புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மறைந்து போன மனனம் I_vote_lcapமறைந்து போன மனனம் I_voting_barமறைந்து போன மனனம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து போன மனனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 11, 2012 8:25 pm

உங்க போன் நம்பரை கொஞ்சம் சொல்லுங்க... என்று நண்பரோ, தெரிந்தவர்களோ கேட்டால் உடனடியாக நம்மால் கூற முடியுமா?

ஏறக்குறைய சந்தேகம்தான். ஒரு நிமிஷம் இருங்க என்றவாறு தனது அலைபேசியைத் திறந்து அதில் எண்ணைப் பார்த்துக் கூறக்கூடிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இது அலைபேசிக்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களிலும் இன்று இதுதான் யதார்த்தம். அந்த அளவுக்கு மனதையும், நேரத்தையும் சுருக்கிவிட்டோம். இப்படியே போனால் இந்தச் சோம்பல் நம்மை எங்கு கொண்டு போய்விடுமோ என்று தெரியவில்லை.

இன்று பல்கிப் பெருகிவிட்ட இணையதளங்கள், நவீன தொலைத் தொடர்புச் சாதனங்கள் மக்களை படுசோம்பேறியாக்கவிட்டதுடன் மெல்ல மெல்ல தங்களையே மாற்றிவிட்டது.
அண்மையில் வெளியான ஓர் ஆய்வில், இந்தியர்களுக்கு மறதி நோய் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. "அம்னீஷியா' என்றழைக்கப்படும் இந்த மறதி நம்மை ரொம்பவே குழப்பிவிடுகிறது.

வீட்டிலிருந்து கதவைப் பூட்டிவிட்டு வெளியே வந்தபிறகு நம்மை நாமே நம்பமுடியாத நிலை ஏற்படுகிறது. மின்விசிறியை நிறுத்தினோமோ, வீட்டுக்கு பூட்டு போட்டோமா இப்படி பல்வேறு சந்தேகங்கள். அப்படி ஓர் அவசர உலகில் இயந்திரகதியாக நாம் வாழ்க்கையை ஓட்டுகிறோம்.
குழந்தைகளை எடுத்துக் கொண்டால் அப்படித்தான் படிக்கிறார்கள். ஆசிரியை அடிப்பாரோ, திட்டுவாரோ என்ற பயம்தான் அது. முன்பெல்லாம் புத்தகத்தைக் கரைத்துக் குடிப்பவர்கள் பலர். இன்றோ நிலைமை மாறிவிட்டது.

திருக்குறள், நாலடியார், வெண்பா, கவிதைகள் இவற்றையெல்லாம் யாராவது வாசிக்கிறார்களா அல்லது அதற்கான முயற்சியிலாவது இறங்குகின்றனரா என்றால் இல்லை.

ராமாயணம், மகாபாரதம், இதிகாசங்களையும், தேவாரம், திருவாசகம் போன்றவற்றையும் அக்குவேறு, ஆணிவேராக பிரித்தவர்கள் பலர். இன்றும் ஒருசிலர் இருக்கிறார்கள். அவர்களைப்போல நாம் குழந்தைகளை வளர்க்கிறோமோ? இல்லவே இல்லை.

காரணம் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் இல்லாத விஷயங்களா? இதைப் போய் யாராவது விழுந்து விழுந்து வாசிப்பார்களா? உங்களுக்கு என்ன தகவல் வேண்டும், இணையதளத்தைத் தட்டி எழுப்பினாலே போதும். மனிதன் செய்ய வேண்டியதை இவை தாராளமாகச் செய்கின்றன.
அதனால் பிரதமர் யார், அமைச்சர்கள் யார் என்றெல்லாம் மண்டை காய வேண்டாம். இதற்காக மனனம் செய்ய வேண்டாம். அதுபோன்ற விஷயங்களை மனதில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

ஆங்கிலத் தேர்வு எழுத வேண்டுமானால் கட்டுரைகளை அர்த்தம் புரியாமலேயே மனனம் செய்து படித்தவர்கள் பலர். இப்போது அவ்வாறு யாராவது சிரமப்பட்டு வாசிக்கிறார்களா என்பது சந்தேகமே.
நாளுக்குநாள் முட்டாளாகி வருகிறோம் என்பதுதான் உண்மை. வாரியார், கிவாஜ போன்ற சொற்பொழிவாளர்கள் மணிக்கணக்கில் பாடல்களைப் பாடி அருமையாக விளக்கங்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பல பேச்சாளர்கள், இன்னமும் அடிபிறழாமல் கவிதைகள், செய்யுள்கள், பாடல்களை பாடுவதைக் கேட்க முடிகிறது.

காரணம் சிறுவயதில் அவர்கள் விவரம் தெரியாமலேயே முதலில் அனைத்துப் பாடல்களையும் மனனம் செய்ததுதான். நாளாக நாளாக அதன் அர்த்தங்களை உணர்ந்து பின்னர் கற்றுக் கரை தேர்ந்தனர் என்றுதான் கூறவேண்டும்.

இப்போதும்கூட சிலர் வீடுகளில் அதிகாலையிலேயே சுலோகங்கள், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை வாசிக்கின்றனர். குழந்தைகளுக்கும் சொல்லித் தருகின்றனர்.

ஆக, மனனம் செய்வது என்பது தவறானதன்று. அதை மறந்து, புரிந்துகொண்டு படிக்கிறேன் பேர்வழி என்று பலர் எதுவுமே புரியாதவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் முக்கால்வாசி பேர் தேசியகீதத்தையும், கடவுள் வாழ்த்தையும் முழுமையாக வாசிக்க முடியாதவர்களாகத்தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் மனப்பாடக் கல்வியை ஒழிக்க வேண்டும். செயல்வழிக் கல்வி, கற்றலின் இனிமை என்றெல்லாம் பல பெயர்களில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்ற கூக்குரல் எழுகிறது.

ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது அது மனதில் பதியுமாறு இருக்க வேண்டும்.
இன்று வாசிப்பே மறந்து. கேட்பது, பார்ப்பது மட்டுமே நடைமுறையில் உள்ளது.

ஆகவே மறதி நோய் வருவது என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. நாமாகவே ஞாபகசக்தியை வளர்க்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நவீன விஞ்ஞான சாதனங்கள் வந்துவிட்டதால் இதெல்லாம் தேவையில்லை என்று கருத வேண்டும்.

ஒரு வாதத்துக்காகக் கூறுவதென்றால், கணினி, தொலைக்காட்சி இவற்றுக்கான மின்சக்தி இல்லாதபோதும். அலைபேசி செயலிழக்கும்போதும் என்ன செய்ய முடியும்?

திடீரென ஒரு தொலைபேசி எண்ணைத் தேடமுடியுமா அல்லது எத்தனை பேர்தான் கையில் குறிப்பேடுகளுடன் அலைகிறார்கள். நேர்முகத் தேர்வுக்கு போகும்போது அத்தனை விஷயங்களையும் மனப்பாடமாக வைத்துக் கொண்டு சென்றதெல்லாம் ஒரு காலம்.

இப்போது அது தேவையில்லை. ஒரு கணினிக்கு முன்னே அமரவைத்து தேர்வே நடத்திவிடுகிறார்கள். அதுவும் இல்லாவிட்டால் கொள்குறித் தேர்வு முறையில் விடைகளைத் தேர்வு செய்யவேண்டும்.
உண்மையில் குருட்டு அதிர்ஷ்டத்தில் தொலைக்காட்சிகளில் வரும் கோடீஸ்வரன் நிகழ்ச்சிபோலத்தான் கதை இருக்கிறது. இதனால் மறதி என்பதை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

நிறைய வாசித்து, பொருள் அறிந்து மனதில் நிறுத்துவதே சாலச் சிறந்தது. எந்த விஷயத்தையும் திரும்பத் திரும்ப மனதில் நினைவுப்படுத்திக்கொள்ளும் பயிற்சியை மேற்கொண்டால் எந்த கவலையும்படத் தேவையில்லை.


தினமணி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 11, 2012 8:35 pm

மேலும் இன்று டிஸ்டிராக்ஷன் அதிகம் அதனாலும் மனனம் செய்வது குறைந்துவிட்டது எனலாம். அருமையான கட்டுரை தம்பி அன்பு மலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 11, 2012 8:42 pm

அசுரன் wrote:மேலும் இன்று டிஸ்டிராக்ஷன் அதிகம் அதனாலும் மனனம் செய்வது குறைந்துவிட்டது எனலாம். அருமையான கட்டுரை தம்பி அன்பு மலர்
நன்றி நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 9:51 pm

அருமை பிரபு - பகிர்வு.

புள்ள கல்யாணத்துக்கு அப்புறம் என்ன ஆவப் போவுதோ?




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jun 11, 2012 10:00 pm

பள்ளி கல்லூரி வாழ்க்கையில் மனப்பாடம் செய்தால் தானே மதிப்பெண் கிடைக்கிறது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 10:05 pm

அதி wrote:பள்ளி கல்லூரி வாழ்க்கையில் மனப்பாடம் செய்தால் தானே மதிப்பெண் கிடைக்கிறது
மார்க்குக்காக மாங்கு மாங்குன்னு மனப்பாடம் பண்ணாதீங்கன்னு தல தலயா அடிச்சிகிட்டாலும் இந்த பசங்க கேக்கறதே இல்லியே!!!!




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jun 11, 2012 11:05 pm

யினியவன் wrote:மார்க்குக்காக மாங்கு மாங்குன்னு மனப்பாடம் பண்ணாதீங்கன்னு தல தலயா அடிச்சிகிட்டாலும் இந்த பசங்க கேக்கறதே இல்லியே!!!!
அது பசங்க கையில் இல்லையே அண்ணா
மார்க்கை மட்டுமே அறிவின் அளவுகோலாக கருதும் பெற்றவர்கள் உறவினர்கள் வேலைக் கொடுக்கும் நிறுவனங்கள் கையில் இருக்கிறது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 12, 2012 6:39 am

யினியவன் wrote:அருமை பிரபு - பகிர்வு.

புள்ள கல்யாணத்துக்கு அப்புறம் என்ன ஆவப் போவுதோ?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 8:23 am

மகா பிரபு wrote:
யினியவன் wrote:அருமை பிரபு - பகிர்வு.

புள்ள கல்யாணத்துக்கு அப்புறம் என்ன ஆவப் போவுதோ?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
இப்ப எல்லாம் ஞாபகம் இருக்கு உங்களுக்கு - அப்புறம் இருக்குமான்னு டவுட்டு பட்டேன்...




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 12, 2012 10:20 am

யினியவன் wrote:
மகா பிரபு wrote:
யினியவன் wrote:அருமை பிரபு - பகிர்வு.

புள்ள கல்யாணத்துக்கு அப்புறம் என்ன ஆவப் போவுதோ?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
இப்ப எல்லாம் ஞாபகம் இருக்கு உங்களுக்கு - அப்புறம் இருக்குமான்னு டவுட்டு பட்டேன்...
அண்ணன் எவ்வழியோ.. தம்பியும் அவ்வழி தான்.. சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக