விடும். 1991-ல் ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21. இப்போது 57.00.
சர்வம் ஊழல்மயம்!

ஞாபகம் இருக்கிறதா? சிங் அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் காப்பாற்ற ஆளும் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக பா.ஜ.க. உறுப்பினர்கள் நாடாளு மன்றத்தில் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிய காட்சி! இந்தியர்களுக்கு கோடி என்ற வார்த்தையின் போதாமை யை உணர்த்திய ஆட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தான். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1,76,379,00,00,000 முறைகேடு நட ந்து இருக்கிறது என்ற செய்தி வெளியானபோது, பெரும்பான்மை இந்தியர்கள் அதை எப்படிப் படிப்பது என்றுதடுமாறிப் போனார்கள்.

ஏதோ அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள்தான் ஊழல் செய்வார்கள் என்று இருந்த சூழலை உடைத்து எறிந்ததும் இந்த அரசின் சாதனைதான். சிங்கின் ஆட்சியில் ஊழல் நடக்காத, ஊழலில் ஈடுபடாத அரசுத் துறையினரே இல்லை. ”ராணுவக் கொள் முதலில் நடக்கும் ஊழலுக்கு ஒத்துழைக்க எனக்கே லஞ்சம் கொடுக்க முயன்றார்கள்!” என்றார் நாட்டின் தரைப் படைத் தளபதியாக இருந்த வி.கே.சிங்.

முன்னாள்தளபதி ஜெனரல் கபூர் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பலர், ஆதர்ஷ் குடியிருப்பு முறை கேட்டிலும் நில ஒதுக்கீடு முறைகேடு களிலும் சிக்கினர். நாட்டின் தலை மை நீதி பதியாக இருந்த கே.ஜி. பால கிருஷ்ணன் முறைகேடு குற்றச்சாட்டுகளில் சிக்கினார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சுதந்திர இந்தியாவின் முதல் பதவி நீக்க விசாரணையை நாடாளு மன்றத்தில் நீதிபதி சௌமித்ர சென் எதிர்கொண்டார்.

சுரங்கக் கொள்ளையர்கள் ரெட்டி சகோதரர்கள் மீதான வழக்குகளில் ஜனார்த்தன ரெட்டியை விடுவிக்க, 5 கோடி லஞ்சம் வாங்கிய ஆந்திர மாநில சி.பி.ஐ. நீதிபதி பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டார். பிரதமரின் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டின் அறிவியல் தலைமை யகமான ‘இஸ்ரோ’ 4.5 லட்சம் கோடி அலைக்கற்றை முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானபோது, தேசமே அதிர்ந்தது.

சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்குப் போட்டி யாக, காமன் வெல்த் போட்டிகளை 40 ஆயிர ம் கோடி களைச் செலவிட்டு நடத்தினார் சிங். ஆனால், அது இந்தியாவுக்குப் புகழ் சேர்க்க வில்லை. சுரேஷ் கல்மாடி மூலம் இந்தியாவின் ஊழல் முகம் சர்வதேச அளவில் வெளிப்படத்தான் வழிவகுத்தது. கட்டிய பூச்சு காய்வதற்குள் நேரு மைதானம் முன் அமைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள டிரெட் மில் இயந்திரங்கள் ஒன்பது லட்ச ரூபாய் வாடகைக்கு எடுக்கப்பட்டதும் யாராலும் மறக்க முடியாத சம்பவங்கள்.

இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் 10 லட்சம் கோடி முறை கேடு இந்தியப் பிரதமரின் காலைப் பாம்பாகச் சுற்றிக்கொண்டு நிற் கிறது. இவ்வளவுக்குப் பிறகும், ‘திருவாளர் பரிசுத்தம்’ தோற்றத்தோடு சிங் உலவிக்கொண்டு இருப்பதுதான் அவருடைய சாதனைகளின் உச்சம்!

கறுப்புப் பூதம்!

ரேஷன் கடைக்கு 12.37-க்குக் கொடுக்கப்படும் மண் ணெண்ணெய், வெளிச் சந்தையில் 40-க்கு விற்கப் படுவது யாரால்? இந்திய ஆறு களின் மடி வறளும் அளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்படுவது யாரால்? இந்திய ரியல் எஸ்டேட் துறை யாருடைய கண் அசை வில் இயங்குகிறது? கள்ளச் சந்தை, சூதாட்டம், கடத்தல், ஹவாலா அட, நாட்டின் பொருளாதாரக் கேந்திரமான மும்பை யார் கையில் இருக்கிறது? நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் ஐந்தில் ஒரு பங்கு மாஃபியாக்கள் கையில் போனது ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசின் முக்கியமான சாதனைகளில் ஒன்று.

உலகிலேயே தரமான இரும்புத் தாது கிடைக்கும் பெல்லாரியை உலகமே பார்க்க… ரெட்டி சகோதரர்கள் சுரண்டித் தின்கிறார்கள். ஒரு காலத்தில் ஓட்டு போடச் சென்றாலே, போலீஸார் போட்டுத் தள்ளி விடுவார் களோ என்று பயந்து பதுங்கிக்கிடந்த அருண் காவ்லி மகாராஷ்டிரத்தின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பவனி வந்தார். ஜார்கண்டில் மட்டும் ஆண்டுக்கு 7 லட்சம் டன் நிலக்கரி சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. சுரங்கக் கொள்ளை யில் தரகு பார்த்தே உலகெங்கும் உள்ள வங்கிகளில் 1,800 வங்கிக் கணக்குகளை மதுகோடா தொடங்கினார். அரசின் எதிர் வினை என்ன?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஒரு வரலாற்று வாய்ப் பைக் காலம் கொடுத்தது. இந்தியர்களின் பணம் 22.5 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் சட்ட
விரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதை அமெரிக்கா வைச் சேர்ந்த பொருளாதார அமைப்பு ஒன்று பட்டியலிட்டது. இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி யில் கிட் டத்தட்ட சரி பாதித் தொகை இது. சிங்கும் பிரணாப்பும் சிதம்பரமும் நினைத்திருந்தால், கறுப்புப் புள்ளிகளைக் கட்டம் கட்டி அவர்கள் மூலமாகவே இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர முடி யும். ஆனால், இந்த விவரங்கள் வெளியான தையே அரசு ஒரு சங்கடமாகக் கருதியது.

கடந்த 2008-ல் ஜெர்மனி அரசு 50 இந்தியர்களைப் பற்றிய விவரங் களை இந்திய அரசிடம் கொடுத்தது. எல்லாம் கறுப்புப் புள்ளிகள். அரசு அலட்டிக் கொள்ளவே இல்லை. ”அந்தப் பட்டியலில் இருக்கும் விவரங்களை வெளியிடு வதில் அரசுக்கு என்ன சிரமம்?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசோ, சர்வதேச உடன்படிக் கைகளைக் காரணம் காட்டி சப்பைக் கட்டு கட்டியது.

2011-ல் சுவிஸ் வங்கி ஒன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் கறுப்புப் புள்ளிகள் 2,000 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை ‘விக்கிலீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேவிடம் அளித்தார். இதற்குப் பின், ‘சுவிஸ் வங்கி களில் அதிகம் பணம் போட்டிருப்பவர்கள் இந்தியர்கள்தான்” என்று அசாஞ்சே சொன்னார். இந்தக் கறுப்புப் பணத்தில் கணிசமான பகுதி சட்ட விரோதமான முறையில் அந்நிய மூலதனமாகப் பங்குச் சந்தைக்குத் திரும்பி வருவதை நம்முடைய உளவு நிறுவனங்கள் அரசுக்குக் கூறின. எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அரசு.

இந்தியாவின் ஹவாலா மன்னன் ஹசன் அலி கானுக்கு சுவிஸ் வங்கியில் உள்ள ஒரு கணக்கில் மட்டும் 8 பில்லியன் டாலர் இருப்பு இருப்பது தெரியவந்தது. அலி 50 ஆயிரம் கோடி வரி பாக்கி வைத் திருப்பதாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இத்தனைக்குப் பிறகும் அலியை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை!

வெளியுறவு பொம்மலாட்டம்!

இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையே இந்தியா தனித்து இயங்கு வதே – எல்லோருக்கும் நல்லவராக இயங்குவதே சரி’ என்று ஜவஹர்லால் நேரு முடி வெடுத்தது ராஜதந்திர ரீதியாக ஓர் எடுபடாத முடிவாக இருக்கலாம். ஆனால், அதில் ஒரு தொலை நோக்குப் பார்வை இருந்தது. முக்கியமாக, அந்தப் பார்வையில் அறம் இருந்தது. அணிசேரா நாடுகள் அமைப்பின் பின்னணியில், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு மதிப்பை அது தந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியா வுக்கு உள்ள மதிப்பு என்ன? நம்முடைய நிலைப்பாடு தான் என்ன? முதலில் நமக்கு என்று இன்று தனியாக ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்கிறதா?நம்முடைய அண்டை நாடு ஏதாவது நமக்கு நண்பனாக இருக்கிறதா?

நேபாளத்தில் மக்கள் மாவோயிஸ்ட்டுகளைத் தேர்ந் தெடுத்த போது, அங்கு ஆட்சிக் கவிழ்ப்பை சிங் அரசு நடத்தியது. இந்தியாதான் வங்க தேசம் என்ற தேசம் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால், இந்தியா வுக்குள் வரும் கள்ளத் துப்பாக்கிகள் தொடங்கி போதைச் சமாசாரங்கள் வரை சகலமும் வங்கதேசம் வழியாகத் தான் வருகின்றன. சீனாவுடனும் அமெரிக்காவுடனும் அளவுக்கு மீறிக் கொஞ்சிக் கொண்டு இருந்த இலங்கை யை அடக்கி வைக்க தமிழ்ப் போராளி க் குழுக்களை இந்தியாதான் வளர்த்துவிட்டது. சிங் அரசோ, இறுதியில் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு அவர்களை அழித்தொழித்தது.

ஆஃப்கன் அரசியலில் அடியெடுத்து வைத்த நாடுகள் அனைத்தும் இது வரை அழிவையே சந்தித்து இருக்கின்றன. இந்தியாவுக்கு அங்கு என் ன வேலை? ஆஃப்கனில் இந்தியத் தூதரகங்கள் சும்மாவா தாக்குதலுக்கு ஆளாகின்றன? மியான்மரில் மக்கள் ஆட்சியைக் கொண் டுவந்திருக்க வேண்டியது இந்தியாவின் பணி.

ஆனால், சீனாவுக்கு நெருக்கமான ராணுவ ஆட்சியாளர் களுடன் அரசு கை கோத்திருந்தது. பாகிஸ்தானை இந்திய அரசால் அடக்கிவைக்கவே முடிய வில்லை. சீனாவுடனோ இன்னொரு பனிப் போரை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. அரபு வசந்தத்தின் போது சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் குரல் ஒலித்தது. நாளைக்கே அமெரிக்கா இரானுக்கு எதிராகப் போர் தொடுத்தால், மன்மோகன் படைகளை அனுப்பி வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
பெருநிறுவனங்களின் பேயாட்டம்!

நீரா ராடியா உரையாடல் பதிவுகளை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா? இந்த நாடு யாருடையது, இந்த நாட்டை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதை உலகுக்குச் சொன்ன உரையாடல்கள் அவை. ரத்தன் டாடாவைப் பற்றி, அம்பானி சகோதரர்களைப் பற்றி, சுனில் மிட்டலைப் பற்றி, தருண் தாஸைப் பற்றி, கருணாநிதியைப் பற்றி, ராஜாத்தி அம்மாளைப் பற்றி, தயாநிதி மாறனைப் பற்றி, பிரபு சாவ்லாவைப் பற்றி, பர்கா தத்தைப் பற்றி… சிங் அரசாங்கத்தின் சூத்திரதாரிகளைப் பற்றி என்றென் றைக்குமான பதிவுகள் அவை.

அலைக்கற்றை வழக்கு விசாரணையின்போது, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினரிடம் நீரா அளித்த ஒரு வாக்குமூலம் போதும், சிங்கின் அரசு யாருடைய பிரதிநிதி என்று சொல்ல! நீராவின் அந்த வாக்குமூலம்: ”ஆமாம். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவுடன் பேசினேன். என்னுடைய வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அரசின் முடிவை மாற்றி னேன். அதற்காக 60 கோடி பெற்றேன். அது என் சேவைக்கான கட்டணம்!”

எல்லாவற்றையும் விட சங்கடம் தரும் செய்தி இது. ஜனநாயகத்தின் மீதான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தாக்குதல். இந்தியப் படைகள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரிய எதிரிகள் யார் தெரியுமா? தன் சொந்த மக்கள். காஷ்மீரில் 10 பேருக்கு ஒருவர் என்னும் விகிதத்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் வீரர்களைக் குவித்து காஷ்மீரில் அமைதி நிலவுவதாக சிதம்பரம் நம்பச் சொல்கிறார். ஆனால், காஷ்மீரிகள் ‘இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்றே எழுதவும் பேசவும் செய்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களிலும் இதே நிலைமை தான். சுதந்திர நாளை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இந்திய இயற்கை வளத்தை – பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 30 வகையான கனிமச் சுரங்கங்களைப் பெரு நிறுவன முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காக சிதம்பரம் நடத்தும் ‘பச்சை வேட்டை’ வனங்களின் பூர்வகுடிகளை அரசுக்கு எதிரான போராட்டத்தில் தள்ளி இருக்கிறது. விளைவு… நாட்டின் 16 மாநிலங்கள், 222 மாவட் டங்கள் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கத்தில். அதாவது, மூன்றில் ஒரு பங்கு இந்தியா மாவோ யிஸ்ட்டுகள் கையில் இருக்கிறது.

தெலுங்கானா, ஹரித்பிரதேசம், பந்தல்கண்ட், பூர்வாஞ் சல், மிதிலாஞ்சல், போடோலாந்து, கூர்கா லாந்து, கட்ச், விதர்பா என்று ஒன்பது பிராந்தியங்கள் தனி மாநிலக் கோரிக்கையோடு நிற்கின்றன.இத்தனையும் தாண்டி இந்தியா எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறது?

இந்தியர்களின் தனி மனித உழைப்பையும் இந்த நாட்டின் ஆன்மாவில் கலந்திருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வை யும் தான் நம்ப வேண்டி இருக்கிறது!

நன்றிக்குரியவர்கள் = சமஸ், விகடன் &
மழைக்காகிதம், விதை2விருட்சம்

*எம் அப்துல் காதர்

முகநூல்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 3:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அநியாயம் அநியாயம் அநியாயம் நமக்கு எப்போ நியாயம் கிடைக்கபோகிறது என்ன கொடுமை சார் இது



செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக