புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
7 Posts - 3%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
18 Posts - 4%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
5 Posts - 1%
Barushree
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4


   
   

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 154550


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 13, 2012 1:24 am

அண்ணா உங்களின் பதிவுகளை மிக உன்னிப்பாக கவனித்து படித்துவருகிறேன்.உங்களின் பதிவிற்கு நன்றிகள்.
எனக்கு ஒரு சந்தேகம் வெளி எனப்படும் வெளிப்பாடுகள் எனும் நூல் எதை குறிக்கின்றது என்பதை தெளிவாக விவரிக்க முடியுமா.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 13, 2012 7:43 am

ஜேனுக்கு... வாழ்த்துக்கள். பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 154550

தாங்கள் கவனமாக கிரமமாக வாசித்து வருவது அறிந்து உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 677196

வெளிப்படுத்தல் என்னும் சொல் “திரை நீக்குதல்” என்னும் அர்த்தமுடைய கிரேக்க சொல்லிலிருந்து வந்ததாகும். சரித்திரத்தை அமைக்கும் தேவன், எதிர்காலத்தை, “திரை நீக்கி காண்பித்த” விபரத்தைக் கொண்டது இப்புத்தகம். நிற்க.

பரிசுத்த வேதாகமம் ஒரு விளக்கவுரை என்ற தலைப்பில் வரிசைக்கிரமமாக எழுதி வருகிறேன். வெளிப்படுத்தல் ஆகமம் வேதத்தின் கடைசி புத்தகம். இடையில் இதற்கு முழு விளக்கமும் விவரமும் இப்போது கொடுத்து விட்டால், இதை ‌பின்னொரு நாளில் வாசிப்போருக்கு வெளிப்படுத்தல் வாசிக்க நேரும்போது, முழு விபரத்திற்கு நடுவில் கொடுக்கப்பட்ட இந்த பக்கத்தை தேடி கண்டுபிடிப்பது இயலாத ஒரு காரியமாகி விடும்.

எனவே, இது பற்றிய விளக்கமான விபரங்களை வெளிப்படுத்தின ஆகமம் எழுதும்போது நிச்சயம் இதை மனதில் வைத்து எழுதுகிறேன். தங்களது வாஞ்சையான வாசிப்புக்கும் நல்லாதரவுக்கும் மிகவும் நன்றிகள் பல. பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 678642 தங்களைப் போன்றோர் கொடுக்கும் ஊக்கமும், பின்னூட்டமும் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது. தொடர்ந்து வாசியுங்கள். ஆவிக்குரிய வாழ்வில் பெலனடையுங்கள். பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 17 154550

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 13, 2012 8:30 am

6. ரோமர்

அ) பின்னணி:


ஆசிரியர்: தொ்தியு மூலமாக பவுல் (ரோமர்: 16:22)

எழுதப்பட்ட இடம்: கொரிந்து (ரோமர்: 16:23)

எழுதப்பட்ட காலம்: கி.பி.55 - 56 (பவுலின் மூன்றாம் பயணத்தின்போது)

சேருமிடம்: ரோமாபுரியுலுள்ள சபை. பிரிட்டன் முதல் அரேபியா வரை பரந்திருந்த ரோம சாம்ராஜ்யத்தின் தலைநகராகிய ரோமாபுரி, 10 லட்சம் மக்கள் தொகை கொண்டிருந்த ஒரு பல்வ‌ேறு பண்பாட்டு மக்களைக் கொண்ட ஒரு பட்டணமாக இருந்தது. அது பல்வேறுபட்ட நாடுகளின் வர்த்தக மையமாக செயல்பட்டது. ரோமாபுரியில் சபை துவக்கப்பட்ட விவரம் புதிய ஏற்பாட்டில் விளக்கப்படவில்லை; பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்பு, புதிய விசுவாசிகள் மீண்டும் ரோமாபுரிக்கு வந்தது சபையின் துவக்கமாக இருந்திருக்கக் கூடும். (அப்போஸ்தலர்: 2:10)

எந்நிலையில் எழுதப்பட்டது: ஸ்பானியாவிற்குப் போகும் வழியில் ரோமாபுரிக்குச் செல்ல வேண்டுமென்ற பவுலினுடைய திட்டத்தின்போது (ரோமர்: 15:14-24)

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “கிருபையின் சுவிச‌ேஷம்”

கருப்பொருள்: கிருபையின் சுவிசேஷத்தைக் குறித்த ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரை.

நோக்கம்: பவுல்தான் பிரசங்கித்த சுவிசேஷத்தை முழவதுமாக விளக்குவதன் மூலம், ஸ்பானியாவிற்குப் போகும் வழியில் ரோமாபுரிக்குச் செல்லுவதற்கான வழியை ஆயத்தம் செய்தல்.

குறிப்பு விவரம்: கோட்பாடு மற்றும் உபயோகம்

முக்கியவசனம்:

ரோமர்: 1:16,17 - “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 13, 2012 12:52 pm

1கொரிந்தியர்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: எபேசு

எழுதப்பட்ட காலம்: கி.பி.54 (பவுலின் மூன்றாம் ஊழியப் பயணத்தின்போது)

சேருமிடம்:

கொரிந்தியர் சபை. கொரிந்து பட்டணம் கி.மு.46 ல் ரோமர்களால் மீண்டுமாக கட்டப்பட்டு ஒரு முக்கிய வர்த்தக மையமானது; அது எஜியன் மற்றும் ஏடிரியாட்டிக் கடல்களுக்கிடையே உள்ள குறுகிய நிலப்பரப்பிலுள்ள தெற்கு கிரீஸ் நாட்டில் அமைந்திருந்தது. கிரேக்கர், ரோமர், ஆசியர், எகிப்தியர் மற்றும் யூதர்கள் ஆகியோரைக் கொண்டிருந்த கொரிந்து பட்டணத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 3 லட்சமாக இருந்தது. எப்பிரோபதீத்துவின் கோயில் (கிரீஸ் நாட்டினுடைய “அன்பின் தேவதை”) இப்பட்டணத்தின் மீது ஆதிக்கம் கொண்டிருந்தது; இக்கோயிலின் 1000 தாசிகள், கொரிந்து பட்டணத்தின் ஒழுக்கக்கேட்டிற்குக் காரணமாயிருந்தார்கள். பவுல் தன்னுடைய இரண்டாம் ஊழியப் பயணத்தில் கொரிந்து சபையை நிறுவினார். (அப்போஸ்தலர்: 18:1-18). பவுல் இச்சபைக்கு எழுதின நான்கு கடிதங்களில் - “1கொரிந்தியர்” - இரண்டாம் கடிதமாகும்.

எந்நிலையில் எழுதப்பட்டது:

ஒழுக்கம், கோட்பாடு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளைக் குறித்த குலோவேயாளினுடைய வீட்டாரின் (கொரிந்து சபை அமைக்கப்பட்டிருந்த இடம்) அறிக்கை; கொரிந்திய சபையின் மூன்று அங்கத்தினர்கள் கொண்டுவந்த விசார‌ண‌ைக் கடிதம்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “ஒரு பாகானிய சமுதாயத்தில் நடைமுறைக் கிறிஸ்தவ வாழ்க்கை”

கருப்பொருள்: கொரிந்துவில் சபைப் பிரச்சினைகளைச் சரி செய்தல்

நோக்கம்:

குலோவேயாளினுடைய வீட்டாரின் வாய்மொழி அறிக்கையினாலும், கொரிந்தியர்களிடமிருந்து வந்த ஒரு கடிதத்தினாலும் எழும்பியிருக்கும் சர்ச்சைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் பதிலளித்தல்.

குறிப்பு விவரம்: குலோவேயாளினுடைய அறிக்கை மற்றும் கொரிந்துவினுடைய கடிதத்திற்கான பதில்.

முக்கிய வசனம்: 1கொரிந்தியர்: 16:13,14 - “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருசராயிருங்கள், திடன் கொள்ளுங்கள். உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 13, 2012 7:02 pm

8. 2கொரிந்தியர்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: மக்கதோனியா

எழுதப்பட்ட காலம்: கி.பி.55 (பவுலின் மூன்றாம் ஊழியப் பயணத்தின்போது)

சேருமிடம்:

கொரிந்தியர் சபை. பவுல் கொரிந்து சபைக்கு குறைந்த பட்சம் மூன்று முறை சென்றிருக்கிறார். அவருடைய மூன்றாம் ஊழியப் பயணத்திற்குச் சற்று முன்னதாக 1கொரிந்தியர் எழுதப்பட்டது. இந்த சபைக்குப் பவுல் எழுதின நான்கு கடிதங்களில் இது கடைசிக் கடிதமாகும்.

காலத்தின் தேவை: பெரும்பாலான குழப்பவாதிகளின் மனந்திரும்புதலைக் குறித்த தீத்துவின் அறிக்கை. (2கொரிந்தியர்: 7:13-15).

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “பவுலுடைய ஊழியம் மற்றும் அப்போஸ்தல தன்மையின் பாதுகாப்பு அரண்கள்”

கருப்பொருள்: பவுலினுடைய ஊழியம் மற்றும் அப்போஸ்தல தன்மையின் விளக்கம்.

நோக்கம்:

கொரிந்திய சபையின் பெரும்பாலான மக்கள், முந்தின கடிதத்தில் கூறப்பட்டுள்ள சர்ச்சைகளினால் ஏற்பட்ட மனந்திரும்புதலின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பவுலக்கு எதிராக செயல்படும் சிறிய கூட்டத்தினரைக் கடிந்துரைப்பதும்.

குறிப்பு விவரம்: கோட்பாட்டைக் காட்டிலும், தனிப்பட்ட காரியங்களடங்கிய மூன்று மடங்கான பிரிவு.

1. பெரும்பான்மையினருக்கு பவுலினுடைய ஊழியம் விளக்கப்பட்டது. (2கொரிந்தியர்: 1:12 - 7:16)

2. எருசலேமின் ஒருங்கிணைந்த சபைகளுக்கு (2கொரிந்தியர்: 8:1 - 9:15) சிறுபான்மையினருக்கு.

3. பவுலினுடைய ஊழியம் பாதுகாக்கப்பட்டது. (2கொரிந்தியர்: 10:1 - 13:10).

முக்கியவசனம்: 2கொரிந்தியர்: 4:5 - “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இய‌ேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 14, 2012 12:56 am

9. கலாத்தியர்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: சீரியாவிலுள்ள அந்தியோகியா

எழுதப்பட்ட காலம்:

ஏறக்குறைய கி.பி.49 - கி.பி.50 (அப்போஸ்தலர்: 11:27 - 30 வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பஞ்சத்தைக் குறித்து கலாத்தியர்: 2:1 - 10 வசனங்கள் கூறுகின்றன).

சேருமிடம்:

கலாத்தியாவிலுள்ள சபைகள். மத்திய துருக்கி வழியாக, கடற்பரப்பு முழுவதிலும் பரந்து கிடக்கும் ஒரு பெரிய ரோம மாகாணமாக கலாத்தியா திகழ்ந்தது. அதில் பவுல் எந்தளவிற்கு ஊழியத்தினிமித்தமாக பிரயாணம் பண்ணினார் என்பது தெளிவாகவில்லை. அவர் தன்னுடைய முதல் ஊழியப் பயணத்தில், அந்தியோகியா, இக்கோனியா, லிஸ்திரா மற்றும் தொ்பை ஆகிய இடங்களில் சபைகளை ஸ்தாபித்தார் என்பதை (அப்போஸ்தலர் 13 மற்றும் 14 அதிகாரங்களிலிருந்து) நாம் அறிகிறோம். அவர் இந்த இடங்களுக்கு மீண்டுமாக இரண்டுமுறை சென்றார். (அப்போஸ்தலர்: 16:6; 18:23). கலாத்தியருக்கு எழுதப்பட்ட நிருபம், இந்தப் பட்டணங்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள கலாத்தியருக்கு எழுதப்பட்டது என்று “தெற்கு கலாத்திய கோட்பாடு விளக்கம்” கூறுகிறது.

எந்நிலையில் எழுதப்பட்டது:

“யூதராக்குபவர்களின்” தவறான போதனை. புறஜாதி விசுவாசிகள் இரட்சிப்பைப் பெறவேண்டுமென்றால், அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டு, மோசேயின் பிரமாணத்தைக் கைக் கொள்ள வேண்டும் என்று போதிக்கும் யூத விசுவாசிகள் யூதராக்குபவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “நியாயப்பிரமாணமும், எதிராகக் கிருபையும்”

கருப்பொருள்: பாவமன்னிப்பைப் பெற நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ள வேண்டும் என்ற யூதராக்குபவர்களின் கோட்பாட்டை எதிர்த்து போராடுதல்.

நோக்கம்: யூதராக்குபவர்கள் போதித்த “நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ளுதலின் சுவிசேஷத்திற்கு” எதிராகப் பவுல் புறஜாதிகளுக்குப் பிரசங்கித்த இலவசக் கிருபையின் சுவிசேஷத்தைப் பாதுகாத்தல்.

குறிப்பு விவரம்:

1. இரண்டு மடிப்பான வாக்குவாதம் மற்றும் பயன். இரண்டு மடிப்பான வாதம்: சுயசரிதத்தின் வாதம் (கலாத்தியர்: 1:6 - 2:21) கோட்பாட்டின் வாதம் (3:1 - 4:31).

2. நடைமுறை உபயோகம் (கலாத்தியர்: 5:1 - 6:10)

முக்கியவசனம்: கலாத்தியர்: 2:16 - “...நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 14, 2012 1:20 am

10. எபேசியர்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோம சிறை (எபேசியர்: 3:1; 4:1; 6:20)

எழுதப்பட்ட காலம்: கி.பி.60 - கி.பி.62

சேருமிடம்:

எபேசு மற்றும் அதைச் சுற்றியுள்ள சபைகள், ஆசிய மாகாணத்தின் முதன்மையான பட்டணமாகிய எபேசு, துருக்கியின் மேற்குக் கரையோரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பத்து இலட்சம் மக்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினருக்கு ஒரு மதப்பிரகாரமான மற்றும் வர்த்தக மையமாக திகழ்ந்தது. எபேசுவிலுள்ள சபை, பவுலின் மூன்றாம் ஊழியப் பயணத்தின்போது ஸ்தாபிக்கப்பட்டது. (அப்போஸ்தலர்: 19 அதிகாரம்). சுவிசேஷம் எபேசுவிலிருந்து அம்மாகாணம் முழுவதிலும் பரம்பிற்று. வெளிப்படுத்தல் 2 மற்றும் 3 அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு சபைகளின் பொதுவான பகுதியாகிய லிகஸ் பள்ளத்தாக்கின் நகரங்களிலும், கொலோசெ, இராபோலி, லவோதிக்கெயா போன்ற இடங்களிலும் சபைகள் நிறுவப்பட்டன. (அப்போஸ்தலர்: 19:8 -10)

எந்நிலையில் தேவைப்பட்டது:

மனமாற்றமடைந்த யூதர்கள் , தங்களிடம் வெறுப்பைக் காண்பிக்கக் கூடிய புறஜாதி சகோதரரிடமிருந்து தங்களைப் பிரித்துக் கொள்ள விரும்பினார்கள். எபேசுவிலிருந்த இந்நிலை எபேசியருக்கான நிருபத்தை எழுதுவதற்கு காரணமாக அமைந்தது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “கிறிஸ்துவுக்குள் அனைவரும் ஒன்று”

கருப்பொருள்: சபையின் மூலமாக கிறிஸ்துவுக்குள்ளான அனைத்துக் காரியங்களையும் தொகுத்தல்.

நோக்கம்:

வரவிருக்கும் யுகத்தின் தனிச்சிறப்பாக அமையவிருக்கும் ஒற்றுமையின் ஒரு “வெள்ளோட்டமான” சபையின் மூலம் கிறிஸ்துவுக்குள்ளான அனைத்தையும் தொகுத்து, ஒன்று சோ்ப்பதை எடுத்துக் காட்டுதல்.

குறிப்பு விவரம்: கோட்பாடு மற்றும் நடைமுறை பிரிவுகள்

கோட்பாடு “ஐசுவரியம்” (எபேசியர்: 1:3 - 3:21)

பயிற்சி “நடை” (எபேசியர்: 4:1 - 6:20)

முக்கியவசனம்:

எப‌ேசியர்: 1:9,10 - “காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ள‌ே கூட்டப்படவேண்டுமென்று, தமக்குள்ளெ தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 14, 2012 6:52 am

11. பிலிப்பியர்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோம சிறை (பிலிப்பியர்: 1:13,14)

எழுதப்பட்ட காலம்: கி.பி.60 - கி.பி.62

சேருமிடம்:

பிலிப்பியிலுள்ள சபை. கிழக்கத்திய நாடுகளுடன் ரோமாபுரியை இணைக்கும் மிகப் பெரிய ராணுவ சாலையான எக்நேசியா வழியிலுள்ள மக்கதோனியாவின் வடக்கு கிர‌ேக்க மாகாணத்தில் பிலிப்பி அமைந்திருந்தது. இத்தாலிய குடிமக்கள் முதன்முதலாக ரோமாபுரியில் குடிய‌ேறி, ஒரு ரோம குடிய‌ேற்றத்தை இம்மாகாணத்தில் ஏற்படுத்தினார்கள். என்வே, அவர்கள் தன்னாட்சி மற்றும் வாணிப வரிகளிலிருந்து விலக்கு போன்ற விசேஷமான உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவித்தார்கள். பெண்கள் ஓர் உயரிய சமுதாய அந்தஸ்த்தைப் பெற்று, பொது வாழ்க்கையிலும், வாணிகத்திலும், உற்சாகமாக பங்கு வகித்தார்கள். பவுல் தன்னுடைய “மக்கதோனியா தரிசனத்தின்” விளைவாக, தன்னுடைய இரண்டாம் ஊழியப் பயணத்தின்தின்போது இந்த சபையை ஸ்தாபித்தார். (அப்போஸ்தலர்: 16:9-40).

எந்நிலையில் எழுதப்பட்டது:

கிறிஸ்துவுக்காக தற்போது ரோமாபுரியில் சிறைப்பட்டிருந்த பவுலுக்கு பிலிப்பியர் சமீபகாலத்தில் அளித்த காணிக்கை (பிலிப்பியர்: 4:10-19).

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “சிறையிலிருந்து துதியுடன்”

கருப்பொருள்: தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் மதிப்புரைகளுடன், ஒரு பரிசிற்காக நன்றி கூறுதல்.

நோக்கம்:

எப்பாப்பிரோதீத்துவின் மூலம் பிலிப்பியர் அனுப்பியிருந்த அவர்களுடைய பரிசிற்காக நன்றி கூறுதல் (பிலிப்பியர்: 2:25; 4்18). ஒற்றுமைக்காக அழைப்பு விடுத்தல். சிறையில் பவுலினுடைய தற்போதைய நிலைமையைக் குறித்து விவரமளித்தல்.

குறிப்பு விவரம்: ஒரு வரையறுக்கப்பட்ட குறப்புகளை பின்பற்றவில்லை. என்றாலும், ஆழமான வேதாந்த மற்றும் நடைமுறை நுண்ணறிவை அளிக்கிறது.

முக்கியவசனம்: பிலிப்பியர்: 1:21 - “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 14, 2012 7:19 am

12. கொலோசெயர்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோம சிறை (கொலோசெயர்: 4:18)

எழுதப்பட்ட காலம்: கி.பி.60 - கி.பி.62

சேருமிடம்:

கொலோசெயில் உள்ள சபை. கொலோசெ, எபேசுவிலிருந்து 100 மைல்கள் கிழக்கிலுள்ள அழகான லிகஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய நகரமாயிருந்தது. இராபோலி, லவோதிக்கேயா, மற்றும் கொலோசெ ஆகிய மூன்று பட்டணங்களை உள்ளடக்கிய இந்த “மூன்று - பட்டணம் பகுதியில்” கொலோசெ மிகவும் சிறிய பட்டணமாயிருந்தது. அங்கு சபை எவ்வாறு துவங்கப்பட்டது என்பதைக் குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. பவுல் எபேசுவில் தங்கியிருந்த போது, கொலோசெயின் முக்கியஸ்தர்களான பிலமோன் மற்றும் எப்பாப்பிரா போன்றவா்கள் விசுவாசிகளாகி, பின்பு தங்களுடைய பட்டணத்திற்கு திரும்பிச் சென்றதன் விளைவாக அங்கு சபை தோன்றியிருக்கக் கூடும். (கொலோசெயர்: 1:7,8).

எந்நிலையில் எழுதப்பட்டது:

பாவமன்னிப்பைப் பெறுவதற்கு நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ள வேண்டுமென்ற யூதக் கோட்பாடு உள்பட, கொலோசெயில் காணப்பட்ட சமயசமத்துவம் (கலப்பான போதனை) (கொலோசெயர்: 2:16,17,21-32); கிரேக்க தத்தவம் (கொலோசெயர்: 2:8) மற்றும் சமரச மறையியல் இறைநிலை (கொலோசெயர்: 2:18).

ஆ) உள்ளடக்கம்:


தலைப்பு: “ஒப்புயர்வற்ற கிறிஸ்து”

கருப்பொருள்: கிறிஸ்துவின் மூலமாக அளிக்கப்படும் இரட்சிப்பு போதுமானது.

நோக்கம்:

ஒரு விசுவாசியின் இருதயத்தில் கிரியை செய்யும் கிறிஸ்துவின் ஆள்தத்துவத்தை எடுத்துரைப்பதின் மூலம் கொலோசெயிலுள்ள முரண்பாடான சமயக் கருத்துக்களை எதிர்த்தல்.

குறிப்பு ந‌ேரம்: கோட்பாடு மற்றும் நடைமுறைப்படுத்தலின் பிரிவுகள்.

கோட்பாடு:

1. நேரானது: கிறிஸ்துவின் ஓப்புயர்வு (கொலோசெயர்: 1:13 - 2:7)

2. எதிர்மாறானது: முரண்பாடான சமயக் கருத்துக்களுக்கு விரோதமாக செயல்படுத்துவது. (கொலோசெயர்: 2:8 - 2:23).

கிறிஸ்துவுடன் இணைதல் (கொலோசெயர்: 3:1-4)

கிறிஸ்துவின் மரணத்தில் இணைதல் (கொலோசெயர்: 3:5-11)

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இணைதல் (கொலோசெயர்: 3:12 - 4:6).

முக்கியவசனம்:

கொலோசெயர்: 2:9,10 - “ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 14, 2012 5:48 pm

13. 1தெசலோனிக்க‌ேயர்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: கொரிந்து

எழுதப்பட்ட காலம்: கி.பி.50 - கி.பி.51 (பவுலின் இரண்டாம் ஊழியப் பயணத்தின்போது)

சேருமிடம்:

தெசலோனிக்கேய சபை. ரோம மாகாணமான மக்‌கதோனியாவின் தலைநகரான தெசலோனிக்கேயா, கிரீஸ் நாட்டின் கிழக்கு கடற்கரையிலிருந்த ஒரு செழிப்பான துறைமுகப்பட்டணமாகும். அது பிலிப்பியிலிருந்து 90 மைல்கள் தூரத்திலுள்ள எக்னேசியா வழியில் அமைந்திருந்தது. பவுலினுடைய இரண்டாம் ஊழியப் பயணத்தின்போது இங்கு சபை நிறுவப்பட்டது. (அப்போஸ்தலர்: 17:1-20).

எந்நிலையில் எழுதப்பட்டது: பாடுகளின் மத்தியில் இந்த சபை உறுதியுடன் நிலைநிற்பதைக் குறித்த தீமோத்த‌ேயுவின் சாதகமான அறிக்கை.

ஆ) உள்ளடக்கம்:


தலைப்பு: “இரண்டாம் வருகையைக் குறித்த ஆறுதல்”

கருப்பொருள்: ஊக்கம், அறிவுரை மற்றும் ஆறுதல்.

நோக்கம்:

பாடுகளுக்குட்பட்டிருக்கும் தெசலோனிக்கேயருக்கு ஊக்கமளித்து, கிறிஸ்துவின் அதி சீக்கிர வருகையின்போது நிகழவிருக்கும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையினால் அவர்களை ஆறுதல்படுத்துதல்.

குறிப்பு விவரம்: ஊக்கம் மற்றும் அறிவுரை

ஊக்கம் (1தெசலோனிக்கேயர்: 1:2 - 3:13)

அறிவுரை (1தெசலோனிக்கேயர்: 4:1 - 5:22)

முக்கியவசனம்:

1தெசலோனிக்கேயர்: 5:23,24 - “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதிலும், நம்முடைய கர்த்தராகிய இய‌ேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே செய்வார்.”


தொடரும்...


Sponsored content

PostSponsored content



Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக