புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 வது கவிக்கொத்து 10 கவிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 09, 2012 12:56 am

ஆசீர்வதியும் இயேசுவே!

ஆண்டவரே எமை மீட்கவென - பல
ஆண்டுகள் முன் பிறந்தீர்
வேண்டிநின்றோர் தம் பாவங்களை - உங்கள்
இரத்ததினால் துடைத்தீர்
மாண்டு அழும் இந்த ஏழைகளை - நீர்
மறுபடி காக்கவென
மீண்டும் பிறந்திந்தப் பூமியிலே எமை
மீட்டிட வாரீரோ

ஆண்டுபல பெரும் மேடுபள்ளம் - என
அலைந்தே நிலையழிந்தோம்
வேண்டுமென நல்வாழ்வையெண்ணி - விடி
வெள்ளியின் திசைநடந்தோம்
மீண்டுமொரு நல்வாழ்வு இதோ - எனும்
வேளையிற் பலமிழந்தோம்
நீண்டு செல்லும் இத்துன்பங்களை - நீர்
நிறுத்திட வாரீரோ

தேடுகிறோம் பசும்புல்வெளிகள் - எம்
தேவையை நீர் உணர்வீர்
வாடுகிறோம் வலிதானிழந்தோம் எம்
வாசலில் பேயினங்கள்
நாடிழந்தோம் எம் இனமிழந்தோம் - நாம்
இருப்பது இருட்டறையில்
தேடுகிறோம் ஒளிவாழ்வுபெற - அருள்
தேவனே மீட்பீரோ

எத்தனை சிலுவைகள் சுமந்துவிட்டோம் - எம்
பாவங்கள் தீரவில்லை
எத்தனை கடல்களும் கடந்துவந்தோம் - எம்
தாகங்கள் தீரவில்லை
எத்தனை மலைகளும் ஏறிவந்தோம் - எம்
பாதங்கள் நோவெழுந்தே
எத்துணை வலிதனை பட்டுவிட்டோம் - எமைக்
காத்திட வாரீரோ

பாலகனே உமை வேண்டுகிறோம் - எம்
பாவங்கள் நீக்கிவிடும்
காலமெலாம் நாம் கண்ட துயர் - உங்கள்
கருணையினால் செழிக்கும்,
மேலலுகின் அருள்தேவமைந்தா - நாம்
மீண்டும் பிறப்பவராய்
ஞாலமதில் நல் வாழ்வுபெற - எமை
ஆ..சீர்வதித் தருளும்

சிலுவையி னின்று மறுபடியும் - நீர்
ஜீவனம் பெற்றிருந்தீர்
வலுவிழந்தோம் இனி உயிர்த்துஎழ - நல்
வார்த்தையைக் கூறிவிடும்
மேலுகில் அந்த மூவுலகில் -ஒளி
ஞானமுடன் திகழ்வீர்
பாலைவனம் போல் எங்கள் நிலம் - பசுஞ்
சோலை யென்றாக்கிடுவீர்

******************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 09, 2012 1:09 am



கவிதை 2

பெறு உயர்வு

திடமொடு திரும்பு, உடைபடஇரும்பு
என இரு உறுதி எடு
பட இது துரும்பு பகைதனும் எறும்பு
பாரென அதை நொறுக்கு
முடமென இருந்து மனமதில் சரிந்து
முழுவதும் தீஎரிந்து
விடுமென வரிந்து கொளும்நினை வுரிந்து
விடு, எழு, வெற்றிபெறு

தருவது கரும்பு என மனம் விரும்பு
தரணியில் அன்பினொடு
பருகிடு அருந்து பலமெனும் மருந்து
பார்துணிவினை நெருங்கு
உருகிடு வருந்து உண்மையில் தவறு
உனதெனில் உடன் திருந்து
அருகிடு சரிந்து விழுவதி லிருந்து
ஆற்றலை அறிந்து பெறு.

முதலினில் தொடங்கி உறுதியை விரும்பு
முழுதெனக் கவலைவிடு
மதமுடன் நடந்து மகிழ்ச்சியை இழந்து
மறுகுதல் பெருந்தவறு
அகமதில் மலர்ந்து, அறமதை வரிந்து
ஆனந்தமே பருகு
விதமதில் பருந்து விண்வெளி பறந்து
விளங்குதல் போலுயரு

தினந்தினம் வருது தண்ணொளிநிலவு
தேய்வதும் வளர்கிறது
தனதெழில் ஒளிர்வு தயங்குவ தரிது
தகதக எனப் பொழிந்து
மனம்புது மகிழ்வு மலர்வது நிகழ்வு
மறந்திடு பழம்நினைவு
மாறுது தரணி , மாறுதல் இயல்பு
மறுபடி உயர்வு பெறு

கலகலச் சிரிப்பு காலையி னரும்பு
காண்பது கிழக்கிருந்து
புலர் கதிரொளிர்வு பெறுமுக மலர்வு
பெறுவதில் பெருமைகொள்ளு
சலசல ஆறு சிலுசிலு காற்று
சந்தண வாசமெழு
குலவிடு உணர்வு கொளும் பெருமகிழ்வு
கொண்டு நீ வாழ்வை யெடு

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 09, 2012 1:10 am



கவிதை 3

தாயின்மடியில்....

வெண்மதி உலவும் வானெழிலோ - ஒரு
வீணையின் இன்னிசை தானோ
தண்பொழி லாடுந் தாமரையோ - நீ
தரும்மொழி இனிதாம் தேனோ
பெண்ணெனப் பாரினில் வந்தவளே - நீ
பிறை வளர் முழுமதி யாமோ
விண்வெளி வானிடை இருந்தாளும் - அவள்
வீரசக்தி யவள்கூறோ?

பண்ணிசைபோல் நீயழுதாலும் - அதில்
படுவது மனமது துயரே !
கண்களில் நீர்துளி எழுந்தாலும் - உளம்
காணுது இன்னலும் கனியே
நுண்மதி மீதினில் இருந்தாளும் - என்
நெஞ்சமதின் உயிர் நீயே
புண்ணென உள்ளமும் நோகுதடி - விழி
பொழிவது நீரெனில் மானே !

கண்மணி கறுத்தே இருந்தாலும் - அது
காண்பது ஒளியின் பிம்பம்
மண்கறுத் தே சேறானாலும் - அதில்
மலர்வது எழில்சேர் கமலம்
விண்நில விற்குறை தேய்ந்தாலும் - அது
வீசிடும் ஒளியைச் சிதறும்
பெண்ணவளே நீ கண்ணுறங்கு - ஊர்
பேசிடும் உன்புகழ் நாளும்

வெண்பருத் தி முகம் அழுதாலே - அதில்
விளைவது செந்நிற வானம்
கண்விழித்தே யரு கிருந்தாலும் - உளம்
காப்பதிலே சுகங் காணும்
செண்பகப் பூவென மணங்காணும் - உன்
சிரிப்பினில் கவலைகள் ஓடும்
தண்ணிலவே நீதரை வந்தாய் - என்
துயர்களுந் தொலைவென ஆகும்

எண்கழித்தே பின் வகுத்தாலும் - எம்
இருவரின் உயிர்களும் ஒன்றே
மண்செழித்தே வளர் பயிர்போலும் - தினம்
மளமள என வளர் கண்ணே
கண்வழிந்தே நீர் சொரிந்தாலும் - அது
களிப்பினின் எனும் நிலையொன்றே
வண்ணமயில் எனும் வடிவழகே - தனி
வசந்தமென் றாகட்டும் வாழ்வே

தண்ணெழில் சோலையுள் நடந்தாலும் -அது
தருஞ்சுகம் உனைவிடப் பெரிதோ
பெண்ணவள் நாணிடுங் குணந்தானும் - பெறும்
பேரெழில் இனி வருமன்றோ
வெண்மணல் ஆழியின் கரைமீது - தினம்
வீழ்ந்திடும் அலைகளைப் போன்று
எண்ணம் மகிழ்ந்திடு என்மகளே - உனை
ஒருநாள் போற்றிடும் உலகு!


sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 1:16 am

எல்லாமே ரொம்பவும் சூப்பருங்க மிக்க நன்றி பகிர்வுக்கு.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 14, 2012 1:45 pm

கவிதை 4

2 வது கவிக்கொத்து  10 கவிகள் Raniw

புயலும் தலைமகளும்


தலைவி:
மின்னல் அடிக்குதடீ தோழி என்
மேனி துடிக்குதிந்த நாழி
பென்னம் பெரிய மரம்வீழ - ஓர்
பிரமை தோன்றுதடிதோழி
அன்னம் என நடந்த கால்கள் இன்று
அஞ்சித் துவளுதடி ஏனோ
மன்னன் வரக் காணேன் இன்னும் - இருள்
முற்றும் கவிந்ததடி தோழி

இன்னும் பொறுக்க மனமில்லை - அவர்
என்னை நினைத்தவ ரென்றில்லை
முன்னை முகில்பொழிய இடியும் - மழை
மின்னல் தரும் துயரம் என்னில்
கன்னம் வழியுமடி தோழி அதைக்
காணப் பொறுத்தவரோ நாழி
சொன்னேன் கனவ வந்தவேளை - இனி
சூழும் துயரம் எனத்தோழி

தோழி:
எண்ணம் தவிர் இளையதேவி - இது
இன்னும் இரவு என இல்லை
கன்னம் கரு முகிலின் பின்னே - ஒளி
காணும் கதிரும் என்பதாலே
முன்னேர் இருளிதுவும் காணாய் இன்று
முழுதும் அழுதுவிழி சோர்ந்தாய்
கன்னல் மொழி கனியைவிட்டு - எந்தக்
கிளியும் இருப்ப துண்டோகூறு

தலைவி:
மூடும்இருள் எனதுவாழ்வு - என்
மோகம்,கனவு இவை மின்னல்
தேடும் முகிலெனவே நானும் - என்
திக்கில் இடியிடித்த போதும்
வாடும் விழி பொழியுங் கண்ணீர் - துளி
வந்தே வழியும்நிலம் கன்னம்
ஓடும் அருவியெனக் காணாய் - புயல்
இன்னும் இருக்குதடி கூறாய்

பொன்னென் வயல் அழிக்கும்புயலும் - மரம்
பற்றி இழுக்கும் விசைக்கரமும்
மென்னீர் தெளிக்கும் மழைதானும் - மலர்
மேனி சிலிர்க்கும் மின்னல்கூடி
மன்னர் வரவும் தடையின்றி - உடன்
மாறி வசந்தமென வேண்டும்
அன்றேல் உடல் ஒடிந்துவீழும் - அனல்
எழுந்து மனமழிந்து போகும்

************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 14, 2012 1:56 pm

கவிதை 5

மீண்டும் சக்தியிடம்!

( 2வது, 3 வது அடிகள்
தனன தானனன , தனன தானனன
தனன தானனன , தனன தானனன)


அன்பு மனம் வேண்டும் சக்தி - இந்த
அகிலம் வாழுயிர்கள் கருணையோடு தினம்
பகிரும் வார்த்தை சுகம் தருமென் றாகவொரு
அன்பு மனம் வேண்டும் சக்தி!

இன்பம் பெறவேண்டும் சக்தி - இந்த
இகமெல்லா முனது விழிகொள் பார்வைதனில்
முகமெல்லா மலர மனது மகிழ்வி லுயர்
இன்பம் பெறவேண்டும் சக்தி!

உண்மை மொழி வேண்டும் சக்தி - நல்
உயர்வு காணும் மன நினைவு கூடி எது
பயமி லாதபடி துணிவென் றாகிச் சொலும்
உண்மை மொழி வேண்டும் சக்தி !

மென்மை உளம்வேண்டும் சக்தி - பலர்
மிருகமாகிப் பிற உயிர்கள் வேதனையை
பெருகுமா யியல்பு தருங் குரோதமின்றி
மென்மை உளம்வேண்டும் சக்தி !

பரிவு இறைமை தா சக்தி - இப்
புரள்விநோத வெளி சுழலுங் கோள்கள்பல
உரசிடாம லிடை பெறும்நி தானமெனும்
உரிமை இறைமை தா சக்தி !

உள்ளம் உயர்வுபெற சக்தி - இந்த
உலகமான மறுதிசையி லோடிடினும்
கலகமேது மின்றி உயர்வு காணும்வகை
கொள்ளும் நிலைமை தா சக்தி !

அறமும் நீதியுடன் துணிவு - பெரும்,
அளவில்லா துயிர்கள் மனித வாழ்வில் வரும்
பிளவினாலே உடல் பிணமென் றாக்கும்செயல்
நிறைவு பெற வேண்டும் தாயே!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 24, 2012 9:42 pm

கவிதை 6

தமிழும் நானும் (கற்பனை)


வெண்ணிலவு ஒளியெறிக்கும்
. வேளையொரு மாலையிலே
. வீணையொலி கீதமெழப் பார்த்தேன்
கண்ணெதிரில் கால்சலங்கை
. கலகலத்த ஓசையெழக்
. கன்னியவள் நடனமிடக் கண்டேன்
பெண்ணவளோ பேசரிய
. பொன்னெழில் பூம்பாவையவள்
. பேரெனவோ கேட்க மனங்கொண்டேன்
அண்மையிலே சென்றவளைக்
. காண அதோ அவளிலையோர்
. அழகிய மான் துள்ளி ஓடக் கண்டேன்

பொன்னென மான்துள்ளுமெழில்
. கண்கவர்கொள் மோகமிடப்
. பின்நடந்து செல்ல மனம்கொண்டேன்
அன்னநடை போல்நடந்து
. அங்குதுள்ளி இங்குதுள்ளி
. அது நடந்தபாதை கண்டு சென்றேன்
முன்னொரு புல்மேடை வெளி
. புள்ளிவைத்தபொன்னெழில்மான்
. மெல்ல அதை தொட்டிட வென் றேக
மின்னியது நீல ஒளி
. கண்ணிரண்டும் கூசஅதில்
. மான் மறையப் பூவிருக்கக் கண்டேன்

வண்ணமலர் நீலமெனும்
. வட்டஇதழ் கொள்ளுமெழில்
. விந்தை தனைக் கொள்ள ஆசை கொண்டு
திண்ணமுடன் அருகணைந்து
. கையெடுத்தேன் என்னவிது
. தளதளக்கும் நீரலைகள் கண்டேன்
மண்மறைய அலையெழவும்
. பொய்கையெனும் தோற்றமுற
. மெல்லெனமுன் விரியுமெழில் காட்சி
தண்ணொளியில் மென்மலர்கள்
. ஒன்று பல ஆயிரமாம்
. தாரகையாய் வானிலெழக் கண்டேன்

வானிடையே பொன்னிழகு
. வார்த்ததெனப் புன்சிரிப்பாய்
. வந்து செலும் வெண்முகில்கள் மீது
தானிவளும் ஓடிவந்து
. தங்க நிலா மீதிருந்து
. தமிழ்மகனே, கவிதை சொல்லு என்றாள்
தேனினித்த கனியிடையே
. தின்னும்சுவை நீயெடுத்து
. தந்திடு நீ தமிழ்குழைத்து என்றாள்
மானெனவும் மலரெனவும்
. மங்கை தமிழானவள் வெண்
. மதியிடையே நிழலென வென்றானாள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 24, 2012 9:44 pm

கவிதை 7

காகிதப் பூவே காண்பதென்?

(இயற்கை)
கலை வண்ண தாளின் பூவே
. கதிர் காணும் வானம்பார்த்து
. கண் காணும் கர்வம் என்னது
அலைந்தோடும் வண்டும்தேனை
. அருந்தாமல் போகும்வாழ்வு
. அதிலென்ன இன்பம் உள்ளது
குலையென்றும் கொத்தாய் பூக்கள்
. குவிந்தாடும் போதே தொட்டு
. குளிர் கொண்ட காற்றும் ஓடுது
நிலை கொண்டதென்னே நீயோ
. நிறந்தானே வாசமில்லை
. நிமிர்ந்தாடும் இன்பம் என்னது?

(காகிதப்பூ)
மகிழ்ந்தாடும் பூக்களெல்லாம்
. மணந்தாலும் வண்டின்தொல்லை
. மனங்கூசத் துன்பம் செய்வது
நிகழ்வான திங்கே இல்லை
. நெருங்காது ஊதும் வண்டு
. நிதம் ஏய்க்கும் வேலை என்பது
அகல்வானின் வெம்மை எந்தன்
. முகம்மீது கொள்ளும் இன்பம்
. அதுபோதும் என்றும் வாழ்விது
இகம்மீதில் காணும் இன்பம்
. ஏகாந்தம் ஒன்றே உண்மை
. இதுபோதும் என்னை விட்டிடு

(இயற்கை)
படர்ந்தாடும் கொடியின் பூவும்
. பிறந்தாகும் பயனைக்கோவில்
. புகுந்தோடி வாழ்வில் கொள்ளுது
நடந்தாடும் மங்கை கூந்தல்
. இணைந்தாடி நன்மைசெய்து
. நாள்தோறும் இன்பம் கொள்ளுது
அடர்தோங்கும் பூவின் தோட்டம்
. அழகென்னே பல்சேர்வண்ணம்
. இணைந்தங்கு இன்பம் கொள்ளுது
இடம்மாறி உள்ளோர்பூவே
. இவையாவும் இல்லாவாழ்வும்
. எதைகொண்டு நன்மை சேர்க்குது

(காகிதப்பூ)
தொட்டாலுங் குத்தும் முள்ளும்
. தோதற்ற மணமும் சிந்தை
. தூங்கிடச் செய்யும் வாசமும்
கட்டெழில் மங்கை கூந்தல்
. கறுப்பதைத் தூய்மை செய்தும்
. காண்பதில் மாயை கொள்ளவும்
எட்டாத பரமன் மேனி
. தொட்டாலும் தாயின் அன்பை
. விட்டேகும் வாழ்வும் வேண்டிலேன்
மொட்டாக முகிழ்ந்தாலும்பின்
. தொட்டேகும் வண்டால் நொந்து
. பட்டேமண் வீழ்தல் இல்லை காண்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 24, 2012 9:45 pm

கவிதை 8

நந்தனவும் நாங்களும்

வெற்று வெளியினிலே - பட்டு
வீழ்ந்த மரமிருக்க
சுற்றிவருங் காற்று - எந்தச்
. சேதியைச் சொல்லுதப்பா
உற்றவர் துன்பமெல்லாம் - இனி
. ஓடிமறையுமென்று
சற்றுப் பொறுத்திருக்க - ஒரு
. சங்கதி சொல்லுதப்பா

அற்றவர் வாழ்க்கையெலாம் - பல
. அல்லல்கள் ஆயினவாம்
இற்றைநிலை சிறக்கும் - என
. எண்ணவும் தோன்றுதப்பா
குற்றுயிர் பட்டமரம் - இனிக்
. கூடித் துளிர்த்திடுமாம்,
கற்றவர் கைவினைகள் - இதை
. காணும்வகை செய்யுமாம்

நந்தன வந்த விதம் - பெரு
. நன்மைகள் சேர்த்திடுமோ
வந்தன செய்தவைபோல் - தானும்
. வைத்த விழி மூடுமோ
நொந்தன உள்ளங்களே - நிதம்
. நோவெழுதாம், இவர்கள்
சொந்தமண் மீதிருத்தி - இனிச்
. சொர்க்கத்தைக் காட்டிடுமோ

பந்தை அடித்துவிடச் - சுவர்
. பட்டுத் திரும்புவதாய்
எங்கவர் மீதடித்த - குறி
. இன்றவர் நோக்குதப்பா
செந்தமிழ் ஈழவர்கள் - இனிச்
. சற்றுத்தலை நிமிர்வார்
விந்தையொன்று நடக்கும் - அது
. விதியை மாற்றுமப்பா

சந்தணம் பூசியவோர் - தமி்ழ்ச்
. சங்கக் கடவுளெல்லாம்
வந்தவர் போகச்சொல்லி - வான
. வெள்ளி முளைக்கமுதல்
குந்துவராம் துறவி - அவர்
. கோவிலென் றாகிடுதாம்
இந்தநிலை மாறுமோ - இன்னு
. மெத்தனை நாளிருக்கு

நந்தன செய்திடுவாள் - நலம்
. காத்து அருள்புரிவாள்
எந்தமரம் அரசு - அது
. இப்போ முளைத்திடினும்
பிந்தி வரும் வேம்பு - அது
. பேசு மொரு வீம்பு
சந்தி தெருக்க ளெல்லாம் - வரும்
. சந்தனம் குங்குமமே

நந்தன வந்தது காண் - இனி
. நல்லதோர் கல்லு வைத்து
செந்தணல் இட்டதிலே - நாங்கள்
. செய்வது பொங்கலப்பா
இந்த உலக மது - எம்மை
. ஏறிட்டு நோக்குதப்பா
நொந்தவர் தம் விழிநீர் - மெல்ல
. நீதிக்கடல் விழுந்தே

உந்திப் பெரிதெழுதாம் - இதற்
. குற்ற துணை அலையாம்
இந்த விதியெழுதும் - கதை
. ஏற்றமுடைத்த தன்றோ
நந்தி மறைத்த தெய்வம் - இன்று
. நன்கு தெரியுதப்பா
செந்தமிழோர் பொறுமை - இன்று
பொங்கிடும் சித்திரையாம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 24, 2012 9:48 pm

கவிதை 9
துயர் களைவாய்

அழதொழ விழஎழ உணர்வுகள் தந்தாய்
அனுதின முனைத்தொழு வெனஅறி வீந்தாய்
தொழவிரு கரங்களு முழுதென வைத்தும்
எழவதில் வலிமைகுன் றிடும் குறை வைத்தாய்
தொழுவர இடையினில் தடையெது செய்தாய்
விழவென திருவடி தனில் தொட விளைந்தும்
விழி தனில் ஒளியின்றி இருளுற வைத்தாய்
கழுவிட மனயிருள் கருணை ஒறுத்தாய்
கணமெனும் இரங்கிடும் நிலைகொள மறுத்தாய்

பலமெழ ஒருசிலர் புவியிடை வைத்தாய்
பழிகொளும் மனதொடு பகைவரச் செய்தாய்
சொலுமவர் மொழி தனும் இடிமழை கிணையாய்
சுடுநெருப் பிடைவிரல் தொடுமிடர் செய்தாய்
சுகமெனும் மனமலர் கருகிட விட்டாய்
சுடும் அனல் எரிதண லிடையதை இட்டாய்
தலைநிமிர் வெனஎழ தரணியில்பட்டே
தரைவிழு விதியென இருள்கொள வைத்தாய்

அலையெழு வகையென ஆர்ப்பரித் தெழுமே
அதுவென மனம்பெற மகிழ்வினைத் தருவாய்
தலைகொள வரும்விதி தவறிடச் செய்வாய்
தமிழ் சொல அழியெனும் பகைவரை கேட்பாய்
இலையினி துயரென எமதுயிர் காப்பாய்
இகழ்வென பலருமிழ்ந் திடும்நிலை நீக்காய்
தலையெடுத் துயர்ந்திட தைரியம் தருவாய்
தருமமும் காத்திவர் தமிழ்சொல விடுவாய்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக