புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_m10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_m10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_m10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_m10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_m10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10 
1 Post - 2%
Shivanya
மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_m10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10 
1 Post - 2%
Karthikakulanthaivel
மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_m10மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 22, 2012 11:47 pm

நூல்... இந்த ஒற்றைச் சொல்லுக்குள் நுணுக்கமான பல கருத்துகள் அடங்கியிருக்கின்றன.

மனைக் கோட்டம் நீக்கவும், மரத்தின் கோட்டம் நீக்கவும் நூல் உதவும். அதுபோல் மனக் கோட்டம் நீக்கவும் புத்தகம் என்ற நூல் உதவும்.

`ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. ஆம்! ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மட்டுமல்ல, பயனுள்ள புத்தகங்களையும் தேடிப் படிக்க வேண்டும்.

தேடலில் உள்ள சுகம்... சுமையானதல்ல, சுகமானது!

புத்தகங்கள் காலமெனும் கடலில் கட்டப்பட்டிருக்கின்றன கலங்கரை விளக்கங்கள். இவை திசைகளைக் காட்டும். திசைகளைத் தெரிந்துகொண்டால் தேடுவது கிடைத்துவிடும்.

அந்தத் தேடல் இன்றைக்கு எங்கே போனது?

சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள் என்றால் நம்மில் பலர் இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காமல் தடுமாறுகிறோம். ஏன் இந்தத் தடுமாற்றம்?

சினிமாவைப் பற்றி, கிரிக்கெட்டைப் பற்றி மணிக் கணக்காக, நாள்கணக்காகப் பேச நேரமிருக்கிறது. வாசித்த புத்தகங்களைப் பற்றி எத்தனை பேரிடம் பேசியிருப்போம்?

`ஒரு மனிதன் எத்தனை புத்தகங்கள் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்' என்றார் ஹென்றி டேவிட் தாரோ. வாழ்தலின் அடையாளம் புத்தகங்கள்.

வாசிக்காத நாட்களெல்லாம் சுவாசிக்காத நாட்கள்

உயிர் வாழ்வதற்கு காற்றைச் சுவாசிக்கிறோம். அதைப் போல முறையாக வாழ்வதற்கு நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

அறிவை விரிவு செய்வதற்கும், புரட்டிப் போடுகின்ற வாழ்க்கையின் ராட்சதச் சுழற்சியில் உலர்ந்து போகின்ற மனசை ஈரப்படுத்திக்கொள்வதற்கும், வற்றிப் போய்க்கொண்டிருக்கிற இதயத்தில் அன்பு, ஈகை, கருணை, பாசம், பரிவு போன்ற நல்லுணர்வுகளை மெல்லுணர்வுகளாக மாற்றிக்கொள்வதற்கும் புத்தக வாசிப்பு பயன்படுகிறது.

வாசிப்பின் மூலம் பல சாதனைகள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. அதனால்தான் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் புத்தகம் படிக்கும் மாதம் ஒன்றை அறிவிக்கிறார்கள். அமெரிக்காவில் வருடந்தோறும் பத்து சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஆஸ்திரேலிய அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளையில் புத்தக வாசிப்பு நேரம் ஒன்றைக் கடைப்பிடிக்கிறார்கள்.

சினிமா வந்தது, இன்டர்நெட் வந்தது, இனிமேல் புத்தகங்களின் காலம் முடிந்தது என்று யாரும் புலம்பத் தேவையில்லை. அவை இரண்டும் புத்தகத்தின் இடத்தைப் பிடிக்க முடியாது.

புத்தகம்தான் கற்பனை செய்ய அனுமதிக்கிறது. இணையம் வெறும் தகவல் தரும் சாதனமாக மட்டுமே இருக்கிறது. மனதை ஊடுருவும் வல்லமையை அது இன்னமும் அடையவில்லை. காரணம், புத்தகத்தை நாம் தொட்டு உணர்கிறோம்.

தோழனே இது
புத்தகம் அல்ல
இதைத் தொடுபவன்
மனிதனைத் தொடுகிறான்
நீயும் நானும்
நெருக்கமாகிறோம்
இதோ!
இதன் பக்கங்களிலிருந்து நான் உன்
கைகளுக்குத் தாவுகிறேன்


என்கிறான், புதுக்கவிதையின் பிதாமகன் வால்ட் விட்மன். ஆம்! எல்லைகளையும் காலங்களையும் கடந்து இதயங்களை ஒன்றிணைக்கும் நட்புப் பாலம் புத்தகங்கள்.

மழை பொழிகையில் மண் வாசத்தை நுகர்வதைப் போல வாசிப்பின் மூலம் புத்தக மணத்தையும் நுகரலாம். அதன் மணம் எழுத்துக்கு ஏற்ப, எழுத்தாளனுக்கு ஏற்ப இதயத்தை வருடும். நல்ல வாசிப்பின் மூலம் அதை உணரலாம்.



மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 22, 2012 11:48 pm

புத்தகங்கள் கலங்கரை விளக்கங்கள்

புத்தகங்கள் ஞானம் தரும் போதிமரங்கள். கருத்துகள் பிறக்கும் பிரசவ அறை. வரலாறு உயிர்த்தெழும் உன்னத இடம். இவற்றோடு புத்தகங்கள் கலங்கரை விளக்கங்கள். ஆம்! இருட்டில் பயணிப்பவர்களுக்கு வெளிச்சம் காட்டும், வெளிச்சத்தின் வழி திசை காட்டும்.

அறிவு என்ற வார்த்தைக்கு இணையான சொல் புத்தகம் மட்டுமே. புத்தகம் புதுமையையும் படைக்கும், புரட்சியையும் படைக்கும். உலகில் பெரிய மாறுதல்களைப் போர்க்களங்கள் மட்டும் செய்யவில்லை. புத்தகங்களும் செய்திருக்கின்றன.

18-ம் நூற்றாண்டு புத்தகங்களின் பொற்கால நூற்றாண்டு. ரூசோவும், வால்டேரும், போமர்சேவும் தங்களின் கருத்துகளால் பிரான்சிலும், ஐரோப்பாவிலும், ஏன், உலக அளவிலும் மாற்றங்களை ஏற்படுத்தினர்.

கோபர்நிக்கஸ், கலிலியோ, ஐசக் நிïட்டன் ஆகியோரின் புத்தகங்கள் வந்திருக்காவிட்டால் இன்று நாம் காட்டுமிராண்டிகளாகத் திரிந்திருப்போம். மனிதர்களை மனிதம் நிறைந்தவர்களாக, புனிதம் நிறைந்தவர்களாக மாற்றுபவை புத்தகங்கள்தான்.

மாற்றங்கள் தந்த புத்தகங்கள்

வெள்ளைத்தாளுக்கு இரண்டு இடங்களில் மதிப்பு கூடுதலாகிறது. ஒன்று, பணமாகிறபோது. மற்றொரு இடம், புத்தகமாக மாறுகிறபோது. வாழ்க்கையை நேசிப்பவர்கள் புத்தகங்களை நேசிப்பவர்கள். புத்தகங்களில் புதையல்கள் புதைந்து கிடக்கின்றன. கடலுக்குள் மூழ்கி மூச்சடக்கி முத்தெடுப்பதைப் போல புத்தகங்களிலும் முத்தெடுக்கலாம். அப்படி எடுத்த சிலர் மகான்களாகவும், மகாத்மாக்களாகவும், ஞானிகளாகவும் மாறியிருக்கிறார்கள். சமூக வரலாற்றை மாற்றியிருக்கிறார்கள்.

காரல் மார்க்ஸின் 33 ஆண்டு கால உழைப்பில் உருவான `மூலதனம்', உழைக்கும் வர்க்கத்தை உயர்த்திப் பிடித்தது.

ரூசோவின் புத்தகங்கள்தான் லியோ டால்ஸ்டாயின் உள்ளத்தில் ஞானியாகும் எண்ணங்களை உருவாக்கின.

டால்ஸ்டாயின் `போரும் அமைதியும்', சமூக மாற்றத்தின் சாட்சியாகத் திகழ்கிறது.

`அங்கிள் டாம்' என்ற புத்தகம்தான் கருப்பின மக்களுக்கு விடியலைப் பெற்றுத் தந்தது.

`கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற புத்தகம்தான் மோகன்தாஸ் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது.

சேக்கிழார் எழுதிய `பெரிய புராணம்' தான் திருச்சுழியில் பிறந்த வெங்கட்ராமனை மகான் ஸ்ரீ ரமண மகரிஷியாக மாற்றியது.

ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள்

`உங்களுக்குள் உறைந்திருக்கும் புனிதத்தைப் புத்தக வாசிப்பு மட்டுமே உருக வைக்கும்' என்றார் சிந்தனையாளர் பிரான்சிஸ் காப்கா.

வரலாறு நெடுகிலும், மாபெரும் தலைவர்கள் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வதிலும் மாபெரும் மனிதர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தியோடர் ரூஸ்வெல்ட் இறந்தபிறகு பார்த்தால் அவரது தலையணையின் அடியில் ஒரு புத்தகம் இருந்தது. கடைசிவரை பிறரது கருத்துகளை உள்வாங்கியவாறே அவர் இறந்துள்ளார்.

மாவீரன் நெப்போலியன் ஒருமுறை, `என் வாளின் வலிமையாலும் ஹோமர் காவியத்தின் துணையாலும் இந்த உலகத்தை வெல்வேன்' என்று கூறினான். அதைப் போல் வென்றான்.

இப்போது வாளின் வலிமை இல்லை. ஆனால் ஹோமரின் காவியம் நிலைபெற்று நிற்கிறது.

கம்பரும் வள்ளுவரும் இன்று இல்லை, ஆனால் அவர்கள் எழுதிய படைப்புகளில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இறந்த காலத்தை நிகழ்காலமாக மாற்றும் சக்தி புத்தகங்களுக்கே உண்டு.

அறிவுப் புதையலாக இருக்கின்ற புத்தகத்துக்கான தினம்தான் ஏப்ரல் 23, உலக புத்தக தினம்.

முன்பெல்லாம் இளைஞர்களின் கைகளில் புத்தகங்கள் இருக்கும். ஆளுமை சம்பந்தப்பட்ட அடையாளமாக அது இருக்கும். இன்றைக்கு எங்கே அந்த இளைஞர்கள்?

மோசம் செய்யாத நல்ல நண்பன் புத்தகம் என்பதை மறந்துவிடாதீர்கள். புத்தகங்கள் உங்கள் வழிகாட்டியாக, நண்பனாக இருக்கட்டும். அறிவுப்போட்டி நிகழ்ந்துகொண்டிருக்கிற காலம் இது. படிக்கும் வழக்கம் இல்லாதவர்கள் பின்தங்கிப் போகிறார்கள்.

வாசிப்பு என்பது ஓடும் நதியைப் போல. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும். அது இன்னொரு புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும். முடிவில்லா அந்த நதியில் மூழ்கி சுகங்களை அனுபவிக்கலாம். நல்ல புத்தகங்களை நாளும் வாசிப்போம், வாழ்க்கையை நேசிப்போம்!

பேராசிரியர் க.ராமச்சந்திரன்



மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 22, 2012 11:52 pm

நல்ல ஒரு புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்...... இணையம் புத்தகத்தின் இடத்தை எடுத்துக்கொள்ளவில்லை தான், ஆனாலும் புத்தகங்கள் மென்நூல் வடிவில் உள்ளதே? நல்ல பதிவு இது. சிவா அன்பு மலர்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 23, 2012 9:03 am

நல்ல ஒரு புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.....
சியர்ஸ்

நல்ல தகவல்கள் சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 23, 2012 9:15 am

புத்தகங்களை பற்றிய விரிவான கருத்து பகிர்வுக்கு நன்றி சிவா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக