புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 Poll_c10தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 Poll_m10தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 Poll_c10தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 Poll_m10தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Page 3 of 3 Previous  1, 2, 3

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri Jul 06, 2012 4:25 pm

First topic message reminder :

இன்னும் மழை
விடவில்லையா ...???

பேருந்து நிலையமே
உனக்கு எனது
மனமார்ந்த நன்றி ...
ஒதுங்க இடம் தந்தாய் ...

நான் எந்த பேருந்திற்காகவும்
காத்திருக்கவில்லை ...
போய்ச் சேரவும்
இடமும் இல்லை ...
சொந்தமும் இல்லை ...

நான் கடவுளின்
குழந்தையாம்
அநாதை என்றுரைப்பது
தவறாம் ...
அப்படி என்றால் என் தந்தை
கடவுள் எங்கே ஐயா...???

கோவில்களின் உள்ளே
அவர் சுகமாயிருக்கிறார்
எங்களை வீதியில்
பசியோடு அலைய விட்டு ...
அவருக்கு கேட்காமலே
நெய்வேத்யம்
வேளை தவறாமல்
தீப ஆராதனை ...
நாங்கள் பசிக்கிறது என்று
வாய் விட்டு கேட்டும்
கிடைக்கவில்லையே
ஒற்றை சோற்று பருக்கை ...

மனிதர்கள் அநாதைகளின்
தகப்பனை
கொண்டாடுகிறார்கள்
எங்களை புறந்தள்ளிவிட்டு ...

எனது பிறப்பிடம்
குப்பை தொட்டி
அன்னையின் கருவறை
என்று சொல்ல
நெஞ்சம் மறுக்கிறது ...
அவளை விட
குப்பை தொட்டியே மேலானது ...
எனது வளர்ப்பிடம்
தெருவோரம் ...

ஐயா !!!
செல்வந்தர்களே
நீங்கள் காட்டிய
மாட மாளிகைகளில்
இடம் தர வேண்டாம் ...

அதில்
நாற்பது பேருக்கான அறையில்
உங்களின் குடும்பத்தினர்
நால்வர் மட்டுமே
வசிக்கட்டும் ...
முதல் 17 மாடிகளிலும்
இடம் தர வேண்டாம் ...

பாவம் நீங்கள்
என்ன செய்வீர்கள்
அங்கு உங்கள்
கார்களுக்கே இடம்
போதவில்லையாம்...

எனக்கு இன்றைய பொழுதில்
இந்த பேருந்து நிலையம்
போதும் ...
நாளையையை பற்றி
இன்று என்ன கவலை ...
அதை நாளைக்கு
பார்த்து கொள்ளலாம் ...

ஒரு தாழ்மையான
வேண்டுகோள் ...
ஐயா காவல்துறை
நண்பர்களே ...!!!

எனக்கு உங்களின் நட்புறவு
வேண்டாம் ...
என்னை சந்தேகத்தின் பேரில்
விசாரிக்க சங்கதி
ஒன்றுமில்லை ...

நானே சொல்கிறேன்
என்னிடம் என்னவெல்லாம்
இருக்கிறதென்று ...
என்னை விட
வசதியான வறுமை உண்டு ...

பசி மயக்கம் கொண்டே
துடிக்கிறதா இல்லை
நடிக்கிறதா என தெரியாத
இதயம் உண்டு...

குப்பை தொட்டியில்
கண்டு எடுத்த
ஓரிடத்தில் மட்டும்
கிழியாத இந்த உடை மட்டும்
உண்டு...

பசியில் பார்ப்பதை
நிறுத்திவிட்ட கண்கள்
உண்டு ...

இப்போதைக்கு
ரயிலடி ஒர டீக்கடையில்
டீ கிளாஸ் கழுவும்
உத்தியோகம் உண்டு ...
இதுவும் நிரந்தரமல்ல
கூட்டம் அதிகமானால்
மட்டுமே வேலை ...

எனது வாழ்வியல் சரித்திரம்
குப்பை தொட்டியில்
தொடங்கி
இந்த அகவை வரை
இவ்வளவு தான்...

சுருங்கச் சொல்லி
விளங்குவதென்றால்
சந்தோஷ பசி , பட்டினியில்
ஓர் அநாதை
மன்னிக்கவும் மாமனிதர்களே
ஓர் கடவுளின் குழந்தை ...

(எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இது போன்ற அநாதை சிறார்கள் தினந்தோறும் உருவாகி கொண்டுருக்கிறார்கள்...மன்னிக்கவும் உருவாவதை வேடிக்கை பார்த்து கொண்டும் உருவாக்கி கொண்டும் இருக்கிறோம் ...ஏன் நாம் நமது செலவீனங்களை குறைத்து கொண்டு ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்கு வாழ்வளிக்க கூடாது ...நண்பர்களே முடியும் முடியாத ஒன்று எதுவும் இல்லை ...நான் முடிவு செய்து விட்டேன் ...நீங்கள் ...???)

அன்புடன் ,
சுகுமார் அர்ச்சுனன் ...

சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 08, 2012 4:44 am

சுகுமார் இதுபோல் பாவம் குழந்தைகளை பேணுவது
ஒரு புறம் இருந்தாலும் இந்த பச்சிளம் குழந்தைகளை
இன்னிலைக்கு தள்ளும் அரக்கர்களை சாடவும் வேண்டும் இப்படி:

அரசு இலவசமாக தரும் கருத்தடை சாதனத்தை உபயோகித்து
உன் உடற் பசியை தணித்துவிட்டு அதை களைவதை விட எனைப்
பெற்றெடுத்து தெருவிலே களைவது உனக்கு எளிதாகி விட்டதா மனித
மாண்பு அறவே மறந்த மானங்கெட்ட மானிடா உனக்கு வாழ்வு ஒரு கேடா?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jul 08, 2012 5:02 am

எழுத்துப் பிழை - ஒரு பெரிய விஷயமில்லை சுகுமார்.

இன்று நல்ல புலமை வாய்நத எத்தனையோ பேர் யாருக்கும் உதவிடாதோராய் இருக்கையில், கவிதையோடு நின்றிடாமல், கருத்தாய் செயலில் இறங்கியிருக்கும் உங்களை மனதார பாராட்டுகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை...உங்கள் கவிதையை விட உங்கள் செயலையே பாராட்ட வேண்டும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 154550தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 154550தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 154550தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 154550தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 08, 2012 7:28 am

அரசு இலவசமாக தரும் கருத்தடை சாதனத்தை உபயோகித்து
உன் உடற் பசியை தணித்துவிட்டு அதை களைவதை விட எனைப்
பெற்றெடுத்து தெருவிலே களைவது உனக்கு எளிதாகி விட்டதா மனித
மாண்பு அறவே மறந்த மானங்கெட்ட மானிடா உனக்கு வாழ்வு ஒரு கேடா?
வாழ வழியில்லாதவர்கள் பிள்ளை பெறுவதை தவிர்த்தாலே நாட்டில் ஏழ்மை நீங்கிவிடும்.. அருமையான வரிகள் இனியவன் மகிழ்ச்சி

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sun Jul 08, 2012 12:08 pm

சார்லஸ் mc wrote:எழுத்துப் பிழை - ஒரு பெரிய விஷயமில்லை சுகுமார்.

இன்று நல்ல புலமை வாய்நத எத்தனையோ பேர் யாருக்கும் உதவிடாதோராய் இருக்கையில், கவிதையோடு நின்றிடாமல், கருத்தாய் செயலில் இறங்கியிருக்கும் உங்களை மனதார பாராட்டுகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை...உங்கள் கவிதையை விட உங்கள் செயலையே பாராட்ட வேண்டும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மிக்க நன்றி அண்ணா ... உண்மையில் இந்த அமைப்பை உருவாகும் தருணத்தில் எத்தனையோ தடைகள் வந்தாலும் அண்ணன் இனியவன் சொன்னது போல் சேவை என்று வரும் போதும் நமது கனவு லட்சியத்தை அடையும் போதும் எதிர்ப்படும் தடைகள் ஒரு பொருட்டல்ல என்ற எண்ணத்தை கொடுத்தது இந்த அமைப்பு தான் அண்ணா ...டிசம்பர் 30 , 2011 வாழ்கையில் என்றென்றும் மறக்க முடியாத நாள் அன்று டிரஸ்ட் ஐ பதிவு செய்த தினம் ...உண்மையில் அன்று ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிட முடியாதது...அடுத்த கட்டமாக முதல் குழந்தைக்கு உதவும் தினமே வாழ்வின் மிக சிறந்த தினமாக எண்ணுகிறேன்...அதற்காகவே காத்து கொண்டுருக்கிறேன்...உங்களின் பகிர்வுக்கும் தன்னம்பிக்கை ஊட்டியமைக்கும் எனது நன்றி அண்ணா...

சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sun Jul 08, 2012 12:17 pm

யினியவன் wrote:சுகுமார் இதுபோல் பாவம் குழந்தைகளை பேணுவது
ஒரு புறம் இருந்தாலும் இந்த பச்சிளம் குழந்தைகளை
இன்னிலைக்கு தள்ளும் அரக்கர்களை சாடவும் வேண்டும் இப்படி:

அரசு இலவசமாக தரும் கருத்தடை சாதனத்தை உபயோகித்து
உன் உடற் பசியை தணித்துவிட்டு அதை களைவதை விட எனைப்
பெற்றெடுத்து தெருவிலே களைவது உனக்கு எளிதாகி விட்டதா மனித
மாண்பு அறவே மறந்த மானங்கெட்ட மானிடா உனக்கு வாழ்வு ஒரு கேடா?
அவர்கள் போன்றோரை இந்த சமுதாயம் சாடாமல் தண்டனை அளிக்காமல் இந்த சிறு குழந்தைகளை அநாதை என்று சொல்லி புறக்கணிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை ... இத்தகைய பாவ செயலை செய்யும் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது மனிதன் என்று அவர்கள் பிறவாமல் இருத்தாலே நல்லது அண்ணா ...

சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக