புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Manimegala
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
குண்டலினி - Page 2 Poll_c10குண்டலினி - Page 2 Poll_m10குண்டலினி - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டலினி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 8:14 am

First topic message reminder :

சூரியனாக பரிணமிப்பதற்கு எது மூலகாரணமோ அதுவே குண்டலினி என்பதாகும்.
குண்டலினி - Page 2 Mind10
அணுவாக இருப்பதற்கு எது காரணமோ அதுவே குண்டலினி என்பதாகும். நுண் அணுக்களாகிய எலக்ட்ரான், புரோட்டோன் என்பவைகளாக இருப்பதற்கு எதுமூலகாரணமோ அதுவே குண்டலினி என்பதாகும்.

தாவரத்தில் வெளிச்சசக்தி ஈர உணர்ச்சியோடு வளர்ந்து பருவத்தில் வித்தாக முடிவடைகிறது. அதுபோல் எல்லா சீவராசிகளிலும், அனேகவித நிறமுடைய ரத்தஉணர்ச்சியாக, வளர்ந்து முடிவில் விந்துவாகிறது. மனிதஉடம்பில் 13 முதல் 18 வயதிற்கு மேல் விந்து விளைகிறது. உடம்பில் இரத்தநாடிகள் இருக்கும் இடங்களில் எல்லாம் விந்து வியாபித்திருக்கின்றது. விந்துவின் உள்ளும், புறமும் இருக்கும் சக்தியே குண்டலினி~ என்பதாகும்.

குருவால், கருவால், ஒழுக்கத்தால், உயர்வால், பரம்பரை வாசனையின் அந்தஸ்த்தால், தன்னைத்தான் அறியவேண்டும் என்றோ, ஈசனை அடையவேண்டும் என்றோ எண்ணுகின்ற வீரனுக்கு குண்டலினிசக்தி மிகமிக பயன்படுகின்றது.

மரணமில்லா பெருவாழ்வு வாழ உள்ளுணர்வு மிகமிக அவசியம். உணர்விருந்தால் மரணபயமில்லை. மூலாதாரம், உந்தி, அடிமூலம், கீழ்மூலம், குடிலை என்று இதனை பலவிதமாக சொல்வர். இதில் அடங்கியிருக்கும் கருவின்நிலை ஒரு கூடையினால் மூடப்பட்ட விளக்கின் நிலையை ஒத்திருக்கிறது. இதை மேல்நோக்கி கொண்டுவர ஏக்கத்தோடு அறிவு காத்திருக்கிறது.

இந்த அரியபொக்கிஷமாகிய குண்டலினி சக்தியினை பழங்காலத்தில் மகிரிசிகளும், யோகிகளும் தியானித்து வாழ்வின் பெரும் நோக்கமாகிய வீடு பேற்றினை அடைந்தார்கள். இம்மாபெரும் யோகமுறையினை அவர்கள் பெரும் பொக்கிஷமாக மதித்து மிக மிக ரகசியமாக பாதுகாத்து வந்தனர். ஆதலினால் இந்த அரிய குண்டலினியோகமானது மனிதசமூகத்துக்கு தெரியாமல் மறைந்துவிட்டது. நமது ஜெகத் மகாகுரு தத்துவ தவஞானி ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான் அவர்கள் இந்த குண்டலினியோகத்தினை மிக எளிமைப்படுத்தி மக்கள் அனைவரும் இந்த யோகத்தினை பயின்று, அவரவர் குடும்பம், நட்பு, தொழில் இவைகளுடனே வாழ்வாங்கு வாழ்ந்து வீடு பேறடையும் வண்ணம் போதித்தருளியுள்ளார்கள்.

பரஞ்ஜோதி ஞானஒளிபீடத்தில் இந்தராஜயோகத்தினை மிக எளியமுறையில் போதித்தருள்கிறார்கள். ஆண், பெண், சாதி, மதம், இனம், மொழி, ஏழை, தனவந்தர் போன்ற எவ்வித பாகுபாடுகளுமின்றி மனிதகுலம் அனைவரும் இவ்வுபதேசத்தினைப்பெற்று பேரானந்தமாக வாழ்வாங்கு வாழலாம்.

இந்த உபதேசம் பெற்றுத் தொடர்ச்சியாகப் பயின்றுவரும் சிஷ்யர்கள், தொல்லைகளெல்லாம் சிறிது சிறிதாக விலகி மறைவதை உணர்வதுடன், தேக ஆரோக்கியம் வலிமை பெறுவதையும், மனஅமைதியுடன் அறிவு தெளிவடைவதையும் உணரலாம். இத்தியானத்தினை அவரவர் தொழில், நட்பு, சுற்றம் இவைகளுடன் இல்லறத்தில் இருந்த வண்ணமே பயிலலாம்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:47 am

உயிர்தான் மனமாக உள்ளது. பரம்பொருளின் இயக்கத்தில் தோன்றிய முதல் பூதமான ஆகாசமே உயிராக இருக்கிறது. அதாவது பரம்பொருளே உயிராக இருக்கிறது. எனவேதான் நமது யோக முறையில் மனத்தை உயிரில் ஒடுக்கி உயிரின் அடக்கத்தில் மனமே மெய்ப்பொருளாகும் நிலையைச் சாதிக்க முடிகிறது. நல்ல துரியாதீதத்தில் மனமும் இல்லை உயிரும் இல்லை. அதாவது மனம் இருக்கிறதா உயிர் இருக்கிறதா என்பதை நிதானித்துக் கண்டு கொள்ள அங்கே யாரும் இல்லை. இருந்த ஆள்தான் மெய்ப்பொருளோடு ஒன்றி மெய்ப்பொருளாகவே மாறியாயிற்றே.

மனமும் மெய்ப்பொருள்தான். ஆதியும் மெய்ப்பொருள் தான் ஆனால் மெய்ப்பொருள் குளத்து நீர் என்றால் மனம் அதில் முகந்த ஒரு குவளை நீர் குவளை நீரில் மாசு படிந்து விடுகிறது. அதைக் குளத்தில் கொட்டி விடுகிறோம். அக்குளத்து நீருக்கு அதனால் மாசு வந்து விடுவதில்லை. அதே குளத்தில் இன்னொரு குவளை நீர் முகந்து கொள்கிறோம். அதுபோலவே யோகத்திலும் மனமாகிய மாசடைந்த மெய்பபொருளை அகண்டாகார மெய்ப்பொருளில் சேர்த்து விடுகிறோம். மனத்தின் மாசு சூனியத்தில் கலந்து சூன்யமாகி விடும். எவ்வளவு பூரணமாகச் சேர்க்கிறோம் என்பதில் தான் துரியாதீதத்தின் வெற்றியும் மனமாக நீங்கலின் முழுமையும் இருக்கிறது

"ஐயப் படாஅது அகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்"


என்ற குறளையும் இந்த இடத்தில் சிந்தித்துப் பாருங்கள். மனமாகிய மெய்ப்பொருளுக்கு ஆற்றல் குறைவு. பூர்ணமாகிய மெய்ப்பொருளோடு தொடர்பு கொண்டு பழகப் பழக மனத்தின் ஆற்றல் கூடுகிறது. எனவே துரியாதீத தவத்தில் மனத்தூய்மையும் கிடைக்கிறது மனத்தின் ஆற்றலும் கூடுகிறது. பக்தி மார்க்கத்தில் சரணாகதி என்று ஒன்று சொல்வார்கள். அது நமது துரியாதீதம் போன்றது என்று சொல்லலாம்.

இறைவனின் பெருமையை ஏற்றுக் கொண்டு மதித்து அவனிடம் தன்னை-உடல் பொருள் ஆவியை--பூரணமாக ஒப்புக்கொடுத்தல்தான் சரணாகதி என்பார்கள். நாம் இறைவன் என்றும் மனிதன் என்றும் இரண்டாகக் கொள்வதில்லை. மெய்ப்பொருளானாது மனமாக மாறியுள்ளது. அந்த மனத்தை மீண்டும் மெய்ப்பொருளாகவே மாற்றுகிறோம். பரிணாமம் என்ற நீரோட்டத்தில் இது எதிர்நீச்சல் என்று கொள்ளலாம்.

துரியாதீத தவம் ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர் வியக்கத்தில் (frequency) மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் எல்லாம்அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதிநிலை.

ஜீவகாந்தத்தின் விளைவுதான் மனம். மனம் தன் மூலத்தை அறிவதற்காகவே அடைவதற்காகவே விரிகிறது. விரிந்து விரிந்து நிற்கிறது. அனுபோக உணர்ச்சிகளில் இருக்கும் மனத்திற்கு வழி தெரியவில்லை; வேகமோ குறையவில்லை; ஆகவே எங்கெங்கோ சென்று நிற்கிறது. எது எதிலேயோ சிக்கிக் கொள்கிறது. துன்புறுகிறது. ஆனால் தன் லட்சியத்தை அடையும் வரை மனத்தின் விரியும் முயற்சி சோர்வடைவதில்லை. மூலத்தை அடைந்த பிறகுதான் மனத்திற்கு அமைதி கிட்டுகிறது. அதுவரை அமைதி கிடைப்பதேயில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:49 am

தன் மூலத்தை அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளிவிற்கு அமைதியின்மையின் அளவும் துன்பத்தின் அளவும் இருக்கும். இன்று மனித குலத்திடையே நாம் காணும் அமைதியின்மைக்கும் துன்பத்திற்கும் காரணம் இப்போது விளங்குகிறதல்லவா?

பிராயச்சித்தம் மேல்பதிவு தேய்த்தழித்தல் (expiation superimoposition and dissolution) என்று கருமப் பதிவுகளைப் போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன். அவற்றில் கடைசியான தேய்த்தழித்தல் என்பது தவத்தினால் தான் சாத்தியமாகும். ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும் பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மம் பிராரப்த கர்மம் சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் நீங்கும்.

இந்த ஊரில் பெய்த மழை பக்கத்து ஊரிலும் பயனாவது போல ஒருவர் இயற்றும் தவம் அவரது வாழ்க்கைத் துணைக்கும் பயன்படும். அதேபோல பெற்ற மக்களுக்கும் ஒருவர் இயற்றும் தவம் பயனாகும். மண்ணில் ஆழமாகப் போகப் போகத்தான் தண்ணீர் கிடைக்கும். மனத்தின் ஆழமே துரியாதீதம். அங்கே போகப்போக நிலைக்க நிலைக்கத்தான் மனத்திற்கு அமைதியென்னும் தண்ணீர் கிடைக்கும்.

முற்காலத்தில் அவ்வப்போது பலர் துரியாதீத தவத்தில் தேர்ச்சி பெற்றுச் சமாதி நிலை அடைந்தார்கள். ஆனால் அவர்கள் கடமைப்பக்கம் திரும்பவில்லை. துறவறம் என்ற பெயரில் விரக்தி மார்க்கத்தை மேற்கொண்டு உலகத்தை வெறுத்தார்கள் அல்லது ஒதுங்கினார்கள். நாம் அப்படி அல்லோம் நாம் சமுதாயத்தை மறப்பதில்லை. நம்மை உருவாக்கியது இந்த மனித குலம். ஆளாக்கி வாழ வைத்தது இந்த மனிதகுலம். நாம் மேல்நிலை அடைவதற்கும்கூட இடமாகவும் ஆதரவாகவும் மனித குலமே இருக்கிறது. எனவே அதன்பால் நாம் பட்ட கடனின் கணக்குத் தீர்ந்தபாடில்லை. அந்தக் கடனைத் தீர்க்கும் செயலுக்குத்தான் கடமை என்று பெயர். இனி முழுமைப் பெற்றப் பின் ஆற்றும் கடமைக்குத் தொண்டு என்று பெயர் கொடுக்கலாம். எனவே முழுமைப் பெற்று விட்டாலும் உடலும் உயிரும் பிரியும் வரை மனித குலத்துக்குத் தொண்டாற்றுவதை நாம் நிறுத்துவதில்லை.

இயக்கத்தில் இருப்பது அறிவு. இருப்பாக அமைதியாக நிர்ச்சலனமாக இருப்பது மெய்ப்பொருள். அறிவை மெய்ப்பொருளோடு இணைத்திணைத்துத் துரியாதீத தவமாற்றும் போது அறிவிற்கு அமைதியும் ஓய்வும் கிடைக்கிறது. வேறு எந்த வழியிலும் அறிவிற்கு ஓய்வென்பது கிடைக்கவே கிடைக்காது.

துரியாதீதத்தில் உண்மையான ஆழம் எளிதில் புலப்பட்டு விடாது. நேற்றைய தவத்தைவிட இன்றைய தவம் ஆழமானதாக இருக்கலாம். இன்றைய தவத்தைவிட நாளைய தவம் ஆழமானதாக இருக்கும். இந்த வளர்ச்சி வேகம் முற்றுப் பெற்று சமாதிநலை பூரணமாகக் கைகூடச் சில காலம் பிடிக்கும். அது எவ்வளவு காலம் என்பது அவரவர்களுடைய முன்வினை முயற்சி ஆராய்ச்சி முதலியவற்றைப் பொருத்திருக்கிறது. சமாதி நிலை சித்தியாகித் தூய்மை பெற்றால் நாம் மேற்கொண்ட ஞானமார்க்கப் பயணத்தின் லட்சியம் நிறைவேறும் பிறவியின் நோக்கமான வீடுபேறு கிடைக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:51 am

துரியாதீதத்தில் முழுமை சித்திக்க வேண்டும் என்றால் அதற்கு மனத்தூய்மையும் வினைத்தூய்மையும் இன்றியமையாதவை. அதனாலே அறுகுணச் சீரமைப்பு அகத்தாய்வு (Introspection)) கவலை ஒழித்தல் முதலிய முறைகளை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம் வலியுறுத்துகிறோம். அவற்றில் நீங்கள் நல்ல அறிவும் தேர்ச்சியும் பெற்றாக வேண்டும்.

துரியாதீத தவத்தை நாம் ஆக்கினையில் தொடங்குகிறோம். ஆக்கினையில் தவம் செய்து நமது சக்தியை நன்கு அதிதமாகத் திரட்டிக் கொள்கிறோம். உணர்வைப் போதிய அளவு வருவித்துக் கொள்வதால் உடல் முழுவதும் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கக்கூடிய உயிர்ச்சக்தி சிறிது சிறிதாக இங்கு அதிக அழுத்தம் பெறுகிறது. அதனால் ஐம்புலன்களும் அடக்கம் பெறும். பின்னர் துரியதவம் செய்கிறோம்.

துரியதவம் இயற்றும்போது வினைகள் கழிந்து வினைகள் நம்மைப் பாதிக்காத நிலை கிட்டுகிறது. முதலில் வினைகள் எவ்வாறு ஏற்படுகின்றன எனப் பார்ப்போம். எண்ணங்கள் செயல்கள் ஆகியன உடலில் உள்ள சிற்றரைகள் (Cell) எல்லாவற்றிலும் பதிந்து விடுகின்றன.

சூழ்நிலைகள் வரும்போது இப்பழக்க வழக்கப் பதிவுகள் மோதி எழுச்சி பெற்று மூளையிலுள்ள செல்களுக்கு அவை செய்தியனுப்பி இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று புலன்களுக்கு அறிவு அடிமையாகி விடுகிறது. இவற்றைத்தான் வினைகள் என்கிறோம். அந்த நிலை மாறி மூளையிலே செயல் பட்டுக் கொண்டிருக்கிற அறிவானது உடலிலுள்ள செல்களை அடக்கி ஆளக்கூடிய நிலையை இந்த யோகத்தின் மூலம் பெறுகிறோம். அப்போது பழவினை செயல்படுவதில்லை. புதிய வினைப் பதிவும் ஏற்படுவதில்லை.

பின்னர் மனதாலே விரிவடைந்து பேரியக்க மண்டலமாக உள்ள பிரபஞ்சத்தின் அளவிற்குச் செல்கிறோம். பேரியக்கமண்டலம் என்றால் கோடானகோடி நட்சத்திரங்களையும் பயடயஒலகளையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு ஆகும். இதில் சூரியனும் அதனைச் சுற்றியுள்ள ஒன்பது கிரகங்களும் சேர்ந்து சூரியக் குடும்பம் ஆகும். இது போல கோடிக்கணக்கான சூரியக்குடும்பங்களை நாம் ஆகாயத்தில் பார்க்கிறோம்.

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் சூரியனைவிடப் பலமடங்கு பெரிய சூரியன்கள் தான். தூரமாக இருப்பதால் நமக்குச் சிறியனவாகத் தெரிகின்றன. நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பெரிய உருண்மையாக நாம் அனுமானம் செய்து கொண்டோமானால் அதுதான் பேரியக்க மண்டலம் என்று சொல்லப்படும் பிரபஞ்சம். அந்த அளவுக்கு விரிந்து நின்று ஆற்றல் களத்தோடு ஒன்றி நின்று அந்த விரிவிலே தவம் செய்கிறோம். ஒரு பெரிய அணைக்கட்டிலேயிருந்து தண்ணீர் பாய்கிறது என்றால் அது செல்லும் இடங்களை ஆறு குளம் வாய்க்கால் என்று கூறுவதுபோல மகாகாசம் என்ற பேருயிரே எல்லா ஜீவன்களிலும் உள்ளது. மகாகாசம் என்ற பேருயிராக இருப்பது பிரபஞ்சம்தான். பிரபஞ்சம் முழுவதும் விண் (energy-particle) என்ற நுண்ணியக்க உயிராற்றல் நிரம்பியுள்ளது. பிரபஞ்சத்தோடு ஒவ்வொரு உயிருக்கும் இணைப்பு இருக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:53 am

அது கூடுகிறது குறைகிறது விருத்தி ஆகிறது. பிரபஞ்சமே எல்லாவற்றிற்கும் இடமாக உள்ளது. நமது ஒவ்வொரு உயிரும் ஒரு பை (packet) போல சிறிய சிறிய packet கள் அனைத்தையும் இணைத்துக் கொண்டிருப்பது தான் மகாகாசம் பிரபஞ்சம் என்று சொல்கிறோம். நமது உயிரை சிதாகாசம் சின்னஞ்சிறிய ஆகாசம் என்று கூறுகிறோம். இதுவரைக்கும் இந்த உடலுக்குள்ளாக உயிர் இருந்த தன்மையை உணர்ந்தோம். அதனுடைய அசைவை இருப்பை உணர்ந்தோம் அந்த உயிரின் மூலம் அதாவது பேருயிராக்ப பிரபஞ்சம் முழுவதுமாக உள்ள ஆற்றல் கடலை உணர்ந்து அதோடு வயப்படுத்துவதற்காகத்தான் இந்தப் பிறவி எடுத்திருக்கிறோம். அந்தப் பிறவிப்பேறு நிறைவேற ஒத்த ஒரு சாதனை Initiation தீட்சை எதுவோ அதுதான் துரியாதீதம் ஆகும்.

துரியாதீத தவத்தைச் செய்யும் போது ஏற்படும் அனுபவம் என்னவென்றால்

"இறை நிலையோ டெண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
நித்த நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
உறைந்து உற்நதிந் நிலையில் பழகிக் கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கறை நீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன் முனைப்பு காணும் தெய்வம்".

இதுவரையில் வெட்டவெளிதான் வந்து அறிவாக இருக்கிறது என எண்ணிக் கொண்டிருந்தது போய் துரியா தீதத்திலிருந்து பழகப் பழக பரம்மமேதான் உயிருக்குள்ளாக அறிவாக இருக்கிறது என்ற உண்மையை உணரும்போதுதான் அவன்தான் நானாக இருக்கிறான் என்ற நிறை நிலையே தானாக உணர்வதாகும்.

"நித்தம் நித்தம் உடலில் உயிர் இயங்கு மட்டும் உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்க கொள்ள உலக இன்பங்களிலே அளவு கிட்டும்" இப்படி உறைந்து உறைந்து அந்த நிலையிலேயே நாம் பழகி அவன்தான் நானாக இருக்கிறான் அறிவாக இருக்கிறான் எல்லாப் பொருள்களிலும் எல்லா ஜீவன்களிலும் மெய் என்று உணர்ந்து கொண்டபோது எந்த ஒரு கெபாருளை நாம் அனபவித்தாலும் அளவு-முறை என்ற இரண்டையும் தெரிந்து நாம் தாக்கப்படாத அளவிற்கு நமக்கு வேண்டிய இன்பம் பெறுகிற அளவில் அவற்றை உபயோகிக்கக்கூடிய திறமை உண்டாகும். நிறை நிலையைத் தானாக உணர முடியும்.

"கறை நீங்கி அறிவு மெய்ப்பொருளாய் மாறும்" 'கறை நீங்கி' என்றால் ஆணவம் தன்மம் மாயை என்ற மும்மலங்களும் இந்த உயிரிலிருந்து நீங்கி மெய்ப்பொருளாகவே மாறுகின்ற நிலை. அந்த மெய்பபொருள்தான் மூன்று களங்களோடு கலந்தப் பிறகு ஜூவனாக மனிதனாக இப்போது உள்ளது. அந்தக் களங்கம் நீங்கிய ஜீவனுக்கு என்ன பெயர் என்றால் பிரம்மமேதான். ஆகவே அந்தக் களங்கம் நீங்கம் போது மெய்ப்பொருளாகவே மாறும்.

"கரைந்து போம் தன்முனைப்பு காணும் தெய்வம்" தன் முனைப்பு என்ற திரை கிழிந்து போய்விடும். உண்மைப் பொருளாக உள்ள மெய்ப்பொருள் விளக்கம் நமக்கு விளங்கி விடும் என்பதுதான் துரியாதீத தவநிலை ஆகும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:54 am

உய்யும் நிலை

தவமுறையும் அற நெறியும் பற்றப் பற்றத்
தறுக் கென்ற தன் முனைப்புக் குன்றி போகும்
பலவினைகள் புதிது எழர் முன்னம்செய்த
பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும்
சிவ நிலையே சீவனிலே உணர்ந்து கொண்டால்
சிறுமை தரும் மனமயக்க மாயை ஏது?
எவரெனினும் இவ்வழி யாலன்றி உய்ய
ஏது வழி வேறுலகில் எண்ணிப்பாரீர்.


மனம் செம்மையுற அகநோக்குப் பயிற்சி

அறிவு தன் தேவை பழக்கம் சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர் அறிவுடையோர் அடையும் துன்பம்
அறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:55 am

மனத்தூய்மைக்கு மார்க்கம்

"சிந்தனையில் ஓரளவு உணர்ந்தோரெல்லாம்
சீர்திருத்தம் உலகினிலே மலரவென்று
எந்தஒரு அளவேனும் நினைக்கின்றார்கள்
எனினும் இவர் ஒவ்வொருவர் போக்கை நோக்க
விந்தையே; பிறர்மட்டும் இவருக்கொப்ப
வினையாற்றி உயிர்வாழ விரும்புகின்றார்
இந்தப் பெரு நன்மைக்குத் தான் திருந்த
எண்ணுவோர் அரிதரிது எவ்வாறுய்வோம்?"

"மற்றவரே பணிந்துவர வேண்டுமென்ற
மனநிலையில் தருத்குற்றுச் செயல்புரிந்து
பெற்றபலன் குடும்பத்தில் சமுதாயத்தில்
பெருந்துன்பம் பகை; ஒருவர் தனக்கு ஏற்பு
அற்ற ஒரு சூழ்நிலையில் பணிந்தபோதும்
அது வஞ்ச மனநிலையாய் வளர்ச்சிபெற்று
உற்ற ஒரு காலத்தில் பெரிய தீயாய்
ஓங்கி நிலைகுலைத்துவிடும் உண்மை காண்போம்"

"தனது குறை ஆழ்ந்துணர்ந்து திருத்தம் பெற்றால்
தருக்கொழியும் பிறரிடமும் நட்பு ஓங்கும்
மனது ஒரு தூய நிலையை நாடிச் செல்லும்
மற்றவரும் இதன் விளைவாய் நலம் காண்பார்கள்
'எனது' 'நான்' என்னும் இரண்டு சொற்களுக்கும்
ஏற்புடைய கருத்துணரும் தகைமை கிட்டும்
உனது சொல் செயல் எண்ணக் குறைகள் போக்க
உயர்ந்த தற்சோதனையைப் பழகிக்கொள்க".

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:57 am

சக்கர தியானம்

எவ்வளவுதான் சம்பாதித்தாலும், அறிவாளியாக இருந்தாலும், புகழோடு இருந்தாலும், விரும்பியது எல்லாவற்றையும் அடைந்தாலும் மனதில் ஏதோ ஒரு வெறுமை குடி கொண்டிருப்பதை எல்லாருமே உணருவார்கள்.

வெறுமை மனதில் குடியேறும் போது வெறுப்பும், விரக்தியும் வந்து விடுகின்றன. மனநிலையில் மாறுதல் ஏற்படும்போது அதையொட்டி நடத்தையிலும் மாறுபாடுகள் வந்து விடுகின்றன.

பிறகு கவலை, துக்கம், மன இறுக்கம், டென்ஷன் இப்படி ஒவ்வொரு பிரச்சினைகளாக உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டு நம்மை நாமே நோயாளி களாக்கிக் கொள்கிறோம்.

இதைத் தவிர்ப்பதற்காக யோகா, தியானம் என்பன போன்ற மனவளக்கலை முறைகளை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றுள் ஒன்றுதான் சக்கர தியானம்.

இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நமது உடலில் புலன்மறை சக்திகள் உள்ளன. இவற்றை எனர்ஜி என்கிறார்கள். அக்குபஞ்சரில் இந்த எனர்ஜியையின்-யாங் என்பார்கள்.

நம் முன்னோர்கள் பிராணமய கோசம் அல்லது சக்திகோசம் என்றார்கள். இந்த சக்தி கடக்கும் பல வழிகள் உள்ளன. அக்கு பஞ்சரில் இது போன்ற சக்தியை மெரிடியன்கள் என்பார்கள்.

அதேபோல இந்த சக்திகள் எல்லாம் பல வழியாகத் திரண்டு, உள்ள{றும் ஆற்றலைத் தூண்டியெழுப்புகிறது. இந்த உள்ளான ஆற்றலுக்கு குண்டலினி என்று பெயர்.

குண்டலினி விழிப்புடன் இருக்கும் நிலையில் எல்லா கோசங்களுக்கும் சீரான ஆற்றல் பாய்வதால், அவை பாயும் உறுப்புகள் மற்றும் மனம், ஒட்டுமொத்த உடல் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:57 am

இந்த ஆற்றலை நாம் ஏன் எளிதில் அடைய முடிவதில்லை?

நமக்குள் இருக்கும் ஆற்றலை நாம் வெளியே கொண்டு வரத் தெரிந்து வைத்திருப்பது இல்லை, அல்லது அதற்காக முயற்சிப்பது கிடையாது. மேலும் முறைகேடான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், எதிர்மறையான செயல்கள் ஆகியவற்றினால் இந்த ஆற்றலை நாம் வெளியே கொண்டு வர இயலுவதில்லை.

மனதை ஒருமுகப்படுத்தி இந்த ஆற்றல்களை வெளியே கொண்டு வர வேண்டும். அப்போது ஆழமான மன நலன் கிடைக்கும்.

சக்கர தியானத்தில் மூன்று படிகள் உள்ளன. உள்ளத்தோடு உச்சரிக்கும் வார்த்தைகள் இவை மனதை ஒருமுகப்படுத்தும், அமரும் விதம், இவை உடலைத் திடப் படுத்தி மனதை ஒருமைப்படுத்த உதவும். அடுத்தது ஆட்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடிப்பாகத்தில் வைப்பது போன்ற முத்திரை நிலைகள்,

இவற்றை முறையாகச்செய்யும் போது மூளையின் பல பகுதிகள் ஊக்குவிக்கப்படுவதால் மனதில் உழன்று கொண்டிருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக மறைந்து, டிப்ரெஷ்ஷன் போன்ற எண்ணங்கள் அகன்று மனம் ஒரு நிலைப்படும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 10:01 am

சக்கர தியானத்திலுள்ள ஏழு சக்தி நாளங்கள்!

மூலாதாரம்

பிறப்புறுப்புக்கும், ஆசன வாய்க்கும் இடையில் செல்லும் சக்திப்பாதை. இந்தச் சக்தி அதிகரித்தால் உயிர் ஆற்றல் அதிகரிக்கும். இச்சக்தி

தொடர்பான உறுப்புகள்: சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை.

அடையாளம்: நான்கு இதழ் சிவப்புத் தாமரை, கறுப்பு நிற லிங்கம் கயிரால் கட்டப்பட்ட குண்டலினி சர்ப்பம்.

சுவாதிஷ்டானம்

பிறப்புறுப்புக்கு மேல் செல்லும் சக்திப் பாதை. இந்தச் சக்தி அதிகரித்தால் சுயக் கட்டுப்பாடு, நுண்ணுணர்வு அதிகரிக்கும்.

தொடர்பான உறுப்புகள்: கருப்பை, பிறப்புறுப்புகள், பெருங்குடல்.

அடையாளம்: ஆரஞ்சு நிறத்தில் ஆறு தாமரை, உள்ளே நீல பிறைச்சந்திரன்


மணி பூரகம்

தொப்புள் வழியாகச் செல்லும் பாதை. இது உடலின் சக்திiயும், ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தி விழிப்படையச் செய்கிறது.

இது தொடர்பான உறுப்புகள்: கல்லீரல், வயிறு, சிறுகுடல், மண்ணீரல்.

அடையாளம்: பத்து இதழ் கொண்ட மஞ்சள் நிறத் தாமரை, மையத்தில் அக்னி சுவாலை உடையது.


அனாஹதம்

மார்பு நடுவில் செல்லும் இச்சக்திப் பாதையால் உணர்வுகள் பலப்படும். அன்பு, இரக்கம் போன்றவை மேலோங்கும்.

இது தொடர்பான உறுப்பு: இதயம்.

அடையாளம்: பச்சை நிறத்தில் 12 தாமரை இதழ்கள் கொண்டது. மையத்தில் அறுகோணச் சக்கரமும், ஜோதியும் கொண்டது
.

விஷுத்தி

தொண்டைப் பகுதியில் செல்லும் சக்திப்பாதையிது. மறைவான ஆன்ம சக்தியை வெளிப்படுத்தும், புனிதத் துவத்தை வளர்க்கும்.

இச்சக்தி தொடர்பான உறுப்புகள்: தொண்டை மற்றும் நுரையீரல்.

அடையாளம்: பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர்நீலச் சக்கரம்.


ஆக்ஞேயம்

புருவ மத்தியில் செல்லும் பாதையிது. நினைவாற்றலை, விழிப்புணர்வை, ஒருமுகப்படுத்தும் திறனை அதிகமாக்கும். கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதியை உள்ளடக்கியது இந்தப் பாதை.

அடையாளம்: இரண்டு தாமரை கொண்ட கருநீல நிறத்தையும். இடப்பக்கம் சந்திரனையும்., வலப்பக்கம் சூரியனையும், நடுவே லிங்கத்தையும் அடையாளமாகக் கொண்டது.

சகஸ்ராரம்

உச்சந்தலையில் செல்லும் சக்தி. இது மலர்ந்தால் பிரபஞ்ச உணர்வுடன் முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலை வரும்.

இது தொடர்பான உறுப்பு: மூளை.

அடையாளம்: ஆயிரம் தாமரை இதழ்கள் ஊதா நிறத்திலும், அடர் பொன்னிறம் கொண்ட ஜோதிர் லிங்கத்தை மையத்திலும் கொண்டது.


avatar
spsuresh
Guest

Postspsuresh Sat Mar 21, 2009 1:01 pm

VAZHA VAIYAGAM VAZHA VALAMUDAN
HELLO SIR, I READ FOR THE KUNDALINI YOGA IT IS VERY USEFULL. PLEASE UPDATE MORE REGARDING THE MEDITATION SUBJECT.

THANKING YOU

SURESH

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக