புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
96 Posts - 49%
heezulia
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
7 Posts - 4%
prajai
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
3 Posts - 2%
Barushree
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
223 Posts - 52%
heezulia
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
16 Posts - 4%
prajai
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
2 Posts - 0%
Barushree
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_m10அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது..


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 11:47 pm

அதென்னவோ தெரியவில்லை, தற்போது பலருக்கும் தங்கள் துணை அல்லது காதல் ஜோடியுடன் நெருக்கமாக இருக்கும் தருணத்தை படம்பிடிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இது, பெரும்பாலும் பெண்களை தீராத மனவேதனைக்கும், சோகத்திற்கும் உள்ளாக்குகிறது.

23 வயதான அழகுப் பாடகி துலிசியா இப்போது அந்த `அந்தரங்க படப்பிடிப்பு' சோகத்தில் சிக்கித் தவிக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த இவர், தனது 17 வயதிலிருந்தே ஜஸ்டின் எட்வர்ட்ஸ் என்பவரை காதலித்து வந்தார். துலிசியா வாழ்க் கையில் ஆறு ஆண்டுகள் கதாநாயகனாக இருந்த அவர், இப்போது வில்லனாகி துலிசியாவை ஏமாற்றிவிட்டார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த படுக்கையறைக் காட்சிகள் சமீபத் தில் இணைய தளத்தில் வெளியாகி, பார்ப்பவர்களை கண்கூசச் செய்தன.

``நான் ஏறக்குறைய அவருடன் மனைவி போலவே வாழ்ந்தேன். அவரை ஆழமாக நேசித் தேன். திருமணம், குழந்தைகள் பற்றியெல்லாம் கூட நாங்கள் பேசி முடிவெடுத்திருந்தோம். அந்த சூழ்நிலையில் எங்களுக்குள் இருந்த அந்த அந்தரங்கம் அனைத் தும் வெளியாகி, இப்படி ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் கனவில்கூட நினைத்திருக்கவில்லை.'' என்று புலம்புகிறார் துலிசியா. அந்த அந்தரங்க காட்சிகள் வெளியாக, தன் காதலன் தான் காரணம் என்றும் கண்கலங்குகிறார்.

இவரைப் போலவே தாங்கள் உயிருக்குயிராக நேசித்தவரை கண்மூடித்தனமாக நம்பி, தன்னை ஒப்படைத்ததன் எதிர் விளைவை இன்று பலரும் அனுபவித்துக் கொண்டிருக் கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, பெண்களால் படம்பிடிக்கப்பட்டு பழிவாங்கப்பட்ட ஆண் களும் இந்த சோகப்பட்டியலில் இணைந்திருக்கவே செய்கிறார்கள்.

பிரபலமான பெண்மணியின் மகன் அவர். உயர்ந்த துறை படிப்பு ஒன்றை நிறைவு செய்து கொண்டிருந்தபோது, அவருக்கும், அதே துறையில் இருக்கும் பெண்ணுக்கும் காதல் வந்தது. சில மாதங்களிலே கட்டில் வரை சென்றுவிட்டது. அதை அவள் படம்பிடித்தது அவருக்கு தெரியாது. `எல்லாம்' நடந்து முடிந்த பின்பு அவர் எச்சரிக்கையாகி, காதலி எப்படிப்பட்டவள் என்று விசாரிக்கத் தொடங்கினார். ஏற்கனவே ஒன்றிரண்டு காதலர்கள் இருந்ததும், அவர்களிடமும் அவள் எல்லைமீறி பழகி இருப்பதும் அவருக்கு தெரியவந்தது. அதனால் அவளது தொடர்பை துண்டித்துவிட ஆர்வம் காட்டினார். அவளோ தன்னை திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இந்த நிலையில் அவருக்கு வேறு திருமண ஏற்பாடு நடந்தது. பெண் மிக வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை அமைதியாக கவனித்து வந்த அந்த காதலி, திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு திடீரென்று களத்தில் இறங்கினாள். தான் படம் பிடித்து வைத்திருந்ததை அப்படியே பெண் வீட் டாருக்கு போட்டுக்காட்டி ஒரு மணி நேரத்திலே பூகம்பத்தை ஏற்படுத்தி, திருமணத்தையே தடுத்து நிறுத்திவிட்டாள். `அவள் படம் பிடித்தது தனக்கு தெரியவே தெரியாது' என்று தலையில் அடித்துக்கொண்டார், அந்த நபர்.

"அந்தரங்கத் தருணங்களை காமிராவில் பதிவு செய்யும் ஆசை ஆண்களிடம் அதிகரித்து வருகிறது. அது தங்கள் நெருக்கத்தின் அடையாளம் என்று கருதி பெண்களும் அதற்கு அனுமதித்து விடுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்கள் `அதை'த் தங்கள் நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறார்கள். இணையத்திலும் ஏற்றுகிறார்கள். செக்ஸ் காட்சி களான அவைகளை விற்று சிலர் பணமாக்கவும் செய்கிறார்கள். காதலி தன்னைப் பிரிந்து சென்றால், அவளைப் பழிவாங்கவும் அதை பயன்படுத்துகிறார்கள்''-என்கிறார், மனநல நிபுணர் சர்மா.

பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜ் இந்த `ஆபாச படப்பிடிப்பின்' காரணங்களை இன்னொரு கோணத்தில் அலசுகிறார். அவர் சொல்கிறார்..

"ஆணும், பெண்ணும் அந்தரங்கமாக பழகுவதை ஆவணமாக்குவது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. தான் யாரை நேசிக் கிறேன். தங்களுக்குள் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை பட மாக முதலில் மனிதன் குகைகளிலும், மலைகளிலும் வரைந்து வைத் தான். பின்பு எழுதி வைத்தான். நாகரீகம் வளர்ந்த பின்பு கடிதம் வாயி லாக தங்கள் அந்தரங்கங்களை பதிவு செய்து அதை அத்தாட்சியாக பாதுகாத்தனர். பின்பு நாகரீகமான உடையோடு இருவரும் நெருக்கமாக இருந்ததை படம் பிடித்து வைத்தனர். தான் விரும்புவதை சேகரித்து பாதுகாத்துவைத்து பார்த்து மகிழும் எண்ணம் இயல்பாகவே ஆண் களுக்கும், பெண்களுக்கும் உண்டு.

இப்போது கிட்டத்தட்ட எல்லோர் கைகளிலும் செல்போனிலோ, வேறு வகையிலோ கேமிரா இருக்கிறது. அதை பயன்படுத்திப்பார்க்க விரும்புகிறார்கள். அதில் நண்பர்களோடு நிற்பது, ஓடுவது, ஆடுவது போன்றவற்றை படம் பிடிப்பதைவிட, வயதுக்கு தகுந்தபடியான அந்தரங்க விஷயங்களை படம்பிடிக்கவே சிலர் விரும்புகிறார்கள்.

முதலில் வேறுயாரையாவது அந்தரங்கமாக படம் பிடிப்பார்கள். பின்பு தம்மையே படம் பிடித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றும். அதற்கு தக்கபடி தன் காதலியை அணுகு வார்கள். முதலில் அவளிடம் நெருக்கமாக பழகிவிட்டு, அவளை தன்னோடு சேர்ந்து ஆபாச படம் பார்க்கவைக்கும் அளவிற்கு ஈடுபாடுகொள்ளச் செய்வார்கள். பின்பு, `திரு மணத்திற்கு முந்தைய உறவை இப்போது பலரும் தவறாக கருதுவதில்லை' என்று வசீகர மாக பேசி, அதற்கான சம்மதத்தை பெற்றுவிடுவார்கள். அது தொடரும் போதே, `யார் யாரோ தோன்றும் அந்தரங்க படங்களை நாம் பார்க்கிறோம். அடுத்தவர்களை அந்த கோணத்தில் பார்ப்பதைவிட நாமே அப்படி இருக்கும்போது அதை படம் பிடித்துவைத்து விரும்பும்போதெல்லாம் பார்க்கலாமே. நாம் நம்மீது வைத்திருக்கும் காதலுக்கும், நம்பிக் கைக்கும் அதை ஒரு ஆவணமாக்கலாமே என்று சொல்வார்கள். இப்படித்தான் பெண் களை `படப்பிடிப்பிற்கு' சம்மதிக்கவைக்கிறார்கள்.

ஆனால் மனித மனதிற்கு ரகசியங்களை பாதுகாக்கும் பலம் கிடையாது. மனித மனம், `ஒரு ரகசியத்தை பாதுகாப்பதால் தனக்கு சுவாரஸ்யம், சந்தோஷம் அதிகமா? அதை வெளியிடுவதால் தனக்கு சந்தோஷம் அதிகமா?' என்று தனக்குள்ளே அடிக்கடி கேள்வி கேட்கும். அதில் வெளியிடுவதுதான் சந்தோஷம் என்ற முடிவை எடுத்துவிடும்போது, தான் பிடித்துவைத்திருக்கும் படங்களை தன்னோடு நட்பில் இருப்பவர்களிடம் காட்டுவார்கள்.

அந்த படத்தை அடுத்தவர்களுக்கு காட்டுவதன் மூலம், தனக்கு அழகான காதலி இருப்பது- அவளை தான் உறவு கொள்வது- அதை படம்பிடித்து தன்னை ஒரு சாதனை யாளன் போல் காட்டிக்கொள்வது போன்றதெல்லாம் ஈடேறும் என்று நினைப்பார்கள். அப்படி சிலரிடம் அந்த படம் பரிமாறப்படும்போது, அவர்கள் வேண்டும் என்றோ, அஜாக்கிரதை யாலோ அதை பலரும் பார்க்கும் அளவிற்கு இணையங்களில் சேர்த்துவிடுகிறார்கள். இதுதான் ஆபத்தாக மாறுகிறது.

நாங்கள் எங்களிடம் ஆலோசனைக்கு வரும் தம்பதிகளிடம் வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாட்டிற்கோ செல்லும் போது அங்கு ஹோட்டல்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளாதீர் கள். அங்கு பல இடங்களில் கேமிரா வைத்து சாதாரணமான ஊழியர்களே படம்பிடித்து, தம்பதிகள் சொந்த ஊர் வரும் முன்பே அந்த காட்சிகள் வந்துவிடுகின்றன என்று உஷார்படுத்துகிறோம்.

தற்போது ஆண்களிடம் செக்ஸ் பலகீனம் அதிகரித்து வருகிறது. அதனால் அவர்கள் `ஆக்டிவ்' செக்சில் ஈடுபடுவதைவிட, பார்த்து மகிழுவதே போதும் என்று நினைக்கிறார்கள். அதனாலும் தன் இணையோடு சேருவதை படம்பிடிக்கிறார்கள். தாங்கள் இணையும் படத்தை பார்த்தே திருப்திபடுவது அல்லது தூண்டுதல் அடைவது போன்றவை ஆரோக்கிய மான செக்ஸ் அல்ல. அவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் செக்ஸ் பலகீனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிகிச்சை எடுத்து தங்கள் செக்ஸ் வாழ்க் கையை புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

அந்தரங்கத்தை படமாக்குவது தவறான செயல். அதைவைத்து பெண்களை- ஆண்களோ, ஆண்களை- பெண்களோ மிரட்டுவது கடுமையாக தண்டிக்கவேண்டியது. அந்த பழக்கம் இருப்பவர்கள் அதிலிருந்து மீளுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்''- என்கிறார், டாக்டர் டி.காமராஜ்.

மனநல ஆலோசகர் பிரீத்தி மனோகர் சொல்கிறார்...

"ஆபாச படங்களை தம்பதிகள் சேர்ந்து பார்ப்பதும், காதலர்கள் சேர்ந்து பார்ப்பதும் அதிகரித்து வருகிறது. அதனால், அதுபோல் தங்கள் அந்தரங்கத்தையும் சிலர் கூச்சமில்லாமல் படம் பிடிக்கிறார் கள்.

என்னிடம் கவுன்சலிங்குக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். நடுத்தர வயது தம்பதிகளான அவர்கள் எப்போதும் பிசியாக தங்கள் வேலை யிலே மூழ்கிகிடப்பவர்கள். தங்கள் சக்தியை எல்லாம் வேலையிலே செலவிட்டுவிட்டு, சக்தியற்றவர்கள்போல் வீடு திரும்புவார்கள். அத னால் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் செக்ஸ் வைத்துக்கொள்வது என்ற நிலைக்கு அவர்கள் தாம்பத்ய வாழ்க்கை சுருங்கிவிட்டது.

அதனால் இருவரும் கலந்துபேசி, தங்கள் செக்ஸ் வாழ்க்கையை புதுப்பித்துக்கொள்வதற்காக ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்றார்கள். அங்கு அறையில் தங்கியிருந்தபோது, சந்தோஷமான மூடில் எப்போ தும் தாங்கள் பார்த்து மகிழ, தங்கள் உறவை படம்பிடித்திருக் கிறார்கள். அதை லேப்டாப்பில் போட்டு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

திடீரென்று லேப்டாப் பழுதாகிவிட, அந்த படத்தை தங்களுக்கு தெரிந்த விதத்தில் அழித்துவிட்டு சர்வீஸ்க்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சர்வீஸ் செய்தவர், அழித்த படங்களை மீண்டும் எடுத்து பார்த்ததோடு, அதை தன் நண்பர்களுக்கும் அனுப்பிவைத் திருக்கிறார். அதெல்லாம் இந்த தம்பதிக்கு தெரிந்தபோது மிகவும் அதிர்ந்துபோனார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டது.

திருமணமான இன்னொரு பெண் என்னை சந்திக்க வந்திருந்தார். அவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஒரு குழந்தையும் இருக்கிறது. இப்போது கணவருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருப்பது உறுதியாகி விட்டதால், அவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புகிறார். ஆனால் திருமணமான புதிதில் இருவரும் இணைந்திருந்த படுக்கை அறை காட்சிகள் அனைத்தையும் அவள் சம்மதத்தோடு, கணவர் படம்பிடித்திருக்கிறார். அவள் என்னிடம், `நான் விவாகரத்து பெற்ற பின்பு, எதிர்காலத்தில் இன்னொரு திருமணம் செய்தால், அந்த பழைய அந்தரங்க காட்சிகளை இந்த கணவர் வெளியிட்டுவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது' என்றார். பெண்களால் கணவரையும் நம்ப முடிவதில்லை. காதலரையும் நம்ப முடியவில்லை. அதனால் அவர்கள் அந்தரங்கத்தை படம்பிடிக்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது..'' என்று கூறும் பிரீத்தி மனோகர், காதலில் ஈடுபடும் பெண்கள் தங்கள் அந்தரங்கம் படமாவதை எப்படி தடுக்கவேண்டும்? என்றும் ஆலோசனை சொல்கிறார்..

"ஆண்கள் முதலில் பிரண்டாக பழகுவார்கள். பின்பு அவள் மீது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, உணர்வு ரீதியாக அவளை அணுகுவார்கள். அவள் மீது மிகுந்த அக்கறை இருப்பதுபோல் காட்டி, அவளை வசப்படுத்தி காதலிப்பார்கள்.

காதல் ஓ.கே. ஆனதும் சினிமா, பீச் என்று சுற்றுவார்கள். பின்பு அவளை ஆபாச படங் களை பார்க்க அழைப்பார்கள். அப்போதே பெண்கள் உஷாராகிவிடவேண்டும். அதற்கு சம்மதித்தால் அடுத்த கட்டம், உடலுறவு, பின்பு அதை படம் எடுத்தல் என்ற நிலைக்கு போய்விடும். படம் பிடிப்பதில் ஒரு காதலன் வெற்றி பெற்றுவிட்டால் அன்றே அவளது நிம்மதி, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகிவிடும்.

இதை தடுப்பதில் அம்மாக்களின் பங்கு முக்கியமானது. மகள்களிடம் அவர்கள் மனம் விட்டுப்பேச வேண்டும். பெற்றோர் இருவரும் தினமும் தங்களுக்கு வெளி இடங்களில் கிடைத்த அனுபவங்களை மகளிடம் சொல்லவேண்டும். அப்போது அவள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்வாள். இப்படிப்பட்ட நெருக்கமான உறவை பெற்றோர் ஏற்படுத்திக் கொண்டால் மகள்கள் அடுத்தவர்களிடம் அன்பையும், நட்பையும் எதிர்பார்த்து இப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கிக்கொள்ளமாட்டார்கள். பெற்றோரும், ஆசிரியர்களும், சமூகமும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அந்தரங்கம் படமாகும் அபாயத்தை குறைக்கலாம்..'' என்கிறார்.



அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 11:47 pm

புகார் செய்வது எப்படி?

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றம் புரிபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக, சென்னை போலீசின் சைபர் கிரைம் பிரிவு இயங்கிவருகிறது. ஆணையர் திரிபாதி வழிகாட்டு தலின்படி, துணை ஆணையர் ராதிகாவின் கீழ் இந்த பிரிவு செயல் படுகிறது. டாக்டர் எம்.சுதாகர் கூடுதல் துணை ஆணையராக செயல்படுகிறார்.

2003-ல் இந்த பிரிவு தொடங்கப்பட்டபோது 35 புகார்களே பதிவாகின. வருடத்திற்கு வருடம் அதிகரித்து, 2007-ல் 702 ஆகவும், 2008-ல் 852 ஆகவும் உயர்ந்தது. கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை- 1370.

கூடுதல் துணை ஆணையர் டாக்டர் எம்.சுதாகரிடம், `பாதிக்கப்பட்டவர்கள் எங்கே, எப்படி புகார் தரவேண்டும்?` என்று கேட்டபோது அவர் கூறிய பதில்:

"வருடத்திற்கு வருடம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் தோன்றி னாலும், வேகமாக உயர்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையோடு அதை ஒப்பிட்டால் குற்றங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனா லும் இதையும் கட்டுப்படுத்தவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக் கிறோம்.

சைபர் கிரைமில் பதிவாகும் குற்றங்களில் மிரட்டுதல், ஆபாச படம் பிடித்தல், அவைகளை வெளியிடுதல் போன்றவை 5 சதவீதம் அளவிற்குதான் இருக்கும். அதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப் படுபவர்களாக இருக்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் நட்போடு பழகிக்கொண்டிருக்கும்போது தங்களை படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது அந்த படங்களை பயன் படுத்தி இணையதளங்களில் தவறாக சித்தரிக்கிறார்கள். ஆபாச படங்களை வெளியிடு வதும், தவறாக சித்தரிப்பதும் கடுமையான குற்றங்கள். விளையாட்டாக படம் பிடிப்பது, பொழுதுபோக்காக அடுத்தவர்களை படம் பிடிப்பது எல்லாமே எதிர்காலத்தில் பிரச்சினை களை உருவாக்கும்தன்மை கொண்டது என்பதால், எப்போதும் எல்லோரும் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஒருவர் கெட்ட நோக்கமின்றி இன்னொருவரின் தனிப்பட்ட படங்களை எடுத்தாலும், வைத்திருந்தாலும் அது மற்றொருவர் கையில் கிடைக்கும்போது பிரச்சினைக்குரியதாக மாறக்கூடும். அதனால் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களை ஒருபோதும் யாரும் படம்பிடிக்கக்கூடாது.

சைபர் கிரைம் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் உணரவேண்டும் என்பதற் காகவும், இதில் மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காகவும் விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தி வருகிறோம்.

சென்னையில் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறவர்கள் போலீஸ் ஆணையர் அலுவலகத் தில் உள்ள `குறை கேட்பு பிரிவில்' புகார் செய்யவேண்டும். புகாரின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்''- என்றார்.

தினதந்தி



அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 12:05 am

சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 16, 2012 12:10 am

மற்றவர்கள் அந்தரங்கத்தை வெளியிடுவது பாவம் சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 12:14 am

அசுரன் wrote:மற்றவர்கள் அந்தரங்கத்தை வெளியிடுவது பாவம் சோகம்

அண்ணா இது தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 16, 2012 12:19 am

இதில் ஆர்வமா பாவம் மக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது.. Ila
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Apr 16, 2012 1:50 am

ஆண்கள் ,பெண்கள் ,எல்லோரும் உங்களுக்கு பிடித்ததுபோல் சந்தோஷமாக வாழுங்கள் அதில் எந்த தப்பும் இல்லை ; ஆனால் கட்டாயாமாக நேர்மையாக இருங்கள் . மற்றவர்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப்போடாதீர்கள் , அப்படிச்செய்வதன் மூலம் நீங்கள் சந்தோஷமாக வாழ முடியாது . இது நியதி .

நேர்மையே பலம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக