புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_rcap 
72 Posts - 47%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_rcap 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_rcap 
14 Posts - 9%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_rcap 
2 Posts - 1%
Anthony raj

prajai

rajuselvam
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_rcap 
1 Post - 1%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_rcap 
149 Posts - 41%

146 Posts - 40%

18 Posts - 5%

16 Posts - 4%

12 Posts - 3%

10 Posts - 3%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 13 154550

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 5:09 pm

2. கிரேக்க சாம்ராஜ்யம்: கி.மு.330-166)
நியாயாதிபதிகளின் காலத்திலிருந்தே கிரேக்கர்கள் உலக சரித்திரத்தில் தலை தூக்க ஆரம்பித்தாலும், கி.மு.332 ல் மகா அலெக்சாண்டர் பொ்சியரை தோற்கடித்தபோதுதான் கிரேக்க சாம்ராஜ்யம் உலக வல்லரசாக தலை தூக்கிற்று.

கிரேக்க அரசனாகிய மகா அலெக்சாண்டர் கி.மு.332 ல் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றினான். கி.மு.331 ல் முழு உலகமும் அவன் பாதபடியில் வந்தது. கி.மு.327 ல் இந்தியாவை ஜெயித்து பாபிலோனை அதன் ஆதி மேன்மைக்கு எடுத்துக் கட்ட வேண்டுமென்று தீர்மானித்தபோது தனது 32 வது வயதில் (கி.மு.323) இந்தியாவில் மரணமடைந்தான்.

புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட காரணம்:

இவன் யூதர்களோடு மிகவும் நட்பாக நடந்து கொண்டான். எருசலேமை அழிக்காமல் விட்டுவிட்டான். முழு உலகத்திலும் கிரேக்க பட்டணங்களை நிறுவினான். தான் ஜெயித்த பகுதிகளிலெல்லாம் கிரேக்க கலாச்சாரத்தையும், கிரேக்க மொழியையும் மக்கள் தழுவும்படி செய்தான்.

எனவே, அலெக்சாண்டர் காலத்திற்கு பின்பு பாலஸ்தீனம் முழுவதிலும் கிரேக்க நிறுவனங்கள் பெருகின. கிரேக்கக் கலாச்சாரமும், கிரேக்க மொழியும் யூதர்கள் மேல் திணிக்கப்பட்டது. எனவேதான், பிற்காலத்தில் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என பார்க்கிறோம்.

மகா அலெக்சாண்டர் காலத்திற்கு பின்பு:

சரியான வாரிசு இல்லாதபடியால், மகா அலெக்சாண்டர் காலத்திற்கு பின்பு கிரேக்க சாம்ராஜ்யம் அவனுடைய தளபதிகள்:

1. தாலமி
2. செலுக்கஸ்
3. காசண்டர்
4. லிசி மாக்கஸ் - என்பவர்களால் பிரித்து ஆளப்பட்டது.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 5:26 pm

2. கிரேக்க சாம்ராஜ்யம் - தொடர்ச்சி...

அ) தாலமியர்:
தாலமியர்கள் யூதர்களை பட்சமாய் (கனிவாய்) நடத்தினார்கள்.
எபிரேய பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது; இது “செப்துவஜிந்த்” (SEPTUGENT) மொழி பெயர்ப்பு (LXX) என அறியப்படுகிறது.

கிரேக்கக் கலாச்சாராம் யூதர்கள் மத்தியில் பரவியபோது புதிதாய் பிறந்த யூத சந்ததியினர் கிரேக்க மொழியை மட்டுமே அறிந்திருந்தனர். எனவே, இம் மொழிபெயர்ப்பு அவசியமாயிற்று. இந்நாட்களில் பிரதான ஆசாரியன் யூதர்களின் மார்க்கத் தலைவனாக இருந்தான். “சனகரிப் சங்கம்” என்று அழைக்கப்பட்ட யூத ஆலோசனை சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை சங்கத்திற்குப் பிரதான ஆசாரியனே தலைவன். எருசலேமில் உள்ள தேவாலயம் இந்த ஆலோசனை சங்க ஆட்சிக்கு மைய ஸ்தலமாக விளங்கியது. நியாயப்பிரமாணக் கல்விக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. பஸ்கா பண்டிகை, வாரங்களின் பண்டிகை, கூடாரப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. தாலமியர்கள் ஆண்டபோது கிரேக்க கலாச்சாரத்தை யூதர்கள் மேல் திணிக்கவில்லை. கி.மு.198 வரை பாலஸ்தீனத்தை இவர்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தனர்.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 10:22 pm

2. கிரேக்க சாம்ராஜ்யம் - தொடர்ச்சி...

ஆ) செலுக்கியர்கள்

தாலமியர்களுக்குப்பின் பாலஸ்தீனம் செலுக்கியர்களின் ஆளுகையின் கீழ் வந்தது. இவர்கள் யூதர்களை அடிமைப்படுத்தி அவர்கள் மேல் கிரேக்க கலாச்சாரத்தை திணித்தனர். இதை பெரும்பாலான யூதர்கள் விரும்பவில்லை; ஏனெனில் யூதர்கள் ஒரே தெய்வ வணக்கம் உடையவர்கள். கிரேக்கர்களோ பல த‌ெய்வ வணக்கமுடையவர்கள். கிரேக்கர்களுடைய கலாச்சாரமும், ஒழுக்க நெறிகளும், அறநெறிகளும் யூதர்களிலிருந்து பெரிதும் மாறுபட்டது.

கிரேக்கக் கலாச்சாரம் பாலஸ்தீனத்தில் பரவுவதை எதிர்த்து பரிசேயர் என்னும் யூத மார்க்கப் பிரிவினர் மிகவும் போராடினர். ஆனால், ஆசாரிய வம்சத்தை சார்ந்த அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த சதுசேயர் என்னும் பிரிவினரோ, கிரேக்கக் கலாச்சாரம் யூதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்கவில்லை; மாறாக வரவேற்றனர். எனவே, பரிசேயர் சதுசேயர் எனும் இரு மார்க்க எதிர்க்கட்சியினர் யூதருக்குள்ள‌ே தோன்றினர். இவர்களைக் குறித்த பின்பு விரிவாக பார்ப்போம்.

அலெக்சாண்டருடைய தளபதிகளில் தாலமியருடைய வழி வந்தவர்கள் தாலமேயு என்று அழைத்துக் கொண்டனர். இவர்கள் எகிப்தை ஆண்டார்கள். (மற்ற இரு தளபதிகள் ஆண்ட பகுதிகளின் விபரங்கள் இப்போது நமக்கு தேவையில்லை).

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 10:30 pm

2. கிரேக்க சாம்ராஜ்யம் - தொடர்ச்சி...

இ) அந்தியோக்கஸ் எப்பிபானஸ்
இந்நிலையில் செலுக்கியரின் வழிவந்த அந்தியோக்கஸ் எப்பிபானஸ் எனும் அரசன் தன்னை கடவுளின் நிலைக்கு உயர்த்தினான். யூதர்கள் தன்னை வணங்கும்படி கட்டளையிட்டான். யூதர்கள் இதை எதிர்த்தபடியால் அவா்களது மத சடங்குகளையும், ஆசாரங்களையும் அழிக்க பிரயாசப்பட்டான். எதிர்த்தவர்களை கொலை செய்தான். எருசலேம் தேவாலயத்தில் தகனபலி செலுத்தப்படும் இடத்திற்கு அருகில் கிரேக்க கடவுளாகிய ஸீயஸின் சிலையை நாட்டினான். கிரேக்கர்கள் தேவாலயத்திற்குள் பிரவேசித்தனர். பன்றி பலி செலுத்தப்பட்டது. யூதர்களின் முக்கிய கிராமங்களில் ஸீயஸின் சிலை வைக்கப்பட்டு அதற்கு பலி செலுத்த வேண்டும் என்று யூதர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 10:50 pm

3. மக்கபேயர் மற்றும் ஹாஸ்மோனியரின் காலம்: (கி.மு.166-63)

செலுக்கியரின் மார்க்க நீதி அநீதிகளை பொறுத்துக் கொள்ளாத யூதர்கள், மக்கபீயஸ் தலைமையில் அந்தியோக்கஸ் எப்பிபானசின் சேனைக்கு எதிராகப் புரட்சி படையாய் எழும்பினர். யூத மார்க்கத்திற்காகவும், யெகொவா தேவனின் நாமமப் பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து செலுக்கியர்களோடு போரிட்டார்கள். பல யுத்தங்களுக்குப் பிறகு எருசலேமை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள். தீட்டுப்பட்ட தேவாலயத்தை சுத்திகரித்து பண்டிகை கொண்டாடினர். இந்தப் பண்டிகை “விளக்குகளின் பண்டிகை” அல்லது “பிரதிஷ்டையின் பண்டிகை” என்று அழைக்கப்படுகிறது.

தொடர்ந்து வந்த ரோம ஆட்சியின் கீழும், யூதாஸ் மக்கபீயஸிக்கு பின்பு வந்த யோனத்தான், சீமோன், யோவான் ஹிர்க்கானஸ் போன்ற யூதத் தலைவர்கள் பிரதான ஆசாரியர்களாகவும், தளபதிகளாகவும், யூத தேசத்தை ஆளும் அதிபதிகளாகவும் செயல்பட்டு அந்நிய ஆட்சியின் கீழ் யூத தேசத்தை ஒர தனி தேசமாக பாதுகாத்தனர்.

மக்கபேயரின் இவ்வித ஆட்சியின் காலத்தில்தான் ஏதோமியர் உட்பட புறஜாதிய மக்கள் பலரும் மக்கபேயரின் ஒடுக்குதலுக்கு பயந்து தாங்களும் விருத்தச‌ேதனம் பெற்று யூதர்களாய் மாறினர். இப்படி வந்தவர்களையே “யூத மார்க்கத்தமைந்தவர்கள்” என்று நாம் அறிகிறோம். மக்கபேயருக்குப் பின்பு ஹாஸ்மோனியர் என்னும் யூத வம்சம் யூதரை ஆண்டது. இவர்களில் பிரதானமானவன் “ஹிர்க்கானஸ்” என்னும் பிரதான ஆசாரியன் ஆவான். இக்காலத்தை தொடர்ந்து உள்நாட்டுப் போர்களும், யுத்தங்களும் யூதருடைய ஒற்றுமையைக் கலைத்தன.

என்றாலும், சிறையிருப்பிலிருந்து திரும்பிய பின் மக்கபேயரின் ஆட்சிக் காலத்தில் யூதர் தனி நாட்டுச் சிறப்புடன் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு ரோமப் பேரரசு உலக வல்லரசாக தலைதூக்கிற்று.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 6:39 am

4. ரோமப் பேரரசு: (கி.மு.63 முதல்)

ரோமுலஸ் என்னும் பேரரசனால் கி.மு.63 வது ஆண்டில் ரோம சாம்ராஜ்யம் ஏற்படுத்தப்பட்டது. கி.மு.63வது ஆண்டில் பாம்ப்பே என்னும் ரோம அரசன் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றினான். இக்காலத்தில் ரோமப் பேரரசு உலக வல்லரசாக மாறியது. இதற்கு முன்பு வல்லரசாக விளங்கிய கிரேக்கப் பேரரசு வீழ்ச்சியுற்றது.

அகஸ்து, திபேரியு, கலிகுலா, கிலவுதியா, நீரோ, கல்பா, ஏதோ போன்ற பல மன்னர்களால் ரோம சாம்ராஜ்யம் விரிவடைந்து முழு உலகத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்தியது.

ரோம சாம்ராஜ்யம் பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் இராஜாவாக இருக்கிறவன் “இராயன்” என்று அழைக்கப்பட்டான். ஒவ்வொரு பிராந்தியத்திலே‌யும் யுத்த வீரர்களும், தளபதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தனர். ஆசியா, பொந்து, பித்தினியா, யூதேயா, சீப்புரு, பம்பிலியா, லீசியா, கலிலேயா போன்றவை சில பிராந்தியங்களாகும்.

ரோமப் பேரரசின் பிராந்தியங்களில் சமாதான பிராந்தியங்கள், நெருக்கடி பிராந்தியங்கள் என இரு பிரிவுகள் இருந்தன. சமாதானப் பிராந்தியங்கள், நெருக்கடி பிராந்தியங்கள் என இரு பிரிவுகள் இருந்தன. சமாதான பிராந்தியங்கள் அதிபதிகளால் ஆளப்பட்டது. நெருக்கடிப் பிராந்தியங்கள் இராயனுடைய நேரடிப் பார்வையில் இருந்தது.

புதிய ஏற்பாட்டில் “அதிபதி“, “இராயன்” என்னும் பதங்களைக் காணும்போது, இந்தப் பினனணியத்தை நினைவுக்குக் கொண்டு வருதல் விளங்கிக் கொள்ள பயன் தரும்.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 6:53 am

4. ரோமப் பேரரசு - தொடர்ச்சி...

அ) அன்றிபேற்றர்
கி.மு. 63 ம் ஆண்டு ரோம அரசனான பாம்ப்பே பாலஸ்தீனத்தை ஜெயித்து, யூதர்களை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இவன் அன்றிபேற்றர் என்னும் இதுமேயனை (ஏசா வழி வந்தவன்) யூதரின்மேல் ஆட்சி செய்யும்படி ஏற்படுத்தினான்.

இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த ஹாஸ்மோனியத் தலைவர்களை தன் வசப்படுத்தி, பாம்ப்பே மன்னனின் மனவிருப்பத்தின்படி நடந்து ஆட்சிக்கு வந்து தனது நிலையை உறுதி செய்து கொண்டவன் இந்த அன்றிபேற்றர் ஆவான்.

பாம்ப்பே மன்னனைத் தொடர்ந்து , ஜூலியஸ்சீசர், ஆண்டனி போன்ற ரோம அரசர்களின் காலத்தில் யூதர்கள் தனி நாட்டு மக்களாக அங்கீகாரம் பெற்றனர். என்றாலும், ரோமரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபடியால் ரோமப் ப‌ேரரசுக்குக் கப்பம் கட்டினர்.

ரோம ராயனால் விசாரிக்கப்பட வேண்டும் - என்று ஒரு குற்றவாளி ஒருவர் திட்டவட்டமாய் கேட்காத பட்சத்தில் தங்கள் வழக்குகளை தாங்களே விசாரித்துத் தீர்ப்பு செய்ய நீதிமன்றங்களை அமைத்துக் கொள்ளும் உரிமையும் பெற்றனர்.

சனகரிப் சங்கம் இப்பின்னணியத்தைக் கொண்டு எழுந்தத‌ே ஆகும். என்றாலும், ரோமப் பேரரசின் சட்டத்தை மீறும் ஒருவரின் வழக்கை விசாரித்துத் தீர்ப்புக்கூற, இவர்களுக்கு உரிமையில்லை. இவ்வகையான சலுகைகளுடன் கூடிய உரிமைகள் எகிப்து உட்பட பல தேசங்களிலும் குடியிருந்த யூதர் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 7:14 am

4. ரோமப் பேரரசு - தொடர்ச்சி...

ஆ) மகா ஏரோது
அன்றிபேற்றாருக்குப் பின்பு அவன் தனது மகன் மகா ஏரோதுவை பாலஸ்தீனத்தின் கலிலேயாப் பகுதியை ஆளும்படி வைத்தான். மகா ஏரோது கி.மு.37 - 3 வரை பாலஸ்தீனத்தை ஆண்டான். யூதருடைய நன்மதிப்பை பெறும்படி, பல யுக்திகளைக் கையாண்டான். யூத குலத்துடன் சம்பந்தங் கலந்தான். எருசலேம் தேவாலயத்தைப் புதுப்பித்துக் கட்டினான்.

ரோமப் பேரரசர்களுக்காக பாலஸ்தீனத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், மற்றும் யோர்தானை அடுத்த பகுதிகளை வென்று ரோம சாம்ராஜ்யத்துக்குட்படுத்தினான்.. மேலும், கிரேக்க - ரோம கலாச்சாரமும், பண்பாடும், தான் ஆண்டு வந்த பகுதிகளில் பரவி வளர ரோமப் பேரரசர்களுக்கு பேருதவியாயிருந்தான். எனவே, யூதேயா உட்பட பாலஸ்தீனத்தின் பெரும் பகுதிகளுக்கு அவனை மன்னனாக ரோமர்கள் முடிசூட்டினர்.

நமதாண்டவர் இயேசு பிறந்தபோது பாலஸ்தீனத்தை ஆண்டவன் இந்த மகா ஏரோதுவே. இயேசுவைக் கொலை செய்ய வகைதேடி குழந்தைகளைக் கொன்று குவித்தவனும் இவனே.

ஏரோதின் மரணத்திற்குப் பின் பாலஸ்தீனம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

1. யூதேயா - சமாரியா

2. பெரேயா

3. கலிலேயா

4. செசரியா - பிலிப்பி

இந்த 4 பகுதிகளும் ஏரோதியரின் வம்சத்தால் ஆளப்பட்டது. இந்த ஏரோதியர்களில் முக்கியமானவர்கள் ஆர்க்கலேயஸ், பிலிப்பு, அந்திப்பா, அகிரிப்பா போன்றோர் ஆவர்.

‌ ஏரோதியர் ஆண்ட பகுதிகள் காற்பங்குகள் என அழைக்கப்பட்டது. அதை ஆண்ட ஏரோதியர்கள் “காற்பங்கு தேசாதிபதிகள்” என்று அழைக்கப்பட்டார்கள்.

மல்கியா முதல் கிறிஸ்து வரையுள்ள சுமார் 400 ஆண்டு கால அரசியல் பின்னணியம், அதில் யூதரின் நிலையும் இதுவ‌ே.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 8:15 am

சமூக பொருளாதார உலகம்
சிறையிருப்பின் காலத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் காலம் வரைக்கும் யூதர்கள் எவ்வித அரசியல் மாற்றத்தின் ஊடாக சென்றார்கள் என்பதையும், அது புதிய ஏற்பாட்டு உலகத்தை எவ்விதம் வடிவமைத்தது என்பதையும் இதுவரை கண்டோம்.

இனி, கிரேக்க மற்றும் ரோம ஆளுகையின் கீழ் புதிய ஏற்பாடடு உலகத்தின் சமூக பொருளாதார நிலைகள் எவ்விதம் இருந்தன என்பதை சுருக்கமாக காண்போம். புதிய ஏற்பாட்டு புத்தகங்களை விளங்கிக் கொள்ள இவை பெரிதும் உதவும்.

புதிய ஏற்பாட்டு உலகத்தை கிரேக்க - ரோம உலகம் என்று அழைக்கலாம். கிரேக்க சாம்ராஜ்யத்திற்கு பிறகு ரோம சாம் ராஜ்யம் தலை தூக்கினாலும், மகா அலெக்சாண்டர் காலத்தில் வித்திடப்பட்டு, பரவி வளர்ந்த கிரேக்கக் கலாச்சாரம் வீழ்ச்சியடையவில்லை. ரோமர்களும் பெருமளவில் அக்கலாச்சாரத்தையே பின்பற்றி வந்தனர். எனவே, அக்காலத்தில் ரோமப் பேரரசு முழு உலகத்தின் மேலும் ஆட்சி செய்தாலும், கிரேக்க கலாச்சாரம் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது எனலாம்.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 09, 2012 2:56 pm

1. ரோமப் பேரரசின் சமூகப் பிரிவுகள்
அ) உயர்குடி மக்கள்:

அவர்கள் அரசியல் செல்வாக்கு, உயர்பதவிகள், செல்வம் உடையவர்கள். புதிய பட்டணங்கள் கட்டப்படும்போது இவ்வித மக்கள் குடியேற்றப்பட்டார்கள். பாலஸ்தீனத்தில் சதுசேயர்கள் இவ்வித உயர் குடிமக்களாக கருதப்பட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் ரோம அரசை ஆதரித்தார்கள். செல்வந்தர்களாகிய இவர்கள் ஏராளமான நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். தங்கள் நிலங்களை குத்தகைக்கு விட்டுவிட்டு வெளியூர்களில் சென்று இன்பமாய் வாழ்ந்தார்கள்.

ஆ) நடுத்தர மக்கள்:

நெசவு, மண்பாண்டம் செய்தல், தச்சுத் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்கள். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர். ஆசாரியரும், லேவியரும் இவ்வகுப்பைச் சார்ந்தவர்கள‌ே.

இ) கூலியாட்கள்:

தமக்கென்று சொத்து ஏதும் இல்லாத இவர்கள் சமுதாயத்தில் தன்னுரிமை பெற்றவர்கள். பொதுவாக உயர் குடிமக்கள் தங்கள் அடிமைகளைக் கொண்டே தங்கள் சொந்த வேலைகளைச் செய்தனர். இதனால், இக்கூலியாட்கள் வேலையின்றி சோம்பேறித்தனமாக இருந்தனர். (மத்த‌ேயு: 20 அதிகாரம்)

ஈ) அடிமைகள்:

புதிய ஏற்பாட்டு நாட்களில் ரோம் நகரில் இருந்த பாதிபோ் அடிமைகளாக இருந்தார்கள். கட்டிட வேலை, கப்பலில் துடுப்பு வலித்தல், பயிர் செய்தல், சுரங்கத்தொழில் போன்றவற்றில் இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.

தொடரும்...

Sponsored content

PostSponsored content

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக