புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_m10பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாிசுத்த வேதாகம உபதேசங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jun 19, 2012 9:57 pm

First topic message reminder :

“கிறிஸ்தவ விசுவாசத்தின் மூலைக் கற்கள்”
ஒவ்வொருவரும் தேவனைப்பற்றியும், மரணத்திற்கு அப்பால் உள்ள வாழ்க்கை மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைப் பற்றியும் சிறிது விசுவாசிக்கிறோம். சிலர் தேவன் இல்லை என்று கூறுகிறார்கள். சிலர் ஆயிரக்கனக்கான தேவர்களை வணங்குகிறார்கள். சிலர் தங்கள் அறிவு தெளிவு பெற தேடுகிறார்கள். சிலர் பொருள்களுக்கு அல்லது இயற்கை சக்திகளுக்கு ஆவியின் சக்தி இருப்பதாக கூறுகிறார்கள். சிலர் தங்களையே வணங்கிக் கொள்கிறார்கள்.

நிச்சயமாகவே மக்கள் ரொம்பவுமே ஆன்மீகவாதிகளாக இருக்கிறார்கள். இன்றும், தொழில் நுட்பவியலின் வளர்ச்சிகளின் மத்தியிலும், மக்கள் வாழ்க்கையின் அடிப்படை அர்த்தத்தை தெரிந்து கொள்ள வாஞ்சிக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைக்கும் மேலான நோக்கத்திற்காகவும், அறிவிற்காகவும் மக்கள் “அறிவுப் பசி” கொண்டவர்களாய் உள்ளார்கள். “நாம் பார்த்து, கேட்டு, உணர்ந்து, ருசித்து, தொடக் கூடிய காரியங்களுக்கும் மேலாக இன்னும் வாழ்க்கையில் ஏதேனும் உண்டா?” என மக்கள் யோசிக்கிறார்கள்.

இந்த கேள்விகள் தேவன் மனித இனத்தை எவ்வாறு படைத்தார் என்று காட்டுகிறது. நாம் தேவனையும், அவரது நோக்கங்களையும் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ள உண்டாக்கப்பட்டோம். (ஆதியாகமம்: 1:26,27; எரேமியா: 29:11-13). துர்ப்பேற்றின் பயனாக, மனதன் பாவம் செய்வதை தெரிந்து கொண்டது. அவன் தன் சிருஷ்டிகரிடம் கொண்டிருந்த கள்ளங்கபடற்ற ஐக்கியத்தை அழித்துப் போட்டது. இப்படி ஆவிக்குரிய இருளில் சென்று விட்ட மனிதனின் தவிர்க்க முடியாத பெரிய வீழ்ச்சியை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.

ஆனால், வேதாகமம் ஒரு சிறந்த சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறது. மனிதனை மீண்டும் தன்னிடமாய் இழுத்துக் கொள்ளும் கிரியையில் தேவன் ஈடுபட்டிருக்கிறார். மனித குலம் மீண்டும் தேவனிடம் சோ்க்கப்படும்படியாக தேவன் ஒரு இரட்சிப்பின் வழியை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார்.

ஆனாலும், சாத்தானும் அவனது பிசாசுகளும் கூட கிரியை செய்கின்றன. அவைகள் மனிதனை தேவனுடைய சத்தியத்தினிடமிருந்தும் அவருடைய இரட்சிப்பின் திட்டத்தினின்றும் விலக்கி வைக்க, வஞ்சகத்தையும், பொய்களையும் பயன்படுத்தி இடைவிடாமல் முயன்று வருகின்றன. பாவத்தின் அடிமைத்தனத்தினின்று சத்தியம் மனித குலத்தை விடுதலையாக்கும் என்பதை சாத்தான் அறிவான் (யோவான்: 8:32).

தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றிய உங்கள் புரிந்து கொள்ளுதலை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தவே இப்பகுதியில் எழுத விரும்புகிறேன். மெய்யான வேதத்தின்படியான கிறிஸ்தவத்திற்கும், இன்றைய உலகில் உலவி வரும் பிற மார்க்கங்களுக்கும் உள்ள தெளிவான வித்தியாசத்தைக் காட்டும். அந்திக்கிறிஸ்துவின் ஆவியே எல்லா ஆவிக்குரிய வஞ்சகத்தையும் அடக்கி ஆளும் சக்தி என வேதாகமம் வெளிப்படுத்துகிறது. தேவ ஜனத்தை “வஞ்சக ஆவி” யின் (1யோவான்: 4:6) அடிமைத்தனத்திலிருந்து வெளிநடத்தி, கிறிஸ்து இய‌ேசுவின் மூலமாய் நித்திய இரட்சிப்புக்குள் கொண்டுவர உங்களை ஆயத்தப்படுத்த விரும்புகிறேன். இப்பகுதியில் யாரையும் புண்படுத்தவோ, குற்றப்படுத்தவோ, தாக்கும் நோக்கமோ கொண்டதல்ல. தொடர்ந்து வாசியுங்கள். தேவாசீர்வாதம் பெறுங்கள். கிறிஸ்துவின் மூல உபதேசங்களை கற்றறிவோம் வாருங்கள். நல்லாதரவு தாருங்கள். பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 154550 பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 154550 பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 154550


தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 22, 2012 6:30 am

இ) பிற சிருஷ்டிகள் எதனின்று படைக்கப்பட்டனவோ, அதே பொருளினின்றே மக்களும் சிருஷ்டிக்கப்பட்டார்கள். (“மண்” - ஆதியாகமம்: 2:7). ஆனால், உலகில் ஆணும் பெண்ணும் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டபடியால் (ஆதியாகமம்: 2:7) பிற படைப்புகளினின்றும் வேறுபட்டவர்கள். மக்களிடம் மட்டுமே “மேலான வல்லமை” என்ற அறிவு உள்ளது. அவர்கள் எப்பொழுதுமே தேவபக்தியுள்ளவர்களாய் ஏதாவதொன்றை - ஏன் தங்களையே கூட வணங்குகிறவர்களாய் இருக்கிறார்கள்.

ஈ) மக்கள் ஆவிக்குரியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சரீரமாகிய உடலில் வாசம் பண்ணினாலும், ஆவியாயிருக்கிற தேவனோடு உறவு கொள்ளும் திறன் உடையவர்கள். ஒருவரின் சரீரம் பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாயிருக்கிறதால், பாவமான காரியங்களுக்கு சரீரம் பயன்படத்தப்படக் கூடாது (ரோமர்: 6:12,13; 1கொரிந்தியர்: 6:19,20).

கிறிஸ்துவில் விசுவாசிகளாயிருப்பவர்களின் மாம்ச சரீரங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது, உயிரோடெழுப்பப்படும். அப்பொழுது அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்க‌ேதுவான இது சாவாமையையும் தரித்துக் கொள்ளும் (1கொரிந்தியர்: 15:50-54). அவிசுவாசிகளின் சரீரங்களோ பெரிய வெள்ளை சிங்காசனத்தின் முன் நியாயத் தீர்ப்புக்கென உயிரோடெழுப்பப்படும். (வெளிப்படுத்தல்: 20:11-15).


தொடரும்...


விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jun 22, 2012 3:46 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



செந்தில்குமார்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 23, 2012 6:13 am

நன்றி செந்தில் பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 678642 பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 154550



பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 154550பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 23, 2012 6:27 am

உ) மக்கள் ஆள்வதற்கெனப் படைக்கப்பட்டவர்கள். சிருஷ்டிக்கப்பட்டவர்கள். சிருஷ்டிக்கப்பட்டவற்றை ஆண்டு கொள்ளும் திறனோடு படைக்கப்பட்டார்கள். தேவன் சிருஷ்டியை ஆண்டு கொள்ளும் திறமையையும் அதிகாரத்தையும் மக்களுக்குக் கொடுத்தார்.(ஆதியாகமம்: 1:28). சிலசமயங்களில் பிற மனிதர்களையும் (ரோமர்: 13:1-7). ஆனால், அன்பினால் (யோவான்: 13:34,35) ஆண்டு கொள்ளும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

மீட்கப்பட்ட மக்களும் கிறிஸ்துவோடுகூட ஆளுகை செய்ய விதிக்கப்பட்டவர்கள் (2தீமோத்தேயு: 2:12; வெளிப்படுத்தல்: 5:10).

தேவன் மக்களைத் தம்முடைய சாயலிலலே சிருஷ்டித்து அவர்கள் பரிசுத்தம், அன்பு, மற்றும் சேவை நிறைந்த வாழ்க்கை வாழத் திறனையும் தந்தார். ஆனால், ஆதாம் ஏவாளின் பாவத்தினால் மக்கள் பாவம் செய்யும் இயல்புடையவர்களாய் இருக்கிறார்கள் - அது அவர்கள் கொடூரமான பாவத்தையும், ஒழுக்கச் சீர்கேட்டையும் தெரிந்தெடுக்கச் செய்கிறது. (மாற்கு: 7:21,22; ரோமர்: 3:10-12).

இருப்பினும், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள், பாவிகளானாலும் மீட்கப்பட்டு, மெதுவாக கிறிஸ்துவின் சாயலுக்குள் கொண்டு வரப்பட்டு அதிகமதிமாக மாற்றப்பட முடியும் (2கொரிந்தியர்: 3:18; எபேசியர்: 4:24; கொலோசெயர்: 3:10).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 23, 2012 6:39 am

பாவமும் அதன் விளைவுகளும் இனம், வயது, மொழி, பொருளாதார நிலை, தேசம், பால் என்ற அனைத்துத் தடைகளையும் கடந்து பரவி நிற்கிறது. எல்லா மக்களும் எல்லா இடத்திலும், வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் பாவிகளே (ரோமர்: 3:23). தேவனுடைய வார்த்தை இது உண்மையென அறிவிக்கிறது. நம்மில் யாரை உற்று நோக்கினாலும் இது எளிதில் புலப்படும்.

இந்தப் பிரபஞ்சத்தில் பாவம் தோன்றுவதற்கு தேவன் காரணல்லர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிகமிக அவசியம் (யாக்கோபு: 1:13). சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் சிருஷ்டித்தவர் அவரே (வெளிப்படுத்தல்: 4:11).

பாவத்துக்கும் தீமைக்கும் அவர் காரணரல்லர். பாவத்தை சிருஷ்டிப்பது தேவனால் முடியாத காரியம் என்பதை வேதம் தெளிவாகக் கூறுகிறது. (உபாகமம்: 25:16; 32:4; யோபு: 34:10; சங்கீதம்: 92:15; ஏசாயா: 6:3; சகரியா: 8:17; யாக்கோபு: 1:13; வெளிப்படுத்தல்: 4:8; 15:4).

வேதம் சாத்தானாகிய லூசிபர் தான் பெருமையினாலும் தன்னலமிக்கப் பேராசையினாலும் முதன் முதலில் தேவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினான் எனக் கூறுகிறது.(ஏசாயா: 14:12-14; எசேக்கியேல்: 28:12-17). இப்படிப் பிரபஞ்சத்துக்குள் சாத்தான் பாவத்தைக் கொண்டு வந்தான்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 23, 2012 7:03 am

தேவன் மனித இனத்தைத் தம்முடைய சாயலில் படைத்ததனால், தோ்ந்தெடுத்துக் கொள்ளும் திறமையை மனிதர்களுக்குக் கொடுத்தார். மனித இனம், அவரைத் தெரிந்து கொண்டு, அவரை நேசித்து அவரோடு கூட நடக்க முடியும். அல்லது பாவத்தை தெரிந்து கொண்டு அவருக்கு விரோதமாக கலகம் செய்ய முடியும் என்பது தேவனுக்கு தெரியும். இது பாவத்தை அத்தியாவசியமான ஒன்றாக ஆக்கவில்லை. அதைச் செய்யக் கூடிய ஒன்றாகத்தான் ஆக்கியது.

தேவன் மனித இனத்தைப் பரிபூரணமாகப் படைத்து, ஒரு பரிபூரண சூழ்நிலையில் வைத்தார். தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுத்தார். அதோடு மிக எளிதான கட்டளை ஒன்றைக் கீழ்ப்படியவும் கொடுத்தார். (ஆதியாகமம்: 2:16,17).

தேவன் தமது நீதியினிமித்தமும், நன்மையினிமித்தமும், சாத்தான், ஆதாம் ஏவாளைப் பாவஞ் செய்யக் கட்டாயப்படுத்துவதை அனுமதிக்கவில்லை. அதேபோல் இன்றும், பிறந்த மனிதனை மறுபடிப் பாவஞ் செய்யக் கட்டாயப்படுத்துவதற்கு சாத்தானை தேவன் அனுமதிப்பதில்லை. நம்முடைய சித்தத்திற்கு விரோதமாய்ப் பாவம் செய்ய சாத்தானால் நம்மைக் கட்டாயப்படுத்த முடியாது (1கொரிந்தியர்: 10:17). ஆனால், சாத்தான் வஞ்சகத்தைப் பயன்படுத்தியும், சத்தியத்தைத் திரித்துக் கூறியும் ஆதாம் ஏவாள் வழிதப்பிப்போக, அவர்களை சோதித்தான்.

ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருப்பதைத் தெரிந்து கொண்டு சோதனைக்கு இணங்கினார்கள். இன்றும் பாவத்தைக் கொண்டு வரும் வழிமுறை இப்படித்தான் இருக்கிறது.

1. சோதனை பின்னர்

2. நம் சுய சித்தத்தினால் சோதனைக்கு இடங்கொடுக்கத் தெரிந்து கொள்ளுதல்.

“அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது மரணத்தைப் பிறப்பிக்கும்” (யாக்கோபு: 1:14,15).

ஆதாம் ஏவாளை சோதித்தற்கு சாத்தானை குற்றம் சாட்டலாம். ஆனால், சாத்தானின் சோதனைக்கு இணங்கிக் கொடுப்பதை அவர்களே தெரிந்து கொண்டனர். இன்று, நாம் சோதனையை சந்திக்கும் போது, நமக்கும் அதுதான் நடக்கிறது. நாமே பாவம் செய்வதைத் தெரிந்து கொள்கிறோம். அதற்காக தேவன் நம் ஒவ்வொருவரையும் பொறுப்பேற்கச் செய்வார். பாவமான நம்முடைய தெரிந்தெடுத்தலுக்கு வேறு யாரும் பொறுப்பல்ல. (ரோமர்: 14:14; எபிரேயர்: 4:13). சோதனை மட்டும் பாவமல்ல. ஆனால், அது பாவத்திற்கு வழி நடத்த முடியும். ஆகவே, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அதற்கு எதிர்த்து நிற்க வேண்டும். (ரோமர்: 6:12,14; 13:14).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 23, 2012 7:24 am

பாவத்தின் இயல்பை மிகச் சரியாக விவரிப்பதென்றால், தேவனுடைய குணாதிசயத்தை அல்லது பரிசுத்தத்தைப் புண்படுத்தி மீறுவதாகும். தேவனுக்கும், அவருடைய நீதியும், நியாயமுமான கட்டளைகளுக்கும் விரோதமாக கலகம் அல்லது முரட்டாட்டம் பண்ணுதலே பாவமாகும்.

வேதாகமம் இதைப் பாவம் என்று சொல்கிறது: “ஆதலால், ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” (யாக்கோபு: 4:17).

பாவம் என்பது ஒரு தவறான செய்கை என்பதோடு நின்றுவிட முடியாது. அது பாவியின் இயற்கையான சுபாவம் (ஆதியாகமம்: 6:5; மத்தேயு: 7:17,18; ரோமர்: 1:18-32). ஆகவே, மனிதன் மறுபடியும் பிறந்து, அவன் புதிய தன்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பாவத்திற்கான தண்ட‌னை மரணம் (ரோமர்: 6:23). அப்படியென்றால் மூன்று விதமான மரணங்கள் இருக்கின்றன.

1. சரீரத்தில் உயிரோடிருந்தாலும் ஆவியில் மரணம் (எபேசியர்: 2:1-5).

2. சரீரம் மரித்து அதன்பின் நியாயத்தீர்ப்பு (எபிரேயர்: 9:27).

3. நித்திய மரணம். மனித ஆவி நித்தியத்திற்கும், தேவனை விட்டுப் பிரிந்திருத்தல். இந்த கடைசி மரணம், இரண்டாம் மரணம் என்றழைக்கப்படுகிறது. (வெளிப்படுத்தல்: 21:8; மத்தேயு: 25:41).

ஏற்கனவே கூறியபடி, பாவம் மனுக்குலமனைத்துக்கும் உலகளாவியது. (சங்கீதம்: 143:2; ஏசாயா: 53:6; ரோமர்: 3:10-12; 1யோவான்: 1:8). “எல்லோரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களாகி” (ரோமர்: 3:23).

ஆனால், தேவன் தம்முடைய மாபெரும் இரக்கத்தினால் “ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார்” (2பேதுரு: 3:9). ஆகையால், பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி (2கொரிந்தியர்: 5:15), அவர் தமது குமாரனை (இயேசு) அனுப்பினார்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 24, 2012 3:27 am

4. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கோட்பாடு:


அவரும் அவருடைய வேலையும்
இயேசு கிறிஸ்துவும் - சபையை தோற்றுவித்தவர் என்ற அளவில் அவர் நிறைவேற்றி முடித்த வேலையும் கிறிஸ்தவ விசுவாசத்தின் மையமாக இருக்கிறது. கிறிஸ்தவம் என்பது வெறும் ஒரு விசுவாச அமைப்பு அல்லது சன்மார்க்க நெறி அடங்கிய பட்டியலோ அல்லது அல்லது மர்மமான வெளிப்படுத்தல்களோ அல்ல. மெய்க்கிறிஸ்தவ விசுவாசம், நம்முடைய இரட்சகரும், ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டதும், அவரை விட்டுப் பிரிக்க முடியாதததுமாகும். ஆகவே, கிறிஸ்துவின் ஆள்தத்துவத்தையும் அவருடைய வேலையையும் சரியாகவும் விவரமாகவும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

A. இயேசு கிறிஸ்து - நபர்:


அ) இயேசு கிறிஸ்துவின் கன்னித்தாய் பிறப்பு:


(மத்தேயு: 1:18-25; லூக்கா: 1:26-35; யோவான்: 1:14; கலாத்தியர்: 4:4)

மேசியாவின் வருகைக்கான அடையாளமாக இயேசுவின் கன்னித்தாய் பிறப்பு தீர்க்கதரிசனமாக கூறப்பட்டது. (ஏசாயா: 7:14). இயேசு கிறிஸ்துவுக்கும் அவர் வேலைக்கும் முக்கியமானதும் அடித்தளமுமாக இருப்பது அவருடைய கன்னித்தாய் பிறப்பு. ஆகவே, இது புதிய ஏற்பாட்டு இறையியலுக்கும் முக்கியமானது.

இயேசுவானவர் இயற்கையான மனிதத் தகப்பனுக்கு பிறந்திருந்தால், மனித இனத்தின் பாவமுள்ள ஆதாமின் பாவ சுபாவத்தை மரபு வழியாக பெற்றிருப்பார். (ரோமர்: 5:12-21). ஆகவே, அவர் பாவமுள்ளவராய் இருந்திருப்பார். அவர் பாவமுள்ளவராய் இருந்திருந்தால் அவர் நமக்குப் பதிலாக சிலுவையில் மரித்ததற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. மனிதகுலம் முழுவதற்கும், பாவமில்லா பலியாக மரித்திருக்க முடியாது. (2கொரிந்தியர்: 5:21; எபிரேயர்: 7:26,27; 1பேதுரு: 1:18,19). இயேசுவுக்கு கன்னித்தாய் பிறப்பு இல்லாதிருந்தால், அவர் மனிதனாகப் பிறந்த தேவன் அல்ல. ஆகவே, அவர் ராஜாதி ராஜாவாகக் கர்த்தாதி கர்த்தராக வர முடியாது. (வெளிப்படுத்தல்: 1:17,18; 17:14; 19:16).

இயேசு கிறிஸ்து கன்னியிடம் பிறந்த தேவன்
என்ற உண்மை இல்லாவிடில் அவரின் தெய்வத்துவம், மரணம், பின்னர் மரித்தோரிலிருந்து அவர் உயிரோடெழும்பியது, அவருடைய இராஜ்யத்தைப் பற்றிய தேவனின் வெளிப்பாடு இவை எல்லாமே மதிப்பற்றதாக ஆகிவிடும்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 24, 2012 3:41 am

ஆ) இயேசு கிறிஸ்துவின் மனிதத்துவம்:

இயேசுவானவர் மனுஷ சாயலாக (பிலிப்பியர்: 2:7; எபிரேயர்: 2:14,17,18) பிறந்ததினால், மனுஷரின் பாரங்கள், பலவீனங்கள், சோதனைகளில் பங்கெடுத்தார். அவர் முழுவதும், மனிதனாக, ஆனால், பாவமற்றவராக இருந்தார். (எபிரேயர்: 4:15).

இயேசுவானவர்:

- குழந்தையாக பிறந்தார். (லூக்கா: 2:7)

- எல்லாப் பிள்ளைகளைப் போலவே வளர்ந்தார். (லூக்கா: 2:39-51)

- சரீரத்திலும், அறிவிலும், சமுதாயத்திலும் பிள்ளைப் பருவத்திலிருந்து பெரியவராக வளர்ந்தார். (லூக்கா: 2:52)

- பசியும் தாகமும் உடையவராயிருந்தார். (மத்தேயு: 4:3; யோவான்: 4:7)

- களைப்பை அனுபவித்தார் (யோவான்: 4:6)

- மனிதர் போலவே எல்லாம் அவருக்கும் தேவைப்பட்டன (மத்தேயு: 8:23)

- வேதனையையும், துக்கத்தையும் உணர்ந்தார், அழுதார். (லூக்கா: 19:41; யோவான்: 11:35)

- சரீர மரணமடைந்தார். (யோவான்: 19:33)

- சரீரப்பிரகாரமாக, மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்டு முதற் பலனானார். (1கொரிந்தியர்: 15:20-23). கிறிஸ்துவில் அனைத்து விசுவாசிகளின் உயிர்த்தெழுதலை முன்குறித்துக் காட்டினார். (மத்தேயு: 28:1-8; லூக்கா: 24:36-43; யோவான்: 20:24-29; 1கொரிந்தியர்: 15:4-7).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 24, 2012 3:59 am

இ) இயேசு கிறிஸ்துவின் தெய்வத் தன்மை:

இயேசு கிறிஸ்து முற்றிலும் தேவனாக இருந்தார்.. இருக்கிறார் என்பதை அந்திக் கிறிஸ்துவின் ஆவி மறுதலிக்கச் முயற்சி செய்யும். சிலர் கிறிஸ்து ஒரு உண்மையான வரலாற்று பூர்வமான மனிதர் என்று ஒத்துக் கொள்வார்கள் - ஆனால், அவர் தேவனாயிருக்கிறார் என்பதை மறுதலிப்பார்கள். மற்றவர்கள் கிறிஸ்து “ஆவி ரூபமாக” இருந்த “கிரியை செய்து” “தெய்வத் தன்மை” அடைந்தது போல் மற்ற மக்களும் தங்கள் “நற்கிரியைகளினால்” செய்யலாம் எனக் கூறினார் என்று நம்புகிறார்கள்.

வேதாகம ஆவணத்தின்படி இயேசுவானவர் தேவனாக இருந்தார் - இருக்கிறார் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. இயேசு கிறிஸ்து தன்னைத் தேவன் என்று சொன்னது மட்டுமல்ல. தமது வாழ்க்கை, ஊழியம், போதனைகள், தியாக பலியான மரணம், உயிர்த்தெழுதலின் மூலமாக தான் தேவன் என்பதை நிரூபிக்கவும் செய்தார்.

தேவனுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவானவர் தேவனால் சிருஷ்டிக்கப்படவில்லை என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வது முக்கியம். ஆனால், இயேசு கிறிஸ்து:

- திரித்துவத்தில் ஒருவர். தேவனாகிய பிதாவோடும், தேவனாகிய பரிசுத்த ஆவியானவரோடும் கூடி நித்தியராகவும் அவர்களோடு ஒன்றி இருப்பவராகவும் இருக்கிறார். (யோவான்: 1:1,2; அப்போஸ்தலர்: 5:3,4; 2கொரிந்தியர்: 3:17,18).

- நித்தியமானவர் (மீகா: 5:2)

- ஆபிரகாமுக்கு முன்னிருந்தவர் ( யோவான்: 8:58)

- பிரபஞ்சத்தின் படைப்பின்போது கிரியை செய்தார் ( யோவான்: 1:1-3; கொலோசெயர்: 1:16,17; எபிரேயர்: 1:2,10)

- சிருஷ்டிப்புக்கு முன் இருந்தவர் (எபிரேயர்: 1:8,11; ஏசாயா: 9:6; வெளிப்படுத்தல்: 1:11)

- மாறாதவர் (எபிரேயர்: 13:8)

- நம்மோடு எப்போதும் இருப்பவர் (மத்தேயு: 28:20)


தொடரும்...


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக