புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
7 Posts - 64%
heezulia
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
8 Posts - 2%
prajai
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
4 Posts - 1%
mruthun
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_m10இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 8:15 am

இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Nova2

தொழில்நுட்ப வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க, அவை சார்ந்த தொந்தரவுகளும் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, கணினிப் பயன்பாடு சார்ந்த வைரஸ் தாக்குதல், இணைய ஊடுருவல்கள் (ஹாக்கிங்) போன்றவை தீராத தலைவலிகள்.

இந்த விஷயங்களில் இன்றைய நிலை, இணையப் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்திருக்கிறார், கணினிப் பொறியியல் மாணவரான ஜெ.நோவா பிராங்ளின்.

வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள சி. அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.ஈ. கம்ப்யூட்டர் சயன்ஸ் நிறைவாண்டு பயிலும் பிராங்ளின், தனது ஆய்வு குறித்த தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்...

ஆர்வம் ஏன்?

``நான் ஒரு சான்றிதழ் பெற்ற `எதிக்கல் ஹாக்கர்' (இணையதளங்கள், மென்பொருள்களில் `ஹாக்கிங்'குக்கு வாய்ப்பு உள்ளதா என்று பரிசோதித்து அறிய முறைப்படி உரிமை பெற்றவர்). சர்வதேச `ஓபன் வெப் அப்ளிக்கேஷன் பிராஜெக்ட்'டில் ஓர் உறுப்பினரும் கூட.

இவற்றின் காரணமாகவும், அடிப்படையில் கணினிப் பொறியியல் மாணவன் என்பதாலும், `சைபர் தாக்குதல்கள்' பற்றியும், அவற்றை எப்படித் தடுப்பது என்பது குறித்தும் நிறைய யோசிக்க ஆரம்பித்தேன். ஆழமான ஆய்வுகள் மேற்கொண்டு, ஓர் அறிக்கையையும் உருவாக்கி யிருக்கிறேன்.

பயன்பாட்டில் நாம் முன்னணி

`சைபர்' என்றால் கணினியைக் குறிக்கும். அந்தவகையில் `சைபர் கிரைம்' என்பது கணினி தொடர்பான குற்றங்களையும், `சைபர் செக்யூரிட்டி' என்பது கணினி சார்ந்த பாதுகாப்பையும் குறிக்கின்றன.

உலகிலேயே இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் நாம் உள்ளிட்ட ஆசிய கண்டத்தினர்தான். அதாவது உலக இணையப் பயன்பாட்டாளர்களில் 44.8 சதவீதம் பேர் ஆசியர்கள்.

கணினிப் பயன்பாடு தொடர்ந்தும் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவ சமுதாயத்தின் மத்தியில்.

தவிர, பொதுவாக சாதாரண வாழ்விலும் இணையத்தின் பங்கு அதிகமாக உள்ளது. கணினி, இணையம் இல்லாத நிலையைச் சிந்திக்க முடியாது என்ற கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

அதிகரிக்கும் குற்றங்கள்

அதேவேகத்தில் `சைபர் குற்றங்களும்' வளர்ந்துவருவதுதான் கவலைக்குரிய விஷயம். கணினி உலகின் களைகளான வைரஸ்களும், ஹாக்கிங்கும் எதிர்காலத்தில் எல்லோரையும் பாதிக்கும் என்பதால் நாம் இவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இவ்விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை.

ஹாக்கிங் மூலம் நம்முடைய கணினி பாஸ்வேர்டு, மின்னஞ்சல் பாஸ்வேர்டை பிறர் அறிந்துகொள்ள முடியும். முக்கியத் தகவல்களைத் திருடவோ, ஹார்டு டிஸ்க்கை சேதப்படுத்தவோ முடியும். இன்னும் அபாயமாக, பயன்பாட்டாளரின் அனுமதியின்றியே அவர் முன்புள்ள வெப் காமிராவை இயக்க முடியும்.

இந்திய இணையதளங்களை சீனா, பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாக்கர்கள் அதிகமாகத் தாக்குகிறார்கள். சி.பி.ஐ. இணையதளம் போன்றவை அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. கேரளா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைத் தாக்கி, மாணவர்களின் ரிசல்ட்களை மாற்றி விட்டார்கள். `ஹாக்கிங்' எவ்வளவு அபாயகரமான விஷயம் என்பதற்கு இது ஒரு சோறு பதம்.

இப்படியெல்லாம் மோசடி

எனவே, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஈ-மெயில் த்ரெட்டிங், கம்ப்யூட்டர் ஹாக்கிங், பாங்க் அக்கவுன்ட் ஹாக்கிங், ஈ-மெயில் ஹாக்கிங், தேர்வு முடிவுகள் போன்றவற்றில் செய்யப்படும் `போர்ஜரி', முக்கிய விவரங்கள் திருட்டு முதலியவை நடைபெறும் விதத்தை அறிந்திருப்பதும், அவற்றைத் தடுப்பதற்கு வலுவான மென்பொருள்களை உருவாக்குவதும் அவசர அவசியம்.

மின்னஞ்சலில்...

`ஈ-மெயில் அக்கவுன்ட் ஹாக்கிங்'கானது பிஷ்ஷிங், டாப் நேப்பிங், பாதுகாப்புக் கேள்விகளுக்கான பதிலை ஊகிப்பது போன்ற முறைகளில் நடைபெறுகின்றன. இவற்றில் பிஷ்ஷிங்கும், பாதுகாப்புக் கேள்விகளுக்கான பதிலை ஊகிப்பதும் `சோசியல் என்ஜினியரிங் அட்டாக்' எனப்படுகின்றன. டேப் நேப்பிங் என்பது நவீன முறை.

உங்களின் ஈ-மெயில் பக்கம் சிறிது நேரம் பயன்படுத்தப்படாமல் இருந்தால், ஹாக்கர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டு விடுகிறார்கள்.

எச்சரிக்கை தேவை

ஹாக்கிங்கை தவிர்க்க, மவுஸ் அசைவு, ஸ்க்ரோல் பார், கீஸ்ட்ரோக் ஆகியவற்றை அவ்வப்போது `செக்' செய்ய வேண்டும்.

`பிஷ்ஷிங் பேஜை' கண்டறிய மின்னஞ்சலுக்கு `லாக்கின்' செய்யும்போது `யூஆர்எல்'லை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். தெரியாதவர்கள், புதியவர்கள் அனுப்பும் `லிங்கை' திறப்பதைத் தவிர்க்க வேண்டும். `ஆன்டி பிஷ்ஷிங் மோடை' பயன்படுத்தி அவ்வப்போது `ஆன்டிவைரஸ்' அமைப்பை `அப்டேட்' செய்ய வேண்டும்.

புதிதாக ஒருவர் ஜிமெயில் கணக்கைத் துவங்குகிறார் என்றால், அவர் குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும். அதைப் போல `சைபர் அட்டாக்கரிடம்' ஒருவர் தெரியாமல் `சாட்டிங்' செய்தால் அவர் கேட்கும் முக்கியக் கேள்விகளுக்குத் தன்னையும் அறியாமல் பதில் அளிக்கலாம். எனவே நட்புரீதியாக உரையாடும் புதியவரிடம் கவனமாக இருக்க வேண்டும்.

வங்கிக் கணக்குகளில்...

சமீபத்தில் நடந்தேறிய வங்கி தொடர்பான இணைய மோசடிகளை செய்தித்தாள்கள் வழியாக அறிந்திருக் கிறோம்.

வங்கிக் கணக்கு `ஹாக்கிங்'கில் கிராஸ் சைட் ரெப்ளெக்ஷன் அட்டாக், கிராஸ் சைட் ரெக்வெஸ்ட் போர்ஜரி அட்டாக் என்ற இரு முறைகள் உள்ளன.

கிராஸ் சைட் ரெப்ளெக்ஷன் முறையில் நடக்கக் கூடிய மோசடியை உணர்த்தும்விதமாக இங்கிலாந்து ஆய்வாளரான ஜிம் லை என்பவர், `கூகுள் விரைவில் பணம் செலுத்திப் பெறும் சேவையாக மாறப் போகிறது, எனவே உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களைக் கொடுங்கள்' என்று கேட்டு லட்சக்கணக் கானவர்களின் முக் கியத் தகவல்களைப் பெற்றுவிட்டார். பின்னர் அதுபற்றி, கூகுள் நிறுவனத்திடம் கூறியபோது அவர்கள் சுதாரித்துக்கொண்டு அதுபோன்ற மோசடி நேராமல் இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.

அதேபோல, கிராஸ் சைட் ரெக்வெஸ்ட் போர்ஜரி மூலம், வங்கி இணையதளம் போன்ற முக்கியமான இணையதளங்களில் விரும்பிய விஷயங்களைச் சேர்த்துவிடுகிறார்கள். அதன்மூலம் வங்கி இணையதளத்துக்கு வருவோரை ஏமாற்றி, தேவையான முக்கியத் தகவல்களைப் பெற்றுவிடுகிறார்கள்.

இன்று நம்மில் பலர் ஆன்லைனில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்கிறோம், வங்கிக் கணக்கு நிலுவையைப் பார்வையிடுகிறோம். எனவே இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த மாதிரியான போர்ஜரியிலிருந்து தப்பிப்பதற்கு, முன்பின் அறியாதவர்களின் தேவையற்ற லிங்குகளை தவிர்ப்பது அவசியம். உங்கள் வங்கிக் கணக்கு பயன்பாட்டாளர் பெயர், பாஸ்வேர்டை தட்டச்சு செய்யும்முன், குறிப்பிட்ட இணையதளத்தின் `யூஆர்எல்'லை பரிசோதிக்க வேண்டும். உங்கள் `ஆன்டிவைரஸ்' அமைப்பை தொடர்ச்சியாக அப்டேட் செய்ய வேண்டும்.

இலவசம் வேண்டாம்

இலவசங்களை நாடும் மக்களின் மனோபாவம்தான் ஹாக்கிங்குக்கு ஒரு முக்கியக் காரணம் என்பது பலரும் அறிந்திராத உண்மை. முன்பின் அறிந்திராத இணையதளங்களில் இருந்து நம்மில் பலர் இலவச ஆன்டிவைரஸ் மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறோம். அப்போது அவை குறித்த அறிவுறுத்தல்களைக் கூட நாம் படித்துப் பார்ப்பதில்லை. இது போன்ற இலவச மென்பொருள்கள் வழியாக ஹாக்கர்கள் வைரஸ்களை நுழைத்துவிடுகிறார்கள்.

இலவச மென்பொருள்களைத் தவிர்த்து, பணம் செலுத்திப் பெற்ற ஓ.எஸ். (ஆப்பரேட்டிங் சிஸ்டம்), ஆன்டிவைரஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நம்மை பெரும்பாலும் ஹாக்கிங்கில் இருந்து காப்பாற்றிவிடும்.

மொபைல் ஹாக்கிங்

இன்டர்நெட் ஹாக்கிங் போல மொபைல் ஹாக்கிங்கும் தற்போது அதிகரித்து வருகிறது. அதன் மூலம் பிறரின் செல்போன் பாலன்ஸை கூட ஒருவர் தனக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதுபோன்ற அபாயங்களைத் தவிர்க்க செல்போனின் `பின்', `பியுகே கோடை' அவ்வப்போது மாற்ற வேண்டும், புதிய நபர்களுக்கு எந்தப் பைலையும் `புளூடூத்' மூலம் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

இணைய வசதிகள் வளர்ந்த அளவுக்கு அதற்கான பாதுகாப்பு வசதிகள் வளராதது நான் இதில் ஆர்வம் கொண்டதற்கு முக்கியக் காரணம். யாஹு ஈ-மெயில், ஜிமெயில் மற்றும் பேஸ்புக்போன்றவை தாக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதைக் கண்டுபிடித்து அந்த நிறுவனங்களின் பாதுகாப்புக் குழுக்களுக்குத் தெரிவித்திருக்கிறேன்.

நான் உருவாக்கிய ஆய்வறிக்கைக்கு பேராசிரியர் பொம்முராஜ் வழிகாட்டியாக இருந்தார். தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு, இரும்புக் கோட்டை போன்ற பாதுகாப்பு மென்பொருள்களை கண்டுபிடிக்கத் தீர்மானித்திருக்கிறேன்'' என்றார் பிராங்ளின்.

கணினித் துறையில் ஜொலித்துவரும் இந்தியாவில் இவரும் ஒரு நட்சத்திரமாக ஒளிரட்டும்!

தினதந்தி



இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 8:29 am

இவரை பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது...... இன்றைய கணினி யுகத்தில் எதுவும் நடக்கும், இவையெல்லாவற்றிலும் இருந்து நமது கணினியை பாதுகாத்துக்கொள்வது இன்றியமையாதது.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக