புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
85 Posts - 79%
heezulia
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_m10சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியன் உதிக்காமல் போனால்..


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu May 31, 2012 12:36 pm

First topic message reminder :

தமிழ் வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் ஒருமுறை படித்தது :

கேள்வி: சூரியன் உதிக்காமலே போனால் என்ன ஆகும்?
பதில்: ரொம்ப ஜாலி. படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை...

வேடிக்கையாக பதில் தரப்பட்டுள்ளது. சூரியன் உதிக்காமல் போவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் சூரியனிடமிருந்து வழக்கமாகக் கிடைக்க வேண்டிய வெப்பம் கிடைக்காமல் பல வார காலம் அல்லது பல மாத காலம் தூசு மண்டலம் சூரியனை மறைத்தபடி இருப்பதற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. அப்படியான நிலைமை ஏற்பட்டால். விபரீத விளைவுகள் ஏற்படும். பூமி ஒரேயடிகாகக் குளிர்ந்துவிடும். இதை எரிமலையால் ஏற்பட்ட குளிர் பருவம் (Volcanic winter) என்பர்.

கோடையில் நல்ல வெயில் அடிக்க வேண்டிய பருவத்தில் பனிப்பொழிவு (Snowfall) இருக்கும். பயிர்கள் பொய்த்து விடும். மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலைமை ஏற்பட்டுக் கலவரங்கள் மூளும். மக்கள் பட்டினியால் சாவார்கள். குளிர் வாட்டும். நோய்கள் பெருகும். இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெறும் ஊகம் அல்ல.

உண்மையில் இப்படியான நிலைமை 1816 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அதாவது அப்போது சூரியன் மறைக்கப்பட்டது. இந்தோனேசியாவில் உள்ள தம்போரா (Tambora) என்ற எரிமலையே அதற்குக் காரணம். அதற்கு முந்தைய ஆண்டில்(1815) தம்போரா எரிமலை பயங்கரமாக வெடித்தது. 5000 ஆண்டுகளில் காணப்படாத பிரம்மாண்டமான வெடிப்பு அது. அந்த எரிமலையிலிருந்து பெரும் புகை வெளிப்பட்டது. கோடானு கோடி டன் தூசு வெளிப்பட்டது.

சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Tombora+volcano
தம்போரா எரிமலை, இந்தோனேசியா

இத்தூசு வானில் 40 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்றது. தூசு மேகங்கள் மேற்கு நோக்கி நகர்ந்தன. விரைவில் அவை பூமியைப் போர்த்துக் கொண்டன. சூரியன் பெரிதும் மறைக்கப்பட்டது. கருப்புக் கண்ணாடியால் பார்த்தால் தெரிவது போல சூரியன் மங்கலான வட்டமாகத் தெரிந்தது.

வானில் இருந்த தூசு காரணமாக சூரியன் வெவ்வேறு சமயங்களில் பச்சை நிறத்தில், ஆரஞ்சு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் தெரிந்தது.

தூசு மண்டலத்தால் சூரியன் மறைக்கப்பட்டபோது வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோடைக்காலம். ஆனால் நல்ல வெயில் அடிப்பதற்குப் பதில் கடும் குளிர் வீசியது. நியூயார்க் உட்பட வட அமெரிக்கக் கண்டத்தில் பல இடங்களில் பனிப் பொழிவு (Snowfall) இருந்தது. பயிர்களை படர் பனி (Frost) தாக்கியது. பயிர்கள் பொய்த்தன. ஐரோப்பிய நாடுகளும் இதே போல கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ஐரோப்பாவில் பல நாடுகளில் உணவுப் பஞ்சத்தால் கலவரங்கள் வெடித்தன. நோய்களால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இந்தியாவைப் பொருத்தவரையில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பருவ மழை பொய்த்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.ஆகவே 1816 ஆம் ஆண்டை கோடையே இல்லாத ஆண்டு என்று கூறுவர்.

சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Karakatau+volcano
கிரகடோவா எரிமலை


தம்போரா எரிமலை வெடித்ததற்குப் பின்னர் அதே இந்தோனேசியாவில் 1883 ஆம் ஆண்டில் கிரகடோவா எரிமலை (Krakatoa) வெடித்தது. அப்போது ஏற்பட்ட தூசு முகில் பூமியை பல முறை சுற்றி வந்தது. கிரகடோவா வெடித்ததால் ஏற்பட்ட நிலைமைகள் அவ்வளவு கடுமையாக இருக்கவில்லை.

அதே இந்தோனேசியாவில் உள்ள டோபா எரிமலை (Toba) இன்னும் மோசம். அந்த எரிமலை சுமார் 73 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரமாக வெடித்தது. அப்போது தோன்றிய பிரம்மாண்டமான எரிமலை சாம்பல் வடமேற்கு நோக்கி நகர்ந்து இந்தியாவைக் கப்பியது.

சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Toba+volcano
டோபா எரிமலை, சுமத்ரா தீவு, இந்தோனேசியா.
இந்த எரிமலையின் வாய் இப்போது
பெரிய ஏரியாக உள்ளது.

இந்தியாவில் பல இடங்களில் நிலத்துக்கு அடியில் நிபுணர்கள் தோண்டிப் பார்த்த போது சுமார் 15 செண்டிமீட்டர் கனத்துக்கு எரிமலைச் சாம்பல் காணப்படுகிறது. நிபுணர்கள் தோண்டிய இடங்களில் ஆந்திரத்தில் உள்ள ஜுவாலாபுரம் என்ற இடமும் ஒன்றாகும். . இங்கு காணப்பட்ட சாம்பல் படிவு டோபா எரிமலை வெடித்த போது வெளிப்பட்ட சாம்பலே என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Toba+ash+jwalapuram
ஆந்திரத்தில் நிலத்தைத் தோண்டி ஆராய்ச்சி.
வெள்ளையாக சாம்பல் படிந்தது தெரிகிறது.

டோபா எரிமலை வெடிப்பினால் உலகம் முழுவதிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. உலகின் மக்கள் தொகை வெறும் 10 ஆயிரத்துக்கு குறைந்தது என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றி சர்ச்சை உள்ளது என்றாலும் பெரும்பாலான மக்கள் அழிந்தனர் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. டோபா வெடிப்பினால் ஐரோப்பா அருகே உள்ள ஐஸ்லாந்திலும் அமில மழை பெய்தது. இந்த பெரும் வெடிப்பைத் தொடர்ந்து பூமி குளிர்ந்தது. அதைத் தொடர்ந்து பனி யுகம் தோன்றியது.

கீழே உள்ள படம் டோபா எரிமலை வெடிப்பின் தாக்கத்தைக் காட்டுகிறது. வட்டமான சிவப்புப் புள்ளி டோபா எரிமலை. நீல நிறப் புள்ளிகள் டோபா எரிமலைச் சாம்பல் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களைக் காட்டுகின்றன. சிவப்பு கோட்டுக்கு உள்பக்கம் வாழ்ந்த மக்களில் யாரும் மிஞ்சவில்லை என்று சில நிபுணர்க்ள் கூறியபோதிலும் பலர் அதை ஏற்கவில்லை.

சூரியன் உதிக்காமல் போனால்.. - Page 2 Toba-ash+and+India
டோபா எரிமலை வெடிப்பின் தாக்கம்

தம்போரா, கிரகடோவா மற்றூம் டோபா எரிமலைகள் பூமிக்குள் சில்லுகள் புதையும் இடங்களில் அமைந்துள்ளவை. சில்லுப் பெயர்ச்சியால் மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய மிகப் பெரிய ஆபத்து எரிமலை வெடிப்பால் பூமியை தூசுப் படலம் சூழ்ந்து கொள்வதே ஆகும்.

இன்று தம்போரா எரிமலை அமைதியின் வடிவமாக இருக்கிறது. டோபா எரிமலை ஏரி வடிவில் அமைதியாக உள்ளது.

இவற்றை வைத்து எரிமலைகள் மனித குலத்துக்குக் கேடு விளைவிப்பவை என்று முடிவு கட்டிவிடலாகாது. பூமியில் மனித குலம் தோன்றியதில் எரிமலைகளின் வாயுக்களும் மின்னல்களும் முக்கிய பங்களித்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

தவிர, எப்போதோ எரிமலைக் குழம்புகள் வழிந்தோடிய நிலங்கள் பயிர் விளைச்சலுக்கு மிகவும் உகந்தவையாகக் கருதப்படுகின்றன். பல சமயங்களிலும் பாதுகாப்பைக் கருதி எரிமலை அடிவாரங்களிலிருந்து மக்களை வெளியேற்ற முற்பட்டால் அவர்கள் வெளியேற மறுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஆகவே எரிமலைகளை மனித குலத்தின் எதிரி என்றும் சொல்லிவிட முடியாது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம்.

சூரியன் உதிக்காமலே போனால் என்ன ஆகும்?

பூமி தனது அச்சில் சுழல்வதால் தான் நமக்கு சூரிய உதயமும், அஸ்தமனமும் நிகழ்கின்றன. பூமி தனது அச்சில் சுழல்வது நின்று விடுவதாக வைத்துக் கொண்டால், சூரிய உதயமே இருக்காது. பூமியின் ஒரு பாதியில் வானில் சூரியன் நிலை குத்தி நிற்கும் (பூமி உருண்டை என்பதால்). அங்கு என்றெனும் பகலாகவே இருக்கும். அப்படியான நிலையில் சூரியனின் வெப்பம் தாங்காமல் அனைத்தும் பொசுங்கிப் போய்விடும்.

பூமியின் மறுபாதியில் என்றென்றும் இரவாக இருக்கும். சூரிய வெப்பம் இல்லாமல் போய்விடுவதால் கடும் குளிர் வீசும். அனைத்தும் உறைந்து போய் விடும். பயிர்கள் வளராது. மக்கள் குளிரில் விறைத்து மடிந்து போவர். அல்லது பட்டினியால், நோய்களால் செத்து மடிவர். மொத்தத்தில் பூமியில் உயிரினமே இருக்காது. பூமி செத்து விடும். பூமி தனது அச்சில் சுழன்று, அதனால் சூரிய உதயமும் அஸ்தமனமும் இருந்தால் தான் பூமியில் உயிரினம் இருக்க முடியும். சூரியன் இல்லையேல் - அதாவது பகலும் இரவும் இல்லையேல் - உயிரினமே இராது. உயிர் வாழ்க்கையின் ஆதாரமே சூரியன் தான்.


”ஞாயிறு போற்றுதும்"

தகவல்
அறிவியல் புரம்



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 01, 2012 7:43 pm

நல்லதொரு பகிர்வு! அதிர்ச்சி

Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri Jun 01, 2012 7:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



அன்புடன்
அட்சயா!
tkaru
tkaru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 18/09/2012

Posttkaru Tue Sep 25, 2012 6:48 pm

நல்ல பகிர்வுக்கு நன்றி ராஜ் ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 25, 2012 6:53 pm

நல்ல தகவல் ராஜ் அருண் மகிழ்ச்சி

avatar
sangaimp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 17/03/2009

Postsangaimp Tue Sep 25, 2012 6:57 pm

நல்ல பகிர்வுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக