புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Poll_c10ஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Poll_m10ஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram

54 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Poll_c10ஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Poll_m10ஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Poll_c10 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 10, 2012 3:50 pm

மேஷம் - அஸ்வினி, பரணி, கார்த்திகை-1ஆம் பாதம்
இந்த மாதம் ராசிநாதன் அங்காரக பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பெரும்பாலும் நன்மைகளே உண்டாகும். எதிர் பார்த்த கடிதம் வந்து சேரும். சுபகாரியத்தைப் பற்றிப் பேச வாய்ப்புண்டு.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
தொழிற்பிரிவினர், வளர்ச்சி நிலையைக் காணலாம். வியாபாரம் குறைந்தபட்சம் லாபத்தைப் பெறக்கூடிய அளவில் நடைபெற்று வரும் என்றாலும் பொருள்கள் எதையும் அதிக அளவில் இருப்பு வைக்காதீர்கள். அரசியல்வாதிகளின் புகழும் செல்வாக்கும் ஏறுமுகமாக இருக்கும். மாணவ மணிகள் படிப்பில் நல்ல முறையிலேயே கவனம் செலுத்தி வருவீர்கள்.
குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை தென்படும். பெண்கள் கூடுதலாக மகிழ்ச்சியடைய இடமுண்டு. கணவன்-மனைவியிடையே சிறு பிணக்கு ஏற்பட்டு நிவர்த்தியாகும். மணமான பெண்களில் சிலர், மகப்பேறு பாக்கியத்தைப் பெற்று மகிழக்கூடும். பிறமொழி பேசக்கூடிய யாராவது புதிதாக அறிமுகம் ஆகக்கூடிய வாய்ப்புண்டு என்றாலும் அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். கூடுமானவரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைஞர்கள் சில வாய்ப்புகளைப் புதிதாகப் பெறக்கூடும்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாள் ஆலயம் சென்று வழிபாடு செய்து வாருங்கள். உங்களுக்கு சகல நன்மைகளும் உண்டாகும்.

ரிஷபம் - கார்த்திகை-2,3,4ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்-1,2ஆம் பாதங்கள்

இந்த மாதம் ராசிநாதன் ஆட்சிபெற்று சஞ்சரித்தாலும் செவ்வாய் மற்றும் சனி சஞ்சாரத்தால் நன்மையும், தீமையும் கலந்த பலன்களே நடைபெற்று வரக்காண்பீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். மறைமுகத் தொல்லைகள் சிறு சங்கடங்களை உண்டு செய்யலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகம் தொடர்பான் விஷயங்களில் அதிருப்தி ஏற்படக்கூடும்.
தொழிற்பிரிவினர் உழைப்பிற்கேற்ப ஊதியத்தைப் பெறுவதில் சிரமம் இராது. வியாபாரத்தில் குறைந்த பட்ச லாபம் கிட்டும். வேலையாட்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவது அவசியம். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் காணப்படுவார்கள்.
மாணவமணிகள் இன்னும் கூடுதலான கவனத்தைச் செலுத்திப் படிப்பது அவசியம்.
குடும்பத்தில் பிரச்னைகள் அவ்வப்போது ஒன்றிரண்டு நேருமாயினும் பெண்கள் அவற்றைச் சமாளித்து அமைதியை உண்டாக்கவார்கள். எதிர்பாரா செலவுகள் ஏற்படும். பெண்கள் சிக்கனமாக நடந்து கொள்வதால் சிரமங்களிலிருந்து தப்பலாம். தாய்வழி உறவினரின் ஒத்தாசைகள் அமையும். சிலர் வாகன வசதிகளைப் பெற்று மகிழக் கூடும். உடல்நலத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் சில வாய்ப்புகளைப் பெறக்கூடும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் எள்ளன்னத்தை சனீஸ்வர பகவானுக்கு நைவேத்தியம் செய்து வணங்கிவிட்டு அதை உடல் ஊனமுற்றவர்களுக்கு விநியோகம் செய்து வாருங்கள். உங்கள் கவலைகள் நீங்கும். களிப்பு பொங்கும்.

மிதுனம் - மிருகசீரிஷம் 3,4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம்-1,2,3ஆம் பாதங்கள்

இந்த மாதம் ராசிநாதன் புதபகவானை அங்காரகன் பார்வையிடுவதால் அவ்வப்போது ஏற்படக்கூடிய சிற்சிறு சங்கடங்களைத் தவிர்க்க மிகுந்த பொறுமை தேவை. எதிலும் நிதானமாக நடந்து கொண்டால் பிரச்னை இருக்காது. தேவையற்ற விவாதங்களைத் தவிருங்கள். முக்கிய நபர்கள் தக்க நேரத்தில் விலகிச் செல்வார்கள்.
உத்தியோகஸ்தரகள் உங்கள் பணிகளில் நற்பெயர் பெறுவது சிரமமாக இருக்கக்கூடும். உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொண்டு பழகுவதே நன்மை தரும்.
மாணவமணிகள், விளையாட்டுப் போக்கைக் கைவிட்டு பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்த முயலுங்கள்.
வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கைக் காணமுடியும். தொழிற்பிரிவினர் வளர்ச்சி நிலையைப் படிப்படியாக எட்டக்கூடிய நிலை உண்டு.
குடும்பத்தில் அமைதியான போக்கு நிலவிவரும். யாருக்கும் எவ்வித வாக்குறுதியும் தராமல் இருப்பது அவசியம். பெண்களுக்கு சேமிப்பு செலவழியக்கூடும். தூரத்து சொந்தங்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம்.
பரிகாரம்: தினமும் ஸ்ரீராமஜெயம் எழுதி வருவதும், இராமபிரானை தரிசனம் செய்வதும் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கும். மனசாந்தியைக் கொடுக்கும்.

கடகம் - புனர்பூசம்-4ம் பாதம், பூசம், ஆயில்யம்

இந்த மாதம் தனாதிபதி சூர்யபகவான் பாக்கியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்களின் விருப்பங்களில் பெரும்பாலானவை நிறைவேற உயர் அதிகாரிகளின் ஆதரவு இருந்து வரும் என்றாலும் உங்கள் கைவசம் உள்ள கோப்புகளை நீங்கள் கவனமாகக் கையாண்டு வருவது அவசியம். நீண்ட காலம் சந்திக்க நினைத்த ஒரு முக்கிய மனிதரின் சந்திப்பு நிகழும். பிரிந்த ஒருவர் உங்களைத் தேடிவரும் வாயப்பு உண்டாகும்.
தொழிற்பிரிவினர்களுக்கு முன்னேற்றமான போக்கு காணப்படும். அரசியல்வாதிகளின் புகழ் நல்ல முறையில் இருந்து வரும்.
மாணவமணிகள் உற்சாகமாகவும், அக்கறையுடனும், படிப்பில் கவனம் செலுத்தி வருவீர்கள்.
குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். சில சங்கடங்கள் ஏற்படக்கூடிய நிலையிலும் பெண்களின் சாமர்த்தியமான நடவடிக்கைகளால் அவையும் தவிர்க்கப்பட்டு விடும். பிற மதத்தவர் ஒருவரால் அனுகூலம் உண்டு. பணப்புழக்கம் சுமாராக இருந்து வரும். தட்டுப்பாடு நேர வழியில்லை. பணம் புழங்கக்கூடிய பணிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவது அவசியம். சிலருக்கு திடீர் தனவரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சகோதர வழியில் சில தொல்லைகள் உண்டாகலாம். சிறு விபத்து ஏற்பட வாய்ப்பு காணப்படுவதால் பயணிகளின் போது மிகுந்த கவனம் தேவை.
பரிகாரம்: தினமும் முருகப் பெருமானை வணங்கி வருவதும், சண்முகக் கவசத்தை படித்து வருவதும் உங்கள் வாழ்வில் நல்ல சுபிட்சமான போக்கை ஏற்படுத்தும்.

சிம்மம் - மகம், பூரம், உத்திரம்-1ஆம் பாதம்

இந்த மாதம் ராசிநாதன் சூரியபகவான் மாத ஆரம்பத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நன்மையும், தீமையும் கலந்த பலன்களே நடைபெற்று வரக்கூடும். சில அசௌகர்யங்கள் தாமாகவே விரைவில் நிவர்த்தியாகி விடும் என்பதால் கவலை வேண்டாம். தொலைபேசி மூலம் நல்ல தகவலைக் கேட்க முடியும். நீண்ட கால பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். சகோதர வழியில் நன்மை ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் திருப்திகரமான போக்கையே காண முடியும். உயர் அதிகாரிகளின் ஆதரவு, நல்ல முறையில் இருந்து வரும். தொழிற்பிரிவினர் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்று மகிழ்வீர்கள் என்றாலும் கூட்டுத் தொழிலாயிருப்பின், கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை.
குடும்பத்தில் அமைதியான போக்கு நிலவி வரும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. பெண்களின் பெருமுயற்சியின் பேரில் சில சச்சரவுகள் தவிர்க்கப்படும். முதுகு வலி, கால்வலி சிலருக்கு ஏற்பட்டு நீங்கும். கருவுற்றிருக்கும் பெண்கள், உடல் நலத்தில் கவனம் செலுத்த நேரும். தெய்விகச் சிந்தனைகள் அதிகமாகக் காணப்படும். ஆலய தரிசனம் கண்டுவர ஒரு பயணத்தை மேற்கொண்டு சென்று வருவீர்கள். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும்.
கலைஞர்களும், மாணவமணிகளும் உற்சாகமாக காணப்படுவார்கள்.
பரிகாரம்: தினமும் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்து வாருங்கள். உங்கள் இன்னல்கள் தீரும். இனிய நல்வாழ்வு மலரும்.

கன்னி - உத்திரம்-2,3,4ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை-1,2ஆம் பாதங்கள்

இந்த மாதம் ராசிநாதன் புதபகவான் சஞ்சாரம் அனுகூலம் இல்லாத சூழ்நிலையில் நற்பலன்களுக்கிடையே ஓரிரு அசௌகர்யங்கள் ஏற்பட இடமுண்டு என்றாலும் அவை பெரிதாக பாதிப்பைத் தருவதிற்கில்லை என்பதால் கவலை வேண்டாம். வீண்விவாதங்களைக் கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். பொது சேவையில் ஈடுபட்டுள்ளோர் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும்.
உத்தியோகஸ்தர்கள் உங்கள் வழக்கமான பணிகளில் எவ்வித மாற்றங்களையும் காண்பதற்கு இடமில்லை. இயல்பான முறையில் திருப்திகரமாகத் தொடர்ந்து வரும்.
தொழிற்பிரிவினர் மாதப் பிற்பகுதிக்கு மேல் முன்னேற்றத்தைக் காணமுடியும். வியாபாரத்தில் குறைந்த பட்ச லாபம் கிடைப்பதில் குறைவிராது.
மாணவமணிகள் இன்னும் சிறிது கூடுதல் கவனத்தைச் செலுத்திப் படித்து வருவது நல்லது.
குடும்பநிர்வாகம் பெண்களால் மிகத் திருப்திகரமாக நடத்தப்பெறுவதுடன் சிரமங்கள் குறைந்து காணப்படும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி பெருகிட வழியுண்டு. பொருளாதார நிலையில் தட்டுப்பாடு நேராதென்றாலும் சிக்கன நடவடிக்கைகள் நன்மை தரும். புதிதாக அறிமுதமாகும் நபர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது அவசியம்.
கலைஞர்கள் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையக்கூடிய வாய்ப்புண்டாயினும் சக கலைஞர்களின் போட்டி, மிகுதியாய்க் காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றி வழிபட்டு வருவதன் மூலம் உங்கள் வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும்.

துலாம் - சித்திரை 3,4ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்-1,2,3ஆம் பாதங்கள்

இந்த மாதம் ராசிநாதன் சுக்ரன், எட்டாம் இடத்தில் சஞ்சரித்தாலும் புத பகவான் அருளால் தொழிற்பிரிவினர் முன்னேற்றமான போக்கைக் காணலாம். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. சேமிப்பு பெருகினாலும் செலவுகளுக்குக் குறைவிராது.
உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் தூண்டுதல்களை ஒதுக்கிவிட்டு உங்கள் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் ஈடுபட்டு வருவது அவசியம். சகபணியாளர்களிடம் சுமுகமாகப் பழகிவருவது நல்லது. அரசியல்வாதிகள் உங்கள் பணிகளைப் பொறுமையாகச் செய்து வருவது அவசியம்.
மாணவ மணிகள், சுறுசுறுப்பாகச் செயல்பட்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.
தொழிற்பிரிவினர், கூடுமானவரை கூட்டாளிகள் யாருமின்றி சொந்தமாகவே செய்வது முன்னேற்றத்தைத் தரும். திடீர் தனவரவுகள் சிலருக்கு ஏற்பட இடமுண்டு.
குடும்பத்தில் குதூகலத்திற்குக் குறைவிராது. பெண்களின் நடவடிக்கைகளில் சமயோசிதமான போக்கு தென்பட்டு குடும்ப அமைதிக்கு உதவும். ஆடை, ஆபரணச் சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவார்கள். பிரிந்து சென்ற சிலர் இப்போது தாமாகவே திரும்பி வருவார்கள். மகான்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
பரிகாரம்: நீங்கள் தினமும் மாலை வேளை ஆஞ்சநேய ஸ்வாமியை தரிசனம் செய்து வாருங்கள். உங்களுக்கு வாழ்வில் வளமும், நலமும் பெருகும்.

விருச்சிகம் - விசாகம்-4ம் பாதம், அனுஷம், கேட்டை

இந்த மாதம் அங்காரக பகவான் ஜீவனஸ்தானமாகிய பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் புதிய விஷயங்களில் ஈடுபட்டு எதிர்பாராத செலவுகளைச் சந்திக்க நேரும். எதிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்கள் நேராமல் பார்த்துக் கொள்ளலாம்.
மாணவ மணிகள் இன்னும் கூடுதலான கவனம் செலுத்தி படிப்பில் ஆர்வம் காட்டுவது அவசியம். தொழிலில் சுமாரான முன்னேற்றங்கள் உண்டு. தொழிலாளர்களுடன் பிரச்னை நேருமாயினும் பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் திருப்திகரமான போக்கைக் காண்பது கடினம். என்றாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருந்து வரும்.
குடும்ப நிர்வாகத்தில் பெண்கள் சில சங்கடங்களைச் சந்திக்க நேரும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. சிறுவிபத்து நேரும் நிலை தென்படுவதால் பயணங்களின்போதும் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் கவனம் தேவை.
கலைஞர்கள் தொடர்ந்து முயன்றால் சில புதிய வாய்ப்புகள் அமையக்கூடும். ஸ்டண்ட் கலைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வீடு கட்டும் யோசனை உள்ளவர்கள் சிறிது காலத்துக்கு ஒத்திவைக்கவும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளன்னம் நைவேத்யம் செய்து வணங்கிவிட்டு அதை உடல் ஊனமுற்றவர்களுக்கு விநியோகம் செய்து வாருங்கள். சகல நன்மைகளும் உண்டாகும்.

தனுசு - மூலம், பூராடம், உத்திராடம்-1ஆம் பாதம்

இந்த மாதம் ராசிநாதன் குருபகவான் அருளால் பெரும்பாலும் நற்பலன்களே நடைபெற்று வரக் காண்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனயோகம் உண்டாகும். பழைய கடன்கள் தீரும். வீடு அல்லது வாகனத்தை லாபகரமாக விற்க வாய்ப்புண்டு. சிலருக்கு சுபகாரியங்களை முன்னின்று நடத்த வாய்ப்பு ஏற்படும்.
தொழிற்பிரிவினர் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவர். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இடமாற்றத்தை எதிர்பார்த்தவருக்கு இந்த மாதம் சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் தொடர்பான பிரச்னைகளில் திருப்திகரமான போக்கைக் காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் இருந்து வரும். வியாபாரத்தில் திபருப்திகரமான போக்கு தென்படும். ஆயத்த ஆடைகள், நூதனப் பொருள்கள் கூடுதல் வியாபாரமாகி அதிக ஆதாயம் தரக்கூடும்.
மாணவ மணிகளின் படிப்பார்வம் பலரும் பாராட்டத்தக்க வகையில் அமையும்.
பெண்களின் ஒத்துழைப்பும், சமயோசிதப்போக்கும் குடும்ப அமைதிக்குப் பெரிதும் பயன்படும். ஆலய தரிசனம் கண்டுவர ஒரு பயணத்தை மேற்கொண்டு சென்று திரும்புவீர்கள். குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெற இடமுண்டு. மணமான பெண்களில் சிலர் மகப்பேறு பாக்கியத்தைப் பெற்று மகிழக்கூடும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், துளசிமாலை சாத்தி வணங்கி வருவதன் மூலம் சகல முன்னேற்றங்களும் உண்டாகும்.

மகரம் - உத்திராடம்-2,3,4ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்-1,2ஆம் பாதங்கள்

இந்த மாதம் தனஸ்தானத்தில் இருக்கும் புதபகவானால் பாக்கியங்கள் பெருகும். என்றாலும் தேவையற்ற விவாதத்தால் ஓரிரு சிறு அசௌகர்யங்களையும் சந்திக்க நேரும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் செல்ல வாய்ப்பு ஏற்படும். குலதெய்வ வழிபாட்டிற்கு முயற்சி எடுப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் தீரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவின் காரணமாக சில தனிப்பட்ட சலுகைகள் கிடைக்கக்கூடும்.
மாணவமணிகள் மாதபிற்பகுதியில் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரம் திருப்திகரமாக நடைபெறும். தொழிற்பிரிவினர் வளர்ச்சியைக் காண்பீர்கள்.
குடும்பத்தில் முழுமையான நிம்மதி காணப்படும். பெண்களின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று பலரது பாராட்டுகளைப் பெறும்.
தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் நெருப்பின் அருகில் பணிசெய்யக்கூடியவர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டு வருவது அவசியம். தெய்விகச் சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். யாரிடமும் கோபம் கொள்ளாமல் பொறுமையாய் இருந்து வருவது அவசியம். உடல் நலத்திற்கு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புத்திரவழியில் மனக்கலக்கம் ஏற்படக்கூடும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பரிகாரம்: குருபகவான் காயத்ரியை தினமும் 11 முறை சொல்லி வாருங்கள். உங்கள் கவலைகள் நீங்கும். களிப்பு பொங்கும்.

கும்பம் - அவிட்டம்-3,4ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி-1,2,3ஆம் பாதங்கள்

இந்த மாதம் ஜீவனஸ்தானத்தை பார்வையிடும் சுக்ரபகவான் அருளால் பெரும்பாலும் நற்பலன்களையே எதிர்பார்க்கும் நிலையுண்டு. வரவேண்டிய பணம் வந்து சேரும். நெருங்கிய சொந்தங்கள் இடையே இருந்த பகை மறையும். புதிய வண்டிவாகன சேர்க்கை உருவாகும். திட்டமிட்ட ஒரு நல்ல காரியம் நல்ல முறையில் நடந்தேறும்.
உத்தியோகஸ்தர்கள் உங்கள் விருப்பங்களில் பெரும்பாலும் நிறைவேறக் காண்பீர்கள். வியாபாரம் நல்ல முறையில் லாபகரமாகவே நடைபெற்று வரும். தொழிற்பிரிவினர் திருப்திகரமான முன்னேற்றத்தைக் காண முடியும்.
மாணவ மணிகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
குடும்ப நிர்வாகம் பெண்களின் திறமையால் குறையேதும் இல்லாமல் நடைபெற்று வரும். சகோதர வழியில் ஒத்தாசைகள் ஏற்படக்கூடும். பிற மதத்தவர் ஒருவரின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கக்கூடும். உறவினர் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடுமாயினும் அதன் மூலம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் உருவாகும். அரசு வழியில் சில அனுகூலங்கள் ஏற்படலாம்.
கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை சிவப்பு மலர்களால் வழிபட்டு வாருங்கள். உங்கள் சிரமங்கள் குறையும். செழிப்பு உண்டாகும்.

மீனம் - பூரட்டாதி-4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

இந்த மாதம் ஜன்மராசியில் சஞ்சரிக்கும் சூரியனால் சில விஷயங்களில் பதற்றப்பட நேரலாம். நிதானமும், பொறுமையும் மிகவும் அவசியம். இல்லையேல் சில சிரமங்கள் ஏற்பட வாயப்புண்டு. நெருங்கிய சொந்தங்கள் இடையே சிறு மனஸ்தாபம் உண்டாகும். கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிப்பது பிரச்சனையைத் தீர்க்கும்.
உத்தியோகஸ்தர்கள் உங்கள் உயர் அதிகாரிகளின் திருப்திக்கேற்றபடி உங்கள் பணிகளில் அக்கறையும், ஆர்வமும் காட்டி வருவது அவசியம்.
மாணவ மணிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்.
குடும்ப நிலையில் சில சச்சரவுகள் ஏற்படக்கூடிய நிலை உண்டு என்றாலும் பெண்கள் அதைப் பக்குவமாகச் சமாளித்து நிம்மதி ஏற்படுத்துவீர்கள். குடும்பத்தில் உள்ள முதியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வது அவசியம்.
பெண்கள் சிலருக்கு சொத்து சம்பந்தமாக பிரச்னைகள் எழக்கூடும். என்றாலும் அது சுமுகமாகச் சமாளிக்கப்பட்டு விடும். இறைவழிபாட்டில் ஈடுபடுவது நன்மைதரும்.
கலைஞர்கள் சில வாய்ப்புகளைப் பெறக்கூடும். சக கலைஞர்களின் போட்டிகளும் இருக்கும்.
பரிகாரம்: தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதிவந்தால் நன்மைகளும், மனநிம்மதியும் கிடைக்கப்பெறும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

மங்கையர்மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 5:42 pm

நம்பும் நண்பர்களுக்கு பயன் படும் பதிவு - நன்றி பிரசன்னா.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 10, 2012 5:43 pm

ஆமா இனியவன் சொன்ன மாதிரி நம்புரவங்களுக்கு பயனுள்ள பதிவு.
நன்றி பிரசன்னா

ஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Uஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Dஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Aஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Yஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Aஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Sஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Uஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Dஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! Hஏப்ரல் மாதம் எப்படி? - துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்! A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 5:45 pm

உதயசுதா wrote:ஆமா இனியவன் சொன்ன மாதிரி நம்புரவங்களுக்கு பயனுள்ள பதிவு.
நன்றி பிரசன்னா
புன்னகை நம்மள நம்ப வைக்க அவரு ராசில என்ன பரிகாரம் போட்டிருக்கோ தெரியலயே - அந்த கிளிக்குதான் வெளிச்சம். புன்னகை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 11:27 am

கொலவெறி wrote:நம்பும் நண்பர்களுக்கு பயன் படும் பதிவு - நன்றி பிரசன்னா.

அப்ப நம்பாதவங்களுக்கு ? ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக