புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
4 Posts - 3%
prajai
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
1 Post - 1%
kargan86
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
1 Post - 1%
jairam
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
8 Posts - 5%
prajai
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பும் விளக்குமாறும்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 02, 2012 11:27 pm

கவி காளமேகப்புலவர் தமிழகம் எங்கும் சுற்றிவந்தபோது, சோழ மன்னன் அவைக்கும் வந்தார். அவரது புலமையை அறிந்திருந்த அவைக்களப் புலவர்கள், அவரின் தகுதியைக் குறைக்க எண்ணி, அரசனிடம் ஆலோசனைகள் கூறி, அவருடன் வாதிட ஏற்பாடு செய்தனர். வாதிடும்போது, நெருப்புக் குண்டத்தின்மேல் கயிற்றில் நின்றுகொண்டு, புலவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இயலவில்லை என்றால், நெருப்புக்கு இரையாக வேண்டும்; வெற்றி பெற்றால், "சிறந்த புலவர்' என்று அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்ற நிபந்தனையுடன் போட்டி தொடங்கியது.

÷புலவர்கள் கேட்ட வினாக்களுக்குக் காளமேகம் உடனுக்குடன் வெண்பாவிலேயே விடையளித்தார். எல்லா வினாக்களுக்கும் விடையளித்த அவர்தம் புலமையை வியந்து, அதை வெளிக்காட்டாது அவரை அடக்க எண்ணிய தலைமைப் புலவரான "அதிமதுர கவிராயர்' நையாண்டியும், வெறுப்பும் தொனிக்க, இருபொருள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றைக் கருவாகக்கொண்டு பாடுமாறு கூறினார். எவ்வாறெனில், "செருப்பு' எனத் தொடங்கி "விளக்குமாறு' என்று முடிக்க வேண்டும். காளமேகமும் தயங்காமல் சபையில் கூறத்தகாத "இடக்கரா'ன (இடக்கரடக்கல்) இரு சொற்களையும், நற்பொருள் தரும் சொல்லாக "அடக்கி' வாசித்தார்.

"செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்கு
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்கு மாறே!''

"போர்க்களத்துக்குச் சென்று, பகைவரைத் துன்புறுத்தும் வேலைக் கையில் கொண்டுள்ள முருகப்பெருமானைத் தழுவுதற்கு உரிய வழியை, தேன் நிறைந்த தாமரை மலரில் தங்கியிருக்கும் வண்டே தெளிவாகக் கூறுவாயாக!' எனத் தலைவி முருகன்மேல் கொண்ட காதலை விளக்குவதாகப் பாடற்கருத்து அமைந்துள்ளது.

செருப்புக்கு என்ற சொல்லை, செரு+புக்கு (போர்க்களத்திற்குத் சென்று) என்றும், விளக்குமாறு என்ற சொல்லை விளக்கும்+ஆறு+ஏ (விளக்கும் வழியைக் கூறுவாயாக) என்றும் பிரித்துப் பொருள் கொள்ளச் செய்து, சபையில் கூறத்தகாத சொற்களைச் சிறப்பான பொருள்தரக் கூடியனவாக அமைத்துப் பாடி அனைவரையும் தன் புலமைத்திறத்தால் அடக்கினார்.

அரசனும் வியந்து, தனி மனித வெறுப்பைத் தவிர்த்து, காளமேகத்துக்கு உரிய சிறப்பும் பாராட்டும் அளித்து மகிழ்ந்தான். இப்பாடலில் முருகனின் வெற்றிச் சிறப்பையும், இயற்கை வருணனையையும் தமிழ்ச் சொற்கள் அலங்கரிக்கின்றன. நம் தமிழ் மொழியின் சிறப்புதான் என்னே! அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறன்தான் என்னே!

(நன்றி - தினமணி)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 03, 2012 8:46 am

நல்ல பதிவு...நன்றி சாமி மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jul 03, 2012 10:26 am

காளமேகப் புலவர் தந்த கவிதை கண்டேன். மிகவும் நன்று.
விளக்குமாறு என்று தொடங்கி செருப்பு என்று முடியும் படி எழுதலாமே என்று எண்ணி ஒரு கவிதை தந்துள்ளேன்.
கவிதை உயர்வாக இல்லாவிட்டாலும் எண்ணம் உயர்வாக இருப்பதனால் தயவுடன் ஏற்றிட வேண்டுகிறேன்.
(குற்றம் களைந்து குணம் கொள்க.)

விளக்குமாறு வேண்டுகையில் விளக்கினை தருவரே
கலக்கமுற்ற வேளையில் கடவுளாகி- உளத்தினில்
உலக்கையென உள்ளம் தரும் உண்மையீர்
செல்லுகையில் சொக்கன் செருப்பு.

உலகத்தவர்

1. உரைக்கும் சொல்லுக்கு பொருள் கேட்டால் விளக்கினை எடுத்து வருவர்
2. கலக்கம் உறும் வேளையில் உதவிசெய்வதை விடுத்து கடவுளைப்போன்று கல்லாக நிற்பர்
3. உலக்கை போன்ற கடின உள்ளத்தை கொண்டவர்கள்.
4. சொக்கநாதரை கால் அணியை வணங்கி சேர்ந்து செல்லும் வழிக்கு துணை தேடுவீரே !

ஆசிரியர்

1. உரைக்கும் சொல்லுக்கு நல்ல விளக்கம் தந்து விளக்கைப்போன்று விளங்குவர்
2. கலக்கம் அடையும் போது கடவுளாக மாறி உபதேசம் செய்து உதவி செய்வார்
3. உலகில் துன்பம் வருகையில் உலக்கை போன்ற உள்ளத்தை நமக்கு அருளுவர்
4 சொக்கநாதரான கடவுள் போன்று காலணி அணிந்து அழகாக செல்லுவார்கள்

[You must be registered and logged in to see this link.]
Uploaded with [You must be registered and logged in to see this link.]
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Jul 03, 2012 5:37 pm

சாமி wrote:நம் தமிழ் மொழியின் சிறப்புதான் என்னே! அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறன்தான் என்னே!
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 8:55 pm

தலைப்பை பார்த்து ஏதோ விசமத்தனம் என்று நினைத்தேன். ஆனால் இது தமிழ் குறும்பு. அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. புலமை வாய்ந்தவர்கள் மற்றவர்களை அடக்குவார்களே தவிர அடங்க மாட்டார்கள். இது தமிழுக்கான சிறப்பு. நன்றி சாமி அய்யா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக