புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_m10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_m10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_m10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_m10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_m10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_m10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_m10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_m10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_m10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_m10செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வங்களை அள்ளித் தரும் அக்ஷய திருதியை


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 24, 2012 7:19 am




நந்தன வருடம் சித்திரை மாதம் 24ஆம் திகதி; செவ்வாய்க்கிழமை அக்ஷ்ய திருதியையாகும். இந்துக்கள் தமது வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் நல்ல நாள், நட்சத்திரம் என்று பார்த்துத் தொடங்குவர். அவர்கள் செல்வச் செழிப்பை அளிக்கும் நாளாக அக்ஷய திருதியையைக் கருதுகின்றனர். அதாவது அக்ஷய திருதியை மிகவும் புனிதமான நாள் என்றும் அந்நாளில் செய்யும் தான தருமங்கள் ஏழு பிறவிக்கும் தொடரும் என்றும் ஸ்வர்ண தானம் மிகவும் உயர்ந்தது என்றும் கருதுகின்றனர்.

இந்நாளில் பசு, தயிர், பால் போன்றவற்றையும் தானமாக அளிக்கலாம். ~அக்ஷ| என்ற சொல் அழிவற்றது. அதாவது நிலையானது என்பது. மிகவும் ஆக்கபூர்வமான செயலை ஆரம்பிக்கும் போது அல்லது பெறுமதி மிக்க பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அது வெற்றியைத் தரும் அல்லது அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தைத் தரும் என்பது நம்பிக்கையாகும்.

இத்தினமானது விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமனின் ஜனன தினமாக நம்பப்படுகிறது. மக்கள் இத்தினத்தில் விஷேட பூஜைகளை நடத்துவதுடன் விநாயகர் மற்றும் தேவி இலட்சுமியையும் வணங்குவர். br>
அக்ஷய தினம் தோன்றக் காரணமாக பல புராணக் கதைகளும் உண்டு. அதாவது மகாபாரதத்தில் பாண்டவர்கள் மிகவும் கஷ்டத்தில் துன்புற்ற வேளை கிருஷ்ணர் அள்ள அள்ளக் குறையாத அக்ஷ்ய பாத்திரத்தை வழங்கியதே இத்தினத்தின் வரலாறு என்றும், மற்றுமொரு கதையாக சுதாமா என்பவர் கிருஷ்ணரின் சிறு வயதுத் தோழனாவார். இவர் வறுமையில் வாடினார். எனவே சுதாமா ஒரு நாள் கிருஷ்ணரின் மாளிகைக்கு அவரிடம் நிதியுதவி பெறச் சென்றார். அப்போது அவரிடம் கிருஷ்ணருக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு ~அவல்| எனும் உணவைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. எனினும், அதனை கிருஷ்ணரிடம் கொடுப்பதற்கு சுதாமாவுக்கு வெட்கமாக இருந்தது. எனினும், கிருஷ்ணர் தாமாகவே அந்த அவலை வாங்கி மிகவும் ஆசையுடன் உண்டார். கிருஷ்ணர், விருந்தாளிகள் கடவுளுக்குச் சமமானவர்கள் என்ற ரீதியில் சுதாமாவை மன்னனைப் போன்று கௌரவித்தார். எனினும், சுதாமா தான் வந்த காரணத்தை கிருஷ்ணரிடம் கூறாது சென்று விட்டார்.

ஆனால், என்ன ஆச்சரியம்! சுதாமாவின் மண் குடிசை மாளிகையாக மாறியிருந்தது. குடும்பத்தவர்கள் அனைவரும் உயர்தர ஆடைகளுடன் காட்சியளித்தார்கள். அவரைச் சுற்றி எல்லாம் செல்வச் செழிப்பாக மாறியிருந்தது. தான் கேட்க நினைத்ததற்கு மேலாக சுதாமாவுக்கு கிருஷ்ணர் வழங்கியிருந்தார். எனவே இத்தினத்தை அக்ஷ்ய திருதியையாக அனைவரும் கொண்டாடுவது வழக்கமாகியுள்ளது.

அக்ஷய திருதியையின் போது தங்க ஆபரணங்களைக் கொள்வனவு செய்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகவுள்ளது.

தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்நாளில் தங்க ஆபரணங்களை வாங்கும் ஆவலில் இந்துக்கள் நகைக்கடைகளை நோக்கிப் படையெடுப்பர். நகைக் கடைகளிலும் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி:தொகுப்பு : கோ.பிரியா








[img][/img]



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 10:32 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:அக்ஷய திருதியையின் போது தங்க ஆபரணங்களைக் கொள்வனவு செய்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகவுள்ளது.

தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்நாளில் தங்க ஆபரணங்களை வாங்கும் ஆவலில் இந்துக்கள் நகைக்கடைகளை நோக்கிப் படையெடுப்பர். நகைக் கடைகளிலும் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாக , அதுவும் கேரளா ஆட்கள் தமிழகத்தில் நகைக்கடை வியாபாரத்தை பிடித்த பிறகே இந்த அக்ஷய திருதியை மிகவும் பிரபலமாக ஆனது , இதில் இந்துக்களின் நம்பிக்கையை யார் கலந்தது??

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 24, 2012 11:10 am



வீடு கட்ட வாஸ்த்து நாள், திருமணம் முடிக்க நல்ல முகூர்த்த நாள், குழந்தையை தொட்டிலில் விட நல்ல நாள், காதணி விழாவுக்கான நட்சத்திரம் என தேடும் இந்துக்களின் பாரம் பரிய வழக்கம் ஆபரணம் வாங்குவதிலும் ஏற்பட்டுள்ளது என்பதில் ஆச்சரியம் இல்லை. தங்க ஆபரணம், தங்க காசு, வெள்ளி பொருட்கள் என இந்த உகந்த நாளில் வாங்கும் போது கடன் பட்டு வாங்கக் கூடாது. நம்ம்டம் உள்ள சேமிப்பில், சக்திக்கு ஏற்றாற்போல் வாங்குவதில் தவறில்லை. இது ஒரு நல்ல சேமிப்பு. கண் மூடித்தனமாக விழுந்தடித்து தங்கம் வாங்கு என்று எவரும் சொல்லவில்லை . அர்த்தமுள்ள இந்து மதம்
எதயுமே கட்டாயப் படுத்தி முன்னேற்ற முடியாது. சமயம் சார்ந்து நாட்களின் பலன் கருதி சொல்வதில் தவறில்லை என கருதுகிறேன். ராஜா கூறும் செய்திகளும் கோட்பாடுகளும் சிறப்புதான்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 11:17 am

என்ன சொல்ல வரிங்க ?? சிரி ஒண்ணுமே புரியலை


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 24, 2012 11:19 am

இன்றைய உலகில் நமக்கு வேண்டிய எல்லா விளக்கங்களும் புராணங்களிலும் இதிகாலங்களிலும் உள்ளன. எனவேதான் அனைவரும் தினசரியே மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஆதிகாலத்தில் பிரம்ம தேவருக்கு ஐந்து தலைகள் இருந்தன. ஒரு முறை பிரம்ம மூர்த்தி தானே படைப்புக் கடவுள், தன்னை மிஞ்சிய தெய்வம் உலகில் எவரும் இல்லை என்று செருக்குக் கொண்டபோது சிவபெருமாள் பிரமனுடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி பிரம்மனுடைய அகங்காரத்தைச் சம்ஹாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவாக பிரம்மாவினுடைய கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக பிரபஞ்சம் எங்கும் அலைந்து திரிந்து பிட்சை ஏற்று, இறுதியில் காசி அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்றபோது சிவபெருமானுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கி பிரம்ம கபாலம் அவர் கையிலிருந்து மறைந்தது. அன்னை பராசக்தியிடம் சிவபெருமாள் பிச்சை ஏற்ற தினமே அட்சய திரிதியை ஆகும்.

சிவபெருமானே அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்கிறார் என்றால் அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டியது அன்னதானம் என்பது ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும் அல்லவா? ஆறறிவு பெற்ற மக்கள் இந்தச் சிறு விஷயத்தைக் கூட எப்படித் தலைகீழாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பது வியப்புக்குரியதே. திதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. இதில் திரிதியை திதி எதையும் பெருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எது பெருக வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

உலகிவ் நல்ல காரியங்கள் பெருக வேண்டும், மக்கள் சமுதாயத்தில் விட்டுக் கொடுக்கும் தன்மை பெருக வேண்டும். பாரெங்கும் அமைதி பெருக வேண்டும், அன்பு பெருக வேண்டும், மற்றவர் நலனுக்காகத் தங்களைத் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணம் பெருக வேண்டும். தன்னலம் பாராது மகான்களும், ஆன்மீக வழிகாட்டிகளும் நிறைவேற்றும் அன்னதானத்தில்தான் இவை எல்லாம் பெருகும். அதை விடுத்து, தங்கம் வாங்க வேண்டும், வைரமும் மாணிக்கமும் பெருக வேண்டும் என்ற எண்ணம் பெருகினால் சமுதாயத்தில் அமைதி நிலைக்குமா, இன்பம் கனியுமா? தங்கத்திற்காக அலைந்த மைதாசின் கதையை நீங்கள் எல்லோரும் சிறு வயதில் படித்தவர்கள்தானே?

திதி நம் மூதாதையர்களுடன் தொடர்பு கொண்டது. அதனால்தான் இறந்தவர்களின் திதியை நாம் கொண்டாடுகிறோம். நாம் இன்று பெற்றிருக்கும் வீடு, வாகனம், பதவி, அந்தஸ்து, நற்பெயர் போன்ற எல்லாவற்றிற்கும் நம் மூதாதையர்களின் ஆசியே காரணம். எனவே, அட்சய சக்திகள் பெருகும் திரிதியை அன்று அன்னதானம் செய்வதால் நம் மூதாதையர்கள் மகிழ்ந்து அருளாசியைப் பொழிவார்கள். மூதாதையர்களின் அருளாசி பெருகும் நாளே அட்சய திரிதியை ஆகும் என்பதை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள்
kulaluravuthiagi.com/vina3.htm



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 11:22 am

கே. பாலா wrote:இன்றைய உலகில் நமக்கு வேண்டிய எல்லா விளக்கங்களும் புராணங்களிலும் இதிகாலங்களிலும் உள்ளன. எனவேதான் அனைவரும் தினசரியே மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஆதிகாலத்தில் பிரம்ம தேவருக்கு ஐந்து தலைகள் இருந்தன. ஒரு முறை பிரம்ம மூர்த்தி தானே படைப்புக் கடவுள், தன்னை மிஞ்சிய தெய்வம் உலகில் எவரும் இல்லை என்று செருக்குக் கொண்டபோது சிவபெருமாள் பிரமனுடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி பிரம்மனுடைய அகங்காரத்தைச் சம்ஹாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவாக பிரம்மாவினுடைய கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக பிரபஞ்சம் எங்கும் அலைந்து திரிந்து பிட்சை ஏற்று, இறுதியில் காசி அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்றபோது சிவபெருமானுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கி பிரம்ம கபாலம் அவர் கையிலிருந்து மறைந்தது. அன்னை பராசக்தியிடம் சிவபெருமாள் பிச்சை ஏற்ற தினமே அட்சய திரிதியை ஆகும்.

சிவபெருமானே அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்கிறார் என்றால் அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டியது அன்னதானம் என்பது ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும் அல்லவா? ஆறறிவு பெற்ற மக்கள் இந்தச் சிறு விஷயத்தைக் கூட எப்படித் தலைகீழாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பது வியப்புக்குரியதே. திதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. இதில் திரிதியை திதி எதையும் பெருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எது பெருக வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

உலகிவ் நல்ல காரியங்கள் பெருக வேண்டும், மக்கள் சமுதாயத்தில் விட்டுக் கொடுக்கும் தன்மை பெருக வேண்டும். பாரெங்கும் அமைதி பெருக வேண்டும், அன்பு பெருக வேண்டும், மற்றவர் நலனுக்காகத் தங்களைத் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணம் பெருக வேண்டும். தன்னலம் பாராது மகான்களும், ஆன்மீக வழிகாட்டிகளும் நிறைவேற்றும் அன்னதானத்தில்தான் இவை எல்லாம் பெருகும். அதை விடுத்து, தங்கம் வாங்க வேண்டும், வைரமும் மாணிக்கமும் பெருக வேண்டும் என்ற எண்ணம் பெருகினால் சமுதாயத்தில் அமைதி நிலைக்குமா, இன்பம் கனியுமா? தங்கத்திற்காக அலைந்த மைதாசின் கதையை நீங்கள் எல்லோரும் சிறு வயதில் படித்தவர்கள்தானே?

திதி நம் மூதாதையர்களுடன் தொடர்பு கொண்டது. அதனால்தான் இறந்தவர்களின் திதியை நாம் கொண்டாடுகிறோம். நாம் இன்று பெற்றிருக்கும் வீடு, வாகனம், பதவி, அந்தஸ்து, நற்பெயர் போன்ற எல்லாவற்றிற்கும் நம் மூதாதையர்களின் ஆசியே காரணம். எனவே, அட்சய சக்திகள் பெருகும் திரிதியை அன்று அன்னதானம் செய்வதால் நம் மூதாதையர்கள் மகிழ்ந்து அருளாசியைப் பொழிவார்கள். மூதாதையர்களின் அருளாசி பெருகும் நாளே அட்சய திரிதியை ஆகும் என்பதை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள் kulaluravuthiagi.com/vina3.htm
மிகச்சிறந்த விளக்கம் ... சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 24, 2012 11:39 am

Written by Dr. Somash
மாசந்தோறும் வருகின்ற திதிகளிலே ஒரு சில மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வளர்பிறைத் திதிகளிலே சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி திரயோதசி, பூரணை, முதலானவைகளும்,, தேய்பிறைத் திதிகளிலே சதுர்த்தி, திரயோதசி, அமாவாசை ஆதியனவும் விசேஷமானவை. இவற்றுள் சில பூஜா-ஹோமங்களுக்கும், வேறு சில பிதிர் வழிபாடு தர்ப்பணங்களுக்கும் சிறப்புடைய விரதநாட்களாக அமைகின்றன.



ஆனால் சித்திரைமாத வளர்பிறைக்காலத்தில் மூன்றாம் நாளாகிய திருதியைத் தினம், குறைவடையாத விருத்தியைத் தரும் சிறப்புநாளாகக் கருதப்படுகின்றது. இதனை அக்ஷய திருதியை என்று அழைப்பர். சயம் என்றால் குறைவடைதல் எனவும், அட்சயம் என்றால் குறைவடையாதது எனவும் பொருள்படும். அன்று ஒவ்வொருவரும் தமக்கு சகல செல்வங்களையும் பெருக்குவதற்காக மஹாலட்சுமியை வழிபடுவர். அன்றையதினம் பொன்னையும் வேறு தமக்குப் பிடித்தமான பொருளையும் வாங்கிக் குவிப்பர். ஏழைகள்கூட அன்றையதினம் ஒரு குண்டுமணியளவு பொன்னை வாங்கிச்சேர்த்தால், மஹாலட்சுமியின் நல்லருளால் நாளடைவில் தமக்கு வேண்டியளவு பொன்னும், மணியும், பொங்கிவழியச் செய்வாள் என்பது நம்பிக்கை. வசதிபடைத்தவர்கள் பொற்காசுகளையும், பொற்பாளங்களையும் வாங்கி வங்கிகளில பத்திரப்படுத்துவர். வருடாவருடம் சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை அனைவருக்கும் குறைவிலா நிறைவையளிக்க நாமும் பிரார்த்திப்போம். சுபம்.

http://www.modernhinduculture.com/index.php?option=com_content&view=article&id=71:2010-07-03-23-34-59&catid=34:agamas&Itemid=54



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 24, 2012 11:48 am



...அக்ஷய திருதியை! : தடம் மாறுகிறதா தமிழகம் ...?
Tuesday, 24 April 2012 03:32 .

அக்ஷய திருதியை! முன்னெப்போதும் கண்டிராத முக்கியத்துவத்தை அன்மித்த சில வருடங்களாகப்

பெற்றிருக்கிறது. அக்ஷய திருதியை பரபரப்பு தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஆண்டுக்கு ஆண்டு அபரிமிதமாகவே களை கட்டிவருகிறது. கிறிஸ்மஸ் காலத்தில் சாண்டாகிளசை சிவப்பு வர்ணத்தில் மாற்றியமைத்த மேலைத்தேய வணிகச் சமூகத்தின் பாதிப்பாக, தமிழக்தைத் தாக்கத் தொடங்கியிருக்கும் எண்ணற்ற கலாச்சார மாற்றங்களின் நிகழ் காட்சியாகவே அட்சய திருதியை ஆர்ப்பாட்டங்களைக் காணவேண்டியுள்ளது என மாற்றுச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும் கவலை கொள்கின்றார்கள்.



"எங்கள் காலத்தில் சங்கடஹர சதுர்த்தியிலிருந்து, அக்ஷய திருதியை வரை .கோயில்களில் பூஜை புனஸ்காரங்கள் என்றுதான் கொண்டாட்டங்கள் இருக்கும். கால ஓட்டத்தில் வீட்டிற்கு லக்ஷ்மியை வரவழைக்கும் அக்ஷய திருதியை வழிபாடு, இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்கும் சடங்காக மருவிப்போயிற்று. ஆனாலும் ஒருவகையில் அது வரவேற்க கூடியதாகவே இருக்கிறது..'' என தனது காலத்தின் உண்மை நிலையை நினைவு கூரும் 69 வயதான வேதநாயகி அம்மா, இந்தக் காலத்தையும் விட்டுக் கொடுக்காது பேசுகின்றார்.

அக்ஷய திருதியை என்றால் என்ன..? அது தங்கம் வாங்கும் சடங்கா..? எனப் பிரபல ஜோதிடர் கண்ணன் பட்டாச்சார்யாவிடம் கேட்டோம். ''ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்னல் மூன்றாம் பிறை நாளில் வருவதே அக்ஷய திருதியை நாள்.அக்ஷய என்னும் சொல்லுக்கு வற்றாமல் மேலும் மேலும் வளர்வது என்று பொருள். இந்த அக்ஷய திருதியை மகாலட்சுமிக்கான நாள்.எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அபார பலன்களைத் தரும். அக்ஷய திருதியை நாள் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திர சம்பிரதாயங்கள் சொல்கிறது. மகாலட்சுமி என்றாலே தங்கம், செல்வம், ஐஸ்வரியம் என்று பொருள் தருவதால், மக்களிடம் தங்கம் வாங்கும் நம்பிக்கை அதிகமாகி இருக்கலாம். இதில் தவறொன்றும் இல்லை என்பதே என் கருத்து.'' என்றார்.

http://4tamilmedia.com/special/republish/4834-2012-04-24-01-32-42



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 11:58 am

"அக்ஷயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது, மேலும் இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அக்ஷய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து சுபிட்சத்தைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை போடுவது போன்ற புதிய முயற்சிகளை அக்ஷய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.
விக்கி பீடியா


யாருமே , தங்கை நகை வாங்குங்க என்று தமிழ்நாட்டில் இப்ப நடந்துகிட்டு இருக்கிற நகைக்கடை விளம்பரம் போல சொல்லலியே. அனைவரும் இந்த நாளில் நீங்கள் தொடங்கும் எந்த முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து சுபிட்சத்தை கொடுக்கும் என தானே சொலுகின்றனர்.

இதில் எங்கிருந்து வந்தது? யார் திணித்தது ? தமிழர்கள் அட்சய திரிதியை அன்று நகை வாங்க வேண்டும் (கடன்பட்டாவது) என்று


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 12:01 pm

ராஜா wrote:இதில் எங்கிருந்து வந்தது? யார் திணித்தது ? தமிழர்கள் அட்சய திரிதியை அன்று நகை வாங்க வேண்டும் (கடன்பட்டாவது) என்று [/b]

எல்லாம் சில தங்கமான மனசுகாரங்கத்தான் ஜொலிக்குதே ஜோலி ஜொலிக்குதேனு சொல்லி ஏமாத்தராங்க தல



ஈகரை தமிழ் களஞ்சியம் செல்வங்களை அள்ளித் தரும்  அக்ஷய திருதியை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக