புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
7 Posts - 4%
prajai
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
16 Posts - 4%
prajai
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_m10பெயர் தெரியாப் பெருவீரர்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர் தெரியாப் பெருவீரர்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 17, 2012 7:42 am

தமிழ்நாட்டில் நிகழ்ந்த போர்களில் வீரம் விளைத்தவர் எண்ணிறந்தவர். அன்னார் பீடும் பெயரும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் ஆண்மைக்குச் சில ஊர்களே சான்றாக நிற்கின்றன.

பாலாற்று வென்றான்
பாலாற்றங்கரையில் நிகழ்ந்த போர்கள் பலவாகும். அப் போர்க்களங்களில் பெருகிய செந்நீர் பாலாற்றில் சுரந்த தண்ணீரோடு கலந்து ஓடிற்று. அவ்வாற்றங்கரையில் வெம்போர் புரிந்து வெற்றி பெற்றான் ஒரு வீரன். அவனைப் "பாலாற்று வென்றான்' என்று தமிழ் நாட்டார் பாராட்டினர். அப்படிப்பட்ட பெயர் கொண்ட பல ஊர்கள் இன்றும் ஆர்க்காட்டு வட்டத்தில் உண்டு. (வட ஆர்க்காட்டு ஆரணி வட்டத்தில் பாலாற்று வென்றான் என்ற ஊர் உள்ளது; வேலூர் வட்டத்தில் அப்பெயருடைய மற்றோர் ஊர் உள்ளது).

செய்யாற்று வென்றான்
அவ்வாறே செய்யாற்றங்கரையில் நடந்த போரில் மாற்றாரை வென்று மேம்பட்டான் ஒரு தலைவன். அவனைச் "செய்யாற்று வென்றான்' என்று சீராட்டினர் தமிழ் மக்கள். அவ்விருதுப் பெயரும் ஊர்ப்பெயராயிற்று (வட ஆர்க்காட்டுச் செய்யாற்று வட்டத்தில் "செய்யாற்று வென்றான்' என்னும் ஊர் உண்டு; தென் ஆர்க்காட்டு விழுப்புர வட்டத்தில "செய்யாற்று வென்றான்' என்ற மற்றோர் ஊர் உள்ளது). தமிழ்நாட்டார் சீர்குலைந்து சிறுமையுற்றமையால் அவ்வூர்ப் பெயர்களும் சிதைவுற்றன. பாலாற்று வென்றான், செய்யாற்று வென்றான் என்ற பெயர்கள் முறையே பாலாத்து வண்ணான் எனவும், செய்யாத்து வண்ணான் எனவும் இப்பொழுது மருவி வழங்குகின்றன. மாறுபட்ட பகைவரை முடுக்கியடித்த வீரத்தலைவரை, ஆற்றங்கரையில் ஆடையை மடித்துத் துவைக்கும் வண்ணானாகக் காண்கிறது இக்காலத் தமிழகம்.

சரந்தாங்கி
இன்னும் சரமாரி பொழியும் போர்க்களத்தில் சஞ்சலமின்றி நின்று போர் புரிந்தனர் தமிழ் நாட்டு மெய்வீரர். மாற்றார் வில்லினின்று எழுந்து வந்த அம்புகளை மலைபோன்ற தன் மார்பிலே தாங்கி நிலைகுலையாமல் நின்றான் ஒரு வீரன். அவ்வீரத்தைக் கண்டு வியந்தனர் இரு திறத்தாரும். "சரந்தாங்கி' என்னும் சிறப்புப் பெயர் அளித்துச் சீராட்டினர். "அறந்தாங்கிய சீலன்' பெயர் தஞ்சை நாட்டிலே ஓர் ஊருக்கு அமைந்தாற்போன்று சரந்தாங்கிய வீரன் பெயர், பாண்டி நாட்டு நிலக்கோட்டை வட்டத்தில் ஓர் ஊரின் பெயராக நின்று நிலவுகின்றது.

கணை முறித்தான்
வில்லாண்மையுடைய மற்றொரு வீரன் மாற்றார் விடுத்த கொடுங்கணைகளைத் தன் நெடுங்கரத்தாற் பற்றினான்; முறித்தெறிந்தான். அவ்வருஞ்செயலைக் கண்டு வியந்தது வீரர் உலகம். "கணை முறித்தான்' என்பது அவனுக்குரிய சிறப்புப் பெயராயிற்று. அப்பெயர் பெற்ற ஊர் தென்னாட்டு அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ளது.

பயமறியான்
""அச்சமில்லை அச்சமில்லை, அச்சமென்ப தில்லையே'' என்று பாடினார் பாரதியார். அதற்கு எடுத்துக்காட்டாக முன்னாளில் விளங்கினான் ஒரு வீரன். அவனைப் "பயமறியான்' என்று தமிழகம் பாராட்டியது. தஞ்சை நாட்டிலே அறந்தாங்கி வட்டத்தில் உள்ள "பயமறியான்' என்ற ஊர் அவன் பெயர் தாங்கி நிற்கின்றது.

அழியாத நினைவுச் சின்னம்
இன்னும் மறம் அடக்கி, அமர் அடக்கி, எப்போதும் வென்றான் முதலிய பட்டப் பெயர்கள் இப்போதும் ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. இத்தகைய வீரம் விளைத்தவர் இன்னார் என்பது விளங்கவில்லை; அவர் ஊரும் பேரும் தெரியவில்லை; குலமும் குடியும் துலங்கவில்லை. ஆயினும், அவர் காட்டிய வீரம் நம்நாட்டு ஊர்ப் பெயர்களில் நின்று ஒளிர்கின்றது. வீரற்கு நாட்டும் நடுக்கல் (நடுகல்) ஒருக்கால் அழியலாம்; உருவச் சிலை ஒடிந்து விழலாம்; ஆனால், ஊர்ப் பெயர்களில் வாழும் இவ்வீரர் புகழுக்கு எந்நாளும் இறுதியில்லை.

(ரா.பி.சேதுப்பிள்ளையின் "தமிழர் வீரம்' நூலிலிருந்து...) (நன்றி - தினமணி)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 17, 2012 7:46 am

புதிய செய்தி..அறியத்தந்தமைக்கு நன்றி சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 17, 2012 12:24 pm

இதுவரை அறிந்திராத செய்தி
அறியதந்தமைக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 17, 2012 2:37 pm

மறக்கப்பட்ட செய்தியினை பகிர்ந்தமைக்கு நன்றி சாமி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக