புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_lcapநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_voting_barநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_lcapநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_voting_barநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_lcapநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_voting_barநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_lcapநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_voting_barநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_lcapநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_voting_barநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_lcapநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_voting_barநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_lcapநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_voting_barநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_lcapநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_voting_barநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_lcapநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_voting_barநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_lcapநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_voting_barநம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 12:32 pm

First topic message reminder :

* இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே கோயில்களை அமைக்கிறோம். ஆனால், பொதுவாக நம் குறைகளை நிவர்த்தி செய்து தரும்படியே பகவானிடம் வேண்டிக்கொள்கிறோம். சில சமயங்களில் நிவர்த்தி உண்டாகிறது. சில சமயங்களில் நம் விண்ணப்பம் நிறைவேறுவதில்லை.

* நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற் படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் அது வேண்டும் இது வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.

* விருப்பங்கள் நிறைவேற நிறைவேற, ஆசைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அதே நேரம், தம்மிடம் நம்பிக்கை இருக்கும்படியாக செய்வதற்காக, இறைவன் அவ்வப்போது, நம் விருப்பங்களை நிறைவேற்றியும் தருவார்.

* பகவானிடம் நம் விருப்பங்களை வேண்டி நிற்பதில் மேலான ஒரு நன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் நம் மனக்குறைகளை பகவானிடம் சொல்வதால் நமக்கு மனநிம்மதி உண்டாகிறது. நாம் சாமான்யர்களாக இருக்கும்வரையில் நம் குறைகளை நிவர்த்திக்க பிரார்த்திப்பதும், நமக்கான விருப்பங்களையும், வரங்களையும் வேண்டிக்கேட்பதிலும் தவறொன்றும் இல்லை. வெறும் குறைகளையும், வரங்களையும் மட்டுமே கேட்கத் தொடங்கிய நாம் இறுதியாக சரணாகதி நிலைக்கு தயாராகி நம்மையே அவரிடம் கொடுப்பதற்காகத் தான்.


நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 12:37 pm

பரிகாரத்தை விட உயர்ந்தது எது? - காஞ்சி மகா பெரியவர்

* குழந்தையாகவே இருக்க வேண்டும் என்று உபநிஷதம் கூறுகிறது. காரணம் குழந்தைப்பருவம் கபடம் இல்லாததுடன், கடவுளுக்கும் ஒப்பானதாகும்.

* இறைவனை நினைத்துச் செய்யும் எந்தச் செயலுக்கும் பயன் உண்டு. அறியாமல் செய்தால் அதற்கும் பலன் உண்டு,

* பழைய தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதை விடப்புதிதாக தவறேதும் செய்யமால், பாவம் செய்யாமல் வாழ வேண்டும்.

* ஒவ்வொரு மனிதனிடமும் இறைவன் குடி கொண்டுள்ளார். ஒருவரை வணங்கும் போது இறைவனை வழிபடுவதாக அர்த்தமாகிறது.

* அன்பு அனைவரிடமும், பொறுமை தப்பு பண்ணுகிறவனிடமும், பொறாமையின்மை நம்மை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறவனிடமும் கொண்டிருக்க வேண்டும்.

* பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்வதிலும் தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால், உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.




ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 7:13 pm

பேச்சைக் குறைப்பது எப்படி? - காஞ்சி மகா பெரியவர்

* தொண்டு செய்வதால் நமக்கென்ன பயன் என்று எண்ணுகிறார்கள். ராமாயண அணில் நமக்கெல்லாம் உதாரணம். பாலம் செய்யும் பணியில் தன்னால் முடிந்த மணலைக் கொண்டு சேர்த்த அணிலைப் போல நம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.

* கடவுள் அருள் என்பது எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. ஆனால், நம் மனம் கல்லாக இருந்தால், நீருக்குள் இருக்கும் கல் போல நம்மால் இறையருளை உணர முடிவதில்லை.

* நம் வேலையை நாமே செய்து கொள்வதை கவுரவக் குறைச்சலாக நாம் நினைக்கிறோம். உண்மையில், நம் வேலையை நாம் அடுத்தவரிடம் செய்யச் சொல்வது தான் கவுரவக் குறைச்சல்.

* குடும்பத்தை புறக்கணித்துவிட்டு சேவை செய்வதால் பயனில்லை. குடும்பத்திற்கு சேவை செய்வது தான் முதல் கடமை. பெற்ற தாயை பிச்சை எடுக்கச் செய்துவிட்டு கோதானம் செய்வதெல்லாம் அதர்மம்.

* எண்ணத்தை நிறுத்தப் பழகினால் மட்டுமே வேண்டாத பேச்சுக்களை நம்மால் குறைத்துக் கொள்ள முடியும். எண்ணமும் பேச்சும் கட்டுக்குள் வந்தால்தான் பயனுள்ள செயல்களில் நம் கவனம் செல்லத்துவங்கும்.


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 7:17 pm

நியாயமாக சம்பாதியுங்கள் - காஞ்சி பெரியவர்

* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்க வேண்டும்.

* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது. எளிமை தான் நிம்மதிக்கு வழிவகுக்கும் என்பதை உணருங்கள்.

* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி, அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.

* பாவம் நீங்க ஒரே வழி தியானம் செய்வது தான். தியானத்திற்காக தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். அதே நேரம் புதிதாகப் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.

* "ஹரஹர' என்று ஜெபிப்பதால் துன்பம் நீங்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிம்மதி தேடி எங்கெங்கோ அலைகிறோம். இருக்குமிடத்தில் இதை செய்ய மனம் மட்டும் ஒத்துழைத்தால் போதும்.


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 7:22 pm

கல்வியின் நோக்கம் என்ன? -காஞ்சி பெரியவர்

கல்வியின் பயன் மெய்ப்பொருளாகிய ஆண்டவனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால், இந்தக்காலத்தில் படிக்கிறவர்கள் பலபேருக்குத் தெய்வ பக்தியே இல்லை. அதுதான் அடிப்படையான குறை.

கல்வியறிவினால் கிடைப்பது அடக்கம். கல்வியின் முதற்பயனாக வினயம் ஏற்பட வேண்டும். இதனால் பழைய நாளில் மாணவனுக்கு 'வினேயன்' என்றே பெயர் இருந்தது. இன்று நிறைய பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. போதாததற்கு 'ஷிப்டு' முறை வேறு வைக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் அடக்கம் ஏற்படவில்லை.

நம்முடைய தேசத்துப் பெண்களின் இயற்கையான குணம் அடக்கம். படிக்கிற பெண்களுக்குச் சுபாவமான அடக்க குணத்தோடு, கல்வியின் பயனாக பின்னும் அதிக அடக்கம் ஏற்பட வேண்டும். ஆனால், சுபாவமாக அடங்கியிருக்கும் பெண்களுக்குக்கூட, அதிகமாகப் படித்துவிட்டால், அந்த சுபாவம் போய்விடுகிறது. குணத்தைக் கொடுக்க வேண்டிய படிப்பு குணத்தைக் கெடுத்து விடுகிறதே! அது ஏன்?

முற்காலத்தில் மாணவர்கள் குருகுல வாசம் செய்தார்கள். அங்கே ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்? எல்லாவற்றையும் முன்னோர் வகுத்த நீதிநூல்கள் வகைப்படுத்தி வைத்திருக்கின்றன. மாணவர்கள் குருவுக்கு அடங்கி, பிரம்மச்சாரியக வாழவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்திருக்கிறது. சிஷ்யன் பிச்சை எடுத்துத் தானும் உண்டு, குருவுக்கும் கொண்டு வந்து அளிப்பான். அதனால் அவனுக்கு அகங்காரம் கரைந்து வினயம் ஏற்பட்டது. குருவுடனேயே இருந்ததால், அவரிடம் உண்மையான பிரியம் ஏற்பட்டது. அவருக்கும் இவனிடம் இயல்பாகவே பிரியம் ஏற்பட்டது.


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 7:30 pm

நிம்மதிக்கான வழி இது தான் - காஞ்சி பெரியவர்

* நாம் எல்லோரும் கடவுளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். ஞானம் என்பது என்ன? பரம்பொருளாகிய கடவுள் மட்டுமே உண்மை, மற்றதெல்லாம் மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பது தான்.

* பரம்பொருள் என்னும் ஒன்று தான் உலகத்தில் உள்ள அத்தனைப் பொருளுமாக இருக்கிறது. எல்லாப் பொருட்களையும் கடவுளாகவே பார்க்க வேண்டும். இதை விடுத்து அந்தப் பொருட்களை அதன் உண்மை இயல்புக்கேற்ப மனதைச் செலுத்தினால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட கஷ்டங்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.

* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.

* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை.


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 10:53 am

சகிப்புத்தன்மையை வளருங்கள் - காஞ்சி பெரியவர்

* நம் உடல், அணிந்திருக்கும் ஆடை, குடியிருக்கும் வீடு ஆகியவை மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

* வாக்கினால் (நம் இனிய பேச்சால்)புண்ணியம் செய்ய வேண்டும். அது நமக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் துன்பம் வராமல் துணைநிற்கும்.

* பணம் நமக்கு எப்போதும் துணை நிற்காது. ஆனால், புண்ணியச் செயல்களால் செல்வத்தை "தர்மம்' என்னும் நோட்டாக மாற்றிவிட்டால் எந்தக் காலத்திலும் துணைநிற்கும்.

* மனம் நமக்கு கட்டுப்பட்டு அடிமையாவதையே "யோகம்' என்று குறிப்பிடுவர். அதைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் நம்மால் எவ்வளவோ விஷயங்களைச் சாதிக்க முடியும்.

* அறிவியலால் நன்மை உண்டாவது போல, ஆபத்தும் அதிகமாகிக் கொண்டே போகிறது. பக்தியும், அமைதியுமே இந்த ஆபத்தை நீக்கும் மருந்து.

* நம்மை ஒருவர் துன்புறுத்தும்போது அதை சகித்துக் கொண்டு அவரை மன்னிப்பது தான் பொறுமை. ஆனால், இதை கடைபிடிப்பது கஷ்டம்.


நன்றி:- தினமலர்




ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 11:01 am

* மாணவர்கள் தெய்வபக்தி, குரு பக்தி, பெற்றோர் பக்தியுடன் கல்வியில் கவனம் செலுத்தினால் பகவான் கற்பதற்கான ஞானத்தை அளிப்பார்.

* அன்பும், தர்மமும் நிறைந்த பகவானின் அருளை நினைத்து நன்றி செலுத்தினால் மனஅழுக்கு நீங்கி விடுகிறது. புண்ணியஸ்நானம் செய்த பலன் கிடைக்கிறது.

* அன்பும், சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கும் ஒரு பசுவைப் பார்த்தால், பெற்ற தாயைப் பார்ப்பது போன்ற உணர்ச்சி அனைவருக்கும் தோன்றும்.

* செல்வந்தராகவும், புத்திசாலியாகவும் இருந்தாலும் பகவானின் அருள் இருந்தால் தான் வாழ்க்கையில் சந்தோஷமும், சகல பாக்கியமும் கிடைக்கும்.

* பகவானின் பாத கமலங்களை விடாமல் பிடித்துக் கொண்டு, ""எனக்கு வேறு கதியில்லை; நீ தான் நல்ல வழி காட்ட வேண்டும்,'' என்று வேண்டினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

* சமுதாயத்தில் நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பது கடினமாகத்தோன்றலாம். பகவானின் அருளைத் துணையாகக் கொண்டால் எளிதாக சாதிக்கலாம்.




ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 11:06 am

* ஒருவர் எடுத்த செயலில் வெற்றி பெற்றுவிட்டால், அவரை போற்றுபவர்கள் இச்செயலை அவர் சிரத்தையுடன் (கவனமாக)செய்தார், அதனால்தான் வெற்றி பெற்றார் என்று சொல்லித்தான் பாராட்டுவர். சிரத்தை என்ற சொல்லிலேயே அவர் மிகவும் நம்பிக்கையாகவும், கடுமையாகவும் உழைத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, நம்பிக்கையுடையவர்களாக இருங்கள்.

* எல்லா மதங்களும் நல்லவர்கள் நன்மையே அடைவார்கள் என தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறையில், பாவம் செய்பவர்கள் நல்ல நிலையிலும், புண்ணியம் செய்பவர்கள் துன்ப நிலையிலும் வாழ்வதைக் காண்கிறோம். அதற்காக மதங்கள் சொல்வதைப் பொய் என்று எண்ணக்கூடாது. ஒரு பிறவியில் பாவம் செய்வதன் கர்மபலனுக்கு ஏற்ற வாழ்க்கை, அந்த பிறவியிலேயே கிடைத்துவிடும் என்பதில்லை. அதற்கான பலன் மறுபிறவியிலும் கிடைக்கலாம். பாவம் செய்பவன் நன்றாக இருக்கிறான் என்றால், அவன் முற்பிறவியில் புண்ணியம் செய்தவனாக இருந்திருக்கலாம். இதைப்போலவே, புண்ணியம் செய்பவன் முற்பிறவியில் செய்த பாவத்திற்கேற்ப பாவத்தை அனுபவிக்கிறான். இதுவே உண்மையும் ஆகும்.

* எந்த செயலையும் முடியவில்லை அல்லது சரியாக செய்ய முடியாது, அல்லது வெற்றி காண முடியாது என்று எண்ணி துவங்காதீர்கள். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். எடுத்த செயலில் வெற்றிக்காக போராடுங்கள். லட்சியத்துடன் அதனை அடைவதற்கான முயற்சியை அதிகப்படுத்துங்கள்.


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed May 16, 2012 11:39 am

ungal padhivukku nanri! baalaakaarththik.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 12:55 pm

rameshnaga wrote:ungal padhivukku nanri! baalaakaarththik.

நன்றி நாகா சார்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக