புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
85 Posts - 77%
heezulia
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_m10பரவும் கொட்டாவி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரவும் கொட்டாவி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:49 pm

First topic message reminder :



ஒருவர் கொட்டாவி விட்டால், பக்கத்தில் உள்ளவரும் கொட்டாவி விடுவார் என்று கூறுவார்கள். ஆனால் இது அறிவியல் ரீதியற்ற பொதுவான நம்பிக்கை என்பதுதான் நமது எண்ணமாக இருக்கும்.

தற்போது ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திவிட்டார்கள்- கொட்டாவி விடுபவர் நெருங்கிய உறவினராகவோ, நண்பராகவோ இருந்தால் அது நிச்சயமாகப் பரவும் என்று.

அருகில் உள்ளவர்கள் கொட்டாவி விடுவதைப் பார்ப்பவர்களும் ஏன் கொட்டாவி விடுவதைத் தவிர்க்க முடிவதில்லை என்ற கேள்வி நீண்டகாலமாக விஞ்ஞானிகளின் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.

தற்போது இத்தாலியின் பைசா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கொட்டாவி குறித்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கொட்டாவி விடுபவருக்கும், அவருக்கு அருகில் இருந்து அதைப் பார்ப்பவர் அல்லது கேட்பவருக்கும் உள்ள உறவைப் பொறுத்து கொட்டாவியின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள் இவர்கள்.

நெருங்கிய உறவினர்களுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் கொட்டாவி விடுவது அல்லது அதை அடுத்தவருக்குப் பரப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து.

இவர்கள் தெரிவிக்கும் கூடுதல் தகவல், குழந்தைகளுக்கு நான்கு அல்லது ஐந்து வயது வரை அடுத்தவரிடம் இருந்து கொட்டாவி தொற்றிக்கொள்வதில்லை. அவர்கள், அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து பழகத் தொடங்கும்போதுதான் கொட்டாவி தொற்றுகிறது.




பரவும் கொட்டாவி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 3:45 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:இது என்னமோ உண்மை தான் தல , சில நேரங்களில் நான் கொட்டாவி விட்டு தூங்குவது போல இருந்தால் லக்க்ஷனாவும் சிறிது நேரத்தில் தூங்கி விடுவார்.
சரி சரி கொட்டவி விட்டுகிட்டே பதிவ போடாதிங்க ஆபிசே தூங்கிட போகுது ஒன்னும் புரியல
என்ன முரளி வர வர நீங்க கவனிக்கறதே இல்ல - ராஜா எப்படி பர்ஸ்ட் கொட்டாவி விடுவாரு - அதுக்கு பெர்மிஷன் குடுத்திருப்பாங்களா?




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jul 12, 2012 5:48 pm

கொட்டாவிக்கு கொட்டாவி என்று எப்படி பெயர் வந்தது? எல்லோரும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.... என்ன கொட்டாவி வருதா ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 5:49 pm

தமிழ்நேசன்1981 wrote:கொட்டாவிக்கு கொட்டாவி என்று எப்படி பெயர் வந்தது? எல்லோரும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.... என்ன கொட்டாவி வருதா ஜாலி

கெட்ட ஆவியாக இருக்குமோ கொட்டாவி?



பரவும் கொட்டாவி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jul 12, 2012 6:04 pm



கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் என்பர்.

அலுப்பு, உளைச்சல், மிகுதியான பணிப்பளு, ஆர்வமின்மை, சோம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவியைத் தொடர்பு படுத்துகின்றனர். இது இடத்திற்கேற்றாற் போல் வெவ்வேறு பொருள் தரக்கூடிய சைகைக் குறிப்பாகவும் உள்ளது. கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட. அதாவது, வேறு ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்த உடனோ, கொட்டாவியைப் பற்றிப் படிக்கும் போதோ கொட்டாவி விடுவதைப் பற்றி எண்ணிப் பார்க்கும் போதோ கூட ஒருவருக்கு கொட்டாவி ஏற்படக்கூடும். சிம்பன்சிகளிலும் இதே போன்று தொற்றுவினை ஏற்படுவது அறியப்பட்டுள்ளது.

கொட்டாவியின் சரியான கரணியங்கள் அறுதியாக அறியப்படவில்லை. உயிர்வளிக் குறைவினால் இது ஏற்படுகிறது என்ற கூற்றும் அறிவியலில் முற்றாக நிறுவப்படவில்லை.பொதுவாக மூச்சு விடுவதைக் காட்டிலும் கொட்டாவி விடுகையில் உயிர்வளி குறைவாகவே உட்கொள்ளப் படுவதாகவும் சிலர் கருதுகின்றனர்.இது பதற்றத்தினால் கூட விளையும் என்றும் ஒருவரின் விழிப்புணர்ச்சியைக் கூட்ட வல்லது என்றும் அதனாலேயே வானிலிருந்து பரக்குடையுடன் குதிக்கும் முன்னர் கொட்டாவி ஏற்படுகிறது என்றும் சிலர் கருதுகின்றனர்.
பொருளடக்கம்



கருதுகோள்கள்:

பின்வரும் கூற்றுகள் கொட்டாவியின் காரணங்களாகக் கருதப்படுவன. ஆனால் அறுதியாக நிறுவப்படவில்லை.

௦௧.கொட்டாவியின் போது காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.
௦௨.நுரையீரல் நுண்ணறையிலுள்ள வளிக்கலங்கள் விரிவடைவதால் பரப்பியங்கி நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது.
௦௩.மூளை குளிர்வடைகிறது.
கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தன்னையறியாமல் வெளிக்காட்டுதல்
௦௪.குருதியில் கரிமவளி-உயிர்வளி நிலைப்பாடு மாறுபடுதல்.
௦௫.ஈடுபாடின்மையையைத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
அயர்வு
௦௬.அருகிலிருப்பவரது கொட்டாவியால் தமது செவியின் நடுவில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைச் சரிக்கட்டும் பொருட்டு
௦௭.மூளைக்குப் போதிய அளவு குளுக்கோசு கிடைக்காததால்



தொற்றிக் கொள்ளும் தன்மை:


கொட்டாவி எனும் தன்னேர்ச்சி வினை தொற்றிக்கொள்ளக்கூடியது என்று கருதுகின்றனர். அதாவது, ஒருவரது கொட்டாவி "பரிவு விளைவால்" மற்றொரு நபரில் கொட்டாவியை ஏற்படுத்தக்கூடும். “குமர் தனியாப் போனாலும் கொட்டாவி தனியாப் போகாது” என்ற பழமொழி இவ்விளைவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மற்றொரு நபர் கொட்டாவி விடுகையில் அவரது முகத்தை (அதிலும் குறிப்பாகக் கண்களைக்) காணுதல், கொட்டாவியைப் பற்றிப் படித்தல் அல்லது எண்ணிப்பார்த்தல் ஆகியவை கூட ஒருவருக்குக் கொட்டாவி வரச்செய்துவிடுமாம்! இத்தொற்றுவினையின் முழுமையான வழி அறியப்படாவிட்டாலும், இது இறுதியில் ஆடி நரம்புக் கலங்களால் (mirror neurons) ஏற்படுவதாக நம்புகின்றனர். இக்கலங்கள் சில முதுகெலும்பிகளின் மூளையின் முற்புறணியில் (frontal cortex) அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் அதே இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளிடமிருந்து பெறும் குறிப்புகளின் விளைவாக தமது மூளையிலும் ஒத்த பகுதிகளைத் தூண்டிவிடும் தன்மையைக் கொண்டவை.இத்தகு ஆடி நரம்புக்கலங்களே மனிதக் கற்கையின் அடிப்படையான பின்பற்றிப் பழகுதலின் பின்னால் இயங்குகின்றன. கொட்டாவியும் இதே வினையின் மற்றொரு வெளிப்பாடாக இருக்கலாம்.

2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மதியிறுக்கம் கொண்ட குழந்தைகளில் இவ்வகையான தொற்றுதல் ஏற்படுவது குறைவு என அறியப்பட்டுள்ளது. இதனால் கொட்டாவி பரிவு விளைவால் தொற்றிக் கொள்கிறது என்ற கருத்து வலுப்பெறுகிறது.

படிவளர்ச்சி நோக்கில் கொட்டாவி ஒரு மந்தை உணர்வாக இருக்கலாம். ஓநாய்கள் ஒன்றாக ஊளையிடுவதைப்போல, கொட்டாவியும் கூடி வாழும் விலங்குகள் ஒரே மனநிலைக்கு வருவதற்காக இயங்குவதாக ஒரு கருத்து உண்டு. அலுப்பைப் பிற விலங்குகளுக்கு அறிவிப்பதன் வாயிலாக தூங்கும் நேரங்கள் ஒன்றாக அமைய ஏதுவாகிறது. இது பல முதனிகளில் காணப்படுவது. தீங்கு நேரும் வாய்ப்பை அறிவித்தல் குழுக் கட்டுப்பாட்டை காக்க உதவுகிறது. இது தொடர்பில் சிம்பன்சிகளிலும்தட்டைவால் குரங்குகள் மீதும்ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு தன்னினத்தைச் சேர்ந்த பிற விலங்குகள் கொட்டாவி விடும் காட்சியை நிகழ்படத்தில் காண்பித்ததில் தாமும் கொட்டாவி விடத் துவங்கின.

கோர்டான் காலுப்பு என்பவர் கொட்டாவி மூளையைக் குளிர்விப்பதாகக் கருதுகிறார். அதே வேளையில் கொன்றுண்ணிகள் மற்றும் போட்டிக் குழுக்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும் வகையில் எழுந்த உய்வு உத்தி இது எனவும் கருதுகிறார்.

அண்மையில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கொட்டாவி மனிதர்களிடமிருந்து நாய்களுக்கும் தொற்றவல்லது என அறியப்பட்டுள்ளது! அந்த ஆய்வின்போது 29 நாய்களில் 21 நாய்கள் அவை முன்னர் அறிந்திராத நபர்கள் கொட்டாவி விடுவதைப் பார்த்துத் தாமும் கொட்டாவி விடத்துவங்கின. வெறுமனே வாயைத் திறப்பதைப் பார்த்தால் இவ்விளைவு ஏற்படவில்லை!


தமிழ் இலக்கியத்தில்:

கொட்டாவி விடுவதைத் தமிழில் ஆவலித்தல், அங்கா, ஆவிதல் என்றும் வழங்கியுள்ளனர்.சீவக சிந்தாமணி, திருவாசகம், ஆசாரக்கோவை முதலிய பல நூற்களில் கொட்டாவியைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பிங்கல நிகண்டு இதை ஒரு மெய்க்குற்றம் என்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 6:06 pm

கொட்டாவி பற்றிய நீண்ட விளக்கத்திற்கு நன்றி தமிழ்நேசன்!



பரவும் கொட்டாவி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jul 12, 2012 6:13 pm

கொட்டாவியை விடாமல் அடக்குவதால் உடலுக்கு ஏதாவது தீங்கு உண்டாகுமா?
அதேபோல் அடிக்கடி வலிந்து கொட்டாவி விடுவதால் ஏதாவது பிரயோசனம் இருக்குமா?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jul 12, 2012 6:16 pm

இன்னும் இருக்கிறது சிவா அண்ணா.. சிரி
பரவும் கொட்டாவி! - Page 2 71111811


கொட்டாவி தனியாக போவாதென்பது அனுபவத்தில் கண்ட உண்மை. ஆன்மீக கூட்டமொன்று நடக்கையில், சரி பரிசோதித்துத்தான் பார்ப்போமே என்று கொட்டாவி விட்டுப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்? என்னைப் பின்பற்றி ஒரு ஐந்து பேராவது ‘ரிலே ரேஸ்’ போன்று தொடர்ச்சியாக கொட்டாவி விட்டிருப்பார்கள். (எத்தனைப் பேர் அவரது ஆன்மீக அறிவுரையை பின்பற்றினார்கள் என்று சரியாகத் தெரியவில்லை)

கிருஷ்ண பகவான் வாயைத் திறந்து காட்டியபோது Google Earth-ல் தெரிவதுபோல் உலகமே தெரிந்ததாம். என் பக்கத்திலிருந்தவர் ‘ஆ’ வென்று வாய்ப் பிளந்த போது காரை படிந்திருந்த கடவாய்ப் பல்லில் பூசியிருந்த சிமெண்ட் உட்பட காட்சி தந்தது. நான் இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்தால் ‘சங்கர் சிமெண்ட்’ ISI முத்திரை உட்பட தெளிவாய் தெரிந்திருக்கும்.

பிறர் கொட்டாவி விடுவதை நான் ரசனையோடு லயித்துப் பார்ப்பதுண்டு. “ஏன்யா! எதை எதை ரசிப்பது என்ற விவஸ்தையே கிடையாதா?” என்று நீங்கள் அங்கலாய்ப்பது எனக்கு நன்றாக புரிகிறது. ‘எதார்த்தவாதி வெகுசன விரோதி’ என்ற பழமொழியை எனக்காகத்தான் எழுதி வைத்தார்கள் போலும்.

மோவாயை உயர்த்தி, மூக்கை விடைத்து, ‘ஆ’வென்று வாயைப் பிளந்து, தாடையை தாழ்த்தி, அஷ்ட கோணலாய் இழுத்து, ஒரு கையால் சற்றே மூடி மறைத்து, ஒரு மெல்லிய முனகலுடன் ஒருவன் கொட்டாவியை பிரசவிக்கும் போது ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே’ என்று பாடும் அளவுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

தங்கப்பல் கட்டியிருப்பவர்கள் கொட்டாவி விடுவதை பார்க்கையில் கோலார் தங்கவயலை தரிசித்ததைப்போல் ஒரு பிரமிப்பு. சில ஜென்மங்கள் கொட்டாவி விட்டே சுற்றியிருக்கும் பொருட்களை அதிர்வுறச் செய்வார்கள். இன்னும் சிலர் ஆகாயத்தில் பறக்கும் வானூர்திகளை உள்ளிழுத்துக் கொள்ளும் ‘பெர்முடா முக்கோண’த்தைப் போல அட்டகாசமாக கொட்டாவி விடுவார்கள். (அச்சமயத்தில் நாம் சற்று தள்ளி நிற்பது உசிதம்)

என் பள்ளித் தோழன் பட்டாபி எப்பொழுதும் கொட்டாவி விட்ட வண்ணம் இருப்பான். அவனுக்கு வாத்தியார் வைத்த பெயர் ‘கொட்டாவி பட்டாபி’. சாதாரணமாக மாணவர்கள்தான் வாத்தியாருக்கு பட்டப்பெயர் வைப்பார்கள்.

இவர் வைக்காமல் என்ன செய்வார்? “For every action, there is an equal and opposite reaction” என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை எங்கள் மண்டையில் ஏற வைப்பதற்காக, சுவற்றின் மீது பந்தை வீசி மனுஷன் கஷ்டப்பட்டு எகிறி எகிறி பிடிக்கும் நேரத்தில் இவன் பாட்டுக்கு ‘ஹாய்..யாக’ கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தால் கடுப்பாக மாட்டாரா?

கொட்டாவி பட்டாபியை எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு நான் சந்திக்க நேர்ந்தது. துபாயில் பிஸினஸ் செய்வதாகச் சொன்னான். பரவாயில்லையே! கொட்டாவி விட்டே இவ்வளவு பெரிய ஆளாகி விட்டானே என்று வியந்துப் போனேன்.

ஆண்டாண்டு காலமாய் கொட்டாவி பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கொட்டாவி எதனால் ஏற்படுகின்றது என்ற கேள்விக்கு உருப்படியான பதிலை இதுவரை யாருமே தரவில்லை.

“ஆ’- ன்னு வாயைப் பொளந்து கொட்டாயி விடுறோமே? அதுக்கு பின்னாலே இவ்ளோ மேட்டரு கீதா’ன்னு நீங்களே மூக்கின் மீது விரலை வைப்பீர்கள்.

இந்த விஞ்ஞானிகளை நினைத்தாலே எனக்கு பற்றிக் கொண்டு வருகிறது. பூமி தட்டையாக இருக்கிறது என்று முதலில் சொன்னார்கள். பிறகு பூமி உருண்டை வடிவம் என்றார்கள். இப்பொழுது “சாரி.. சாரி நாங்க மிஸ்டேக்கா சொல்லிப்புட்டோம். பூமி முட்டை வடிவத்துலே இருக்குதுங்க” என்று மழுப்புகிறார்கள்.

“அவ்ளோ பெரிய விஷயத்தையெல்லாம் கண்டு புடிச்சு சொல்லுறீங்க. ஆனா இந்த பிஸ்கோத்து.. கொட்டாவி விஷயத்தெ சொல்ல மாட்டேங்கறீங்க. ஏங்க?” என்று கேட்டு அவர்களை ‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்’ ஆக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு சிலநேரம் தோன்றும்.

ஓசோன் ஓட்டையின் இரகசியத்தைக் கூட அறிந்து கொள்ள முடிகிறது. நம் வாய் பிளக்கும் ஓட்டை இன்னும் மர்மமாகவே இருக்கிறது. பூஜ்யத்தை கண்டுபிடித்த நம் முன்னோர்கள்கூட இந்த பூஜ்யத்தை விட்டு வைத்திருப்பது ஆச்சரியம்தான்.

“எட்டாத பழத்திற்கு கொட்டாவி” என்பது வழக்கில் வந்த சொற்றொடர். கொட்டாவி என்பது கிட்டாத பொருளுக்காக விடும் ஏக்கப் பெருமூச்சு என்ற கருத்தில் இங்கே கையாளப்பட்டிருக்கிறது. விஞ்ஞான ரீதியில் இந்த வியாக்யானம் பொருந்தாது.

‘கெட்ட ஆவி’தான் உருமாறி கொட்டாவி என்று ஆகி விட்டதோ?. மக்கள் தொலைக்காட்சியில் வரும் அண்ணன் நன்னனால் இது போன்ற சந்தேகங்களைத் தீர்த்து வைக்க இயலும். ஆவியைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனும், மீடியம் சுந்தர்ராஜனும் இந்த ஆவியையும் கவனத்தில் கொள்வார்களாக.

கருவில் இருக்கும் குழந்தையின் நுரையீரலில் ஒருவித திரவம் சுரக்கிறது. இந்த திரவம் சிறுநீருடன் சேர்ந்து அம்னியோடிக் திரவத்தை உருவாக்குகிறது. இந்த திரவம் நுரையீரலை விட்டு வெளியேறாவிட்டால் நுரையீரல் பாதிக்கப்படும். அப்படி வெளியேற்றப்படாத குழந்தைகள் பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் பிறக்கும். கருவில் வளர்ந்த காலப் பழக்கத்தின் மிச்ச மீதியாகவே கொட்டாவி இருக்கிறது. அதற்கு வேறு காரணம் ஏதுமில்லை என்று அமெரிக்க டாக்டர்கள் கூறுகிறார்கள்.

இது உண்மையென்றால் நம் முன்னோர்களை தீர்க்கதரிசிகள் என்றுதான் சொல்லவேண்டும். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ என்று அவர்கள் சொன்னார்களே? கருப்பையை தொட்டில் என்று சூசகமாய் சொல்யிருக்கலாம் அல்லவா?

கொட்டாவி என்பது நமது மூளைக்கு ஓய்வு தேவை என்பதன் மணியடிப்பா?, நம்மை சுறுசுறுப்பாக்குவதற்காக உள்ள அனிச்சை செயலா? குறிப்பிட்ட கால இடைவெளியில் நுரையீரல் மற்றும் ரத்த குழாய்களில் பிராணவாயுவை மாற்றுகின்ற செயலா? மூளையானது நம் உடலில் பிராணவாயு குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து முடுக்கிவிடும் செயல்பாடா? மூளை மண்டலம் பிரகடனம் செய்யும் கவன ஈர்ப்புத் தீர்மானமா? ஊஹும் .. .. சொல்லத் தெரியவில்லை.

கொட்டாவி - மூளையை குளிர்விக்க தேகம் செய்யும் யாகம் என்பது அமெரிக்க உளவியல் நிபுணர் ஆண்ட்ரூ காலப்பின் கருத்து. (Evolutionary Psychology, vol 5, p 92).

கொட்டாவிக்கும் நம் இரத்த ஓட்டத்தில் இருக்கும் ஆக்ஸிஜன், கார்பம் டைஆக்சைடு மட்டத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. தயவு செய்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் என்கிறார்கள் வேறு சில விஞ்ஞானிகள்.

மற்றொரு சாரார் காதுக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள நரம்பு வழிப்பாதையும் அதற்குரிய மூளையின் பகுதியும்தான் கொட்டாவிக்குக் காரணமாகிறது என்கிறார்கள்.

உடல் சோர்வினாலோ, களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும்போதோ கொட்டாவி வருகிறது என்கிறார்கள் சிலர். இதனை ஏற்றுக் கொள்வதாய் வைத்துக் கொள்வோம்

ஆனால் ஒலிம்பிக் வீரர்கள் பந்தயத்திற்கு முன்னர் ஏன் கொட்டாவி விடுகிறார்கள் என்று புரியவில்லை. சோர்வாக இருந்தால் தோற்றுப் போய் விட மாட்டார்களா? அப்புறம் அவர்கள் பிரதிநிதியாய் போன நாட்டிற்காக ஒரு டீ கப் கூட வாங்கி வர முடியாதே?

விண்குடை வீரர்களில் (Paratroopers) அனேகம் பேர் வானிலிருந்து குதிப்பதற்கு முன் கொட்டாவி விடுகிறார்கள் என்கிறார் மேரிலாண்ட் பல்கலைக் கழக பேராசிரியர் ராபர்ட் புரொவைன்.

கொட்டாவி அதிக பட்சம் ஆறு வினாடிகள் நீடிக்கிறது. இதயத் துடிப்பை 30 சதவிகிதம் கூட்டுகிறது. அதுமட்டுமின்றி தோலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தி, தசையையும் இறுக்குகிறது என்று கூறுகிறது ஆராய்ச்சி.

இன்னுமொரு ஆராய்ச்சி கொட்டாவி நமது நுரையீரலில் உள்ள எண்ணை போன்ற பொருளை உறைந்து விடாமல் தடுக்க வாகனங்களுக்குக் கிரீஸ் போடுவது போன்ற ஒரு பாதுகாப்புச் செயல் என்று கூறுகிறார்கள். இந்தக் கூற்றுப்படி கொட்டாவி விடவில்லையென்றால் மூச்சை இழுத்து விடுவது கடினமாகலாம்.

உடலை சீராக பேணுவதற்கு ஆலோசனைகள் கூறும் மருத்துவர்கள் “உடற்பயிற்சி செய்யுங்கள்”, “நடை பயிலுங்கள்”, “யோகா செய்யுங்கள்” என்று அறிவுரை சொல்கிறார்களே தவிர “தெனக்கும் நன்னா கொட்டாவி விடுங்கோ” என்று பரிந்துரைப்பதிலையே. ஏன்?

கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். விடாமல் என்ன செய்யும்? தொலைக்காட்சி சானல்கள் - சுட்டி டிவி, பேபி டிவி, கார்ட்டூன் நெட்வொர்க் போன்ற பொழுதுபோக்கு எதுவுமே இல்லாமல் ‘அக்கடான்னு இருட்டிலேயே கிட’ என்று சொன்னால் அதற்கு போரடிக்காதா?

தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உணர்ச்சிபூர்வமான ஒரு சொற்பொழிவு ஆற்றுகையில் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த 13 வயது சிறுவன் தாளமுடியாமல் கொட்டாவி விட்டும், நெட்டி முறித்தும், சொடக்கு விட்டும் தன் பொறுமையின்மையை வெளிக்காட்டியதை டேவிட் லெட்டர்மேன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப, அது உலகெங்கும் ஒரு பெரிய பரபரப்பை உண்டாகியது. (புஷ்ஷுடைய பேச்சு எந்தளவுக்கு சுவராஸ்யமாக இருந்தது என்று நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்.

[ காணக் கிடைக்காத இந்த காட்சியை இன்னும் காணாதவர்கள் கீழ்க்கண்ட சுட்டியில் கண்டு மகிழலாம் Guests cannot see links in the messages. Please register to forum by clicking here to see links. ]

கொட்டாவி என்பது நமது மூதாதையர்கள் வாயைத் திறந்து, பற்களை வெளிக்காட்டி மற்றவர்களை பயமுறுத்துவதற்காக கையாண்ட ஆயுதம் என்ற ஒரு வாதமும் இருக்கிறது.

இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான வாதமாக எனக்கு படுகிறது.

மனிதர்கள் மட்டுமின்றி மீன்கள், பறவைகள், பாம்புகள், விலங்குகள் குறிப்பாக, பாலூட்டி இனங்கள் எல்லாமே கொட்டாவி விடுகின்றன. அதற்கு இவர்கள் என்ன விளக்கம் கொடுக்க போகிறார்கள்?

பூனை கொட்டாவி விடுவதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். அதற்கு என்ன மாதிரி போரடிக்கிறதோ யார் கண்டது? யாகவ முனிவர் உயிரோடு இருந்தாலாவது “பூனை பாஷையை கொஞ்சம் மொழிபெயர்த்துச் சொல்லுங்க அய்யா” என்று வேண்டுகோள் விடுத்திருக்கலாம்.

1980-களின் பிற்பகுதிகளில் எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சோதனை செய்திருக்கிறார்கள். பாவம் இந்த எலிகள்! என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. ஆ.. ஊ.. வென்றால் எலிகளைப் பிடித்து பலிகடாவாக்கி விடுகிறார்கள். எலிகள் அதிகாலையில் (படுக்கையை விட்டு) எழுந்திருப்பதற்கு முன்பும், பசியாக இருக்கும் போதும் கொட்டாவி விடுகிறதாம். (நானும் பெட்காபிக்கு முன்பு ஜாலியாக கொட்டாவி விடுவதுண்டு)

ஆபத்தான கொட்டாவி காண்டாமிருகத்தின் கொட்டாவிதான்! அது கொட்டாவி விட்டால் வேறு எந்த விலங்கையாவது தாக்கப் போகிறது என அர்த்தம்.

ஜப்பானிலுள்ள கியோட்டோ பல்கலைக் கழகத்தில் மனிதக் குரங்குகள் கொட்டாவி விடும் வீடியோ படத்தை மனிதக் குரங்குகளிடம் (ஆறு பெருசுகள், மூன்று குட்டிகள்) போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அதை பார்த்த சற்று நேரத்திற்குள் இரண்டு குரங்குகள் அம்சமாக கொட்டாவி விட ஆரம்பித்து விட்டன.

“அப்ப டார்வின் அண்ணா சொன்னது கரிக்ட்டுதான். குரங்குதான் நமக்கு முப்பாட்டன்” என்ற அவசர முடிவுக்கு வந்து விடாதீர்கள். டார்வின் விட்டது ‘உடான்ஸ்’ என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இன்றைய விஞ்ஞானிகள் எடுத்து வைக்கிறார்கள். அதை இன்னொருநாள் வைத்துக் கொள்ளலாம்.

கிட்டத்தட்ட 55 சதவிகிதம் மனிதர்கள் ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து மற்றவர் விடுகிறார்கள். பார்த்துதான் விட வேண்டும் என்பதில்லை. பார்க்காமலேயும் விடலாம்

கொட்டாவி விடும் சப்தத்தை ஒலிப்பதிவு செய்து, அதை கண்பார்வையற்ற அன்பர்களை கேட்க வைத்தார்கள். என்ன ஆச்சரியம்? கொட்டாவி சப்தத்தைக் கேட்டதுமே இவர்களில் சிலருக்கு தானாகவே கொட்டாவி வந்து விட்டது.

கொட்டாவி ‘ஒட்டுவார் ஒட்டியா’ என்று கெட்டால் அதற்கும் சரியான விளக்கம் இல்லை. எல்லோரையும் அது தொற்றிக் கொள்வதில்லையே?

கொட்டாவி பற்றிய நினைப்பே ஒருவனுக்கு கொட்டாவியை வரவழைத்து விடும். கொட்டாவி பற்றிய இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது ஒருமுறையாவது நிச்சயம் கொட்டாவி விட்டிருப்பீர்கள். இதில் வெட்கப் படுவதற்கு ஒன்றுமில்லை.

நம் மூளையின் செயல்பாடுகள் பலவற்றை நம்மால் இன்னும் முழுமையாக அறிந்துக் கொள்ள முடியவில்லை. கொட்டாவியும் நம் மூளையின் இன்னும் கண்டுபிடிக்காத ஏதாவதொரு பகுதியின் செயல்பாடாக இருக்கக் கூடும்.

ஒருவரைப் பார்த்து கொட்டாவி விடும் மற்றவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அவருடைய மூளைக்கு எளிதில் கிரகித்துக் கொள்ளக் கூடிய சக்தி இருக்கிறது; அதன் செயல்பாடுகள் அபாரமாக இருக்கிறது என்று அர்த்தம்.

கொட்டாவி பட்டாபி பாடத்தை கவனிக்காமலேயே எப்படி இவ்வளவு பெரிய பிஸினஸ்மேன் ஆனான் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?

நவீன காலத்தில் நம் மக்கள் அடிக்கடி ‘ஓ’ போடு என்று சொல்கிறார்களே? அதற்கு ஜாலியாக கொட்டாவி விடுங்கள் என்ற அர்த்தம்தானோ?

இதுவரை கொட்டாவி பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த கட்டுரையை படித்த பிறகு நிறைய ‘ஓ’ போடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இப்பொழுது எனக்கும் கொட்டாவி வர, எழுதுவதை நிறுத்தி விட்டு மனம் போன போக்கில் ‘ஓ’ வென்று கொட்டாவி விட்டு சுகத்தை அனுபவித்துக் கொண்டேன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 12, 2012 7:17 pm

கொட்டாவி விடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?
தகவலுக்கு நன்றி! சிவா அண்ணா! தமிழ் நேசன்..! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக