புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
85 Posts - 79%
heezulia
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
250 Posts - 77%
heezulia
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
8 Posts - 2%
prajai
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_m10முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:10 am

முருக வழிபாடு

சமய வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின் தோற்றமும், விழுமிய துணையாக அமைந்தது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் அப் பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான். ஆவனது திருவருள் எங்கணும் பரவி அருள் பாலிக்கின்றது. இயற்கையழகுடன் கூடிய இடங்களில் அவனது கோயில்கள் எழுந்துள்ளன. காடு, மலை, சோலை, அரங்கம் எங்கணும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. அதுவே முருகனது தெய்வீகப் பெருமைக்குச் சான்று. மக்களுக்கு உயித்துணையாக விளங்கும் கடவுள் முருகப்பெருமான்,அம்மை அப்பனோடு எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புதத் தெய்வம். ஆடியார்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும், ஒற்றுமைத் தெய்வம் வள்ளி தெய்வயானை சமேதராய் விளங்கும் அழகுத் தெய்வம். இத்தகைய சிறப்பினால் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் அடியார்களை உள்ளன்புடன் முரகனைத் தரிசித்து விழிபடும் வண்ணம் ஆற்றப்படுத்துகின்றார். முத்தமிழால் வைதாரையும் விழ வைப்பவனாகிய முருகன் யாவும் நிறைவு பெற்ற பூரணப் பொருள்;.

உபநிடத வாக்கியம் பூரணத்தின் சிறப்பைக் கூறும் ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்;ணாத் பூர்ணமுதச்யதே என்ற உபநிடதச் சிந்தனையின் படி பூர்ணமாகிய பொருளிலிருந்து பூர்;ணம் உதயமாகியுள்ளது என்பது விளக்கப்படுகின்றது. பூர்ணமாகிய சிவப்பரம்பொருளிடமிருந்து பூருணமாகிய முருகப்பெருமான் உதமாகியுள்ளான் என்றும் கொள்வதில் தவறில்லை. புதியரில் புதியவனாகவும் முடிவிற்கு முடிவானவனாகவும் விளங்கும் முருகன் நினைத்தவுடன் அடியார்களுக்கு அருள்பாலிப்பவன்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
நெஞ்சமதில் அஞ்சலென வேல்தோன்றும் நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என் றோதுவார் முன்’


ஏன்ற பாடல் முருகனது திருவருட் சிறப்பைக் கூறும். முருகனுக்குள்ள எண்ணற்ற திருநாமங்கள் அவனது தெய்வீகப் பெருமைகளை எமக்கு உணர்த்துகின்றன. அவனுக்குரிய திருநாமங்களில் செவ்வேள் என்பது குறிப்பிடத்தக்கது. முரகனது திருவுருவினைச் செந்நிறமாகவே கண்டனர். காலைப்பொழுதிற் கண்ணிற்கு இனியதாய்க் கீழ்த் திசையிற் றோன்றும் இளஞாயிறு செவ்வொளிப் பிழம்பாய்த் தோன்றும் தன்மையைக் கண்டு மகிழ்ந்த மாதர் அவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் முருகப்பெருமானையும் செவ்வேள் சேஎய் என அழைத்தனர். கந்தபுராணத்தில் கச்சியப்பர் முரகனது தோற்றத்தினைக் பற்றிக் குறிப்பிடுமிடத்து.

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பதோர் மேனி ஆகக்
குருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஓரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய


என்ற பாடல் தரும் கருத்தின் பொருத்தப்பாட்டினையும் இங்கு உவந்து நயக்க முடிகின்றது.

முருகனது வழிபாடு நிகழும் ஆலயங்கள் தென்னாட்டிலும் ஈழத்திலும் பெருமளவில் உள்ளன. முரகனது திருகரத்தில் விளங்கும் ஞானவேல் முருகவழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்றது. வேல் என்பது முரகனது ஞானசக்தி முருகப் பெருமானின் துணையை அவனது வேலின் வழிபாட்டால் அடியவர்கள் பெறுவர்.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீருவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி
குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்ப்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை


ஏன்ற நக்கீரரின் பாடல் வேலின் சிறப்பினைக் கூறும். ஞானமாகிய அறிவுக்கு மூன்று பண்புகள் உண்டு. அவை ஆழம், அகலம், கூர்மை என்பன வேலின் அடிப்படைப்பகுதி. ஆழ்ந்தும் இடைப்பகுதி அகன்றும், நுனிப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். பரம்பொருளின் தத்துவத்தை மணிவாசகர் வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே எனப் போற்றுகின்றார். இவ்வேலின் தத்துவம் அப்பரம்பொருள் தத்துவத்தை எமக்கு உணர்த்துகின்றது. முரகனது திருக்கைவேல் வழிபாட்டினால் ஆணவத்தையும், தீவினையையும் அழிக்கலாம். அருணகிரிநாதர் வேல்வகுப்பு என்ற தனிப்பாடலினால் இந்த ஞானசக்தியைச் சிறப்பாகப் புகழ்ந்துள்ளார். முரகனது திருவுருவ வழிபாட்டுக்கு நிகராக அவனது திருக்கையில் விளங்கும் ஞானவேலினை வைத்து வழிபடும் மரபு பண்டைக்காலம் முதல் இருந்து வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் வேற்கோட்டம் என்ற குறிப்பு வேலை முருகனாக வழிபடும் மரபைக் கூறுகின்றது.



முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:12 am

வாழ்க்கையும், விரதங்களும் விழாக்களும்

உலகில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி சைவத் தமிழ்க் குடி, நாகரீகத்திலும், பண்பாட்டிலும் ஒழுக்க நெறியிலும் தலை சிறந்தவர்களாக சைவத் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். புராதன காலம் தொட்டே கடவுள் வழிபாடும், சமய சடங்குகளும், விரதங்களும் அவர்கள் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து ஒன்றியுள்ளன.

மனிதனாகப் பிறந்தால் மட்டும் போதாது, பண்பாட்டோடு ஆசார அனுட்ஷானங்களோடு வாழ வேண்டும். அதற்கு வழிவகுப்பது விரதங்களும், விழாக்களும் ஆகும்.யக்ஞம், தபஸ்,முதலிய கர்மங்களை செய்ய முடியாதவர்களுக்கென்றே விழாக்களும், விரதங்களும் ஏற்பட்டன. தீய சக்திகள், தீய குணங்கள் ஓழி படவும், அமைதி, மனத்தூய்மை, தெய்வ வழிபாடு, மன ஒருமை, மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படவே விரதங்கள், விழாக்கள், பண்டிகைகள் கைக் கொள்ளப்பட்டன. மரணம் என்றால் என்ன? ஸ்ரீ பகவத் விஸ் மரணமேவ மரணம் அதாவது பகவானை மறப்பதே மரணம் ஆகவே தான் ஏந்நேரமும் பகவானை நினைக்க வேண்டும் என்பதற்கு விரதங்களும், விழாக்களும் வழிவகுக்கின்றன.

மனம், மொழி, மெய் மூன்றையும் கட்டுப்படுத்தி ஒருங்கு சேரச் செய்து இறை சிந்தனையை வளர்த்து இறைவன் அருகே எம்மை அழைத்துச் செல்பவை விரதங்கள் தமது வாழ்க்கையில் விரதங்களும், பண்டிகைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் அவ்விரதங்கள் பண்டிகைகள் பற்றி முறையாகத் தெரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. இவை பற்றிய விபரங்களை அறிய ஆர்வமிருந்தும்; எங்ஙனம், எங்கிருந்து அறியலாம் எனத் தெரியாது. தவிப்போர் பலர், விரத கதைகள் அநுஷ்டான முறைகள் நோக்கங்கள் முதலியன விபரங்களைக் கூறும் நூல்கள் இன்று கிடைப்பது அரிது.

விஞ்ஞான முறைப்படி பார்த்தாலும் குடும்ப நலம், உடல் நலம், பரம்பரை விசுவாசம், தன்னம்பிக்கை, துணிவு, பணிவு பக்தி ஆகியவற்றை அதிகமாக்கி வாழ்வில் ஒழுக்கத்தையும் நேர்மையையும், இவை அதிகமாக்குகின்றன.

ஒவ்வொரு விரதமும், ஒவ்வொரு கோணத்தில் ஆயுள் விருத்தியையும், மனித உடல் நலத்தையும் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.

எல்லோராலும் எல்லா விரதங்களையும் ஏற்றுக் கொள்ள இயலாவிடினும், ஏற்றுக் கொண்டு பின்பற்றும் விரதங்கள் எப்படிச் செயலாற்ற வேண்டும். அதனால் ஏற்படும் தெய்வ நன்மைகள் என்ன அதனால் ஏற்படும் விஞ்ஞான நன்மைகள் என்பன என்பதையெல்லாம் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் மாருகக்குருட்டாம் போக்கில் பின்பற்றக் கூடாது. இன்றைய இளைய சமூதாயம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் விடை பகரக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

விரதங்களை மேற்கொள்வதால் தெய்வ நம்பிக்கை அதிகமாகிறது. ஓழுக்கமும் கட்டுப்பாடுகளும் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியம் பெறுகிறது. ஆயுள் அதிகமாகிறது பிரச்சினைகள் குறைகின்றன. தனிமனிதன் நன்மை பெறுவதனால் அவன் குடும்பம் நன்மை பெறுகிறது. இரக்க சிந்தனை, தருமம் செய்யும் குணம் ஆகியவை வளருகின்றன. விஞ்ஞான முறைப்படியோ, அஞ்ஞான முறைப்படியோ இருள்ஞான முறைப்படியோ ஆராய்ந்தாலும் விரதங்கள் நமக்கு ஒரு போதும் விரோதமான நிலைமைகளைத் தரவில்லை என்பது மட்டும் உறுதி

விரதமென்றால் சங்கல்ப்பத்துடனும், உபவாச நியமங்களுடனும் கூடச் செய்யும் சத்கர்மா என்று பொருள் உபநயனத்தில் பிரம்மசாரிக்கு வேதமே விரதத்தைக் கூறுகிறது. ஸமாவர்த்த காலத்தில் வேதவிரதம் விதிக்கப்பட்டிருக்கிறது. யஞ்ஞத்தில் ஈடுபட்டவருக்கு சில விரதமுண்டு. இவை வேத விரதமாகும். நாம் ஆண்டு தூறும் அனுஷ்டிப்பது புராணவிரதமாகும். பண்டிகை என்;றால் அதிக நியமமின்றி உற்சவமாகச் செய்வதாம். வுpநாயக சதுர்த்தி முருகனின் தைப்பூசத் திருவிழா உற்சவமாகும். சங்கராந்தி (பொங்கல்) போன்ற சில பண்டிகைகளில் சூர்ய பூசை, தர்ப்பணம், முதலிய சில விரத நியமங்கள் உண்டு.

அவசியம் செய்தே ஆகவேண்டும்மென்பது நித்யவிரதமாம். ஓரு பலனை நாடிச் செய்வது காம்ய விரதமாகும். சில நித்யமும் , காமியமுமாகும். காம்யமென்றால் இத்தனை முறை விடாமல் செய்து உத்தியாயனமும் செய்ய வேண்டும்.

விரதங்களுள் சில நித்திய விரதங்கள் என்றும் வேறு சில காமிய விரதங்கள் என்றும் சொல்லப்படும். சில தேவைகளை முன்னிட்டு இறைவனிடம் நமது வேண்டுதல்களை முன்வைத்துக் குறிப்பிட்ட காலத்துக்கு அநுஷ்டித்து அதன் பின் உத்தியாபனம் செய்யப்படுவவை காமிய விரதங்கள் அவ்வாறு அல்லாமல் எதுவித பலன்களையும் எதிர்பாராமல் அமாவாசை , பூரணை (பறுவம்) முதலிய விரதங்களைத் தொடர்ந்து அனுஷ்டித்தல் நித்திய விரதங்களாகும்.

தாய் தந்தையர் இறந்த திதிகளாக ஆண்டுதோறும் வரும் அமாவாசை விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் மாயை சிரார்த்த தினவிரதம், சித்திரை, ஐப்பசி மாதப் பிறப்புகளான விஷப புண்ணிய கால விரதங்கள் ஆடி, தை மாதப் பிறப்புக்களான அயன புண்ணிய கால விரதங்கள் என்பன பிதிரர் விரதங்களுள் சிறந்தவை.இவை கால எல்லை கருதாமல் அறிவு உள்ள வரை கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களாகும்.

பொதுமக்கள் பெரிதும் காமிய விரதங்களை விரும்பி அனுஷ்டிக்கின்றனரெனினும் உரிய முறைப்படி சரியான விதி முறைகளை அறிந்து கைக்கொள்வோர் மிகச் சிலரே.

இன்ன, இன்ன விரதங்கள் இன்ன இன்ன நோக்கத்துக்காக அநுஷ்டிக்கப்பட வேண்டும் இத்தனை வருடங்கள் கைக் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு கைக்கொள்ளப்பட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு. அவற்றை அறிந்து முறையாகக் கைக்கொள்வது அவசியமாகும்.

ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்ப்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை ஒழுங்காகக்கைக் கொள்ளவேண்டும்.

உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். விரதத்துக்குரிய மூர்த்தியின் வடிவத்தைப் பொன் பிரதி மையாகச் செய்து வீட்டிலே வைத்து முறைப்படி கும்பங்கள் ஸ்தாபித்து சங்கல்ப பூர்;வமாகப் புண்ணியாகவாசனம் முதலிய பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பித்து சமஸ்தோபசார பூசைகளையும் செய்துமுடித்து அன்று முழுவதும் உபவாசமாயிருத்தல் வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து மறுபடியும் அவற்றுக்குப் பூசைகள் நடத்திய பின் கும்பப் பொருட்கள் பொன் பிரதிமையும் மற்றும் தானப் பொருட்கள் யாவும் சேர்த்து 0வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி, தாம்பூலதஷிணைகள் பூசைகளைச் செய்வித்த குருவுக்கு வழங்கி முறைப்படி நான் கைக்கொண்ட இந்த விரதத்தை இன்று உத்தியாபனம் செய்து முடிக்கின்றேன். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படி இவ்விரதத்திற்குரிய பலன்களைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் தம்பதிபூசை, சுமங்கலி பூசை முதலியன குறித்து விரதத்துக்கு சொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் செய்து முடிந்தபின் மாஹேஸ்வர பூசை செய்து விடடுப் பாரணை பண்ண வேண்டும் பாரணை காலை எட்டரை மணிக்கு முன்செய்து முடிக்க வேண்டும் என்பது விதி.

இங்கு குறிப்பிட்ட விதத்தில் வீட்டிலே பூசைகளைச் செய்வதும் பொன் பிரதிமைகளைச் செய்து தானம் கொடுப்பதும் யாவருக்கும் எளிதானதன்று இதனால் உத்தியாயனமே செய்யாது விடுவதும் முறையன்று எனவே உரிய காலத்தில் ஆலயம் சென்று விரத உத்தியாபனம் செய்யப் போகின்றேன் என்று குருமுகமாகச் சங்கல்பம் செய்து இயன்ற வகையில் விசேஷ அபிஷேகம் பூசை அர்ச்சனை வழிபாடுகளைச் செய்து குருவுக்கு தாம்பூல தட்சணைகளும், தானங்களும் இயன்றவரையும் வழங்கி விரதத்தை மனநிறைவோடு முடித்து இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன.



முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:13 am

விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்

எல்லா விரதங்களுக்கும் பொதுவான விதிமுறைகள் யாவை என நாம் பார்ப்போமானால் அதிகாலையில் துயிலெழுந்தல், நீராடித் தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிதல், சந்தியாவந்தனம் முதலிய நித்திய கர்மாநுஷ்டானங்களை (அநுட்டானம் பார்த்தல்) முறைப்படி செய்தல்,ஆலய வழிபாடு செய்தல், காலை, மாலை வீட்டில் சுவாமி அறையில் விளக்கேற்றி வழிபட்டு இயன்றவரை திருமுறைப்பாடல்கள் மற்றும் தோத்திரப்பாடல்களைப் பாடுதல், விபூதி, உருத்திராக்கம் முதலிய சமய சின்னங்களை அணிந்திருத்தல், காலை உணவினை நீக்கி மதியம் ஒரு வேளை மட்டும் இன்னமும், இரவில் பால் பழமும், அல்லது பலகாரம் உண்ணல் என்பன எல்லாவிரதங்களுக்குமே முக்கியமாக வேண்டப்படும் கட்டுப்பாடுகளாகும். விரதம் இருக்கும் பெண்கள், அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னால் குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும். வீடு வாசல்களைக் கழுவி சுத்தப்படு;த்த வேண்டும். இவ்விதம் விரதோத்தியாபனம் செய்பவர்களுக்காகவும், சாதாரணமாக பாரணை சமயத்தில் ஆலய தரிசனம் செய்வதற்காக வருபவர்களுக்காகவும், உபவாசவிரதங்களுக்கு மறுநாள் காலையில் ஆலயங்களில் நிகழும் விஷேஷ பாரணைப் பூசையை அதிகாலையிலேயே நிறைவேற்றி விரதம் அநுஷ்டிப்போர் எட்டரை மணிக்கு முன் தமது பாரணையை முடித்துக் கொள்ளும் வகையில் ஆலய நிர்வாகிகளும், குருமாரும் முன்வர வேண்டும்.

உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.

சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியான போது சாப்பிடலாம்.

ஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் , உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்;த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச் சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக் கொள்ள வேண்டும்.

சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.

விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.


இவ்விரதங்களை அனுஷ்டிக்கத் தகுதியானவர்கள் யார் தகுதியற்றோர் யார்? என்றொரு கேள்வி எழுகிறது. சுத்த போசனமுடையோராயும் தீட்சை பெற்றவர்களாகவும், ஆசார சீலர்களாகவும் இருப்பவர்களே விரதங்களைக் கைக்கொள்ளத் தகுதி உடையோர் என்று விரத நூல்கள் எடுத்துரைக்கின்றன.

நோயாளர்களும், ஆசௌகரியமுடையோரும் பாலகர்களும், மாதவிலக்கான பெண்களும் விரதம் அனுட்டிக்கும் தகமை இல்லாதவர்கள் இவர்கள் விரதம் கைக்கொள்ள வேண்டுமாயின் தமக்காக வேறு ஒருவரை வரித்துக் கொள்ளவேண்டும். பெண்கள் தம் கணவரை அல்லது மகனை வரித்துக் கொள்ளலாம். நோயாளர் பிள்ளைகளை அல்லது குருமாரைக் கொண்டு விரதத்தை நோற்றலாம். பாலகர்களுக்காகப் பெற்றோர் நோற்றலாம். ஆசார மில்லாதோர் அல்லது அசௌகரியமுடையோரும் குருமாரை வரித்துக் கொள்ளலாம்.

சமையல் பாத்திரங்கள் விரதத்திற்கு எனத் தனியாகப் புதிதாகக் கழுவி சுத்தமாக ஏற்கனவே சமைத்ததாகவோ, அசைவ உணவுகளைச் சமைத்த பாத்திரங்களாகவோ இருக்கக் கூடாது. முதல் நாள் சமைத்த உணவுகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்.

விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது.

விரதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அடிக்கடி நீராகாரம் சாப்பிடக்கூடாது. ஓய்வு தேவை என்று பகலில் படுத்துத் தூங்கக்கூடாது. நாம் விழித்திருந்து இறைவழிபாட்டில் நமது எண்ணங்களை சிந்தனையைச் செலுத்த வேண்டும்.

விரதம் இருப்போர் தாம்பத்திய உறவில் ஈடுபடுதல், தவறான உணர்ச்சிகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தல், கேட்டல் கூடாது விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல், பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூட தவறாகும். வெற்றிலை பாக்கு போடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் ஆகியவையும் கூடாது.

விரத நிபந்தனைகளை முழுமனதோடு ஏற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். விரதங்களுக்கு தகுந்தபடி ஒருவேளை, இரண்டு வேளை மூன்று வேளையும் உபவாசம் இருத்தல் ஆகிய எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

விரத பூசையின் போது ஒவ்வொரு முறையும் விநாயகருக்கு பூசை செய்த பிறகே விரதத்திற்கான தெய்வங்களுக்கு பூசை செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட விரதங்களில் குறிப்பிட்ட முறைப்படியே ப+சை விதிகளையும், அனுட்டான முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். விதியில் குறிப்பிட்ட மலர்களே அத்தெய்வங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மாற்று மலர்கள் பயன்படுத்தக் கூடாது. இது விரதங்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் என்பது முன்னோர் நம்பிக்கை

விரதங்கள் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் முதலில் குடும்பத்தாரின் அனுமதி பெற்றே விரதம் இருக்க வேண்டும். கன்னிப் பெண்களாயின் பெற்றோரின் அனுமதியுடனும், மணமான பெண்கள் கணவனின் தாயாரான மாமியாரின் அனுமதி பெற்ற பின்னும் விரதம் இருக்க வேண்டும். பிறருக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் விரதங்கள் முழுப்பலனைத் தரா.

விரத சம்ஹிதை என்னும் நூல் நோயாளிகள் மிகவும் வயதானவர்கள், குழந்தைகள் இப்படி உள்ளவர்கள் விரதம் பூசைகளில் கலந்து கொண்டால் போதும் என்கிறது. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி எழு தினங்கள் ஆன பிறகே விரதம் மேற்கொள்ளலாம்.

மேலும் குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்கும் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் அனுஷ்டிக்கலாம்.குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால் அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவை விரத அனுஷ்டானங்களுக்கான பொது விதிகளாகும். இவற்றோடு சம்பிரதாய பூர்வமாக தமது பிரதேசங்களில் நிகழும் நடைமுறைகளையும், குருமூலமாக உபதேசிக்கப்பட்டவற்றையும் சேர்த்து முழுமனதான விரதங்கள் நம்பிக்கையோடு அனுசரிப்பதே முறையாகும்.

விரதம் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவற்றை மனத்தில் உறுதியாகக் கொள்ளுவதையே விரதம் என்பார்கள். இவ்விதம் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றபோது எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக்கூடாது என்பதனை சாஸ்திரங்கள் தெளிவு படக்கூறுகின்றன. இவற்றை நாம் முறைப்படி கைக்கொண்டால் விரதஅனுட்டான பயனைப் பெற்றக்கொள்ளலாம்.



முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:15 am

முருகப் பெருமானுக்குரிய விரதங்களும், விழாக்களும்

முருகப் பெருமானை ஆராதிக்கும் மூன்று முத்தான விரதங்கள் விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. வார விரதம் ஒன்றும், (சுக்கிரவாரம் அல்லது வெள்ளிக்கிழமை விரதம் ) திதி விரதம் ஒன்றும் (கந்தசஷ்டி விரதம்), (நட்சத்திர விரதம் - கார்த்திகை விரதம்)என அவை அமைகின்றன.

முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவதற்குரிய விரதங்களை சிறப்பாக ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம், பரம், வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான்.

இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேள். பால் பாயசத்தை ஒரு கரண்டியைக் கொண்டு தானே படைக்கின்றோம். அது போல் இக நலனை வள்ளி தேவியைக் கொண்டும், பரநலனை தெய்வயானை அம்மையைக் கொண்டும், முக்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான் முருகன். எனவே முருகப் பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபடுவோர் இகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று செம்மையுறுவார்கள். பாவம் நிறைந்த கலையில் கண்கண்ட தெய்வமாகக் கலியுகவரதனாக விளங்குபவர் கந்தவேள், முருகனை ஞானிகள் தமது ஞான வழியால் கண்டார்கள். அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் கோலக்குமரன் கொலுவீற்றிருப்பதாகக் கொண்டு ஆங்காங்கு அவனுக்கு விழாவெடுத்து வழிபடுகின்றோம்.

அழகுக் கடவுளாக உறையும், முருகனை தமிழ்க் கடவுளாக நாம் கொண்டோம், முத்தமிழால் வைதாரையும், வாழவைப்பான் முருகன் என்பர் அருணகிரியார். அத்தகைய பெருமையும், அருளும் நிறைந்த முருகனுக்குரிய விரதங்கள் விழாக்கள் பற்றிச் சிறப்பாக நோக்குவோம்.

சுக்கிரவார விரதம்

சுப்பிரமணியக் கடவுளை வேண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கைக் கொள்ளப்படும் இந்த விரதம் ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கப்படும்.

உபவாசமிருத்தல் உத்தமம். அது இயலாதவர்கள் பால் பழமாவது பலகாரமாவது இரவு ஒரு நேரம் கொள்ளலாம். அதுவும் முடியாவதர்கள் பகல் ஒரு பொழுது போசனம் செய்க. மூன்று வருட காலம் அநுஷ்டித்த பின் விரத உத்யாபனம் செய்யலாம்.

கார்த்திகை விரதம்


கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது. உபவாசம், உத்தமம், இயலாதோர் இரவில் பால், பழம், பலகாரம் உண்ணலாம்.அதுவுமியலாதோர் பகலொருபொழுது போசனம் செய்க, பன்னிரண்டு வருடங்கள் இவ்விரதமநுஷ்டித்த பின் உத்யாபனம் செய்யலாம். திருக்கார்த்திகை விரதத்துக்கு இஸ்தமன வியாபகம் முக்கியம். அதாவது மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும்.

திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து சோதிவடிவில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது.

திருவண்ணாமலைத் தலத்திலே மலையுச்சியிலே பெருந்தீபம் ஏற்றப்படுகின்றது. பல ஊர்களிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் இறைவனது சோதி வடிவைத் தரிசிப்பார்கள் குன்றின் மேலிட்ட தீபம் என்பதும் மலை விளக்கு ஆகிய மரபுச் சொற்றொடர்கள் நீண்ட காலம் இவ்வழக்கு இருந்ததைக் காட்டுகின்றன.

"மைம்மிசை யின்றி மலைவிளக்குப் போலோங்கி
செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்"

என்று தொல்காப்பியம் புறத்திணை 85 இல் வருவதும்.

"முடநடைப் பறவையு மாய விலங்கு
முடிமலர் முடிக்காடவைமுறை போகா’’

என்று சங்க புலவர் பொய்கையார் கூறுவதும்

"வானம் ஊர்ந்த வளங்கொளி மண்டிலம்
நெருப்பெனச்சிவந்த உருப்பு அவிர் அம்கட்டு’’


என்னும் ஒளவையார் கூற்றும் (அகநாநூறு) ம் கூறுகின்றன.



முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:17 am

திருக்கார்த்திகை தினத்தில் ஆலயங்கள் தோறும் சொக்கப்பானை கொழுத்தி மகிழ்வர். சொக்கப்பானை பற்றி சைவசமய புண்ணியகாலம் என்ற தமது நூலில் த. சுப்பிரமணியர் அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.

சுட்டப்பனை என்னும் சொற்றொடர் திரிந்து சொக்கப்பானை என வழங்குகிறது. சுட்கம் என்பது வரட்சி, உலர்ந்த தென்னை, பனை, கமுகு, வாழை இவற்றின் தண்டினைத் தீபதண்டமாகக் கோயில் சந்நிதானத்திலே நட்டு உலர்ந்த பனையோலை முதலியவற்றால் விமானம் போல உயரமாக மூடிக்கட்டிய சொக்கப்பானையில் அக்கினி மூட்டி அது சுவாலித் தெரியும் போது சோதி சொரூபமாகவும், திருவண்ணாமலைத் தீபமாகவும் பாவித்து பக்தர் வழிபடுவர்.இந்தச் சொக்கப்பானையின் நடுவே வாழைக் குற்றியொன்றை நட்டு அருகில் மாவிளக்குத் தீபம் ஒன்றையும் வைத்து சொக்கப்பானை எரித்து முடிந்த பின் அதனை எடுத்து நிவேதிப்பர். முருகன் ஆலயங்களில் அடியார்கள் பலரும் மாவிளக்கு இட்டு வழிபடுவர்.

செந்தினை மாவுடன் (கிடைக்காதவர்கள் அரிசிமாவில் செய்வர்) தேனையும், நன்கு கனிந்த வாழைப்பழத்தையும், சக்கரையையும் சேர்த்துப் பிசைந்து அம்மாவினால் ஒன்று, மூன்று,ஐந்து ஏழு என ஒற்றைப்படை இலக்கத்pல் அகல் விளக்கு வடிவத்தில் செய்து நெய்விட்டுத் திரியும் இட்டுத் தீபமாக ஏற்றுவர். இதனையே மாவிளக்கு என்பர்.

திருக்கார்த்திகை பற்றியும் சொக்கப்பானை பற்றியும் மாந்திரீக பூசணம்
சிவஸ்ரீ க. சாம்பசிவக்குருக்கள் அவர்கள் சோதிடமலர் பத்திரிகையில் (1978 கார்த்திகை) எழுதிய கருத்து இது.

இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகை தினமாகக் கார்த்திகை நட்சத்திரமாகும்.. இறைவனின் புன்னகையே அக்கினியாகத் தோன்றித் திரிபுரங்களை எரித்த பாவனையைக் காட்டவே தீபோத்சவம் என்ற உற்சவம் நடத்தப்படுகிறது. கருங்காலி, தென்னை, பனை, வாழை முதலியவற்றிலொரு மரத்தைத் தீபஸ்தம்பத்தின் பொருட்டு 9 முதல் 25 முழம் வரை உயரமுள்ளதாக எடுத்துப் பூமியுள் எட்டிலொருபங்கு புதைத்து அதைச் சுற்றிப் பனை ஓலை, தென்னை ஓலை, கமுகோலை இவற்றினால் கூடுகட்டித் தெற்கு அல்லது கிழக்குப் பக்கமாக வாசல் விட்டு அதில் தீபம் வைத்துக் கொழுத்த வேண்டும். இதை நம்நாட்டில் சொக்கப்பானை என அழைக்கின்றனர்.

திருக்கார்த்திகை நாள் குமராலயதீபம் எனப்படும். முருகன் ஆலயங்களில் மேற்கண்டவாறு வழிபாடுகள் நிகழும் முதல் நாள் அல்லது மற்றநாள் அல்லது அதே தினத்தில் பௌர்ணமி தினத்தில் ஏனைய எல்லா ஆலயங்களிலும், வீடுகளிலும் சர்வாரய தீபம் என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது.

வீடுகளில் மாக்கோலங்களையும், வண்ணக்கோலங்களையும் இட்டு அவற்றின் மீது அகல்விளக்குகளை ஏற்றிவைப்பர். சிறுசிறு பந்தங்களைத் தயார் செய்து அவற்றைத் தேங்காயெண்ணெய் அல்லது இலுப்பெண்ணெய் விட்டு ஏற்றி வீட்டுவளவிலும், வயல், தோட்டம் முதலிய இடங்களிலும் நாட்டி வைத்து எரிய விடுவர். வீட்டு வாசலில் வாழைக்குற்றியை நாட்டி அதன் மேல் தேங்காய்ப் பாதியை வைத்து அதனுள் திரிச்சீலை இட்டு எண்ணெய் விட்டு நீண்டநேரம் எரியச் செய்வர். நமிநந்தியடிகள், கலியநாயனார், கணம்புல்லநாயனார் ஆகியோர் திருவிளக்குத் தொண்டினால் முத்தி பெற்றோராவர்.

இவ்வாறு புறஇருள்; களைந்து ஒளி சேர்க்கும் இந்தத் தீபோற்சவ நாளில் அக இருள் போக்கி ஞான ஒளி சேர்ப்பதும் நிகழ வேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும்.

"நிலைதரும் கார்த்திகைத் தினத்து நெல்லியின்
இலைகொடு குகனடிக் கிறைத்து ளோரெலாஞ்’’


என திருச் செந்தூர்ப்புராணம் 11- 36 கூறுகின்றது.



முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:18 am

ஸ்கந்தஷஷ்டி விரதம்

கலியுகவரதனும், தமிழ்க் கடவுளுமாகிய கந்தக்கடவுளாம் சுப்பிரமணிய சுவாமிக்குரிய மூன்று விரதங்களில் மிகச் சிறந்தது ஸ்கந்தஷஷ்டி விரதம், சைவசமயிகள், முக்கியமாகக் கந்தபுராண கலாசாரத்தில் திழைக்கும் ஈழத்துச் சைவத் தமிழ் மக்கள் மற்றெல்லா விரதங்களையும் விட இந்த ஸ்கந்தஷஷ்டி விரதத்தை மிகவும் புனிதமாகவும் பக்தி பூர்வமாகவும் கைக்கொள்ளுகிறார்கள்.

ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையையடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டியீறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்தஷ்டி விரதமாகும். சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமாகும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது ஒரு பழமொழி. இதற்கு வெளிப்படையான சொற்பொருளை விட ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையாகிய கருப்பையில் கரு உண்டாகும் என்ற உட்கருத்துமுண்டு. பகல் பன்னிரண்டு நாழிகைக்குக் குறையாமல் பஞ்சமித்திதியும் அதன் பின் ஷஷ்டி வியாபகமும் இருக்கும் நாள் சூரன் போருக்குரியது. பிரதமைத்திதியில் ஆரம்பமாகும்.

முருகபக்தர்கள் ஒரு கடுந்தவமாகவே இவ்விரதத்தைக் கருதி ஆறு நாட்களும் முழுப்பட்டினியாக உபவாசதிருத்தல் வழக்கம். முதல் நாள் அமாவாசையன்றே ஒரு நேர உணவுண்டு விரதமாக இருந்து மறுநாளைய உபவாசத்துக்குத் தயார் செய்து கொள்வர் (பொதுவாகவே உபவாசத்துக்குத் தயார் செய்து கொள்வர் (பொதுவாகவே உபவாச விரதமநுஷ்டிக்கும் போது முதல் நாளும் மறுநாளும் ஒரு நேர உணவே கொள்ள வேண்டும்.

பிரதமையிலன்று அதிகாலை நீராடித் தூய ஆடையணிந்து கர்மாநுஷ்டானங்கள் முடித்து முருகன் ஆலயம் சென்று அங்கேயே ஆறு நாட்களும் அன்ன ஆகாரங்கள் எதுவுமின்றி இறைவழிபாடு, முருகநாம்பஜனை, நாமஐபம்.புராணபடனம், புராணம் கேட்டல் என்றித்தகைய புனித காரியங்களுடன் அங்கேயே தங்கியிருப்பர். தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும். பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

ஆலயங்களில் ஆரம்பதினத்திலேயே தர்ப்பையணிந்து காப்புகட்டி, சங்கல்பித்து ஆறு நாளும் நோன்பிருத்தல் முறை, இறுதி நாளில் கர்ப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் சேர்த்துத் தாம்பூல தஷிணைகளுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பர்.

ஏழாம் நாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப் ப+ஜை என்று நடைபெறும் விசேஷ பூஜையையும் கண்டு வழிபட்டபின் மாஹேஸ்வர பூசை செய்து (அடியார்களுக்கு அன்னமிட்டு ) பாரணை செய்ய வேண்டும்.

இவ்விதம் கடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

ஆறாம் நாள் ஷஷ்டித்திதியில்; சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் துயில் நீக்கி விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்கமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிராணுக்குரிய சிவராத்;திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிகவிஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் பொருத்தமானதே. ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்க.

இவ்விரதம் ஆறு வருடங்கள் அல்லது பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும். உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து ஆறாவது வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

விரதோயாபனத்தின் போது முருகன் ஆலயம் சென்று விரத பூர்த்தி சமயத்தில் விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த விசேச பூஜையை செய்கின்றேன் என்று சங்கல்பித்து விஷேஷ அபிஷேகம் பூஜை, ஷண்முகார்ச்சனை அல்லது சஹஸ்ர நாமார்ச்சனை முதலியவற்றைச் செய்வித்து காப்பு தர்ப்பை இவற்றுடன் தாம்பூலம் தஷிணை, வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி முதலிய தானங்களையும் சேர்த்து அர்ச்சகரிடம் சமர்ப்பித்து மகிழ்ச்சியுடன் இந்தத் தானத்தை வழங்குகின்றேன். சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது போல இந்த விரதபலன்கள் எனக்கு உண்டாகட்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசும், வசிட்டமாமுனிவர் முசுகுந்தச்சக்கர வர்த்திக்கு உபதேசித்த பெருமையையுடையது இது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து பேறு பெற்றனர் இவ்விரதம் தொடர்பான புராணக்கதையை சிந்திக்கலாம்.

சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலம் தேவர், மனிதர் முதலிய யாவரையும் துன்புறுத்தி அழிவு செய்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில் தமது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப்பெருமான் இந்த சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் தோற்று வந்தனர். இதுவே ஸ்கந்தசஷ்டி என்ற பேரில் பூலோகமாகத் தரும் அநுஷ்டிக்கக் கிடைத்தது.

"வேற்போடும் அவுணன்தன்னை வீட்டிய தணிவேற் செங்கை
அற்புதன் தன்னை போற்றி அமரரும் முனிவர் யாரும்
சொற்படு துலையின் திங்கட் சுக்கில பக்கந் தன்னில்
முற்பக வாதியாக மூவிரு வைகல் நோற்றார்’’.


கந்தபுராணம் கந்தவிரதப்படலம் 20



முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:20 am

இக் கந்தபுராணம் கதையைச் சங்கரன்பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச்சுவையாக வழங்குவர். சங்கரன் புதல்வராகிய முருகப்பெருமான் ஷஷ்டித்திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வேறும் கதை சொல்லும் புராணமாகக் கந்தபுராணத்தை எண்ணலாகாது. சைவசித்தாந்தப் பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதைவடிவில் சுவைபடத்தரும் அருமையான நூல் இதுவாகும்.

ஈழத்தின் சைவாலயங்கள் பலவற்றில் இன்றும் தொடர்ந்து கந்தபுராணபடனம் செய்யப்படுகிறது. புராணபடனம் என்பது ஒருவர் புராணத்தைப் படிக்க இன்னொருவர் அதன் பொருளைத் தெளிவாக எடுத்துரைத்து விளக்கலாம். பலர் கூடியிருந்து இதனைச் செவிமடுப்பர். முழுப் புராணமும் படிக்க வசதியில்லாத இடங்களில் யுத்தகாண்டத்தில் சூரபன்மன் வதைப்படலம் மட்டுமாவது ஸ்கந்தஷஷ்டி ஆறுநாட்களிலும் படிப்பது வழக்கம். புராணபடலத்தின் மூலம் ஒரே சமயத்தில் பலர் - கல்வியறிவாற்றல் குறைந்தவர்கள் கூட புராணக் கதைகளையும் அவற்றின் வாயிலாகச் சமயப் பேருண்மைகள் பலவற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆறுநாட்போரும் ஆறுபகைகளை வெல்லுதலைக் குறிக்கும் சூரன், சிங்கன், தாரகன் மூவரும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் தேவர்கள் ஆன்மாக்களையும் முருகப்பெருமான் பரம்பொருளையும் உணர்த்தி நிற்கின்றனர். இவ்விதம் முப்பொருள் உண்மை விளக்குதலே இப்புராணத்தின் நோக்கமெனலாம். ஆன்மாக்களாகிய நாம் எம்மைத் துன்பத்துள் ஆழ்த்தி நிற்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறுபகைகளையும் ஆணவாதி மும்மலங்களையும்வென்று ஆண்டவனைச் சென்றடைய வேண்டும் என்ற கருத்தையே ஸ்கந்தஷஷ்டி விரதமும் கந்த புராணமும் வலியுறுத்துகின்றன.

நல்லைக் கந்தன் ஆலயத்தில் கருவறையில் வேல் காட்சியளிக்கிறது. அதற்குரிய வழிபாடு பக்தி பூர்வமானது பாதயாத்திரை செய்து கதிர்காமக்கந்தனை வழிபடும் மரபு சிறப்பானதொன்றாகும். இத் தலத்தில் விழாக்காலத்தில் கருவறையில் இருக்கும் புனிதப்பேழையே இலங்கரித்த யானைமீது பவனி வருகின்றது.நல்லையம் பகுதியில் விழாக்காலங்களில் வேல் பவனி வருவது இங்கு குறிப்படத்தக்கது. கதிர்காம உற்சவத்தோடு கொழும்பு மாநகரில் உள்ள முருகன் ஆலயங்களில் வேல் விழா சிறப்பாக நடைபெறுகின்றது. மாவிட்டபுரம், நல்லூர், மண்டுர், செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த வழிபாட்டு முறைகள் உள்ளன. கந்தனுக்கு மந்திரபூர்;வமான வழிபாடும் மந்திரங்களின்றி பக்தி பூர்;வமான வழிபாடும் உள்ள. தொண்டமனாறு செல்வச்சந்திதி ஆலயத்தில் வேலன் வழிபாடு சிறப்பாக உள்ளது. கதிர்காமத்தோடு ஒத்த பூசை முறை மட்டக்களப்பு மண்டுர் கந்தசுவாமி கோயிலிலும் செல்வச்சந்நிதியிலும் காணப்படுகின்றது. சைவஆசாரத்தோடு ஆலமர இலையில் இறைவனுக்கு உணவு படைக்கும் வழக்கம் செல்வந்சந்நிதி கோயிலில் உள்ளது. பூசை நிறைவேறியவுடன் வழிபடும் அடியவர்களுக்கு திருநீறு, தீர்த்தம், மருந்து என மூவகைப் பிரசாதங்கள் பூசகரால் வழங்கப்படுகின்றன. தீராத வினைகளினின்றும் உய்வுபெற அடியார்கள் இவ்வாலயங்களில் பக்தி சிரத்தையுடன் வழிபாட்டில் ஈடுபடுவர். ஆன்னதானக்கந்தன் என்ற சிறப்புத் திருநாமம் செல்வச்சந்நிதி முரகனுக்கு உண்டு. ஆலயங்களில் வழிபடும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் மரபு குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தரது வரலாற்றைக் கூறுமிடத்து பெரியபுராணம்

மண்ணி னிற்பிறந் தார் பெறும் பயன்மகி சூடும்
அண்ண லாரடி யார்தமை அமுது செய்வித்தல்’

எனக் குறிப்பிடும் அடிகள் இங்கு சிந்தனைக்குரியன. இறைவழிபாட்டில் அவர் தம் அடியாரை இறைவழிபாட்டில் அவர் தம் அடியாரைப் போற்றுதலும் முக்கியத்துவம் பெறுகின்றது. அன்னதானத்தின் வழிமனிதநேயம் மேன்மையடைகின்றது. பூவுலகில் இப்படியான வழிபாடுகளும் பூசைகளும் நடைபெறுவதால் இறைவன் இங்கேயே எழுந்தருளி அருள்புரிகின்ற தன்மை பற்றிக் தேவர்கள் கூட பூமியிற் பிறக்க விரும்புவதாக மணிவாசகர் திருப்பளிளியெழுச்சியில் சிறப்பாகக் பாடியுள்ளார். நல்லைக்கந்தன் வழிபாடுகள் ஆகம வழிபாட்டு மரபு தழுவியவை என்பது வழிபாட்டு மரபு தழுவியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முருக வழிபாடு மிகத் தொண்மையான காலம் முதல் நிலவிவருகிறது. கதிர்காமம், செல்வச்சந்நிதி, மண்டுர், திருக்கோயில், ஆகிய பிரசித்திபெற்ற முருகதலங்களிலெல்லாம் வாயைத் துணியாற் கட்டி மௌன பூசை செய்யும் முறை காணப்படுகின்றது. ஆக முறைக்கும், மடாலய முறைக்கும் இடைப்பட்ட பூசை, கிரியைகளே நல்லூரில் நடைபெறுவன. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் இவற்றை ஆகம முறையில் வழிப்படுத்த முனைந்தும் இனிது நடைபெறவில்லை. இவற்றை நோக்கும் கொழுது

காடுங்காவுங்கவின் பெறுதுருத்தியும்
யானுங் குன்னும் வேறு பல வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுக்பூங்கடம்பு
மன்றமும் பொதியினும் கந்துடைநிலையினு’

வேண்டினர் வேண்டியாங் கெய்தினர் வழிபட என்ற திருமுருகாற்றுப்படை அடிகள் எமது நினைவுக்கு வருவன.

மாவட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆகம முறைசார் வழிபாடு உடையது. காங்கேசன்துறை, கந்தரோடை கந்தலனக்கடவை, குமாரபுரம் ஆகியனவடக்கிலங்கையில் முருகன் பெயரோடு சார்ந்த பழம்பெரும் ஊர்களாயுள்ளன.



முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:22 am

தீ மிதிப்பு

கதிர்காமத்தலத்தில் திருவிழாக்காலங்களில் நடைபெறும் தீ மிதிப்புத் திருவிழாவும், மிகச் சிறப்பாகும். இவை இரு சந்தர்ப்பங்களில் நடைபெறும். முருகன் வாசலிலும், வள்ளியம்மை வாசலிலுமாக நடைபெறும். 20 அடி நீளமும், 8 அடி அகலமும், 1 அடி ஆழமும், கொண்ட அனல் நிறைந்த தீக்குழிக்குள் பக்தர்கள் நேர்த்திகாரணமாகவும், பக்தி மேலீட்டாலும் நடைபயில்வர். சில சந்தர்ப்பங்களில் குமரப்பெருமானும் பக்தர்களோடு பக்தராக தீமிதித்தலிற் கலந்து கொள்வதை பக்தர்கள் அதீதபக்தியால் உணர்வர்.

நீரறுப்பு விழா (தீர்த்தஉற்சவம்)


தீர்த்தோற்சவ நாள் கதிரைக் கந்தனுக்கு மிக உவப்பான நாள் பதினான்கு நாட்களாகும். கதிரைலையானைத் திரிகரண சுத்தியோடு வழிபட்ட அடியார்கள் அவனது திருவருட் சக்தி பெற்றுத் திளைக்கும் நாள் அந்நாள். மாணிக்க நதியின் நீர்;ப்பரப்பின் இரு மருங்கும் பக்த வெள்ளம் பரந்து காணப்படும். காட்டுத்தடிகளாலும், பசுந்தழைகளாவும் பிரத்தியேகமாகக் குடிசை ஒன்று அமைக்கப்படும். நான்கு பக்கங்களும் அடைக்கப்பெற்று ஒரு சிறு வாயிலுடன் காட்சியளிக்கும். சுபமூர்த்தத்திலே முருகப் பெருமான் ஆலயத்திலிருந்து வெளிப்படுவார். விசேடமாகச் செய்யப்பட்டுது; தளப்பத்து ஓலையால் மூடப்பெற்ற காவடியை இரு கப்புராளைகள் தாங்குவர். இவையெல்லாம் துணிப்போர்வையின் உள்ளேயே நடைபெறுவன. புஸநாயக்க நிலமே என்ற சுவாமிக் கப்புராளையும், ஏனைய ஆலயப் பூசகர்களும், யானை, தீவட்டிகள் இவை அனைத்தும் சூழவருவர். வள்ளியம்மன் கோயிலினுட் சென்று சுவாமி சிறிது நேரம் தரித்திருப்பார். பின் வள்ளியம்மையார் சகிதம் முருகப் பெருமான் தீர்;த்தமாடக் கொண்டு செல்லப்படுவார்.

மாணிக்க கங்கையின் ஓட்டத்தின் எதிராகச் சென்று குடிசையை அடைந்து வள்ளியம்மையாரையும், ஆறுமுகப் பெருமானையும் குடிசையினுள் வைத்துவிட்டுச், சுவாமிக்கப்புராளை செப்புக்குடமொன்றைக் கொண்டு வருவார். அக்குடத்துடன் மாணிக்க நதியிலிறங்கி நீர்மொண்டு சென்று, கடவுள் தம்பதியினை நீராட்டுவர். குடிசையினுள் மௌமாகப் பூசை வழிபாடு நடைபெறும். பின்னர் காவடி வெளியே கொண்டுவரப்படும். கோடிக்கணக்கான அடியவர் மாணிக்க கங்கையிலே நீராடித் தம்வினை தீர்ப்பர். இதன் பின் முருகப் பெருமானும் வள்ளியம்மையாரும் , வள்ளியம்மன் ஆலயத்துள் எடுத்துச் செல்லப்படுவர். அவர்களை நீராட்டிய போது நனைந்த ஆடைகளைப் பிழிந்து அந் நீரைப் பக்தர்கட்குத் தெளிப்பர். தீராநோய் தீர்த்தருளும் ஒளடதமாக இது கருதப்படுகிறது. இரவு 10 மணிவரை ஆறுமுகப் பெருமான் வள்ளியம்மையார் ஆலயத்திற் சுகித்திருப்பர். தெய்வீக அழைப்பின் பின்னரே கப்புறாளை திரும்பவும் சுவாமியைச் சந்நிதிக்கு எடுத்துச் செல்வர். ஆலாத்திப் பெண்கள் ஆலாத்தி எடுத்துச் சுவாமியை வரவேற்பர். பின்னர் பிரசாதம் வழங்கப்படும். தீர்த்தமாடி முடிந்ததுமே நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கால்நடையாகவும், வாகனங்கள் மூலமும் வருகை தந்த அடியார்கள் அரோகரா கூறி விடைபெற்றதுத் தம்மூர் செல்வர்.

இத்தலத்தில் நடைபெறும் வேறு விழாக்கள்


சித்திரை வருடப்பிறப்பன்று மாலை திருவிழா ஒன்று நடைபெறும். கார்த்திகைத் தீபநாள் கோயில்களெங்கும் தீபாலங்காரஞ் செய்யப்பட்டு ஒளிமயமாக விளங்கும். அன்று மாலையிற்திருவிழா ஒன்று நடைபெறும். இவ்விழாக்களும் பக்தர்கள் வருகை தருவர். இவையே இங்கு நடைபெறும் விசேட திருவிழாக்கள்.

ஆடிவேல் விழா


கதிர்காம நீரறுப்பு விழாவோ டொட்டிய விழாவொன்றினைக் கொழும்பு நகரிலே, நாட்டுக் கோட்டை நகரத்தார் எனப்படும் செட்டிமார் ஏற்பாடு செய்துள்ளனர். கி. பி. 1818 இல் நடந்த ஊவாக் கலகத்தின் பின் கதிர்காம தரிசனம் மிகக் கஷ்டமானதாயிற்று.

சூரபன்மனைக் கொல்லப் போருக்குச் செல்லுமன் முருகப் பெருமான் வேலாயுதத்திற்குப் பூஜை புரிந்தனர். இதனால் அளவிடமுடியாத சக்திபடைத்த வேலாயுதம் கோயில்களில் மூலஸ்தானத்தில் வைத்துப் பூசிக்கப்படுகிறது.

முற்பட்ட காலப் பகுதிகளில் இந்தியாவிலிருந்து கதிர்காமம்தை தரிசிக்க வரும் யாத்தீரிகர்கள் கங்கை நீரைக் குடத்தில் முகந்தும், மூக்கிற்குழாய்களுள் முகந்துங் கொண்டு வந்து கதிரைப் பெருமானை நீராட்டுவதுண்டு. கதிர்காம உற்சவம் ஆரம்பமானதும் வேல்கள் கொழும்பு, கண்டி, காலி, இரத்தினபுரி, கம்பளை, வதுளை ஆகிய இடங்களிலிருந்து கதிர்காமத்திற்கும் எடுத்துச் செல்வது வழக்கமாயிருந்தது. கால் நடையாகவே இவ் வேல்களை நூற்றுக்கணக்கான அடியவர் புடைசூழ நாட்டுக் கோட்டை நகரத்தவர் கொண்டு செல்வர். இங்ஙனம் வேல் கொண்டு செல்லும் அடியவர் கூட்டம் சிற்சில காலங்களில் வாந்திபேதி என்னும் கொள்ளை நோயாற் பீடிக்கப்;படுவதால் இடையூறு ஏற்பட்டது. காமம் செல்வோர் அனுமதிச் சீட்டுக் பெறவேண்டுமென்ற சட்டத்;;தை நடைமுறைப்படுத்தியது. கி.பி. 1818 இல் ஊhவாப் பகுதியில் நிகழ்ந்த கலகமும் இதற்கொரு காரணமாகலாம். கொள்ளை நோய் பரவிய காலம் 1856 எனக் கொள்ளப்படுகிறது. இச் சட்;டம் 1922 இல் நீக்கப்பெற்றது.

கதிர்காமப் பெருமானைத் தரிசிக்க முடியாத நாட்டுக் கோட்டை நகரத்தார், கொழும்பு நகரிலே பக்தர்கள் முருகப் பெருமானைத் தரிசிக்க சிறந்ததோர் ஏற்பாட்;;டைச் செய்தனர். இவர்கள் கொழும்பிற் செட்டித் தெருவில் புதிய கதிரேசன் கோயிலையும், வெள்ளவத்தை பம்பலப்பிட்டி ஆகிய இரு இடங்களிpல் இரு கோயி;களையும் நிறுவினர். ஏற்கனவே செட்டித்தெருவிலிருந்து பழைய கதிரேசன் கோயிலுக்கு வெள்ளவத்தை கோயிலும் உபய கதிர் காமங்களாயின. தீர்;த்தோற்சவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் வேலாயுதமானது முருகன் திருவுருவுடன் அலங்கரிக்கப்பட்ட இரதத்திலே ஊர்வலமாகக் காலி வீதி வழியாக எடுத்துச் செல்லப்படும். கோயில்களில் தென்னிந்தியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் உபந்நியாசங்கும் இடம்பெறும். கொழும்பு நகரமே விழாக்கோலம் பூண்டு நிற்கும், பூரண கும்பங்கள் , குலை வாழைகள், மாலை, தோரணங்கள் இவற்றால் வீதிகளும் , கடைகளும் அலங்கரிக்கப்பட்டுப் பெருமான் வரவேற்கப்படுவர். வீதியின் இருமருங்கும் மக்கள் அர்ச்சனை புரிந்து கதிர்காம முருகன்; கருணையை வேண்டி நிற்பர். கதிர்காமஞ் செல்லமுடியாதவர்கள் தம் மனக்குறையினை ஈடு செய்து பக்தியிற்றிளைப்பர். ஒரு வருடம் பம்பலப்பிட்டிக்கும் மறு வருடம் வெள்ளவத்;;தைக்குமாக எடுத்துச் செல்லப்படும் வேலானது மூன்று நாட்கள் கோயிலிற்றங்கிப் பக்தகோடிக்கு அருள் வழங்கித் தீர்;த்த முடிவில் வந்தவாறே இருப்பிந் திரும்பும்.



முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:23 am

முருக வழிபாட்டில் இடம்பெறும் சில முக்கிய அம்சங்கள்

ஏத்தலங்களிலும் இல்லாத அளவு சிறப்பாக இலங்கையிலே முருகத் தலங்களிலே மகோற்சவங்கள் நிகழ்வது வழக்கம். பல்லாயிரக்கணக்கான முரகனடியார்கள் அக்காலங்களிலே குறித்த ஆலயத்திற்கு வந்து பத்திபரவசராய் முருகப்பெருமானை வள்ளி தெய்வான சமேதராய் வழிபட்டு உய்வர். தமிழ்ச் சைவர் மட்டுமன்றி பௌத்தர்களான சிங்கள மக்களும் இவ்விழாக்காலங்களிற் கலந்து வழிபாடு ஆற்றுவது உண்டு. மகோற்சவத்திற்குரிய தலத்தின் சூழல் எங்கும் செபதவ, விரதாதிகளின் புனிதம் புலப்பட்டுக் கொண்டே இருக்கும். சுவாமி திருவுலா வருகையில் பஜனைக் குழுக்கள் தொடர்ந்து கந்தரலங்காரம், கந்தரனுபதி, திருமுறைகளை ஒதிச்செல்லும், அங்கப்பிரதட்சணம், அடியழித்து வணங்கல், காவடி எடுத்து ஆடல், கர்ப்பூரச் சட்டி சுமந்து செல்லல். கலைகொண்டு ஆடல், ஆகிய வழிபாடுகளை அடியார்கள் நிகழ்த்துவர். தீக்குளிப்பும் கதிர்காமம் முதலிய தலங்களில் நிகழ்வதுண்டு. செதில்குத்திக் காவடி, ஆட்டக்காவடி, பாட்டுக்காவடி என்பவற்றோடு தூக்குக் காவடி, துலாக்காவடி முதலான பயங்கர நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வன்தொண்டர்களுக்கும் குறைவிராது. ஆலயங்களின் சூழல்களில் மட்டுமன்றித் தொலை தூரங்களிலும் தண்ணீர்;ப்பந்தல் வைத்து வருகின்ற அடியார்களை உபசரிக்கும் சிவபுண்ணியம், அன்னதானம், ஆகியனவும் இடம்பெறும். மதுமாமிச பட்சணம், இக்காலத்தில் பலரால் கைவிடப்பட்டு விரதம் அனுட்டிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதே. முருகா முரகா என்ற கோஷம் இடைவிடாது ஆலய வீதிகளிலே ஒலிப்பது பத்திக்கனிவினையூட்டும் நிகழ்ச்சியாகும்.

முருகனுக்குரிய கார்த்திகை நட்சத்திரங்களின் போதும் சிறப்பாகக் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரத்தின் போதும், மாவிளக்கிட்டு வழிபாடு நிகழ்த்துவர். கந்தசஷ்டி ஆறு தினங்களிலும் சங்கற்பம் செய்துகொண்டு முரகனாலயங்களிலேயே தங்கியிருந்து உபவாசம் மேற்கொண்டு தமது ஆன்மாவைப் புனிதம் செய்வோரும், இட்டபூர்த்தியை எதிர்நோக்குபவரும் இலங்கையிலே எண்ணிலர். குலியுகவரதனாகிய முரகனையெ சரணாகதியடைந்து நலந்தீங்கில் அவனை மறவாதிருக்கும் சைவமக்களே இந் நாட்டில் பெரும்பான்மையர் என்று கூறின் அது மிகையன்று.

காவடி விழா

வியாபார நிமித்தமாகத் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த வர்த்தகர்கள், சாம்மாங்கோட்டில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்;தை அமைத்துள்ளனர். பண்டை நாட்களில் இச்;சைவத் தமிழ்மக்களும், கதிர்காமத்திற்குக் கொழும்பிலிருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கம். பின்னர் கதிர்காம யாத்திரை கடினமானதாக அமையவே அக்காவடியை இவர்கள் வெள்ளவத்தையிலுள்ள சம்மாங்கோட்டு மாணிக்க விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் செல்வாராயினர். ஆடி மாதத்தில் அபிடேகத் திரவியங்களுடன் இரதத்திலே காவடி பவனி வந்து இரு நாட்கள் தங்கியிருந்து ஆயிரக்கணக்கான அடியவர்கட்குத் தரிசனம் அருளிpக் கதிர்காமத்தில் தீர்;த்தம் முடிந்தபின் வந்தவாறே சம்மாங்கோட்டிலுள்ள ஆலயத்திற்கு மீளும், வேல்வழா போன்றே இவ்விழாவும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. கலை நிகழ்ச்சிகள், சமயப் பிரசங்கங்கள் என்பனவும் இந் நாட்களில் இக் கோயில்களில் இடம்பெறும்.

தமிழ் நாட்டில் காவடி ஆட்டம்

கந்தக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாக தமிழ் நாட்டில் காவடியாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்படற்பாலதாகும். தமிழ் நாட்டிலுள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள் காவடி விழா எனக்கூறத்தக்க சிறப்புடையனவாக விளங்குகின்றன. பங்குனி உத்தரப் பெருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அறுநூற்றுத்தொண்நூற்ழெற படிகள் ஏறி தீர்;த்தக் காவடிகளும், ஏனைய காவடிகளும் கொண்டு பழனித்திருத்தல முருகனுக்கு காவடி மூலம் காணிக்கை செலுத்துவது அற்புதமான வழிபாடாக இருக்கும். தென்னைமட்டையில் இளநீர்க் குலைகளை கட்டித்துர்க்கிக் கொண்டு எடுக்கும் இளநீர்க்காவடிகளை பழனித்திருத்தலத்தலத்தில் பங்குனி உத்தரத்திருநாளில் பார்க்கமுடியும். மேலும் திருப்பரங்குன்றம், திருத்தணிகை, திருச்செந்தூர் முதலிய முருகன் ஆலயங்களிலும் காவடி வழிபாட்டுமறை சிறப்பாக நிகழ்த்தப்படுகின்றது.

சுமத்திராவில் காவடியாட்டம்.


சுமத்திராவில் உள்ள மேடானில் இந்து சமய வழிபாட்டிற்குரிய பல கோயில்கள் காணப்படுகின்றன. அவற்றுள் தண்டாயுதபாணி கோயிலும் ஒன்றாகும். இக் கோயிலில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தைப்பூசத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்விழாக்காலங்களில் நூற்றுக்கணக்கான காவடிகள் முருகனுக்குச் செலுத்தப்படுகின்றன. அவற்றுள் பால்காவடியும், சர்க்கரைக் காவடியும் அதிகமாகக் காணப்படுகின்றன.

தென்னாவிரிக்காவில் காவடியாட்டம்

தென்னாபிரிக்காவில் உள்ள கிளோர்ஷட் என்ற இடத்தில் வசிக்கும் தமிழர்கள் சிவசுப்பிரமணியம் என்ற பெயரில் கந்தனுக்கு ஓர் ஆலயம் அமைத்துள்ளனர். அங்கு தைப்பூசத்தினத்தன்றும் பங்குனி உத்தரத்தன்றும் பக்தர்கள் இன்று காவடி எடுத்து கந்தனை வழிபட்டு வருகின்றனர்.



முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:24 am

மலேசியாவில் காவடி ஆட்டம்

முருக வணக்கம் சிறப்புற்று விளங்கும் மலேசியாவில் காவடியாட்டம் சிறப்புடன் விளங்குகின்றது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில், சிகாமட்சிங்காரவடிவேலர் ஆலயம், கங்கைப் பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், ஜோகூர்பாரு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், காஜாங்சுப்பிரமணியசுவாமி கோவில், கெர்லிங்சுப்பிரமணியர் ஆலயம், பினாங்கு தண்ணீர்;மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம், ஈப்போ கல்லுமலை முருகன் ஆலயம், பாகங்கைச் சேர்ந்த ரவூப் முருகன் ஆலயம் போன்ற முருகன் ஆலயங்களில் தைப்பூச தினத்தன்று காவடியெடுத்து கந்தக்கடவுளை வழிபட்டு வருகின்றனர். பினாங்கு தண்ணீர் மலை ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெறும் தைப்பூச விழாவில் மலாய்க்காரர்களும் சீனர்களும் கூட காவடியெடுத்துக் கந்தனை வழிபட்டு வருகின்றனர். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் தைப்பூச விழாவிற்கும் காவடி வழிபாட்டிற்கும் பெயர் பெற்று விளங்குகின்றது. தமிழ் நாட்டின் பழனிமலை எப்படியோ அதே போல மலேசியாவில் பத்துமலை விளங்குகின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் தைப்பூச விழாவன்று பத்துமலையில் உள்ள இருநாற்றி எழுபத்திரண்டு படிகளை ஏறிச்சென்று மலை உச்சியில் உள்ள குகையில் எழுந்தருளி இருக்கும் முருகப் பெருமானுக்கு பக்தர்கள் காவடி எடுத்துக் காணிக்கை செலுத்துகின்றனர். பாற்காவடி, பழக்காவடி, சர்க்கரைக்காவடி, இளநீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, எனப் பல காவடிகளை எடுத்துப் பக்தர்கள் கந்தன் புகழ்பாடி தத்தம் நேர்த்திக் கடன்களைச் செலுத்துகின்றனர். முரகனிடம் தான் கொண்டுள்ள பக்தியை எடுத்துக் காட்டுவதற்காக சிவகரி, சக்திகரி என்ற இரண்டு குன்றுகளைத் தன்தோளில் ஒரு தண்டத்தின் உதவியால் இடும்பன்தூக்கியதே தைப்பூசத்தின் வரலாறு என்று இக் கோயிலில் கருதப்படுவதன் காரணமாகவே தைப்பூசத்தன்று இடும்பன் தூக்கிய பிரமதண்டம் அல்லது காவடியை மக்கள் தூக்கிச் சென்று முரகனை வழிபட்டுவருகின்றனர்.

சிங்கப்பூரில் காவடியாட்டம்

சிங்கப்பூரில் உள்ள தண்டாயுபாணி ஆலயத்தில் தைப்பூசத்திருநாளும், கார்த்திகைத் திருநாளும், பங்குனி உத்தரமும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசத்தினத்தன்று சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து கந்தனை வந்தனை செய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

பண்டைத்தமிழர்கள் முருக வழிபாட்டில் சிறந்து விளங்கினார்கள். முருகனைக் கந்தன் என்ற பெயரில் வழிபடும் வழக்கம் தேவாரகாலம் முதலாக இருந்து வருகின்றது. கந்தனை வந்தனை செய்யும் வழிபாட்டு முறைகளுள் காவடியாட்டம் தனித்துவம் பெற்று விளங்குகின்றது. பண்டைத் தமிழரின் வேலன் வெறியாட்டத்துடன் கந்தனின் காவடியாட்டத்தை இணைத்து நோக்க முடிகின்றது. கந்தனுக்குக் காணிக்கைப் பொருட்கள் கொண்டு சென்ற காவுதடியே காவடி எனப் பெயர் பெற்றதென்ற அறிஞர் கருத்து ஏற்புடைத்தாகவுள்ளது. இடும்பன் தூக்கிய சிவகிரி சக்திகிரி என்ற இரண்டு மலைகள் பற்றிக் கூறப்படும் தெய்வீகக் கதையடியாகவே கந்தன் வழிபாட்டில் காவடியாட்டம் இன்றும் சிறப்புப் பெற்று விளங்குகின்றது. காவடி வழிபாட்டு முறையானது தனிமனித வழிபாட்டு முறையாக மட்டுமன்றி குடும்ப வழிபாட்டு முறையாகவும் விளங்குகின்றது. பக்தர்கள் தத்தம் நேர்த்திக்கடன்களுக்கு ஏற்றவிதத்தில் வௌ;வேறு பெயர்களில் காவடிகள் எடு;த்க் கந்தனை வந்தனை செய்து வருகின்றனர். காவடியில் காணிக்கையாகக் கொண்டு செல்லப்படும் பால், தயிர், தேன், சக்கரை, பன்னீர், இளநீர், முதலான பொருட்கள் ஆண்டவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. தூக்குக்காவடி, பறவைக்காவடி போன்ற காவடியாட்டங்கள் கடினமான கடவுள் வழிபாட்டு முறையாகக் காணப்படுகின்றன. அளவற்ற அன்பு நன்றியுணர்வு போன்றனவற்றை வெளிப்படுத்தும் வழிபாட்டு முறையாகவே காவடியாட்டம் நிகழ்த்தப்படுகின்றது. ஆன்மீக அனுபவங்களும் ஒரே அனுபவத்தினையே உணர்த்திநிற்கின்றன என்பதனைக் காவடி வழிபாட்டு முறைகள் நன்கு விளக்கி நிற்கின்றன. அக்குபஞ்சர் என்ற சீன மருத்துவ சிகிச்சை முறையினைக் கடினமான காவடிகள் நினைவூட்டி நிற்கின்றன. காவடியை எத்தனை கலையுணர்வோடு அலங்கரித்திருப்பினும் காவடியில் காணப்படும் வேலும், மயிற்பீலிகையும் கந்தனை நினைவுபடுத்துவதாகவே விளங்குகின்றன.



முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக