புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10 
10 Posts - 56%
heezulia
தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10 
10 Posts - 56%
heezulia
தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையாலங்கானத்துப் பெரும் போர்


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 12, 2012 12:13 am

தலையாலங்கானத்துப் பெரும் போர் (கி.வா.ஜகந்நாதன் எழுதியது)
௧) 1 )

ரசன் போருக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு இளம்பிராயத்தில் யார் போருக்குச் சென்றிருக்கிறார்கள்? இளமையில் அரசுக்கட்டிலில் ஏறிய அரசர்கள் உண்டு. ஆனால் இவன் இன்னும் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை; அதற்குள் வில்லை ஏந்திக் கொண்டான். என்ன வீரம்! என்ன வீரம்!

‘இவனுடைய அறிவையும் குலப்பெருமையையும் எப்படிப் பாராட்டுவது! இவன் முன்னோர்கள் போருக்குப் புறப்பட்டால் இதோ இந்த நகரத்தின் வாசலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் மூழ்குவார்கள். வேப்பந்தளிரைச் சூடிக்கொள்வார்கள். இவனும் அந்த மரபு தவறாமல் செய்கிறானே!

மூதூர் வாயிலிற் பனிக்கயத்தில் மூழ்கினான். பொதுவிடத்தில் உள்ள வேம்பின் தளிரை அணிந்தான். மத்த யானை புறப்பட்டது போலப் புறப்பட்டு விட்டானே! இவனை எதிர்க்க வந்த பகைவர்கள் ஒருவரா, இருவரா? பலர் அல்லவா?

அவர்கள் அனைவரையும் இன்றைப் பொழுதுக்குள் இவன் அழித்துவிட முடியுமா? சிலர் எஞ்சுவார்களே? என்று புலவர்கள் பாராட்டினார்கள். இடைக்குன்றூர்கிழார் என்னும் புலவர் இந்த நிகழ்ச்சிகளை அப்படியே கவியில் வைத்துப் பாடினார்.

மூதூர் வாயிற் பனிக்கயம் மன்னி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
த்ண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மன்னரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ? பகல்தவச் சிறிதே!


(தொடரும்)



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 12, 2012 12:17 am

போரில் யார் வென்றார்கள்?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 12, 2012 6:22 am

௨) 2 )
“போரைப்பற்றி எவ்வளவோ செய்திகளை அறிந்திருக்கிறோம். பல போர்களைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதற்குமுன் இத்தகையதொரு போரைப்பற்றி கேட்டதே இல்லை” என்றார் இடைக்குன்றூர் கிழார்.

அயலில் நின்ற புலவர், “எதை எண்ணிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஓர் அரசனை மற்றோர் அரசன் தாக்குவது உண்டு. ஒருவனை ஒருவன் எதிர்த்து அழிதலும் உண்டு. அது புதுமையன்று; உலகத்தில் எங்கும் நடக்கும் இயற்கை. ஆனால் இதற்குமுன் இந்தமாதிரி நடந்ததைக் கேட்டதே இல்லை” என்றார் இடைக்குன்றூர் கிழார்”.

“இதுவும் சண்டைதானே?’

“இதில் ஏழு பேரோடு இளம் பருவமுடைய ஒரு மன்னன் தனியே நின்று போரிடுவதென்பது வியப்பிலும் வியப்பு! இது முன்பு கண்டறியாத போர்” என்று தம் வியப்புக்குரிய காரணத்தை வெளியிட்டார் இடைக்குன்றூர் கிழார்.

“அந்த ஏழு பேரையும் தேடி இவனா போனான்?” மண்ணாசை இவனுக்கு இல்லை. பாண்டி நாட்டைத்தக்கபடி ஆண்டுவந்தால் போதுமே. அவர்களுக்குத் தான் மண்ணாசை; பாண்டி நாட்டைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று ஆசை. தலை வாசலில் வந்து படையுடன் நிற்கும் பொழுது அரண்மனையில் தூங்கிக்கொண்டிருக்கமுடியுமா?”

(தொடரும்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 12, 2012 6:39 am

மிகவும் நன்று...தொடருங்கள் சாமி மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat May 12, 2012 8:38 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க தொடருங்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat May 12, 2012 5:26 pm

நல்ல பதிவு சாமி, தொடருங்கள்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 12, 2012 9:02 pm

௩) 3 )
“அவர்கள் நாட்டின் எல்லையில் வந்து அக்கிரமமாகப் புகுந்தது உண்மைதான். அவர்களுக்கு இவனுடைய பெருமை தெரியவில்லை; இவனுடைய தலைமையும் தெரியவில்லை; ஆசை ஒன்றே உந்த அறிவு மங்க வந்து விட்டார்கள். அப்படி வந்தவர்கள் எளியராகத் தோன்றவில்லை. முன்பே பல போரில் ஈடுபட்டுக் கழல் கட்டிக் கொண்டவர்கள். அவர்களை நான் ஒருவனே சென்று அடுகிறேன் என்று புறப்பட்டானே, நம் அரசன்; அது எவ்வளவு ஆச்சரியமான செயல்!”

“உண்மைதான். இவனும் அவர்களைப் போல வேறு யாரையேனும் துணைவர்களாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. தன் பலத்தில் இவன் அத்துணை நம்பிக்கை வைத்திருக்கிறான்.”

“அது மாத்திரம் அன்று. முன்பு சேரன் எதிர்த்தபோது படைத்தலைவர்களை விட்டு அடக்கினது போலச் செய்திருக்கலாம். அப்படியும் செய்யவில்லை. போர்ப்பறை காதில் விழுந்ததோ இல்லையோ, தன் குலத்துக்குரிய வேப்பந்தளிரைச் சூடிக்கொண்டான். நாட்டை முற்றுகையிட்டிருக்கும் பகைவரோடு பொரப்புகுவார் அணிகிற மரபுப்படி உழிஞைக் கொடியையும் அணிந்து கொண்டான். வீர முரசு ஆர்ப்ப, அந்த ஏழு பேரையும் அடக்குவேன் என்று புறப்பட்டு விட்டானே! இந்தப் பருவத்தில் இத்துணைத் துணிவு உண்டானது ஆச்சரியப்படக் கூடியதல்லவா/”

“ஆம், ஆம்” என்று இப்போது தலையசைத்தார் மற்றொரு புலவர்.

பாண்டி நாட்டின் வடஎல்லையிலே போர் மூண்டது. அங்கேயே பகைவர்களை எதிர்த்து அழிப்பது என்று பாண்டிய மன்னன் புறப்பட்டுவிட்டான்.

(தொடரும்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun May 13, 2012 9:05 am

நல்ல பதிவு. நம் தமிழ் மன்னர்களின் வீரத்தைப் பற்றி எழுதுவதற்கு நன்றி நண்பரே !

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue May 15, 2012 9:17 am

நமது நாட்டு பெருமைகளை , வீரத்தைப் பற்றி எழுதும் உங்களுக்கு நன்றி !

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 15, 2012 11:07 pm

௪) 4 )
பகைவர் ஏழு பேர்கள்; பகைப்படைகளும் ஏழு ஆயினும் ஏழு வகையில் செயலாற்றலாமா? எருமையூரன் படைக்கும் சோழநாட்டுப்படைக்கும் பேச்சிலும் பழக்க வழக்கங்களிலும் எவ்வளவோ வேறுபாடுகள். முன்பு கூடியறியாதவர்கள் அவர்கள். அத்தகையவர்கள் எப்படி ஒத்துப் போர் செய்ய முடியும்? சோழ நாட்டு வேளிர்களில் இன்னும் சிலரைத் துணைக்கு அழைத்திருக்கலாம்; நெடுஞ்சேய்மையிலுள்ள இருங்கோவேள்மானிடம் போயிருக்க வேண்டாம்; எருமையூரனை நாடியிருக்க வேண்டாம். எல்லாம் பட்ட பிறகுதானே தெரிகின்றன?. ஒவ்வோர் ஊர்ப்படையும் ஒவ்வொரு வகையில் போரிடுவதாக இருந்தால் போரில் எப்படி ஒருமித்துத் தாக்க இயலும்?

இந்தக் குறைபாடும் பாண்டியனது படைக்குப் பலமாக முடிந்தது. இயற்கையாகவே பெருவிரல் படைத்த படைத்தலைவர்கள் கட்டுத்திட்டமாகப் படைவீரர்களை நடத்திச் சென்றனர். பாண்டி நாட்டுப் படையின் ஒழுங்கு முறைக்கு முன் எந்த நாட்டுப் படையின் ஒழுங்குமுறையும் நில்லாது. தன் படைப்பலமும் பகைவருடைய வலியின்மையும் பாண்டியனுக்குத் துணையாயின.

பகை மன்னர்கள் பாண்டியன் இளம்பருவத்தினன் என்பதை எண்ணினார்களேயன்றிப் படையை இயக்கிய தலைவர்கள் பல போரில் வெற்றி பெற்றுக் கைதேர்ந்தவர்கள் என்பதை எண்ணவில்லை.

பாண்டி நாட்டின் எல்லையில் சிறிது நேரந்தான் போர் நடைபெற்றது. பகைப்படை மெல்ல மெல்ல பின்னுக்கு நகர்ந்தது. சோழநாட்டின் எல்லைக்குள் போர் நடக்கத் தொடங்கியது.மெல்லெ மெல்ல நகர்ந்தது பகைப்படை; பின்பு வேகமாகவும் சென்றது.

கடைசியில் தலையாலங்கானம் என்னும் இடத்தில் நின்று போர் செய்தது.
அதுவரையில் வராமல் தாமதமான பிற படைகளும் வந்து சேர்ந்தன. தன்னுடைய எல்லைக்குள்ளே பாண்டியன் படை வந்துவிட்டமையால் எளிதில் சுற்றி வளைத்துத் தொலைத்துவிடலாம் என்று நம்பினான் சோழன். மற்றவர்களுக்கும் சொல்லி ஊக்கினான். போர் கடுமையாக மூண்டது. இரு பெரும் வேந்தரும் ஐம்பெருவேளிரும் தம்தம் படைக்குத் தலைவராக நின்று முடுக்கினர்.
(தொடரும்)


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக