புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு
Page 2 of 12 •
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
First topic message reminder :
ராஜ் சிவா !
ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"
இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்
நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.
அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!
உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்
இதோ முதல் பகுதி .......
நன்றி :உயிரோசை

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -பகுதி-2
செழித்து வளர்ந்த ஒரு வயல்வெளியைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் நடுவே நீங்கள் நிற்கும்போது, எங்கும் பசுமையாகப் பரவியிருக்கும் பயிர்களையே காண்பீர்கள். இடுப்பளவு பயிர் வளர்ந்திருக்கையில் சில மீட்டர் தூரத்திற்கு அப்பால், தரையில் இருக்கும் எதுவுமே உங்கள் கண்ணுக்குப் படமுடியாதவாறு எங்கும் வளர்ந்திருக்கும் பயிர். அந்த வயலில், ஒரு உதைபந்தாட்ட மைதானம் அளவுக்கு மிகப்பெரிய வட்ட வடிவச் சித்திரம் வரையப்பட்டிருப்பதாக நினைத்துப் பாருங்கள். உங்கள் கண்ணுக்கு அந்தச் சித்திரத்தின் முழுமை தெரிய வாய்ப்பே இல்லை என்பது புரியும். அப்படி அந்தச் சித்திரத்தின் முழுமையைப் பார்க்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும். நூறு மீட்டர் மேலே பறந்து சென்று பார்த்தால் தெரியக் கூடிய நிலையில், கண்களின் மதிப்பீடுகளை மட்டும் வைத்து, பிரமாண்டமான சித்திரங்கள் வயல்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் சாத்தியக்கூறுகளை யோசித்துப் பாருங்கள். பார்க்கவே முடியாத ஒன்றைத் தெளிவாக வரைவது என்பது சாத்தியம்தானா? ஆனால், உலகம் முழுவதும் 'க்ராப் சர்க்கிள்' (Crop Circle) என்ற பெயருடன், பயிர்களால் இப்படிப்பட்ட சித்திரங்கள் உருவாக்கப்பட்டுத்தான் இருக்கின்றன. வார்த்தைகளால் இதை நான் சொல்லும் போது, உங்களுக்குப் புரிவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கிறதல்லவா? ஒரு பயிர் வட்டத்தை நிலத்திலிருந்து இரண்டு மீட்டர் உயரத்திலும், பத்து மீட்டர் உயரத்திலும் இருந்து பார்த்தால் நமக்கு அந்தச் சித்திரங்கள் எப்படித் தெரிகிறது என்று பாருங்கள். இதையே நிலத்தின் மட்டத்தில் இருந்து பார்த்தால் எந்த அளவுக்குத் தெரியும் என்பதையும் யோசியுங்கள். அப்படிப்பட்ட பெரிய சித்திரங்களை எப்படி நிலத்தில் இருந்தபடி உருவாக்கியிருக்க முடியும்?
உருவாக்கப்பட்ட சித்திரங்கள் மிகச் சாதாரணமான சித்திரங்கள் என்றால் கூடக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அவை அனைத்தும் கணித மேதைகளால் வரையப்படும் மிகச் சிக்கலான கேத்திர கணித வரைவுகளுக்கு ஒப்பான சித்திரங்கள். ஒரு காகிதத்தில் அப்படி ஒரு சித்திரத்தை நாம் வரைய வேண்டுமென்றால், பல கணிப்பீடுகள் செய்து மட்டுமே வரைய முடியும். ஆனால் இவையெல்லாம் வயல் வெளிகளில், எந்த வித கணிப்புகளும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வாய் வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க முடியாத கணித வரைவுகள் அவை. இதைச் சுலபமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்தச் சித்திரங்களைப் பாருங்கள்.
ஒரு வட்டத்தின் நடுவே சிலந்திக் கூடு போன்ற அமைப்பில் பயிர்களால் வரையப்பட்ட ஒரு சித்திரம் இது. இந்தப் பயிர் வட்டத்தை வரைந்த விதமும், அதற்கான கணித விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஐந்து கோணங்களையுடைய நட்சத்திரங்கள் வரைந்து, அவற்றிற்கிடையே வட்டங்கள் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய சித்திரம் இது. ஆனால் அப்படி நட்சத்திரங்களோ, வட்டங்களோ வரையப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பயிர் வட்டம் உருவாக்கப்பட்ட காலம் 1994ம் ஆண்டு.
சாதாரணமாகக் காகிதத்தில் வரைவதற்கே பல மணி நேரங்கள் எடுக்கக் கூடிய இந்தச் சித்திரம், வயல் வெளிகளில் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றால் எப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றது தெரியுமா? பயிர்களை நிலத்தோடு மடித்தும், அழுத்தியும் எந்த ஒரு பயிரும் சேதப்படுத்தப்படாமல் உருவாக்கப்பட்டிருகின்றது. கணித அடிப்படையில் மிகவும் சிக்கல் வாய்ந்ததாக, இது போலப் பல சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உதாரணமாக இன்னுமொரு சித்திரத்தை விளக்கிவிட்டு, நான் மேலே சென்றால்தான், இந்த பயிர் வட்டங்களின் உண்மையான பரிமாணத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள வைல்ட்ஷையரில், வூட்பெர்க் ஹில் என்னுமிடத்தில் (Woodberg Hill-Wildshire) 2000 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயிர்வட்டம் ஒன்றின் பெயர் சூரியகாந்தி (Sunflower). இந்தச் சூரியகாந்திப் பயிர் வட்டத்தில் 308 முக்கோணங்கள் உள்ளன. இவை 44 வளைவுக் கோடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகவும் சிக்கலான அமைப்பையுடைய இந்தச் சித்திரத்தைக் கணித முறையில் எப்படி வரைவது என்பதைப் பாருங்கள். அதுவே பயிர்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தையும் பாருங்கள். நம்பவே முடியாத ஆச்சரியமாக, நிஜத்தில் எம் கண்முன்னே பரந்து விரிந்து காணப்படுகிறது. இப்படிப்பட்ட சித்திரங்களைப் பயிர்களினால் எப்படி வரைய முடியும்? எத்தனை நபர்கள் இதை உருவாக்கத் தேவைப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை நாட்கள் இவற்றிற்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும்? அனைத்துக் கேள்விகளையும் தன்னுள்ளே அடக்கி அமைதியாய் வயல்வெளியில் படுத்திருக்கிறது இது.
ஒரு அளவுக்குப் பயிர் வட்டங்களின் பிரமாண்டங்களையும், பரிமாணங்களையும் நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே, பயிர் வட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டிய இடத்திற்கு இப்போது வந்திருக்கிறேன். பயிர் வட்டங்களின் வரலாறு முதன் முதலாக 1678 ம் ஆண்டு தென்கிழக்கு இங்கிலாந்தில் அமைந்த ஹார்ட்ஃபோட்ஷையர் (Hartfordshire) என்னுமிடத்தில் பிசாசு ஒன்றினால், ஒரு விவசாயிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது என்ற புராதனக் கதையுடன் ஆரம்பமாகிறது.
இந்தப் பிசாசுக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருந்தது அல்லது இல்லை என்ற நிலையில், 1920ம் ஆண்டளவில் மீண்டும் பயிர் வட்டங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனால் 1980 களிலும் 90 களிலும்தான் சிக்கலான வடிவங்களுடன் இவை அதிகமாக காணப்படத் தொடங்கின. இந்தக் கால கட்டங்களிலிருந்து தொடர்ச்சியாய் ஒவ்வொருவருடமும் 300 பயிர் வட்டங்கள் உலகம் முழுவதும் தோன்ற ஆரம்பித்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மன், போலந்து, பெல்ஜியம், இத்தாலி, சுவீடன், நார்வே, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் இந்தப் பயிர் வட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால், குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில் மட்டுமே ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு அதிகமான பயிர் வட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை உலகம் முழுவதுமாக பத்தாயிரத்துக்கும் அதிகமானவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை உருவாவதில் ஒரு ஆச்சரியமான விசயம் ஒன்று உண்டு. எவ்வளவு சிக்கலான பயிர் வட்டங்களாக இருந்தாலும் கூட, நான்கு மணி நேரங்களுக்குள் உருவாக்கப்பட்டுவிடுகின்றன. சில நிமிடங்களில் உருவாக்கப்பட்ட வட்டங்களும் உண்டு. 80 வீதத்திற்கு அதிகமானவை இரவிலேயே உருவாக்கப்படுகின்றன என்றாலும், பகலிலும் பல உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி எழுவதை நாம் தடுக்க முடியாது. "உண்மையில் இந்தப் பயிர் வட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன?" என்பதே அந்தக் கேள்வி. அதாவது, இவை மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனவா? இல்லை, மனிதன் தாண்டிய வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமே இந்தக் கேள்வியில் உள்ளடங்கியிருக்கிறது. மனிதனால்தான் மட்டும் இவை உருவாக்கப்படுகின்றன என்று இருக்கும் பட்சத்தில் நான் இந்தத் தொடரை எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்கப் போவதில்லை. மனிதன் தாண்டி வேறு ஒரு சக்தி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்னும் சந்தேகம்தான், இவை இவ்வளவு பரவலாக, உலகப் பிரசித்தி பெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது. இந்தப் பயிர் வட்டங்களை ஆரய்வதற்கென்றே உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பயிர் வட்ட ஆராய்ச்சியாளர்கள் (Crop Circle Researchers) என்று அழைக்கிறார்கள். அவர்களிடம் "இந்த வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனவா?" என்று கேளிவியைக் கேட்டால், "ஆம்" என்றே பதிலளிக்கின்றார்கள். நமது அடுத்த கேள்வியாக, "இவை மனிதர்களால் மட்டும் உருவாக்கப்படுகின்றனவா?" என்று கேட்டால், "இல்லை" என்று பதிலளிக்கிறார்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா? நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், "இந்த வட்டங்களில் பலவற்றை மனிதர்கள் செய்திருப்பது என்னவோ உண்மை. ஆனால் இவற்றில் பல, மனிதர்களால் செய்யப்படாதவை" என்பதே.
மனிதர்களால் உருவாக்கப்படாத பட்சத்தில், இவற்றை யார் செய்திருக்க முடியும்? என்ற கேள்விக்கு யாரும் இதுவரை தெளிவான பதிலைச் சொல்லி விடவில்லை. ஆனால், யார் செய்திருக்கக் கூடும் என்பதை நம்மால் இலகுவாகக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில், ஆதாரங்களை அள்ளித் தருகிறார்கள் அவர்கள். நேரடியாகப் பதிலைத் தருவதால் உருவாக்கியவர்களைக் காட்டியே தீர வேண்டிய நிலை அறிவியலில் இருப்பதால். யாரும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். இந்த நிலையில்தான் துணிச்சலாக, இதை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படம் ஒன்றை எடுத்து ஒருவர் வெளியிட்டார். அவர் படம் வெளியிட்டது என்பது பெரிய விசயமாக இருந்தாலும், அவரை இங்கு நான் குறிப்பிட விரும்புவதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. அந்தக் காரணம் என்ன தெரியுமா? அந்தப் படத்தை எடுத்தவர் ஒரு தென்னிந்தியர். படத்தை எடுத்தது மட்டுமில்லாமல், அதை இயக்கி நடித்தும் இருக்கிறார். அவர் பெயர் 'நைட் சியாமளன்' (M. Knight Shyamalan). ஆனால் மனோஜ் சியாமளன் என்றே பலரால் அழைக்கப்படுகிறார். அருமை நண்பர் மனோஜை ஞாபகப்படுத்துவதால் நானும் அவரை மனோஜ் சியாமளன் என்றே அழைக்க விரும்புகிறேன். மனோஜ் சியாமளனின் அப்பா ஒரு மலையாளி, அம்மா பாண்டிச்சேரியைச் சேர்ந்த பெண்.
'சிக்ஸ்த் சென்ஸ்' (Sixth Sence), ‘அன்பிரேகபிள்' ( Unbreakable) என்று உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்த இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் மனோஜ் சியாமளன். இந்த இரண்டு படங்களுமே அமானுஷ்ய சக்திகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டன. சொல்லப் போனால் அவரின் அனைத்துப் படங்களும் அமானுஷ்ய சக்திகளையும், மிஸ்டரிகளையும் மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்த வெற்றிப் படங்களுக்குப் பின்னர் 2002 ம் ஆண்டு மனோஜ் சியாமளன் எடுத்த படம்தான் 'சைன்ஸ்' (Signs). இந்தப் படம் அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில், சோளப் பயிர்கள் வளர்ந்த பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில், இந்தப் பயிர் வட்டங்களை யார் உருவாக்குகிறார்கள் என்ற கேள்விக்கான விடையையும் சியாமளன் அளித்துள்ளார். அவர்கள் யார் தெரியுமா? ஏலியன்கள். விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்த வேற்றுக் கிரகவாசிகளே இந்தப் பயிர் வட்டங்களை உருவாக்குகிறார்கள் என்று கதை அமைத்திருந்தார் மனோஜ் சியாமளன்.
உண்மையில் பயிர் வட்டங்கள் உருவாவதில் என்னதான் நடக்கிறது? அதுவும் குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில் மட்டும் ஏன் 80 விதமான பயிர் வட்டங்கள் உருவாகின்றன? இவை மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றனவா? இல்லை ஏலியன்கள் அல்லது மனிதனல்லாத வேறு ஏதும் ஒரு சக்திதான் இதை உருவாக்குகின்றதா? இவையெல்லாம் நம்முன் எழும் கேள்விகளாக இப்போது இருக்கின்றன. இந்த உண்மைகளை ஒரு அரசு நினைத்தால், அடுத்த நிமிடம் கண்டு பிடித்து மக்களுக்கு அதன் உண்மையைத் தெளிவாகச் சொல்லிவிட முடியும். ஆனால் இந்த உண்மைகள் மக்களுக்குச் சொல்லப்படாமல் ஒரு பதட்டத்திலேயே மக்கள் ஏன் வைக்கப்பட்டிருக்கின்றனர்? சொல்லப் போனால், இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? இவை பற்றி விளக்கமாக இனி வரும் பகுதிகளில் நாம் தெளிவாகப் பார்க்கலாம்.
பிற்குறிப்பு: "கடவுளையே நம்ப வேண்டுமானால் ஆதாரங்கள் காட்டு. இல்லையென்றால் விலகிப் போ! நமக்கு வேலை நிறைய இருக்கிறது" என்று சொல்லக் கூடிய, விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த வேளையில், ஏலியன் பூமிக்கு வந்திருக்கிறது என்று சொல்வதை எப்படி ஏற்பது? இது எல்லாம் கொஞ்சம் ஓவர்" என்றே நீங்கள் நினைக்கலாம். நானும் இங்கு ஏலியன்கள்தான் இவற்றை உருவாக்கின என்று சொல்லி உங்களை மர்மமான ஒரு நிலையில் வைத்திருக்க விரும்பவில்லை. இந்த Crop Circle பற்றி நீங்கள் இணையத்தில் பார்த்தால், இவை மனிதனாலேயே செய்யப்பட்டது என்று ஒரு பகுதியும், இல்லை இது மனிதனால் செய்யப்படவில்லை என்று மற்றொரு பகுதியும் பிரிந்து விளக்கங்களைத் தமக்கு ஏற்றவாறு அளித்துக் கொண்டிருப்பார்கள். இதில் நீங்கள் எதை வாசிக்கிறீர்களோ, அதுவே உண்மை என்ற நிலைப்பாட்டையும் நீங்கள் எடுக்கும் சூழ்நிலை வரலாம். ஆனால் நிஜம் என்பது வேறாக இருக்கலாம். ஆகவே நிதானமாக இந்தப் பயிர் வட்டங்கள் பற்றிய அனைத்து உண்மைகளையும் எடுத்துச் சொல்ல முயற்சிக்கிறேன். இறுதியில் நாம் அனைவரும் சேர்ந்தே ஒரு முடிவுக்கும் வந்துவிடலாம்.
தொடரும் .....

நல்ல தொடர் .. கலக்குங்க பாலா அவர்களே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 3
நம் ஊர்களிலுள்ள சில பிரபலமான கோவில்களில் மட்டும் மக்கள் கூட்டம் குவிந்தபடி இருக்க, பல கோவில்கள் ஆள் அரவமற்று அமைதியுடன் இருக்கின்றன. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில், எங்கோ ஒரு கோவிலில் திடீரென, 'சாமி சிலை கண்களைத் திறந்தது' என்றோ, 'கண்ணீர் வடித்தது' என்றோ தகவல் வரும். அப்புறம் யாரும் கிட்ட நெருங்க முடியாதபடி அந்தக் கோவிலில் கூட்டம் அலையடிக்கும். படிப்படியாக அந்தக் கோவிலுள்ள கிராமத்தை நோக்கிப் பத்து, நூறு, பத்தாயிரம், இலட்சம் என மக்களும், வியாபாரிகளும், மீடியாக்களும் குவிய ஆரம்பிக்கும். இதைச் சரியாக நாம் உற்று நோக்கினால், அங்கு நடந்தது ஒரு அதிசயம் என்பதை விட, அந்த அதிசயத்தால் ஏற்படுத்தப்பட்ட கவனயீர்ப்பே முக்கிய பங்களிப்பது தெரிய வரும். அங்கே நடந்ததில் உள்ள உண்மைத்தன்மையை விட, அதில் உள்ள அசாதாரண நிகழ்வே நம்மைக் கவர்ந்திழுப்பது புரியும். அன்றாட வாழ்க்கையில் அலுத்துப் போய் இருக்கும் நமக்கு, 'மாற்றமாக ஏதும் நடை பெறாதா?' என்று உள்மனம் என்றும் ஏங்கிக் கொண்டே இருக்கிறது. சாதாரணமற்ற அபூர்வமான சம்பவங்களை அது எப்போதும் விரும்புகிறது. அதிகம் ஏன்? சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வர இருந்த சுனாமியினால் ஏற்பட்டிருக்கக் கூடிய அழிவுகளைத் தாண்டி, அது வரவில்லையே என்ற குரூர ஏமாற்றம் நமக்கு இருந்ததை, நாம் மறுக்க முடியாது. இதற்கெல்லாம் காரணம், நம் மனம் எப்போதும் அசாதாரண மாற்றங்களை விரும்புவதுதான். அதிசயங்களும், மர்மங்களும் அதற்கு மிகவும் விருப்பமான ஒன்றாகிவிடுகிறது.
இப்படியானதொரு அதிசயமாகவே பயிர் வட்டங்களும் உலகத்தில் வலம் வர ஆரம்பித்தன. வழமை போல, அவற்றை ஒரு மர்மமாகப் பார்ப்பதற்கே மக்கள் விரும்பினார்கள். ஆரம்பத்தில் இந்தப் பயிர் வட்டங்கள், அவை தோன்றிய ஊர்களில் மட்டும் அதிசயமாகப் பார்க்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக உலக அளவில் அவை பிரபலமாகியபோது, மேலே நான் சொல்லிய நம் ஊர்க் கோவில்கள் போல, உல்லாசப் பிரயாணிகளும், பார்வையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், மீடியாக்களும் அவற்றை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தின் பின்னர் ஒவ்வொரு வருடங்களும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவழைக்கும் காட்சிப் பொருளாக அவை ஆகிப் போயின. ஆனாலும் அனைவரிடமும் இறுதியாக எஞ்சி நின்றவை இரண்டே இரண்டு கேள்விகள்தான். "பயிர் வட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன?", "எதற்காக உருவாக்கப்படுகின்றன?" என்பவையே அந்த இரண்டு கேள்விகள். இதற்குப் பதில் சொல்லும் வகையில் ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார் நம்மூர்க்காரரான மனோஜ் சியாமளன்.
மனோஜ் சியாமளன், ஏலியன்கள்தான் இந்தப் பயிர் வட்டங்களை உருவாக்கினர் என்று படம் எடுத்ததற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல், எழுந்தமானத்துக்கு ஏலியனை அவர் இந்த விசயத்துக்குள் புகுத்திவிடவில்லை. ஏலியன்கள் என்று சொல்லப்படும் வேற்றுக் கிரகவாசிகள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கே துல்லியமான விடைகள் கிடைக்காத சூழ்நிலையில், பயிர் வட்டங்களுடன் துணிச்சலாக ஏலியன்களை அவர் இணைத்தார் என்றால், அதற்கு மிகப் பெரியதொரு காரணம் இருக்கத்தான் செய்தது.
1970 களில் இலகுவான ஒரே ஒரு வட்ட அமைப்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பயிர் வட்டங்கள், படிப்படியாக பல வட்டங்களாக மாறி, பின்னர் சித்திரங்கள் போன்ற அழகான அமைப்புகளாக மாறி, பின்னர் சிக்கலான சித்திரங்களாக மாறி, பின்னர் உயர் கணித வரைவுகளாக மாறின.
இலகுவான வட்ட அமைப்புப் பயிர் வட்டம்
பலவட்ட அமைப்புப் பயிர் வட்டம்
சித்திர வகைப் பயிர் வட்டம்
உயர் கணித வரைவுப் பயிர் வட்டம்
பயிர் வட்டங்கள் வடிவ அமைப்புகளில் மாற்றங்களுடனும், அவற்றின் எண்ணிக்கையில் அதிகரிப்பையும் அடைந்து கொண்டிருக்கும்போது, உலகம் முழுவதும் இருந்து ஆராய்ச்சியாளர்களை அவை கவரத் தொடங்கின. அவற்றை நோக்கி அவர்கள் ஓடிவரத் தொடங்கினர். ஒவ்வொன்றாக அந்தப் பயிர் வட்டங்கள் அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அவர்கள் ஆராயத் தொடங்கினர். அப்போது அவர்களுக்குக் கிடைத்த சில தகவல்கள், "என்ன முடிவுக்கு வருவது?" என்ற குழப்பத்தையே ஏற்படுத்தின. எண்பதுக்கும் அதிகமான, வெவ்வேறு இடங்களில் வசிக்கும், மிகவும் கண்ணியமான நபர்கள் மூலமாகக் கிடைத்த ஒரு தகவல் அவர்களைத் தடுமாற வைத்தது. சொல்லி வைத்தது போல அந்த எண்பது சாட்சிகளும் கூறியது என்ன தெரியுமா? தங்கள் கண்களின் முன்னாலேயே, ஒரு உதைபந்து அளவுள்ள வெளிச்சப் பந்துகள் (Balls of Light) பயிர் வட்டங்களின் மேலே பறந்து திரிவதைக் கண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் முன்னாலேயே அவை பயிர் வட்டங்களை உருவாக்கியதைக் கண்ணால் கண்டதாக அடித்துச் சத்தியம் செய்கிறார்கள். அவற்றை வீடியோக் காமெரா மூலமாகப் படம் பிடித்தும் வைத்த்திருக்கின்றனர்.
இதை வாசித்ததும், நீங்கள் வாய்விட்டுச் சிரிப்பது எனக்குப் புரிகிறது. "இது போன்ற எத்தனையோ 'கிராஃபிக்ஸ்' வேலைகளை நாம் கண்டு விட்டோம்" என்று நீங்கள் நினைப்பதும் புரிகிறது. சமீபத்தில் வெளியான ஒரு துறவியின் வீடியோவில், அப்பட்டமாக யாரென்று கண்டு பிடிக்கக் கூடிய வகையில் தெளிவாகப் படங்கள் இருந்தபோதும், 'அவை கிராஃபிக்ஸ் வேலை' என்று அந்தத் துறவி அடித்துச் சொல்லும் அளவிற்கு, கிராஃபிக்ஸ் பற்றிய அறிவு நமக்கு வளர்ந்திருக்கிறது. மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனே கணினியில் உருவாக்கக் கூடிய ஒளிப் புள்ளிகளைக் காட்டி, ஏலியன் என்று நான் சொல்லும் போது, நீங்கள் சிரிப்பதில் ஒன்றும் தப்பே கிடையாது. பயிர் வட்ட ஆராய்ச்சியாளர்களும் அப்படித்தான் முதலில் நினைத்தார்கள். ஆனால் அந்த விசயத்தில் அவர்களுக்கு நெருடியது ஒன்றுதான். "அது எப்படி, வெவ்வேறு இடங்களில், ஒருவரை ஒருவர் சந்தித்தே இருக்காத வேறு வேறு மனிதர்கள், வேறு வேறு வயதையுடையவர்கள் ஒரே மாதிரியான பொய்யை இட்டுக்கட்டிக் கூற முடியும்? அதுவும் வீடியோக்களாகக் கூட எடுத்திருக்கின்றனர். அனைவரும் கிராஃபிக்ஸ் செய்தார்களா". அனைத்து வீடியோக்களையும் ஆராய்ந்த போது, அவற்றில் குறிப்பிட்ட சில வீடியோக்கள் தவிர்ந்து, வேறு எவையுமே எந்த கிராஃபிக்ஸும் செய்யப்படாதவையாகவே இருந்தன.
இந்த வெளிச்சப் பந்துகள் விசயத்தில் ஊரே கூடி நின்று பொய் சொல்கின்றதோ எனச் சந்தேகப்பட்ட மீடியாவினர் சிலர், அவை தோன்றுவது உண்மைதானா என்று ஆராயத் தங்கள் வீடியோக் கேமராக்களை ஆயத்தம் செய்து இரவினில் காத்திருந்தார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வெளிச்சப் பந்துகள் தோன்றி அலையத் தொடங்கின. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த வெளிச்சப் பந்துகள் இரவு, பகல் இரண்டு நேரங்களிலும் தோன்றுவதுதான். அதன் உச்ச கட்டமாக, அந்த வெளிச்சப் பந்துகள் தோன்றியதை அறிந்த இராணுவ ஹெலிகாப்டர்கள் அவற்றை நோக்கிப் பறந்து சென்று அணுகியபோது, அவை மறைந்து போனதும் நடந்தது. இந்த ஹெலிகாப்டர் சம்பவம் ஒரு முறையல்ல, பல முறைகள் நடந்தன. இவற்றையும் கூட வீடியோவாக மீடியாவினர் படமெடுத்திருக்கின்றனர்.
"சேச்சே! எல்லாமே பொய். இந்த பயிர் வட்டங்களே மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றன. வெளிச்சப் பந்துகள் உருவாவது உண்மைதான். ஆனால் அவை காற்றில் பறக்கும் பூக்கள் அல்லது வேறு பொருட்கள்" என்று அதை மறுப்பவர்களின் குரல்களும் இடையே ஒலிக்கத்தான் செய்கின்றன. மறுப்பவர்களும் தங்கள் சார்பாக, பலமான சாட்சியங்களை முன் வைத்து அவற்றைப் பொய் என்று மறுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நடந்து கொண்டிருப்பவற்றையெல்லாம் என்ன வகையில் எடுத்துக் கொள்வது என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்த போதுதான், உலகமே பயிர் வட்டங்கள் சார்பாக அதிர்ச்சியடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்தேறியது. அதுவரை பயிர் வட்டங்களை ஒரு பேச்சுக்குக் கூடக் கவனத்தில் எடுக்காத மீடியாக்கள் உட்பட, உலகில் உள்ள அனைத்து மீடியாக்களும் அலறியடித்து அந்த இடம் நோக்கி ஓடி வந்தன. அந்த இடம் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடமாக இருந்தது.
தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் ஷில்போல்டன் (Chilbolton) என்னும் இடத்தில், இங்கிலாந்து அரசுக்குச் சொந்தமான 'ரேடியோ டெலஸ்கோப்' (Radio Telescope) அமைக்கப்பட்டிருக்கிறது. ரேடியோ டெலஸ்கோப் அமைந்த இடத்துக்கு மிக அருகில் 13.08.2000 அன்று ஒரு பயிர் வட்டச் சித்திரம் உருவாக்கப்பட்டது. சரியாக ஒரு வருடத்தின் பின்னர் 13.08.2001 அன்று மீண்டும் ஒரு சித்திரம் அதே இடத்தில் தோன்றியது. அவையிரண்டும் வழமை போல இல்லாமல் வித்தியாசமான ஒரு பயிர் வட்டமாக இருந்தது ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும், அவை என்ன அர்த்தங்களைச் குறிக்கின்றன என்று யாருக்கும் புரியவில்லை. ஆனால் சரியாக ஐந்து நாட்களின் பின்னர் (18.08.2001) அந்தச் சித்திரத்தின் அருகே இன்னுமொரு சித்திரம் உருவாக்கப்பட்டது. அந்தப் பிரமாண்டமான பயிர் வட்டச் சித்திரத்தைப் பார்த்துத்தான் உலகமே பதட்டப்பட்டது. அது பயிர் வட்டம் என்று சொல்லப்படும் வட்ட வகையைச் சாராமல், வேறு ஒரு வடிவத்தில் இருந்தது. அந்த வடிவம் என்ன தெரியுமா? ஒரு மனிதனின் முகம். காகிதத்தில் கணினி மூலமாக வரையப்படும் ஒரு மனிதனின் முகம் எப்படி இருக்குமோ, அப்படிப் பயிர்களால் அந்த முகம் உருவாக்கப்பட்டிருந்தது.
பயிர் வட்டங்கள் எல்லாம் ஏதோ வெறுமனே வரையப்படுகின்றன என நம்பியிருந்தவர்களுக்கு, "இல்லை, அவை ஏதோ செய்திகளை நமக்குச் சொல்கின்றன" என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது. இப்படியெல்லாம் கூட பயிர்களால் வரைய முடியுமா? என்ற ஆச்சரியம் பிடித்து நம்மை உலுக்கியது. அதன் சாத்தியம் இனம் புரியாத ஒரு பயத்தை உலகிற்கு உருவாக்கத் தொடங்கியது.
பயிர் வட்டங்களை மறுப்பவர்கள் சொல்வது போல அவையும் மனிதர்களின் விளையாட்டுகளில் ஒன்றுதானா அல்லது உண்மையில் அவை ஏலியன்களால் உருவாக்கப்பட்டவையா? அவை நமக்கு எதையாவது சொல்கின்றனவா? இவற்றை விபரமாக அடுத்த தொடரில் நாம் பார்க்கலாம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி பாலா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான ஆச்சரியமான தொடர் தொடருங்கள் அண்ணா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பயனுள்ள பகிர்வுக்கு நன்றி பாலா சார்.
- Sponsored content
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 12