புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
81 Posts - 63%
heezulia
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
226 Posts - 37%
mohamed nizamudeen
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_lcapவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_voting_barவலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 3:44 pm

இவர் படமல்ல; பாடம்..!
குடந்தை கீதப்பிரியன்
First Published : 22 Apr 2012 01:02:46 AM IST
வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  Valampuri-150

ஒரு பறவை பறந்து போகிறது. அது பறக்கும்போது இறகுகள் அங்கங்கே உதிரத்தான் செய்யும். உடனே, பறக்கிற பறவை கீழே இறங்கி வந்து, தன் அழகான அந்த இறகுகளை கொத்திக் கொத்தி சேகரித்துக் கொண்டிருந்தால் பயணம் தடைபட்டுப்போகும். எனவே, இழப்புகளை எண்ணாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

÷பெரிய நதி போகிறது. தன் பாதையை அது தானே அமைத்துக்கொண்டு போகுமே தவிர, பாதை வெட்டுவதற்காக மண் வெட்டியும், கடப்பாரையும், கூடையும் கூடவே கொண்டு போகாது. எனவே, எவ்வளவு வலிமையோடும், திறமையோடும் வேகத்தோடும் வாழ்க்கையில் நகர்கிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி பெறமுடியும்'' - இது வலம்புரிஜானின் வரிகள்.

÷வலம்புரிஜான் - 58 வயதில் தனது எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்காற்றிய தொண்டு மிக அசாதாரணமானது. அருவிச் சரளத்துடன் அவர் ஆற்றிய உரைநடைத் தமிழ் தனித்து அளவிடப்பட வேண்டியது. வலம்புரிக்கு வார்த்தைகள் செல்லக் குழந்தைகள்!

÷அரசியலில் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட மொழியின் சுவைக்காக வலிந்து அவரைத் தேடிப் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இலக்கிய எழுத்து அவரை உயர்த்திக் காட்டிய அளவிற்கு அரசியல் அவரை சந்தேகக் கண்கொண்டே பார்த்தது. எல்லா தரப்பு அரசியலிலும் அவர் தள்ளப்பட்டார்; அடிபட்டுப்போனார்; காயப்பட்டார். அதற்காக அவர் சாகும் வரையில் சங்கடப்பட்டதில்லை. வெளிப்படையாகப் பேசும் அரசியல்வாதிக்கு நிகழும் இயல்பான பிரச்னையாகவே அதனை அவர் எடுத்துக்கொண்டார். தன்னைக் குறை சொன்னவர்களைக் கூட வருத்தமில்லாமல் கொண்டாடுவார். கோபம் வந்தால் எரிமலையாய் கொந்தளிப்பார். பழகியவர்கள் பக்குவமாகச் சொன்னால், தன் தவறை ஒப்புக் கொள்ளவும் தயங்கமாட்டார். இந்த விஷயத்தில் சிறியவர்-பெரியவர் என்ற பாகுபாடு கிடையாது.

÷வாழ்க்கையில் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் சேமிக்கத் தெரியாத சிற்பி இவர். அறிமுகமற்ற எழுத்துலக இளைஞர்களைக் கூட அரவணைப்பார்; புகழ்ந்து தள்ளுவார்! இவரால் பயனடைந்தவர்கள் பட்டியல் ஏராளம்!

÷இவரது இயற்பெயர் டி.சி.ஜான். கடற்கரை கிராமமான நெல்லை மாவட்ட "உவரி'தான் இவர் ஊர். 8-ஆம் வகுப்பு வரை இங்கேயே படித்தார். வலம்புரி-வைகோ இருவரும் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி பட்டிமன்ற பேச்சாளர்கள். இந்தத் தோழமை இறுதிக் காலம் வரை தொடர்ந்தது.

÷தாய் வியாகுலம் - தந்தை தேவசகாயம் இருவருமே இவரது மிகச் சிறிய வயதில் தவிக்கவிட்டுப் போனவர்கள். தன் தாயாரின் சிறிய புகைப்படம் ஒன்றை பெரிதாக்கித் தருவதாக வாங்கிச்சென்ற ஓர் இளைஞரை வெகுகாலம் தேடித்தேடி அலைந்தார். ""அந்த உருவத்தை என்னால் ஓவியமாகத் தீட்டக்கூட முடியவில்லையே'' என்று பலகாலம் ஆதங்கப்பட்டு, அழுது புலம்பினார்.

÷வலம்புரிஜானின் மூத்த சகோதரர் பெயர் ஆல்பிரட். இன்னொரு சகோதரர் மோகன். சின்னஞ்சிறு வயதில் தாய்-தந்தையரை இழந்த வலம்புரிஜானை இந்த இரு சகோதரர்களுமே மாறி மாறி வளர்த்துள்ளனர். ஓரளவு படித்து முடித்ததும், தமிழ்ப் பேராசிரியர் வளனரசு பரிந்துரையால் முதன் முதலில் இராம.சுப்பையரின் (தினமலர்) சந்திப்பு கிட்டி, 100 ரூபாய் சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. அந்த வேலையும் அதிக நாள் நீடிக்கவில்லை. அங்கிருந்து விலகி, திருவள்ளூர்-திருத்தணி பாதையில் உள்ள "பாண்டூர்' என்ற ஊருக்கு வந்தார். "காபிள்' என்கிற ஆங்கிலப் பள்ளியில் இவருடைய மாமா ஒருவரின் உதவியால் ஆங்கில ஆசிரியரானார்.

"முரசொலி'யில் அவர் எழுதிய கட்டுரைகள் அவருக்காகவும் "முரசொலி' வாங்கப்படும் அளவுக்கு வரவேற்பு பெற்றன. அவரது எழுத்தால் ஈர்க்கப்பட்ட அன்றைய முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி, வலம்புரிஜானை 1974-இல் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியது இன்றுவரை பேசப்படும் சர்ச்சைக்குரிய விஷயம்.

சத்தியவாணி முத்து அம்மையாரிடம் தளபதியாக ஒரு காலகட்டத்தில் அரசியலில் வளைய வந்தபோது, வலம்புரிஜானை அடையாளம் காட்டியது என்னமோ அவரது தமிழும் சிந்தனைச் செறிவும்தான்.

÷காலம் அவரை கருணாநிதியிடமிருந்து பிரித்து எம்.ஜி.ஆரிடம் கரை ஒதுங்க வைத்தது. இன்றைய முதல்வர் ஜெயலலிதா அரசியல் பிரவேசத்தை ஒட்டித் தொடங்கப்பட்ட "தாய்' வார இதழுக்கு எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்த ஆசிரியர் வலம்புரிஜான். தமிழ் இதழியல் சரித்திரத்தில் பல புதுமைகளைத் "தாய்' வார இதழ் நிகழ்த்திக் காட்டியது. புதுக்கவிதைகளுக்கு வார இதழில் முன்னுரை அளிக்கப்பட்டது வலம்புரிஜானின் "தாய்' வெளிவந்த பிறகுதான்.

1984-இல் எம்.ஜி.ஆரால் 2}வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார்.

÷உறவுப் பெண்ணான "பானுமேரி' என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை.

÷ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். என்றபோதிலும், மூகாம்பிகை பற்றிய "அந்தக இரவில் சந்தன மின்னல்', காஞ்சி மகாபெரியவர் பற்றிய "சொர்க்கத்தில் ஒரு நாள்', சகோதரி அல்போன்ஸ் அம்மையார் பற்றிய "கேரள நிசப்தம்', "பாரதி ஒரு பார்வை', "நான் கழுதையான போது...' ஆகியவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். ஏனெனில், இவை அனைத்துமே முரண்பாடுகளுக்கு நடுவே பூத்த முத்துக்கள்!

÷""ஆளில்லா காட்டுக்குள்ளே ஆயிரம் பூ பூக்கிறது - ஆருமில்லை பார்ப்பதற்கு அப்புறம் ஏன் பூக்கிறது? - என்ற பழம்பாடலை மேடைகளில் சொல்லி, மனிதன் தான் பாராத இடங்களில் பூக்கள் பூப்பது ஏன்? என்று கேட்கிறான். இது அறிவின் ஆணவம்! மனிதன் பாராத இடங்களிலும் பூச்சிகள், பறவைகள், நதிகள் பார்க்கின்றன; இதனை உணர்வது ஞானம். அறிவில் ஆரம்பித்து ஞானத்தை நோக்கி நகர வேண்டும்'' என்பார் இந்த ஞானபானு!

இவர் சொந்தமாக நடத்திய வார இதழ் "சப்தம்'! இதில் உடன் எழுதிக் கொண்டிருந்தவர் விமர்சகர் எம்.எஸ்.தியாகராஜன்.

÷நாடாளுமன்றம் செல்லும் காலத்தில் அதன் நூலகத்திலேயே பெரும் பொழுதைக் கழிப்பார் வலம்புரிஜான். மூகாம்பிகை வழிபாடு - கானூரில் இவர் நிகழ்த்திய இந்து ஆலய குடமுழுக்கு போன்றவை சமய ஒற்றுமைக்குச் சான்று. ஆயினும் இது அவரது மதம் சார்ந்த குடும்பத்துக்குள் சங்கடங்களை ஏற்படுத்தியது என்பதை நெருங்கிய வட்டாரங்கள் அறியும்.

÷பயணம்தான் இவருக்குப் பிடித்த - மிகப்பெரிய பொழுதுபோக்கு. வெளியே போகும்போது எழுதக் காகிதங்களும், கை கொள்ளாத அளவுக்கு நூல்களையும் எடுத்துப்போவார் அல்லது வாங்கிக் கொள்வார்.

÷ 2005-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி அதிகாலை புத்தகப் புழுவான வலம்புரிஜானை மரணம் தழுவிக்கொண்டது.

÷""வரலாறு என்பதே தேதி மாதங்களின் தொகுப்பாகிப்போனது. வரலாறு எழுதுகிறவர்கள் கூட அவரவர் விருப்பத்திற்கல்லவா இலக்கியம் எழுதுகிற மாதிரி வரலாறு எழுதுகிறார்களே!'' என்பார் ஏக்கத்தோடு வலம்புரிஜான். இது எத்தனை உண்மை! அவரது மரணத்திற்குப் பின் அவரது கல்லறை வாசலில் பேசிய நண்பர்களின் பேச்சு நாளிதழ் ஒன்றில் முழுமையாக வந்துள்ளது.

÷""சிங்கம் செத்துக் கிடந்தாலும் நரி அதன் கம்பீரத்தைக் களவாட முடியாது'' என்பார் வலம்புரிஜான்! அவர் வாக்கு முற்றிலும் உண்மை!÷மரணத்திலிருந்து ஒரு மனிதனை தரிசிக்க முடிகிறது என்பதை மகத்தானதாக நான் கருதுகிறேன்.

தினமணி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 23, 2012 4:58 pm

தகவல்களுக்கு நன்றி.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 5:01 pm

முஹைதீன் wrote:தகவல்களுக்கு நன்றி.

மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Apr 24, 2012 6:45 am

ஒரு பறவை பறந்து போகிறது. அது பறக்கும்போது இறகுகள் அங்கங்கே உதிரத்தான் செய்யும். உடனே, பறக்கிற பறவை கீழே இறங்கி வந்து, தன் அழகான அந்த இறகுகளை கொத்திக் கொத்தி சேகரித்துக் கொண்டிருந்தால் பயணம் தடைபட்டுப்போகும். எனவே, இழப்புகளை எண்ணாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

÷பெரிய நதி போகிறது. தன் பாதையை அது தானே அமைத்துக்கொண்டு போகுமே தவிர, பாதை வெட்டுவதற்காக மண் வெட்டியும், கடப்பாரையும், கூடையும் கூடவே கொண்டு போகாது. எனவே, எவ்வளவு வலிமையோடும், திறமையோடும் வேகத்தோடும் வாழ்க்கையில் நகர்கிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி பெறமுடியும்'' - இது வலம்புரிஜானின் வரிகள்.[code]

சூப்பருங்க அருமையிருக்கு

வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  154550வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  154550வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  154550வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  154550வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Tue Apr 24, 2012 11:14 am

பகிர்விற்கு நன்றி.. சூப்பருங்க தொடருங்கள்..

வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -  Image00045y
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 11:39 am

"சிங்கம் செத்துக் கிடந்தாலும் நரி அதன் கம்பீரத்தைக் களவாட முடியாது''
சூப்பருங்க வார்த்தை சித்தர் ........ நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக