புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_c10 
48 Posts - 51%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 44 of 76 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 60 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 31, 2012 9:02 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Antismoke1

குறள் வெண்பா : ௦௬௧(061)

பகையாகும் நெஞ்சுக்கே பாதகங்கள் நூறாம்
புகைபிடித்தல் விட்டொழியிப் போது

----- சதாசிவம், மலேசியா

பகை/யா/கும் - நெஞ்/சுக்/கே - பா/தகங்/கள் - நூ/றாம்
புகை/பிடித்/தல் - விட்/டொழி/யிப் - போ/து

நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

புளிமாங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளங்காய் – கூவிளங்காய் – காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : கையாகும்; புகைபிடித்தல்

மோனை : கையாகும் – பாதகங்கள்; புகைபிடித்தல் – போது

ஈற்றுச்சீர் : போது > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

இந்த அழகிய குறளைத் தந்த தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். குறளும் படமும் சொல்லும் செய்திக்கு மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jul 31, 2012 10:37 am

விடாது செய்யும் முயற்சி பன்மடங்கு பலன் தரும் என்பதை உலகுக்கு உணர்த்த , செங்குறளை செதுக்கிய நாக சுந்தருக்கு வாழ்த்துகள், தொடர்ந்து செய்த பயிற்சியின் பலன் உங்கள் குறளில் தெரிகிறது, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற குறளுக்கு உதாரணமாய் உள்ளது உங்கள் குறள்.
தொடர்க, வளர்க, வளம் பல பெருக, நற்குறளைத் தருக..

முயற்சியின் முத்தாய்ப்பு இக்குறளாம் செய்த
பயிற்சியின் பன்மடங்கைப் பார்

நன்றி தம்பி சதாசிவம்...இக்குறள் பதிந்தவுடன் போனவர்தான் நாகசுந்தரம், அப்புறம் வரவே இல்லை.

மன்னிக்கவும் ஐயா. அலுவலக வேலையில் இருந்து விட்டேன். குறட்பாக்கள் எழுதி வைத்துள்ளேன். தனி மடலை விரைவில் அனுப்புகிறேன். ஈகரையில் தொடர்ந்து இணைய முயற்சிக்கிறேன். நன்றிகள்.

Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 01, 2012 8:47 am

நாகசுந்தரம் wrote:விடாது செய்யும் முயற்சி பன்மடங்கு பலன் தரும் என்பதை உலகுக்கு உணர்த்த , செங்குறளை செதுக்கிய நாக சுந்தருக்கு வாழ்த்துகள், தொடர்ந்து செய்த பயிற்சியின் பலன் உங்கள் குறளில் தெரிகிறது, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற குறளுக்கு உதாரணமாய் உள்ளது உங்கள் குறள்.
தொடர்க, வளர்க, வளம் பல பெருக, நற்குறளைத் தருக..

முயற்சியின் முத்தாய்ப்பு இக்குறளாம் செய்த
பயிற்சியின் பன்மடங்கைப் பார்

நன்றி தம்பி சதாசிவம்...இக்குறள் பதிந்தவுடன் போனவர்தான் நாகசுந்தரம், அப்புறம் வரவே இல்லை.

மன்னிக்கவும் ஐயா. அலுவலக வேலையில் இருந்து விட்டேன். குறட்பாக்கள் எழுதி வைத்துள்ளேன். தனி மடலை விரைவில் அனுப்புகிறேன். ஈகரையில் தொடர்ந்து இணைய முயற்சிக்கிறேன். நன்றிகள்.

நாகசுந்தரம் அவர்களே....நமது ஈகரை தமிழ் களஞ்சியம் போன்றே நீங்களும் ஒரு தமிழ் களஞ்சியம் தளத்தை உருவாக்கி புது தில்லியில் இருந்து நடத்தி வருகின்றீர்கள் என்று கேள்விப்படுகின்றேன். நீங்கள் எழுதிய சிலேடை கவிதைகள், சமீபத்தில் எழுதிய பலவகை கவிதைகள் எல்லாம் வைத்து பார்க்கும் போது, நீங்கள் வெண்பா எழுத வராது என்பதுபோல் எங்களுக்கு காது குத்த முயற்சிக்கிறீர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. எனக்கு இருக்கும் வேலைப்பளுவுக்கு இடையில், உங்களுக்கு விளக்கம் எழுதவும் உங்களின் குறள்களை திருத்தவும் எனது நேரத்தை விரயம் செய்கிறேனோ என்றும் தோன்றுகிறது. சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 01, 2012 10:01 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Undercutting

குறள் வெண்பா : ௦௬௨ (062)

காட்டிக் கதைப்பதில் கால்வாரிக் கைவிடலில்
நாட்டில் நமக்கிணையார் நன்கு

காட்/டிக் - கதைப்/பதில் - கால்/வா/ரி - கை/விட/லில்
நாட்/டில் - நமக்/கிணை/யார் - நன்/கு

நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/பு

தேமா – கருவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை
5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : காட்டிக்; நாட்டில்

மோனை : காட்டிக் – தைப்பதில் – கால்வாரிக் - கைவிடலில்;
நாட்டில் – மக்கிணையார் – ன்கு

ஈற்றுச்சீர் : நன்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

முழுவதும் முற்று மோனையில் இக்குறள் எழுதப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை முகத்தில் அடித்தாற்ப்போல் சொல்ல விளைகிறது இக்குறள். பழம்பெருமை பேசியே பழக்கப்பட்டு விட்ட நமக்கு, இன்றைய உண்மை நிலையை இடித்துரைக்கவே இக்குறள் இயற்றினேன். கட்டப்பொம்மன் காலத்து எட்டப்பனாக இருந்தாலும் சரி, சமீபத்தில் சாயம் வெளிறிய கருணா, பிள்ளையான், டக்லஸ் போன்றோர்கள் ஆனாலும் சரி, காட்டிக்கொடுத்தாலும், காலைவாரி விடுதலும், கைவிட்டுவிடுதலும் காலம் காலமாக நமக்கு கைவந்த கலையாகப் போய்விட்டது மிகவும் கவலைப்படவேண்டிய ஒரு காரியமாகும் சோகம்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Aug 01, 2012 10:16 am

[quote="Dr.சுந்தரராஜ் தயாளன்"]
நாகசுந்தரம் wrote:
நாகசுந்தரம் அவர்களே....நமது ஈகரை தமிழ் களஞ்சியம் போன்றே நீங்களும் ஒரு தமிழ் களஞ்சியம் தளத்தை உருவாக்கி புது தில்லியில் இருந்து நடத்தி வருகின்றீர்கள் என்று கேள்விப்படுகின்றேன். நீங்கள் எழுதிய சிலேடை கவிதைகள், சமீபத்தில் எழுதிய பலவகை கவிதைகள் எல்லாம் வைத்து பார்க்கும் போது, நீங்கள் வெண்பா எழுத வராது என்பதுபோல் எங்களுக்கு காது குத்த முயற்சிக்கிறீர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. எனக்கு இருக்கும் வேலைப்பளுவுக்கு இடையில், உங்களுக்கு விளக்கம் எழுதவும் உங்களின் குறள்களை திருத்தவும் எனது நேரத்தை விரயம் செய்கிறேனோ என்றும் தோன்றுகிறது. சோகம்

உயர்திரு ஐயா அவர்களுக்கு, தமிழ் நண்பர்கள் தளத்தினர் நடத்திய கவிதைப்போட்டியில் பரிசாக கிடைத்த தளம்தான் தாங்கள் குறிப்பிட்ட அந்த இணையதளம். அதன் பெயர் வைகரி தமிழ் மன்றம் (http://vaikaritamilmandram.in) என்பதாகும். உண்மையில் நான் முறையாக தமிழ் இலக்கணம் பயின்றவன் அல்ல. பதினோராம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவன். ஆனால் சிறுவயதிலிருந்தே கவிதை பாக்கள் இயற்றுவது இறைவன் அருளும் தங்களைப்போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பும்தான் என்னை மேலும் மேலும் பிழையின்றி எழுத தூண்டிற்று என்றே கூறலாம். அன்னையின் ஆயிரம் பெயர்களுக்கு ஓர் புதுக்கவிதைப்பாக்களாக ஆயிரம் பாடல்கள் எழுதி அது இரண்டு பாகங்களாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எனக்கு முறைப்படி தமிழ் இலக்கண மரபுப்படி உட்கார்ந்து எழுதினால் வரமாட்டேன் என்கிறது. அதனால்தான் தங்களுக்கு அனுப்புகிறேன். அப்படி எழுதுவது இலக்கண மரபுக்குள் வருவது தமிழ் மொழியாம் அன்னையின் அருள்தான். மற்றபடி யாரையும் ஏமாற்றவேண்டும் என்ற எண்ணம் எனக்கு சுத்தமாக கிடையாது. தவறாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுவதால் தங்களுக்கு அனுப்புகிறேன். தங்களின் நேரம் இதனால் விரயம் ஆவதாக தாங்கள் கருதினால் இனி அனுப்பவில்லை. பின்னூட்டமா குறட்பாக்களையும் மற்ற கவிதைகளையும் அளிக்க அனுமதி அளிப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் இந்த பதிவு எனது தாழ்வு மனப்பான்மையை நீக்கிவிட்டது. நன்றிகள்.

Uploaded with ImageShack.us
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 01, 2012 11:24 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Unionr

குறள் வெண்பா : ௦௬௦ (060)

இணைந்தே இருப்போம்நாம் இம்மரம்போ லிங்கே
பிணைந்தால் பெருகும்நல் வாழ்வு

இணைந்/தே - இருப்/போம்/நாம் - இம்/மரம்/போ - லிங்/கே
பிணைந்/தால் - பெரு/கும்/நல் - வாழ்/வு

நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

புளிமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ணைந்தே; பிணைந்தால்

மோனை : ணைந்தே – ருப்போம்நாம் – ம்மரம்போல் – ங்கே; பிணைந்தால் – பெருகும்நல்

ஈற்றுச்சீர் : வாழ்வு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

இணைவதில் இன்பன் இனிதாய் இருக்க
பிணைந்திடு பிண்ணிப் பிடித்து

அருமையான கருத்து மிகுந்த குறள் ஐயா.........தொடருங்கள் ஐயா நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

மரமும் குறளும் மனதில் மருந்தாய்
தரமாய் தருதே கருத்து

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 01, 2012 8:11 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Undercutting

குறள் வெண்பா : ௦௬௨ (062)

காட்டிக் கதைப்பதில் கால்வாரிக் கைவிடலில்
நாட்டில் நமக்கிணையார் நன்கு

காட்/டிக் - கதைப்/பதில் - கால்/வா/ரி - கை/விட/லில்
நாட்/டில் - நமக்/கிணை/யார் - நன்/கு

நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/பு

தேமா – கருவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை
5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : காட்டிக்; நாட்டில்

மோனை : காட்டிக் – தைப்பதில் – கால்வாரிக் - கைவிடலில்;
நாட்டில் – மக்கிணையார் – ன்கு

ஈற்றுச்சீர் : நன்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

முழுவதும் முற்று மோனையில் இக்குறள் எழுதப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை முகத்தில் அடித்தாற்ப்போல் சொல்ல விளைகிறது இக்குறள். பழம்பெருமை பேசியே பழக்கப்பட்டு விட்ட நமக்கு, இன்றைய உண்மை நிலையை இடித்துரைக்கவே இக்குறள் இயற்றினேன். கட்டப்பொம்மன் காலத்து எட்டப்பனாக இருந்தாலும் சரி, சமீபத்தில் சாயம் வெளிறிய கருணா, பிள்ளையான், டக்லஸ் போன்றோர்கள் ஆனாலும் சரி, காட்டிக்கொடுத்தாலும், காலைவாரி விடுதலும், கைவிட்டுவிடுதலும் காலம் காலமாக நமக்கு கைவந்த கலையாகப் போய்விட்டது மிகவும் கவலைப்படவேண்டிய ஒரு காரியமாகும் சோகம்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 02, 2012 8:21 am

நாகசுந்தரம் wrote:தவறாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுவதால் தங்களுக்கு அனுப்புகிறேன். தங்களின் நேரம் இதனால் விரயம் ஆவதாக தாங்கள் கருதினால் இனி அனுப்பவில்லை. பின்னூட்டமா குறட்பாக்களையும் மற்ற கவிதைகளையும் அளிக்க அனுமதி அளிப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் இந்த பதிவு எனது தாழ்வு மனப்பான்மையை நீக்கிவிட்டது. நன்றிகள்.
நல்லது நாகசுந்தரம் அவர்களே....நீங்கள் எழுதிய அறுசீர் விருத்தம், கலிப்பா, வெண்செந்துறை, சிலேடைப் பாடல்கள் ஆகியவற்றை பார்க்கும் பொது உங்களுக்கு இலக்கணம் தெரிந்துள்ளது என்பது திண்ணமாகத் தெரிகிறது. ஆயினும் நீங்கள் அனும்பும் குறள்களில், ஏழு சீர்களில், ஐந்து /ஆறு இடத்தில் தவறுகள் வருகின்றன. அவற்றை சரிசெய்து, மாற்றி அமைத்து அவைகளை வெண்பா இலக்கண வரம்புக்குள் கொண்டுவருவதற்கு எனக்கு அதிக நேரம் எடுக்க வேண்டி உள்ளது. அதற்குப் பதில் நானே ஒரு புதிய குறளை எழுதிவிடலாம் என்ற நிலை. எனவேதான் எனக்கு சந்தேகம் வந்தது. "மரபுப் பா பயிலரங்கம்" படியுங்கள், முறையாக, நிதானமாக... என்று எவ்வளவோ முறை உங்களுக்கு சொல்லி வந்துள்ளேன். ஆயினும் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குறள் வெண்பாவிலும் தொடர்ந்து தவறுகள் வந்துகொண்டே இருக்கின்றது. எனக்கு இருக்கும் வேலைப்பளுவில் அவற்றை திருத்துவது என்பது சிரமமாக உள்ளது. நான் ஆராய்ச்சித் துறையில் இருப்பதால் எனக்கு இதுபோன்ற அனுபவங்கள் அதிகம். ஆராய்ச்சிக் கட்டுரை என்று கண்டதை எல்லாம் வெட்டியும் ஒட்டியும் ஒரு முப்பத்து பக்கங்களுக்கு மேல் தயார் செய்து அனுப்பி விடுவார்கள். "இதை எடிட் செய்து தாருங்கள்" எங்கள் அலுவலகத்தில் என்னிடம் அனுப்பி வைப்பார்கள். உற்றுப்பார்த்தால், இதை சரி செய்வதை விட நாமே நல்ல முறையில் எழுதிவிடலாமே என்று எண்ணி, தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கும் வேளையில், தில்லியில் இருந்து போன் மேல் போன் வந்துகொண்டே இருக்கும். முடித்து விட்டீர்களா, பேக்ஸ்சில் அனுப்பி வையுங்கள், நாளை நான் ....அவருக்கு அனுப்ப வேண்டும், மிகவும் அவசரம்....என்று. எனது நிலை உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். ஆகவே மீண்டும் நான் உங்களுக்கு சொல்வது, "மரபுப் பா பயிலரங்கத்தை" நிதானமாக படியுங்கள். அதில் சொல்லியிருக்கும் வெண்பா இலக்கணத்தை முறையாக செய்யுங்கள். சீர் அசை பிரிப்பதில் கவனம் செலுத்துங்கள். பின்பு எனக்கு உங்கள் குறள்களை தனி மடலில் அனுப்பி வையுங்கள். நேரடியாக இங்கு திரியில் பதிந்து விடாதீர்கள். வாழ்த்துகள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 02, 2012 8:24 am

பிஜிராமன் wrote:
இணைவதில் இன்பன் இனிதாய் இருக்க
பிணைந்திடு பிண்ணிப் பிடித்து

அருமையான கருத்து மிகுந்த குறள் ஐயா.........தொடருங்கள் ஐயா நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
மரமும் குறளும் மனதில் மருந்தாய்
தரமாய் தருதே கருத்து
மிகவும் நன்றி தம்பி இராமன். உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது வாருங்கள். நீங்கள் எடுக்கும் முயற்ச்சியில் கவனம் வையுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 02, 2012 8:38 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 44 Flagr

குறள் வெண்பா : ௦௬௩(063)

கெஞ்சுகிறேன் உம்மையையா கேளுமிதை விற்றாலே
கஞ்சியெந்தன் கையினிலே காண்

கெஞ்/சுகி/றேன் - உம்/மையை/யா - கே/ளுமி/தை - விற்/றா/லே
கஞ்/சியெந்/தன் - கை/யினி/லே - காண்

நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – நாள்

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : கெஞ்சுகிறேன்; ஞ்சியெந்தன்

மோனை : கெஞ்சுகிறேன் – கேளுமிதை; ஞ்சியெந்தன் – கையினிலே – காண்

ஈற்றுச்சீர் : காண் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 44 of 76 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 60 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக