புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_lcapமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_voting_barமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநிறைவுடன் வாழ்கின்றோமா?

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 4:21 pm

First topic message reminder :

புகழ்பெற்ற பாரசீக நாட்டு கவிஞர் கலீல் ஜிப்ரானின் உலகப் புகழ்பெற்ற வரிகள்: “குழந்தைகள் உங்களால் வந்தவை அல்ல...! உங்கள் மூலம் வந்தவை....!!” இது பெற்றோருக்கு அவர் சொன்னது

பெற்றோர் மூலம் நாம் எடுத்திருக்கும் இந்த உடல், இயற்கையின் இணையில்லா அற்புதம். இந்த வாழ்க்கையில் எதைச் செய்தாலும் இந்த உடம்பால் மட்டுந்தான் செய்ய முடியும். சோகம், மகிழ்ச்சி, துக்கம், உற்சாகம், நோய் போன்ற எல்லாவற்றையும் கண்டுணர்ந்து உடல் மூப்பை நோக்கிச் செல்கிறது. இன்பமோ, துன்பமோ எதுவானாலும் அதை அனுபவிக்க இந்த உடல் தேவைப்படுகிறது.

மனிதனின் உடலை இயக்குவது அவன் உணர்வுகள். ஒவ்வொரு மனிதனுமே உணர்வுகனின் சங்கமம்தான். மனிதன் தன் உணர்வுகளை தேவைக்கு தக்கபடி வெளிப்படுத்த வேண்டும் என்பது இயற்கையின் விதி.

அதை நாம் உடலுக்காக செய்தாக வேண்டும். ஆனால் பலரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. தனி மனித சுதந்திரம் பற்நி பேசும் நாம், தன் உடல் உணர்வுகளுக்கு சுதந்திரம் கொடுக்காமல் உடலுக்கே தீங்கு செய்கிறோம்.

துக்கம் வந்தால் அழ வேண்டும். சோகத்தில் துவண்டாலும் வாய்விட்டு அழுவது கெளரவத்திற்கு, பதவிக்கு, வயதுக்கு, பாலினத்துக்கு தீங்கு என நினைத்து அழுகையை அப்படியே அடக்கி பூட்டுவோம்.

சிரிக்க வேண்டும். சிரிப்பதற்கு பலவற்றையும் ரசிக்க வேண்டும். ரசிக்க வேண்டும் என்றால் மனதில் அமைதி வேண்டும். நிம்மதியான வாழ்க்கையில்லை. ரசிப்பில்லை. சிரிப்பில்லை. சிரிக்காத மனிதன் பூக்காத மரம்போல்! அவன் உணர்வுகளுக்கு வடிகால் கொடுக்காமல், உடலை இறுக்கி அடைத்து மூடுகிறான்.

கோபமும் ஒரு உணர்வே. கோபமின்றி மனிதனால் வாழ முடியாது. தன் எல்லையை, தன் கெளரவத்தை தன் உரிமையை, உண்மையை காக்க அவனுக்கு கோபம் தேவை. ஆனால் அந்த கோபத்தை முறைப்படுத்தி அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்தவேண்டும்.

இயற்கை உபாதைகளுக்கான உணர்வு தோன்றும்போது அதை வெளியேற்றிட வேண்டும். அதுபோல் கோபம், மகிழ்ச்சி, அழுகை போன்ற உணர்வுகள் தோன்றும்போதும் அதை வெளியேற்றிட வேண்டும். மாறாக அடக்கிவைத்தால் அது தேவையற்ற பொருளாய் உள்ளே தேங்கி உடலை பாதிக்கிறது. உணர்வுகளைத் தேக்கி நாம் உடலை வதைக்கிறோம்.

மனித உடல் உழைக்க உருவெடுத்தது. அதற்கு உணவு போன்றது உழைப்பு. ஆனால் இப்போது உழைக்கும் வாய்ப்பை உடலுக்கு பலரும் கொடுப்பதில்லை. இதனால் உழைப்பற்ற உடல், கனத்துப் போகிறது. டாக்டர்கள் மாத்திரைகள் எழுதிக் கொடுப்பதுபோல் காலையில் 40 நிமிடம் நடவுங்கள்.
மாலையில் 20 நிமிடங்கள் ஓடுங்கள் என்று சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள். உடலுக்கு இயல்பான வேலையை கொடுக்காததால், இயல்புக்கு மாறாக நடக்கவும், ஓடவும் வைக்கப்படுகிறோம். ஓட்டமும், நடையும் உடலுக்குள் திணிக்கப்படுகிறது. அதையும் செய்யாதபோது உடல், நோயை வரவேற்று உள்ளே உட்கார வைத்துவிடுகிறது.

உடல் உழைப்பிற்கும், சிந்தனைக்கும் தொடர்பு இருக்கிறது. நன்றாக உடல் உழைப்பு இருக்கும்போது அவன் சிந்தனை உழைப்பு சார்ந்ததாக ஆகிவிடும். உழைப்பு இல்லாத போது அவன் சிந்தனை நாலாபுறமும் சுற்றும். அப்போது அவன் பார்வையில் எதுபடுகிறதோ அதைப் பற்றி அதிகம் சிந்திக்கத் தொடங்கிவிடுவான்.

பணம் தெரிந்தால் அதையும், பெண் தெரிந்தால் அவளையும், பதவி தெரிந்தால் அதையும் சுற்நிச் சுற்நி சிந்தித்துக் கொண்டிருப்பான். முரண்பாடான சிந்தனைகளும் உடலை பாதிக்கிறது.

மனித மனம் ஏக்கத்தின் மையமாக விளங்குகிறது. தனக்குக் கிடைக்காத ஒன்றிற்கு ஏங்குவதே பல நேரங்களில் அதன் வேளையாகிவிடுகிறது. தான் எதிர்பார்ப்பது அத்தனையும் கிடைத்தாலும், பின்பு சாதாரண மனிதனைப் பார்த்து புலம்புவான். ‘என்னிடம் என்னவெல்லாமோ இருக்கிறது. ஆனால் இந்த சாதாரண மனிதனிடம் இரண்டு கைகளும், கால்களும், உழைப்பும் மட்டும்தான் இருக்கிறது. அவன் நிம்மதியாக தூங்குகிறான். என்னால் முடியவில்லையே’ என்று ஏங்குகிறான். அப்படியானால் உயர்வு எது? தாழ்வு எது? ` நிம்மதியாக தூங்குவதுதானே உயர்வு. அதைத் தேடாமல் தேவையற்ற பணம், பதவி என்று உடலை வருத்தி அலைந்து கொண்டிருப்பது ஏன்?

உயர்ந்த நிலை தாழ்ந்த நிலை இரண்டும் மனிதனால் உருவாக்கப்பட்டவைதான். உண்மையில் உயர்ந்த நிலை என்பது உயர்வானதும் இல்லை. தாழ்ந்த நிலை என்பது தாழ்வானதும் இல்லை. தனக்கு கிடைக்காததை எப்போதுமே மனிதன் உயர்ந்ததாக நினைப்பான். ஆனால் அது யாரிடம் இருக்கிறதோ அதை அவர்கள் மிகச் சாதாரணமாக கருதிக் கொண்டிருப்பார்கள்.

மனித மனம் ஏக்கமின்றி நிம்மதியாய் இருக்க ‘மன நிறைவு’ தேவை. ஆனால் எல்லோருமே மனநிறைவற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். படிப்பில், பணத்தில், அழகில், பதவியில், வளர்ச்சியில் நிறைவு இல்லவே இல்லை.

படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். படித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் படிப்பில் நிறைவு வரவில்லை. படித்ததாலும் நிறைவு வரவில்லை.

வேலை... வேலை என்கிறார்கள். வேலை பார்த்தாலும், கைநிறைய சம்பாதித்தாலும் பணத்தில் நிறைவு இல்லை.

தொழில் தொழில் என்கிறார்கள். அதைத் தொடங்கி லட்சங்கனில் சம்பாதித்தாலும் அதிலும் நிறைவு வரவில்லை.

காதலிக்க ஆசைப்பட்டார்கள். காதலித்தார்கள். அதிலும் நிறைவு இல்லை. கல்யாணம் செய்து கொண்டார்கள். குழந்தைகளும் பெற்றுக்கொண்டார்கள். அதிலும் நிறைவில்லை.

அழகுக்கு ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் பிறப்பிலே அதைக் கொடுத்தும், மனதை நிம்மதியாக வைத்துக்கொண்டு அதை காப்பாற்றிக் கொள்ளலாம். உச்சி முதல் பாதம் வரை மொத்தமாய் அழகுபடுத்துகிறார்கள். ஆனாலும் அழகில் நிறைவு வரவில்லை.

பதிவிக்கு ஆசைப்படுகிறார்கள். அது கிடைத்தும் நிறைவில்லை. யாரைப் பார்த்தாலும் அவரைப் போல் தானும் ஆகவேண்டும். எதைப் பார்த்தாலும் அதுவும் தனக்கு கிடைக்க வேண்டும் என்ற குறை மனதோடுதான் வாழ்கிறார்கள்.

மனதுக்கு நிறைவில்லை. வாழ்க்கை நிறைவே இல்லாமல் போனாலும், உடல் நிறைவு தந்துவிடும் அதுதான் மரணம். அதனால் மரணத்திற்கு முன்னால் நிறைவோடு வாழ பழகிக்கொள்ளுங்கள். மரணத்திற்கு பிந்தைய மகிழ்ச்சி வாழும் எதிலேயும் கிடைக்க என்ன வழி என்று பாருங்கள். அதற்காக மனதை, உடலை பராமரியுங்கள்.

உடலுக்கு செய்யும் துரோகத்தை சுகம் என்று சொல்லிக் கொள்வதற்காக உங்களால் முடிந்த வேலைகளை செய்யக்கூட ஆட்களை நியமித்துவிடுகிறார்கள். உங்கள் வேலைகளை அவர்கள் செய்யும்போது அவர்கள் மீது உங்களுக்கு அன்பு உருவாக வேண்டும்.

மாறாக அதைச் சரியாக செய்யவில்லை. இதைச் சரியாக செய்யவில்லை என்று கூறி எரிச்சலையும் கோபத்தையும் கொட்டி உணர்ச்சிவசப்படுகிறார்கள். அது உங்கள் உடலுக்கு நீங்கள் செய்யும் துரோகத்தை இரட்டிப்பாக்குகிறது.

இப்படி துரோகங்களை தாங்கும் உடம்பு, நீங்கள் விரும்பிய நிலைக்கு ஒத்துழைக்காதபோது வலியையும், பிரச்சினைகளையும் தருகிறது. அதை நோய் என்கிறோம். ஆஸ்பத்திரிக்கு சென்று தங்கி, சிகிச்சை பெறும் நிலை ஏற்படுகிறது. அங்கே உடல் குன்றும்போது மனமும் குன்றிவிடக்கூடாது. டாக்டர்கள் உடலை சரிசெய்து கொண்டிருக்கும்போது உறவினர்கள் நண்பர்கள், நோயானியின் மன உணர்வுகள் குன்றிப்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த உலக வாழ்க்கையில் உங்களில் பலர் ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி, அண்ணன், தங்கை என்று இணைந்திருக்கிறார்கள். உங்களோடு நெருக்கமாய் சிலர் உறவினர்களாய், நண்பர்களாய் இருக்கிறார்கள். நினைத்துப்பாருங்கள். இது ஒரு முன் தொடர்பில்லாத ஒருங்கிணைப்பு இல்லை.

உங்கள் பந்த பிணைப்புக்கு பல ஜென்ம தொடர்பு இருக்கும். அந்த பந்தத்தில் நீங்கள் ஒருவருக்காக இன்னொருவர் செய்ய வேண்டியது நிறைய இருக்கும். அதனால் அவருக்கு வந்த வலியில் உங்களுக்கும் பங்குண்டு என்பதை உணரவேண்டும். ஆகவே அந்த நோயானிக்கு ஆறுதல், தேறுதல், பண உதவி, பராமரிப்பு போன்றவைகளை நீங்கள் செய்தாக வேண்டும்.

உடலில் உள்ள அத்தனையையும் அனுபவிக்கத் தேவையானது இந்த உடல். இன்பங்களை அனுபவிக்கும்போது இந்த உடல், சுகத்தின் சின்னமாகத் தெரியும். நோய்வாய்ப்பட்ட காலத்திலோ, முதுமையிலோ உடல் சுமையாகிவிடும்.

சுகத்தின் போது இலகுவாகும் உடல் சுமையின் போது மனதளவிலும் கனக்கும். ‘இதை சுமந்துகொண்டு எப்படி நாட்களை ஓட்டுவோம்’ என்று அந்த நேரத்தில் வருந்தாமல், ‘இந்த உடல் நிரந்தரம் இல்லை. இது அழியக்கூடியது. இறுதி நிலையை நான் கசப்பானதாக கருதவில்லை. இனிப்பானதாக உணருகிறேன்’ என்ற பக்குவத்திற்கு மனதைக் கொண்டு சென்றுவிட்டு ஆகவேண்டியதைப் பாருங்கள்.

இந்த உலகத்தை `தங்கள் பிருந்தாவனமாக பார்க்கிறார்களா? போர்க்களமாக பார்க்கிறார்களா?

பிருந்தாவனம் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளையும் பார்க்காதீர்கள். அது உங்கள் உணர்வுகளுக்கு ஊறு ஏற்படுத்தி உடலைக் காயப்படுத்திவிடும். போர்க்களம் என்று நினையுங்கள். இங்கே சண்டை நடக்கும். விபத்து நடக்கும். கொலை நடக்கும். சதி நடக்கும். நம்பிக்கை துரோகம் நடக்கும்.

இதெல்லாம் நடக்கும் கூட்டுக்கலவைதான் உலகம். இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நீங்கள், இங்கே பிருந்தாவனத்தை மட்டும் எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருக்கக்கூடாது. உலகத்தின் தன்மைக்கு ஏற்ப நீங்கள் மாறிக்கொண்டே இருந்தால்தான் உங்கள் உணர்ச்சிகளையும், உடலையும் உங்களால் பாதுகாக்க முடியும்.

இதில் இன்னொரு விஷயத்தை பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முதியோர்கள். அவர்கள் ‘எங்கள் காலத்தில் இப்படி எல்லாம் உலகில் வன்முறை, கொலை, குண்டுவெடிப்பு போன்றவைகள் எல்லாம் இருந்ததில்லை’ என்பார்கள். வன்முறையின் முடிவு மரணம். அந்த மரணம் எந்த காலத்தில் இல்லாமல் இருந்தது?!

மரணம் இப்போது வெடிகுண்டு, துப்பாக்கி போன்ற நவீன கருவிகளால் வருகிறது. முந்தைய நாட்கனில் அதுவே பிளேக் நோயாக, அம்மை நோயாக வந்து ஐம்பதாயிரம், ஒரு லட்சம் அப்பாவி உயிர்களை அள்ளிக்கொண்டு போனது.

வன்முறையும் இல்லை, நோயும் இல்லை என்று எந்த நாடும் மார்தட்டிக்கொள்ள மரணம் வாய்ப்பளிக்காது. அங்கே ஒரு பூகம்பத்தை அவிழ்த்து விட்டு, ஒரு லட்சம் பேரை சடலமாக்கிவிடும்...! அல்லது சூறாவளி அல்லது பெருமழை... ஏதாவது ஒன்றின் மூலம் மனிதர்களை மடியச் செய்து விடும்.

ஆக மரணம் என்பது நேற்றும், இன்றும், நாளையும் இருக்கும். அதற்கு பெயர்கள்தான் வேறு... வேறு! வரும் வழி முறைதான் வேறு... வேறு! அதனால் மரணத்தை நினைத்து பயப்படுவது அவசியமற்றது!

பாபு புருஷோத்மன்

மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Mon Apr 09, 2012 11:48 pm

யாதார்த்தமாய் இருந்தாலும் ...இப்படி இருப்பது சிரமம். நல்ல கருத்துகள்

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 09, 2012 11:54 pm

படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். படித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் படிப்பில் நிறைவு வரவில்லை. படித்ததாலும் நிறைவு வரவில்லை.

வேலை... வேலை என்கிறார்கள். வேலை பார்த்தாலும், கைநிறைய சம்பாதித்தாலும் பணத்தில் நிறைவு இல்லை.

தொழில் தொழில் என்கிறார்கள். அதைத் தொடங்கி லட்சங்கனில் சம்பாதித்தாலும் அதிலும் நிறைவு வரவில்லை.

காதலிக்க ஆசைப்பட்டார்கள். காதலித்தார்கள். அதிலும் நிறைவு இல்லை. கல்யாணம் செய்து கொண்டார்கள். குழந்தைகளும் பெற்றுக்கொண்டார்கள். அதிலும் நிறைவில்லை.

அழகுக்கு ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் பிறப்பிலே அதைக் கொடுத்தும், மனதை நிம்மதியாக வைத்துக்கொண்டு அதை காப்பாற்றிக் கொள்ளலாம். உச்சி முதல் பாதம் வரை மொத்தமாய் அழகுபடுத்துகிறார்கள். ஆனாலும் அழகில் நிறைவு வரவில்லை.

பதிவிக்கு ஆசைப்படுகிறார்கள். அது கிடைத்தும் நிறைவில்லை. யாரைப் பார்த்தாலும் அவரைப் போல் தானும் ஆகவேண்டும். எதைப் பார்த்தாலும் அதுவும் தனக்கு கிடைக்க வேண்டும் என்ற குறை மனதோடுதான் வாழ்கிறார்கள்.

மனதுக்கு நிறைவில்லை. வாழ்க்கை நிறைவே இல்லாமல் போனாலும், உடல் நிறைவு தந்துவிடும் அதுதான் மரணம். அதனால் மரணத்திற்கு முன்னால் நிறைவோடு வாழ பழகிக்கொள்ளுங்கள். மரணத்திற்கு பிந்தைய மகிழ்ச்சி வாழும் எதிலேயும் கிடைக்க என்ன வழி என்று பாருங்கள். அதற்காக மனதை, உடலை பராமரியுங்கள்

எதிலும் நிறைவு இல்லை சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 09, 2012 11:56 pm

எதிலும், எப்போதும் எப்படியும் இல்லாதது அது. ஒன்று முடித்து விட்டால் அடுத்த கட்டத்திற்கு மனம் ஏங்கத்தானே செய்கிறது. சோகம்
அனுபவப் பூர்வமான பயனுள்ள பதிவு. நன்றி சிவா...

மனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 Aமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 Aமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 Tமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 Hமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 Iமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 Rமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 Aமனநிறைவுடன் வாழ்கின்றோமா? - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக