புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
37 Posts - 40%
heezulia
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
1 Post - 1%
mruthun
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_m10உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 12:55 pm

உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! - கூடங்குளம் அணுமின் உலை இலங்கைக்கும் ஆபத்து!

'நாங்கள் மனித குலத்தின் பெயரால் மனித குலத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். உங்களது மனித நேயத்தை மட்டும் நினைவிலிருத்தி மற்றவற்றை மறந்துவிடுங்கள். இதை உங்களால் செய்ய முடிந்தால் ஒரு புதிய சொர்க்கத்திற்கான பாதை திறந்து கிடக்கின்றது. உங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால சர்வாம்ச பேரழிவும் மரணமும் உங்களுக்கு முன்னால் கிடைக்கின்றது.

தென் கோடியில் வைப்பாறில் துவங்கி தூத்துக்குடி, பழையகாயல், புன்னக்காயல், கொம்புத்துறை, ஆலந்தலை, குலசை, மணப்பாடு, பெரிய தாழை, உவரி, கூத்தங்குளி, கருத்தழை, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி என்று குமரி வரை நீண்ட அமைதியான கடற்கரை கிராமங்கள் யாவும் இன்று போர்க் கோலத்தில் உள்ளது. 'கூடாது கூடங்குளம்' என்ற கோஷத்தோடு ஆயிரக்கணக்கில் உண்ணாவிரதப் போராட்டக் கோலம். நெல்லை மாவட்டத்தில் வறட்சிக்குச் சொந்தமான கூடங்குளம் கிராமத்தில் அணு மின்சார அளவில் 1000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்காக அணுமின் நிலையத்தில் உள்ள கொதி கலன்கள் யாவும் எதிர்காலத்தில் கொலைக்களங்கள் ஆகிவிடுமோ என்ற பீதியோடு மக்கள் தொடர்ந்து 10 நாட்களாகப் போராடுகின்றனர்.

1985இல் திட்டமிடப்பட்ட கூடங்குளம் அணுமின் திட்டம் 1988, நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவுடன் அப்போது இருந்த ஒன்றுபட்ட சோவியத் யூனியன் ஒப்பந்தம் போட்டது. 1989 இல் அன்று முதல்வர் கலைஞர் அணுஉலை குறித்த அபாயங்களைப் பரிசீலிக்க மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என்று கூறினார். சோவியத் யூனியனுக்கு அணுமின் சாதனங்கள், யுரேனியத்தை இந்தியா வழங்கியது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பின் 1997 மார்ச் 25இல் தேவகவுடா காலத்தில் திரும்பவும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. இதற்குத் தொடர்ந்து எதிர்ப்புகள், எதிர்வினைகள் இருந்தன.

கிராமப்புற அளவில் கடந்த 1989லிருந்து மக்களிடம் எதிர்ப்புகள் யாவும் முச்சந்தி, டீக்கடை பேச்சுகள் என்று இல்லாமல் போராட்டங்கள், அச்சங்கள் இருந்தன. அவையாவும் இன்று ஒன்றுகூடி போர்க்குரலாக, மக்களின் உரிமைக் குரலாக, உரத்த குரலாக இன்று கேட்கிறது.

வளர்ச்சிப் பாதைக்கான மின் உற்பத்தியை எதிர்த்து ஏன் இந்த எதிர்ப்புச் சூழல் என்ற வினாவும் கேட்கப்படுகிறது. அணு விஞ்ஞானிகள் இதற்கு ஆதரவாக உள்ளனர்.

ஆபத்து இல்லா அணு உலையே அகிலத்தில் இல்லை. எனவே கூடங்குளத்தில் அபாயம் என்றால் அதன் பாதிப்பு வடக்கே மதுரை, தென்கோடியில் திருவனந்தபுரம், மேற்கே மலைத்தொடர், கிழக்கே வங்கக்கடல், இலங்கை என்று பாதிப்பு. வாழ்வா சாவா என்ற கேள்விக்குறியின் நிம்மதியற்ற நிலை. 150 கி.மீட்டர் சுற்றிப் புல், பூண்டு எல்லாம் அழிந்துவிடும். போபாலில் நடந்த விஷ வாயு கோரத்திலிருந்து இன்றும் இந்தியா மீளவில்லை. கூடங்குளத்தின் மேற்கே உள்ள மகேந்திரகிரியில் உள்ள அணு திரவ திட்டம், நாங்குநேரியில் ஐ.என்.எஸ். நெல்லை கட்டபொம்மன் போன்ற கதிர் இயக்க அமைப்பு, கடந்த 10 ஆண்டுகள் வரை இந்த வட்டாரத்தில் உணரப்பட்ட நில அதிர்வுகள், பாறைக் குழம்புகளால் ஏற்பட்ட அதிர்ச்சி என்ற நிலையில் கூடங்குளத்தில் சின்ன ஆபத்து ஏற்பட்டாலும் கற்பனை செய்ய இயலாத, தாங்க முடியாத அழிவுகள் ஏற்படும் என்ற சூழலில்தான் காவல்துறை அடக்க முயன்றும்- கூடங்குளம் வேண்டாம் என்ற மக்கள் போராட்டம் பீறிட்டு எழுந்தது.

இந்தத் திட்டத்திற்கு கூடங்குளம், விஜயாபதி செட்டிகுளம் கிராமங்களின் நிலங்கள் கையகம் செய்யப்பட்டு வி.வி.ஆர். என்று அழைக்கப்படும் உலைகள் அமைக்கப்பட்டு தற்போது உற்பத்தியைத் தொடங்க உள்ள நிலையில் மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். கருத்து ஆய்வு என்று ஒப்புக்கு நடந்த கூட்டம், மக்களின் உண்மையான உணர்வைப் பரிசீலிக்கத் தவறிவிட்டது. சுற்றுவட்டாரத்திற்கு வேலை வாய்ப்பு, பேச்சிப் பாறையிலிருந்து சுவையான குடிநீர் என்றும் உறுதிமொழிகள் சொல்லப்பட்டன. அதை அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு நம்பினர். அதுவும் மெய்ப்படவில்லை.

கூடங்குளம் அமைப்பதில் மரபு விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அணு உலைப் பகுதியில் மக்கள் உயிர் வாழ உரிய உத்தரவாதம் இல்லை. விபத்து இல்லாமல் அணு உலைகள் இயங்கும்போது ஐயோடின் 131, 132, 133 ஐசோடோப்கள் வெளியிடும் ஸ்ட்ரோண்டியம், டிரைடியம், டெலுரியம் என்ற கதிர்வீச்சு வாயுக்களால் பல அழிவுகள் ஏற்படும். நிலத்தடி நீர், விவசாய விளைப்பொருட்கள், கடல்நீர், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும். இதனால் மக்களின் வாழ்வு ஆதாரங்களுக்குப் பெரும்பாதிப்பு. நாட்டின் வளர்ச்சியா? மக்களின் நலம் மற்றும் பாதுகாப்பா என்ற கேள்விக்கு மக்களின் பாதுகாப்புதான் பிரதானம். அந்த வகையில் கூடங்குளம் தேவையற்றது என்ற முடிவுக்கு வர முடியும். அணு உலைகளால் விபத்து ஏற்படும் என்பது ஒருபுறம் இருந்தாலும் அதன் இயக்கத்தால் உருவாகும் கதிர்வீச்சு பல ஆண்டுகளுக்குப் பிரச்சினைகளை உருவாக்கும்.

அணு உலையால் ஏற்படும் கேடுகளால் உலகின் பல நாடுகளில் அணு உலைகள் மூடப்படும் நிலையில் நாம் மட்டும் அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும்.

அணு உலையின் பால பாடமாக அமைந்த செர்னோபில் விபத்து, 1996 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டில் நடந்த கோரச் சம்பவம், இன்றைக்கும் வேதனையாக இருக்கின்றது. இதுவரை 3,50,000 பேர் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். 4000 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே செர்னோபில் முறையில்தான் கூடங்குளம் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. செர்னோபில் துக்கமும், துயரமும் நமக்கு வேண்டுமா என்பதுதான் கேள்விக்குறி.

இந்தியாவில் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. இதில் பழமையானது தாராப்பூர் (மகாராஷ்டிரா). தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் கோலான் என்ற தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் சில நோய்களால் மரணம் அடைந்துள்ளனர். இது எல்லாம் தெரிந்தபின்பும் நாம் கூடங்குளத்தை ஆதரிக்க முடியுமா?

உலகத்தை அணு யுகத்திற்கு அழைத்துச் சென்ற அமெரிக்காவில் அணுசக்தி உற்பத்தி வெளியேறுகின்றது. அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. ஆஸ்திரியா, ஸ்வீடன், பின்லாந்து, யுகோஸ்லாவாக்கியா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய பல நாடுகளும் பாதகமான இந்த அணுஉலைகளை வேண்டாம் என்று தவிர்த்து வருகின்றது.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தில் அங்கிருந்த ஃபூகுஷிமா டைச்சி அணுஉலை கடலில் மூழ்கி அங்கு நடந்த கோர சம்பவத்தைக் கண்டு உலகமே கண்ணீர் விட்டது. அந்த அணு உலை விபத்தில் யுரேனியம் உருகி வெப்பமாகி கதிர்வீச்சு ஏற்பட்டு ரணகளமானது. 6 மாதங்களுக்கு முன் தொலைக்காட்சியில் இதைப் பார்த்த நமக்கு கூடங்குளம் தேவைதானா?

உலகளவில் சுமார் 100 அணு உலைகள் மூட முடிவு செய்யப்பட்டிருக்கும்போது நாம் மட்டும் கூடங்குளத்தை அனுமதிக்க வேண்டுமா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகள் அடங்கியிருப்பது சுற்றுச்சூழலும் அப்பாவிகளின் உயிர்களுமே. இன்னொரு புறத்தில் 1000 வாட் மின்சாரக் கனவு. இந்த இரண்டு நோக்கங்களில் எந்த நோக்கம் நமக்கு முக்கியம் என்பதைத்தான் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.

2004இல் சுனாமி ஏற்பட்டபோது தமிழகம் சந்தித்த ரணங்கள் என்ன என்று நினைத்துப் பார்த்தாலே மறுகணத்தில் கூடங்குளத்திற்கு சாவுமணிதான் நாம் ஒவ்வொருவரும் அடிப்போம். குறிப்பாக, கல்பாக்கமும் கூடங்குளமும் கடற்கரையை ஒட்டி இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இயற்கை பேரிடர்கள் ஏற்படலாம். அப்படி நிகழ்ந்தால், இந்த இரண்டு அணு உலைகளின் பாதிப்பால் தமிழகமும் காணாமல் போன லெமூரியா கண்டம் போல் ஆகிவிடுமோ என்ற அச்சம்தான் நமக்கு. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் அமைய இருந்த ரஷ்ய அணுமின் நிலையத்தை நிறுத்திவிட்டார். கேரளத்திலும் மக்கள் எழுச்சியால் அணுமின் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஆந்திரத்திலும் மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்புகளால் இத்திட்டங்கள் பின்வாங்கப்பட்டன.

மனித குலத்தின் நிம்மதிக்கு ஒரே வாய்ப்பு அணு ஆதாரங்களா அல்லது அமைதியான வாழ்க்கையா என்பதுதான் இன்றைக்கு அணு அரசியலால் ஏற்படுகின்ற கேள்வி. சர்வாதிகார சக்திகளின் கைகளில் அணு ஆதாரங்கள் உள்ளன. அவை உலகத்தை மிரட்டுகின்றன. அந்த அணு ஆதாரங்களால் ஆக்கப்பூர்வமான காரியங்கள் நடக்கின்றன என்று சொல்லிக்கொண்டு அணுசக்தி மூலமாக மின் உற்பத்தி என்ற போர்வையில் வளர்ச்சித் திட்டங்கள் என்று நம்மை நாமே ஏமாற்றுகின்ற செயல்பாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறோம். அவை தேவைதானா? அந்த வகையில்தான் இன்றைக்குக் கூடங்குளம் பிரச்சினை. தெற்கே நெல்லைச்சீமையில் வானம் பார்த்த கூடங்குளத்தில் 13,121 கோடி ரூபாய் செலவில் 1988 இல் கூடங்குளம் அணுமின் திட்டம் அமைந்தபோது போராட்டங்கள் நடந்தன. அவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது. தொடர் போராட்டங்கள் நடந்தாலும் அவை யாவும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டன. போராடிய மக்கள் வருத்தப்பட்டது உண்டு. ஆனால் இத்திட்டம் நடைமுறைக்கு வர இருக்கின்ற நேரத்தில் இடிந்தகரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நடத்திய போராட்டம் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அன்னா ஹசாரே போராட்டத்தைப் போல் மத்தியரூ-மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையில் இறங்கி வந்துள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் பாதுகாப்பான அம்சங்களுடன் செயல்பட உள்ளது. மக்களுக்கு அச்சம் தேவையில்லை என்று கூறினார். ஆனால் பிறகு அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதி இத்திட்டத்தை நிறுத்தக்கூறினார். பிரதமரும் உடனே ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசி மத்திய அமைச்சர் நாராயணசாமியைத் தமிழகத்திற்கு இதுகுறித்துப் பேச அனுப்பினார். பிரதமர் ஐ.நா. மன்ற பொதுக்குழு கூட்டத்திற்குச் செல்வதால் உடனே போராடும் பிரதிநிதிகளைச் சந்திக்க இயலவில்லை. தனது பயணத்தை முடித்துக் கொண்டு வந்தபின் கூடங்குளத்தில் போராடும் நிர்வாகிகளுடன் பேசுவதாக உறுதி அளித்துள்ளார். தமிழக அரசு சார்பில் குழு ஒன்றை அமைத்து அவர்களைப் போராட்டக் குழு உறுப்பினர்களுடன் பேச வைத்து, அந்தக் குழுவின் மூலம் மத்திய அரசை வலியுறுத்த டில்லி அனுப்பவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

இந்தப் போராட்டத்தை மறைமுகமாக மக்கள் தங்களுக்காகவே நடத்தினர். அரசியல் இயக்கங்களை அவர்கள் புறக்கணித்தனர். ஜெயலலிதா அமைச்சரவையைச்சேர்ந்த மூவர் அங்கு சென்றபோது கூட போராட்டக் குழுவினர் தங்கள் கோரிக்கைகள் ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என கறாராகக் குறிப்பிட்டதால் வேறு வழியில்லாமல் அரசு இறங்கி வந்தது. அமைச்சரவையில் இதுகுறித்து தீர்மானம் மக்கள் ஆதரவுடன் வருகிறது.

மௌனப் புரட்சியாக நடந்த இந்தத் தொடர் போராட்டங்களுக்குப் பின் அணு ஆலையின் பொறுப்பாளர்கள் நடத்திய பயிற்சி வகுப்புகள் மூலமாகவே ஏற்படும் பாதகம் புரிந்தது.

அந்த வகையில் அண்மையில் கூடங்குளத்தில் பேரிடர் பிரச்சினைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடந்தன. அப்போது அணுஉலைக்கு ஆபத்து ஏற்பட்டால் மூக்கு, வாயைப் பொத்திக் கொள்ள வேண்டும். அதற்கு அயோடின் மாத்திரை சாப்பிட வேண்டும். ஆபத்துக் காலத்தில் அந்த இடத்தில் இல்லாமல் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு ஓடி விட வேண்டும் என்று அணுமின் ஆலையின் பொறுப்பாளர்கள் சொல்லவும் மக்களிடையே பீதி ஏற்பட்டது. அந்த பீதியால் இந்த போராட்டம் கிளர்ந்தெழுந்தது. திருச்செந்தூரின் தெற்கே ஆலாந்தழையிலிருந்து குமரி மாவட்டம் வரை உள்ள இம்மக்கள் ஆயிரக்கணக்கில் ஆர்த்தெழுந்தனர்.

உலக அணுசக்தி தலைவர் முகமது எல்.பராடியே, 'மனித குலத்திற்கு ஒரே வாய்ப்புதான் உள்ளது. அணு ஆயுதங்களா அல்லது அமைதியான வாழ்க்கையா? என்பதுதான் அது' என்று அணுசக்திக்கு ஆதரவாகப் பேசும்போது நாமே நமக்கு அழிவைத் தேடிக்கொள்ள வேண்டுமா? எனவே கூடவே கூடாது கூடங்குளம்.
கட்டுரை – கே.எஸ்.இராதாகிருஸ்ணன்
நன்றி: உயிர்மை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 03, 2012 1:06 pm

ஆபத்து நிறைந்ததே வாழ்க்கை என்றாகி விட்டது இன்று.

கையிலிருக்கும் கைபேசி முதல் ஆபத்தில்லாத ஒன்று இவ்வுலகில் உள்ளதா?

கதிர் வீச்சை கையில் ஸ்டைலாக பிடித்துக் கொண்டு கதிரோடே குடும்பம் நடத்துகிறோம்.

தற்கால சந்தோஷத்திற்கு என்று மனிதன் முக்கியத்துவம் கொடுத்தானோ

அன்றே வருங்கால சந்ததியினரின் சந்தோஷம் கேள்விக் குறி ஆகிவிட்டது.

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் - நாமிருந்தால்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 03, 2012 1:16 pm

கடந்த ஆண்டு நிலவரப்படி புற்றுநோய் தாக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வந்துள்ளது! இந்த கதிர்வீச்சியின் அபாயம் வரும் சந்ததியினரை வாழ்க்கை கேள்வி குறியாகதான் உள்ளது..!

அருமையான கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா! மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 03, 2012 1:17 pm

மிகவும் அருமையான கட்டுரை. நன்றி இராஜா மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 03, 2012 1:23 pm

அருமையான கட்டுரை . பகிர்வுக்கு மிக்க நன்றி தல சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 2:13 pm

மிக்க நன்றி கொலவெறி , அருண் , டாக்டர் . சுந்தரராஜ் , பாலாஜி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Mar 03, 2012 4:38 pm

பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி ராஜா,
நாம் சிறு வயதில் சாப்பிடும் போது கல் போனால் சிறுநீர் குழாயில் அடைத்து விடும் என்று கூறுவார்கள், உண்மையில் உணவுக் குழாய்க்கும் சிறுநீர் குழாய்க்கும் சம்பந்தம் இல்லை என்பது தான் அறிவியல் உண்மை. அணு உலை பற்றி மிடியாக்கள் செய்வதும் இதைத்தான்.

ஆனால் அணு உலையை பற்றி மக்கள் மத்தியில் உண்மை அறிவியலை விட சிறு பிரச்சனையும் பூதக் கண்ணாடியில் பார்க்கும் மீடியாக்கள் வெளிப்படுத்தும் காரணம் அதிகம், உலகில் உள்ள பல அணு உலைகள் மூடப்படுவது அது பாதுகாப்பு இல்லாதது என்ற காரணத்தால் மட்டுமல்ல.

போபால் விஷ வாயு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விபத்து, 50000 நபர்களுக்கு மேல் இதில் பதிக்கப்பட்டுளானார். இதே அளவு பிரச்சனையை உண்டாக்கும் வாயுகளை நம் வேதியல் தொழில்சாலையில் கையாளுகின்றது. இது போன்ற தொழிற்சாலைகள் கூட்டம் கூட்டமாக மணலி, கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ளது. ஆனால் இவை மீடியா கண்களுக்கு தெரிவதில்லை. செர்நோபிளை உதாரணம் காட்டி கூடன்குளத்தை மூடச்சொல்லும் மீடியாக்கள் போபாலை உதாரணம் காட்டி இந்தியாவில் உள்ள வேதியல் தொழிற்சாலைகளை ஏன் மூடச் சொல்லவில்லை.

நாளுக்குநாள் இந்தியாவின் மின் தேவை அதிகரித்து கொண்டு இருக்கிறது. மற்ற நாடுகளைப் போல் நம்மிடையே எண்ணை & வாயு வளம் போதிய அளவு இல்லை. நீர் பற்றாக்குறையும் உள்ளது. கூடங்குளம் வேண்டாம் என்று பக்கம் பக்கம் மாக அறிவியல் கட்டுரை எழுதும் பத்திரிக்கைகள் இந்தியாவின் மின் தேவைக்கு வேறு என்ன வழி என்று அறிவியல் கட்டுரை எழுதாதது ஏன் ?

சற்று யோசிக்கவேண்டும்.

சதாசிவம்
உலகில் ஆபத்தில்லா அணு உலைகளே இல்லை! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 03, 2012 4:39 pm

சதாசிவம் wrote:பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி ராஜா,
நாம் சிறு வயதில் சாப்பிடும் போது கல் போனால் சிறுநீர் குழாயில் அடைத்து விடும் என்று கூறுவார்கள், உண்மையில் உணவுக் குழாய்க்கும் சிறுநீர் குழாய்க்கும் சம்பந்தம் இல்லை என்பது தான் அறிவியல் உண்மை. அணு உலை பற்றி மிடியாக்கள் செய்வதும் இதைத்தான்.

ஆனால் அணு உலையை பற்றி மக்கள் மத்தியில் உண்மை அறிவியலை விட சிறு பிரச்சனையும் பூதக் கண்ணாடியில் பார்க்கும் மீடியாக்கள் வெளிப்படுத்தும் காரணம் அதிகம், உலகில் உள்ள பல அணு உலைகள் மூடப்படுவது அது பாதுகாப்பு இல்லாதது என்ற காரணத்தால் மட்டுமல்ல.

போபால் விஷ வாயு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விபத்து, 50000 நபர்களுக்கு மேல் இதில் பதிக்கப்பட்டுளானார். இதே அளவு பிரச்சனையை உண்டாக்கும் வாயுகளை நம் வேதியல் தொழில்சாலையில் கையாளுகின்றது. இது போன்ற தொழிற்சாலைகள் கூட்டம் கூட்டமாக மணலி, கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ளது. ஆனால் இவை மீடியா கண்களுக்கு தெரிவதில்லை. செர்நோபிளை உதாரணம் காட்டி கூடன்குளத்தை மூடச்சொல்லும் மீடியாக்கள் போபாலை உதாரணம் காட்டி இந்தியாவில் உள்ள வேதியல் தொழிற்சாலைகளை ஏன் மூடச் சொல்லவில்லை.

நாளுக்குநாள் இந்தியாவின் மின் தேவை அதிகரித்து கொண்டு இருக்கிறது. மற்ற நாடுகளைப் போல் நம்மிடையே எண்ணை & வாயு வளம் போதிய அளவு இல்லை. நீர் பற்றாக்குறையும் உள்ளது. கூடங்குளம் வேண்டாம் என்று பக்கம் பக்கம் மாக அறிவியல் கட்டுரை எழுதும் பத்திரிக்கைகள் இந்தியாவின் மின் தேவைக்கு வேறு என்ன வழி என்று அறிவியல் கட்டுரை எழுதாதது ஏன் ?

சற்று யோசிக்கவேண்டும்.

மிக சரியான வார்த்தைகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக