ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:45 pm

» முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து
by சக்தி18 Yesterday at 9:47 pm

» அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் இணையப் பக்கம் தொடங்கினார்.
by சக்தி18 Yesterday at 9:32 pm

» கொரோனா நிவாரண பணியில் கேப்டன் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதி!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்:
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» ஒரு நாள் நிரலி (app)
by சக்தி18 Yesterday at 3:41 pm

» குறிலே குறிலே குயிலே நெடிலே நெடிலே குழலே எலே
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:12 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(519)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by T.N.Balasubramanian Yesterday at 10:15 am

» கொரோனா பாதிப்பு எப்போது குறையத்தொடங்கும் ? நிபுணர்கள் கருத்து
by T.N.Balasubramanian Yesterday at 10:09 am

» இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 9:53 am

» பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் இன்று மரணம்
by T.N.Balasubramanian Yesterday at 9:50 am

» புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பணம் எண்ணும்பொழுது எழுகின்ற சலசலப்பு…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am

» சிரிக்க வைத்த சிவகாமி (பக்க வாத்தியம்)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:56 am

» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am

» அச்சம் மடம் நாணம் பயிர்க்கடன் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:47 am

» கொரோனா அச்சுறுத்தலால் 37 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே
by T.N.Balasubramanian Thu May 06, 2021 9:17 pm

» கொரோனா மூன்றாம் அலை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
by T.N.Balasubramanian Thu May 06, 2021 9:08 pm

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by ரா.ரமேஷ்குமார் Thu May 06, 2021 7:05 pm

» வாட்சப் தந்த செய்தி
by T.N.Balasubramanian Thu May 06, 2021 6:12 pm

» இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை: சீரம் நிறுவன சிஇஓ மனுதாக்கல்
by ayyasamy ram Thu May 06, 2021 6:08 pm

» இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
by ayyasamy ram Thu May 06, 2021 6:04 pm

» காத்திரு.காத்திரு (ஓஷோவின் சிந்தனைகள்)
by ayyasamy ram Thu May 06, 2021 2:01 pm

» உலகத் தொடர்பால் இறை அனுபவம்…!-(திருமூலரின் திருமந்திரம்)
by ayyasamy ram Thu May 06, 2021 1:59 pm

» ஏற்புடையவனாதல்! (நீதிமொழிகள்-மஹாபாரதம்)
by ayyasamy ram Thu May 06, 2021 1:58 pm

» அறங்களில் சிறந்தது பசிப்பிணி போக்குவது...!
by ayyasamy ram Thu May 06, 2021 1:58 pm

» நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா
by ayyasamy ram Thu May 06, 2021 1:57 pm

» வில்லியாக நடிக்கும் சமந்தா
by ayyasamy ram Thu May 06, 2021 1:56 pm

» விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu May 06, 2021 1:55 pm

» அமுத மொழிகள்
by ayyasamy ram Thu May 06, 2021 1:52 pm

» ஏ நெஞ்சே..! (ஆன்மிக சிந்தனை)
by ayyasamy ram Thu May 06, 2021 1:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu May 06, 2021 1:49 pm

» ஓ.டி.டி.தளம் துவக்கினார் நமீதா
by ayyasamy ram Thu May 06, 2021 1:49 pm

» உப்பு அதிகமானால்…
by Dr.S.Soundarapandian Thu May 06, 2021 1:48 pm

» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
by ayyasamy ram Thu May 06, 2021 1:47 pm

» கொரோனா பாதிப்பு- ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங் காலமானார்
by ayyasamy ram Thu May 06, 2021 1:46 pm

» நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா
by ayyasamy ram Thu May 06, 2021 1:45 pm

» வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
by ayyasamy ram Thu May 06, 2021 1:44 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.
by Dr.S.Soundarapandian Thu May 06, 2021 1:42 pm

» கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது; தயாராக இருக்க வேண்டும்
by ayyasamy ram Thu May 06, 2021 1:41 pm

» சந்தேகம் ......சந்தேகம்.
by T.N.Balasubramanian Thu May 06, 2021 12:08 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Girija89 Thu May 06, 2021 9:47 am

» குறுக்கெழுத்துப் போட்டி (ஆறாவது கிழமையில் ஆபரண உலோகம்!)
by சக்தி18 Thu May 06, 2021 12:40 am

» திரைக்கதிர்…
by ayyasamy ram Wed May 05, 2021 10:00 pm

» சினிமா செய்திகள் (தினமணி கதிர்)
by ayyasamy ram Wed May 05, 2021 9:59 pm

» பத்மபூஷன் டி.எஸ்.அவிநாசிலிங்கம் பிறந்த தினம்
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 8:39 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Jayasree Wed May 05, 2021 7:33 pm

» மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 7:32 pm

Admins Online

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by சிவா Wed May 16, 2012 12:33 pm



கீழே விழுவதற்கான காரணங்கள்:

* நரம்பு சார்ந்த நோய்கள், உதாரணம்: அறிவுத்திறன் வீழ்ச்சி, உதறுவாதம், பக்கவாதம்.

* காது சார்ந்த நோய்கள்

* கண் பார்வை குறைதல். உதாரணம்: கண்புரை.

* மூட்டுவலியும், தசைகள் சார்ந்த நோய்களும்.

* ரத்த அழுத்தத்தினால் மாற்றம் ஏற்படுவது. அதாவது, ஒருவர் படுத்த நிலையில் இருக்கும்போது ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். ஆனால், திடீரென்று எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது ரத்தம் அழுத்தம் வேகமாகக் குறைந்து விடுகிறது. இதனால், கீழே விழ வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

* மருந்துகள். உதாரணம்: நீர் மாத்திரை, தூக்க மாத்திரை, உயர் ரத்த அழுத்த மாத்திரை, மனநோய்க்குக் கொடுக்கப்படும் மாத்திரை.

* அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.

* வழுவழுப்பான தரை, ஈரமான தரை, மேடுபள்ளமான தரை, அதிக உயரமுள்ள படிக்கட்டுகள்.
* மங்கிய வெளிச்சம்.

* அறையில் உள்ள தேவையற்ற பொருட்கள். உதாரணம்: மேசை, நாற்காலி.

இப்படி, முதுமையில் கீழே விழுவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன.

கீழேவிழுந்தால் ஏற்படும் தொல்லைகள்:

கீழே விழுவதால் சிறிய சிராய்ப்பிலிருந்து எலும்பு முறிவு வரை பல தொல்லைகள் ஏற்படலாம். சுமார் 20 சதவிகித முதியவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. தலையில் அடிபட்டு காயமும், அதனால் மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருமுறை கீழே விழுந்ததும் மறுபடியும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தால் பலர் நடக்கவே பயந்து, படுத்த படுக்கையாகிவிடுகிறார்கள்.

கீழே விழுவதை தடுக்க:

உடலை முழுமையாகப் பரிசோதனை செய்து, கீழே விழுவதற்கு நோய்கள் ஏதேனும் காரணமா என கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

* கண் பார்வை பரிசோதனை செய்து கொள்ளவும். பார்வைக் குறைவால் அணியும் கண்ணாடி சரியில்லாமல் போனால் கூட, கீழே விழ ஒரு காரணமாக அமையும். ஆகவே, சரியான கண் கண்ணாடி அணிவது மிக அவசியம்.

* காதை முழுமையாகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காதல் அழுக்கு சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் கூட நிலை தடுமாறலாம்.

* முதியவர்கள், சாபிடும் மருந்துகளைப் பற்றியும் டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனென்றால், மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட கீழே விழ வாய்ப்பு உண்டு.

* மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.

* படுக்கையில் இருந்து எப்போதும் வேகமாக எழுந்து, உடனே நடக்கக் கூடாது. மெள்ள எழுந்து உட்கார வேண்டும். பிறகு சற்று நேரம் கழித்து மெதுவாக நிற்க வேண்டும். அதன் பின்னரே நடக்க வேண்டும்.

* நடக்கும்போத கைத்தடி அல்லது தேவையான “வாக்கிங் ஃப்ரேம்’ உடயோகிக்க வேண்டும். மற்றவர்கள் கேலியாகப் பார்ப்பார்கள் என்று கூச்சப்படத் தேவையில்லை. நம் உடலை நாம் தான் பேணிக் காக்க வேண்டும்.

* பொருத்தமான காலணிகளை அணிவது சிறந்தது.

* தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, தசைகள் மற்றும் மூட்டுகளின் திறனை அதிகப்படுத்தி கீழே விழுவதைத் தடுக்க உதவுகிறது, உடலைச் சரிசமமாக வைத்துக் கொள்ள சிறப்பு உடற்பயிற்சிகளும் தேவை.

* படுக்கை அறை, குளியல் அறை, படிக்கட்டுகளில் போதுமான வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை கைக்கு எட்டும் தூரத்திலேயே வைக்க வேண்டும். உதாரணம்:
டெலிஃபோன், பேனா, கண்ணாடி, மருந்து டப்பா, சாவி.

* முதியவர்கள் அதிகமாகப் புழங்கும் இடங்களில் இரும்புக் கைப்பிடிகளை பொருத்த வேண்டும். உதாரணம்: குளியலறை, கழிவறை, படிக்கட்டு.

* குளியலறை வழுவழுப்பு இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by முரளிராஜா Wed May 16, 2012 12:37 pm

இத படிச்சு இத மாதிரியே நடந்துக்குங்க சிவா
இனிமே கீழே விழமாட்டிங்க ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by சிவா Wed May 16, 2012 12:39 pm

@முரளிராஜா wrote:இத படிச்சு இத மாதிரியே நடந்துக்குங்க சிவா
இனிமே கீழே விழமாட்டிங்க ஜாலி

என்னைச் சொல்லிட்டு நீங்கள் ஏன் அந்தச் சுவற்றில் போய் மோதுகிறீர்கள்? தடுமாறாம பத்திரமா வீட்டுக்கு போங்க தாத்தா!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by முரளிராஜா Wed May 16, 2012 1:24 pm

@சிவா wrote:
@முரளிராஜா wrote:இத படிச்சு இத மாதிரியே நடந்துக்குங்க சிவா
இனிமே கீழே விழமாட்டிங்க ஜாலி

என்னைச் சொல்லிட்டு நீங்கள் ஏன் அந்தச் சுவற்றில் போய் மோதுகிறீர்கள்? தடுமாறாம பத்திரமா வீட்டுக்கு போங்க தாத்தா!
கண்ணும் போச்சா
சுவற்றில் மோதி தடுமாறி போறது நான் இல்லை
நம்ம கொலவெறி தான் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by ஜாஹீதாபானு Wed May 16, 2012 2:46 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31127
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7540

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by யினியவன் Wed May 16, 2012 2:57 pm

@முரளிராஜா wrote:
@சிவா wrote:
@முரளிராஜா wrote:இத படிச்சு இத மாதிரியே நடந்துக்குங்க சிவா
இனிமே கீழே விழமாட்டிங்க ஜாலி

என்னைச் சொல்லிட்டு நீங்கள் ஏன் அந்தச் சுவற்றில் போய் மோதுகிறீர்கள்? தடுமாறாம பத்திரமா வீட்டுக்கு போங்க தாத்தா!
கண்ணும் போச்சா
சுவற்றில் மோதி தடுமாறி போறது நான் இல்லை
நம்ம கொலவெறி தான் ஜாலி
பாம்புன்னு அடிக்கவும் முடியல - பழுதுன்னு விடவும் முடியல இந்த பெருசுங்கள
அதுகள முட்டிடப் போறேன்னு விலகி தடுமாறி போறேன். என்ன பண்றது?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 16, 2012 3:55 pm

நல்ல பதிவு...விரும்பினேன் சிவா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by மாணிக்கம் நடேசன் Wed May 16, 2012 4:59 pm

ஏன், சிரசுகள் எல்லாம் விழுரது இல்லையா. உங்கள் கிண்டலுக்கு நாங்க தான் கிடச்சோமா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4547
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by ஜாஹீதாபானு Wed May 16, 2012 5:05 pm

@மாணிக்கம் நடேசன் wrote:ஏன், சிரசுகள் எல்லாம் விழுரது இல்லையா. உங்கள் கிண்டலுக்கு நாங்க தான் கிடச்சோமா?

ஆமோதித்தல் சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31127
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7540

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by யினியவன் Wed May 16, 2012 5:18 pm

@மாணிக்கம் நடேசன் wrote:ஏன், சிரசுகள் எல்லாம் விழுரது இல்லையா. உங்கள் கிண்டலுக்கு நாங்க தான் கிடச்சோமா?
இளவட்ட அய்யா - நம்ம சிவா அங்கிள் மாமாவுக்கு எதுவுமே தெரியல...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by மாணிக்கம் நடேசன் Thu May 17, 2012 8:10 am

அதான், நம்ம சிவா மாமாவுக்கு ஒன்னுமே, ஒன்னுமே தெரியல, என்னத்த சொல்லி என்னத்த பண்ணுரது. பெருசு பெருசுதான் சிருசு சிருசுதான்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4547
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420

Back to top Go down

வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன? Empty Re: வயதானவர்கள் அடிக்கடி கீழே விழக் காரணம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum