புதிய பதிவுகள்
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:35

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
26 Posts - 67%
heezulia
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
11 Posts - 28%
cordiac
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
1 Post - 3%
Geethmuru
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
153 Posts - 56%
heezulia
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
9 Posts - 3%
prajai
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
1 Post - 0%
cordiac
ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_m10ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை, Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடாத ஆட்டம் ஏன்...? உரத்த சிந்தனை,


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 8 Apr 2012 - 8:15

மின் தட்டுப்பாடு, தேர்வு நேரம் பார்த்து கிரிக்கெட்டை துவக்கி விட்டனர். இன்று, பன்றிக் காய்ச்சலை விட, கிரிக்கெட் காய்ச்சல் தான் கடுமையாக இருக்கும் போலும்! இந்த, "காய்ச்சலால்' பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் மட்டுமில்லாமல், தங்களுடன் இருப்பவர்களையும், படுத்திஎடுத்துவிடுவர். "ஸ்கோர்' என்ற வார்த்தையை குத்தீட்டியாக பயன்படுத்தி, குத்தி எடுத்துவிடுவர். முன்னதிற்காவது மருந்து, மாத்திரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உண்டு; பின்னதிற்கு அதெல்லாம் கிடையாது.

அலுவலகங்களில், கேன்டீனில், வீடுகளில் இது பற்றி பேசினால் கூட, தாங்கிக் கொள்ளலாம். ஆனால், வழிபாடு செய்யுமிடங்களிலும், துக்கவீடுகளிலும் கூட, இது பற்றியே பேசுவதைத் தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நிற்பதுவும், நடப்பதுவும், பேசுவதும் அவ்வளவு, ஏன் சுவாசிப்பதும் கூட பலருக்கு, கிரிக்கெட் என்றாகிவிட்டது. "ஸ்கோர்' கேட்கும் போது, தெரியாமல் விழித்தாலோ அல்லது சிரித்தாலோ, "இது கூட தெரியாமல் இருக்கிறானே' என, வேற்றுக் கிரகத்தில் இருந்து இறங்கி வந்த, "ஜந்து'வைப் போல பார்ப்பர். வேலைக்கு போகமாட்டார்கள் அல்லது வேலைக்கு போன இடத்தில், கிரிக்கெட் பார்ப்பதையே வேலையாக கொண்டு இருப்பர். கிரிக்கெட் சீசன் ஆரம்பிக்கு போதெல்லாம் இந்த, "ஸ்கோர்' என்ற வார்த்தைக்கு பயந்து, நானும், ஆள் இல்லாத ஊரின் ஒதுக்குப்புறத்திற்கே ஓடிப் பார்க்கிறேன். ஆனால், இப்போதெல்லாம் அங்கும் ஒரு ஆள், சோகமே உருவாக நின்று கொண்டு, "இருந்தாலும் முதல் நாள் ஆட்டத்திலேயே தோனி இப்படி சொதப்பியிருக்கக் கூடாது இல்லையா சார்' என்று கேட்டு, என் ஓட்டத்தை அங்கிருந்து, மீண்டும் துவக்கி வைக்கிறார். எதிர்காலத்தை தீர்மானிக்கும், முக்கியமான தேர்வை சந்திக்கும் மாணவ மணிகள், கண்களை புத்தகத்திலும், மனதை அக்கம் பக்கம் இரைச்சலோடு ஓடிக்கொண்டு இருக்கும், "டிவி' க்கும் கொடுத்து, இப்போது என்னவாகியிருக்கும் என்று மனதை அலைபாயவிட்டுக் கொண்டு இருக்கின்றனர். படிக்கும் புத்தகங்களில், அவர்களையும் மீறி தோனியும், ரெய்னாவும், சச்சினும்தான் வருகின்றனர்; பெற்றோருக்கோ, மதிப்பெண் பட்டியல் தான் கண்முன் தோன்றி பயமுறுத்துகிறது.

அரை குறை ஆடையுடன், ஒரு நாள் முன்னதாகவே கூடுதல் காசு பார்க்க ஏற்பாடு செய்யப்பட்ட துவக்கவிழா ஆட்டம், கண்களை கூசச் செய்துவிட்டது. கிராமங்களில், கோவில் திருவிழாக்களில், ரிக்கார்டு டான்ஸ் என்ற பெயரில், ஆபாச நடனம் ஆடக்கூடாது என்பதில், தீவிரமாக இருக்கும் அரசு, அதைவிட மோசமாக நடந்த இந்த நடன நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டுதான் இருந்தது. "சியர்ஸ் கேர்ள்ஸ்' என்ற பெயரில், துண்டு துணியுடன் வெளிநாட்டு பெண்களை, சிக்சருக்கும், விக்கெட்டிற்கும் மோசமான அசைவுகளுடன் அரங்கத்தின் மையத்தில் ஆடவிடுகின்றனர். வறுமை கொடுமையால், அன்றாடம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் அதிகரித்து வரும் நம் ஏழை இந்தியாவில், குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காமல் அல்லல்படும், ஆயிரக்கணக்கான எளிய மக்கள் நிறைந்த எளிய தேசத்தில், ஏன் இப்படி கிரிக்கெட்டை திருவிழா போல கொண்டாடி, மற்றவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கின்றனர் என்பது தான் தெரியவில்லை. நாட்டில் உள்ள சகல விளையாட்டையும், உருத்தெரியாமல் அழித்து புண்ணியம் கட்டிக்கொண்ட விளையாட்டு, நம் நாட்டில் இதுவாகத்தான் இருக்கும். ஹாக்கியில் கோப்பையை பெற்றவர்கள், கடன் வாங்கிக் கொண்டுதான், ஊர் திரும்ப வேண்டியிருக்கிறது.

கபடியில் பதக்கம் வென்றவர்கள், கைகாசு போட்டுத் தான் விளையாடும் ஆடையே வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால், கிரிக்கெட் வீரர்களுக்கு... எதைச் செய்தாலும் அது லட்சங்களிலும், கோடிகளிலும்தான் போய் நிற்கிறது. இதன் காரணமாக, நாட்டில் உள்ள அத்தனை தாய்மார்களும், தங்கள் பிள்ளை சச்சினாக வேண்டும் என்று, பயிற்சி முகாம்களில் பணத்தை கொட்டுகின்றனர். அல்லும், பகலும் இதே நினைவாக பைத்தியம் பிடித்தது போலாகி விடுகின்றனர். எல்லாரும் சச்சினாக முடியாது என்ற எதார்த்தத்தை, ஏன் உணர மறுக்கின்றனரோ! அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில், கிரிக்கெட் விளையாடுவது இல்லை. அவ்வளவு ஏன்... கிரிக்கெட்டை பெற்றெடுத்து வளர்த்த, இங்கிலாந்தில் கூட, இந்த விளையாட்டுக்கு இன்னமும் போதிய ஆதரவு இல்லை. இப்படி உலகிலுள்ள, 192 நாடுகளில், 182 நாடுகளால், கைவிடப்பட்ட விளையாட்டுதான் கிரிக்கெட்! விளையாடும், 10 நாடுகளிலும், கென்யா போன்ற நாடுகள் உப்புக்கு சப்பாணி நாடுகள். தோற்பதற்காகவும், ஊர் சுற்றிப் பார்ப்பதற்காகவும், அணியில் சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள். இப்படி கூட்டிக்கழித்து பார்த்தால், மிச்சமிருக்கும் ஐந்து நாட்டின் வீரர்களைத் தான், ஆளாளுக்கு ஏலம் எடுத்து, விளையாட விடுகின்றனர்.

ஒன்று மட்டும் நிச்சயம்... இங்கே விளையாட்டுக்கு பயன்படுவது பந்து அல்ல; பணம் தான்! விளையாடுபவர்களும், விளையாட்டை நடத்துபவர்களும் ஒவ்வொரு நொடியையும், பணம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஐந்து நாள் போட்டி என்று அதிக நேரம் காத்திருக்க வேண்டாம். ஒரு நாள் போட்டி என்று வெயிலில் வாட வேண்டாம். நாட்டிற்காக விளையாடுகிறோம் என்று பம்மாத்து செய்ய வேண்டாம். சும்மா, ஜாலியாக கலந்து கொண்டு, பைசா பார்த்துவிட்டு போகலாம். நம் ரசிகன்தான் பாவம். நொடிக்கு நொடி பரபரப்பாகி இதய நோய்க்கு உள்ளாகிறான்! இந்த சீசனில் மட்டும், விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும், தலா 16 போட்டிகளில் கலந்து கொண்டு, 48 மணிநேரம் மைதானத்தில் இருப்பர். ஒவ்வொரு நிமிடமும், ஒரு வீரர், 1,200 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது எனில், 48 மணி நேரத்தை நிமிடங்களில் பெருக்கி கூட்டிப்பாருங்கள்... மயக்கமே வரும்! இதனால், சச்சின் இன்னும் ரிட்டயராகாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். "விளையாடியது போதும், ஓய்வு எடுங்கள்' என்ற, இந்த விஷயத்தில், இவர் பேச்சை இவரே கேட்கமாட்டார் போலும். ஒரு வேளை மனிதருக்கு உள்ள ஆயிரக்கணக்கான அசையும், அசையா சொத்துக்களை தாண்டி, கடன் ஏதும் இருந்து அதை அடைக்க விளையாடுகிறாரோ என்னவோ!

கபடி, ஹாக்கி என்பதெல்லாம் இந்திய அணி. ஆனால், கிரிக்கெட் என்பது இந்திய அணி அல்ல; அது தனியார் அமைப்பிற்கு கட்டுப்பட்டது. இந்த அணியால் இந்தியாவிற்கு பைசா வருமானம் கிடையாது. "தேர்தல் நேரம் பாதுகாப்பு கொடுப்பது கொஞ்சம் சிரமம்; விளையாடும் தேதியை தள்ளிப்போடுங்கள்' என்று சொன்னதற்கு, தென்னாப்பிரிக்காவில் போய் விளையாடி நாட்டின் மீதான, அளப்பரிய பாசம் மற்றும் நேசத்தை வெளிப்படுத்தியவர்கள்தான் இவர்கள்! இவர்களிடம் போய், "நாட்டில் கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. மாணவர்கள் மண்ணெண்ணெய் விளக்குகளில் படிக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான ஆபரேஷன்கள் மின்சாரம் இல்லாமல் தள்ளிப்போடப்படுகிறது. பிரசவம் போன்றவை மெழுகுவத்தி வெளிச்சத்தில் நடக்கிறது. இதையெல்லாம் உத்தேசித்து மின்சார நிலமை சரியான பிறகு விளையாடுங்கள்' என்று சொன்னால் மட்டும் கேட்கவா போகின்றனர்? "இல்லையில்லை, இப்போது ஜெயிக்காவிட்டால், பிறகு எப்போதுமே ஜெயிக்கமுடியாது' என்று சொல்லும் அணி எதுவும் உண்டா... கிடையாது. நினைவு தெரிந்த நாள் முதல், ஒரு ஊரில் தோற்பதும், மறுநாள் அடுத்த ஊரில் ஜெயிப்பதும், அதற்கு மறுநாள் இன்னொரு ஊரில் தோற்பதும் தானே நடக்கிறது. இப்படி ஊர் ஊராக போய் தோற்பதை, ஒரு இரண்டு மாதத்திற்கு ஒத்திவைத்தால் என்ன தப்பு? இன்னும் சொல்லப்போனால், உங்களது வெற்றியோ, தோல்வியோ உங்களால் நிர்ணயிக்கப் படவில்லை என்பதை ஒரு சில மாதம் கழித்து, எப்படியும் ஒரு ஊடகம் அம்பலப்படுத்தும். அதற்குள், தம் கல்லாவை நிரப்பிவிடுவர்.

கிரிக்கெட்டிற்கு எதிரான புலம்பலாக இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். நம் நாட்டில் கிரிக்கெட்டையும், வீரர்களையும் உயிராக மதிக்கும் இந்த சமூகத்தின் மீது, கொஞ்சமேனும் அக்கறைகாட்டுங்கள். மற்றவர்கள் நலனில் அக்கறை இல்லாவிட்டாலும், மாணவர்கள் நலனிலாவது அக்கறை வையுங்கள்.

முருகராஜ் , பத்திரிகையாளர் . நன்றி தினமலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun 8 Apr 2012 - 8:39

உண்மை தான் அண்ணா இப்பொழுது இப்படி தான் உள்ளது...
மின்சாரம் இல்லாதா நேரத்தில் கூட கைபேசியின் மூலம் இனையத்தில் இனைந்து ரன்களை பார்க்கிறேன்...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 8 Apr 2012 - 11:19

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக