புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
90 Posts - 76%
heezulia
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
12 Posts - 10%
Dr.S.Soundarapandian
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
255 Posts - 77%
heezulia
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
39 Posts - 12%
mohamed nizamudeen
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 12:32 pm

First topic message reminder :

* இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே கோயில்களை அமைக்கிறோம். ஆனால், பொதுவாக நம் குறைகளை நிவர்த்தி செய்து தரும்படியே பகவானிடம் வேண்டிக்கொள்கிறோம். சில சமயங்களில் நிவர்த்தி உண்டாகிறது. சில சமயங்களில் நம் விண்ணப்பம் நிறைவேறுவதில்லை.

* நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற் படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் அது வேண்டும் இது வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.

* விருப்பங்கள் நிறைவேற நிறைவேற, ஆசைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அதே நேரம், தம்மிடம் நம்பிக்கை இருக்கும்படியாக செய்வதற்காக, இறைவன் அவ்வப்போது, நம் விருப்பங்களை நிறைவேற்றியும் தருவார்.

* பகவானிடம் நம் விருப்பங்களை வேண்டி நிற்பதில் மேலான ஒரு நன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் நம் மனக்குறைகளை பகவானிடம் சொல்வதால் நமக்கு மனநிம்மதி உண்டாகிறது. நாம் சாமான்யர்களாக இருக்கும்வரையில் நம் குறைகளை நிவர்த்திக்க பிரார்த்திப்பதும், நமக்கான விருப்பங்களையும், வரங்களையும் வேண்டிக்கேட்பதிலும் தவறொன்றும் இல்லை. வெறும் குறைகளையும், வரங்களையும் மட்டுமே கேட்கத் தொடங்கிய நாம் இறுதியாக சரணாகதி நிலைக்கு தயாராகி நம்மையே அவரிடம் கொடுப்பதற்காகத் தான்.


நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 16, 2012 10:33 pm

தொடருங்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 16, 2012 11:42 pm

அனைத்தும் அருமை.. எனது மாணவர்களுக்கு பயன்படும்.. சேமித்துக்கொண்டேன் பாலா!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 11:16 am

* தானதர்மம், வழிபாடு போன்ற நற்செயல்கள் மனதை வெளிப்படையாக நல்வழிப்படுத்துகின்றன. இருந்தாலும் மனத்தூய்மையுடன் அவற்றில் ஈடுபடும்போது நாம் முழுமை பெறுகிறோம்.

* உடலை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்மூலம் உள்ளத்திலும் வலிமை உண்டாகும்.

* வேண்டாத விஷயங்களைப் பேசுவது, கேட்பது, பார்ப்பது கூடாது. ஐம்புலன்களையும் மனதின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.

* கடவுள் நமக்கு இந்த உடம்பைக் கொடுத்திருப்பதோடு, நன்மை தீமையைப் பகுத்தறியும் அறிவையும் கொடுத்திருக்கிறார்.

* நம்மால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்வதே தர்மத்தை ஒட்டிய வாழ்க்கை.

* எல்லா உயிர்களிலும் கடவுள் குடியிருக்கிறார். அதனால் அனைவரையும் நேசிப்பது நம் கடமை.


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 11:19 am

ஆசை உலகிற்கு பயன்படட்டும் - காஞ்சி பெரியவர்

* மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே அடிப்படையாக இருக்கிறது. ஆசையினால் ஒன்றை அடைய விரும்புகிறோம். அதனை அடைவதற்காக சிலர் தர்ம வழியிலிருந்து விடுபட்டு, அதர்ம வழியைக்கடைப்பிடிக்கிறார்கள். எப்படியாவது ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற உந்துதலே தவறுகளுக்கு காரணமாகிறது. எனவே, ஆசையை விட்டொழிக்க வேண்டும்.

*அக்னியில் நெய்யை விடும்போது, அது மேலும் பெரிதாகிக் கொண்டுதான் போகிறதே தவிர அணைந்து விடுவதில்லை. அதைப்போலவே ஒரு ஆசை நிறைவேறும்போது, அடுத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது. நாமாக நிறுத்திக் கொள்ளும்வரையில் ஆசைகள் வந்து கொண்டேதான் இருக்கும். ஆசையில் இருந்து விடுபட மனதை இறைவனிடம் வைக்க வேண்டும்.

* ஆசைகள் மனிதர்களை பாவச்செயல்களில் ஈடுபடுத்தும் சக்தியாக இருக்கிறது. மனதில் இருக்கும் ஆசைகள் கூடிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர குறைவதில்லை. இதனால் இன்பத்தை காட்டிலும், துன்பமே அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசைக்கு தடுப்பு போட வேண்டியது அவசியம்.

*ஆசைகளை உலகிற்கு பயன்படுவதாகவும், உங்களுக்கு ஆத்மார்த்தமாக பலன் தருவதாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். இத்தகைய ஆசையில் ஈடுபாடு காட்டுங்கள். அதனை நிறைவேற்ற முனைப்புடன் செயலாற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, மாயையான ஆசைகள் எல்லாம் உங்களை விட்டு விலகிவிடும். பாவங்களும் குறைந்து, புண்ணியம் கிடைக்கும்


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat May 19, 2012 11:38 am

nanri! baalaa kaarththik ungaludaiya pudhiya iru padhivugalukkum

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 11:54 am

rameshnaga wrote:நன்றி! பாலா கார்த்திக் உங்களுடைய புதிய இரு பதிவுகளுக்கும்

மிக்க நன்றி சார் தொடர்ந்து ஆதரவளித்துவரும் உங்களுக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 12:47 pm

* நாம் உயர்வாக இருக்கிறோம். ஆனால், நம் உதவியைப் பெறுபவர் நம்மை விடத் தாழ்ந்தவராக இருக்கிறார் என்று நினைத்து கொள்ளும்போதே செய்யும் உதவி பயனற்றதாகிவிடும்.

* தினமும் தூங்கும்போது இன்று நாம் யாருக்காது உதவி செய்திருக்கிறோமா என்பதைப் பற்றி ஒரு நிமிஷமாவது சிந்திக்க வேண்டும்.

* ஒருவருக்கு பணத்தால் தான் உதவி செய்யவேண்டும் என்பதில்லை. உடலாலும் மற்றவர்க்கு உதவி செய்யலாம். அதுவும் கூட புண்ணியமானது தான்.

* சம்பாதித்த பின் தானதர்மம் செய்யலாம் என்று தள்ளிப்போடக்கூடாது. அவ்வப்போது செய்வது நல்லது.

* இளைஞர்கள் பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தை வீணாக்காமல், பிறருக்கு தொண்டு செய்து பயனுள்ளதாக்க வேண்டும்.

* உடல் வலிமையைக் காட்டிலும் மனவலிமை முக்கியம். ஒழுக்கத்துடன் இருந்தால் மனவலிமையை எளிதாகப் பெறமுடியும்.


காஞ்சி மகாபெரியவர்

நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 09, 2012 11:02 am

உனக்குள் இருக்குது மகிழ்ச்சி

* மனிதன் உடலாலும், உள்ளத்தாலும் பாவபுண்ணியங்களைச் செய்து கொண்டுஇருக்கிறான். வேதம் விதித்த தர்ம வழிகளில் நடப்பவன் புண்ணியத்தைத் தேடுகிறான். ஆசை வயப்பட்டு எந்த தப்பையும் செய்யத் துணிபவன் பாவத்தைச் சுமக்கிறான்.

* சுயநலத்தைப் பெரிதாக எண்ணாமல் சமுதாய நலனுக்காக செயல்படுபவனின் செயல் அனைத்தும் புண்ணிய கர்மமாகி விடும்.

* மனதில் எண்ணிலடங்கா ஆசைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், ஆசைப்பட்டு அடைந்த பொருள் அனைத்தும் ஒரேநாளில் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

* ஆசை குறைந்தால் துன்பமும் குறையும். ஆசை அடியோடு நீங்கி விட்டால் மீண்டும் மண்ணில் பிறப்பெடுக்க வேண்டியதில்லை.

* வெளியுலகில் கிடைக்கும் மகிழ்ச்சி ஒருவனுக்கு என்றென்றும் நிலைப்பதில்லை. உள்மனதில் இருந்து உண்டாகும் மகிழ்ச்சியே நிரந்தரமானது. அதை அடைவதற்கு மனிதன் முயலவேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்

நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 4:36 pm

குரு (ஆசான்) யார்?

குரு என்றால் கனமானது. பெரியது. அதாவது பெருமை உடையவர். மஹிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை ‘மஹாகனம் பொருந்தியவர்’ என்று சொல்லுகிறோம். கனமென்றால் Weight அதிகமென்றா அர்த்தர்? ஒருவர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர். வெளியிலே போதனை பண்ணுவதில் சதுரர். வெளியிலே நடத்தையால் வழிகாட்டுவதேலே சிறந்தவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கிறார்கள். குருவுக்கும் சீடனுக்கும் ‘லிங்கா’க உபதேசம் இருக்கிறது. குருவிடம் இருந்து புறப்பட்டுபோய் , சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செலுத்துவது ‘தீட்சை’ என்று அறியப்படுகிறது.

அம்பிகையின் தீட்சைகள்

மீனாட்சி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவளைத்தான் தடக்ஷத்தாலேயே ஞான தீட்சை, காமாட்சி, பகதனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாத்தத்தை வைத்உ ஞானியாக்கி விடுபவர். ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீட்சைவேண்டுகிறோம். காசியில் இருக்கும் விசாலாட்சி, பக்தர்களை அனுக்ரஹ சிந்தையோடு மனதால் நினைத்தே ஞானமளிக்கும் கமட தீட்சை குருவாக இருக்கிறாள்.

அன்போடு பணி செய்யவேண்டும்

கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது. அபாகரம் செய்வதன் மூலம் நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் உண்டாக வேண்டும். நமக்கு வேண்டியவர்களை நினைத்துகொண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த வேண்டியவர்களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக்கொண்டே போனால் அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது. ‘நம் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது தான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கவேண்டும். கடனை, அதாவது கடமையை அன்போடு ஆர்வத்தோடு , இதய பூர்வமாகச் செய்ய வேண்டும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

‘அனைத்து அறன்’ அதாவது ஸர்வ தர்ம்மும் என்னவென்றால் அவரவரும் மணத்துக்கண் மாசிலன் ஆதல் அதாவது தங்கள் மனதைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலாக சுத்தம் செய்து கொள்வது தான் என்கிறார் திருவள்ளுவர். காமானுஷ்டானத்தால் அவரவரும் சித்தகத்தி ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற வைதிக சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.

உயிர்களுக்கு இதமானதே ஸ்த்யம்

நம் சாஸ்திரங்களில் அவரவரக்குகான அனுஷ்டானங்களைச் சொல்வதற்கு முன் ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்கவேண்டிய எட்டு ஆத்ம குணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். இதில் முதலாவதே அஹிம்சைதான். ஸ்த்யத்துக்கும் இலக்கணம் கொடுக்கும்போது, வெறுமனே நடந்ததை நடந்தபடி வாயா சொல்வது மட்டுமல்ல, எது ஜீவராசிகளுக்கு இதமாக பிரயமானதாக இருக்கிறதோ அதுவே ஸ்த்யம் என்று சொல்லியிருக்கிறது.

அன்னதானம்

தனக்கென்று ஒன்றுமே வைத்துக்கொள்ளாமல் தானம் பண்ண வேண்டும். ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கும்போது அவர் என்ன ஜாதி என்ன மதம்? நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிராமல், நம்மாலான உபகாரத்தைப் பண்ண வேண்டும். யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது. அன்னதானத்துக்கு என்ன விஷேசம் என்றால் இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்.

தீப தத்துவம்

தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, கொசு, மரம், நீர்வாழ் – நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனதிலிருந்து அன்பு, ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாக பிராகாசிக்க வேண்டும். இந்த உத்தம்மான சிந்தனையில் தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

அஹங்கார நாசம்

வைத்துக் கொண்டு அனுபவிப்பதைவிட, கொடுத்து அனுபவித்தால் அதுவே பரம ஆனந்தத்தை தருகிறது. மஹாபலி வாரி வாரிக் கொடுத்தான். ஆனால், தான் கொடுக்கிறொமு என்ற அஹங்காரத்தை அவன் பகவானுக்குப் பலி கொடுக்கவில்லை. இதனால் பகவானே அவனிடம் இந்த அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.

ஐந்து மகா யஜ்ஞங்கள்

வைதிக தர்மத்திற்கு சாரமாக இருப்பது பஞ்சமஹா யஜ்ஞங்கள் எனும் ஐந்து வேள்விகள். வேதம், ஓதுவது, ஓதுவிப்பது எனும் வித்யா தானமே ”ப்ரம்மயஜ்ஞம்” மூதாதையருக்குச் செய்யும் தர்ப்பணமே ”பித்ரு யக்ஞம்”, ஈசுவர ஆராதனமே தேவ யஜ்ஞம் நாயும் காக்கையும் உட்பட எல்லா ஜஷவராசிகளுக்கும் பலி போடுவது பூத யஜ்ஞம் அதிதி-விருந்தினரை உபசாரம் செய்வது ;ந்ரு யஜ்யம்’ படைப்பில் ஒரு பிரிவைகூட, விடாமல் உபகாரம் பண்ணி வைப்பது பஞ்ச மஹா யஜ்ஞம்.

தொண்டின் பயன்

தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபதனைந்தாலும் அடையாவிட்டாலும், நம்முடைய மனசின் அஹங்காரம் குறையும். எல்லோரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே. அது பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.

எளிய வாழ்க்கை

எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணும் நெருப்பு மாதிரித்தான் ஆசை, எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்ம க்ஷேத்ம்ம். நாம் எப்படிவாழ்கிறோமோ அப்படியே பிறரும் வாழ வேண்டும் என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அடிப்டைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும் அதற்கு மேல் ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை.

குறுக்கு வழி

சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்குக் குறுக்கு வழி இல்லையா? ஒன்றே ஒன்று இருக்கிற மாதிரி பகவானே சொல்லியிருக்கிறார். என்னையே நினைத்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ அவன் என்னை அடைந்துவிடுகிறான் என்று சொல்லி, நாஸஃதி அத்ர ஸம்சய இதில் சந்தேகம் இல்லை என்று காரண்டி கொடுத்திருக்கிறார் (கீதையில்) அந்தகாலே சமாம் ஏவஸ்மரன” – என்னை மட்டுமே என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்பக் கஷ்டம்தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்துவிடலாம்.

சுத்த சரீரம்

அவனவனும் தன் உடலையும் புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொள்வதே பெரிய பரோபகாரம் தான். துர்ப் பழக்கங்களால் ஒருவன் வியாதியை சம்பாதித்துக் கொள்கிறான் என்றால், அப்பறம் அவனால் எப்படிப் பரோபகாரம் பண்ணமடியும்? அது மட்டுமல்ல. அவனது நோய் மறவர்கள்கும் பரவக்கூடும். துர்ப்பழக்கத்தால் நோயை வரவழைத்துக் கொள்வது பர அபகாரம் ஆகும். நம்மை மீறி வந்தால் அது வேறு விஷயம்.

பணியற்ற நாள் பழே

தினமும் தூங்கப்போகுமுன் இன்று மற்றவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்தோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். பரோபகார்ம செய்யாமலே ஏழுயாள் போயிற்று என்றால் அது நாம் பிறவா நாளே- அன்றைக்கு நாம் செத்துப்போனதற்கு சமம் என்று வருத்தப்பட வேண்டும். நாமே செத்த மாதிரி என்றால் இதுதான் பெரிய தீட்டு.

நாம் எத்தனை சிறியவர்களாக இருந்தாலும், நம்மாலும் முடியக்கூடிய சிறிய தொண்டு இல்லாமல் இல்லை. இப்படி அவரவரும் தனியாகவோ, சேர்ந்தோ ஏதாவது தொண்டு செய்தே ஆக வேண்டும்.


வசவு தான் நல்லது செய்யும்

ஸ்தோத்ரத்தைவிட, புகழ்ச்சியைவிட வசவு தான் எப்போதும் ஒருவனுக்கு நல்லது செய்யும் புகழ்ச்சி கர்வத்தில் கொண்டுவிட்டு ஆத்ம ஹானிக்கருத்தான் வழி செய்கிறது. சிரிக்கச் சிரிக்க சொல்கிறவர் மற்ற பேர், அழ அழச் சொல்கிறவர் உற்ற பேர் என்று சொல்வதுண்டு.

ஆலய வழிபாடு

ஆலய வழிபாடு, நாம் தனிப்பட்ட, நம்மை உருப்பட வைத்துக்கொள்வதற்கு ஓர் உத்தியேயன்றி சமூகம் முழுவதும் மோஷம் பெறுவதற்காக அல்ல. கூட்டாக பூஜைகள், உத்ஸவங்கள், கும்பாபிஷேகங்கள் செய்வதன் நோக்கமே வேறு. பொதுவில் ஆலாயத்திலிருந்து பெறும் சக்தியைத் தனி வாழ்க்கையின் அநுஷ்தான சுத்தத்தால் விருத்தி செய்து கொள்வதாகவே நம் மதம் இருக்கிறுது. அவனவன் சுத்தமாக் அனுஷ்தான்ம் பண்ணித் தன்னைத் தானே கடைத்தேற்றிக் கொள்வதற்கான சக்தியையும் கோயிலுக்குப் போய் வேண்டி வேண்டியே பெறலாம்.

இரைச்சலில் அமைதி

கோயிலில் அவரவர்களும் இரைச்சல் போட்டுக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டிருப்பதற்கு லைசென்ஸ் தந்ததாக அர்த்தமில்லை. சாஸ்த்ரோக்தமாக அனுமதிக்க்ப்பட்டிருக்கும் ஓசைகளுக்கே மணி அடிப்பது, வேத கோஷம், தேவராம், பஜனை, மேளம், புறப்பாட்டில் வெடி- போற்றவற்றுக்கே, மௌனத்த்யானத்தில் ஒருவனை ஈடுபடுத்தும் அபூர்வ சக்தி உண்டு. இம்மாதிரி சப்தங்களுக்கு நடுவில், ஸந்திதானத்தில் எதிரே ஜபம் பண்ண உட்கார்ந்துவிட்டால், சட்டென்று ஒரு லயிப்பு உண்டாகிவிடும்.

அடக்கம் தேவை

நாம் அல்ப சகதர்கள் என்ற அடக்கம் இருந்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். நம் மனது எதையும் நினைக்கிறது. நம்புத்தி பிரமிக்கும்படியான விஷயங்களைத் தெரிந்து கொள்கிறது. என்பதில் தலைகனத்துப் போக்கூடாது. புத்திப் பிராகசம் மநுஷ்ய ஜாதிக்கு நிறைய இருக்கலாம். ஆனால், புத்திக்கு மீறிய சக்திகளிடம் இந்த சாமர்த்தியத்தைக் காட்டி நாம் ஜபிக்கமுடயாது.

வேதப் பிரதி பாத்யமான, ஸாத்விகமான தெய்வ சக்திகள் மட்டும்தான் என்று இல்லை. ‘காத்து’ (காற்று) ”கருப்பு) என்று அநேக ஆவிலோக சேஷ்தைகளைச் சொல்கிறார்கள். இதெல்லாம் நுழையவிடாமல் காப்பாற்றும் காத்தவராயன், கருப்பண்ணன் முதலானவற்றுக்குங்கூட நாம் அடங்கினவர்ளை என்பதால் தான் பூசாரி, பூஜை செய்யும் கிராம தேவதைகளுக்கம் வருடத்தில் ஒரு நாளோ, தஙளகள் வீட்டில் கல்யாணம், கார்த்திகை என்றாலோ வழிபாடு நடத்தும் வழக்கம் தொன்றுதொட்டு ஏற்பட்டிருக்கிறது.


தவளை போன்று…

தவளை ஜலத்தில்தான் முட்டை போடும். அப்புறம் முட்டையிலிருந்து வெளியே வந்துவிட்ட பிறகும் சில காலம் மீன் மாதிரி ஜலத்தில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனைத் தனக்குள்ளே இழுத்துக்கொள்ளும் gills என்ற உறுப்பு மட்டும் தான் அப்போது தவளைக்கு உண்டு. அப்புறந்தான் அது வளர வளர, இந்த உறுப்பு எப்படி மறைந்தது என்றே தெரியாமல் தானாக மறைந்து, அதற்கு நிலத்திலே இருந்து கொண்டு காற்றில் உள்ள பிராணவாயுவை ச்வாஸிக்கக்கூடிய லங்ஸ் உண்டாகிறது. இப்படி ஹையர் ஸ்டேஜுக்கு – உயர்நிலைக்குப் -போகும்போது தானாகச் சடங்கு, மந்த்ரம் எல்லாம் நின்று போகும், அதற்காக ஆரம்பத்திலேயே இதெல்லாம் வேண்டாம். மனதின் சுத்தம் போதுமென்றால், அது தவளை முதலில் ஜலத்திலிருக்கும் போதே லங்க்ஸ் தான் வேண்டும் என்று தனக்க்உ இருக்கிற ச்வாஸ அவயத்தையும் விட்டுவிட்டால் என்ன ஆகும்? உயிரையும் விடவேண்டியதுதான்.

அன்ன தோஷம்

அன்னம் என்பதில் ப்ரோட்டீன், கார்போ ஹைட்ரேட், வைட்டமின் முதலியன மட்டும் இல்லை. அதைச் சமைத்தவர், தான்யமாகவும் இல்லை. காய்கறியாகவும் அதை விலைக்கோ, தான்யமாகவோ கொடுத்தவர். அதைப் பயிர் பண்ணியவர் ஆகியவர்களுடைய குணதோஷங்களுக்கும் அந்த அன்னத்தில் சூட்சூம்மாக டெபாஸிட் ஆகி சாப்பிடுவதற்குள் போகிறது. இவர்கள் தோஷமுடையவர்களாயிருந்தால், சாப்பிடுகிறவனையும் அந்த தோஷம் தொற்றிக் கொள்ளும் இதுதான் அன்ன தோஷம் என்பது.

வாழ்வில் நிம்மதி

சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. வியாபார வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌசீக நாகரிகத்தை விட்டு விட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால்
யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்க வேண்டியதில்லைழ பணத்துக்காகப் பறக்காத போது பகவத் ஸ்மரணத்திற்கு நிறைய அவகாசம் கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் திருப்தியும் சௌக்யமும் தன்னால் உண்டாகும். ஆடம்பரச் செலவு செய்து பூஜை செய்யவேண்டுமென்பதில்லை. காய்ந்த துளசி தளமும் வில்வ பத்திரமும் பூஜைக்குப் போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தை நிவேதனம் செய்தால் போதும்.


அகம்பாவம் வேண்டாம்.

அவதார புருஷர்களும் அம்பாளிடத்தில் அடங்கிப் போகிறார்கள் அப்படியிருக்க நமக்கு எதைப்பற்றியும் அகங்காரம் கொள்ள ஏது நியாயம்? நாம் நன்கு எழுதுகிறோம். பேசுகிறோம் என்று உலகம் புகழ்ந்து மாலைபோடுகிற சமயத்தில் தலைக்கனம் ஏறத்தான் செய்யும். அப்போது நம்க்குத் தகுதி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரமாகி அகம்பாவப்பட நமக்குக் கொஞ்சம் கூட உரிமையில்லை என்று உணரவேண்டும்.

அநுக்ரஹகம்

நாம் நல்லது என்று நினைக்கிற சௌபாக்கியங்கள் அம்பாள் தருகிறபோது மட்டும் கருணை என்று நினைக்கிறோம். அவற்றைப் பெற நமக்கு யோக்யதை இல்லாதபோது கூட அவன் அநுக்ரகிப்பதால் அதைக் காரணமில்லாத கருணை என்கிறார்கள். கஷ்டமோ ஒரு காரணத்துக்காக உண்டான, கருணை. நாம் பூர்வத்தில் செய்த தப்பு அதற்குக் காரணம். இந்த மாதிரி இனிமேல் செய்யக்கூடாது என்று உணர்த்துவதற்காக நம்மை நாமே நல்லவர்களாக்கிக் கொள்வதற்காக கஷ்டத்தைத் தருகிறாள். நமக்கு சௌக்யம் தந்து நல்லதைச் செய்கிற கருணையைவிட நம்மையே நல்லவர்களாக்கிக் கொள்ளச் செய்கிற கஷ்டம் தரும் கருணையே விசேஷமானது.

- காஞ்சி பெரியவர்

நன்றி:- தமிழ்தேசம்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 06, 2013 1:35 pm

* நாம் கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துஇருக்கிறோம். அவன் பக்கமாகவே நகர்ந்து போய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாக முயற்சிக்க வேண்டும்.

* வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினால், அதன் பின் நாம் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் அழகு ஏற்பட்டு விடும்.

* நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பது உத்தம குணம்.

* நம் துன்பங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் போல துன்பம் பரமலேசாகி விடும்.

* உணவு, உடையில் கூட எளிமையை நாம் பின்பற்ற வேண்டும். ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று மனிதன் எப்போதும் சுற்றித் திரிவது கூடாது.

* எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். அதனால் தான் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.


காஞ்சி மகாபெரியவர்

நன்றி தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக