புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாஜி ஹால் Poll_c10ராஜாஜி ஹால் Poll_m10ராஜாஜி ஹால் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
ராஜாஜி ஹால் Poll_c10ராஜாஜி ஹால் Poll_m10ராஜாஜி ஹால் Poll_c10 
3 Posts - 7%
heezulia
ராஜாஜி ஹால் Poll_c10ராஜாஜி ஹால் Poll_m10ராஜாஜி ஹால் Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
ராஜாஜி ஹால் Poll_c10ராஜாஜி ஹால் Poll_m10ராஜாஜி ஹால் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ராஜாஜி ஹால் Poll_c10ராஜாஜி ஹால் Poll_m10ராஜாஜி ஹால் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாஜி ஹால் Poll_c10ராஜாஜி ஹால் Poll_m10ராஜாஜி ஹால் Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
ராஜாஜி ஹால் Poll_c10ராஜாஜி ஹால் Poll_m10ராஜாஜி ஹால் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ராஜாஜி ஹால் Poll_c10ராஜாஜி ஹால் Poll_m10ராஜாஜி ஹால் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ராஜாஜி ஹால் Poll_c10ராஜாஜி ஹால் Poll_m10ராஜாஜி ஹால் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாஜி ஹால்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 13, 2012 10:39 pm

ராஜாஜி ஹால் 536826_414001505306139_100000888786399_1277893_1223798162_n

பல தமிழ்ப்படங்களில் நீதிமன்றப் படிக்கட்டுகளாகக் காட்டப்படும் பிரம்மாண்ட படிக்கட்டுகளைக் கொண்ட ராஜாஜி ஹாலின் கதையும் அதே அளவிற்கு பிரம்மாண்டமானதுதான். இந்த ஹால் ஒரு மாபெரும் வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. ஆம், திப்பு சுல்தானுக்கு எதிராக நான்காவது மைசூர் யுத்தத்தில் கிழக்கிந்திய படைகள் பெற்ற வெற்றியின் சின்னம்தான் இது.

1800இல் தொடங்கி 1802இல் கட்டி முடிக்கப்பட்டபோது, இதற்கு பான்குவிடிங் ஹால் (Banqueting Hall) எனப் பெயரிடப்பட்டது. காரணம், பொதுநிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒரு அரங்கமாகத் தான் இது கட்டப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் பொறியாளரும் வானியல் நிபுணருமான ஜான் கோல்டிங்ஹாம் என்பவர்தான் இந்த பிரம்மாண்ட ஹாலை வடிவமைத்தார். இவர் வானியல் நிபுணர் என்பதாலோ என்னவோ, வான சாஸ்திரத்தில் அதிக ஆர்வம் காட்டிய புராதன கிரேக்கர்களின் கன்னித் தெய்வமான ஏத்தெனாவின் பார்த்தினான் கோவில் சாயலில் இதனை வடிவமைத்தார். இப்போதும் ஏத்தென்ஸ் நகரில் சிதிலமடைந்து கிடக்கும் பார்த்தினான் கோவிலைப் பார்த்தால், உங்களுக்கு இதை ஏற்கனவே எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் தோன்றும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். புதிய தலைமைச் செயலக கட்டடம் அமைந்திருக்கும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் பரந்தவெளி முழுவதும் ஒரு காலத்தில் ஆண்டானியா தி மதிரோஸ் (Antonia de Madeiros) குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்தது. அன்றைய சென்னைப்பட்டினத்தின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த இந்த குடும்பத்தினால்தான் சென்னைக்கு மெட்ராஸ் என்ற பெயரே வந்தது என்று ஒரு கருத்தும் உள்ளது. இந்த குடும்பத்திடம் இருந்து, அந்த பரந்து விரிந்த மைதானத்தை 1753இல் விலைக்கு வாங்கிய கிழக்கிந்திய கம்பெனி, மெட்ராஸ் ஆளுநர்கள் தங்குவதற்காக அங்கு ஒரு பெரிய பங்களாவைக் கட்டியது. அதுதான் அரசினர் இல்லம்.



பின்னர் ராபர்ட் கிளைவின் மகன் எட்வர்ட் கிளைவ் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது, 1800களில் இந்த கட்டடம் சற்றே புனரமைக்கப்பட்டது. அப்போதுதான் அருகில் பான்குவிடிங் ஹால் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் வடிவமைப்பாளர் ஜான் கோல்டிங்ஹாம் இதற்காக உருவாக்கிய வரைபடங்கள் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஹால், 1802 அக்டோபர் 7ந் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை மாநகரின் எத்தனையோ முக்கியமான விழாக்கள் இந்த கட்டடத்தில் நடைபெற்றன. மக்கள் இதைப் பெருமளவு பயன்படுத்தியதால், 1875இல் தொடங்கி இந்த ஹால் அடிக்கடி புனரமைக்கப்பட்டும், விஸ்தரிக்கப்பட்டும் வந்தது. 1857இல் இருந்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் இந்த பிரம்மாண்ட ஹாலில்தான் நடைபெற்றது. 1879இல் செனட் இல்லம் கட்டப்படும் வரை மெட்ராஸ் பட்டதாரிகள் இங்குதான் தங்களின் பட்டங்களை பெற்றுச் சென்றனர்.

1938 ஜனவரி 27 - 1939 அக்டோபர் 26 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானியின் சட்டப்பேரவை இங்குதான் செயல்பட்டது. பின்னர் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததும், முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலச்சாரியின் நினைவாக, இந்த கட்டடம் 1948இல் ராஜாஜி ஹால் எனப் பெயர் மாற்றப்பட்டது.


120 அடி நீளமும், 65 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்ட இந்த விசாலமான கட்டடம், வெறும் கூட்டங்கள் மட்டுமின்றி சரித்திரப் புகழ்மிக்க பல நிகழ்வுகளுக்கு சாட்சியமாய் இருந்திருக்கிறது. 1961ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது பிறந்தநாள் கேக்கை இந்த ஹாலில்தான் வெட்டினார். அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதே காமராஜர் இறந்தபோது, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இதே ராஜாஜி ஹாலில்தான் அவரின் உடல் வைக்கப்பட்டது. இவரைத் தவிர பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற முன்னாள் முதலமைச்சர்களின் உடல்களுக்கு தமிழகமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதையும் இந்த ஹால் கனத்த இதயத்தோடு பார்த்திருக்கிறது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஒரு காலத்தில் அழகிய வனம் போல இருந்தது. கொளுத்தும வெயிலிலும் குளிர்ச்சியான நிழல் பரப்பும் நிறைய ஆலமரங்கள் இங்கிருந்தன. ஆனால் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இதில் பல மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அரசினர் இல்லம், காந்தி இல்லம் உட்பட இங்கிருந்த சில பழைய கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன. ஆனால் இதில் இருந்து எல்லாம் தப்பிப் பிழைத்து, 200 ஆண்டுகளைக் கடந்து நின்று கொண்டிருக்கிறது ராஜாஜி ஹால்.

நன்றி - தினத்தந்தி


* ஒரு காலகட்டத்தில், இந்த ஹாலை கோலிவுட்காரர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டதைப் போல, ஏராளமான படப்பிடிப்புகள் இங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

*சினிமாவில் ஒருவர் வக்கீல் உடையை அணிந்துவிட்டாரென்றால் அவசியம் ஒருமுறையாவது அவர் ராஜாஜி ஹால் படிகளை ஏறி இறங்கியே ஆகவேண்டும். எப்போதும் கோர்ட் சீனுக்கு ராஜாஜி ஹால் படிகள்தான். கோர்ட் சீனுக்குப் பின் வில்லனும் ஹீரோவும் ஆளுக்கு பாதிப்படி இறங்கி அல்லது ஏறித்தான் வீர சபதம் செய்வார்கள்.

* புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளால் இந்த ஹால் பலவீனமடைந்துள்ளதாகவும், உடனே இதை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

mukanuul

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 13, 2012 10:46 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:51 pm

ராஜாஜி ஹால் போல நிறைய கட்டிடங்கள் தங்கள் வரலாறை இழந்து வாழ்ந்து கேட்ட குடும்பம் போல ஆகி வருவது வருத்தமே...
பகிர்வுக்கு நன்றி பகவதி...



ராஜாஜி ஹால் 224747944

ராஜாஜி ஹால் Rராஜாஜி ஹால் Aராஜாஜி ஹால் Emptyராஜாஜி ஹால் Rராஜாஜி ஹால் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:40 am

நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 14, 2012 7:56 am

ராஜாஜி ஹால் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருக்கிறது.அந்த காலத்து சினிமாவான
ஜெமினி சந்திரலேகாவில் ரஞ்சன், MK ராதா வை நோக்கி குறுங்கத்தி வீசும் காட்சி அற்புதமாக இங்கு படமாக்கப்பட்டுள்ளது.

ரமணியன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 14, 2012 6:41 pm

தகவலுக்கு நன்றி பகவதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 7:41 pm

பொதுவுல பொது அறிவ வளர்க்க
புயலென புறப்பட்ட பகவதியின் பகிர்வுக்கு நன்றி.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக