புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 19 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 19 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 19 Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 19 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 19 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 19 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 19 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 19 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 19 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!


   
   

Page 19 of 29 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24 ... 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்


Spoiler:




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 27, 2012 8:17 pm

முகைதீன் அண்ணா! மிக அருமையாக பதில் அளித்துள்ளார்.. மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 9:34 pm

முஹைதீன் ரொம்ப அருமையா பதில் சொல்லி இருக்கிங்க புன்னகை வாழ்த்துகள் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 28, 2012 1:31 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

தங்களின் பணி காலையில் எழுந்தோம், பணிக்குச் சென்றோம், அதே வழி, அதே முகங்கள் என்றில்லாமல் முற்றிலும் மாறுபட்டது, மாதம் ஒரு மாநிலம், பல மொழி பேசும் மக்களுடன் பழகும் வாய்ப்புகள். இதன் மூலம் தாங்கள் கற்றுக் கொண்ட மொழிகள் எத்தனை?
மிகவும் நன்றி சிவா. என்னைக்குறித்து சில செய்திகளை முதலாவதாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நான் 1977 ல் முதுகலை புவியியல் சென்னை மாநிலக்கல்லூரியில் முடித்து விட்டு IAS தேர்வுக்காக தயார் செய்துகொண்டு இருந்தேன். அப்போது UPSC ல் ARS என்ற தேர்வும் இருந்தது. Agricultural Research Service என்பது முற்றிலுமாக இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்திற்கு வேண்டி நடத்தப்பட்டது. அதில் தேர்வு எழுதி வெற்றி பேற்று, பின்பு தில்லியில் நடந்த நேர்முகத்தேர்வில் தேறி இளம் விஞ்ஞானியாக (Junior Scientist) தேர்வு பேற்று நாக்பூரை தலைமை இடமாகக் கொண்ட ‘’மண்வள ஆய்வு மற்றும் நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி நிலையம்” என்பதில் பணியமர்த்தப்பட்டு, அதன் கிளை அலுவலகத்தில் பெங்களூரில் வேலையில் சேர்ந்தேன்.

பெங்களூர் அலுவலகத்தில் இருந்துகொண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா, கோவா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் மாவட்ட வாரியாகக் சென்று மண் ஆய்வு செய்தல், நிலப்பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தேன். Aerial Photographs மற்றும் Satellite imageries மூலமாக ஒரு இடத்திற்கு செல்லாமலே அந்த இடத்தைக்குறித்து ஆய்வு மேற்கொள்ளும் Remote Sensing என்ற முறையிலும் பயிற்சி பெற்றுத் தேர்ந்தேன். அதோடு, எங்கள் அலுவலகத்தில் விவசாயத்துறை அதிகாரிகள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து நான்கு மாதம் தங்கி பயிற்சி பெறுவார்கள். அவர்களோடு, லாவோஸ், கம்போடிய, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசிய, ஸ்ரீலங்கா, நேப்பாள், புட்டான், மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் வருவார்கள். இவர்களுக்கு நான், Geography, geology, Geomorphology, cartography and Remote Sensing Techniques குறித்து பாடங்கள் நடத்தி, அவர்களை தினமும் field work குக்காக வெளியூர்களுக்கு கூட்டிச்செல்வேன். இந்த வகையில் தென் இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களுக்கு எல்லாம் சென்று வந்துள்ளேன். இப்படியாக, 1978 முதல் 1990 வரை நான் பெங்களூரில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தேன்.

1990மே மாதம் நான் மாறுதலாகி நாக்பூர் சென்றேன். அங்கும் இங்குபோலவே, மண் ஆய்வு மற்றும் நிலப்பயன்பாட்டு ஆராச்சியில் ஈடுபட்டேன். மகாராஷ்டிராவில் சாங்லி, பூனா, ரத்னாகிரே, விதர்பா முழுவதும், குஜராத் மாநிலத்தில் ஆனந்த, அகமதாபாத் உட்பட சில பகுதிகள், மத்தியப்ரதேசத்தில் சாகர், தண்டகாரண்யா, ராஜஸ்தானத்தில் உதய்பூர், தொவ்சா மாவட்டங்கள், போன்ற இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளேன். PDKV, Akola வில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக 14 ஆண்டுகள் பணிபுரிந்தேன். பின்பு, 2006 ம் ஆண்டு மாறுதல் பெற்று மீண்டும் பெங்களூர் வந்து சேர்ந்தேன். இப்போது முதுநிலை விஞ்ஞானியாக (Principal Scientist) பணிபுரிகிறேன். 2014 நவம்பர் மாதத்தில் ஒய்வு பெற உள்ளேன்.

இந்த 34 வருட அனுபவத்தில் இந்தியாவில் உள்ள எல்லா முதன்மை மொழிபேசுபவர்களிடத்திலும் பழகியிருக்கிறேன். அவர்களுடன் கலந்துரையாடி இருக்கிறேன். அவர்களின் கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்களை கண்டுள்ளேன். இதுவரை கல்கத்தா மற்றும் வட கிழக்கு மாகாணங்களை பார்க்கவில்லை. வரும் டிசம்பர் மாதத்தில் அங்கு சிறப்புப் பேச்சாளராக அழைத்துள்ளனர். அதுவும் முடிந்து விட்டால் இந்தியாவின் எல்லா முக்கிய இடங்களுக்கும் சென்று வந்த அனுபவம் அடைந்திடுவேன்.
எனக்கு ஆங்கிலத்தை தவிர:
மலையாளம் சரளமாகப் பேச வரும். எழுத்துக்கூட்டி படிக்கவும் தெரியும். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எனது மலையாள நண்பர்கள் மூலமாக கற்றுக்கொண்டேன்.
கன்னடம் மிகவும் வேகமாகப் பேசுவேன். அவர்களாலேயே நான் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்று கண்டுபிடிக்க முடியாது.
தெலுங்கு நூறு சதவிகிதம் புரியும். நிறுத்தி நிதானமாக பேச வரும்.
• நாக்பூரில் இருந்ததால் இந்தி சரளமாகப் பேசுவேன். எழுதப் படிக்க வராது. மிகவும் சிரமத்துடன் ஒருசில வார்த்தைகள் படிப்பேன்.
மராத்தியை முழுமையாகப் புரிந்துகொள்வேன். தட்டுத்தடுமாறி ஒருசில வார்த்தைகள் பேசுவேன். அவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டால் இந்திக்கு மாறி விடுவேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தச் சூழலிலும் தங்களின் தமிழ் மீதான ஆர்வம் எவ்வாறு உருவானது?

எனது தாயும் தந்தையும் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்தார்கள். அவர்கள் ஆசிரியப் பயிற்சி முடித்து ரூபாய் 8 மாதச்சம்பளத்தில் வேலையில் சேர்ந்தவர்கள்! எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு பையன்கள் மட்டும். அதில் நான் கடைக்குட்டி. ஆகவே குறும்பு அதிகமாக இருக்கும். ‘’வாத்தியார் பையன் மக்கு’’ என்று சொல்லுவார்கள். ஆயினும் அந்தப் பழமொழி எங்கள் விடயத்தில் பொய்யானது என்று சொல்லலாம். நாங்கள் நான்கு பேருமே நன்றாகப் படிப்போம். அதிலும் கடைக்குட்டியாகிய நான் மற்றவர்களைக் காட்டிலும் சற்று நன்றாகவே. என் அப்பா காங்கிரஸ் அனுதாபி. என் அம்மாவோ தி மு க விரும்பி. அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன், கருணாநிதி போன்றோர் எங்கள் ஊர் வந்து சிறப்புப் பொதுக்கூட்டம் போடுவார்கள். நாலணா டிக்கெட்டில் என் அம்மா கட்டாயம் இருப்பார்கள். என் அம்மாவுக்கு துணையாக நானும் கூடவே இருப்பேன். மேலும், என் அம்மா தெய்வ பக்தி உள்ளவராக இருந்தாலும், தீவிர பெரியார் விரும்பி. எங்கள் வீட்டில் படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் பேசப்படும் முக்கிய செய்திகள் பெரியார் அண்ணா பற்றியதாக இருக்கும்.

எதுகை, மோனை என்பது எனக்கு இயற்கையாகவே வந்தது. எப்போதும் எதுகையில் சொல்லிப்பார்ப்பேன். எல்லோரும் சிரிப்பார்கள். எனது மூத்த அண்ணனுக்கும் எனக்கும் 11 வருட இடைவெளி. அவர்தான் என்னை கவிதை எழுதத் தூண்டியவர். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.காம் படிக்கும் பொது நான் ஆரம்பப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில். விடுப்பில் வந்தால் நான் எப்போதும் அவரைச்சுற்றியே வருவேன். சிறு சொல்லாகச் சொல்லி அதற்க்கு எதிர்ச்சொல் ஒன்றைச் சொல் என்பார். நானும் அவ்வாறே சொல்லிப்பார்ப்பேன்.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட சமயத்தில் (1963) எங்கள் ஊருக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அவர் பெயர் கோவணத்தடிகள். வெறும் கோவணம் மட்டும் அவர் கட்டியிருப்பார். பதினைந்து நாட்கள் கோவிலில் தங்கியிருந்து மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் சுத்தத் தமிழில் பேசினார். கொஞ்சம்கூட சம்ஸ்கிருத கலப்பு என்பதே இல்லை. இடையில் பாடும் பாடல்கள் கூட சுத்தமான தமிழ்தான். தெலுங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. மனதை திசை திருப்புவதற்காக இடையிடையில் ஜோக்குகள் சொல்வார். கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டு இரண்டு நாட்களே ஆகியிருந்ததால் “கென்னடி GUNனடி பட்டார்” என்று சொல்வார். “கரும்பை விரும்பாத ஏறும்புண்டோ” என்று சொல்லி எல்லோரையும் சிரிக்க வைப்பார். அவர் வேறு ஊருக்கு போய்விட்ட பின்பும் எங்களூர் மக்கள் மாதக்கணக்கில் அவரைக் குறித்து பேசிக்கொண்டே இருந்தார்கள். இவரின் பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்தது. யாரும் இல்லாத சமயத்தில், அவரைப்போல் ஒரு கோவணம் கட்டிக்கொண்டு கிணத்தடியில் அமர்ந்து, அவரைப்போலவே பேசி, சிரிப்புக்கள் சொல்லி....அதற்க்கு நானே சிரித்துக்கொண்டு...! அப்போது எனக்கு பத்து வயதுதான்.

நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போதே கவிதை எழுதி எங்கள் தமிழ் ஆசிரியரிடம் காட்ட, அவர் ஆச்சரியப்பட்டு அதை கொண்டுபோய் தலைமை ஆசிரியரிடம் காட்ட, அவர் என்னை அடுத்த நாள் காலை வணக்கத்தில் முன்னால் வரச்சொல்லி எல்லோர் முன்னிலையிலும் அதை படித்துக் காண்பிக்கச் சொல்லி கை தட்ட வைக்க அன்றே நான் ஒரு கவிஞன் ஆகிவிட்டேன்! அந்தக் கவிதையின் அடிப்படையே என் பெரிய அண்ணார்தான் என்பது நிறையப்பேருக்கு தெரியாது. எங்கள் அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த இரண்டு தமிழாசிரியர்கள், புலவர் தெய்வசிகாமணி, புலவர் சிதம்பரம் இருவரும் ஆற்றிய தொண்டு ஈடுஇணை இல்லாதது. தமிழ் மீதான ஆர்வம் உருவாவதற்கு காரணமே இந்த இரண்டு ஆசிரியர்களும், எனது பெரிய அண்ணனும் தான்.

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது நான் எழுதிய ஒரு கவிதை அகில இந்திய வானொலி நிலையம், திருச்சியில் சிறுவர் அரங்கத்தில் ஒலிபரப்பானது. தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும், பெரிய பேச்சாளனாக வேண்டும், பெரிய கவிஞனாக வேண்டும் என்ற எண்ணம் மனதில் மிக ஆழமாக வேருன்ற ஆரம்பித்தது.

PUC யில் சேர்ந்த பொது படிக்க மிகவும் சிரமமாக இருந்தது. கிராமப்புறத்தில் தமிழ் பள்ளியில் படித்தது, ஆங்கில அறிவு மிகமிகக் குறைவாய் இருந்தது, கான்வென்ட் பள்ளியில் படித்த பையன்களின் எள்ளிநகையாடல் போன்றவற்றின் காரணமாக சரியாகப் படிக்காமல் மிகக் குறைந்த மதிப்பெண்ணில் பாஸ் செய்தது மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது. சரி எப்படியும் தமிழ் இலக்கியம்தான் படிக்கப் போகிறோம், இடம் கிடைத்துவிடும் என்று இருந்தவேளை எனது பெரிய அண்ணனும், அடுத்தவரும் ஒரு குண்டைத்தூக்கி வீசினர். தமிழ் படிக்க வேண்டாம். பெரியார் ஈ. வே. ரா கல்லூரியில் புவியியல் துறையில் இடங்கள் காலி உள்ளன. அதை எடுத்துப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிறார்கள். எனவே, வேறு வழி இல்லாததால் புவியியல் படித்தேன்.

முதுகலை முடித்தவுடன் வேலை கிடைத்தது. நீ தமிழ் எடுத்துப் படித்திருந்தால் ஒரு பள்ளியில் ஆசிரியனாகப் போயிருப்பாய்... இப்போது பார் மத்திய அரசாங்கத்தில் உயர்நிலையில் வேலை கிடைத்துள்ளது என்றார்கள். உண்மைதான். ஆயினும், என் உள்மனதில் தமிழ் படிக்கவில்லையே என்ற ஆதங்கம்/ஏக்கம் அதிகமாக இருந்தது. எனவே, வாய்ப்பு கிடைக்கும் பொது எல்லாம் தமிழ் புத்தகங்கள் வாங்கி படிப்பேன்.

நான் மாறுதல் ஆகி நாக்பூர் செல்லும்போது என்மகளை முதலாம் வகுப்பில் சேர்க்கவேண்டி இருந்தது. நாக்பூரில் சரஸ்வதி வித்யாலயா என்ற ஒரு பள்ளி 115 வருட பழமையானது. அது தமிழர்களால் நடத்தப்படுவது. அந்தப் பள்ளியில் தமிழில் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதால் என்மகளை அந்தப் பள்ளியில் சேர்த்து ஐந்தாம் வகுப்புவரை அவளை தமிழில் படிக்க வைத்தோம். அதன் மூலம் அவள் தமிழை நன்றாக எழுதவும் படிக்கவும் கற்றாள். அதன் பின்பு ஆறாம் வகுப்பு முதல் பள்ளி இறுதிவரை பாரதீய வித்யா பவன் என்ற பள்ளியில் சேர்த்து படித்தாள். அங்கு இந்தி, சமஸ்கிருதம், மராத்தி ஆகிய மொழிகளில் தேர்ந்தாள். இவைகளோடு சேர்ந்து தமிழையும் மறவாமல் இருக்கின்றாள் என்றால் அது ஐந்தாம் வகுப்புவரை சரஸ்வதி வித்யாலயாவில் தமிழில் படித்ததுதான்.

நாக்பூரில் இருந்து எப்போது தமிழ்நாடு வந்து சென்றாலும் சில தமிழ் புத்தகங்கள் கட்டாயம் வாங்கிச்செல்வேன். குறிப்பாக கவிதை தொகுப்புகள். கி. வா. ஜெகநாதன் அவர்களின் யாப்பிலக்கணப் புத்தகம் மிகவும் எளிமையானதாகும். நான் எப்போது வெளியூர் செல்ல நேரிட்டாலும் இந்த புத்தகத்தை கொண்டுபோய் வாய்ப்புக் கிடைக்கும்போது படிப்பேன்.
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப் பட்டாலும்
......என்ற பாரதியாரின் பாடலுக்கு சீர், அசை பிரித்தல் போன்றவற்றை அந்தப் புத்தகத்தில் கூறிய படியே செய்து பார்த்து பழகிக்கொண்டேன். இவ்வாறுதான் நான் தமிழ் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாது, அதை தக்கவைத்துக்கொண்டும் உள்ளேன். இன்னும் ஒய்வு பெற இரண்டு வருடங்கள் உள்ளது. (நாங்கள் ஆராய்ச்சித்துறையில் உள்ளதால் ஒய்வுபெறும் வயது 62 ஆகும்.) ஒய்வு பெற்றவுடன் கோயம்புத்தூர் சென்று தங்க உள்ளோம். அங்குள்ள மாலைநேர கல்லூரியிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ எம்.ஏ. தமிழ் இலக்கியத்தில் சேர்ந்து படிக்க அதிக ஆவல் உள்ளவனாக உள்ளேன். முறையாக தமிழ் படிக்கவில்லையே என்ற அந்தக் குறையையும் நீக்கிவிட வேண்டும் என்பது என் அவா. நிச்சயமாக இதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கற்ற வாழ்க்கைப் பாடம் என்ன?

முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். புதிதாக நான் இதைச் சொல்லவில்லை. ஆயினும் என் அனுபவத்திலும் இதை நான் கண்கூடாக கண்டேன், உணர்ந்தேன்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொண்டேன். எனது மூன்று அண்ணன்களுக்கும் கொடுக்காத ஒரு பெரிய சொத்தை என் அம்மா எனக்கு கொடுத்து விட்டுச் சென்றார்கள். அதுதான் அவரின் சக்கரை நோய். நான் 35 வயதாகும் போது இந்த நோய் வந்தது. இப்போது எனக்கு 60 வயது. கடந்த 25வருடங்களாக இதனால் அவதிப்பட்டு வருகிறேன். முதலில் அரை மாத்திரையில் ஆரம்பித்த மருத்துவம் இன்று தினமும் மூன்றுவேளை இன்சுலின் ஊசி என்ற கட்டாயம். கடந்த 15 வருடங்களாக நானாகவே இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறேன். அதோடு, கூடவே தைரோயடு, கை கால்களின் நரம்புகளின் கேடு, மூட்டுவலி என்று எத்தனையோ சேர்ந்து கொண்டே போகிறது. இரண்டு கண்களிலும் அறுவைச்சிகிச்சை ஆகி புதிய லென்சுகள் பொருத்தப்பட்டுள்ளது. இத்தனை இருந்தாலும், என்னைப்போல கலகலப்பாக இருப்பவன் எங்கள் அலுவலகத்தில் யாரும் கிடையாது. “உங்களிடத்தில் வந்து ஒரு அரை மணி நேரம் பேசினேன், என் டென்சன் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை” என்று சொல்பவர்கள் எவ்வளவோ பேர்.

வட மாநிலத்தில் கிட்டத்தட்ட 16 வருடங்கள் இருந்துள்ளேன். தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலம் போய் 34 வருடங்கள் ஆகின்றது. இவ்வளவு ஆண்டுகள் வெளியில் இருந்ததால் நான் தெரிந்து கொண்ட ஒன்று நாம் இன்னும் கிணற்றுத்தவளையாகவே உள்ளோம் என்பதே. குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்களை போலவே இருக்கின்றோம். பழம் பெருமை பேசுவதில் வல்லவர்களாக உள்ளோம். நாம் உலகத்தில் மிகவும் பழமையான ஒரு இனம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆயினும் நம்மைப் பிடித்து ஆட்டும் சனியாக உள்ளது ‘’ஒற்றுமையின்மையே”. மற்ற மாநிலத்தவர்களைப் பார்க்கும் போது இந்த விடயத்தில் நாம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கின்றோம்.

மற்ற மாநிலங்கள் எல்லாம் மாறி வரும் சூழலில், “ஜாதி வெறியை” பொருத்தவரை நம் தமிழ்நாடு மட்டும் பின்னோக்கிச் சென்றுகொண்டு உள்ளது. இன்னும் ஆயிரம் தந்தை பெரியார்கள் வந்தாலும் இந்தச் சனியை அகற்றிவிட முடியாது என்பது கண்கூடு. இரண்டு வருடங்கள் முன்பு மதுரை அருகில் இரு மாதம் தங்கி ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. என்னுடன் எனது உதவியாளர், ஒரு கடைநிலை ஊழியர், மற்றும் jeep driver ஆகியோர் இருந்தனர். ஒருமாதம் மேல் தங்கவேண்டும் என்பதால் ஓட்டலுக்குப் பதிலாக காலியாகவுள்ள வீட்டை வாடகைக்கு பார்த்தோம். எங்கு சென்றாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வியே நீங்கள் அனைவரும் என்ன என்ன ஜாதி என்பதாகும். நீங்கள் புழங்கும் ஜாதியா, புழங்காத ஜாதியா?. எல்லாம் சேர்ந்து வரும் போது, எனது வண்டி ஓட்டுபவர் பெயர் பட்ச்சா என்பதால் “நீங்கள் எல்லாம் பரவாயில்லை....டிரைவர் துலுக்கன் ஆச்சே...எப்படி வீடு கொடுப்பது ?” இப்படி அவலங்களைச் சந்திக்க நேர்ந்தது. எனது 34 வருட வெளிமாநில வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதே இல்லை.

வெளி மாநிலங்களில் தங்கி வேலை செய்யும் தமிழர்கள் தங்களின் கடினமான உழைப்பால் நல்ல பெயர் எடுக்கின்றார்கள். நாக்பூர் மாநகரைப் பொருத்தவரை நான் கண்டது இதுதான். வீடு ஒன்று வாடகைக்கு கொடுக்கவேண்டும் என்றால் அந்த மராத்தியர்கள் முதலில் விரும்புவது ஒரு தமிழரைத்தான். ஒரு தமிழருக்கு வீடு கொடுத்து விட்டால் எந்தப் பிரச்சனையும் வராது. வாடகை தொல்லை வராது. சொன்னதுபோலவே காலி செய்துவிடுவார்கள் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.

ஒரு அலுவலகத்தை எடுத்துகொன்டாலும் கடினமாக உழைப்பவர்கள் நம் தமிழர்களே. மற்றவர்களுக்கெல்லாம் இவர்கள் முன்மாதிரியாகக் இருப்பார்கள். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் காப்பி அடித்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் promotion, transfer என்று வரும்போது மற்றவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள். பஞ்சாபிகள், உ.பி. வாலாக்கள், பெங்காளிகள், ஏன் நம்ம ஆந்திராக்காரர்கள், மற்றும் மலையாளிகள் எல்லோரும் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் ஒன்றாகச் சேர்ந்து தங்களுக்கு வேண்டியதை பெற்றுக்கொள்வார்கள். ஒரு அலுவலகத்தில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று தமிழர்கள் மட்டும் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளாமல், ஒருவர் மேல் ஒருவர் குறை கூறிக்கொண்டு கிடைக்கும் வாய்ப்பை தவறவிடுவார்கள். ஒரு சில தமிழர்கள் பெரிய பதவி வகிக்கும்போது அவர்கள் நிச்சயம் தமிழர்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள்,அவர்களுக்குத் தேவையான எல்லா தகுதிகளும் இருந்தாலும் கூட! மாறாக மற்றவர்களுக்கு வலிந்து போய் உதவி செய்து தங்களை ஒரு நடுநிலையாளர்கள்போல் காட்டிக்கொள்வார்கள். இது மிகவும் வேதனையான ஒரு விடயமாகும். இப்படி எத்தனையோ அனுபவங்களும் பாடங்களும் கற்றுக்கொண்டுள்ளேன் இந்த 34 வருடங்களில்.

இந்தக் கேள்விகளைக் கேட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் சிவா.

அன்புடன்
சுந்தரராஜ் தயாளன்
:வணக்கம்: :வணக்கம்:




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 28, 2012 1:38 pm

Spoiler:

சுருக்கமாக அழகாக, உங்களின் பதில்களைக் கூறியுள்ளீர்கள். நான் பழகிய முஸ்லிம் நண்பர்கள் தெரிவித்த மனக் குறைகள் என்னை மிகவும் பாதித்திருந்தது, அது உண்மையா என அறியவே உங்களிடமும் இவ்வாறு வினவினேன். அனைவரிடத்திலுமே அரசின் மீது அதிருப்தி உள்ளதை அறிய முடிகிறது.

வரும் அரசுகள் இவற்றைக் களைய முற்படும் என நம்புவோம்.

பதில் அளித்ததற்கு நன்றி முஹைதீன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 28, 2012 2:54 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வெளி மாநிலங்களில் தங்கி வேலை செய்யும் தமிழர்கள் தங்களின் கடினமான உழைப்பால் நல்ல பெயர் எடுக்கின்றார்கள். நாக்பூர் மாநகரைப் பொருத்தவரை நான் கண்டது இதுதான். வீடு ஒன்று வாடகைக்கு கொடுக்கவேண்டும் என்றால் அந்த மராத்தியர்கள் முதலில் விரும்புவது ஒரு தமிழரைத்தான். ஒரு தமிழருக்கு வீடு கொடுத்து விட்டால் எந்தப் பிரச்சனையும் வராது. வாடகை தொல்லை வராது. சொன்னதுபோலவே காலி செய்துவிடுவார்கள் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.

ஒரு அலுவலகத்தை எடுத்துகொன்டாலும் கடினமாக உழைப்பவர்கள் நம் தமிழர்களே. மற்றவர்களுக்கெல்லாம் இவர்கள் முன்மாதிரியாகக் இருப்பார்கள். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் காப்பி அடித்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் promotion, transfer என்று வரும்போது மற்றவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள். பஞ்சாபிகள், உ.பி. வாலாக்கள், பெங்காளிகள், ஏன் நம்ம ஆந்திராக்காரர்கள், மற்றும் மலையாளிகள் எல்லோரும் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் ஒன்றாகச் சேர்ந்து தங்களுக்கு வேண்டியதை பெற்றுக்கொள்வார்கள். ஒரு அலுவலகத்தில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று தமிழர்கள் மட்டும் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளாமல், ஒருவர் மேல் ஒருவர் குறை கூறிக்கொண்டு கிடைக்கும் வாய்ப்பை தவறவிடுவார்கள். ஒரு சில தமிழர்கள் பெரிய பதவி வகிக்கும்போது அவர்கள் நிச்சயம் தமிழர்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள்,அவர்களுக்குத் தேவையான எல்லா தகுதிகளும் இருந்தாலும் கூட! மாறாக மற்றவர்களுக்கு வலிந்து போய் உதவி செய்து தங்களை ஒரு நடுநிலையாளர்கள்போல் காட்டிக்கொள்வார்கள். இது மிகவும் வேதனையான ஒரு விடயமாகும். இப்படி எத்தனையோ அனுபவங்களும் பாடங்களும் கற்றுக்கொண்டுள்ளேன் இந்த 34 வருடங்களில்.

இந்தக் கேள்விகளைக் கேட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் சிவா.

அன்புடன்
சுந்தரராஜ் தயாளன்
:வணக்கம்: :வணக்கம்:
மிக நீண்ட பதில் , அரிய சுய சரிதை படித்தது போல ஒரு உணர்வு , உங்கள் வாழ்க்கை பயணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள் ஐயா.

மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தான் தமிழர்களின் பலம் & பலவீனம் இரண்டுமே.

இந்த அருமையான திரியை துவக்கிய அசுரன் அவர்களுக்கும் மிகச்சிறந்த கேள்விகளை கேட்டு கொண்டிருக்கும் உறவுகளுக்கும் நன்றி.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Mar 28, 2012 3:21 pm

உண்மைதான்.
நன்றி முகைதீன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 28, 2012 3:29 pm

அய்யா மிகவும் அருமையாக உங்கள் வரலாற்றை எங்களுக்கு நேரம் ஓதிக்கி அளித்தமைக்கு நன்றி ,

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Mar 28, 2012 3:57 pm

தயாளன் ஐயா அவர்களின் வாழ்க்கை பாடம் நன்றாக உள்ளன.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 28, 2012 6:43 pm

4.பிஜிராமன்

இளம் வயதில் பன்முகத் திறமைகளைக் கொடுள்ள உங்களை ஈகரையில் அனைவருக்கும் பிடிக்கும். காரணம் உங்களிடம் உள்ள எளிமை, அனைவரையும் மதிக்கும் மனப்பாங்கு. ஈகரையில் இணைந்த பிறகு உங்களின் மனநிலை எவ்வாறு உள்ளது.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றால் உங்களின் நடவடிக்கைகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும் சூழலில் அரசியல் மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. ஒன்று மக்களுக்குப் பணியாற்றாமல் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து செல்ல வேண்டும், அல்லது உங்கள் வேலையில் பிரச்சனைக்ள் உருவாகும். இப்படிப்பட்ட சூழலில் நெஞ்சுறுதியுடன் அவர்களை எதிர்ப்பீர்களா? அல்லது வேலைதான் முக்கியம் என்று அவர்களுக்கு அடிபணிவீர்களா?


எனது இந்த தாமதமான மறுமொழிக்கு நான் மிகவும் வருந்துகிறேன் அதற்காக மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன் சிவா அண்ணா....காரணம் நான் இன்று தான் ஈகரையை லாக் இன் செய்தேன். மன்னிக்கவும் அண்ணா. இதோ என் பதில்கள்.

ஈகரையில் இணைந்த பிறகு உங்களின் மனநிலை எவ்வாறு உள்ளது.


எனது அத்தியாததை ஈகரையில் இணைவதற்கு முன் ஈகரையில் இணைந்ததற்கு பின் என்று பிரிக்கலாம் காரணம், ஈகரையில் இணைவதற்கு முன்பு, நான் எனது வேளைகளில் கண்ணாக இருந்தாலும், விளையாட்டு தனம் அதிகமாக இருந்தது. பொறுப்பு என் உள்ளூர ஒளித்துக்கொண்டே இருந்தாலும், முழுதும் பொறுப்பாய் இருப்பதாக்காக எனக்கு தெரியவில்லை.

ஈகரையில் இணைந்த பின், என்னுடைய அனைத்து செயல்களிலும், மாற்றங்கள் பிறந்தது, இங்கு இணைந்த பின் எனக்குள் ஒரு கௌரவம் பிறந்தது, எனக்கே என் மீது ஒரு மதிப்பு பிறந்தது, எந்த பகுதியாக இருந்தாலும், அங்கு யார் என்ன கருத்து கூறியிருந்தாலும், அங்கு என் கருத்தை கூற நான் தயங்கவே இல்லை, இந்த துணிவு எனக்கு இந்த ஈகரையில் பிறந்தது. அதே சமயம், அனைவரையும் சமமாக பாவிக்கும் பழக்கம் எனக்கு உள்ளூர இருந்தாலும், அதற்கு முழுவடிவம் இங்க்க்கறையில் தான் கொடுக்க முடிந்தது, அனைவருடனும் எளிமையாக பழகுவது எப்படி, யாரையும் புண்படுத்தாமல் வாதம் செய்வது எப்படி, புண்படுத்தும் படியான வாதம் அமைந்து விட்டால் அதில் இருந்து மீளுவது எப்படி என்ற பல கேள்விகளுக்கு இங்கு நான் பதில் பெற்றுக் கொண்டேன்.

மொத்தத்தில் இக்கரை என் மீது காட்டிய அக்கரையால், நான் எல்லா விதத்திலும், உள்ளொளி பெற்றவனாக திகழும் படி செய்தது.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றால் உங்களின் நடவடிக்கைகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும் சூழலில் அரசியல் மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. ஒன்று மக்களுக்குப் பணியாற்றாமல் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து செல்ல வேண்டும், அல்லது உங்கள் வேலையில் பிரச்சனைக்ள் உருவாகும். இப்படிப்பட்ட சூழலில் நெஞ்சுறுதியுடன் அவர்களை எதிர்ப்பீர்களா? அல்லது வேலைதான் முக்கியம் என்று அவர்களுக்கு அடிபணிவீர்களா?


எனது அப்பா என்னை யாருக்காகவும் அடிபணிந்து செல்லும் படியான சூழலில் வளர்க்கவில்லை அண்ணா. நான் ஆட்சியாளன் ஆகும் பொழுது எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியின் ஒவ்வொரு சொல்லையும், பின்பற்றுவேன், அதற்காக எந்த விட செயலையும் நான் எதிர்கொள்ள தயாராக இருப்பேன்.

என்னுடைய தலையாய பணியே மக்களுக்கு சேவை செய்வது தான், அதற்கு தடங்கள் யார் மூலம் வந்தாலும், அதற்கு செவி மடுக்க என்னால் முடியாது, இது நான் பார்த்தும் கேட்டும் வளர்ந்த தீரமுடன் வாழ்ந்து மறைந்த பெரியோர்கள் என்னுள் ஏற்படுத்திய உறுதியும் எனக்கு முன்னே வாழ்ந்து கொண்டிருக்கிற என்னுடைய தந்தையின் நேர்மையான வாழ்வுமே காரணமாகும்.

நான் படித்த ஒரு அரசரின் கதையை கூற விளைகிறேன் , சரியாக நியாபகம் இல்லை, ஆனால், கரு மட்டும் தெளிவாக உள்ளது....அதை கூறுகிறேன் அண்ணா.......

பிரகலாத் என்ற ஒரு அரசரிடம், ஒரு முனிவர் யாசகம் பெற சென்றார். மன்னரும் முனிவர் எதை கேட்டாலும் தருவதாக கூறினார், உடனே முனிவர், உன்னுடைய நேர்மை (honesty) எனக்கு வேண்டும் என்று கூறினார், அதன் படியே, அந்த மன்னரும் கொடுத்து விட்டார், ஆனால், அவர் அந்த நேர்மையை கொடுத்த மாத்திரத்தில், அவரிடம் இருட்ன்கா ஒவ்வொரு நல்ல விஷயங்களும், ஒன்றன் பின் ஒன்றாக, உன்னிடம் நேரமியே இல்லை, நான் உன்னுடன் இருக்க மாட்டேன் என்று அறிவு செல்வம், வீரம் என அனைத்து நல்ல குணங்களும் அவரை விட்டு அந்த முனிவரை அடைந்தது. ஆக, ஒரு மனிதன், அனைத்து செல்வங்களையும் முழுதாக பெற அவனுக்கு நேர்மை முக்கியமாக உள்ளது.

ஆக நான் அந்த நேர்மையை என்றும் விட மாட்டேன் அண்ணா....

என்னுடைய பதிலகள் தங்களுக்கு திருப்தி அளிக்கும் என்று நம்புகிறேன் அண்ணா........ மகிழ்ச்சி மகிழ்ச்சி




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Mar 28, 2012 6:49 pm

பிஜி கதையின் மூலம் பதிலளித்தது நன்றாக இருந்தது. சூப்பருங்க

(ரஜினி பாணியோ சிரிப்பு சிரிப்பு )

Sponsored content

PostSponsored content



Page 19 of 29 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக