புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_m10விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 19, 2012 8:18 am

First topic message reminder :

விண்ணில் அக்னி - 5 ஏவுகணை வெற்றி கரமாக சற்றுமுன் ஏவப்பட்டது. ஒடிசா மாநில வீலர் தீவில் இருந்து ஏவப்பட்டது. இது 5000 கிமீ தூரம் சென்று தாக்க கூடியது.

-- சன் செய்திகள்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 19, 2012 9:23 am





விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 19, 2012 9:29 am

5000 கி.மி வரை செல்லும் இது எதை இலக்காக கொண்டு இன்று ஏவப்பட்டுள்ளது என்று எந்த செய்தியிலும் சொல்லவில்லை புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 19, 2012 9:36 am

5000 கி.மி வரை செல்லும் இது எதை இலக்காக கொண்டு இன்று ஏவப்பட்டுள்ளது என்று எந்த செய்தியிலும் சொல்லவில்லை

அண்ணா அநேகமாக வங்க கடலில் ஏதாவது ஒரு இலக்கை வைத்திருப்பார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 19, 2012 11:09 am

வனேஸ்வர்: நாட்டின் அதிநவீன ஏவுகணை அக்னி-5 இன்று காலை 8.05க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது அக்னி ஏவுகணை. மேலும் இது ஒரு டன் எடை கொண்ட ஆயுதங்களையும் தாங்கும் திறன் கொண்டது. ஒலியைவிட 24 மணிநேரத்தில் இலக்கைத் தாக்கும் திறனை உடையது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி ஏவுகணையை இந்தியா ஏவியதன் மூலம் அதிநவீன ஏவுகணை வைத்திருக்கும் அமெரிக்கா, ரசியா, சீனா, பிரான்ஸ் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.

அக்னி ஏவுகணை நேற்று இரவு 7 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை சரியில்லாத சூழலால் இன்று காலை ஏவப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி ஏவுகணை-4 விண்ணில் ஏவப்பட்டிருந்தது.

திபெத் எல்லைப் பகுதியில் சீனா ஏவுகணைகளைக் குவித்து வரும் நிலையில் இந்தியாவின் அதிநவீன அக்னி ஏவுகணை சோதனை குறிபிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 19, 2012 11:11 am

///அக்னி ஏவுகணை நேற்று இரவு 7 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை சரியில்லாத சூழலால் இன்று காலை ஏவப்பட்டது.///

அப்ப.... வானிலை சரியில்லைன்னா சண்டை போட மாட்டிங்களா?



விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Apr 19, 2012 11:13 am

சிவா wrote:///அக்னி ஏவுகணை நேற்று இரவு 7 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை சரியில்லாத சூழலால் இன்று காலை ஏவப்பட்டது.///

அப்ப.... வானிலை சரியில்லைன்னா சண்டை போட மாட்டிங்களா?

அப்பவும் தரையுல போடுவோம். புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 19, 2012 11:18 am

சிவா wrote:
///அக்னி ஏவுகணை நேற்று இரவு 7 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை சரியில்லாத சூழலால் இன்று காலை ஏவப்பட்டது.///

அப்ப.... வானிலை சரியில்லைன்னா சண்டை போட மாட்டிங்களா?

சிப்பு வருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 19, 2012 11:32 am

நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 10:40 am


கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா நேற்று வெற்றிகரமாக நடத்தியது. தரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை சரியாக தாக்கியது.

நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில், இந்திய ராணுவம் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

அக்னி-5 ஏவுகணை

இந்திய ராணுவத்தில் ஏற்கனவே திரிசூல், பிருதிவி, அக்னி உள்ளிட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் உள்ளன. அக்னி வரிசை ஏவுகணைகளில் ஏற்கனவே அக்னி-1 முதல் அக்னி-4 வரையிலான ஏவுகணைகள் ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டு விட்டன.

அடுத்த கட்டமாக, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்தனர்.

அணுகுண்டை சுமந்து செல்லும்

அக்னி-5 ஏவுகணை 17.5 மீட்டர் நீளமும், 2 மீட்டர் சுற்றளவும், 40 டன் எடையும், ஒரு டன்னுக்கும் அதிகமான அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று தாக்கும் திறனும் கொண்டது.

அக்னி-5 ஏவுகணை தரையில் இருந்து புறப்பட்டுச் சென்று, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரையில் சென்று இலக்கை மிக துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது ஆகும். அதாவது, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்துகிற ஆற்றல் வாய்ந்தது.

சீறிப்பாய்ந்தது அக்னி-5

இந்த ஏவுகணையை ஒடிசா மாநிலம், வீலர் தீவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் விண்ணில் செலுத்தி சோதித்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான முயற்சியில் சுமார் 800 விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் கடந்த பல மாதங்களாக உழைத்து இருந்தனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த நேரத்தில் விண்ணில் மேகங்கள் திரண்டு, இடி, மின்னல் தொடர்ந்து ஏற்பட்டதால் அக்னி-5 ஏவுகணையை செலுத்தும் முயற்சி நேற்று காலைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை 8.07 மணிக்கு அக்னி-5 ஏவுகணை ஒரு நடமாடும் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பெரும் நெருப்பையும், புகையையும் வெளிப்படுத்தியவாறு அக்னி-5 ஏவுகணை மிக துல்லியமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. அப்போது கூடியிருந்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வி.கே.சரஸ்வத், ராணுவ விஞ்ஞானிகள், விஞ்ஞானிகள், ராணுவ உயர் அதிகாரிகள் இருந்து கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

வெற்றிகரமாக இலக்கை அடைந்தது

அக்னி-5 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டதை, இந்திய பெருங்கடலில் நிறுத்தப்பட்டு இருந்த 3 போர்க்கப்பல்கள், ரேடார்கள் கண்காணித்தன. 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உரிய இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக அடைந்தபோது, விண்ணில் பெரிய நெருப்பு பந்துபோல் தோன்றியதாக போர்க்கப்பலில் இருந்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தற்போது அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய வளர்ந்த நாடுகளிடம் மட்டுமே உள்ளன. அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றியின் மூலம் தற்போது இந்தியாவும் அந்த நாடுகளின் பட்டியலில் சேர்ந்து உள்ளது.

ஏவுகணை சக்தி நாடு

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது குறித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வி.கே.சரஸ்வத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்து உள்ளது. இத்தகைய அதிநவீன ஏவுகணையை வடிவமைத்து, உருவாக்கி, விண்ணில் செலுத்தி சோதிக்கிற ஆற்றலை இந்தியா பெற்று விட்டது என்பதை அக்னி-5 ஏவுகணை சோதனை ஒட்டு மொத்த உலகத்துக்கும் காட்டி உள்ளது. இப்போது நாம் ஏவுகணை சக்தி நாடாக ஆகி இருக்கிறோம்.

ராணுவத்தில் சேர்ப்பது எப்போது?

நாட்டின் ராணுவ பலத்தில் இந்த ஏவுகணை சோதனை ஒரு மைல் கல் ஆகும். இன்னும் இரண்டு சோதனைகளை நடத்தப்போகிறோம். அவை நமது ஆற்றலை உறுதிப்படுத்தும் சோதனைகளாக அமையும். அதைத் தொடர்ந்து அக்னி-5 ரக ஏவுகணைகளை தயாரிக்கும் பணி தொடங்கி விடும். அதிகபட்சம் இன்னும் ஓராண்டு ஆகலாம்.

அடுத்த 2 ஆண்டுகளில் அக்னி-5 ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும். நாம் இன்னும் பல ஏவுகணை சோதனைகளை நடத்த இருக்கிறோம். அவை செயற்கைக்கோள் தடுப்புக்கான பன்முக சுயசார்பு இலக்கு மறுபிரவேச வாகன (எம்.ஐ.ஆர்.வி.) ஆற்றலை கொண்டவையாக அமையும். அக்னி-5 ஏவுகணையை பொருத்தமட்டில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சில எலெக்டிரானிக் கருவிகள் தவிர்த்து, 80 சதவீதம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதாகும்.

இவ்வாறு வி.கே.சரஸ்வத் கூறினார்.

அக்னி-5 ஏவுகணை வெற்றி குறித்து, அதன் திட்ட தலைமை விஞ்ஞானி டெஸ்சி தாமஸ் கூறுகையில், "தேசத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக அனைத்து குழுவினரும் உழைத்த உழைப்புக்கு நல்லதொரு பலன் கிடைத்திருக்கிறது'' என்றார்.

பிரதமர் பாராட்டு

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இந்த சோதனைக்காக அயராது பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

ராணுவ ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் வி.கே.சரஸ்வத்தை பிரதமர் மன்மோகன் சிங் போனில் தொடர்பு கொண்டு, "அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்று இருப்பது ஒரு மைல் கல் ஆகும். இது நமது பாதுகாப்புக்கு, ஆயத்த நிலைக்கு மேலும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். முன்வரிசையில் செல்வதற்கான விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும்'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும், நமது ராணுவத்தை, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான இந்த சோதனை முயற்சியில் ஓய்வின்றி உழைத்த பிற அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஞ்ஞான துறையினரை கவுரவிப்பதில் தேசமே இந்த தருணத்தில் ஒன்றாக நிற்கிறது'' என்றார்.

அந்தோணி பாராட்டு

ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியும் இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "அக்னி-5 ஏவுகணை சோதனை அப்பழுக்கற்ற வெற்றி. இது நமது சாதனையின் மாபெரும் மைல் கல்லும் ஆகும். தேசம் உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குகிற ஏவுகணைகளை கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் நாமும் சேர்ந்து உள்ளோம்'' என்றார்.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.நடராஜன் கூறுகையில்; நாட்டின் பாதுகாப்புக்கு இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு உரிய பதில் அளிப்பதாக அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி அமைந்து இருப்பதாக தெரிவித்தார்.

சீனா எதிர்ப்பு

அக்னி-5 ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றி பெற்றிருப்பதால், சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், ஆஸ்திரேலிய கடலோரப் பகுதிகளை இலக்காக கொண்டு ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி-5 ஏவுகணை சோதனைக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.



விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 10:42 am

விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 First



விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக