புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
28 Posts - 53%
heezulia
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
3 Posts - 6%
prajai
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
216 Posts - 43%
heezulia
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
24 Posts - 5%
i6appar
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
12 Posts - 2%
prajai
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_m10சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Mar 13, 2012 5:30 pm

சம்பா கோதுமை – ஒரு அறிமுகம் - டாக்டர் ம. சிவசாமி

கோதுமை என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நாம் தினமும் சாப்பிடும் சப்பாத்தி மற்றும் ரொட்டி (பிரெட்) தயாரிக்க உதவும் ரொட்டி கோதுமை (Bread Wheat) ஆகும். இந்தியாவில் பெரும்பாலான வடமாநிலங்களில் குளிர்காலங்களில் பயிரிடப்படும் ரொட்டி கோதுமை 87 சதவிகிதம் கோதுமை பயிரிடப்படும் பகுதிகளில் அடங்கும்.

இது மட்டும் இல்லாமல் நூடுல் மற்றும் மக்ரோனி தயாரிக்க உதவும் டுரம் (Duram Wheat) கோதுமை மத்திய மற்றும் தென் இந்தியாவில் 12 சதவிகித பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இவை இரண்டும் தான் கோதுமை பயிரிடப்படும் பெரும் பாலான பகுதிகளை ஆக்கிரமித்து உள்ளன.

ரொட்டி கோதுமை மற்றும் மக்ரோனி கோதுமையைத் தவிர மற்றும் ஒரு கோதுமை வகைதான் சம்பா கோதுமை (Dicoccum Wheat) தமிழ்நாட்டில் கோவை மற்றும் ஈரோடு மாவட் டங்களில் கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் முக்கிய காலை சிற்றுண்டி வகைளில் கோதுமை உப்புமா முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் அல்லாமல் நீலகிரி மலைப்பகுதிகளில் முக்கிய மான திருவிழாக் காலங்களில் கோதுமை பாயாசம் தயாரிப்பது இந்த சம்பா கோதுமையை உபயோகித்துத் தான். சம்பா கோதுமை அரிசியை உபயோகித்துச் சாதம் செய்யவும் முடியும். இதுவும் பண்டிகைக் காலங்களில் செய்யப்படும் உணவே.

இந்தவகை சம்பா கோதுமை தொன்று தொட்டு தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவை, மாவட்டங்களில் விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளார்கள். இன்றும் பொள்ளாச்சி, பகுதி களில் இந்த வகை கோதுமை வீட்டு உபயோகத் திற்காகப் பயிரிடுவதை வழக்கமாகக் கொண் டுள்ளனர். சம்பா கோதுமையை கடைகளில் ரூ.50 கொடுத்து வாங்கி சமைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தக் கோதுமையை வியா பாரிகள் விவசாயிகளிடம் இருந்து கிலோவுக்கு ரூபாய் 22 கொடுத்து வாங்கும் அளவுக்கு, சந்தையில் இதற்கென்று தனி விலை உள்ளது.

இந்தவகை சம்பா கோதுமை இந்தியாவில் 1 சதவிகிதம் பரப்பளவில் தான் பயிரிடப்படுகிறது. அதுவும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங் களில் மட்டுமே பயிரிட்டு வருகின்றனர். பொது வாக மூன்று வகை கோதுமை வகைகள் உலக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் போது இந்த கோதுமை வகை எப்படி தமிழகத்திற்கு வந்து தமிழக மக்களில் ஒரு முக்கியமான உணவு வகையாக மாறியது என்பது ஒரு வியப்பான விஷயம் தான்! இது தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்களுக்கு ஒரு ஆராய்ச்சிக்கு உரிய பகுதியாகும்.

சம்பா கோதுமையில் மற்ற கோதுமை வகைளை காட்டிலும் அப்படி என்ன சிறப்பு அம்சம் இருக்கிறது? இதை எதனால் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி உண்கிறார்கள்? இதில் உள்ள ருசி காரணமாகவா அல்லது இதில் உள்ள உணவு சத்துக்காகவா உண்மையை சொல்லப்போனால் இரண்டு காரணங்களும் உண்மையே!

சம்பா கோதுமை அதிகமான உயிர்ச் சத்துக்களைக் கொண்டு உள்ளது. சம்பா கோதுமையைச் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. மேலும் மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி ரைட்ஸ் (Triglycerides) அளவும் கணிசமாக குறை கிறது. எனவே சம்பா கோதுமையை இந்திய வைத்தியர்கள் ஒரு மருந்துக்கு நிகராக கருதுகிறார்கள்.

சம்பா கோதுமை மருத்துவ குணங்கள்

1. அதிக உணவு சத்துக்கள்

2. சர்க்கரை நோயை நிர்வகிக்கும் தன்மை

3. பிளாஸ்மாவில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கும் தன்மை

4. கிளைசிமிக் அளவைக் குறைக்கும் தன்மை, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குப் பயனுள்ளது.

5. அதிக நார்ச்சத்துக் கொண்டது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சம்பா கோதுமையை தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங் களில் விரும்பிய வண்ணம் விரும்பிய காலங்களில் பயிரிட முடியுமா, இதனால் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா, இதில் ஏதேனும் புதிய ரகங்களை விவசாயிகள் பயிரிட உள்ளனரா என பல கேள்விகளுக்கு கோதுமை ஆராய்ச்சி யில் இந்தியாவில் சிறந்த ஆராய்ச்சி நிறுவன மாகத் திகழும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், மண்டல நிலையத்தின் விஞ்ஞானி டாக்டர் சிவசாமி அவர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் செந்தில் எழுப்பும் வினாக்களுக்கு பதில் அளிக்கிறார்.

1. சம்பா கோதுமையில் தற்போது விவசாயிகள் பயிரிட்டு வரும் கோதுமை ரகங்கள் யாவை?

எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து 1960ல் வெளியிடப்பட்ட

NP200, NP201, NP202 என்ற மூன்று சம்பா கோதுமை ரகங்களை விவசாயிகள் தற்போது பயிரிட்டு வருகிறார்கள். இந்த ரகங்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ரிளி பள்ளத்தாக்குப் பகுதியில் பயிரிட்டு வந்த ரகங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கோதுமை ரகங்கள் ஆகும்.

2. பல வருடங்களாக பயிடப்பட்டு வரும் சம்பா கோதுமை ரகங்கள் இருக்கும் போது புதிய கோதுமை ரகம் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் என்ன?

தொன்று தொட்டுப் பயிரிடப்பட்டு வரும் சம்பா கோதுமை ரகங்களில் உள்ள சில குறைபாடுகள் மாறிவரும் விவசாய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவைகளாக இல்லை. எனவே விவசாயிகள் புதிய ரகங்களை எதிர்பார்த்துக் காத்து இருந்தனர்.

NP200 போன்ற பழைய சம்பா கோதுமை ரகங்கள் மிகவும் உயரமாக வளரக்கூடியது. எனவே கோதுமை பயிர் சாய்ந்து விட்டால் அறுவடை செய்வது கடினம். மேலும் அறுவடைக்கான ஆட்கள் கிடைக்காத காலத்தில் சாய்ந்த கோதுமையை ஆட்கள் வைத்துதான் அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை, அறுவடை இயந்திரங்கள் பயன் படுத்த முடியவில்லை. மேலும் துரு நோய் சில நேரங்களில் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

3. கர்நாடகா போன்றமற்ற கோதுமை பயிரிடும் மாநிலங் களில் பயிரிட்ட சம்பா கோதுமை ரகங்கள் இங்கு ஏன் வரவேற்பு பெறவில்லை?

கர்நாடகாவில் தார்வார் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்த DDK 1001, DDK 1009, DDK 1026, DDK 1029 மற்றும் MACS சம்பா கோதுமை ரகங்கள் கோவை மற்றும் நீலகிரிப் பகுதியில் சம்பா கோதுமை பயிரிடும் விவசாயிகளிடம் அதிக வர வேற்பைப் பெறவில்லை. இந்த ரகங்கள் குட்டை தன்மைக்கான ஜீன்கள் (Dwarting Gene) மற்ற கோதுமை வகைகளில் இருந்து பெற்ற காரணத்தால் சம்பா கோதுமையின் உப்புமா தன்மை பாதிப்பு ஏற்பட்டது. சட 200 போன்ற பழைய கோதுமையில் இந்த இயல்புகள் அதிகமாக காணப்பட்டதால் விவசாயிகள் பழைய ரகங்களை தொடர்ந்து பயிரிட்டு வருகிறார்கள். சட 200க்கு நிகரான தன்மை மற்றும் சாயாத தன்மை கொண்ட ரகங்களையே தேடுகிறார்கள்.

4. நீங்கள் சம்பா கோதுமை விவசாயிகளுக்கு அறிமுகபடுத்த இருக்கும் புதிய ரகம் HW 1095 COW (SW)2 எந்த வகையில் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும்?

புதிய சம்பா கோதுமை ரகம் HW 1095 COW (SW)2 தற்போது விவசாயிகள் பயிரிடப்பட்டு வரும் சட 200 என்ற நெட்டையான சம்பா கோதுமை ரகத்தை சடுதிமாற்றம் (Mutation) மூலம் உயரத்தை குறைத்தது. சாயாத தன்மை கொண்ட ரகமாக மாற்றி உள்ளோம். எனவே சாயாத தன்மை மற்றும் NP 200 என்ற பழைய ரகத்தின் முழுமையான சம்பா ரவை குணங்களைக் கொண்டு இருப்பதால் சம்பா கோதுமை விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெரும் என்று நம்புகிறோம்.

5. இந்த புதிய சம்பா கோதுமையின் சிறப்பான குணங்கள் என்ன?

இந்த புதிய ரகம் ஒரு ஹெக்டேருக்கு 4040 கிலோ மணிகளைக் கொடுக்க வல்லது. இது பழைய ரகமான சட 200 விட 26 சதவீதம் உயர் விளைச்சல் கொடுக்கவல்லது. கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் பல பகுதிகளில் நடத்திய வயல்வெளி ஆய்வுகள் மற்றும் அகில இந்திய அளவில் நடத்திய வயல்வெளி சோதனையின் முடிவில் இந்த கோதுமை சம்பா கோதுமை ரகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

6. ரகத்தின் சிறப்பு இயல்புகள்

தூர்கள் எண்ணிக்கை : 10 -12

தூர்களை

வயது : 110 நாட்கள்

விதை அளவு : 100 கிலோ/ ஹெக்டேர்

விதை விதைக்கப்படும் மாதம்:

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள்

பயிர் தன்மை: சாயத்தன்மை கொண்டது

துருநோய் எதிர்ப்புத் திறன்:

அனைத்து வகையான துரு நோய்

எதிர்த்து வளரும் தன்மை

கோதுமை மணியின் சிறப்புக்கள்:

சிகப்பு நிற கோதுமை அதிக புரதம் (13. 2%) அதிக ரவை ஆகும் திறன்.

கோதுமை வைக்கோல்:

மாடுகள் விரும்பி தின்னும் வைக்கோல்

எளிதில் சீரணிக்கும் தன்மை கொண்டது.

7. இந்த சம்பா கோதுமை ரகம்

எப்போது விவசாயிகளுக்கு கிடைக்கும்?

இந்த கோதுமை ரகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மரபியில் துறை பேராசிரியர்கள் உடன் இணைந்து கடந்த 3 வருடங்களாக வயல் வெளி சோதனைகள் செய்து, தமிழகத்தின் கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், மற்றும் தேனி மாவட்டங்களில் செய்த சோதனை முடிவுகளை தமிழகத்தின் புதிய ரகம் வெளியிடும் குழுவிடம் சமர்ப்பித்து உள்ளோம்.

விரைவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் வெலிங்டனும் இணைந்து புதிய ரகத்தை ‘கோயம்புத்தூர் வெலிங்கடன் சம்பா கோதுமை’ என்ற இரகமாக வெளியிடும் என நம்புகிறோம்.

8. கோதுமை ரகத்தின் விதைகள் எங்கு கிடைக்கும் அதன் விலை எவ்வளவு?

புதிய கோதுமை ரகத்தின் விதைகள்

வெலிங்டன் ஆராய்ச்சி நிலையம்

தலைவர்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்

மண்டல நிலையம், வெலிங்டன் 643 231, நீலகிரி.

மற்றும்

பேராசிரியர் மற்றும் தலைவர்,

சிறு தானியங்கள் துறை,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

ஆகிய முகவரிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு:

டாக்டர் ம. சிவசாமி, விஞ்ஞானி,வெலிங்டன்

Cell: 9442350239 Office: 04232237969

தகவல் பகிர்வு - http://www.thannambikkai.net/2010/02/01/3468/

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Mar 13, 2012 5:35 pm

பல அறிய தகவல்கள் நன்றி

எங்க ஊர்லயும் திருமானங்களில் கோதுமை உப்புமாவைத்தான் (இறைச்சி போட்டு) பயன் படுத்துவோம்.
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக