புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
49 Posts - 43%
heezulia
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
3 Posts - 3%
Manimegala
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
413 Posts - 49%
heezulia
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
28 Posts - 3%
prajai
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10குருபெயர்ச்சி பலன்கள் Poll_m10குருபெயர்ச்சி பலன்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபெயர்ச்சி பலன்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 03, 2008 11:50 pm

குருபெயர்ச்சி பலன்( டிசம்பர் , 2008 முதல் டிசம்பர் , 2009 வரை

( குரு பகவான் 2008 டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் )

1. மேஷம்

2. ரிஷபம்

3. மிதுனம்

4. கடகம்

5. சிம்மம்

6. கன்னி

7. துலாம்

8. விருச்சிகம்

9. தனுசு

10. மகரம்

11. கும்பம்

12. மீனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 03, 2008 11:52 pm

எந்த நிலையிலும் தைரியம் குறையாத மேஷராசி அன்பர்களே!

2008, டிசம்பர் 6ம் தேதி முதல் 2009, டிசம்பர் 8 வரை


(50/100), + நிலம் வாங்கலாம், - வேலைக்கு இடைஞ்சல்



அசுவினி, பரணி, கார்த்திகை


உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். இதனால் சுமாரான பலன்களைப் பெறுவதற்கே வாய்ப்புண்டு. தற்போது குருபகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்வதால், மனதில் குழப்பமும், பணச்செலவும் அதிகரிக்கும். இருப்பினும் மகரத்தில் உள்ள குரு உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களை முறையே தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் பார்ப்பதால், குருவின் பார்வை பெறுகிற இடங்கள் உங்களுக்கு சில நற்பலன்களையும் வழங்கும்.


தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பணவரவை அதிகம் பெற வாய்ப்புகள் உருவாகும். அதே சமயம் வரவுக்கு மீறிய செலவினங்களால் சேமிக்க இயலாமல் போகும். குருபார்வையால் வீடு, வாகன வகையில் வெகுநாள் திட்டமிட்ட வளர்ச்சி மாற்றங்களை செய்வீர்கள். சிலருக்கு வீடு, கட்டட மாற்றம் செய்ய வேண்டி வரும். தாய்வழி உறவினர்கள் உங்களிடம் பாசத்துடன் நடந்து கொள்வர். புதிய நிலம், வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். நிலம் தொடர்பான வழக்குகளில் அனுகூல வெற்றி கிடைக்கும். புத்திரர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் சில செயல்பாடுகளில் ஈடுபடலாம். அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி திருத்துங்கள். உடல்நலம் பலம்பெறும். கடனை ஓரளவே சரி செய்ய இயலும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருக்கும். உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வரும். முக்கிய வீட்டு சாதனங்கள் வாங்க அனுகூல சந்தர்ப்பம் உருவாகி நிறைவேறும். நல்லவர்கள் சிலர் நண்பராக அமையும் கிரகநல்லருள் உள்ளது. தடைபட்ட திருமணம் இனிதாக நிறைவேறும். பயணங் களால் பணச்செலவு அதிகரிக்கும்.


தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் ஒவ்வொரு செயலையும் மிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். இருப்பதைப் பாதுகாக்கவே திண்டாட வேண்டியிருக்கும். ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், டெக்ஸ்டைல்ஸ், பாத்திரம், வீட்டு உபயோக சாதனங்கள், மருந்து, கட்டுமான பொருட்கள், உணவு பண்டங்கள், பர்னிச்சர், காகிதம், எழுதுபொருட்கள், விவசாய இடுபொருட்கள் உற்பத்தியாளர்களும், லாட்ஜ், ஆஸ்பத்திரி நடத்துவோரும் அதிக லாபத்தை எதிர்பார்க்க இயலாது. கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்ற தொழில் செய்பவர்களுக்கு சுமாரான லாபம் இருக்கும். திறமை மிகுந்த பணியாளர்கள் உங்கள் நிறுவனத்தை விட்டு விலக நேரலாம்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருட்கள், விளையாட்டு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், பர்னிச்சர், காய்கறி, உணவு பண்டங்கள், ஸ்டேஷனரி, இறைச்சி, மளிகை பொருட்கள், குளிர்பானவகை, விவசாய இடுபொருட்கள், உழவு சாதனம், பெயின்ட் வியாபாரம் செய்பவர்கள் திண்டாடிப் போகும் சூழல் உண்டாகலாம். பிற வியாபாரிகள் ஓரளவு லாபமடைவர். சிலர் புதிய கட்டடங்களுக்கு கடைகளை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 03, 2008 11:54 pm

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிரமங்களை எதிர்நோக்கும் காலம் இது. "பத்தில் குரு பதவிக்கு இடர் என்பது ஜோதிட சொல்'. ஆகவே தொழில் வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும். பணியில் ஆர்வக்குறைவு மிகுந்து நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் கிரகநிலை உள்ளது. கவனம். இயந்திரங்களைக் கையாளுபவர்கள், தொழில்நுட்ப பணி சார்ந்தவர்கள் முழு கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே இயந்திரத்தில் பழுது வராத தன்மை பெறுவீர்கள். இல்லையென்றால் இதற்கு பொறுப்பேற்று சம்பளத்தில் பிடித்தம் செய்யும் சங்கடமான சூழ்நிலை ஏற்படும்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் மிகுந்த பொறுமையுடன் பணிபுரிவதால் மட்டுமே அவப்பெயர் வராத தன்மையைப் பெறமுடியும். பணிச்சுமை, தேவையற்ற இடமாற்றம் போன்ற அனுகூலக்குறைவு ஏற்படும். குடும்பப் பெண்கள் செலவுக்கு திண்டாடும் சூழல் ஏற்படும். கணவரின் சம்மதமின்றி எவரிடமும் கடன் பெறக்கூடாது. இதனால் குடும்பத்தில் சச்சரவும், நிம்மதி குறைவும் ஏற்படும். சுயதொழில் புரியும் பெண்கள் செய்யும் தொழிலில் ஆர்வம் குறைந்து இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிற எண்ணம் வளர்ந்து மாற்றுத்தொழிலை நாட வேண்டி வரலாம். மிகவும் கவனமாக இருக்கவும்.


மாணவர்கள்: தொழில் நுட்பம், இலக்கியம், மாடலிங், பிரின்டிங், ஓட்டல் மேனேஜ் மென்ட், சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், வாகன தொழில்நுட்பம், விவசாயம், ஏரோநாட்டிக்கல், கேட்டரிங், கம்ப்யூட்டர், மருத்துவம், நிதி நிர்வாகம் சார்ந்த படிப்பில் உள்ள மாணவர்கள் குரு பகவானின் அருளால் சிறந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்கள் சுமாராகப் படிப்பர். படிப்பை நிறைவு செய்யும் நிலையில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புண்டு.


அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் கவனமுடன் செயல்படுங்கள். ஆரவாரத்துடன் செயல்பட்டால் தேவையற்ற அவப்பெயர் வந்துசேரும். அரசு அதிகாரிகளிடம் கடுமை காட்டும் சூழ்நிலை அமைந்து வழக்கு விவகாரத்தில் சிக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகலாம். அரசியலுடன் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடன்பட நேரலாம்.


விவசாயிகள்: மகசூல் குறைவாக இருக்கும். விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காது. கால்நடைகளாலும் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.


நீங்கள் செய்ய வேண்டியது: விழுப்புரம் மாவட்டம் பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் சிக்கல் தீர்ந்து நற்பலன் ஏற்படும். நரசிம்ம மூல மந்திரத்தை 11 முறை தினமும் பாராயணம் செய்யவும்.


உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்


ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்


ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்


மிருத்யும் மிருத்யும் நமாம்யஹம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 03, 2008 11:56 pm

பிறரை வசீகரிக்கும் வகையில் பேசும் திறனுள்ள ரிஷபராசி அன்பர்களே!

குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.



(80/100) + பணவரவு ஜோர், - தம்பட்ட எண்ணம்


கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2



உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குருபகவானின் 5, 7, 9 ஆகிய பார்வை முறையே ராசி மற்றும் ராசிக்கு 3, 5ம் இடங்களில் பதிகிறது. குருவின் பார்வை பெறுகிற இடங்கள் அபரிமிதமான நற்பலன்களை வழங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். உங்கள் ராசியை குரு பார்ப்பதால் மனதில் தெளிந்த சிந்தனையும் புத்துணர்வும் பெறுவீர்கள். துவங்கும் பணிகள் வெற்றி பெற்றுவிடும். இந்த வெற்றியால், என்னை விட இந்த உலகில் யார் வல்லவர் என்ற எண்ணம் தோன்றக்கூடும். இப்படி தம்பட்டம் அடிப்பதை விட்டுவிடுங்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வீடு, வாகனம் சார்ந்த வகையில் திருப்திகரமான நிலை உண்டு. உங்கள் இல்லம் தேடி வரும் உறவினர், விருந்தினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக, தாய்வழி உறவுகளுடன் கருத்து வேற்றுமை கூடுதலாகும். ஆனால், தந்தைவழி உறவினர்கள் உங்களின் செயலை உற்றுகவனித்து வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனை வழங்குவர். ராசிக்கு ஐந்தாமிடம் குரு பார்வையைப் பெறுவதால், புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து பெற்றோரை மகிழ்விப்பர். உடல்நலத்தை கவனமுடன் பாதுகாத்து வளம்தரும் வாழ்க்கையைப் பெறுவீர்கள். வழக்கு விவகாரத்தில் சமரச தீர்வு வரும். கடன்கள் தீர்ந்து விடும். இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும்.


கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து மகிழ்ச்சியுடன் இருப்பர். சமூக அந்தஸ்து உயர நெருங்கிய நண்பர்கள் உதவி செய்வர். கடந்த காலத்தில் இருந்த தேவையற்ற செலவு குறைந்து சேமிக்கும் நிலை ஏற்படும். ஓடிப்போகிறவருக்கு ஒன்பதாமிடத்தில் குரு என்பர். இதனால் பணியிலோ, தொழிலிலோ, குடும்ப விவகாரங்களி லோ சில குறைபாடுகளே இருந்தாலும் கூட அதில் இருந்து தப்பி விடும் சூழ்நிலை ஏற்படும். மே, ஜூன், ஜூலையில் உடல்நிலை பாதிப்பு, மனநிம்மதி இழத்தல் ஆகிய பலன்கள் ஏற்படலாம்.


தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்தி நற்பெயரும் தாராள பணவரவும் பெறுவீர்கள். வெளியூர் பயணம் கூடுதல் அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் தரும். இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், தோல், பிளாஸ்டிக், ரசாயனப்பொருட்கள், உணவு பண்டங்கள், வாசனை திரவியம், வீட்டு அலங்கார சாதனம், செல்போன், கம்ப்யூட்டர், மின்சார உபகரணங்கள், மார்பிள், ரப்பர் பெருட்கள்,, அச்சகம் நடத்துபவர், பிளக்ஸ், பெயின்ட், காகிதத் தொழில் அதிபர்கள் அதிக பொருள் உற்பத்தியும் புதிய ஒப்பந்தமும் கிடைக்கப் பெறுவர். இதனால் பணவரவு தாராளமாகும். அபிவிருத்தி பணிகளை இக்காலத்தில் சிறப்பாகச் செய்வர். பிற தொழில் அதிபர்களும் தொழில் சிறந்து ஆதாய பணவரவு பெறுவர். உபதொழில் துவங்கவும் குருவருள் பலமாக உள்ளது.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பாத்திரம், பர்னிச்சர், மின்சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்கள், பழச்சாறு, குளிர்பானம், காய்கறி, உணவுபண்டங்கள், அழகு சாதன பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பால் பொருட்கள், காகிதம், அலங்கார பொருட்கள், வண்ண மீன்கள், இறைச்சி, பேக்கரி சார்ந்த வியாபாரிகள் கூடுதல் வாடிக்கையாளர் பெற்று வளர்ச்சியும், ஆதாய பணவரவும் பெறுவர். பிற பொருட்களை வியாபாரம் செய்பவர்களும் கூடுதல் விற்பனை அமைந்து சேமிக்கும் வகையில் லாபம் பெறுவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 03, 2008 11:57 pm

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாகத்துடன் செயல்புரிவர். பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம், அபிவிருத்தி கடன் போன்றவை எளிதாக பெறலாம். இயந்திரங்களை இயக்குதல், தொழில்நுட்ப பராமரிப்பு, மார்க்கெட்டிங், மேற்பார்வை பணி, வாகன உதிரிபாகம் உற்பத்தி, காகிதம் சார்ந்த பணிகளில் உள்ளவர்கள் மிக அதிகமான வருமானத்தைப் பெற வாய்ப்புண்டு. நிர்வாகத்திடம் நற்பெயரும் உரிய சலுகையும் கிடைக்கும். சக பணியாளர்களுடன் சீரான நட்புறவு வளரும்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் உற்சாகமாகச் செயல்பட்டு பணியை சிறப்பாக நிறைவேற்றுவர். பணியில் உயர்வு, விரும்பிய இடமாற்றம், சலுகைகள் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் நல் அன்பும், கூடுதல் பணவசதியும் பெற்று மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை நடத்துவர். புத்திரப்பேறு, ஆபரணச் சேர்க்கை வகையில் அனுகூல பலன் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய ஆர்டர் கிடைத்து தொழிலில் வளர்ச்சித்தன்மை காண்பர். ஆதாய பணவரவை தொழிலின் அபிவிருத்திக்கு மூலதனமாக பயன்படுத்துவர்.


மாணவர்கள்: கம்ப்யூட்டர், சட்டம், கேட்டரிங், லேப் டெக்னீசியன், சிவில் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்கல், ஆடிட்டிங், விவசாயம், மருத்துவம், தொல்பொருள் ஆராய்ச்சி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஓவியம், இலக்கியம், ஜர்னலிசம், சாப்ட்வேர் இன்ஜினியரிங், பிரின்டிங் டெக்னாலஜி பயிற்சி பெறும் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி தரத்தேர்ச்சியும் நற்பெயரும் பெறுவர். பயிற்சியை நிறைவு செய்யும் நிலையில் உள்ளவர்கள் தகுதியான வேலை வாய்ப்பை பெறுவர். பிற மாணவர்களும் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.


அரசியல்வாதிகள்: சமூகத்தில் இருக்கும் நற்பெயரை வளர்க்க கூடுதல் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். ஆதரவாளர்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பர். அரசு அதிகாரிகளிடம் இதமுடன் நடந்து மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய பதவி ஒன்று எளிதாக கிடைக்கும்.


விவசாயிகள்: பயிர் வளர்ப்பிலும் கால்நடை பராமரிப்பிலும் உரிய கவனத்துடன் செயல்பட்டு தாராள மகசூலும் பணவரவும் பெறுவீர்கள். புதிய சொத்து வாங்கும் எண்ணம் குருவருளால் நிறைவேறும்.


நீங்கள் செய்ய வேண்டியது: ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை வழிபட்டு வருவதன் மூலம் சகல சவுபாக்கியமும் பெறலாம். கீழ்க்கண்ட பாடலை தினமும் 11 முறை பாராயணம் செய்யவும்.


பச்சைமா மலைபோல் மேனி


பவளவாய் கமலச்செங்கண்


அச்சுதா! அமரர் ஏறே!


ஆயர் தம் கொழுந்தே என்னும்


இச்சுவை தவிர யான்போய்


இந்திரலோகம் ஆளும்


அச்சுவை பெறினும் வேண்டேன்


அரங்கமா நகருளானே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:00 am

(50/100) + சகோதர உதவி, - பணவரவில் தடங்கல்

மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3

நற்செயல்கள் புரிந்து மனமகிழ்ச்சி பெறுகின்ற மிதுனராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். இதனால் உங்கள் ஒவ்வொரு செயலையும் நிதானமுடன் மேற்கொள்ள வேண்டும். மகரத்தில் இடம்பெற்றுள்ள குருபகவான் ராசிக்கு 12, 2, 4 ஆகிய இடங்களை முறையே தனது 5, 7, 9 பார்வையால் பார்க்கிறார். எட்டாம் இட குரு மனதில் பலவித குழப்ப சிந்தனைகளை உருவாக்குவார். உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதால் நற்பலன்கள் உருவாகும். பணவரவில் தடங்கல் உண்டாகும். வேலை, தொழிலை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி வரும். நீங்கள் பொறுமையுடனும், பண்புடனும் பேசினாலும் கூட அது பிறருக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக அமையும்.


வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் கடைபிடிப்பது உரிய பாதுகாப்பைத்தரும். தாய்வழி உறவினர் உங்கள் நல்வாழ்வில் அக்கறை கொள்வர். நண்பர்கள் ஒரு உதவி செய்தால், உங்களிடம் பத்து உதவியை எதிர்பார்ப்பார்கள். புத்திரர்கள் திறமையுடன் செயல்பட்டு பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். உடல்நலம் சுமாராக இருக்கும். சமரச முயற்சிகளில் ஈடுபட்டால், சட்டசிக்கலில் மாட்ட வேண்டி வரும். சில செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். கணவன், மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். மூத்தசகோதரர்களால் உதவி, ஆலோசனை கிடைக்கும்.


தொழிலதிபர்கள்: தொழில்சார்ந்த வகையில் இருப்பதைப் பாதுகாப்பதே சிரமமாக இருக்கும். வளர்ச்சி திட்டங்களை இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு செயல்படுத்தலாம். டெக்ஸ் டைல்ஸ், பர்னிச்சர், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழிலதிபர்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் மந்த நிலைக்கு உள்ளாவர். அளவான மூலதனத்துடன் தொழில் நடத்துவது நல்லது. உணவு பண்டங்கள், தேன், சாக்லெட், நிதி நிறுவனம், பள்ளி, கல்லூரி நடத்துபவர், வீட்டு உபயோக சாதனங்கள் தயாரிப்பு, ஸ்டேஷனரி சார்ந்த தொழில் செய்பவர்கள் சுமாரான வளர்ச்சி பெறுவர். சில சமயங்களில் கடன் வாங்கி தொழிலை நடத்த வேண்டிய நிலை வரலாம். தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை சாமான்கள், விளையாட்டு பொருட்கள், சமையலறை சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், பர்னிச்சர், மருந்து, லாலா கடை நடத்துபவர்கள் லாபம் ஈட்ட கடும் சிரமம், போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களுடன் கறாராக பேசினால், இருப்பதையும் இழக்க நேரிடும். கவனம். தேவைக்கேற்ப பொருட்களை கொள்முதல் செய்வதால் பொருள் சேதாரம் வராமல் தவிர்க்கலாம். வியாபாரத்திற்கு பயன்படும் வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். கடன் கொடுத்தால் வசூல் செய்வதில் தாமதம் ஏற்படும். எல்லா வியாபாரிகளுக்குமே போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிரமமான சூழ்நிலைகளை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தமக்கென வழங்கப்பட்ட பணியை முழுமுயற்சியுடன் நிறைவேற்ற வேண்டும். கவனக்குறைவாக செயல்பட்டால் நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும். குறிப்பாக அக்கவுண்ட்ஸ், ஸ்டோர்கீப்பர், நிறுவன மேற்பார்வை, உணவுப்பொருள் தயாரிப்பு, கட்டுமானம், அழகுப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். பணியில் குறைபாடு ஏற்பட்டு பண இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையும் உள்ளது. கவனம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:01 am

பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் அன்றாட பணிகளை முடிக்கவே ஏதாவது ஒரு வகையில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். பணியில் உற்சாகமின்மை, உடல் சோர்வால் மனநிலை என்னவோ போல் இருக்கும். இதனால் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். குடும்ப பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கே திண்டாட வேண்டி வரும். ஆனால், புத்திரர்களின் ஒத்துழைப்புடன் அவர்களது வளர்ச்சியில் கவனம் செலுத்தி முன்னேற்றச் செய்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான லாபமே பெறுவர். வளர்ச்சிப்பணிகள் மந்தகதியிலேயே நடக்கும். மிதமான அளவிலேயே ஆர்டர்கள் கிடைக்கும்.


மாணவர்கள்: வங்கியியல், ஆசிரியர் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், கம்ப் யூட்டர், சட்டம், இன்ஜினியரிங், கேட்டரிங், ஏரோநாட்டிக்கல், விவசாயம், ஆடிட்டிங், இலக்கியம், தொல்பொருள் ஆராய்ச்சி, சாஸ்திரம், ஜர்னலிசம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் உற்சாகமாகப் படித்து சிறந்த தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்களுக்கும் ஓரளவு நல்ல நிலையே. பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். படிப்புக்கான பணவசதி சீராக இருக்கும். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.


அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் சில செயல்பாடுகள் அமையும். ஆதரவாளர்களுக்காக செலவழித்து பண இருப்பு குறைந்து போகும். அரசியல் பணிகளுக்கு புத்திரர்களின் உதவி உறுதுணையாக இருக்கும். அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கைகள் அவ்வளவு எளிதில் நிறைவேறாது. கடுமையாக அவர்களுடன் போராட வேண்டி வரும். இதனால் பிரச்னைகளும் ஏற்படும்.


விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் உற்பத்தி செலவு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் மனநிறைவும், அதனால் கூடுதல் பணவரவும் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரங்கள் தலைதூக்கும். அவை உங்களுக்கு சாதகமற்ற போக்கை உருவாக்கும். மென்மையான போக்கை கடைபிடியுங்கள்.


நீங்கள் செய்ய வேண்டியது: திருக்கடையூர் அபிராமியை வழிபடுவதால் சோதனைகள் குறையும். கீழ்க்கண்ட பாடலை 11 முறை தினமும் பாராயணம் செய்யவும்.


நாயகி நான்முகி நாராயணி


கை நளின பஞ்ச


சாயகி சாம்பவி சங்கரி


சாமளை சாதி நச்சு


வாயகி மாலினி வாராகி


சூலினி மாதங்கி என்று


ஆயகி ஆதி உடையாள்


சரணம் அரண் நமக்கே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:03 am

(90/100) + வசதியான வாழ்க்கை, - வீண்பழிக்கு ஆளாகுதல்


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்


கருணை நிறைந்த மனதுடன் பிறருக்கு உதவும் கடகராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். இது மிகவும் அனுகூலம் நிறைந்த பலன்களை தரும். கடந்த காலங்களில் இருந்த பல்வேறு சிரமங்கள் விலகிப்போகும். மகரத்தில் உள்ள குரு தனது 5, 7, 9ம் பார்வையால் ராசிக்கு 11, ராசி, ராசிக்கு 3 ஆகிய இடங்களை பார்க்கிறார். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். நடைமுறைப்படுத்தும் செயல்கள் அனைத்தும் பூரண வெற்றிபெறும். எல்லாமே சாதகமான போக்காக இருக்கும். பணவரவில் இருந்த தாமத நிலை மாறி தாராள பணவரவை பெறுவீர்கள். பிறருக்கு மனமுவந்து உதவும் மனப்பாங்கு பெறுவீர்கள். சமூகத்தில் உயரிய அந்தஸ்தும் பதவி பொறுப்பும் கிடைக்கும். இதற்கு குருவின் பார்வை உற்ற துணையாக உள்ளது. இளைய சகோதரர்கள் தமது தகுதி, திறமையை வளர்த்து வாழ்வில் முன்னேறி உங்களுக்கு பெருமை தேடித்தருவர். வீடு, வாகனம் சார்ந்த வகையில் மனமகிழ்ச்சியும் நிம்மதியும் பெறுகிற அனுகூலத்தன்மை பலமாக உள்ளது.


தாயின் அன்பும் ஆசியும் நிறைவாக கிடைக்கும். தாயின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வீர்கள். புத்திரர்கள் ஊக்கத்துடன் செயல்புரிந்து தங்களின் கல்வித்திறமையை வெளிப்படுத்துவர். குலதெய்வ அருள் பரிபூரணமாக துணை நிற்கும். பூர்வ சொத்தில் கூடுதல் வருமானமும், புதிய சொத்து வாங்குவதுமான சுபபலன் நடக்கும். உடல்நிலையில் மே, ஜூன், ஜூலையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவு வரும். உங்களது எதிரிகள் கூட மறைமுகமாக உங்களது உதவியைக் கேட்கின்ற நிலை உருவாகும். தொல்லை தந்த கடன்களை அடைத்து விடுவீர்கள்.


கணவன், மனைவி ஒற்றுமை சிறந்து உறவினர், நண்பர்களின் பாராட்டைப் பெறும். தகுதி, திறமை நிறைந்த புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு சுபமங்கல நிகழ்வு கைகூடும். ஆபத்து எதுவும் அணுகாது. சுக சவுகர்ய வாழ்க்கை அமைந்து கூடுதல் மகிழ்ச்சி பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு மகிழ்வதும், உதவி புரிவதுமான நன்னிலை ஏற்படும். தொழில் சார்ந்த வகையில் அபரிமிதமான வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். எதிர்கால திட்டங்களை நிறைவேற்ற உரிய சேமிப்பையும் உருவாக்குவீர்கள். இந்த குருபெயர்ச்சி சகல வளங்களையும் உங்களுக்கு தரும். இருப்பினும், சில வீண்பழிகளை சந்திக்க வேண்டி வரும்.


தொழிலதிபர்கள்: மீன், இறைச்சி ஏற்றுமதியாளர்கள், லாட்ஜ் நடத்துவோர், மீன்பிடி படகு, வலைகள் தயாரிப்பு, ரியல் எஸ்டேட் தொழில், மலைத்தோட்ட பயிர்கள், உணவுப்பொருட்கள், மருத்துவ உபகரணம், மருந்துப்பொருட்கள், இரும்பு, பர்னிச்சர், கம்ப்யூட்டர், செல்போன், விவசாய இடுபொருட்கள், டெக்ஸ்டைல்ஸ் அதிபர்கள், தொழில்வளம் சிறந்து ஆதாய பணவரவை நிறைவாகப் பெறுவர். புதிய கிளை துவங்கும் முயற்சி இனிதாக நிறைவேறும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகும். வாகனம் வாங்குவீர்கள். சேமிப்பும் கூடும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மினரல் வாட்டர், குளிர்பானம், ஜெனரேட்டர், சமையல் எண்ணெய், உணவு தானியங்கள், மூலிகை மருந்து, பெயின்ட், தோல், ரப்பர் பொருட்கள், பாத்திரம், நறுமணப் பொருட்கள், பட்டாசு, மீன், பர்னிச்சர், பால்பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக விற்பனையும் அபரிமிதமான பணவரவும் பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களையும் விட லாபம் கூடுதலாகும். சரக்கு கொள்முதல் அதிகரிப்பும், புதிய வாடிக்கையாளர்கள் விரும்பி வந்து பொருள் வாங்குவதுமான அனுகூலத்தன்மை பெறுவீர்கள். திட்டமிட்ட வகையில் சரக்கு வாகனம் வாங்குவீர்கள்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உத்வேகத்துடன் செயல்புரிந்து பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். உயர் அதிகாரிகளிடம் நற்பெயரும், வெகுநாள் எதிர்பார்த்த பணி உயர்வு, சலுகை போன்றவற்றையும் பெறுவர். குறிப்பாக உணவுப்பொருள் தயாரிப்பு, ஆஸ்பத்திரி, விவசாயம், இயந்திரங்களை இயக்குதல், மின்சாரம் சார்ந்த பணியாளர்கள் மிக அதிக சலுகைகளைப் பெற வாய்ப்புண்டு. சிலருக்கு விருது, பரிசுகள் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். சிலர் கூடுதல் பயிற்சி பெற வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். முக்கிய பணி பொறுப்புகளை ஏற்பர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:04 am

பெண்கள்: அரசு, மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். விரும்பிய பணியிட மாற்றம், பதவி உயர்வு பெறுவீர்கள். குடும்ப பெண்கள் கணவரின் எண்ணங்களுக் கேற்ப நடந்து குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரிவர். தாராள பணவரவு இருக்கும் என்பதால், மகன், மகள், சகோதரிகளின் மங்கல நிகழ்ச்சிகளை பொறுப்புடன் நிறைவேற்றுவீர்கள். ஆபரண சேர்க்கை திருப்திகரமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணியை சிறப்பாக நிறைவேற்றுவர். தொழில் வளம் சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும்.


மாணவர்கள்: கம்ப்யூட்டர், மருத்துவம், கேட்டரிங், ஏரோநாட்டிக்கல், சிவில் இன்ஜினியரிங், மருத்துவம், லேப் டெக்னீஷியன், மரைன் டெக்னாலஜி, ஜோதிடம், வானவியல், வெல்டிங், டர்னர், ஓவியம், பியூட்டீஷியன், ஏர்கண்டிஷன் மெக்கானிசம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் நன்கு படித்து தரத்தேர்ச்சி பெறுவர். மற்ற துறையினர் இவர்களையும் விட சிறப்பாகப் படித்து மாநில, பல்கலை., ராங்க் பெறும் வாய்ப்புண்டு. பயிற்சியை நிறைவு செய்யும் நிலையில் உள்ளவர்களுக்கு கவுரவமான வகையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


அரசியல்வாதிகள்: ஆதரவாளர்கள் விசுவாசத்துடன் நடந்துகொள்வர். புதிய பதவி பொறுப்பு கிடைக்கும். எதிரிகள் உங்கள் வளர்ச்சியை அறிந்து விலகிச் சென்று விடுவார்கள். புத்திரர்கள் உங்கள் அரசியல் பலத்தை தக்கவைக்க உறுதுணையாக செயல்படுவர்.


விவசாயிகள்: அதிக மகசூல் கிடைக்கும். சந்தையில் கட்டுப்படியான விலை கிடைத்து ஆதாய பணவரவு பெறுவீர்கள். கால்நடை அபிவிருத்தியும் அதனால் திருப்திகரமான பணவரவும் கிடைக்கும். புதிய நிலம் வாங்கலாம்.


நீங்கள் செய்ய வேண்டியது: திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வணங்கி கிடைக்கும் பலனின் அளவை மலை போல் உயர்த்திக் கொள்ளுங்கள். கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யுங்கள்.


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி


ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது


வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது


நாதன் நாமம் நமச்சிவாயவே.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 04, 2008 12:05 am

(45/100) + கணவன், மனைவி ஒற்றுமை, - உடல்நலத்தில் பாதிப்பு


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


மகம், பூரம், உத்திரம் - 1


துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி பெறும் சிம்மராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் இந்த அமர்வு அனுகூலம் தரும் வகையில் இல்லை. இருப்பினும் குருவின் பார்வை பெறுகிற ஸ்தானம் பலம்பெற்று உங்கள் வாழ்வு வளம்பெற சுப பலன்களை அள்ளிவழங்கும். மகரத்தில் அமர்ந்த குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் முறையே ராசிக்கு 10, 12, 2 ஆகிய இடங்களை பார்க்கிறார்.


கடந்த காலத்தில் குருவினால் பெற்ற நற்பலன், சமூக அந்தஸ்து ஆகியவை குறையக்கூடும். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு அமர்ந்துள்ளதால் உடல்நலக்குறைவு ஏற்படும். அதற்கு உட்படாத வகையில் நல்ல பழக்கவழக்கங்கள், நேரத்துக்கு சாப்பிடுதல் ஆகிய பழக்கங்களை பின்பற்ற வேண்டும். பேசும் வார்த்தையில் சாந்தமும், கருணையும் நிறைந்திருக்கும். தன, குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் பணவரவு திருப்திகரமாகும். இளைய சகோதரர்களுக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு துணைநிற்பர்.


வீடு, வாகனம் சார்ந்த வகையில் பராமரிப்பு பணிகளைச் செய்வதில் தடங்கல் ஏற்படும். புத்திரர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு உங்களைப் பாடாய் படுத்துவர். நண்பர்களும் ஏதாவது எதிர்பார்த்தே உதவி செய்வார்கள். குலதெய்வ வழிபாடு நிகழ்த்துவதில் தடை வராது. பூர்வ சொத்தில் வளர்ச்சியும் வருமானமும் உயரும். மாமன், மைத்துனரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் தகுதி, திறமை கண்டு சிலர் பொறாமையுடன் எதிர்மறையாக செயல்படுவர். அவர்களின் செயலை முறியடிக்க உரிய உபாயத்துடன் செயல்படுவது நல்லது.


பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால், வீண் செலவுகள் ஏற்பட்டு மிச்சம் பிடிக்க வழியில்லாமல் போகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்க இனிய சந்தர்ப்பங்கள் பல வகையிலும் துணைநிற்கும். குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை இருவரும் திறம்பட நிறைவேற்றுவீர்கள். பாதுகாப்பற்ற செயல்களிலும் இடங்களிலும் பிரவேசிக்கக் கூடாது. சிலருக்கு சுயமாக தொழில் துவங்கும் வாய்ப்பு உருவாகி நிறைவேறும். அதற்குரிய பொருளாதார வசதியும் கிடைக்கும். பயணங்களால் செலவு அதிகரிக்கும். பொதுவாக இந்த குரு பெயர்ச்சியில் உடல்நலத்தில் கூடுதல் கவனம் கொள்வது உத்தமம்.


தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் தேவையான வளர்ச்சி உருவாக குருவின் பார்வை பலமாக உள்ளது. கம்ப்யூட்டர், பர்னிச்சர், வாசனை திரவியம், அழகுசாதனப் பொருள், மின்சாதனம், மீன்பிடி சாதனம், பால்பொருட்கள், இசைக்கருவிகள், குழந்தை உணவு, அலங்காரப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், மார்பிள், பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தொழில்வளம் சிறந்து திருப்திகரமான பணவரவு பெறுவர். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட வருமானம் கூடுதலாகும். நட்சத்திர ஓட்டல், கல்யாண மண்டபம், சுற்றுலா நிறுவனம், திரையரங்கம் நடத்துபவர்கள் தொழில்வளர்ச்சி பெறுவர். அபிவிருத்தி பணி செய்வதற்காக வங்கி கடனுக்கு முயற்சிப்பவர்களுக்கு கிடைத்து விடும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, கம்ப்யூட்டர், செல்போன், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வீட்டு உபயோக சாதனம், பர்னிச்சர், மின்சாதனம், கட்டுமானப் பொருட்கள், விளையாட்டு சாதனங்கள், விவசாய இடுபொருட்கள், பிளாஸ்டிக், அழகு சாதனப் பொருட்கள், ஸ்டேஷனரி, காய்கறி, மீன், செல்லப்பிராணிகள் வியாபாரம் செய்பவர்கள் அபிவிருத்தி பணியை நிறைவேற்றுவர். வியாபாரம் சிறப்பாக இருந்தாலும் ஓரளவே லாபம் கிடைக்கும். திருட்டு, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு வசதிகளை உரிய முறையில் அவசியம் ஏற்படுத்த வேண்டும்.


பணியாளர்கள்:அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையுடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவார்கள். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய பணியிட மாற்றம் ஏற்படும். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் உள்ளவர்கள் தங்கள் செயல் திறமையை வெளிப்படுத்தி அதிக சலுகைகள் பெறுவர். சக ஊழியர்களின் பொறாமை காரணமாக ஏற்படும் சிக்கலை தீர்க்கத்தான் போராட வேண்டியிருக்கும். கவனச்சிதறல் அறவே கூடாது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக