புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
mruthun
பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில்லா 2 திரை விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Jul 13, 2012 10:13 am

பில்லா 2 திரை விமர்சனம்

பில்லா 2 திரை விமர்சனம் Billa2takes-300x200

படம் : பில்லா 2
நடிப்பு : அஜித் , பார்வதி ஓமனக்குட்டன் , ப்ருணா அப்துல்லா , ரஹ்மான் , மற்றும் பலர்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் : சக்ரி டலோடி
தயாரிப்பு : சுரேஷ் பாலாஜி , சுனிர் கேடேர்பால்

பில்லா 2 , மங்காத்தா என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த அஜித்தின் அடுத்த படம் , 2007 இல் வெளியாகி சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வரும் படம் . உன்னைப்போல் ஒருவன் என்ற வெற்றித் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த சக்ரி டலோடியின் இரண்டாவது படம் . இவ்வாறு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டு வெளிவந்திருக்கும் பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா??? நிச்சயமாக ஆம் என்று கூறலாம்

படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் “தம்” அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்…உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா…என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது…!

சக்கரவர்த்தி டொலட்டி”க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்

படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக “மதுரை பொண்ணு…” பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி…சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க…!(கலக்கலோ கலக்கல் தான்..இந்த பாட்டில எந்த பொண்ண பார்த்தாலும் சூப்பர் ஆக இருக்கு…மச்சீ என்று என் நண்பன் ஷான் சொல்ல கேட்டேன்..!)

படத்தி ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்…!
படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த…..தலதான் என்று…!

படத்தின் எடிட்டர்க்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு…தனது கடமையை முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது இருக்கின்றார்..!

படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டுவது போல இல்லாமல்..அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அடிக்கடி இயக்குநர் அனுப்பி விடுகின்றார்..அவ்வளோ பிரமாதமான திரைக்கதை…படத்தில் பெரிய திருப்பம் “பில்லா தான்தான் இனி எல்லா ஆயுத பிஸ்னஸ் எல்லாவற்றையும் செய்வதாக சொல்லும்” கணத்தில் இருந்து படம் சூடு பிடிக்க தொடங்குகின்றது…இறுதிவரை தனது தனித்துவத்திற்க்காக போராடும் ஒரு தலைவனாக பில்லாவை காட்டி இருப்பது “சக்கரவர்த்தி டொலட்டி”க்கு ஒரு பெரிய வெற்றி…!

பில்லா-II முடியும் இடத்தில் இருந்து பில்லா-2007 தொங்குகின்றது என்பது படத்தின் சளைக்காத கதையின் வடிவமைப்பிற்க்கு கிடைத்த மாபெரும் கரவோசம்..!பில்லா-III இனை குறி வைத்து “சக்கரவர்த்தி டொலட்டி” கதையை நகர்த்தி இருபது தெளிவாக தெரின்கிறது..அந்த படமும் தயாராகும் போலதான் இருக்கு போற போக்கை பார்த்தால்…!

இறுதியில் படம் யுவனின் இனிய குரலுடன் தொடங்கும் “gang gang ganster…” பாடலுடன் முடிவுக்கு வருகின்றது..இறுதியாக எழுத்து ஓட்டத்துடன் அஜித்தின் சாகாசங்கள் காடப்படுகின்றது…!

வழக்கமையான படங்களை போல் அல்லாது வித்தியாசமான ஒரு புதிய முயற்சி ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் இருந்த படம்…இப்போது வழமைக்கு மாறாக சாதனைகளின் குமியலாக வலம்வந்துகொண்டிருக்கின்றது…!

பில்லா பாகம் இரண்டு இனி தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொடக்கம்…நேரம் போறதே தெரியாமல் இருக்கின்றது படத்தின் முக்கிய ஒரு பிளஸ் பாயிண்ட்..

பில்லா 2 – அஜித்தின் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல்

நன்றி – http://yaalpaady.blogspot.ca/2012/07/blog-post_12.html

நன்றி – http://www.tamilyouthcafe.com/cinema/15492

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 13, 2012 10:37 am

படம் பார்த்துட்டாங்களா? இன்றுதான் மலேசியாவில் ரிலிசாகிறது! தல படம் என்றால் சொல்லவா வேண்டும்! நிச்சயம் கலக்கல்தான்!



பில்லா 2 திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 13, 2012 10:54 am

தல , தல தான் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Guest
Guest

PostGuest Fri Jul 13, 2012 11:32 am

சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Jul 13, 2012 1:24 pm

ஒரு அகதி.. பஞ்சம் பிழைக்க தமிழ் நாடு வர்றார்.. அங்கே இருக்கும் லோக்கல் பார்ட்டி கிட்டே வைரக்கடத்தல் செய்யும் வேலை சக்சஸ்ஃபுல்லா செய்யறார்.. விக்ரமன் படத்துல ஒரே பாட்டுல ஹீரோ உழைப்பால பெரிய ஆளா 3 நிமிஷத்துல ஆகற மாதிரி ஹீரோ கொலையால, குயுக்தி மூளையால ஸ்டெப் பை ஸ்டெப்பா பெரிய ஆள் ஆகறார்..


ஹீரோவுக்கு ஒரு அக்கா,, அக்காவுக்கு ஒரு பொண்ணு.. ஆக்‌ஷன் கதைல தேவை இல்லாம எதுக்கு அக்கா கேரக்டர்னு அவங்க பாதிலயே பரலோகம் அனுப்பிடறாங்க.. முறைப்பெண்ணுக்கு இப்போ ஹீரோதான் கார்டியன்.. ஆனா அவருக்கு லவ் பண்ண எல்லாம் டைம் இல்லை.. “குருவி”யை சுடற மாதிரி எதிரிகளை சுடவே அவருக்கு நேரம் சரியா இருக்கு..


வில்லனை மீட் பண்றார்.. அவன் கூட பிஸ்னெஸ் டீலிங்க் பண்றார்.. நாமெல்லாம் 15 வருஷம் கூடவே படிச்ச ஃபிரண்டுக்கு நம்ம கேர்ள் ஃபிரண்டை காட்ட 10,000 தடவை யோசிப்போம்.. ஆனா வில்லன் சுத்த கேனக்கிறுக்கன் போல முத சந்திப்பிலயே தன் கேர்ள் ஃபிரண்ட் இவதான்னு ஹீரோவுக்கு அறிமுகம் பண்ணிடறான்.. அவளும் ஹீரோ மேல ஒரு கண்ணை வெச்சுக்கறா ( இன்னொரு கண்ணை வில்லன்
மேல )


ஃபாரீன் பட ரேஞ்சுக்கு ப்டம் இருக்கனும்னு திடீர்னு ஹீரோ கடத்தல் பிஸ்னெஸ்ல ஆயுதக்கடத்தல் ஸ்டார்ட் பண்றாரு.. என்ன விசேஷம்னா ஹீரோ வெச்சிருக்கற அதே மாடல் கன் தான் மற்ற எல்லா அடியாள்ங்க, வில்லன்க எல்லாரும் வெச்சிருக்காங்க.. ஆனா அவங்க எல்லாம் சுட்டா ஹீரோவுக்கு ஏதும் ஆகலை, ஆனா ஹீரோவோட ஒரு ஷூட் கூட மிஸ் ஆகறதே இல்லை.. இடைவேளை வரை நாயகன் டைப் ல மாஃபியா ஆகும் கதை பர பர ஆக்‌ஷன்;ல சொல்லி இருக்காங்க,..

இடைவேளைக்கு பிறகு தான் டைரக்டருக்கு குழப்பம்.. ஏன்னா கதை கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரி .. இன்னும் ஒரு மணி நேரம் படத்தை எப்படி இழுக்க? ஆ,.,. ஐடியா..


ஹீரோ ஒரு நாட்டின் சி எம்மையே மிரட்றாரு.. சி எம் நம்ம் கலைஞர் மாதிரி காசுக்கு ஆசைப்படறவரா இருந்தா கமுக்கமா டீல் போட்டு ஓக்கே சொல்லி இருப்பாரு.. ஸ்மூத்தா ஹீரோ லைஃப் போய் இருக்கும்.. ஆனா சி எம் தமிழ் நாடு சி எம் இல்லை.. அவர் குஜராத் மோடி மாதிரி.. போல..


அதனால ஹீரோ என்னமோ தன் வீட்டு வாட்ச் மேனை கொலை பண்ற மாதிரி அல்ப சொல்பமா சி எம்மை ஈசியா கொலை பண்ணிடறார்.. கேஸ் நடக்குது.. அஜித் ப்டத்துல அஜித் தானே நடக்கனும்././ கேஸ் நியாயமா நடக்கலாமா?

ஜட்ஜ் ஜை மிரட்டி ஜாமீன் வாங்கிடறார்.. மிச்ச மீதி இருக்கும் வில்லன்களை எல்லாம் போட்டுத்தள்ளறார்..

படத்துல ஹீரோயின் இருக்கறாரே அவரை என்ன பண்ண? வில்லன் ஹீரோயினை போட்டுத்தள்ள, ஹீரோ மிச்ச மீதி இருக்கும் வில்லன்க எல்லாரையும் போட்டுத்தள்ளிடறார்.கடைசில எண்ணிப்பார்த்தா... அவர் எதையும் எண்ணிப்பார்க்க டைம் இல்லை.. ஆடியன்ஸ் எண்ணிப்பார்த்தா படத்துல மொத்தம் 89 கொலை.. அதுல ஹீரோ மட்டும் 78 பண்ணிடறார்.. உஷ் அப்பா கண்ணை கட்டுது..


அஜித் நடிப்பை பற்றி பார்க்கறதுக்கு முன்னே அவரோட தோற்றத்தை பற்றி ஒருவார்த்தை. தமிழ் சினிமால இப்போ இருக்கும் ஹீரோக்களில் கோட் சூட் போட்டுட்டு ஹேண்ட்சம்மா இருக்கும் ஹீரோக்களில் இவருக்கே முதல் இடம், ரேபான் கூலிங்க் கிளாஸ், ரேமண்ட் பேண்ட் சர்ட்டுக்கான விளம்பர மாடல்னு சில ர் கிண்டல் அடிச்சாலும் அஜித் செம பர்சனாலிட்டி ஹீரோதான், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ஸ்பை கேரக்டர் பண்ணா படம் அள்ளிக்கும்...


இந்தப்படத்துல அஜித் புதிய பாணில வசனம் பேசி இருக்கார்.. அதாவது தேவைப்படும் இடத்துல மட்டும் தான் டயலாக்.. ஷார்ப்.. அவர் பேசும் வசனங்கள் 25 இடத்துல 16 இடங்கள்ல கை தட்டலை அள்ளிக்குது..


ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டன் கேரளா ஜிகிடி,, பொதுவாவே நம்மாளுங்களுக்கு கேரளான்னா ஒரு கிளுகிளுப்புத்தான்.. ( அதுக்கு என்ன
ரீசன்?ன்னு உன் நெஞ்சைத்தொட்டு சொல்லு என் ராசா.. அப்டினு எல்லாம் கேட்கப்படாது) . ஜிகிடி முக அழகு 30% தேக அழகு 70 % கொண்ட சந்தனச்சிலை.. . பாப்பா ஓப்பன் யுனிவர்சிட்டில கில்மாலஜி படிச்சிருக்கும் போல ..... மாசத்துக்கு 30 நாளும் பாப்பாவை பார்த்துட்டே இருக்கலாம்.. 60 மார்க் போடலாம்


இன்னொரு ஜிகிடி ப்ரூனா அப்துல்லா.. ஜிகிடி கிட்டே ஒரு வேண்டுகோள், ப்ளீஸ்கட் த அப்துல்லா.. என்னமோ மாதிரி இருக்கு.. மற்றபடி பார்வதி ஓமனக்குட்டன்கூட போட்டி போடும் அளவு இருக்காங்க.. ஜிகிடிக்கு கண்கள் மட்டும் சின்னது,ஆனா கூர்மையான பார்வை.. இந்த பாப்பாவும் டூ பீஸ் டிரஸ் ல தான் சுத்துது,2 கர்ச்சீப் வாங்கிக்குடுத்து இதுதான் ஸ்விம்மிங்க் டிரஸ் என சொல்லிஏமாத்திட்டாங்க போல.ஆள் பாதி ஆடை பாதி பழமொழியை பொய்க்கும் வண்ணம் ஆள் இங்கே ஆடை எங்கே?எனகேட்கும் பூனம் பாண்டே ஜாதிப்பெண் போல. அவரோட 173 செமீ உயரத்துல 14 செமீ தான் உடை. கலாச்சாரக்காவலர்கள் கூட தியேட்டரில் திறந்த வாய்மூடாமல் ரசிச்சுட்டு இருக்காங்க. ஹீரோயின் நடிப்பு பற்றி சொல்லாம சம்பந்தம் இல்லாம என்ன உளறல்? சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்? பாப்பா பாதி நேரம் ஜட்டில தான் சுத்திட்டு இருக்கு. ஹி ஹி ஜட்டி போட்ட குட்டி..ஷேம் ஷேம் பப்பி ஷேம் .

இரா.முருகன் தான் படத்தோட ரியல் ஹீரோ.. வசனங்கள் செம ஷார்ப்.. ரஜினிக்கு எப்படி பாலகுமாரன் பாட்ஷாவுல ஸ்டார் வேல்யூவை தூக்குனாரோ அந்த மாதிரி.. இனி அஜித்தின் ஆஸ்தான வசனகர்த்தா ஆக வாய்ப்பு உண்டு.. வெல்டன் முருகன்..


இசை யுவன் ஷங்கர் ராஜா.. சுமார் ரகம் தான்.. பில்லா பாகம் 1 தீம் மியூசிக் வரும்போது எல்லாம் தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளுது../

படத்துல 4 வில்லன்க. எல்லாரும் ஓக்கே.. தான்.. பில்லா பாகம் 1 போல எல்லார் கண்லயும் கூலிங்க் கிளாஸ் எல்லாம் குடுக்கலை.. ஒன்லி ஃபார் ஹீரோ..




**மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை (இரா.முருகன் )*

1.உக்காந்து வேலை வாங்குறவனுக்கும், உயிரை கொடுத்து வேலை செய்யிறவனுக்கும்
வித்தியாசம் இருக்கு !

2. பார்ட்டியை முன்னே பின்னே பார்த்ததில்லையே நீ, எப்படி கண்டு பிடிப்பே?

நல்லவங்களை கண்டுபுடிக்கிறது தான் கஷ்டம்

3. ஆயுதங்களுக்கு மார்க்கெட் அமோகமா இல்ல ,சாவுக்குத்தான்.. சாவு இருக்கும் வரை
ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்

4. என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் , ஏன்
ஒவ்வொருநொடியும் நானா செதுக்கினது டா

5. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு. ஆனால் ஒரு டானுக்கு… ச‌ரித்திரம்.


6. என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும் வேண்டாம், ஆனா எதிரியாஇருக்கிறதுக்கு
தகுதி வேணும்”


7.மத்தவங்களோட பலவீனம் நம்ம பலம்.. மத்தவங்களோட பயம் நம்ம பலம்..


8. உன் பேரு என்ன?


பில்லா , டேவிட் பில்லா

எங்கே இருந்து வர்றே?

கடல்ல இருந்து


பவளத்துறைல ( படகுத்துறை) என்ன பண்ணிட்டு இருந்தே?

------ புடுங்கிட்டு இருந்தேன்


9. நீ தீவிரவாதியா?


தீவிரவாதிக்கும், போராளிக்கும் ஒரே வித்தியாசம் தான்.. போராடிட்டு இருக்கறவன் தோத்துட்டா
அவன் தீவிரவாதி, ஜெயிச்சுட்டா அவன் போராளி..



10. அவன் அகதிதான், ஆனா அநாதை இல்லை.. அவனுக்கு நான் இருக்கேன்..





11. லாரில என்ன?

என்ன? உங்களுக்கு ஜலதோஷமா?

என்ன நக்கலா?

பின்னே என்ன சார்? ஊருக்கே தூக்குது மீன் வாசம்.. உங்களூக்கு தெரியல?


12. இளவரசு - திருச்சிற்றம்பலம்

பாண்டிச்சேரி

திருச்சிற்றம்பலம்னா தூய தமிழ்ல வணக்கம்னு அர்த்தம் ( அய்யய்யோ, இனி டி பி கேடி டெயிலி
திருச்சிற்றம்பலம் சொல்வாரே?) நீ பதிலுக்கு சிவ சிதம்பரம்னு சொல்லனும்



13. செஞ்ச வேலைக்கு காசு வாங்கிட்டேன்.. இது எதுக்கு? வேணாம்..


இது நீ இனி செய்யப்போற வேலைக்கு



14. ஹீரோயின் - நீ குடுக்கற பரிசுப்பொருள் எதுவும் வேணாம்.. நீ அடிக்கடி என்னை பார்க்க
வந்தா போதும்./ ( பார்த்தா போதுமா?)


15. காலம் மாறிட்டு இருக்கு, காலத்துக்கு தக்கபடி நாமளும் மாறிட்டே இருப்பதே புத்திசாலித்தனம்


16. உன் தைரியம் அசாத்தியமானதுதான், ஆனா அளவுக்கதிகமா ஆசைப்படறே

இது ஆசை இல்ல அண்ணாச்சி, பசி



17. லேட்டா போனா பொறுப்பில்லைன்னு சொல்லிடுவாங்க,முன்னாலயே போனா வேற வேலை இல்லை
போலன்னு எளப்பமா நினைப்பாங்க.. அதனால சொன்ன டைம்க்கு ஷார்ப்பா
போகனும்.. அப்போதான் நம்ம மேல ஒரு நம்பிக்கை வரும்..


18. வில்லன் - என் இடம் பிடிச்சிருக்கா?


சொர்க்கத்தையே சொந்தமா வெச்சுக்கிட்டு பிடிச்சிருக்கா?ன்னு கேட்டா எப்படி?


19. இந்தப்பையன் நம்ம கூட இருக்க அவனுக்கு தகுதி இல்லைன்னு சொல்றீங்களா?


இல்லை, நம்ம கூட இருக்க அவனுக்கு தகுதி இல்லை ( 2ம் 1 தானே/)


20. பவர், தைரியம் மட்டும் போதாது , மேலே இன்னும் தகுதி வேணும்.. பிஸ்னெஸ்ல தப்பு
பண்ற மாதிரி இல்லை இது.. உயிர் போகும்.. நீ அதுக்கு ஒர்த் இல்லை


21. நான் வேலை விஷயமா வெளியூர் போகனும்..

என்னையும் கூட்டிட்டு போங்க..


வேலை விஷயமான்னு சொன்னேனே?



22. அவன் சின்ன வயசுல இருந்தே கூட இருக்கான், காட்டித்தர மாட்டான்..

இதுவரை காட்டிக்குடுத்தவங்க எல்லாரும் கூட இருந்தவங்க தான்.. சரித்திரத்தை புரட்டிப்பாரு


23. இப்போ நீ என்ன போட்டுக்குடுத்தே?



24. எமோஷனலா இருக்கறப்போ எந்த முடிவும் எடுக்காதே


ம் ம் அவன் என்னை வலர விடுவான்னு நான் நினைக்கலை.. விட மாட்டான்.. நானும் அவனை
விடப்போறதில்லை


25. ஜெயிப்பதற்காக 100 எதிரிகளை கொல்லலாம் தப்பில்லை, ஆனா ஒரு துரோகியை கூட
உயிரோட விட்டு வைக்கக்கூடாது



26. மக்களோட வறுமையை போக திட்டங்கள் மட்டும் பத்தாது, அரசாங்கத்துக்கு இந்த மாதிரி
நிதி உதவியும் தேவை



27. பிச்சைக்காரனா இருந்தாலும் சரி, கூலிக்காரனா இருந்தாலும் சரி , பிஸ்னெஸ் மேனா
இருந்தாலும் சரி உழைப்பு தான் அவனை உயர்த்தும், உழைக்கனும்//


28. வில்லன் - எனக்காக உயிரைக்குடுக்க லட்சக்கணக்கான மக்கள் இருக்காங்க..


மக்கள் உனக்காக ஓட்டு போடுவாங்க, ஆனா உயிரை. ம்ஹூம் குடுக்க மாட்டாங்க


29. நான் உன் வழில வர மாட்டேன், நீ என் வழில வராதே


30. நினைச்சதெல்லாம் முடிச்சுட்டியா?

இதான் ஆரம்பம்..


**இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் *

1. ஈழ அகதி கதை மாதிரி பில்டப் கொடுத்தது, விளம்பரங்கள் மூலம் செம மார்க்கெட்
பிடிச்சது.,. இந்தப்படம் ஒரு வாரம் ஹவுஸ்ஃபுல்லா ஓடுனாலே 64 கோடி கிடைக்கும்னு
சொல்றாங்க.. வெரிகுட் மார்க்கெட்டிங்க்


2. படத்தின் எடிட்டிங்க், வசனங்கள் செம ஷார்ப்..


3. அஜித் தவிர வேறு யார் நடிச்சாலும் இந்த அளவு எடுப்பட்டிருக்குமா என்றால் சந்தேகம்
தான்.. கேரக்டர் செலக்‌ஷன் கன கச்சிதம்.


4. பாடல் காட்சிகள் படத்தின் வேகத்தை தடை செய்யவில்லை.. ஒளிப்பதிவு, இசை சராசரி..


5. அகதியாய் இருக்கு8ம் சாதா ஆள் ஸ்டெப் பை ஸ்டெப் உயரும்போது அஜித் டிரஸ்ஸில், நடையில்
, கெத்தில் மாற்றங்கள் காட்டுவது செம//


**இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள் ( சக்ரி
டோலெட்டி)*



1. என்கொயரியில் ஒரு ஆஃபீசரிடம் ஒரு சாதா அகதி அவ்வளவு தெனாவெட்டாக பேச
முடியுமா?சும்மா விட்டுடுவாங்களா?


2. சைக்கிள்ல ஒரு அகதி தப்பி போகும்போது வில்லன் ஷூட் பண்றான்.. ஆக்சுவலி அவன்
அபப்டியே தான் விழுவான்,,.? ஆனா ஜம்ப் பண்ணி 2 அடி முன்னால விழறான்.. பீரங்கிலயா சுட்டான்?


3. ஸ்டேஷன்ல லாக்கப்ல தல அஜித் முகத்துல ஏகபட்ட வெட்டுக்காயம், ரத்தம்.. அடுத்த ஷாட் அவர்
வெளீல வர்றப்போ அப்பாஸ் மாதிரி மழு மழு கன்னம்


4. இளவரசுதான் அஜித்துக்கு முத ஓனர்.. ஆனா அவர் அடுத்த ஓனர்ட்ட போறப்போ அவர் தடுக்கலை,
வாழ்த்தலை. எதுவும் கருத்தே சொல்லலையே? ஒரு டேலண்ட் வேலைக்காரனை அவ்ளவ் சீக்கிரம் ஒரு
முதலாளி விட்டுக்குடுத்துடுவானா?



5. ஹீரோவோட அக்கா பொண்ணு ஹீரோ மேல பாசம் வெச்சிருக்கா, லவ்வறா.. ஆனா பார்ட்டில குடி
போதைல எவன் கூடவோ ஆட்டம் போட்டுட்டு இருக்கா// மனசுக்குள்ள த்ரிஷான்னு நினைப்பா?


6. ஹீரோ - ஹீரோயின் மனம் தொடும் காதல், அன்பு பரிமாற்றக்காட்சிகளே இல்லை.. அதனால
ஹீரோயின் ஆபத்துல இருக்கும்போது , சாகடிக்கப்படும்போது நமக்கு பதட்டமே வர்லை..


7. ஹீரோயின் வில்லனால். கொலை செய்யப்படும்போது வேடிக்கை பார்க்கும் ஹீரோ அவருக்கு
ஆபத்துன்னு வரும்போது வில்லனை தாக்கறார். அதே தாக்குதலை ஹீரோயினுக்கு ஆபத்து என்றதும்
ஏன் செய்யலை?


8. ஒரு நாட்டின் சி ம்க்கு ஒரே ஒரு ஜீப்பில் 2 ஆட்கள் தான் பாதுகாப்பா? அசால்ட்டா அப்படி
கொலை பண்ண முடியுமா?


9. தன் அக்கா பொண்ணுக்கு ஏன் ஹீரோ பாதுகாப்பு தர்லை? அநாமத்தா விடறார்? அப்புறம் அவரை
மலேசியா அனுப்ப எப்படி வில்லியை நம்பறார்? வில்லி கிட்டே பொறுப்பை ஒப்படைக்கறார்?

10. ஹீரோயின் வில்லி கூட மேட்டர் பண்ணாரா? இல்லையா? தெளிவா சொல்லலை.. ( ஏன்னா தமிழன்க
கதை தெளிவா இல்லைன்னா கூட கண்டுக்க மாட்டாங்க,,. இந்த மாதிரி கில்மா மேட்டர்ல கரெக்டா
சொல்லிடனும்)


11. அதே மாதிரி ஹீரோ ஹீரோயினை லவ்வறாரா? இல்லையா? என்பதையும் தெளிவா சொல்லலை

விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42 ,

குமுதம் ரேங்க் - ஓக்கே

** சி.பி கமெண்ட்* - இடைவேளை வரை ஓகே, நாயகன் டைப் மாஃபியா கதைதான்,இரா முருகன்
வசனம் சோ ஷார்ப்..பெண்கள் அதிகம் விரும்ப மாட்டாங்க,.,. ஆனா குவாலிட்டில மங்காத்தா,
பில்லா பாகம் 1 இவற்றை விட ஒரு மாற்று குறைவுதான், ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்

நன்றி http://tamilrockers.net/index.php/topic/7401-billa-2-review-archive/

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 14, 2012 11:44 am

நம்ம தல படம் சீக்கிரமா பார்க்கணும் ஜாலி




பில்லா 2 திரை விமர்சனம் Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 14, 2012 12:44 pm

பில்லா 1 போல் இல்லை வசனங்கள் ஓகே.! படத்தில் லொகேஷன் மிக அருமை கோவா வை காட்டி யுள்ளார்கள் இதற்கான காட்டிய தீவிரத்தை திரைகதையில் காட்டி இருக்கலாம்.
படத்தை உணர்வு வுடன் பார்க்க முடிய வில்லை படத்தில் மலையாள பட வாசனை வீசுகிறது.
ஆகா மொத்தத்தில் பில்லா 2 தேறுவது கடினம்..!



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jul 14, 2012 3:13 pm

எனக்கு படம் மிகவும் அருமையாக இருந்தது.... hi fi action படம்.

fight / glamour அதிகம் அதனால் தான் "A" certificate .... இந்த பில்லா-II படம் super hit என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.... சூப்பருங்க

படம் முழுவதும் தல ராஜ்ஜியம் தான்.... எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை....

ரெண்டு கதாநாயகிகள் தான் waste ....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 14, 2012 3:22 pm

பிரசன்னா wrote:எனக்கு படம் மிகவும் அருமையாக இருந்தது.... hi fi action படம்.
fight / glamour அதிகம் அதனால் தான் "A" certificate .... இந்த பில்லா-II படம் super hit என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.... சூப்பருங்க படம் முழுவதும் தல ராஜ்ஜியம் தான்.... எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை.... ரெண்டு கதாநாயகிகள் தான் waste ....
அதெல்லாம் சரி பிரசன்னா , எங்கே நீண்ட நாளா ஆள காணோம் , promotion வந்தவுடன் நிறைய வேலை செய்ய சொல்லுறாங்களா

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jul 14, 2012 3:31 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:எனக்கு படம் மிகவும் அருமையாக இருந்தது.... hi fi action படம்.
fight / glamour அதிகம் அதனால் தான் "A" certificate .... இந்த பில்லா-II படம் super hit என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.... சூப்பருங்க படம் முழுவதும் தல ராஜ்ஜியம் தான்.... எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை.... ரெண்டு கதாநாயகிகள் தான் waste ....
அதெல்லாம் சரி பிரசன்னா , எங்கே நீண்ட நாளா ஆள காணோம் , promotion வந்தவுடன் நிறைய வேலை செய்ய சொல்லுறாங்களா

தலைமை அலுவலகத்தில்... ஒரு rule இருக்கு... ஆனா ரொம்ப அநியாயமான rule. இதுக்கு தான் labour கோர்ட் போய் கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு இருந்தேன், ஆனால் அவுங்க என்னுடைய நியாயமான case எடுத்துக்க மாட்டங்கலாம்.

சரி விசயத்துக்கு வர்றேன்...
Rule: சம்பளத்திற்கு வேலை பார்க்கணுமாம்.... என்ன கொடுமை சார் இது...

இங்கே அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம். அதுவும் இல்லாமல், இங்கே seat arrangement வேற சரியில்லை... என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக