புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
32 Posts - 42%
heezulia
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
2 Posts - 3%
prajai
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
2 Posts - 3%
Saravananj
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
398 Posts - 49%
heezulia
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
26 Posts - 3%
prajai
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:05 pm

12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! TN_120511160739000000

உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. இந்த வைகாசி மாதத்திற்கான (14.5.2012-14.6.2012) ராசிபலன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) புதிய வாய்ப்பு

நம்பிக்கையுடன் செயலாற்றும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட பலன் தரும் வகையில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ஜென்மகுரு என்ற நிலை மாறி இந்த மாதம் புதிய இனங்களில் வருமானம் காண்பீர்கள். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறரின் செயல்களுக்கு போட்டியாக ஆடம்பர நடைமுறை பின்பற்றக்கூடாது. புத்திரர் உங்கள் பேச்சை மதித்து நற்செயல்களைப் பின்பற்றுவர். ஆரோக் கியத்தில் அக்கறை உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவர். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று உற்பத்தியை உயர்த்துவர். அரசு தொடர்பான வகையில் நிதான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. வியாபாரிகள் சந்தைப்போட்டியை சமாளித்து சராசரி விற்பனையும் அதற்கேற்ப லாபவிகிதமும் காண்பர். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்ற அக்கறையுடன் செயல்படுவர். ஓரளவு சலுகைப்பயன் கிடைக்கும்.பணிபுரியும் பெண்கள் புதிய உத்திகளை பின்பற்றி நிலுவைப்பணியை நிறைவேற்றுவர். சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின்அன்பும், தாராள பணவசதியும் கிடைக்கப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படுவதால் மட்டுமே நற்பெயரை பாதுகாக்க இயலும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் வரும். மாணவர்கள் எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்த ஆலோசனையில் ஈடுபடுவர்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் தொழிலில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
உஷார் நாள்: 3.6.12 காலை 7.27 - 5.6.12 காலை 10.09
வெற்றி நாள்: மே 23, 24
நிறம்: பச்சை, வெள்ளை எண்: 5, 6

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:06 pm

ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) உடல்நலக் குறைவு

பிறரை வசீகரிக்கும் விதத்தில் செயல்படும் ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மட்டுமே இந்தமாதம் நல்ல பலன் தரும் கிரகமாக செயல்படுகிறார். ஜென்ம குருவின் தாக்கமும் மற்ற கிரகங்களின் அமர்வும் பலவித சோதனை களங்களை உங்கள் வாழ்வில் எதிர்கொள்ள வைக்கும். முக்கிய செலவுகளை சரிக்கட்ட சேமிப்பு பணம் கைகொடுக்கும். சிறு அளவில் கடனும் பெறுவீர்கள். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்படுகிற கிரகநிலை உள்ளது. கேளிக்கை விருந்துகளில் அதிகம் கலந்துகொள்வதால் ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். தம்பதியர் குடும்ப சூழ்நிலையின் கஷ்டநிலை உணர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் நடப்பர். நண்பர்களால் ஓரளவு உதவி உண்டு. தொழிலதிபர்கள் அளவான உற்பத்தியால் மிதமான லாபம் பெறுவர். நடைமுறைச்செலவு கூடும். வியாபாரிகள் சுமாரான விற்பனையும் அதற்கேற்ற ஆதாயமும் பெறுவர். . பணியாளர்கள் சகபணியாளர்களால் பணிச்சுமைக்கு ஆளாவர். முக்கிய செலவுக்கு கடன் பெற வேண்டியதிருக்கும். பணிபுரியும் பெண்கள் குளறுபடியான செயல்களால் தாமதநிலையைச் சந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் வியாபார நடைமுறையைச் சீர்படுத்துவர். அரசியல்வாதிகள் புகழை தக்கவைக்க அதிகப் பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும். மாணவர்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.
உஷார் நாள்: 5.6.12 காலை 10.10 - 7.6.12
பிற்பகல் 2.04 மணி
வெற்றி நாள்: மே 25, 26, 27
நிறம்: நீலம், ரோஸ் எண்: 1, 8

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:06 pm

மிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) தாராள பணவரவு

பரந்த மனப்பான்மையுடன் செயல்படும் மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுவதும் ரிஷப, மிதுன வீடுகளில் அனுகூலக் குறைவாக சஞ்சாரம் செய்கிறார். நவக்கிரகங்களில் சுக்கிரன், செவ்வாய், ராகு அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். எதிர்கால வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் இறங்குவீர்கள். புதிய முயற்சியுகளில் தாராள பணவரவு பெறுவீர்கள். சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பாசபந்தத்துடன் நடந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். வியாபாரிகள் சந்தையில் போட்டி குறைவதால் விற்பனையை அதிகப்படுத்துவர். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் கூடும். பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். தாமதமான சலுகைப்பயன் எளிதில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் உத்வேகமுடன் செயல்பட்டு நற்பெயர் காண்பர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்ப பெண்கள் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் அக்கறையுடன் ஈடுபடுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து அமோக வருமானம் காண்பர். அரசியல்வாதிகள் புதிய பதவி, பொறுப்பு கிடைக்கப்பெறுவர். ஆதரவாளர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். விவசாயிகள் மகசூல் சிறந்து பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கப்பெறுவர். நிலம் தொடர்பான விவகாரத்தில் அனுகூல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவர்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழிலில் அமோகவளர்ச்சி ஏற்படும்.
உஷார் நாள்: 7.6.12 பிற்பகல் 2.05 -9.6.12
இரவு 7.10
வெற்றி நாள்: மே 28, ஜூன் 6
நிறம்: சிவப்பு, வெள்ளை எண்: 1, 2

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:07 pm

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சந்தோஷம் கூடும்

தடைக்கல்லை படிக்கல்லாக முயலும் கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் சதயம் நட்சத்திரமான ராகுவின் சாரத்தில் தனது பயணத்தை துவங்குகிறார். அதிர்ஷ்டவசமாக இந்தமாதம் சூரியன், புதன், கேது, குரு, சுக்கிரன், சனி என ஆறு கிரகங்கள் அனுகூலமாக செயல்படுகின்றனர். மனச்சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றியைச் சொந்தமாக்கிக் கொள்வீர்கள். பேச்சில் இனிமை பின்பற்றுவதால் பலரிடத்திலும் நல்ல பேர் எடுப்பீர்கள். புத்திரர் தம் தேவைகளை நிறைவேற்ற அதிக எதிர்பார்ப்புடன் உங்களை அணுகுவர். அதை நிறைவேற்றினால் மட்டுமே அதிருப்தி வராமல் தவிர்க்கலாம். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து உறவினர்களை உபசரித்து மகிழ்வர். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலதிபர்கள் அரசிடம் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறுவர். வியாபாரிகள் சந்தையில் வரவேற்பு அதிகரித்து விற்பனையில் சாதனை படைப்பர். மூலதனத்தை அதிகப்படுத்துவர். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறமைமிகு செயல்களால் நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். குடும்ப பெண்கள் சுமூக வாழ்வுமுறை அமையப்பெறுவர். குடும்பச் செலவுக்கான பணம் சீராக கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அதிக ஆர்டர் கிடைக்கப் பெற்று விற்பனையில் முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவதோடு ஆதரவாளர்களின் ஒத்துழைப்பையும் பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி மகிழ்வர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
உஷார் நாள்: 14.5.12 காலை 6.01- 15.5.12
இரவு 7.20 மற்றும் 9.6.12 இரவு 7.11 - 12.6.12 அதிகாலை 2.57
வெற்றி நாள்: மே 30, 31
நிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 3, 4

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:08 pm

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) அந்தஸ்து உயரும்

நற்பண்புகளை நாளும் வளர்த்திடும் சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் பத்தாம் இடத்தில் புதனுடன் சேர்க்கை பெற்று புத ஆதித்யயோக பலத்துடன் இருக்கிறார். நற்பலன் தரும் கிரகமாக சுக்கிரன் செயல்பட்டு வருகிறார். ஏழரைச்சனியின் தாக்கம் இருந்தாலும் ஆர்வமுடன் புதிய முயற்சிகளை துவங்குவீர்கள். உறவினர், நண்பர்களின் ஆதரவும் அரசு தொடர்பான உதவியும் எளிதில் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தில் கிடைக்கிற பயன்களை சரிவர பயன்படுத்துவது போதுமானதாகும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புத்திரர் உங்கள் சொல்படி கேட்டு நடப்பர். உடல்நலனில் அக்கறை தேவை. நீதிமன்ற விவகாரங்களில் மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுவீர்கள். தம்பதியர் பாசபந்தத்துடன் நடந்து கொள்வர். நண்பர்களின் ஆலோசனையும் உதவியும் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் விலகிப்போன வியாபார தொடர்புகளை புதுப்பித்துக் கொள்வர். தாராள பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவர். புதிய உத்திகளால் விற்பனையில் வளர்ச்சி காண்பர். பணியாளர்கள் நவீன தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர். அதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சலுகைப்பயன் எளிதில் வந்துசேரும். குடும்ப பெண்கள் கணவர் குறிப்பறிந்து செயல்படுவர். உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணியில் ஈடுபடுவர். உற்பத்தி, விற்பனை சீராகும். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புக்களை அடைய அனுகூலம் உள்ளது. விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பதால் வருமானம் கூடும். கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் எதிர்கால கல்வி குறித்த ஆலோசனையில் ஈடுபடுவர்.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
உஷார் நாள்: 15.5.12 இரவு 7.21 - 18.5.12
அதிகாலை 5.39 மற்றும் 12.6.12 அதிகாலை 2.57 - 14.6.12 பிற்பகல் 1.06
வெற்றி நாள்: ஜூன் 1, 2
நிறம்: ஆரஞ்ச், மஞ்சள் எண்: 3, 9

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:08 pm

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) செலவு அதிகரிக்கும்

இனிய அணுகுமுறை கொண்ட கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் சிரம பலன்களும் மாத பிற்பகுதியில் அனுகூல பலன்களும் தருகிற வகையில் உள்ளார். குரு பெயர்ச்சியாகி ராசியை பார்ப்பதால் சிந்தனையில் தெளிவு ஏற்படும். பணத்தேவை அதிகரிக்கும். இருப்பினும் சமாளிக்க முயற்சிப்பீர்கள். வீடு, வாகனத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். புத்திரர் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். உடல்நலனுக்காக மருத்துவரின் ஆலோசனையை பெற நேரிடும். குடும்பச் செலவு அதிகரிக்கும். இதனால் சிலர் கடன் வாங்க வேண்டிவரும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவது குடும்பநலனுக்கு உகந்தது. தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தங்களில் ஆர்வம் காட்டுவர். மாத பிற்பகுதியில் பணவரவு கூடும். வியாபாரிகள் புதிய உத்திகளை பின்பற்றி ஆதாயம் காண்பர்.பணியாளர்கள் மாத முற்பகுதியில் பணிச்சுமைக்கு உள்ளாவர். உடல்நலம் பேணுவதில் அக்கறை தேவை. பணிபுரியும் பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பணியில் கவனச்சிதறல் எதிர்கொள்வர். குடும்ப பெண்கள் கணவருடன் தேவையற்ற விவாதம் செய்வது கூடாது. குடும்ப செலவுக்கான பணவசதி ஓரளவே கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் மிதமான வளர்ச்சி பெறுவர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு லாபம் பெறுவர். மாணவர்களின் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவர்.

பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
உஷார் நாள்: 18.5.12 அதிகாலை 5.40 - 20.5.12 மாலை 5.20 மற்றும் 14.6.12 பிற்பகல்
1.07- 14.6.12 பின்இரவு முழுவதும்
வெற்றி நாள்: ஜூன் 3, 4
நிறம்: கருநீலம், மஞ்சள் எண்: 3, 8

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:08 pm

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) வீட்டில் சுபநிகழ்ச்சி

தர்ம சிந்தனையுடன் செயலாற்றும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்களை வழங்குகிறார். செவ்வாயின் ஆதாய ஸ்தான அமர்வு வாழ்வில் முக்கியமான நன்மைகளைப் பெற்றுத்தரும். மாத முற்பகுதியில் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாக புதன் சாதகமாக செயல்படுகிறார். இடம், பொருள் அறிந்து பேசுவதால் சிரமத்தை தவிர்க்கலாம். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இடம்தரக்கூடாது. புத்திரர் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பர். ஆரோக்கியம் பேணுவதில் கவனம் தேவை. தம்பதியர் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் செயல்படுவர். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்தி பணி மேற்கொள்வர். வியாபாரிகள் லாபவிகிதம் குறைத்து புதிய வாடிக்கையாளர் கிடைக்கப் பெறுவர். பணியாளர்கள் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு பெறுவர். எதிர்பார்த்த பணி, இடமாற்றம் கிடைக்கும். பணியிடத்தில் சுதந்திர உணர்வுடன் செயல்படுவர். பணிபுரியும் பெண்கள் பணியை இலகுவாக்கும் விதத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை பின்பற்றுவர். குடும்ப பெண்கள் கணவருக்காக விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். சராசரி பணவரவு கிடைக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவர். விவசாயிகளுக்கு தாராள மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்கத் திட்டமிடுவர்.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் உடல் நலம் பெறுவதோடு நிம்மதி நிலைத்திருக்கும்.
உஷார் நாள்: 23.5.12 அதிகாலை 4.38 - 25.5.12 பிற்பகல் 2.07
வெற்றி நாள்: ஜூன் 7, 8, 9
நிறம்: காவி, ஊதா எண்: 1, 4

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:09 pm

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மனதில் உற்சாகம்

சூழல் அறிந்து செயலாற்றும் விருச்சிகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் உள்ளார். குரு, சுக்கிரன், சனி இந்த மாதம் அனுகூல பலன்களை அள்ளித்தருவர். மனதில் இருந்த எதிர்மறை சிந்தனைகள் மறையும். குருவின் நல்லருள் பார்வையால் மனதில் உற்சாகம் கூடும். வாழ்வில் நன்மைகள் மலரத் தொடங்கும். ஏழரைச்சனியின் தாக்கம் குறையும். வீடு, வாகன வகையில் அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர் அன்பு பாராட்டுவர். புத்திரர்களின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். உடல்நலனில் அக்கறை தேவைப்படும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறை சீர்திருத்தங்களில் வெற்றி காண்பர். உற்பத்தி சிறந்து வருமானம் கூடும்.தொழிலாளர் நலனில் அக்கறை கொள்வர். வியாபாரிகள் சந்தைப்போட்டியை சமாளிக்கும் விதத்தில் புதிய உத்திகளைக் கையாள்வர். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரின் பாராட்டு பெறுவர். பதவி உயர்வு, சலுகை பயன் படிப்படியாகக் கிடைக்கும்.பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை ஆர்வத்துடன் பின்பற்றுவர். குறித்தகாலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் தாராள பணவசதியும் கணவரின் அன்பும் கிடைக்கப் பெறுவர். சந்தோஷ வாழ்வு உண்டாகும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை அதிகரித்து லாபத்தை அதிகரிப்பர். அரசியல்வாதிகள் புதிய பதவி கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வருவர். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க எல்லா வசதிகளும் கிடைக்கும். மகசூல் சிறந்து நல்ல விலை பெறுவர். மாணவர்கள் மனதில் இருந்த தயக்கம் விலகும். உற்சாகத்துடன் படித்து முன்னேறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் வாழ்வில் தடைகள் நீங்கி வளர்ச்சி அதிகரிக்கும்.
உஷார் நாள்: 20.5.12 மாலை 5.21 -23.5.12
அதிகாலை 4.37
வெற்றிநாள்: ஜூன் 5, 6
நிறம்: பச்சை, நீலம் எண்: 2, 5

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:09 pm

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1) சம்பள உயர்வு

பிறருக்கு உதவும் மனம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு மாத துவக்கத்திலேயே ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்வு பெறுகிறார். இந்த மாதம் ராசிக்கு தர்ம கர்ம ஸ்தான அதிபதிகளான சூரியன், புதன் நற்பலன் தரும் இடத்தில் உள்ளனர். கேதுவும் தன் பங்கிற்கு சிறப்பான பலன் தருகிறார். தொடங்கிய செயல் வெற்றிகரமாக நிறைவேற கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். தம்பி, தங்கை அதிருப்தி மனப்பாங்குடன் இருப்பர். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றம் செய்து மகிழ்வீர்கள். புத்திரர் சிறு விஷயங்களில் கூட பிடிவாத குணத்துடன் நடந்து கொள்வர். தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவதால் மட்டுமே குடும்ப நடைமுறை சீராக இருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். சிலருக்கு தொழில் கூட்டமைப்பில் அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி விரிவாக்கப்பணிகளைச் செய்து முடிப்பர். அதற்குத் தேவையான நிதியுதவியும் கிடைக்கும். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும். பணியாளர்கள் ஆரோக்கிய உடல்நலம் பெற்று பணியை திறம்பட மேற்கொள்வர். சம்பள உயர்வு, கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் குறித்தகாலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, சலுகைப்பயன் சீராக கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரிடம் வாக்குவாதம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆடை, ஆபரணச் சேர்க்கை அவரவர் வசதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் ஆர்டர் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணமும் வசூலாகும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவதோடு பதவி உயர்வு பெறுவர். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிடுவர்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும்.
உஷார் நாள்: 25.5.12 பிற்பகல் 2.08 - 27.5.12 இரவு 9.14
வெற்றி நாள்: மே 14, 15, ஜூன் 10, 11
நிறம்: பச்சை, வெள்ளை எண்: 5, 6

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:10 pm

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பொறுமை தேவை

உறவினர்களை மதிப்புடன் நடத்தும் மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனி பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து நட்புக்கிரகமான ராகுவின் பர்வையை பெறுகிறார். இநத மாதம் நவக்கிரகங்களில ராகுவும், குருவும் நல்ல பலன்களை வழங்குவர். வாக்கு ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் பேச்சில் கடுமை உண்டாகும். பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு பராமரிப்பு பின்பற்ற வேண்டும். புத்திரரின் செயல்களில் தடுமாற்றமும் குளறுபடியும் ஏற்பட வாய்ப்புண்டு. உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவில் ஈடுபடுவர். குடும்ப எதிர்கால நலன் கருதி பொறுமையுடன் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல், கருத்து பரிமாற்றத்தில் நிதானத்தைப் பின்பற்றுங்கள். தொழிலதிபர்கள் உற்பத்தி தரத்தை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டுவது அவசியம்.வியாபாரிகள் ஒரு சில ஆர்டர்களுக்கு பொருள் விநியோகிக்க தாமதமாகும். இதனால் ஆர்டர் இடம்மாறிப் போகலாம். பணியாளர்கள் தாமத செயல்பாடுகளால் நிர்வாகத்தின் கண்டிப்பை எதிர்கொள்வர். பணிபுரியும் பெண்கள் பணிச்சுமையால் செயல்பாட்டில் குளறுபடி சந்திப்பர். குடும்ப பெண்கள் கணவரின் மனநிலையைப் புரிந்து செயல்படுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் மிதமான வளர்ச்சி காண்பர். அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய இனங்களில் வருமானம் பெற முயற்சிப்பர். விவசாயிகள் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்கப் பெறுவர். மாணவர்களுக்கு கல்விச்செலவுக்கான பணம் பெறுவதில் தாமதம் உண்டாகும்.

பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் குடும்பச் சச்சரவு நீங்கி மனதில் நிம்மதி நிலைத்திருக்கும்.
உஷார் நாள்: 27.5.12 இரவு 9.15 - 30.5.12
அதிகாலை 1.59
வெற்றி நாள்: மே 16, 17, ஜூன் 12, 13
நிறம்: மஞ்சள், காவி எண்: 3, 7

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக